World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Rising number of dowry deaths in India

இந்தியாவில் வரதட்சிணையால் சாவு எண்ணிக்கை அதிகரிப்பு

By Amanda Hitchcock
4 July 2001

Use this version to print

மே27: இளம் மணைவி உயிரோடு கொளுத்தப்பட்டாள்

லக்னோ: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப்பற்றி கனவு கண்ட19 வயது நிரம்பிய ரிங்க்கிக்கு அது ஒருபோதும் காணமுடியாததாகிவிட்டது. கல்யாணமாகி ஒரு மாதம்தான் ஆகி இருக்கும், அவள் வரதட்சிணைக் காரணத்திற்காக அவளது மாமியாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பப்டடதாக கூறப்படுகிறது. இந்திரா நகரில், சனிக்கிழமை அன்று சில மணி நேரங்களில் இது நடந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்னர் இறந்துபோன மீன் காண்டிராக்டர் ஞான சந்தின் புதல்வியான ரிங்க்கி ஏப்ரல் 19 அன்றுதான் அணில் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாள். இருப்பினும், திருமணம் நடந்த உடனேயே, பாலக்ராம் (அணிலின் அப்பா) கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பதிலாக வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியையும் அதேபோல மோட்டர் சைக்கிள் ஒன்றும் சீதனமாகக் கேட்டார். ரிங்க்கியின் தாயால் நிறைவேற்றமுடியாது போகவே, இளம் மனைவி மாமியாராலும் கணவனாலும் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படார் என்று கூறப்படுகிறது. சனிக்கிழமை அன்று அவளது அம்மாவுக்கு ரிங்க்கி மண்ணெண்ணெய் விளக்கு எதிர்பாராதவிதமாக விழுந்த பொழுது அவளது சேலையில் தீப்பற்றிக்கொள்ள இறந்து போனதாக செய்தி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் ரிங்க்கி முதலில் தாக்கப்பட்டு பற்கள் உடைந்துபோனதாகத் தெரியவருகிறது. அவளது மணிக்கட்டிலும் மார்பிலும் கூட காயங்கள் காணப்படுவதாகத் தெரிகிறது.

ஜூன்7: வரதட்சினை தொல்லையின் காரணமாக பெண் சாவு

ஹாவேரி: வரதட்சினைத் தொல்லை அண்மையில் இங்கு இன்னொரு உயிரைப் பறித்தது. (ஹாவேரி தாலுக்கா) குட்டல் கிராமத்தில் சந்திரசேகர் பியதாகி என்பவரின் மகளான ஜோதி அஜ்ஜப்பா சித்தப்பா காகிநெல்லே என்பவரை மணந்தார். ஜோதி அவரது கணவர் அஜ்ஜப்பா, மாமியார் கொட்ரவ்வா, நாத்தனார் நாகவ்வா (மச்சாள்) மற்றும் மாமனார் சித்தப்பா ஆகியோரால் அதிக வரதட்சினை கேட்டு சித்திரவதை செய்யப்பட்டபின் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். வரதட்சனைத் தொல்லை ஜோதியை விஷம் குடிக்குமாறு நிர்ப்பந்தித்ததாக போலீசார் குறிப்பிட்டனர். குட்டல் போலீஸ் அவளது கணவன் மற்றும் மாமனாரை கைது செய்துள்ளது.

