World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தோனேசியா

Creditors' meeting highlights Indonesia's economic and political fragility

இந்தோனேசியாவினுடைய பொருளாதார அரசியல் சீர்குலைவு கடன் கொடுப்பவர்களின் கூட்டத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

By John Roberts
13 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

நாட்டின் பொருளாதாரத்தினதும் அரசியலினதும் நிலைமை எவ்வளவு ஆபத்தில் உள்ளது என்பதை கடந்த வாரம் ஜக்காட்டாவில், இந்தோனேசியாவிற்கு கடன் கொடுப்பவர்களின் ஓர் சந்திப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

உலக வங்கியின் தலைமையில் வழிப்படுத்ததப்பட்ட 20 அங்கத்துவ நாடுகளையும், 13 ஸ்தாபனங்களையும் அடக்கிய இந்த இந்தோனேசியாவின் ஆலோசனை குழு (CGI) நவம்பர் 7-8 ல் இந்தோனேசிய உயர் மட்ட பொருளாதார மந்திரிகளுடன் சந்தித்தனர். இக் கூட்டத்தின் முக்கிய புள்ளி அடுத்த வருட அரச வரவு செலவு திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக் குறைவான 3-4 பில்லியன் டொலருக்கான கடனுக்கான நிபந்தனைகளை தீர்மானிப்பதற்காக அமைந்தது.

பாரிய பாதுகாப்பிற்கு மத்தியில் மூடிய கதவுகளுக்கு பின்னால் இச்சந்திப்பின் பெரும் பாகம் நடந்தது. வெளியில் நுாற்றுக்கணக்கான தொழில்சங்கவாதிகளுடன் கூடிய எதிர்ப்பாளர்கள், பூகோளமயமாக்குதல் எதிர்ப்பு குழுக்களுக்கள், முஸ்லீம் மாணவர்கள் சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் கடன்களை நீக்குமாறு கொடிகளை உயர்த்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூட்டத்தின் உள்ளேயும் கூட பதட்ட நிலை மிகவும் கூர்மையாகவிருந்தது, கடன் கொடுப்பவர்களும் தொழிற்சாலை உரிமையினரும் இந்தோனேசிய அரசாங்கம் தனியார் மயமாக்கும் திட்டங்களையும், திட்டமிட்ட இலஞ்சத்தை ஓர் முடிவிற்கு கொண்டு வர செயல்பட தவறியதையிட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்கள் மிகவும் கண்டிப்பாக இருந்தனர். வெளிமாவட்டங்களான ஏசேயும் (Acceh) மேற்கு பப்புவாவிலும் (West Papua) குறிப்பாக பிரிவினைவாத இயக்கங்களின் காரணமாக ஏற்பட்ட அரசியல் திடமின்மை பற்றியும் கவனத்தில் எடுக்கப்பட்டது.

உலக வங்கியின் உதவி தலைவர் Jemal-ud-din-Kassum கூட்டத்தின் தொடக்கத்தில், ''முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையை திரும்ப பெறுவதற்கு தற்பொழுது இந்தோனேசியா வரும் ஆறு மாதங்களுக்கு மிகவும் குறுகிய யன்னலினால் புகக்கூடிய சந்தர்ப்பங்ளை தான் கொண்டுள்ளது என உலக வங்கியான நாங்கள் நம்புகிறோம் எனவும், முதல் முறையான (1997) நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து இந்தோனேசியாவால் முகம் கொடுக்கப்பட்ட பாரிய உள்நாட்டு ஜனநாயக அபாயங்கள் தற்பொழுது ஓர் புதிய அதேமாதிரியான வெளிஅபாயங்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு பொருளாதாரம் ஒரு நீடித்த, ஆழமான பிரச்சனைகளை கொண்டுள்ளது" என எச்சரிக்கை செய்தார்.

இரண்டு நாள் CGI (Consultative Groups on Indonesia) கூட்டத்தில் அடுத்த வருட வரவு செலவுக்காக 3.14 மில்லியன் டொலர் கடனையும் ஓர் மேலதிகமான 586 மில்லியன் டொலர் தொழில் நுட்ப உதவிகளையும், மானியங்களையும் கொடுப்பதற்கு சம்மதித்துள்ளனர். எப்படியிருந்தாலும், எல்லா கணக்குகளிலும் சர்வதேச நிதி முதலீட்டர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மேகாவதி சுக்கானோ புத்திரியின் அரசாங்கத்தை குறிப்பில் எடுத்துக்கொண்டனர்.

