World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஜப்பான்

Japanese parliament votes for military role in Afghan war

ஆப்கான் யுத்தத்தில் இராணுவம் பங்காற்ற ஜப்பான் பாராளுமன்றம் ஆதரவாய் வாக்களிப்பு

By James Conachy
31 October 2001

Use this version to print | Send this link by email | Email the author

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக, ஜப்பான் நாட்டின் பிரதம மந்திரி ஜீனிச்சிரோ கோய்சுமி (Junichiro Koizumi) செப்டம்பர் 11ந் தேதி அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தின் மீதான மக்களின் அச்ச உணர்வைத் தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டு, போருக்குப் பிந்தைய யுத்த ஒழிப்பு அரசியல் சட்டத்தை தவிர்த்து, இராணுவம் யுத்தத்தில் பங்குகொள்ளும் என்று அனுமதித்துள்ளார். அக்டோபர் 29ந் தேதி ஜப்பான் பாராளுமன்றத்தால் அல்லது டயட்டால், அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு" எதிரான ஐக்கிய அமெரிக்க அரசுகளின் இராணுவ நடவடிக்கைக்கு ஜப்பானின் சுய பாதுகாப்பு படையை [Self-Defence Force (SDF)] அனுப்பி "தகவுப் பொருத்தமான ஆதரவை" கொடுக்க வேண்டும் என்று சட்டமியற்றப்பட்டது.

உலக அளவில் நடைபெறும் பிரச்சனைகளைச் சமாளிக்க யுத்தமோ அல்லது படைக்குழுவையோ உபயோகிப்பதை 1947ல் இயற்றப்பட்ட அரசியல்சட்டத்தின் 9ம் பிரிவு தடை செய்கின்றது. உலகிலுள்ள மிகப் பெரியதும், அனைத்து வசதிகளும் உடைய ஜப்பானுடைய இராணுவம் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டம் முழுவதும் எல்லைப் பாதுகாப்புக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. புஷ்ஷினது அரசாங்கம் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" ஒரு சுய பாதுகாப்புக்கான நடவடிக்கை என்று கூறியதைத் தொடர்ந்து, ஜப்பானின் பிரதமர் கோயிசுமி ஆப்கானில் நடைபெறும் யுத்தத்தில் சுய பாதுகாப்புப் படை பங்கு கொள்வதை சேர்ப்பதற்கு "சுய பாதுகாப்பை" விரிவுபடுத்தியிருக்கிறார், மேலும் கொள்கை அளவில் உலகில் வேறெங்கு நடந்தாலும் அது பங்கு கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் பயணத்தின் போது ஜப்பான் பிரதமர் கோயிசுமி கூறியதாவது, "பாதுகாப்பான இடம் என்று ஒன்று எங்குமில்லை. ஜப்பானில்கூட அப்படி இல்லை. வேலை பார்க்குமிடத்தில்கூட பாதுகாப்பு இல்லை. எங்கும் பாதுகாப்பு இல்லை. எனவேதான் முன்கூறிய விவாதங்கள் இப்போது எடுபடாது. எனவே செப்டம்பர் 11ந் தேதியிலிருந்து ஜப்பானின் சுய பாதுகாப்புப்படை ஆபத்தான இடங்களுக்கு அனுப்பப்படடமாட்டாது என்று எம்மால் சொல்லமுடியாது."

ஜப்பானின் தேசிய செய்திப் பத்திரிகையான யோமியுரி சிம்பு வின் கருத்துக்கணிப்புப்படி 83 சதவீதம் மக்கள் 'அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கான "தேவையை ஏற்றனர்" அதேவேளை, 57% ஜப்பானின் பங்கேற்புக்கும் ஆதரவளிக்கின்றனர். பிரதமர் கோயிசுமி மற்றும் பத்திரிகையாளர்கள் மூலம், ஜப்பானின் மீதான தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மீதான வீண் கிலிபரப்பல் சிலவாரங்களாகத் தொடர்ந்தது. யோமியுரி தலையங்க எழுத்தாளர், ஜப்பானை அதன் பூகோள நிதி செல்வாக்கின் காரணமாக 'கவர்ந்திழுக்கும் இலக்கு' என்று வர்ணித்திருக்கிறார்.