ஜூன்7: உடல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது

ஹாவேரி: (ஹானாகல் தாலுக்கா) திலவல்லி அருகில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்ததாக போலீஸ் கூறியது.... இறந்துபோனது அகிலபானு யாதவாத் (26) என்று அடையாளம் காணப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அகிலபானு அப்துல் ரசாக்சாப் யதவாத்தை திருமணம் செய்து கொண்டதாக போலீஸ் கூறியது. வரதட்சினை கொடுக்கப்பட்டபோதும், அவளது கணவனும் அவனது குடும்பத்தினரும் மேலும் அதிக வரதட்சினை கொண்டு வருமாறு அவளை சித்திரவதை செய்தனர். அவளது தந்தை அப்துல் ரோப் பியாட்டி தனது புகாரில் தனது மகளை அவர்கள் கொன்றுவிட்டதாக கூறி உள்ளார். அவளது கணவனும் அவனது இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் மேலும் குறிப்பிட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து கிடைக்கும் இம்மூன்று உறையவைக்கும் அறிக்கைகளும் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் வரதட்சினை தொடர்பான கணக்கீடுகளின் மாதிரியாகும். எச்சரிக்கை உணர்வு எதுவும் இல்லாமல் அல்லது காரணங்களைத் தோண்டித்துருவி ஆராயாமல், இளம் பெண்ணின் வாழ்வையும் சாவையும் சுருங்கத் தொகுத்துப் பார்ப்பதை சர்வசாதாரணமாய் எடுத்துக்கொள்வது மெய்யாகவே ஒருவரைத் திடுக்கிடச் செய்வதைத் தவிர வேறொன்றுக்கும் உதவாது. அது பெரும்பாலும் போக்குவரத்து விபத்தினை அல்லது புற்றுநோயாளியின் இறப்பைப் பற்றி ஒருவர் அறிவிப்பது போன்றது --நிச்சயமாக துன்பகரமானதுதான், ஆனால் அத்தகைய சம்பவங்கள் எதிர்பார்க்கப்படக்கூடியவை. வரதட்சினைக்காக பெண்களை அடித்தல், தொல்லைப்படுத்தல் மற்றும் சிலவற்றில் கொலை செய்வதுகூட பொதுவாக அலட்சியமாகப் பார்க்கப்படுகிறது அல்லது உத்தியோகப்பூர்வ வட்டாரங்களில்-- போலீஸ், நீதிமன்றங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகை சாதனங்களால் மெளனமாய் மன்னித்துவிடப்படுகிறது. இக்குற்றங்கள் ஒரு குறிப்பிட்ட குழுக்கள், சமூகத்தட்டு, பூகோள பகுதிகள் அல்லது மதங்கள் சம்பந்தப்பட்ட தனித்த விஷயங்கள் அல்ல. மேலும் அவை அதிகரித்துக்கொண்டே போவதாகத் தெரிகிறது.

டைம் இதழில் வந்த கட்டுரையின்படி, வரதட்சினைக் கோரிக்கை தொடர்பான மரணங்கள் 1980 நடுப்பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு 400 என்ற எண்ணிக்கையிலிருந்து 1990 நடுப்பகுதியில் 5,800 ஆக 15 மடங்கு அதிகரித்திருக்கிறது. இவ்வதிகரித்த எண்ணிக்கை, பெண்கள் அமைப்புக்களின் அதிகரித்த செயல்பாடுகளின் விளைவாக அதிக சம்பவங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று காட்டுகிறது என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், மற்றவர்கள், வரதட்சினை தொடர்பான மரணங்கள் அதிகரித்துள்ளன என்று வலியுறுத்துகின்றனர்.

புள்ளிவிவரங்கள் முரண்பட்டவகையில் மாறுகின்றதால், துல்லியமான படத்தைப் பெறுதல் கடினமானதாக இருக்கிறது. 1995ல் இந்திய அரசாங்கத்தின் குற்றவியல் கழகம் ஆண்டுக்கு 6000 வரதட்சினை சாவுகள் பற்றி அறிவித்தது. மிக அண்மைய போலீஸ் அறிக்கை 1997 வரையிலான பத்தாண்டுகளில் 170 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்து வகையான உத்தியோக ரீதியிலான புள்ளி விவரங்களும் உண்மையான நிலையை மொத்தமாய் குறைத்து மதிப்பிடுவதாக கருத்பபடுகிறது. 1999ல் உத்தியோகப்பூர்வம் அல்லாத மதிப்பீடு, "நமது சகோதரிகளும் மகள்களும் விற்பனைக்காகவா?" என்ற ஹிமேந்திர தாகூரினால் எழுதப்பட்ட கட்டுரையில் சாவு எண்ணிக்கை ஆண்டுக்கு 25,000 பெண்கள் என்று மேற்கோள் காட்டப்பட்டது. படுகொலை முயற்சியின் காரணமாக பலர் உனமுற்றோராகவும் தழும்புகளுடனும் விடப்பட்டுள்ளனர்.