நவம்பர் 9 அன்று ஜக்காட்டா போஸ்ட் (Jakarta Post) பத்திரிகை ஓர் ஆசிரியர் தலையங்கத்தில் "(கடன் பெற்றது சம்பந்தமாக) இங்கே அரசாங்கம் சந்தோசப்படுவதற்கு எதுவித காரணமும் இல்லை ஏனெனில் அவர்கள் பணம் கொடுப்பதற்கான உத்தரவாதம், அவ்வப்போது திட்டங்களை செயற்படுத்துவதிலே தங்கியுள்ளது. உண்மையில் மூடிய கதவின் பின்னான சந்திப்பில் சமூகமளித்தவர்களின் சில குறிப்புகளின் படி அங்கே ஏற்கனவே ஓர் உதவிக்கான காற்றின் சோர்வுத் தன்மை கடன் கொடுப்பவர்கள் மத்தியில் காணப்படுகிறது, ஏனெனில் சீர்திருத்தத்தை அமுல் படுத்துவதற்கான பதிவு மூலங்களில் அரசாங்கத்தினுடைய கவலையீனங்களாலாகும்'' என கருத்து தெரிவித்தது.

டோக்கியோவில் நடந்த கடந்த CGI கூட்டத்தில் வாக்குறுதி செய்யப்பட்ட 4.8 மில்லியனில் 2.6 மில்லியன் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஏனெனில் சுதந்திர சந்தை சீர்திருத்தங்களையும், சம்மதித்த திட்டங்களையும் தொடங்க அரசாங்கம் தவறியதாலாகும். 1998 இல் இருந்து 9 மில்லியன் டொலர் அல்லது 60% வீத CGI ல் வாக்குறுதியளிக்கப்பட்ட கடன்கள் இதே மாதிரியான காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் இல் இந்தோனேசியாவின் வெளிநாட்டு கடன் 137.6 மில்லியனாக டொலர் இருந்தது. இது ஒரு வருடத்திற்குரிய தேசிய உள்நாட்டு உற்பத்திக்கு சமமானதாகும். இதில் 54% அரசாங்கத்தினுடைய கடனாகும். ஏற்கனவே வருட ஏற்றுமதியின் சம்பாதிப்பின் 40% வெளிநாட்டு கடனுக்கு செலவளிக்கப்படுவதுடன், வெளிநாட்டு உள்நாட்டு கடனுக்காக 42% அரச வரவு செலவின் தேவைக்கும் பாவிக்கப்படுகிறது.

உண்மையில் வேறு எந்த வெளி ரீதியான நிதிக்கான மையம் ஏதுவும் இல்லாத இந்தோனேசிய அரசாங்கம் மிகவும் ஆவலுடன் CGI ன் கடனை எதிர்பார்த்து நிற்கிறது. CGI சந்திப்பிற்கு முதல் வாரம் சர்வதேச நிர்ணய நிறுவனமான Stanard &Poor நாட்டின் ஒருமித்த கடன் வீதத்தை CCC+ இருந்து CCC என கீழ் இறக்கம் செய்துள்ளது. இந்தோனேசிய நாணயமான Rupiah 11,000 அமெரிக்க டொலருக்கு வீழ்ச்சியடைந்த பின்னர் சிறிதாக மீள்ச்சியடைந்தது இது மேகாவதி சுக்கானேபுத்திரி யூலையில் பதவிக்கு வந்த பின் ஒப்பிட்டுப்பார்க்கையில், கிட்டத்தட்ட 8,200 இருந்தது.

