World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

IMF insists on far-reaching market reforms in Sri Lanka

சர்வதேச நாணய நிதிய இலங்கையில் பாரதூரமான சந்தை சீர்திருத்தங்களை செய்யும்படி வலியுறுத்துகின்றது

By K. Ratnayake
16 June 2001

Use this version to print

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF ச.நா.நி.) இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு தொகை பத்திரங்கள் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்குப் பெரிதும் அத்தியாவசியமாகியுள்ள கடன்களின் பேரில் தொழிலாளர் வர்க்கத்துக்கு பேரழிவுகளை உண்டு பண்ணும் ஒரு பாரதூரமான சந்தை மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை ஊர்ஜிதம் செய்து கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு கடன் வழங்குவது சம்பந்தமான சகல பத்திரங்களும் இப்போது ச.நா.நி. இணையத் தளத்தில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இதில் ச.நா.நி. அதிகாரிகளின் மதிப்பீடு, பொறுப்புக்களையும் அமுலாக்கத்தையும் காட்டும் நிகழ்ச்சி நிரல் கொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மத்திய வங்கி ஆளுனரும் கையொப்பமிட்ட ஒப்படைக் கடிதமும் (Letter of Intent- LOI) அடங்கும்.

இந்தோனேசியா மற்றும் நாடுகள் சம்பந்தமான இத்தகைய பத்திரங்கள் முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை சம்பந்தமான விபரங்கள் வெளயிடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இது வெளியிடப்பட்டமை உடனடியாக எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினதும் (UNP) தொடர்புச் சாதனங்களதும் கடும் விமர்சனத்தைக் கொணர்ந்தது. அரசாங்கத்தில் இருந்தபோது அனைத்துலக நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை எப்போதும் அப்படியே அமுல் செய்து வந்த வலதுசாரி யூ.என்.பி. குமாரதுங்க நாட்டை "விற்றுத்தள்ளி" விட்டதாக கண்டனம் செய்தது.

இந்த பத்திரங்கள் அம்பலத்துக்கு வந்ததால் அவமானத்துக்கு முகம் கொடுத்த அரசாங்க கட்சி, எதிர்க் கட்சியினர் கோரிய ஒரு பாராளுமன்ற விவாதத்தை தடுத்தது. ஜூன் 8ம் திகதி பிரிதிநிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை பூசி மெழுக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் அத்தகைய உடன்படிக்கைகள் இலங்கையில் அப்படி 'ஒன்றும் புதுமை அல்ல' எனக் கூறினார்.

எவ்வாறெனினும் இந்தப் பத்திரங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தையும் அரசாங்கம் எப்படி பொருளாதார கொள்கை முகாமையியலை சர்வதேச நாணய நிதியத்திடம் அடியோடு கையளித்துவிட்டது என்பதையும் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது.

ச.நா.நி. குறிப்பிட்டதாவது: "2000ம் ஆண்டின் கடைப்பகுதியில் இலங்கை ஒரு வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. செலாவணி வீத மட்டம் ஆட்சிகள் காரணமாக குறைந்த செலாவணி கையிருப்பு வைப்புக்களுக்கும் பெருமளவிலான இறக்குமதி செலவுகளுக்கும் முகம் கொடுத்தது... அது தொடர்ந்தும் நம்பத் தகுந்தது அல்ல. அது கணிசமான அளவு மூலதன பாய்ச்சலின் சாத்தியத்தை குறிப்பிட்டுக் கொண்டது." இதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் எண்ணெய் விலை உயர்வும் ஆயுதங்களுக்கான பிரமாண்டமான செலவீனமுமாகும். இராணுவம் 950 மில்லியன் டொலர்களை வெளிநாட்டுக் கை இருப்பாக அல்லது ஆறு வாரங்களுக்கான இறக்குமதி செலவீனங்களை ஈடு செய்யும் நிதியை விட்டு வெளியேறுவதாக விளங்கியது.