மகளிர் புகார் செய்யாமைக்கான சில காரணங்கள் நியாயமானவை. ஏனைய நாடுகளில் உள்ளதைப் போல, பெண்கள் அச்சுறுத்தலையும் முறைகேடாக நடத்துவதையும் போலீசாருக்கு அறிவிக்க தயங்குவது தாங்களும் தங்களது குடும்பத்தாரும் திருப்பித் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தினால்தான். ஆனால் இந்தியாவில் கூடுதலான தடைகள் உள்ளன. வரதட்சினை கொடுக்கல் வாங்கல் மீதான தகராறுகளில் போலீசை தலையிடச் செய்வது பெண்ணின் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் குற்ற நடவடிக்கைகளின் கீழ்ப்படுத்தப்படுவர் மற்றும் சிறையிடப்படக்கூடிய வாய்ப்பும் உண்டு. மேலும் போலீஸ் நடவடிக்கை வரதட்சினை கேட்பதை நிறுத்தப்போவதில்லை.

வரதட்சினை எதிர்ப்பு சட்டம் 1961ல் இயற்றப்பட்டது ஆனால் வரதட்சினை சம்பந்தமான இரு பகுதிகளும் --கணவன் மனைவி இருவரது குடும்பமும் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். வரதட்சினை கொடுக்கல் வாங்கல்களையும் அவற்றோடு அடிக்கடி சம்பந்தப்படும் வன்முறைகளையும் சட்டங்கள்தாமே தடுத்து நிறுத்தவில்லை. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கும் வரதட்சினையுடன் தொடர்புடைய மரணங்களுக்கும் போலீசும் நீதிமன்றங்களும் பாராமுகமாக இருப்பதில் இழிபுகழ் பெற்றவை. 1983 வரையில் வீட்டில் நடத்தப்படும் வன்முறை சட்டத்தினால் தண்டனைக்கு உரியதாக ஆகவில்லை.

பெரும்பாலான பலியாட்கள் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொளுத்திக் கொல்லப்பட்டுள்ளனர். வழக்கமாக மாமியார்கள் இதனை விபத்து என்பார்கள். ஏழைகள் பலரது வீடுகளில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணை அடுப்புகள் ஆபத்தானவையாக இருக்கின்றன. கொலைக்கான சான்றுகள் புறக்கணிக்கமுடியாத அளவுக்கு வெளிப்பாடாகியதும், விஷயம் தற்கொலை என்று கதை கட்டப்படும் அதாவது மணைவி புதிய குடும்ப வாழ்க்கைக்கு தன்னை சரி செய்துகொள்ள முடியாமல் இறுதியில் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டாள் என்று.

தென்பகுதி நகரமான பெங்களூரில் உள்ள பெண்கள் குழுக்களின் அமைப்பான விமோசனாவினால் 1990ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று , பல இறப்புக்கள் போலீசாரால் பதிவுகளில் இருந்து விரைவில் அழிக்கப்பட்டுவிடுகின்றன என்பதை வெளிப்படுத்தி உள்ளது. இறந்து கொண்டிருக்கும் பெண்ணின் வாக்குமூலம் பற்றிய போலீசாரின் பேட்டி பெரும்பாலும் கணவன் மற்றும் உறவினர்கள் முன்னால் எடுக்கப்படுகிறது. அதுவே புலன் விசாரணை நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரே நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. விமோச்சனா சரியாக விளக்கிக் கூறுகிறவாறு, அதிர்ச்சியிலும் கணவனின் உறவினர்களது அச்சுறுத்தலின் கீழும் பலியானவர் கூறும் கூற்று பின்னர் நடக்கும் பேட்டிகளின் போது பெரும்பாலும் மாறிவிடுகிறது.

1997ல் பெங்களூரில் பெண்களின் "இயற்கைக்கு முரணான சாவுகள்" 1133ல், 157 மட்டுமே கொலையாகக் கருதப்படும் அதேவேளையில், 546 சம்பவங்கள் "தற்கொலைகளாக" வும் 430 "விபத்துக்கள்" ஆகவும் கருதப்படுகின்றன. ஆனால் விமோச்சனாவின் காரியாளர் வி.கெளரம்மா பின்வருமாறு விவரிக்கிறார்: "1997 ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையில் நிகழ்ந்த 550 சம்பவங்களில், குற்ற நடத்தை விதிகளின் பிரிவு 174ன் கீழ் விசாரணைகளுக்குப் பிறகு 71 சதவீதம் 'சமையலறை/ சமையல் விபத்துக்கள்' மற்றும் 'ஸ்டவ் வெடிப்பு' என மூடப்படுகின்றன. பெரும்பாலான பலியாட்களின் பெருமளவு விகிதாச்சாரத்தினர் மருமகள்களாக இருப்பது போலீசாரால் ஒன்றில் புறக்கணிக்கப்படுகின்றது அல்லது தற்செயல் பொருத்தமாக எடுக்கப்படுகின்றது.