Abdurrahman Wahid ஜனதிபதியாக பாராளுமன்றத்திலிருந்து தூக்கி எறிந்ததுடன் மேகாவதி பதவியேற்று மூன்று மாதத்திற்கு பின்னர் புதிய நிர்வாகம் சம்பந்தமாக ஜர்காட்டாவிலும், சர்வதேச ரீதியிலும் வர்த்தக வட்டாரங்களிடம் இருந்த திடநம்பிக்கை ஆவியாகப் போய்விட்டது. முதல் 100 நாட்கள் ஆட்சியின் பின் மேகாவதி மேல் நம்பிக்கை இழந்த முறையில் இந்தோனேசியா உடைவதற்கான அபாயத்தில் உள்ளதாகவும், பொருளாதார பிரச்சனைகளை முன்னெடுத்து செல்வதற்கு முகம் கொடுப்பது வரையறுக்கப்பட்டுள்ளது என எச்சரித்தது. உதவி ஜனாதிபதி இன்னமும் வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்கையில்: "முதல் 100 நாட்களில் அரசாங்கத்தின் கப்பல் இன்னும் தாண்டு போகாததற்கு நாங்கள் நன்றி கூறவேண்டும்."

1998 இல் இராணுவ ஆட்சியாளரான சுகாட்டோவை பதவி நீக்கம் செய்ய தூண்டிய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் எதுவும் தீர்வு செய்யப்படவில்லை. மேகாவதி ஒற்றைக் காலை அங்கும் இங்கும் வைத்த நிலையில் உடைவு ஏற்படக்கூடிய கூட்டு ஆட்சியில், அதாவது மேலாதிக்கம் செலுத்தும் வலதுசாரி இஸ்லாமிய கட்சி, இராணுவத்தினதும் மற்றும் ஆளும் சுகாட்டோவின் கோல்கார் கட்சிகளுடன் அமர்ந்துள்ளார். பொருளாதார பதவிகள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார சீர்திருத்த வேலை திட்டத்தை ஆதரிப்பவர்களின் கையில் இருக்கையில் மற்றய பக்கத்தில் இதை அமுல் செய்வதற்கான திட்டங்களை செயல்பட நகரும்போது எதிர்ப்புக்களை முன்னைய யுந்தாவுடன் தொடர்புபட்டவர்களின் நலன்களுடன் முட்டி மோத வேண்டியுள்ளது.

Far Eastern economic review பத்திரிகையின் நவம்பர் இதழ் ''மேகாவதி பதவியேற்கையில் மிகவும் மதிப்பான பொருளாதார அமைச்சர்களை நியமித்ததன் மூலம் பாரிய வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தார். ஜனாதிபதியின் அரசியல் இயலாமையுடன் இணைந்து ''இக் கனவுக்குழு'' (‘Dream team') தனது இயலாமையை காட்டியது'' எனக்குறிப்பிட்டது. சுகார்னோவின் அமைச்சரான Sarwono Kusumaadmadja தொடர்ச்சியான ஊழலையும், திருப்பியளிக்கப்படாத கடனையும், பொருளாதார, சட்ட சீர்திருத்தங்களையும் செய்யாதமையை சுட்டிக்காட்டி இவ்வரசாங்கத்தை ''புதிய அமைப்பானது (சுகார்ட்டோ காலகட்டமானது) தலைமையற்றும், நோக்கமற்றும் இருக்கின்றது'' என குறிப்பிட்டார்.

சர்வதேச மூலதனத்தின் பதட்ட நிலையை, உலக வங்கி "இந்தோனேசியா: சீர்திருத்தத்திற்கான அவசரம்" என்ற ஓர் அறிக்கை மூலம் CGI கூட்டத்திற்கு முன்னர் வெளியிட்டது. அதில் மேலும் ''செப்டெம்பர் 11 சம்பவத்திற்கு பல மாதங்களுக்கு முன்னரே இந்தோனேசிய பொருளாதார திருப்பம் மந்தமடைந்துள்ளது. இது அரசியல் உறுதியின்மை, சமூக பதட்ட நிலையையும், சீர்திருத்தங்களை மந்தமடையவும், மூலதனத்தின் இடையேயான போட்டியை அதிகரித்துள்ளதுடன், முதலீட்டாளர்கள் அச்சமடையச் செய்துள்ளதுடன், அபிவிருத்திக்கு தேவையான உத்தியோகபூர்வமான வெளிஉதவிகளையும் பின்னடையச் செய்துள்ளது'' என குறிப்பிட்டது.

