World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

Croatian government crisis over extraditions to UN tribunal

ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்திடம் ஒப்படைப்புகள் தொடர்பாக குரோSய அரசாங்கம் நெருக்கடியில்

By Chris Marsden
11 July 2001

Use this version to print

Ivica Racan தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் ஹேக் [Hague] யுத்த குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத்துடன் ஒத்துழைப்பதற்கும் வழக்கை எதிர்கொள்ள இரு இராணுவ உயர் அதிகாரிகளை ஒப்படைப்பதற்குமான முடிவை அடுத்து குரோஷியா அரசியல் கொந்தளிப்புக்குள் மூழ்கி உள்ளது.

துணை பிரதமர் Goran Granic உட்பட நான்கு அமைச்சர்கள் தங்களது ராஜினாமாவை சமர்ப்பித்தனர். சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய-இடது கூட்டரசாங்கத்தின் இளைய பங்காளியான சமூக தாராண்மை கட்சி (SLP) யின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதன் விளைவாக அரசாங்கம் எந்நேரமும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 151 பேர்கள் அடங்கிய பாராளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு 69 இடங்களே உள்ளன, ஆனால் கவிழாமல் இருப்பதற்கு இன்னும் 76 வாக்குகள் தேவை. தேசியவாதக் கட்சிகள் அத்தகைய எந்தவித ஒப்படைப்பையும் உறுதியாக எதிர்க்கின்றன, குறிப்பாக இப்போது நோய்வாய்ப்பட்டுள்ள பிரான்ஜோ ருட்ஜ்மனால் தலைமை தாங்கப்பட்ட HDZ கட்சி இதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது.

சமூக தாராண்மை கட்சியின் தலைவர் Drazen Budisa ஹேக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் "ஏற்க முடியாத" குற்றச்சாட்டுக்களை கொண்டிருக்கிறது என்று கூறினார். அவர் மேலும் "குற்றச்சாட்டுப் பத்திரம் இனஒழிப்பு குற்றச்சாட்டுக்களைக் கொண்டிருப்பதுடன் குரோசியாவிலிருந்து 1,50,000 சேர்பியர்களை இனரீதியாக துடைத்தழிப்பதற்காக புயல் நடவடிக்கை [Operation Storm] திட்டமிடப்பட்டதாக கூறுகிறது."

ஓய்வு பெற்ற படை வீரர்கள் சங்கங்கள், HDZ மற்றும் ஏனைய தேசியவாதகட்சிகள் Dalmatian கடற்கரை ஓரமுள்ள பிரதான உல்லாசப்பயணிகள் தங்கும் விடுதிகளை தடைசெய்வதன் சாத்தியம், உட்பட சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலத்தில் வெகுஜன எதிர்ப்பைத் திரட்டப் போவதாக எச்சரித்துள்ளன. கடந்த ஆண்டு யுத்தகுற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஓய்வு பெற்ற தளபதி Mirko Norac கைது செய்ய குரோஷிய நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பின்னர், தலைநகர் Zagreb இற்கும் Split நகரத்திற்கும் இடையில் நான்கு நாட்களாக பிரதான சாலையை அடைத்து வைத்தது உட்பட பெரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடுசெய்தனர். கடந்த 1991ம் ஆண்டில் Gospic எனும் நகரில் சேர்பிய குடிமக்களை கொன்றதில் நோராக் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச யுத்த குற்றங்கள் விசாரணை நீதிமன்றத்திடம் தம்மை ஒப்படைக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தைப் பெற்ற பின்னரே அவர் தன்னை அதற்கு ஒப்புக் கொடுத்தார். சர்வதேச யுத்த குற்றங்கள் விசாரணை நீதிமன்றம் (ICTY) தற்போது ஹேக்கில் முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசெவிக்கின் வழக்கை தயார் செய்து வருகிறது.