Frontline இதழில் மேற்கோள் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் நீதிமன்றத்தில் என்ன எதிர்பார்க்கப்பட முடியும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கூட என்ன எதிர் பார்க்கப்பட முடியும் என்று சுட்டிக் காட்டுகின்றது. 1998 ஆகஸ்ட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மட்டும் 1,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே ஆண்டு நிறைவேறாமல் கிடக்கும் பணித்தொகுதிகளைக் கவனிப்பதற்காக மேலும் மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன ஆனால் வழக்குகள் முடிவதற்கு இன்னும் ஆறிலிருந்து ஏழு ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு தொடர்பு வீதம் குறைந்துள்ளது. Frontline ஒரு நீதிமன்றத்தின் விளைபயன்களை பின்வருமாறு செய்தி அறிவிக்கின்றது: "1998 முடிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 730 வழக்குகளில், 58 குற்ற விடுதலையிலும் 11 மட்டுமே குற்றம் இழைக்கப்பட்டதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. 1999 ஜூன் முடிவில், நிலுவையில் உள்ள 381 வழக்குகளில், 51 குற்ற விடுதலையிலும் 8 மட்டுமே குற்றம் இழைக்கப்பட்டதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது."

நிதி கொடுக்கல் வாங்கல் பற்றியதாக திருமணம்

குறிப்பாக திருமணமான இளம் பெண்கள் ஆபத்திற்குரியவர்களாக இருக்கின்றனர். சம்பிரதாயத்தினால் திருமணத்திற்குப் பின்னர் அவர்கள் கணவனின் வீட்டிற்கு சென்று வாழ்கின்றனர். திருமணமானது பெரும்பாலும் பெற்றோர் கூடி எடுத்து முடிவு செய்யப்பட்டதாக உள்ளது, பெரும்பாலும் செய்தித்தாள்களில் விளம்பரங்களிற்கு பதிலாகவும் அமைகிறது. திருமணம் பற்றிய முடிவுக்கு வருதற்கு அந்தஸ்து, சாதி மற்றும் மதம் ஆகிய விஷயங்கள் வரலாம், ஆனால் இருப்பினும் பணம்தான் மணமகனது மற்றும் மணமகளது குடும்பங்களுக்கு இடையிலான நடவடிக்கைகளின் மைய விஷயமாக இருக்கிறது.

பெரும்பாலும் மணைவியானவள் ஒரு வேலைக்காரியாகப் பார்க்கப்படுகிறாள், அல்லது அவள் வேலை பார்ப்பவளாக இருந்தால் வருமானத்தின் ஊற்றுக்காலாகப் பார்க்கப்படுகின்றாள், ஆனால் புதிய வீட்டின் உறுப்பினர்களுடன் அவளுக்கு சிறப்பு உறவு எதுவுமில்லை ஆகையால் அவளுக்கு ஆதரவுத் தளம் இல்லை. 40 சதவீதமான பெண்கள் சட்டப்படியான பதினெட்டு வயதிற்கு முன்னரே திருமணம் செய்துவிடுகின்றனர். பெண்கள் மத்தியில் படிப்பு அறிவின்மை அதிகம், கிராமப்புறங்களில் அது 63 சதவீதமாக உள்ளது. இதன் விளைவாக தனிமைப்பட்டிருப்பதுடன் மற்றும் பெரும்பாலும் தங்களது நிலையை வலியுறுத்திக் கூற முடியாதிருக்கின்றது.

வரதட்சினைக்கான கோரிக்கைகள் வருஷக்கணக்காக போகும். பெரும்பாலும் மதவிழாக்கள் மற்றும் மகப்பேற்றுக் காலம் மேலதிக பணம் அல்லது பொருட்கள் கேட்பதற்கான சந்தர்ப்பங்களாக ஆகும். இக் கோரிக்கைகளை நிறைவேற்றுதற்கு மணமகளின் குடும்பத்தின் இயலாமை பெரும்பாலும் மருமகளை கீழ்த்தரமாக நடத்துவதற்கும் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதற்கும் இட்டுச் செல்லும். மோசமான விஷயமாக, புதிய நிதி நடவடிக்கைகளுக்காக--- அதாவது இன்னொரு திருமணத்திற்காக மணைவியர் கொல்லப்படுவர்.