வேறு எந்த ஒரு தீர்வும் இல்லாத நிலையில் குமாரதுங்க அரசாங்கம் ச.நா.நி. பக்கம் திரும்பியது. அது 253 மில்லியன் டாலர் கடன்களை வழங்குவதன் பேரில் கொழும்பு பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக தாமதம் செய்யப்பட்ட சந்தை சீர்திருத்தங்களை அமுல் செய்யவேண்டும் என வலியுறுத்தியது. ச.நா.நி. ஏற்கனவே 131 மில்லியன் டொலர் கடன்களை வழங்கியதோடு எஞ்சியது நான்கு பாகங்களாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. "கிடைக்கக் கூடியதாக உள்ள செயற்பாட்டு விமர்சனத்தினதும் மீளாய்வுகளின் பூர்த்திகளையும் அடிப்படையாகக் கொண்ட நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும்" என்றது.

ச.நா.நி. நிபந்தனைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

* ரூபாவை மிதக்கவிடுதல். இது ஏற்கனவே மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை கடந்த ஜனவரியில் அமுல் செய்யப்பட்டதோடு ரூபாவை பணமதிப்பிறக்கத்துக்கு இட்டுச் சென்றது. இதனால் விலைவாசி உயர்வுகள் மேலும் அதிகரித்தன. நுகர்வு சுட்டெண் ஏற்னவே 115 புள்ளிகளால் அல்லது ஜனவரியில் இருந்த 2,797 புள்ளிகளை விட 4 சதவீதத்தினால் -மேயில் 2,912 புள்ளிகளாக- அதிகரித்தது.

* அரசாங்க ஊழியர்களுக்கு 2001ம் ஆண்டில் சம்பள உயர்வு கிடையாது. ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அமர்த்தப்படும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உறைய வைக்கப்படும். அரசாங்க ஓய்வூதிய திட்டம் "அரசாங்க சேவை பெரிதும் தாக்கிப் பிடிக்க கூடிய முறையில்" "சீரமைக்கப்படும்." இந்தச் சகல கோரிக்கைகளும் மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அமுல் செய்யப்படும்.

* ஒரு வரையறுக்கப்பட்ட வறுமை நிவாரண திட்டமான சமுர்த்தியின் (சுபீட்சம்) கீழ் ஒரு குடும்பம் மாதத்துக்கு ரூபா.500- ரூபா.700 வரை பெறுகின்றது. ச. நா. நிதியத்தின்படி உலக வங்கி இதை மேலும் வெட்டித் தள்ளுவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது.

* பரந்த அளவிலான மறுசீரமைப்பு அல்லது அரசாங்க நிறுவனங்களின் தனியார்மயமாக்கம் -நிதி அமைச்சு, மத்திய வங்கி- பிரேரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 35 நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் அல்லது விற்றுத் தள்ளப்படும். இலங்கை துறைமுக அதிகார சபையில் 14,000 தொழில்கள் வெட்டிச் சரிக்கப்படும். அரசாங்கம் அரச வங்கிகள் தனியார்மயமாக்கப்படாது என இடைவிடாது கூறிக் கொண்டுள்ள போதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அரசுடமை இலங்கை வங்கி- நாட்டில் உள்ளவற்றில் பெரும் வங்கி- ஆண்டு இறுதியில் கொழும்பு பங்குமுதல் சந்தையில் பட்டியலிடப்படும்.

* தனியார்மயத்தினால் கிடைக்கும் வருமானம் பிரமாண்டமான அளவு அரசாங்க கடன்களைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு உள்நாட்டு அரசாங்க கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 3 சதவீதமாக இருந்த போதும் அது 8.5 சதவீதமாக அதிகரித்தது. அரசாங்கக் கடன்கள் தற்சமயம் கடன் திருப்பிச் செலுத்துகைகளுக்காக அரசாங்க வருடாந்த வருமானத்தில் 32 சதவீதத்தை நுகர்ந்து கொள்கின்றது. மொத்த அரசாங்க கடன், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 97 சதவீதமாக வளர்ச்சி கண்டது.

