World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

French officer accused of collaborating with Milosevic government

மிலோசோவிக் அரசாங்கத்திற்கு உடைந்தையாய் இருந்ததாக பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

By Francis Dubois and Paul Stuart
11 December 2001

Use this version to print | Send this link by email | Email the author

முன்னாள் உளவுத்துறை அதிகாரியான Pierre-Henri Bunel துரோக இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுள்ளார். 1999 இன் இளவேனிற் காலத்தில் குண்டுத்தாக்குதல் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முதல், யூகோஸ்லோவியா மீதான கூட்டணிப்படையின் விமான தாக்குதல் அடங்கிய திட்டத்தினை சேர்பியன் உளவுத்துறையிடம் கையளித்ததாக Bunel குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

1998 அக்டோபர் 19 இல், பாரீசில் எந்தவொரு வழக்கு விசாரணையுமின்றி Bunel காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டுவரப்பட்டதுடன் அவரின் மேல் சுமத்தப்படட கைதுக்கான விபரம் அதே வருடம் நவம்பர் 2 இல் உடைந்துவிட்டது. அவரது முதல் வழக்கு விசாரணையை விசாரித்த சிவில் நீதிமன்றம் இந்த வழக்கில் சட்ட அதிகாரம் இல்லையெனக் கூறி இராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது. இராணுவ நீதிமன்றத்திற்கு நெருக்கமான இந்த நகர்வானது பிரெஞ்சு ஆழும் வர்க்கத்திற்கும், அதன் இராணுவ சக்திகளுக்கும் முக்கியமானதாக இருந்தது. அதன்பின்னர் கூட, Bunel இக்கு எதிரான சாட்சியங்களை திரட்டுவதற்கு நீதிமன்றத்திற்கு இரண்டுவருடங்கள் தேவைப்பட்டது.

Bunel பிரெஞ்சு இராணுவ வட்டத்தில் சிறியமனிதனல்ல. 1995 இல் பொஸ்னியாவில் அவரது உளவு வேலைக்காக பிரெஞ்சு இராணுவத்தின் உயர்விருதான Légion d'honneur ஐ பெற்றுக்கொண்டவர். 1996 மத்திய பகுதியில் புருஷலில் பிரெஞ்சு NATO பிரதிநிதிக்கு நெருக்கமாக இருந்ததுடன், பிரதிநிதிகளின் தலைமை இராணுவ ஆலோசகரான General Pierre Wiroth இக்கு தலைமை மேலாளராக பணியாற்றினார். NATO வின் உயர்ந்தபட்சமான தொகுக்கப்பட்ட செய்திகளை இவர் பெற்றுக்கொண்டார்.

அராபிய மொழியை மிகதெளிவாக பேசும் Bunel, ''முஸ்லீம் உலகம்'' பற்றிய விடயத்தில் ஒரு வல்லுனர் ஆவார். வளைகுடா யுத்தத்தின் முன்னர், இவர் ஜோர்டானியன் பாலைவனத்தில் பணிபுரிந்ததுடன், சோமாலியா மற்றும் றுவண்டாவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாகமாக இராணுவக் கட்டளைப்பணிகளை மேற்கொண்டார். அவரது புதிய புத்தகம் Menaces Islamistes (இஸ்லாமியர்களின் பயமுறுத்தல்) என தலையங்கம் இடப்பட்டுள்ளது.

Bunel இன் நடவடிக்கைகள், ''அந்நியப்படுத்தப்பட்ட தனிப்பட்ட'' நபரின் நடவடிக்கைகளைப் போன்று இருந்தன என கைது செய்தபோது அதிகாரிகள் கூறினார்கள். எப்படியிருந்தபோதும், Bunel இதை மறுத்திருந்தார். ''அவர் செய்தது ஒரு துரோக நடவடிக்கையாக இருக்கவில்லை. அவரது நடவடிக்கை பிரெஞ்சு உளவு சேவையால் ஆதரவளிக்கப்பட்டிருந்தது'' என அவரது சட்ட வல்லுனர் ஒரு அறிக்கையில் விளங்கப்படுத்தினார்.