இந்தியாவின் நலத்துறை அமைச்சகத்தால் 10,000 பெண்களிடத்தில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வொன்று, பேட்டி எடுக்கப்பட்டோருள் பாதிக்கு மேற்பட்டோர் வன்முறை திருமண வாழ்க்கையின் வழக்கமான பகுதி என கருதுகின்றனர் என்று கண்டறிந்தது. அதற்கான பொதுவான காரணம் கணவனின் குடும்பத்தின் எதிர்பார்ப்புக்கு எற்ப குடும்பக் கடமைகளைச் செய்யத் தவறுதல் என்பதாகும்.

வரதட்சினை தொடர்புடைய வன்முறைகளுக்கான காரணம் சந்தேகத்திற்கிடமில்லாமல் மிகவும் சிக்கலானது. வரதட்சினையானது பாரம்பரிய இந்திய சமூகத்தில் வேரூன்றி இருந்தாலும் வரதட்சினை தொடர்பான மரணங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணங்கள் ஒப்பீட்டளவில் அண்மையில் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

பாரம்பரியமாக வரதட்சினை அளிக்கும் பெண் கணவனின் குடும்பத்தின் முழு உறுப்பினராகக் கருதப்பட்டு தனது சொந்த செல்வங்களுடன் புகுந்த வீட்டில் நுழைய அனுமதிக்கப்படுவாள். மனைவிக்கு சில பாதுகாப்பு அளிப்பது மரபுரிமையாகப் பெறும் செல்வத்திற்கு பதிலீடாகத் தெரிகிறது. ஆனால் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பொருளாதாரத்தின் அழுத்ததின்கீழ், வரதட்சினை போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய கட்டமைப்புக்கள் பல ஆழமான மாற்றத்திற்குள்ளாகியது.

வரலாற்றாசிரியர் வீனா ஒல்டன்பேர்க் "இந்தியாவில் வரதட்சினைப் படுகொலைகள்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில், வரலாற்றுச் சான்று பற்றிய முதற்கட்ட ஆய்வு, வரதட்சினை பற்றிய பழைய வழக்கங்கள் "பலமாகப் பின்னப்பட்ட பாதுகாப்பான வலை தூக்குக் கயிறாக மாறியதிலிருந்து" பெறப்பட்டதாக தகாவழிப் பயன்படுத்தலாக ஆகி இருந்தது என்று குறித்தது. கடும் நிலவரிகள் சுமைகளின் கீழ் விவசாயக் குடும்பங்கள் தவர்க்கமுடியாதவாறு நிலத்தை இழக்கணும் அல்லது பணத்தைப் பெறணும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன. இதன் விளைவாக வரதட்சினையானது கணவனின் குடும்பத்திற்கு முக்கிய வருவாய் மூலமாகப் பார்க்கப்படுகிறது.

ஓல்டன்பேர்க் விளக்குகிறார்: "மருமகளின் குடும்பத்திடமிருந்து நிறைய வரதட்சினை வாங்குவதற்கான விருப்பம், பணம், தங்கம் மற்றும் ஏனைய அசையும் சொத்துக்களை அதிகம் கேட்டல் ஆகியன, அடமானம் வைத்ததை மீட்கும் உரிமைத் தடை, தரிசான நிலங்கள் மற்றும் தீவனம் இன்றி கால்நடைகள் சாதல், கடன் சுமையின் பாதிப்புகள் உத்தியோகப்பூர்வ பத்திரங்களின் பக்கங்களில் காணக்கிடைக்கிறது. வரதட்சினை தானாக முன் வந்து கொடுப்பதன் நோக்கம் மகளின் மீதான அன்பின் வெளிப்பாடாக அர்த்தப்படுத்தப்படுவது மெதுவாக தீர்ந்து வருகிறது. மகளின் திருமணத்திற்குப்பின் மற்றும் மற்றும் மகளுடன் சேர்த்து கேட்கப்படுவதன் பேரிலான வரதட்சினை பின் விளைவுக்கு அஞ்சி செலுத்தப்படும் செலுத்துகையாக ஆகிறது."