சர்வதேச யுத்த குற்றங்கள் விசாரணை நீதிமன்ற தலைமை வழக்குதொடுனர் Carla del Ponte குரோசிய அரசாங்கத்திடம் மூடி முத்திரையிடப்பட்ட இரு குற்றச்சாட்டுப் பத்திரத்தை ஜூன்12 அன்று கையளித்தார். அவை ஓய்வு பெற்ற ஜெனரல் Ante Gotovina மற்றும் ஜெனரலான Rahim Ademi ஆகியோர் தொடர்பானதாக இருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் ஒப்படைக்கப்படுவார்கள் ஆனால் "அமைதி இன்மைபற்றி தான் அஞ்சுவதாக" Ivica Racan சனிக்கிழமை அன்று குறிப்பிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில், Zagreb ஹேக்கிடம் 12 பொஸ்னியன் குரோஷியர்களை ஒப்படைத்துள்ளது, ஆனால் குரோஷிய குடிமக்களை அல்ல.

Ivica Racan, Granic கின் ராஜினாமாவை நிராகரித்ததுடன் ஜெனரல் Ademi இன் ஒப்படைப்புக்கு சம்மதித்து இருப்பதாகவும் அவரது வழக்கு பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புக்கு அரசாங்கம் உதவி அளிக்கும் என்றும் கூறினார். Gotovina தொடர்பாக ஒன்றும் கூறப்படவில்லை.

Ademi Ademi கொசோவாவில் இருந்து வந்த அல்பேனிய இனக்குழுவைச் சேர்ந்தவர். இவர் கிராஜினாவில் (Krajina) வில் சேர்பியப் படைகளுக்கு எதிரான தாக்குதலின்பொழுது குரோஷிய கொமாண்டர் ஆக இருந்தவர். 1993ல் இரண்டுநாள் நடவடிக்கையில் அப்பகுதியை குரோஷியா மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பொழுது சேர்பிய கிராமங்கள் அழிக்கப்பட்டதுடன், மற்றும் டஜன் கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டனர். குரோஷிய படைகள் வாபஸ் வாங்கி ஐக்கிய நாடுகளது படை அப்பகுதியை கட்டுப்பாட்டில் எடுக்கையில், 80 சேர்பிய குடிமக்கள் கொல்லப்பட்டதுடன், 11 கிராமங்கள் அழிக்கப்பட்டன.

Gotovina வழக்கில் இருந்து வெளிப்படப்போவது குரோஷியாவை மிகவும் கண்டனத்திற்கு ஆளாக்கக்கூடும், மற்றும் அது அமெரிக்காவிற்கு மிக ஆபத்தானதாகவும் இருக்கும், ஏனெனில் Gotovina சேர்பிய குடிமக்களை படுகொலை செய்வதில் பங்கெடுத்தார் என்று சொல்லப்படும் நேரத்தில், அமெரிக்கா குரோசியாவிற்கு ஆதரவளித்திருந்து. 1995 ஆகஸ்டில், Operation Storm நடவடிக்கை என்ற Krajina மீதான தாக்குதலின்போது, குரோஷியா 400 சேர்பிய குடிமக்களின் மரணத்தின் செலவில் அப்பகுதியை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதில் பெரும்பாலோர் வயதானவர்களாயும் வயதாகி தளர்ந்து போனவர்களாயும் இருந்தனர். மொத்தத்தில் தீ வைத்து அல்லது குண்டு வீச்சினால் 22,000 சேர்பிய வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. மற்றும் 1,50,000 சேர்பியர்கள் Krajina வை விட்டு சேர்பியாவுக்கோ பொஸ்னியாவுக்கோ துரத்தப்பட்டனர்.

பிரிட்டனின் ஜூலை8ம் தேதி ஒப்செர்வர் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையில் ஹேக்கில் Gotovina தொடர்பான எந்தவித வழக்கும் அமெரிக்கா மீதான சாத்தியமான விளைபயன்கள் தொடர்பான கவனத்தை உடனடியாக இழுத்தது. "பால்கன் யுத்தங்களின் மிகவும் இருளடர்ந்த பகுதிகளில் ஒன்றான, அமெரிக்கா குரோசியர்களை இரகசியமாக ஆயுதபாணியாக்கியதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அபாயத்தை அது கொண்டிருக்கிறது'' என பத்திரிக்கை எச்சரித்தது.

