World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Growing evidence of Israel's plans to invade the West Bank and Gaza

காஸாவையும் மேற்குகரையையும் நோக்கி படையெடுக்கும் இஸ்ரேலின் திட்டங்கள் தொடர்பான ஆதாரங்கள் அதிகரிக்கின்றன

By Chris Marsden
14 July 2001

Use this version to print

இஸ்ரேலின் இராணுவ உயர்மட்டத்தினர் காஸாவையும், மேற்குகரையையும் நோக்கி இராணுவப் படையெடுப்பை நடாத்த திட்டமிட்டுள்ளனர். அதன் நோக்கம் பாலஸ்தீனிய நிர்வாகத்தினரை இல்லாதொழிப்பதும், அதன் தலைவரான யசீர் அரபாத்தை பதவி இறக்கி வெளிநாட்டுக்கு துரத்துவதும், கொலைசெய்வதும் அல்லது பாலஸ்தீன நிர்வாகத்தின் ஆயுதப்படையினரை தடுப்புக்காவலில் வைப்பதுமாக இருக்கலாம்.

பிரித்தானிய பத்திரிகையான Foreign Report [வெளிநாட்டு அறிக்கை] இன் அறிக்கையில் Jane இன் உளவுத்துறையின் விவரங்களின் அடிப்படையில் கடந்தவார இறுதியில் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்திடம் நிறைவேற்று சுருக்கம் ஒன்றை கையளித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவ உயர் அதிகாரியான பிரிகேடியர்- ஜெனரலான Shaul Mofaz கையளிக்கப்பட்ட அறிக்கை ''பாலஸ்தீன நிர்வாகத்தினை இல்லாதொழிப்பதும் ஆயுதப்படைகளை நிராயுதபாணியாக்கவதும்'' அல்லது ''நியாயப்படுத்தப்பட்ட தண்டனை'' என பெயரிடப்பட்டிருக்கலாம் என வேறுபட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாரிய மரணத்தினையும் காயப்படுதலையும் உருவாக்கும் அடுத்து இடம்பெறும் ஒரு பாரிய தற்கொலைத் தாக்குதலை காரணமாக பயன்படுத்தி இத்தாக்குதல் நடைபெறலாம். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களின் இழப்பினையும், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களின் மரணத்தினையும் உள்ளடக்கிய ஒரு இராணுவ நடவடிக்கை ஒரு மாதகாலத்தினுள் இடம்பெறலாம் என இஸ்ரேலிய பாதுகாப்புபடை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 40,000 பேர் என கணிப்பிடப்பட்டுள்ள பாலஸ்தீனிய ஆயுதப்படையினரில் பெரும்பான்மையானோர் ஆயுதம் களையப்பட்டு, கொல்லப்படுவர் அல்லது தடுப்புமுகாம்களில் வைக்கப்படுவர் என கூறப்படுகின்றது.

இத்தாக்குதல் F-16, F-15 ரக யுத்தவிமானங்களால் காஸாவிலும் ரமலாவிலும் அமைந்துள்ள பாலஸ்தீனிய நிர்வாகத்தின் நிலைகள் மீது ஆகாயத் தாக்குதல் உடன் ஆரம்பிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இஸ்ரேல் மேலும் ஆகாய, தரை, கனரக படையினரைக் கொண்ட 30,000 படையினரை பிரயோகிக்கலாம். பாலஸ்தீனியர் மூர்க்கமான எதிர்த்தாக்குதலை நடாத்தினால் 300 இஸ்ரேலிய படையினர் கொல்லப்படலாம் எனவும் இத்திட்டத்தில் மதிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் திட்டத்தின்படி இத்தாக்குதலுக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பு குறைவாகவே இருக்கும் எனவும், அப்படி ஏதும் வந்தாலும் இஸ்ரேலியப் படைகள் அளவிடமுடியாதளவில் தமது நிலைகளை பலப்படுத்திய பின்னர் பிந்தியே வரலாம் எனவும் கணிப்பிட்டுள்ளனர். பாலஸ்தீனர்களை பாதுகாப்பதற்கான ஏதாவது ஒரு வகையான சமாதானப்படை அனுப்பப்படலாம், ஆனால் அதுவும் எல்லாம் நடந்து முடிந்த பின்னரே நிகழும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்திட்டம் இஸ்ரேலின் அராபிய அண்மை நாடுகளிடமிருந்து முக்கியமான எதிர்ப்பு ஏதாவது கிளம்பும் என்பதற்கான சாத்தியப்பாடுகளை நிராகரித்துள்ளது. எகிப்பது, ஜோர்டான், சிரியா போன்றவை பாலஸ்தீனியர்களுக்கு சார்பாக ஒரு யுத்தத்தில் இறங்குவது சந்தேகத்திற்கு இடமாகவே இருப்பதாக இராணுவ உளவுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதில் எகிப்து சினாய் இற்கு துருப்புக்களை அனுப்பலாம், அப்படியானால் இஸ்ரேல் தனது பின்னணிப் படையினரை அழைக்கவேண்டியிருக்கும். ஈராக் தனது படைகளை அணிதிரட்டலாம், ஆனால் அவர்கள் ஜோர்டானின் எல்லையை அடையுமுன்னரே இஸ்ரேலிய போர் விமானங்களால் அழிக்கப்பட்டு விடுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரியல் ஷரோனால் தலைமை தாங்கப்படும் லிகுட்- தொழிற்கட்சி அரசாங்கமானது அவ்வறிக்கையை நிராகரித்துள்ளது. ஆனால் அந்நிராகரிப்பு ஒன்றுபட்டதாகவில்லை. இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சரான சிமோன் பெரஸ் Jane இன் அறிக்கை உண்மையானதல்ல என மறுத்துள்ளார். அவர் இஸ்ரேலிய வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ''இப்படியான முக்கிய சஞ்சிகையில் கற்பனாசக்தியுடைய கற்பனைகளை கொண்டிருப்பது தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை'' என கூறியதுடன், தற்போதைய பிரச்சனைக்கு யுத்தம் மூலம் தீர்வு என்ற நம்பிக்கையையும், அரபாத்தை வேறு ஒருவாரால் மாற்றீடு செய்வதால் இஸ்ரேலுக்கு சுலபமாக இருக்கும் என்ற கருத்துக்கள் தொடர்பாக எச்சரிக்கை செய்தார்.