விலை உயர்வுகள்

* நிர்வகிக்கப்பட்ட விலைகளை நீக்குவதற்கு ஒரு கால அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் சகல பெற்றோலியம் பொருட்களின் விலையும் -டீசல் உட்பட- சந்தையினால் நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து டீசல் விலை ஏற்கனவே இரட்டிப்பாகியுள்ளது. உயர்ந்த எரி பொருட்கள் போக்குவரத்துச் செலவின் தாக்கத்தை தவிர்க்க முடியாத விதத்தில் உண்டுபண்ணும். அடிப்படை பண்டங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. புதிய ஏற்பாடுகளின் கீழ் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சாரசபை, நீர்வளச் சபை என்பன 7 பில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்தும் பொருட்டு விலைகளை அதிகரிக்கத் தள்ளப்படும். அத்தோடு தொழிற்பாட்டு இலாபம் உழைக்கவும் முயற்சிக்கும்.

* நடைமுறை கணக்கு பற்றாக்குறை கடந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 7 சதவீதத்தில் இருந்து இவ்வாண்டு 3 சதவீதத்துக்கு குறைக்கப்பட வேண்டியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது போல் அரசாங்கம் தனது பற்றாக்குறை கடந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.7 சதவீதத்தில் இருந்து அடுத்த வருடம் 7.5 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த இலக்குகள் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைச் சேவைகளில் அரசாங்கத்தின் பரந்த அளவிலான வெட்டினை கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.

"உழைப்பு சந்தையின் இறுக்கத்தை" முடிவுக்கு கொணர மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இது ஆட்களை வேலைக்கு அமர்த்துவது, வேலை நீக்கம் செய்வதையும் உள்ளடக்கும். "இதனால் நிறுவனங்கள் ஊழியர் மட்டத்தை தீர்மானம் செய்ய அனுமதிக்கப்படும்." சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட உள்ளவற்றில் ஒன்று வேலைநீக்கச் சட்டமாகும் (Termination of Employment Act). இச்சட்டம் எந்த ஒரு வேலை நீக்கத்துக்கும் முன்பதாக ஒரு வேலை கொள்வோர் (Employer) ஊழியரின் அல்லது தொழில் ஆணையாளரின் எழுத்து மூலமான சம்மதத்தை பெற்றுக் கொள்வதை வேண்டி நிற்கின்றது.

* பொது விற்பனை வரி (GST) எதிர்வரும் நவம்பரில் தேசிய பாதுகாப்பு வரியையும் ஒன்றிணைத்துக் கொண்டு, ஏனைய துறைகளுக்கும் விஸ்தரிக்கப்பட உள்ளது. தேசிய பாதுகாப்பு வரி ஆரம்பத்தில் விஸ்தரிக்கப்பட்ட போது அரசாங்கம் இதை ஒரு தற்காலிக நடவடிக்கை எனக் கூறிக் கொண்டது. உள்நாட்டு யுத்தம் தொடரும் வரையே அது நீடிக்கும் என்றது. இப்பொழுது இந்த வரி GST மூலம் ஒரு நிரந்தர அம்சம் ஆக்கப்படவுள்ளது.

"பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செலவீனங்களின் பேரிலான மேலதிகச் செலவுகளை மேலாய நடவடிக்கைகளால் உடனடியாக ஈடுசெய்ய முடியாது போனால்" அரசாங்கம் பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால் இராணுவத்தின் பேரிலான அதிகரித்த செலவீனம் தன்பாட்டில் அரசாங்க சேவைகளை வெட்ட அல்லது உயர்ந்த வரிகளுக்கு இட்டுச் செல்லும். கடந்த ஆண்டு பாதுகாப்புச் செலவீனம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.6 சதவீதத்துக்கும் அதிகமாகின்றது.

* அனைத்துலக மூலதனத்துக்கான மேலாய சலுகையாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீது இன்னமும் இருந்து கொண்டுள்ள வரையறைகள் டிசம்பர் மாத அளவில் கட்டம் கட்டமாக்கப்படும்.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை மீது கொழும்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி நடீம் உல் ஹக் அரசாங்கத்தின் மீதான நெருக்குவாரங்களைத் தொடர்ந்தார்: "சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்தும் அப்படியே இருந்து கொண்டுள்ளது. சகல துறைகளும் வெறும் முன்னேற்றம் இல்லாமல் தொடர்ந்தும் அப்படியே இருந்து கொண்டுள்ளன. அங்கு கவலை இருந்து கொண்டுள்ளது" என்றார்.