அப்பத்திரிகை மேலும் "முன்னாள் ஜனாதிபதி பிரான்ஜோ ருட்ஜ்மனின் [Franjo Tudjman] தேசியவாத அரசாங்கத்திற்கு அமெரிக்கா உதவியதன் வரலாறு, 1994 மார்ச்சில் குரோஷிய பாதுகாப்பு அமைச்சர் Joko Susak இராணுவ பயிற்சிக்காகவும், உதவிக்காகவும் பென்டகனை [Pentagon] அணுகியபோது அவரை வெர்ஜீனியாவை [Virginia] தளமாகக் கொண்ட இராணுவ ஆலோசனை நிறுவனமான Military Professional Resource Inc எனும் நிறுவனத்திடம் செல்லுமாறு வழிகாட்டப்பட்டார். அது முன்னாள் அமெரிக்கப் படைத் தளபதிகளால் நடாத்தப்படுகின்றது. மற்றும் அதன் முக்கிய வாடிக்கையாளர் அமெரிக்க இராணுவம் ஆகும். அதன் பின்னர் பென்டகன் MPRI க்கும் குரோஷிய இராணுவத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது.

MPRI குரோஷிய ராணுவத்திற்கு பயிற்சி அளித்தது மற்றும் Krajina தாக்குதலில் அது சம்பந்தப்பட்டிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது. அதேவேளை ஒப்செர்வரின் படி," அமெரிக்கபாதுகாப்பு மற்றும் புலனாய்வு சேவையும் சி.ஐ.ஏ வும் Zagreb அமெரிக்க தூதரகத்தில் பலத்தைக் கூட்டுவதில் ஈடுபட்டிருந்தனர். அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக குரோசிய தாக்குதலுக்கு உளவுத் தகவல்கள் அளிக்கப்பட்டதாக அந்நேரத் தகவல்கள்கூறின."

பொஸ்னியா யுத்தத்தின்போது ஒப்செர்வர் போன்ற பெரும்பாலான மிதவாத பத்திரிக்கைகள், அமெரிக்காவும் மேற்கத்திய அரசுகளும் பால்கன்களில் தங்களின் தலையீடு சேர்பிய படைகளால் நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தத்தான் என்று கூறியதற்கு முழு ஆதரவை அளித்தன. அமெரிக்கவின் குரோஷியக் கூட்டாளியின் அதே அளவு பயங்கரமான நடவடிக்கைகள் போலித் தோற்றம் கொடுக்கப்பட்டு தீங்கு குறைந்ததாகக் காட்டப்பட்டன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தனது 1995 டிசம்பர் 14 ம் தேதி பால்கன்கனில் ஏகாதிபத்திய யுத்தமும் குட்டி முதலாளித்துவ இடதுகளின் சீரழிவும் என்ற அறிக்கையில் அத்தகைய கூற்றுக்கள் பைத்தியக்காரத்தனத்தையும் குரோசியாவின் Krajina தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பின்வருமாறு அம்பலப்படுத்தியது:

"பொஸ்னியாவில் அமெரிக்காவின் நோக்கம் ஏற்கனவே 2,00,000 க்கும் அதிகமான மக்களை பலிவாங்கியதும், பத்து இலட்சத்திற்கும் அதிகமானோரை அகதிகளாக்கிய இன அடிப்படையிலான பிரிவினைப் போக்கினை நிறைவு செய்வதை இலக்காகக்கொண்டது. ஹிட்லரின் படைகளின் தோல்விக்குப் பின்னர், முதல்தடவையாக ஏகாதிபத்திய படைகளின் அறிமுகத்தை கூறாக இறக்கியதன் மூலம் புதிய மற்றும் விரிவான மோதல்களின் வெடிப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் கொடுத்துள்ளது. இந்தத் தீர்வினை அடைவதற்கான சூழல்களை உருவாக்குவதற்காக, கிளின்டன் நிர்வாகம் அமெரிக்க யுத்த விமானங்களையும், அப்பிரதேசத்திலுள்ள அமெரிக்காவின் கையாட்களின் படைகளையும் உள்ளடங்கிய தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தி உள்ளது. கடந்த செப்டம்பரில் அமெரிக்க விமான தாக்குதல் 3,200 குண்டுவீச்சுக்களில் ஒரு தொன்னுக்கும் மேலான குண்டுகளை வீசியுள்ளதுடன், Adriatic கடலில் நின்றுகொண்டிருக்கும் யுத்தக் கப்பல்களில் இருந்து cruise ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. பொஸ்னியா முழுவதும் உள்ள நகரங்களும் கிராமங்களும் இலக்காகக் கொள்ளப்பட்டதுடன், பல நூற்றுக்கணக்கான குடிமக்களும் கொல்லப்பட்டதுடன், இன்னும் பலர் காயமடைந்தனர்''.

