World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Louisiana resolution brands Charles Darwin a racist

லூசியானா தீர்மானம் சார்லஸ் டார்வினை இனவாதி என முத்திரை குத்துகின்றது.

By Walter Gilberti
25 May 2001

Use this version to print

கிறிஸ்தவ அடிப்படைவாதம் மற்றும் அரசியலில் சரிசெய்தல் ஆகியவற்றின் விகாரமான கலவையாக, சார்லஸ் டார்வினை இனவாதி என்று முத்திரை குத்தியும் இயற்கைத் தேர்வு வழியான அவரது பரிணாமக் கொள்கையை 19ம் நூற்றாண்டின் இனவாதத் தத்துவத்திற்கும், அதேபோல நாஜி இன ஒழிப்புக்கும் பொறுப்பாக இருந்ததாகவும் தீர்மானம் ஒன்று லூசியானா சட்டமன்றத்தில் வைக்கப்படவிருக்கிறது.

தீர்மானத்தை முன்மொழிந்த, பற்ரோன் றூஜ் (Baton Rouge) பகுதியில் 29வது மாவட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து வரும் கறுப்புஇன ஜனநாயகக் கட்சிவாதி, ஷரோன் புரூம் (Sharon Broome), அண்மையில் பற்ரோன் றூஜ் வழக்கறிஞரிடம் அளித்த நேர்காணலில், டார்வின் "சில மனிதர்கள் மற்றவர்களை விட மேலும் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றனர்" மற்றும் "வெள்ளை நிறம் அல்லா மக்கள் காட்டு மிராண்டித்தனமானவர்கள்" என்று கற்பிக்கின்றார் என்றார். இத்தீர்மானம் "இனவாத வரலாற்றுக்கு மேலும் வெளிச்சம் பாய்ச்சும்" எனக் குறிப்பிட்டார்.

தீமானம் சொல்கிறது, "லூசியானா சட்டமன்றம் இனவாதத்தின் எல்லா கொள்கைகளையும் எடுத்துக்காட்டுகளையும் கண்டனம் செய்கிறது என்று இதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. மற்றும் இதன் மூலம் டார்வின் தத்துவத்தின் அடிப்படைக் கருத்துருவான மனிதகுலத்தின் சில இனங்கள் மற்றும் வகுப்புக்கள் பரம்பரை ரீதியாக மற்றவர்களுக்கு மேலானதாக இருக்கின்றன, எனபதை நிராகரிக்கிறது."

மாநில கல்விக் குழுவின் அவை ஏற்கனவே இத்தீர்மானத்தை 9க்கு 5 என்ற வாக்குகளில் அங்கீகரித்தது. புரூமின் தீர்மானம், நிறைவேறினால், சட்டத்தின் மட்டத்துக்கு எழப்போவதுமில்லை, பள்ளிகளில் பாடத்திட்டத்தைப் பாதிக்கப்போவதுமில்லை, அது கட்டாயம் லூசியானா பள்ளிகளில் உயிரியல் பரிணாம வளர்ச்சி பற்றிய கற்பித்தலை கடுமையாகப் பாதிக்கும். அறிவியல் ஆசிரியர்கள், சமயச்சார்பற்ற மனிதநேயவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதுடன் போராட வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்லாமல் மேலும் இப்போது அவர்கள் இனவாதிகள் என முத்திரை குத்தப்படுவதுடனும் போராட வேண்டி இருக்கும்..

டார்வின் தொடர்பாக புரூம் வழங்கும் சில நிலைப்பாடுகள், மாபெரும் இயற்கை இயலாளர்கள் உயிரியலுக்குச் செய்த வளமான பங்களிப்பினைப் பற்றிய அறியாமையைக் காட்டுவது மட்டுமல்லாது, அனைத்து உயிரிகளும் பண்பின் மரபுவழி மாற்றமடைகின்றன எனும் டார்வினின் தத்துவத்திற்கும் ஹெர்பேர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer 1800-1903) மற்றும் ஏனையோரால் வர்க்க மற்றும் இன ஒடுக்கு முறையை நியாயப்படுத்துதற்கு டார்வினிசத்தைப் பயன்படுத்த முயற்சித்த அதன் உருத்திரிப்புக்கும் இடையில் ஒரு சாம்பாரை உருவாக்குவதற்கான நேர்மை அற்ற முயற்சியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

"சமூக டார்வினிசம்" எனத் தெரியவந்த இது, டார்வினின் ஆய்வை மேலோட்டமாக முன்வைப்பதன் அடிப்படையில், ஏழைகள் மீதான செல்வந்தர்களின் உள்ளியல்பான மேலான தன்மை என்பதைப் பிரகடனம் செய்யும் ஆளும் வர்க்கத்தின் பகுதிகளால் அரவணைக்கப்படுகிறது. சார்லஸ் டார்வின் அவரது காலத்தில் மிகவும் தாராண்மையாக இருந்தார் மற்றும் அடிமைத்தனத்துக்கு கடும் எதிர்ப்பாளராக இருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். மேலும் அவர் இயற்கை உலகின் கொள்கையை எடுத்து, சமூக இயல் நிகழ்ச்சியை விளக்குவதற்கு தவறாக வழிகாட்டும் முயற்சிக்கு சமூக டார்வினிசம் பயன்படுத்தப்படுவதனை நிராகரித்தார்.