அமெரிக்க வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளரான Susan Pittman "இஸ்ரேல் இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், இப்பிரச்சனைக்கு யுத்தம் மூலம் தீர்வு இல்லையென தாம் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளதாக'' கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

லிகுட் கட்சியினரின் மறுப்பு உறுதியானதல்ல. எவ்வாறிருந்தபோதும் ஷரோனின் பேச்சாளரான Raanan Gissin ''மூன்று வழிகள் இருக்கின்றன. அவையாவன அரபாத் சரணடைதல், இத்திட்டத்துடன் முன்சென்று ஆக்கிரமிப்பது அல்லது தற்போதைய தன்னடக்கமானதும் சென்று தற்பாதுகாப்பான வழியில் செல்லுதல். அரசாங்கம் சமாதானத்திற்கு முயல்கின்றது. ஆனால் இது தொடர்ந்த நீடிக்கமுடியாது'' என குறிப்பிட்டார்.

ஏனைய அறிக்கைகள் Jane இன் அறிக்கை கவனத்திற்கு எடுக்கப்படவேண்டும் என குறிப்பிடுகின்றன. பாலஸ்தீன நிர்வாகத்தின் செய்திக்கு ஒரு இராணுவ அதிகாரி ரெல் அவீவ் டிஸ்கோவில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்ட அடுத்த நாட்களில் யூன் 2ம் திகதி பரந்தளவிலான தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால் இது அரபாத் யுத்த நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

பாலஸ்தீனியர்களின் சார்பில் திட்டமிடல் அமைச்சரான Nabil Shaath ''அமெரிக்க ஜனாதிபதி புஷ், பிரான்சின் ஜனாதிபதி சிராக்கும் ஷரோனிடம் இதுதொடர்பாக தெளிவாக பேசியுள்ளதாகவும், இக்கொள்கை தொடர்பான பாரிய அபாயம் தொடர்பாக எச்சரித்துள்ளதாகவும், இதனை மிகவும் கவனத்திற்கு எடுக்கவேண்டும் ஏனெனில் முன்னைய எச்சரிக்கைகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன'' என குறிப்பிட்டார். காஸாவின் பாதுகாப்பிற்கான பாலஸ்தீனர்களின் தலைமை அதிகாரியான Mohammed Dahlan பாலஸ்தீன நிர்வாகத்தை பதவி கவிழ்ப்பதற்கான இராணுவ நடவடிக்கை தொடர்பாக இஸ்ரேல் தீவிரமாக கலந்தாலோசிப்பதாக குறிப்பிட்டார். விமர்சகர்கள் இத்திட்டத்திற்கும் 1982 இல் ஷரோன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது லெபனானில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அதன் போதும் அத்திட்டத்தின் நோக்கம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டமைப்பையும் ஆயுதங்களையும் அழிப்பதும், அரபாத்தையும் அவரது படைகளையும் கொல்வது அல்லது நாடுகடத்துவதாகவே இருந்தது.