"இக் குண்டுத் தாக்குதல்களின் உடனடியான இலக்கு பொஸ்னியாவிலுள்ள சேர்பிய இராணுவத்தின் போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்பு இணைப்புக்கள் அபரிமிதமான சேதத்தை கட்டாயமாக ஏற்படுத்துதலும், பொஸ்னியன் முஸ்லிம், குரோஷிய படைகளுடன் சேர்த்து குரோஷியாவின் வழமையான இராணுவம் பொஸ்னியாவின் வடமேற்கில் சேர்பியப் பிராந்தியங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனுமதிப்பதாகும். இந்த தரைரீதியான தாக்குதல் ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்றதுடன் இன்னும் 1,25,000 மக்களை அகதிகளாக்கியது. இரண்டுமாத இடைவெளிகளில் பொஸ்னிய உள்நாட்டுயுத்தம் முழுவதிலுமாக இன ஒழிப்பின் மிகப்பெரும் நடவடிக்கைகள் இடம்பெறுவதை அமெரிக்கா மேற்பார்வை செய்தது. இவ்வாறு Ohio விலுள்ள Dayton இல் அமெரிக்கா தரகுவேலை செய்யும் பேச்சுக்களுக்கான மேடை அமைக்கப்பட்டது."

பொஸ்னிய யுத்தம் முடிவிற்கு வந்தது முதற்கொண்டு, குரோஷிய அட்டூழியங்களுக்கு ஆதரவாக இருந்த அதன் பாத்திரம் வெளிவந்து விடும் என்ற பீதியால் அமெரிக்கா தொல்லைக்கு ஆளாகியுள்ளது. இப்பிரச்சினை தொடர்பான ஹேக் நீதிமன்றம் அமெரிக்காவின் பிரதான அக்கறைக்கு ஆளாகி உள்ளது. அமெரிக்கா வழக்கு விசாரணையை சேர்பிய அல்லது பொஸ்னிய சேர்பிய அல்லது பொஸ்னிய குரோஷியர்களின் யுத்தக்குற்றங்கள் எனும் எல்லைக்கு உட்படுத்த வலியுறுத்தி வரும் அதேவேளை, நீதிமன்றமானது குரோஷியாவின் குற்றங்களை முறையாக விரிவுபடுத்த திரும்பத் திரும்ப முயற்சிசெய்து வருகிறது. இவ்வலியுறுத்தல்களின் மோதல்கள் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் உடைய பால்கன்களை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது தொடர்பாக ஐரோப்பிய அரசுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கொதித்துக் கொண்டிருக்கும் குரோதங்களைப் பிரதிபலிப்பதாக தோன்றுகிறது.

1999 ஏப்ரலில், உலக சோசலிச வலைத் தளமானது 1995ல் குரோஷிய படைகளின் அட்டூழியங்கள் தொடர்பான ஹேக்கின் பத்திரங்கள் மீதான கவனத்தைச் செலுத்தியது. ICTY அறிக்கையானது குரோஷிய ராணுவம் விசாரணையின்றி மரணதண்டனைகளை நிறைவேற்றியது, குடிமக்கள் மீது ஈவு இரக்கமற்று குண்டுகளை வீசியது மற்றும் இன அழிப்பைச் செய்தது என்று குற்றம் சாட்டியது. "குரோஷிய துருப்புக்கள் குரோஷிய சேர்பியர்கள் மீது பரந்த அளவில் மற்றும் திட்டமிட்ட முறையில் படுகொலைகளையும், அவர்களுக்கு எதிரான மனிதத்தன்மை அற்ற செயல்களையும் புரிந்தன" என அவ்வறிக்கை முடிவுற்றது.