வரதட்சினை மீதான பண உறவுகளின் விளைபயனைப்பற்றி ஓல்டன்பேர்க விளக்குவது, இருபதாம் நூற்றாண்டில் வரதட்சினை உதிர்ந்து போகாது மாறாக புதிய வடிவங்களை எடுக்கும் என்ற உண்மையால் கோடிட்டுக்காட்டப்படுகிறது. வரதட்சினை மற்றும் வரதட்சினை தொடர்பான வன்முறை கிராமப்புறப் பகுதிகளுக்குள் அல்லது ஏழைகளுக்குள் அல்லது இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குள் கூட என்று மட்டுப்படவில்லை. முதளித்துவத்தின் கீழ், இப்பழைய வழக்கமானது, கடும் சமூகத்தேவைகளை சந்திக்கும் ஆற்றொணா நிலையிலுள்ள குடும்பங்களுக்கான சக்தி மிக்க வருவாய் ஆதாரமாக மாற்றப்பட்டிருக்கிறது.

நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்ட அணியில் குறிப்பாக இதற்கு சார்பாக இருக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. செய்தி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின்படி, "வரதட்சினை நடவடிக்கையின் மொத்தம் இன்னும் நடுத்தர வர்க்கத்தினரின் மத்தியில்தான் அதிகமாக இருக்கிறது, ஆனால் 85 சதவீத வரதட்சினை இறப்பு மற்றும் 80 சதவீதம் வரதட்சினை துன்புறுத்தல்கள் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டினரிடம் நிகழ்கின்றன." பெங்களூரில் உள்ள விமோச்சனாவால் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் வரதட்சினை வன்முறை பற்றிய வழக்குகளின் 90 சதவீதம் வரதட்சினைக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத ஏழைக் குடும்பங்களின் பெண்களை சம்பந்தம் கொண்டிருக்கிறது என்று காட்டுகிறது.

இந்தியாவில் மணமகன்களுக்கும் மணமகள்களுக்கும் திட்டவட்டமான சந்தை இருக்கிறது. கணவன்மார்களைப் பெற விழையும் பெண்கள் மற்றும் தங்களின் தகுதி மற்றும் சமூக அந்தஸ்து இவற்றை விளம்பரப்படுத்தும் ஆண்கள் இவற்றால் பத்திரிக்கைகள் பக்கம் நிரம்பி வழிகின்றது, வழக்கமாக சாதி இங்கு பேரம் பேசும் சில்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு "நல்ல" திருமணம் சமூக ஏணியில் முன்னேறுவதற்கான வழி என பெண்வீட்டாரால் பார்க்கப்படுகிறது. ஆனால் வரதட்சினை என்ற வடிவில் விலை செலுத்த வேண்டும் என்பதுதான் சிக்கலாக இருக்கிறது. ஏதாவதொரு காரணத்தால் வரதட்சினை கொடுபடாவிட்டால் இளம்பெண்தான் துன்பத்திற்கு ஆளாவாள்.

குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் வரதட்சினை மட்டம் அதிகரித்துள்ளது தொடர்பாக ஒரு விமர்சகர் அன்னுப்பா கலீக்கல் கருத்து தெரிவித்துள்ளதாவது, "இந்திய மணமகனின் விலை பேரளவில் அதிகரித்துள்ளது மற்றும் அவனது கல்வித்தகுதி, பணி மற்றும் வருவாய் அதற்கு அடிப்படையாய் உள்ளது. மருத்துவர்கள், கணக்கு மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தாங்கள் பட்டம் பெறுவதற்கு முன்பே கூட, அவர்கள் பட்டம் பெற்ற, கற்ற வரதட்சினை வாங்கும் கழகத்தினராக ஆனது போல "கொழுத்த" வரதட்சினையை எதிர்பார்க்கும் தெய்வீக உரிமையைப் பெற்றுள்ளனர்."