பிரெஞ்சு அரசின் எந்த இராணுவம் இரகசியம் அடங்கிய ஆவணங்களை கையளிக்கும்படி கட்டளையிட்டது என்பதை Bunel ஓ அவரது வக்கீலோ சுட்டிக்காட்டவில்லை. ''ஒரு சேர்பிய உளவாளியிடம் நான் தொகுக்கப்பட்ட 'இரகசிய' செய்திகளை கையளித்தேன் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அது நம்பிக்கையான செய்தி மாறாக உயர் இரகசியம் அல்ல: உயர் இரகசியம் அனைத்தும் நாட்டோவில் 'Cosmic' என தொகுக்கப்பட்டிருக்கும். விமானத் திட்டங்கள் அல்லது இராணுவ நடவடிக்கையின் கட்டளைகளை நான் ஒருபோதும் கைளயளிக்கவில்லை.'' என அவர் கூறியிருந்தார். ''இரண்டு பக்கமும் அடங்கிய குறிப்பிட்ட திறவுகோல் செய்திகளைக் கொண்ட ஆவணங்களைத்தான் நான் கையளித்தேன். பிரான்ஸ் (கோசொவோ) நெருக்கடியில் பங்கெடுப்பதுடன், ஐந்து நாட்டோ நாடுகளும் யூகோஸ்லோவியா மீது விமானத் தாக்குதலை செய்வதற்கு உடன்பட்டுள்ளன மற்றும் மிலோசோவிக் தனது துருப்புக்களை பின்வாங்காவிட்டால் படுகொலைகள் கொடூரமானதாக இருக்கும் எனத்தான் அதில் இருந்தன'' என அவர் மேலும் கூறினார்.

Bunel விசாரணையாளர்களிடம் கூறியதை கனேடிய பத்திரிக்கையாளரான ஸ்ரீவ் அல்பேர்ட் தெரிவிக்கையில், ''புரூஷலில் இருக்கும் ஒரு சேர்பிய உணவுவிடுதியில் Lieutenant-Colonel Jovan Milanovic உடன் ஒரு சந்திப்பை மேற்கொண்ட பின்னர்தான் நாட்டோவின் திட்டத்தை கையளிப்பதற்கு அவர் முடிவெடுத்தார்... இந்தத் திட்டங்களை பெற்றுக்கொள்ளும் உடனடி குறிக்கோளுடன்தான் மிலோனொவிக் புரூஷலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ''உயர்ந்த மட்டத்தில் இது சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்டிருந்த சந்திப்பு என்பது சந்தேகத்திற்குரியாதாக இருந்தது மற்றும் இது இதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

Bunel முதல் தடவையாக கைதுசெய்யப்பட்டபோது, 1998 அக்டோபர் மற்றும் யூலைக்கு இடையில் நான்கு தடவைகள் மிலானொவிக்கை சந்தித்ததாகவும், மிக இரகசிமான செய்தி உள்ளடங்கலாக இராணுவ நடவடிக்கை கட்டளைகள், விமானத்திட்டங்கள் மற்றும் தாக்குதலுக்கான குறிகள் அடங்கிய பட்டியலையும் கைளளித்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