இந்த மத்திய வங்கி அறிக்கையும் கூட ச.நா.நி. வேலைத்திட்டத்தை அமுல் செய்வதன் அவசியத்தை மீள வலியுறுத்திக் கொண்டுள்ளது. அரசாங்கத் துறையை மறுசீரமைக்க அழைப்பு விடுத்துள்ளதோடு அரசாங்க விடுமுறைகளின் எண்ணிக்கையை குறைக்கும்படியும், அநேக "தொழில் சீர்திருத்தங்களை" செய்யும் படியும் சம்பள உயர்வை உற்பத்தித் திறன் அதிகரிப்புடன் இணைத்துப் போடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்கம் இலங்கை கடனுக்கு ச.நா.நி. அங்கீகாரம் வழங்கியமையை நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை வாக்காகக் காட்ட முயற்சித்துக் கொண்டுள்ளது. ஆனால் நாட்டின் தொடர்ந்து வரும் யுத்தத்தின் மீதும் கொழும்பிலான அரசியல் குழப்பநிலை மீதும் குறைந்த மட்ட வளர்ச்சி மீதும் கண் வைத்துக்கொண்டுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து அக்கறை தலைநீட்டுவதாக இல்லை.

மத்திய வங்கியின்படி இவ்வாண்டு வளர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 1.5 சதவீதம் குறைவாக -4.5 சதவீமாக விளங்கும். ஆனால் தனிப்பட்ட ஆய்வாளர்கள் இதைக் காட்டிலும் பெரிதும் குறைவான வளர்ச்சி வீதத்தை முன் அனுமானித்துள்ளனர். பூகோளரீதியிலான பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி காரணமாக இந்த கவலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் பங்கு விலைகள் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இருந்த உச்ச விலையைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவானதாகும். அன்றில் இருந்து பங்குச் சுட்டெண்கள் 449ல் இருந்து 419 (ஜூன்) ஆக மேலும் வீழ்ச்சி கண்டு போயின. 1999-2000ம் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களே கொழும்பு பங்கு சந்தையில் தேசிய விற்பனையாளர்களாக விளங்கினர். இந்த நிதியாண்டில் நிலைமை முன்னேற்றம் காண்பதற்கான சாத்தியங்கள் இல்லை.

ச.நா.நி. தனது பத்திரங்களில் நாடு பூராவும் உயர்ந்த மட்டத்திலான வறுமையை குறித்துக் கொண்டுள்ளது. யுத்தத்தினால் நாசமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தவிர சில தகவல்கள் சராசரியாக 30 சத வீதத்தினரான சனத்தொகையினர் வறுமையில் வாழ்கின்றனர்.

இந்த மாகாணங்களிலான உயர்ந்த புள்ளி 37 சதவீதமாகும். வடக்கும்-கிழக்கும் இதில் சேர்க்கப்படுமானால் இந்த வீதாசாரம் ச.நா.நி. ஒப்புக் கொள்வது போல் பிரமாண்டமான அளவு அதிகரிக்கும். "யுத்தத்தின் பொருளாதார, சமூக செலவீனங்கள் இலங்கையில் வறுமையின் பிராந்திய மட்டத்திலும் தாக்கத்திலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்" என்றது.

எவ்வாறெனினும் ச.நா.நி. நடவடிக்கைகள் அமுல் செய்யப்படுமேயானால் பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி இன்னனும் விரிவுபடும். அதிகரித்த விலையினாலும் தொழிலின்மையாலும் தாக்கப்பட்டோர் அடிப்படை சேவைகளை -கல்வி, சுகாதாரம், நலன்புரி- பெற்றுக் கொள்வதை இன்னமும் கஷ்டமானதாக்கும். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளின்படி இத்துறைகளில் செலவை வெட்டி சரிப்பதால் இந்நிலைமை ஏற்படும்.