WSWS, நியூயார்க் டைம்ஸில் இடம்பெற்ற மார்ச் 21ம் தேதி செய்தியை பின்வருமாறு மேற்கோள்காட்டியது. அதில் ஹேக் விசாரணையாளர்கள் "1995 தாக்குதலின் போது குரோஷிய இராணுவம் விசாரணை அற்ற மரண தண்டனைகளை நிறைவேற்றியது குடிமக்கள் மீது ஈவு இரக்கமற்று குண்டுகளை வீசியது மற்றும் 'இன அழிப்பைச்செய்தது' அதுதான் பால்கன் யுத்தங்களின் திருப்புமுனையாக இருந்தது" என்று முடித்ததுடன், மூன்று குரோஷிய படைத்தளபதிகளை குற்றச்சாட்டுப் பத்திரத்திற்கு பரிந்துரை செய்தது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

Krajina மீதான தாக்குதல் "ஓய்வு பெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் குழுவால் பகுதியாக பயிற்றுவிக்கப்பட்ட குரோஷிய இராணுவத்தால் அமெரிக்காவின் மெளன ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டது" என்று டைம்ஸ் கூறியது. இத்தாக்குதல் தொடர்பான மூன்று வருட விசாரணையில் நீதிமன்றத்தால் கேட்கப்பட்ட முக்கிய சான்றுகளை வழங்க அமெரிக்கா தவறியது, நீதிமன்ற பத்திரங்கள் மற்றும் அதிகாரிகளின் படி, விசாரணை பற்றி வாஷிங்டன் அதிருப்தியுற்றிருப்பதாக சந்தேகத்தைக் கூட்டி உள்ளது" என்று அது மேலும் கூறியது.

உலக சோசலிச வலைத் தளம் ரிச்சர்ட் கோல்புரூக் [Richard Holbrooke] இன் பங்கினையும் கவனத்திற்கு எடுத்தது. அவர் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதராக இருந்ததுடன், தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்தபோது குரோஷிய ஜனாதிபதி ருஜ்மானுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்ததுடன், Krajina மீதான தாக்குதலை உக்கிரப்படுத்துமாறு ஊக்கப்படுத்தினார்:

"Galbraith (குரோஷியாவுக்கான அமெரிக்கத் தூதர்) தும் நானும் ருட்ஜ்மனை செப்டம்பர் 14ம் தேதி சந்தித்தோம். ருட்ஜ்மன் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பான விளக்கத்தைக் கேட்டார். அவர் எனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படையாகவே கேட்டார். தாக்குதலுக்கான எனது பொதுவான ஆதரவை குறிப்பிட்டேன், ஆனால் எனது சகாக்களுடனும், வாஷிங்டனுடனும் கலந்துரையாட முடியும் என்பதால் மேலும் அதிக விஷயங்கள் பரிமாறிக்கொள்வதை அடுத்த சந்திப்பிற்குத் பின்தள்ளிப்போட்டேன்'' என அவர் குறிப்பிட்டார்.

"Galbraith தும் நானும் ருட்ஜ்மனுடன் மீண்டும் செப்டம்பர் 17ம் திகதி சந்தித்தோம்... இத்தாக்குதல் பேச்சு வார்த்தைகளில் மாபெரும் செல்வாக்கை செலுத்தும் என்று நான் கூறினேன். சேர்பியர்கள் தாங்கள் பல்லாண்டுகளாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எல்லைப் பிராந்தியத்தை கொடுக்குமாறு செய்வதைவிட யுத்தத்தில் வென்றதை மேசையில் பேணுவது எளிதானது. ["யுத்தத்திற்கு முடிவு கட்டு என்பதில் மேற்கோள் காட்டப்பட்டது. நியூயோர்க்,1998, பக்கம்159-60].

அந்த நேரத்தில் குரோஷிய இராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்கா ஏற்படுத்திய உறவுகள், 1999ல் சேர்பியாவுடன் மோதல் ஏற்பட்ட பொழுதும் அதன் பின்னரும் கொசோவாவில் நடத்தப்பட்ட அதே சமமான அளவு வாஷங்டனின் மறைமுகமான நடவடிக்கைகளை நிரூபிப்பதற்கு உபயோககரமானவை ஆகும். இந்த மோதலில் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்தது அல்பேனிய இன பிரிவினை வாதிகளின் கொசோவா விடுதலைப் படை ஆகும் (KLA). 1999 TM KLAக்கு தலைவராக முன்னாள் குரோஷிய இராணுவ பிரிகேடியர்-ஜெனரல் Agim Ceku நியமிக்கப்பட்டார். 1995ல் Krajina தாக்குதலை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்த Agim Ceku கொசோவா விடுதலைப்படையை வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டது அமெரிக்காவின் அனுமதியுடன்தான் என்பது தெளிவானதாகும்.