கட்டார் (Qatar) நாட்டின் தினசரியான Al-Watan இன் படி, ஐரோப்பிய அதிகாரிகளுக்கு இஸ்ரேல், அரபாத்தின் பின்னர் பதவிக்கு வரக்கூடிய 8 பேர்கள் அடங்கிய பட்டியலை கையளித்துள்ளது. லண்டனில் உள்ள பெயர் குறிப்பிடாத தகவல்களின் அடித்தளத்தில் Al-Watan இப்பட்டியலில் அரபாத்தின் உதவியாளரான Abu Mazen உள்ளடங்கலாக சமாதானப் பேச்சுக்களில் ஓரளவு விட்டுக்கொடுக்கக்கூடிய தன்மையுள்ள பாலஸ்தீனர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்தது. இத்திட்டம் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் என்னவெனில் வலதுசாரிகளும், இஸ்ரேலிய தொலைத்தொடர்பு சாதனங்களும் இது தொடர்பாக பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டிருப்பதும், கடந்த கிழமைகளாக பல சந்தர்ப்பத்தில் இராணுவத் தலையீட்டினை கோருவதுமாகும்.

மேற்குகரையில் காஸா பிரதேசத்திலுள்ள யூத குடியேற்றவாசிகளிடமிருந்து கூடுதலான வெளிப்படையான கோரிக்கைகள் வந்துள்ளன. ஷரோனின் அரசியல் முதுகெலும்பாக ஆதரவளிக்கும் 200,000 பேரைக்கொண்ட Yesha Council [ஜெஸ்கா குழு] ''உலகத்தில் பெரிய பயங்கரவாத அமைப்பான பாலஸ்தீன நிர்வாகத்தை இல்லாதொழிக்க இராணுவத்தை அனுப்புமாறு'' அறிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலிய பாராளுமன்றமான கினெசெட்டின் அமைச்சர்களான Rehavam Ze'evi, Avigdor Lieberman, Tzahi Hanegbi, Uzi Landau போன்றோரும் ஏனைய அமைச்சர்களும் இராணுவத் தாக்குதலுக்கு அழைப்புவிட்டுள்ளனர். யூலை 12ம் திகதி கினெசெட்டின் உறுப்பினரான Michael Kleiner [Herut] இஸ்ரேலிடம் அரபாத்தை பதவி கவிழ்க்குமாறும் அல்லது கொலைசெய்யமாறும் அழைப்புவிட்டார். அரபாத்தின் இடத்தை ஹமாஸ் இயக்கம் பிடிக்குமானாலும் அவ்வியக்கம் இஸ்ரேலில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் எதிர்கால நடவடிக்கைகள் கண்டிக்கப்படமாட்டாது என மேலும் தெரிவித்தார்.

கடந்த யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்தபின்னர் கடந்த சிலநாட்களில் மிகவும் மோசமான மோதல்கள் நிகழ்துள்ளன. வியாழக்கிழமை இஸ்ரேலிய தாங்கிகள் Nablus இல் உள்ள பாலஸ்தீனிய பொலிஸ் நிலையத்தின் மீது செல்களை ஏவியதன் மூலம் ஒரு உளவு அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். யூத குடியிருப்பாளர்கள் பாலஸ்தீனர்களின் உடைமைகளை நொருக்கியுள்ளதுடன், மேற்குகரையின் வயல்களுக்கு தீ வைத்துள்ளனர். பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களின் வாகனத்தின் மீது சுட்டதால் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர். Hebron நகருக்கு அருகாமையில் வீதியில் மறித்து தாக்கப்பட்டதில் ஒரு இஸ்ரேலியர் படுகாயமடைந்ததுடன், இம்மோதல் வெள்ளிக்கிழமை அதிகாலைவரை தொடர்ந்தது.

வெள்ளிக்கிழமை Hebron நகரில் நடந்த மோதல்களில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதுடன், பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டிலுள்ள நகரத்தினுள் இஸ்ரேலிய படைகள் புகுந்து மூன்று பொலிஸ் நிலையங்களை அழித்தபோது 23 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். காஸா பிரதேசத்தில் நிகழ்ந்த வேறு ஒரு சம்பவத்தில் இஸ்ரேலிய படைகளால் ஒரு பாலஸ்தீனியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஷரோன் ரோமிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, இஸ்ரேலின் இராணுவ பதில் அதிகரிக்கும் என எச்சரித்தார். அவரது பாதுகாப்பு அமைச்சரவை பல நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளதாகவும், ''ஓரளவு நாட்கள் கடந்தவுடன் நாங்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவோம் என நான் கருதுகின்றேன்'' என அவர் தெரிவித்தார்.