ஜப்பானின் SDF (சுய பாதுகாப்பு படை) முழு மூச்சாக எதிர்த்து போராடும் திட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தாலும், முக்கிய இராணுவ உதவிகளான மருத்துவமனை நிறுவுதல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, ஆயுத சப்ளைகளுக்கும் வான்வெளிகளுக்கும் பாதுகாப்பு கொடுத்தல் போன்றவைகளை செயல்படுத்த அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய அரசாங்கம் அதன் வீரர்களை யுத்தத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அகதி முகாம்களைக் கண்காணிக்கவும், அதன் கடற்படை வீரர்களை ஆயுதம் மற்றும் எரிபொருள்களை அமெரிக்கபடைகளுக்கு ஏற்றிச்செல்லவும் ஏற்பாடு செய்துள்ளது. ஒரு அழிக்கும் கப்பல் உட்பட 4 கப்பல்களை இந்திய பெருங்கடலில் உள்ள டிகோ கார்சியா என்னுமிடத்தில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்துக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் யுத்தத்துக்கு தம்மை ஒதுக்கிக் கொண்ட ஜப்பானின் எந்தவொரு இராணுவ படையும், புதிய விதிகளின் கீழ் இயங்கும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்லாமல், "தங்கள் பாதுகாப்பின் கீழ் உள்ளவர்களை" பாதுகாத்துக் கொள்ளவும் ஆபத்தான படைகளை உபயோகிக்கவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். கோயிசுமியின் கோட்பாடு அவர்களை மறைமுக தாக்குதலுக்கு உபயோகிக்கவும் அனுமதிக்கிறது என்ற விவாதமும் கூட இடம்பெற்றது. யோமியுரிசிம்பு வின் தலையங்க எழுத்தாளர் டகேசி, உயேமுரா அக்டோபர் 16ல்: "ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் குறிக்கும் அரசியல் சட்டத்தால் இராணுவ நடவடிக்கை கைவிடப்பட்டது. தீவிர யுத்தத்தையே குறிக்கிறது. உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் குலைக்கும் பயங்கரவாதத்தை அழிக்கும் கூட்டு நடவடிக்கைகளை ஒருபோதும் ஆக்கிரமிப்பு யுத்தமாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது." என எழுதினார்.

SDF-ஐ பயன்படுத்தும் தற்போதைய நடவடிக்கையானது ஜனநாயக உரிமைகளில் எல்லை மீறல்களை நியாயப்படுத்தப்படுகிறது. மேல் சபையினில் உள்ள பாதுகாப்பு ரகசிய மசோதாவானது, பொது மக்கள் இராணுவ நடவடிக்கை பற்றி அறிந்து கொள்வதை உரிமை இழக்கச் செய்துள்ளது. அமெரிக்க எப்.பி.ஐ-ன் சர்ச்சைக்குரிய "கனிபல்" "Cannibal" முறையின் மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்தி, தனியார் மின் அஞ்சல் செய்திகளை பொலீசார் கண்காணிக்க இருக்கின்றனர். கனிபல் என்பது இணைதள சேவை அளிப்பவர்களின் சேர்வர்களில் இணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட குறியீட்டு வார்த்தைகளுக்கான அஞ்சலில் உள்ளேயும், வெளியேயும் செல்லும் தகவல்களை தேடி கண்டுபிடிக்கிறது.

இந்த புதிய SDF சட்டமானது பயங்கரவாத அச்சுறுத்தலின் உந்துதலால் இயற்றப்படவில்லை. 1990களின் முழுவதும், ஆளும் தாராண்மை ஜனநாயகக் கட்சி ஜப்பானின் மூலோபாய மற்றும் பொருளாதரார நலன்களைக் கருத்தில் கொண்டு இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்க ஒரு முயற்சி எடுத்தது. ஆளும் வர்க்கமானது யுத்தத்திற்குப் பிந்தைய காலம் முழுவதும், இராணுவத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏளனம் செய்தது. ஆனால் குளிர் யுத்தத்தின் முடிவு, யுத்த ஒழிப்பு பிரிவு அவசரம் என்பதை ரத்துச் செய்தது அல்லது மறுவிளக்கம் கொடுத்தது.