யூகோஸ்லோவியா மீதான பிரெஞ்சுக் கருத்துவேற்றுமைகள்

அவரது நடவடிக்கையை பேணிக்கொண்டு Bunel நாட்டோவின் யுத்தக்குற்றங்கள்* என அழைக்கப்படும் புத்தகம் ஒன்றினை எழுதினார். அதற்காக உருவாக்கிய இணைய தளத்தில், ''அரசியல் தீர்வுக்கு பொருத்தமில்லாவிடில் ஒரு இராணுவ தாக்குதலை முன்னெடுப்பது அர்த்தமற்றது--அறிவின்மையானது.'' என அவர் வலியுறுத்தினார். இதில் இவர் மட்டும் தனியே செயல்படவில்லை, மாறாக சேர்பியாவுடன் அரசியல் உறவை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரெஞ்சு ஆளும் கன்னையின் ஒரு பகுதி அதில் சம்பந்தப்பட்டிருந்ததுடன், ஐரோப்பாவில், அமெரிக்காவின் கீழ் நடத்தப்படும் இராணுவத்தாக்குதல் ஒன்றில் தாம் பங்கெடுப்பதை பிரான்சின் தேசிய நலனுக்கு ஒரு துரோகம் இழைப்பதாகத்தான் அது பார்த்ததென்பதை இதுவரை பிரசுரிக்கப்பட்ட விசாரணை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரெஞ்சு உளவுத்துறைக்கும், முன்னாள் யூகோஸ்லாவியா அரசுக்கும் இடையில் நடந்த கூட்டு ஒத்துளைப்புகளை குறைந்தபட்சம் ஏனைய இரண்டு நிகழ்வுகள் நிரூபிப்பதற்கு இருந்துவந்துள்ளன. ஐக்கியநாட்டு பாதுகாப்பு படையின் (United Nations Protection Force) கட்டளையிடும் அதிகாரியான General Bernard Janvier, சேர்பிய இராணுவத்தின் உயர் கட்டளை அதிகாரிகளான General Mladic மற்றும் General Perisic உடன் இரகசிய ஒப்பந்தத்தில் பங்கெடுத்துக் கொண்டதுடன், கைதுசெய்யப்பட்ட பிரெஞ்சு இராணுவ படைகளை விடுவிப்பதற்கு கைமாற்றாக சேர்பியா தாக்கப்படுமானால் விமானத் தாக்குதலுக்கு கட்டளை பிறப்பிக்கபடமாட்டாது என்ற ஒரு உறுதியைக் கொடுத்தார்கள் என 1996 இல், பிரான்ஸ் 2 ஒளிபரப்பப்பரப்பிய Envoye Special எனப்படும் செய்தி நிகழ்ச்சியின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பொஸ்னியன் சேர்பிய தலைவர் Radovan Karadzic யுத்தக் குற்றத்திற்கான முன்கைதுக்கு முகம்கொடுத்து வந்தார் என்ற Major Hervé Gourmelon இன் எச்சரிக்கை அவரை கைதுசெய்வதற்கான நாட்டோவின் திட்டத்தை தாமதமாக்கியது என 1998 இல் வாஷிங்டன் குற்றம் சாட்டியது. டைம்ஸ் சஞ்சிகையின் பிரகாரம், Gourmelon ஒரு பிரெஞ்சு உளவாளியாவார், அவர் 1994 இல்,''UNPROFOR படைக்கான தொடர்புசாதன அதிகாரியாக இருந்தபோது, அதனது இராணுவ கட்டளையிடும் அதிகாரியான Gen. Michael Rose இன் மேசையின் ஒரு பக்கத்தில் மறைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு நாடாவை கண்டெடுத்திருந்தார்.''

பொஸ்னிய யுத்தகாலத்தின் போது ஜக்கிய நாடுகளின் ''அமைதிகாப்பு'' படையில் பிரான்ஸ் பங்கெடுத்திருந்தது அறியப்பட்ட ஒன்றே, ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கும் மற்றும் நாட்டோவின் கொள்கைகளுக்கும் நேர் எதிராக பொஸ்னியன் சேர்பியர்களுடனும் மற்றும் மிலோசோவிக் அரசுடனும் தனியான சமரசங்களை பிரான்ஸ் தொடர்ச்சியாக செய்துவந்தது.

பிரெஞ்சு அதிகாரிகள் பால்கனில் நடந்த நிகழ்வுகள் பற்றி எந்தவொரு நீதிமன்றத்திற்கும் முன்னால் குறிப்பாக, Hague இல் இருக்கும் யுத்தக் குற்றத்திற்கான சர்வேத நீதிமன்றத்தில் அவர்களது தனிப்பட்ட இராணுவ வாக்குமூலத்தை அளிப்பதற்கு எப்போதும் தயக்கம் காட்டிவந்துள்ளார்கள். Hague நீதிமன்றம் ஒரு ''அமெரிக்க விவகாரம்'' என்ற உண்மையை காட்டுவதற்கு பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் எப்போதும் மறைத்ததில்லை, அத்துடன் பிரெஞ்சு பாதுகாப்பமைச்சர் Alain Richard அதை ஒரு ''கண்காட்சி'' என அழைத்தார். சில பிரெஞ்சு பத்திரிக்கையாளர்களின் படி, அதற்கு முன் வாக்குமூலம் அளிப்பதானது பால்கனில் பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் பல இருண்ட நடவடிக்கையினை அம்பலப்படுத்துவதாக இருக்கும். சுட்டிக்காட்டப்பட்ட யுத்தக் குற்றவாளிகள் தொலைபேசி அழைப்புகள் வந்ததற்கான மறைக்கப்படாதிருக்கும் பிரெஞ்சு நகல், ஆவணங்கள் அல்லது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ''நட்பான'' பிரெஞ்சு அதிகாரிகளின் அழைப்புகளை அவர்கள் மேற்கோள் காட்டக்கூடும் என அவர்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