இந்த அறிக்கை, மேகாவதியினுடைய நிர்வாகம் "ஆட்சியின் சீர்திருத்தங்களிலும் அமைப்பு ரீதியான முன்னேற்றங்களிலும் சிறிய மாற்றத்தையே செய்துள்ளது என திட்டியதுடன், மேலும் ''வங்கிகள் இந்தோனேசியாவை ஒரு ஒழுங்கமைப்பு இல்லாத நிலைமையில் ஒரு மாற்றங்களை செய்வதற்கான நிலையில் இருத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் நிலையானது சில பின்னடிப்புகளுடன் இச் சீர்திருத்தங்களை செய்ய ஆரம்பிக்கின்றதாக இருக்கின்றது'' என குறிப்பிட்டது.

மூதலீட்டாளர்களுடைய முக்கியமான கவலைகளில் ஒன்று அரசாங்கம் வலிமையிழந்த முறையில் தனது தனியார் மயமாக்குதலை முன் எடுத்து செல்லாததிருப்பதாகும். கிட்டத்தட்ட 80 வீதம் முன் எடுத்து செல்ல வேண்டிய அரச சீமேந்து தனி உரிமையான Semen Gresik விற்பனையில் இருந்து வருவதாகும். மெக்சிக்கோ பன்நாட்டு நிறுவனமான Cemex இவ் இந்தோனேசிய கம்பனியை வாங்குவதற்கு வரும்போது, மேற்கு சுமத்திரா மாகாண அரசாங்கம் இவ் விற்பனையை தடை செய்ததுடன், இது உள்ளூர் மக்களின் நலத்திற்காக இல்லையென கூறியது.

உலக வங்கி அதிகாரிகள், அரசாங்கத்தை இப்பிரச்சனையினுள் தலையிடுமாறு கோரிக்கை விட்டனர். உயர் மட்ட பொருளாதார வல்லுனரான Vikram Nehru கருத்து தெரிவிக்கையில் "இம் முடிவை சரியென அனுமதித்தால், இது அரசாங்கத்தினுடைய தனியார்மயமாக்குதல் திட்டத்திற்கு ஓர் பெரிய தடையாகும்...... இது முதலீட்டாளர்களின் பெரிய கவலைக்கும், நிச்சயமில்லாமைக்கும் வழிவகுக்கும்" என கூறினார்.

Semen Gresik னுடைய பிரச்சனை, IMF ல் உருவாக்கப்பட்டுள்ள முழுத்திட்டங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்தோனேசியாவிலுள்ள ஒரு பகுதி வியாபாரத்தின் மேல் தனியார் மயமாக்குதல், பிரத்தியோக உரிமைளை முடிவுக்கு கொண்டு வருதல், வரவு செலவு திட்டத்தில் ஏற்படும் வெட்டுக்கள், மற்றும் வேறுமாதிரியான சீரமைப்பு திட்டங்களால் பாதிப்பை ஏற்பட்டதுடன் ஆளும் கூட்டு கட்சியினுள் பிளவுகளையும் உடைவுகளையும் இத் திட்டங்கள் ஏற்படுத்தும். மேலும் இப்படியான நடவடிக்கைகள் சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தின் மேல் மோசமான தாக்குதலையும், அதிருப்தியையும் எதிர்ப்புக்களையும் உருவாக்குகின்றது.

குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதியின் கேள்வி கூடிய காரணத்தால் 1997-1998 நிதி நெருக்கடியின் பின் இந்தோனேசிய பொருளாதாரம் ஓர் குறிப்பிட்ட அளவு திருப்பு முனையின் உயர்வினை அடைந்தது. இந்தோனேசியாவின் பொருளாதாரத் திட்டத்தை, வளர்ந்துவரும் பூகோள ரீதியாக பொருளாதார மந்தம் இருண்ட நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்தவாரம் நெசவு துணிகள் சம்மேளன தலைவரான Benny Sutrisno முன் கூட்டியே 2001ல் நெசவு துணிமணிகள் ஏற்றுமதி 25 வீதம் வீழ்ச்சி அடையுமெனவும் நிலைமை மோசமடைந்தால் இவ் உற்பத்தியில் 100,000 வேலை இழப்பு ஏற்படுமென எச்சரித்ததுள்ளார்.