இந்த சட்டமானது ஈராக்குக்கு எதிரான யுத்தத்தில் ஜப்பானிய ராணுவம் பங்கு கொள்வதைத் தடுத்தது. அதேவேளை அது அந்தப் போருக்காக வாஷிங்டனுக்கு 13 பில்லியன் டாலர்களைக் கொடுத்தது, மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலம் மீதான பேச்சுவார்த்தைகளில் ஜப்பான் பெரும்பாலும் விலக்கி வைக்கப்பட்டது. அரசியல்வாதிகள் அதே நேரத்தில் ஜப்பான் துருப்புக்களை அனுப்ப மறுத்ததன் மூலம் ஜப்பானிய நலன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டுவிட்டன என்றும் வெள்ளை மாளிகை ஜப்பானுடனான உறவை விட சீனாவுடனான உறவுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றது என்றும் புகார் செய்தனர்.

ஜப்பானியப் படைகள் ஐ.நா அமைதிகாப்பு படையில் ஆதரிக்கும் பாத்திரத்தை ஆற்ற அனுமதிக்கும் சட்டம் 1992ல் இயற்றப்பட்டது மற்றும் கம்போடியாவில் ஜப்பானியப் படைப்பிரிவு பணி புரிந்தது. மேலும் 1997ம் ஆண்டு இயற்றிய கூடுதல் சட்டம் "ஜப்பானை சுற்றியுள்ள பகுதிகளில்" அமெரிக்கப் படைகளுக்கு ஜப்பானின் சுய பாதுகாப்புப் படை உதவிட அனுமதி அளித்தது. இது கொரிய தீபகற்பம் மீதான யுத்தம் அல்லது தைவான் மீதாக அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான எந்த மோதலிலும் ஜப்பானிய இராணுவம் பாத்திரமாற்றுவதற்கு கொள்கை அளவில் வழிவகுக்கின்றது.

இப்பொழுது, புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11 தாக்குதலை சாக்காகப் பயன்படுத்தி மத்திய ஆசியாவிற்கு துருப்புக்களை அனுப்பியதுடன் 1991ல் போல் ஜப்பான் இணைந்து நிற்காது என்பதில் கொய்சுமி உறுதியாக இருந்தார். அவரது அரசு மத்திய ஆசியாவின் பரந்து விரிந்த எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் பற்றிய எதிர்காலம் பற்றியதில் முடிவெடுப்பதில் ஒரு இடத்தைப் பெற விழைந்தது. ஆப்கானிஸ்தானில் இறுதியில் எந்த ஆட்சி ஏற்பட்டாலும் அதற்கு நிதி உதவுவதில் பெரும் பங்காற்ற அது முன்வந்திருக்கிறது.

ஜப்பானிய தேசியவாதத்தின் புதுப்பிப்பு

ஏப்ரலில் பதவி ஏற்ற கொய்சுமி ஜப்பானிய இராணுவ மற்றும் தேசிய உணர்வுகளைப் புதுப்பிப்பதை ஊக்குவித்தார். அரசியல் சட்டத்திலிருந்து பிரிவு 9 ஐ அகற்றுவதற்கு ஆதரவாக அவர் தாரண்மை ஜனநாயகக் கட்சி தலைமைக்கு பிரச்சாரம் செய்தார். நூற்றாண்டின் முதற்பாதியில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தினை நியாயப்படுத்தி வரையடப்பட்டுள்ள தேசிய பாடப் புத்தகங்கள் வெளிவருவதைத் தடுக்குமாறு சீனா மற்றும் கொரியாவின் கோரிக்கைகளை அவரது அரசாங்கம் நிராகரித்தது. யுத்தத்தில் பிராந்தியத்திலும் உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் ஆகஸ்டில் ஜப்பானியரின் மரணத்தைக் குறிக்கும் யசுக்குனி எனும் புனிதத் தலத்தில் கொய்சுமி வழிபட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க யுத்தத்தில் ஜப்பானின் தலையிடலுக்கான அவரது முயற்சிகள் அரசியல் ஸ்தாபனத்திற்குள் ஆதரவைப் பெற்றிருந்தன. யோமியுரி ஷிம்புன் "வளைகுடா யுத்தத்திலிருந்து ஒரு பாடத்தைப் படிக்கவேண்டும்" மற்றும் "ஒரு நாட்டு போர் ஒழிப்புவாதத்தை" ஜப்பான் விட்டொழிக்கவேண்டும் என்றும் அதன் தலையங்கங்களில் பிரச்சாரம் செய்துள்ளது. தாராண்மை ஜனநாயகக் கட்சியின் கூட்டணி பங்காளரான, எப்பொழுதும் போர் ஒழிப்பு அரசியற் சட்டத்தை ஆதரித்து வரும் புதிய கொமெய்ட்டோ கட்சி, பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவினை ஆதரித்து வாக்களித்தது. பிரதான எதிர்க்கட்சியான ஜப்பானிய ஜனநாயகக் கட்சி துருப்புக்களை அனுப்புவதற்கு ஆதரவளித்தது. தாராண்மை ஜனநாயகக் கட்சி இராணுவப் படைகளை அனுப்புவதற்கான நிபந்தனைகளை பாராளுமன்றம் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை மறுத்ததன் அடிப்படையில் மட்டுமே ஜப்பானிய ஜனநாயகக் கட்சி மசோதாவிற்கு எதிராக வாக்களித்தது.

ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் அரசியல் சட்டத்தை மதிப்பதற்காக எதிராக வாக்களித்தன. போருக்குப்பிந்தைய காலகட்டம் முழுவதும் இருகட்சிகளுமே இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுதும் அதற்கு முன்னரும் ஈவிரக்கமற்ற ஒடுக்கு முறைக்கு ஆளாகிய தொழிலாளர்கள் மத்தியில் இராணுவ எதிர்ப்பு உணர்வை ஆழமாய் உணர்வதற்கு வேண்டுகோள் விடுத்து வந்தன. இருப்பினும், மாறாமல் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் எதிர்ப்பை தேசியவாத திக்கில் செலுத்த முயற்சித்தன.

கொய்சுமி பற்றிய ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனங்கள் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு அடிவருடி என்று குற்றம் சாட்டுவதாகத்தான் இருந்தது. அதன் செய்தித்தாளான அகஹதா செப்டம்பர் 30 அன்று அரசாங்கத்தின் கவனத்துக்கு இராணுவத்தை அனுப்புவதை விரைவுபடுத்துதற்கு பங்களிக்கும் விதமாக "ஜப்பான் 'கொடி காட்டத் தவறும்' மற்றும் அமெரிக்க எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறும்" என குறிப்பிட்டது.

உண்மையில், ஜப்பானில் மசோதா கொண்டுவரல் அமெரிக்க அழுத்தத்திற்கு சிறிதளவே செய்வதற்கு இருக்கிறது. அரசாங்க துணைச் செயலாளர் ரிச்சார்ட் ஆர்மிட்டகே, டோக்கியோவை அமெரிக்காவிற்கு ஆதரவாக "கொடி காட்டுமாறு" அழைத்தார். ஆனால் புஷ் நிர்வாகம் ஜப்பானிய துருப்புக்களுக்கான தேவையை விலக்கி வைத்தது. அக்டோபர் மத்தியில் ஒரு பேட்டியின் பொழுது, புஷ் "ஜப்பான் பங்களிப்பதற்கான வழி பற்றி பேசுவதற்கு திறந்த மனதுடன்" அமெரிக்கா இருந்தது என்றார். மற்றும் ஜப்பானிய வங்கி முறையில் உள்ள மோசமான கடன் அகற்றப்படவேண்டும் என்ற மிகவும் கூடிய அக்கறையை வெளிப்படுத்தினார்.

துருப்புக்களை அனுப்புதற்கான கொய்சுமியின் அழுத்தம் ஜப்பானிய முதலாளித்துவத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுடன் கட்டுண்டிருக்கிறது. ஆளும் தட்டுக்கள் எதிர்காலத்தில் ஜப்பான் சுதந்திரமாய் இராணுவத்தைப் பயன்படுத்துதற்கு முன்னோடியை ஏற்படுத்துதற்காக அமெரிக்கா தலைமையிலான யுத்தத்தில் ஒரு இடத்தைப் பெற விழைகின்றன.