பிரெஞ்சு அமைப்பும் மற்றும் இராணுவ அதிகாரத்துவமும் பால்கனில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் பிரிந்துபோய் நிற்கின்றன. ஜேர்மனுக்கு மாறாக, பிரான்ஸ் பொஸ்னியன் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள சிலகாலத்திற்கு மறுத்தது. ஆளும் வர்க்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவு, உபயோகமான கூட்டாளியாக சேர்பியாவை பார்த்ததுடன், அது பால்கனில் உறுதிப்பாட்டை பேணும் பிராந்தியத்தியத்தின் ஒரு பலமான சக்தியாக பாத்திரம் வகிக்க முடியும் எனவும் பார்த்தது. 1992-95 இன் யுத்தத்தின் பின்னர், பொஸ்னியாவின் எல்லைக்குள் இருக்கும் பிராந்தியங்கள் சேர்பியர்கள் உரிமைகோரியதுபோல் அது உண்மையிலே சேர்பியர்களுக்கே போய்ச்சேரும் என பாரீஸ் நிலைமையை விளங்கிக்கொண்டது. ஜக்கிய அமெரிக்கா பால்கன் நிகழ்வுகளில் ஆளுமை செலுத்தியதற்கும் மற்றும் வாஷிங்டன் தனது சொந்த மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்கு ஒரு தடையாக பார்த்துவந்த மிலோசோவிக்கின் அரசை கீழ்மைப்படுத்த அமெரிக்காவின் விருப்பத்திற்குரிய கொள்கையாக இருந்த பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவித்தற்கும் பரந்தமட்டத்தில் வெளிப்படையான எதிர்பு இருந்துவந்தது.

Dayton உடன்படிக்கையானது ''ஒரு அமெரிக்கன் காட்சி'' ஆகத்தான் இருந்தது என சில இராஜதந்திரிகள் விளங்கப்படுத்தியிருந்தார்கள். பிரெஞ்சு பூர்சுவாசியின் மனக்கசப்புகளை இது வெளிக்காட்டிகொண்டபோதும், இறுதியாக ஜக்கிய அமெரிக்காவினது பால்கனின் கொள்கை தீர்மானத்தின் அடிப்படை வரையறைக்குள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள்.

Bunel வழக்கு தொடங்கியிருந்தபோதும், பிரிவினைவாதத்தை நிராகரித்துவிட்டு, ஒரு சீர்திருத்த யூகோஸ்லாவ் கூட்டமைப்புக்குள் வரும்படி Montenegro சேர்பிய குடியரசு மற்றும் ஐக்கிய நாடுகளால் மேற்பார்வை செய்யப்படும் கொசவோ பிராந்தியங்களில் உள்ள மக்களிடம் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிறாக் அழைப்புவிட்டார். பெல்கிறாட் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, ''நவீன உலகத்தில் நாட்டை பிரிப்பதானது, ஒரு அமைதியான மற்றும் உறுதியான தீர்வாக இருக்கமுடியாது... பின்வாங்கும் கொள்கையில் ஒரு தீர்வு காணமுடியாது... முரண்பாட்டின் தர்க்கத்தின் அடிப்படையிலான.... பேச்சுவார்த்தையில்.'' என சிறாக் வலியுறுத்தினார்.

2000 அக்டோபர் இல் மிலோசோவிக்கின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்ற மேற்கின் ஆதரவுடன் நடந்த ஆட்சிகவிழ்ப்புக்கு பின்னர், சேர்பியாவுக்கு விஜயம் செய்த முதல் ஐரோப்பிய தலைவர் சிறாக் ஆவார். அத்துடன், மசடோனியாவை நோக்கியும் தனது செய்தியை நெறிப்படுத்தினார், ''ஒரு புதுப்பிக்கப்பட்ட யூகோஸ்லாவ் கூட்டமைப்பும், அதனது ஒருமைப்பாடானதும் பிராந்தியத்தின் உறுதிப்பாட்டுக்கு மட்டுமல்ல மாறாய், யூகோஸ்லாவ் சமூகத்தின் உள்ளான வேறுபட்ட சமூங்களின் அமைதியான உறவுளின் அபிவிருத்திக்கும் உகந்த தீர்வாகும் என்றார்.''