டார்வின் உண்மையில், பரிணாமத்தின் (Evolution) தயவு தாட்சண்யமற்ற கண்மூடித்தனமான நிகழ்ச்சிப் போக்கை விளக்கும் சொல்லாக "தகுதி உள்ளவைகள் தப்பிப் பிழைக்கின்றன" எனும் சொற்றொடர் தொடர்பாக ஓரளவு சங்கடப்பட்டார். ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ், ஒரு உயிரின வகையை வெற்றிகரமாக வாழவைக்கக்கூடிய நிலைமைகள், புறச்சூழல்கள் மாறும்பொழுது அதை வாழமுடியாமற் செய்யும் எதிர்நிலையாக மாறக்கூடும், அப்படி மாறியது அநேகமாக நடந்திருக்கிறது.

பரிணாமக் கொள்கையைக் கற்பித்தலுக்கு ஆழமான குரோதத்தால் பெரும்பாலும் இயக்கப்படும், புரூம் போன்ற சிலருக்கு, அவரும் கூட வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தின் உருவாக்கம் மற்றும் நிறைவற்ற மனிதர் என்று விளக்கும், இயற்கையியலாளர்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் கொள்கைகள் அல்லது அறிக்கைகளைக் கண்டுபிடித்தல் கடினம் அல்ல. இவ்வாறு டார்வின் "காட்டுவிலங்காண்டித்தனம்" எனும் சொல்லை ஐரோப்பியர் அல்லாதோரின் கலாச்சார மட்டத்தை விவரிக்க பயன்படுத்தி இருக்கலாம்.இருப்பினும்,"பின்தங்கிய இனங்களுக்கு" "நாகரிகம்" கொண்டுவரப்பட வேண்டி இருந்தது என்று பரவலாகநிலவிய கருத்து தொடர்பாக அவர் மனஉளைவுடன் காணப்பட்டார் மற்றும்ஒருமுறை ஒரு கடிதத்தில் சுதேச மக்கள்"பூமியின்பரப்பில் மேன்மைப்படுத்தப்பட்டு இல்லாமற்செய்யப்பட்டனர்" என்று குறிப்பிட்டார்என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

"காட்டு விலங்காண்டித்தனம்", "காட்டுமிராண்டித்தனம்", மற்றும் "நாகரிகம்" ஆகிய பதங்கள் 19ம் நூற்றாண்டில் பரவலான புழக்கத்தில் இருந்தன. அவை கற்றறிவாளர்கள் மற்றும் சமூக தத்துவவியலாளர்களின் முயற்சிகளுக்கு ஒத்ததாக இருந்தன மற்றும் அமெரிக்க மனிதவியலாளர் லூவிஸ் ஹென்றி மோர்கன் (Lewis Henry Morgan) ---மேலும் அவரது ஆய்வின் அடிப்படையில், கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் எங்கெல்ஸ்-- மனித வரலாற்று நிகழ்ச்சிப்போக்கினை சடரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்துவதற்கு ஒத்ததாக இருந்தன. எந்த நேர்மையான வரலாற்று மதிப்பீடும் இனவாதம் மற்றும் அதிலிருந்து எழும் அட்டூழியங்கள் முதலாளித்துவ சுரண்டல் தன்மையின் உருவாக்கங்கள் ஆகும், அறிவியலின் தத்துவங்களின் உருவாக்கங்கள் அல்ல என்பதை வெளிப்படுத்தும்.

ஏனைய அனைத்து மனித நடவடிக்கைகளைப்போல, அறிவியல் செயல்படுத்தப்படுவது வெற்றிடத்தில் அல்ல மாறாக வர்க்க சமுதாயத்துக்குள் செயல்படுத்தப்படுகிறது மற்றும் அதுமேலாதிக்கம் செய்யும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தை, வேறுபட்ட அளவுகளில் கட்டாயம் பிரதிபலிக்கும். இவ்வாறு "டார்வினிச சித்தாந்தம்", புரூம் அழைக்கின்றவாறு, முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் முடியாட்சியின் ஒரு பகுதியினரால் வளர்ந்து வரும் இனவாதத்தை மேலும் தூண்டிவிட கையகப்படுத்தப்படுகிறது. ஆனால் டார்வினோடு ஏன் நிற்க வேண்டும்? பரம்பரையியல் விதிகளைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய துறவி கிரிகோரி மெண்டலின் தத்துவங்கள்கூட ஏன் தடைசெய்யப்படக்கூடாது? இனவாதிகளால் எங்கும் அவர்களின் பிற்போக்குக் கருத்துக்களை போலியான அறிவியல் மெருகூட்டலில் கொடுப்பதற்கு மரபியலானது நிச்சயமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இது, பொதுப் பள்ளிகளில் பரிணாமக் கோட்பாட்டைக் கற்பித்தலைத் தடுப்பதற்கான படைப்புவாதிகளின் இன்னொரு முயற்சி என்று புரூமின் விமர்சனங்கள் சரியாகச் சுட்டிக் காட்டுகின்ற அதேவேளையிலே, அறிவியல் மீதான முற்றமுழுதான பிற்போக்குத் தாக்குதலுக்கு அரசியலில் சரிசெய்தல் என்று அழைக்கப்படுவதனை மூடுதிரையாக வழங்குவது இதுதான் முதல் தடவை ஆகும்.