மகள்கள் தவிர்கக முடியாதவாறு வரவேற்கப்படாத சுமையாககருதப்படுவது இந்திய சமுதாயத்தில் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலையை மேலும் கூட்டுகின்றது என்பதுதான் வரதட்சினை சமநிலையின் மறுபுறம் ஆகும். பால் வேறுபாடு அடிப்படையிலான கருச்சிதைவுகள் அதிகமாகி இருக்கின்றன --அது கிட்டத்தட்ட ஆண்டுக்கு இருபது லட்சம் பெண்குழந்தைகள் ஆகும். எதிர்காலத்தில் வரதட்சினையாக 50,000 ரூபாய் கொடுக்க நேர்வதிலிருந்து "காப்பாற்றிக் கொள்ள" கர்ப்பிணிப் பெண்ணை 500 ரூபாய் செலவழித்து ஆணா பெண்ணா என பால் சோதனை எடுத்துக் கொள்ளுமாறு பம்பாயில் கிராஸ் பில்போர்டு விளம்பரம் ஊக்கப்படுத்துவதாக ஒரு கட்டுரை குறிப்பிட்டது. 2000 ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் மக்கட்தொகை நிதி அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் பெண் சிசு கருச்சிதைப்பு பெருமளவில் அதிகரித்துள்ளதுடன், குழந்தை இறப்பு வீதம் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகள் 40 சதவீதம் அதிகரித்திருப்பதாய் கூறுகிறது.

1990களில் நிலைமை மோசமடைந்திருப்பதாக வரதட்சினை பற்றிய விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வதேச முதலீட்டிற்காக இந்தியப் பொருளாதாரம் திறந்து விடப்பட்டபின்னர், செல்வந்தத் தட்டுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது மற்றும் ஒப்பீட்டளவில் வசதி படைத்தவர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை இன்மையினை எதிர் கொண்டுள்ளனர். அதுதான் எண்ணற்ற மோசமான சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் கடும் பதட்டங்களுக்கான சேர்மான குறிப்புக்களாகும்.

ஸேனியா வத்வானி எனும் விமர்சகர் குறிப்பிட்டதாவது: "இந்தியா முன்னர் எதிர்பார்த்திராத பொருளாதார முன்னேற்றங்களை அனுபவிக்கும் பொழுது மற்றும் உலகின் அதி வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் பெருமைகொள்ளும் அதேவேளை, நாடானது வரதட்சினை சாவுகள் மற்றும் மணப்பெண் எரிப்பு பற்றிய செய்திகள் அதிகரிப்பதையும் அனுபவமாகக் கொண்டுள்ளது. இந்து பாரம்பர்யமானது, வறுமையிலிருந்து தப்பிப்பதற்கான, செல்வத்தைப் பெருக்குவதற்கான மற்றும் தொலைக்காட்சியில் நாள்தோறும் விளம்பரப்படுத்தும் வசதி வாய்ப்புக்களைப் பெறுவதற்கான வழிமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது."

பெண்களுக்கு எதிரான வன்முறை நிச்சயமாய் இந்தியாவுக்கு மாத்திரமானது அல்ல. வீட்டில் நிகழும் வன்முறை அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவானது, எடுத்துக்காட்டாக, ஐக்கியநாடுகளது புள்ளி விவரப்படி, நாட்டில் எங்காவது பெண்கள் தாக்கப்படுவது சராசரியாக 15 வினாடிகளுக்கு ஒருமுறை நடக்கிறது. எல்லா நாடுகளிலும் இவ் வன்முறையானது பெண்களை தாழ்ந்த ஸ்தானத்திற்கு ஒதுக்கும் கலாச்சாரப் பிற்போக்கு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நிலையிலாத்தன்மை மற்றும் தேவைகளினால் உண்டு பண்ணப்பட்ட அழுத்தத்தின் பதட்டங்கள் இவற்றின் இணைந்த கலவையுடன் கட்டுண்டிருக்கிறது.

இருப்பினும், முதலாளித்துவமானது வரதட்சினையை பாரம்பரிய பாணியிலிருந்து எடுத்து குறிப்பாக திருமணத்திற்கும் பணத்திற்குமான அப்பட்டமான தொடர்பாக வடிவமைத்துள்ள மற்றும் நாளாந்த வாழ்க்கையின் அழுத்தங்கள் அதிகரித்துவரும் சமூக துருவமுனைப்படலால் வெளிச்சம் போட்டுக்காட்டப்படும் இந்தியாவில், வன்முறையானது முறையே கொடுமையான மற்றும் விசித்திரமான வடிவங்களை எடுக்கிறது.