World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

Italy: Berlusconi forms ultra-right cabinet

இத்தாலி: பெர்லுஸ்கோனி தீவிர வலதுசாரி அமைச்சரவையை அமைத்துள்ளார்

By Peter Schwarz
15 June 2001

Use this version to print

திங்கட்கிழமை ரோமில் பதவிப்பிரமாணம் செய்யவிருக்கும் புதிய அரசாங்கத்தின் தன்மைகள் அதிகாரத்துவமும் இனவாதநோக்கும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறையின்மையும், எல்லையற்ற சுயநலன்களுடன் இணைந்த அதிதீவிர தாராளவாத பொருளாதாரக் கொள்கையும், புரூஸல்ஸில் (Brussels- ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ளது) இருந்து வாஷிங்டனை (Washington) நோக்கிய வெளிநாட்டுக் கொள்கையில் பாரிய திருப்பத்தினையும் கொண்டுள்ளதாக அமைகின்றது. இது ஐரோப்பாவில் பாசிச கொடுங்கோல் ஆட்சிகளின் முடிவின் பின்னர் பதவி ஏற்கும் முதலாவது, கூடுதலாக வலதுசாரிகள் பக்கம் சார்ந்த அரசாங்கமாகும்.

அரசாங்கத் தலைவரும், தொலைத்தொடர்பு சாதனங்களின் உரிமையாளருமான சில்வியோ பெர்லுஸ்கோனி இத்தாலியின் மிகவும் செல்வந்தராவார். அவர் 1994ல் முதல்தடவை அதிகாரத்திற்கு வந்ததுபோலவே தற்போதும் நவபாசிசவாதிகளுடனும், பிரிவினைவாதிகளுடனும் ஆட்சியமைத்துள்ளார். ஆனால் 1994 இல் 7 மாதங்களுக்குள் அவரது ஆட்சி உள்முரண்பாடுகள் காரணமாக உடைந்துபோனது. ஆனால் தற்போது அவர் நிலைமைகள் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றார்.

முதலாவதாக 1994 உருவாக்கிய தனது கட்சியான இத்தாலி முன்னணி [Forza Italia (FI)] இனை பதிவுசெய்யப்பட்ட 300,000 அங்கத்தவர்களை கொண்ட பலம்வாய்ந்த கட்சியாக மாற்றியுள்ளார். அக்கட்சியின் தன்மை தொடர்பாக பிரான்சின் Libération பத்திரிகை ''இக்கட்சி தலைமை வழிபாடும், ஸ்ராலினிச கட்சிகளை போன்ற மத்தியத்துவத்தையும், வேலைசெய்பவர்களுக்கே முதலிடம் என்ற பயமுறுத்தும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாக'' குறிப்பிட்டுள்ளது. மற்றும் 1994 இனை போலல்லாது தற்போது முக்கிய கூட்டுக்கட்சிகளின் தலைவர்களான தேசிய கூட்டணியின் பினியும் (Gianfranco Fini), வடக்கு முன்னணியின் பொஸியும் (Umberto Bossi) நேரடியாக அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.

Ruggiero இற்கு பினி பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதனூடாக பெர்லுஸ்கோனிக்கு அடுத்த அதியுயர் பதவியை வகிக்கின்றார். அவர் வழமையாக post-fascist என அழைக்கப்படுபவர். இவர் தனது அரசியல் வாழ்க்கையை பாசிச இளைஞர் அமைப்பினுள் ஆரம்பித்து, 1977ல் அதன் தலைமையை எடுத்துக்கொண்டார். பத்து வருடங்களின் பின்னர் அவர் அதன் தாய்க்கட்சியான இத்தாலிய சோசலிச இயக்கத்தின் [Movimento Sociale Italiano (MSI)] தலைவரானார். இது பாசிசவாதியான முசோலினியின் கட்சியின் தொடர்ச்சி என தன்னை கூறிக்கொள்கின்றது. 90 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அது தன்னை பாசிசத்திலிருந்து அந்நியப்படுத்துவதாக கூறிக்கொணடு இத்தாலிய சோசலிச இயக்கத்தினை தேசிய கூட்டணியாக மாற்றிக்கொண்டது. தற்போது இது தன்னை ''ஐரோப்பாவின் நவீன வலதுசாரிக் கட்சி'' என கூறிக்கொள்கின்றது.

ஆனால் உண்மையில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட மாற்றமானது ஒரு செயற்கையானதாகும். பினி பலவருடங்களுக்கு முன்னர் முசோலினியை ''இந்நூற்றாண்டின் முக்கிய தலைவர்'' என கூறிய பிழைகளை இனிமேலும் செய்யாதிருக்கலாம், ஆனால் தேசிய கூட்டணியானது இன்னும் அவ்வதிகாரத்துவ முறையினை பாதுகாப்பதுடன், வராலாற்றை மீண்டும் திருப்ப பார்க்கின்றது. இத்தாலியின் யுத்தத்தின் பின்னர் உண்மையான குற்றவாளிகளும் கொலைகாரார்களும் பாசிசவாதிகள் அல்ல அதற்கு எதிரான இயக்கத்தினுள் இருந்த கம்யூனிஸ்ட் போராளிகளே என அதனது பிராந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் கலாச்சார கொள்கை கூறுகின்றது.

பொஸி (Umberto Bossi) சீர்திருத்தத்திற்கானதும் அதிகாரப்பரவலாக்கலுக்குமான அமைச்சரவையை ஏற்றுள்ளார். இது பிராந்திய அரசாங்கங்களின் அதிகாரத்திற்கு பொறுப்பானதாகும். பல வருடங்களாக வசதியான வடக்கு பிராந்தியத்தை நாட்டின் மற்றைய பகுதிகளிளிருந்து முற்றாக பிரிக்க முன்னின்று, இனவாதத்திடம் அடைக்கலம் புகுந்த ஒருவரிடம் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் நாட்டின் உள்நாட்டு விடயங்களுக்கு பொறுப்பாகவிருப்பார்.

முக்கியமானதும் சர்வதேச விசேடமானதுமான வெளிநாட்டு கொள்கை, உள்நாட்டுக் கொள்கை, பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்றை பெர்லுஸ்கோனி தனது கட்சியினை சேர்ந்தவர்களுக்கு அல்லது வியாபாரத்தின் நம்பிக்கையுள்ள, சர்வதேசரீதியாக நன்மதிப்பு பெற்ற வல்லுனர்களுக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் இப்பிரிவுகளிடமிருந்து உருவாகும் விமர்சனங்களை ஆரம்பத்திலிருந்தே தடை செய்ய முயல்கின்றார்.

உள்நாட்டு விடயங்களுக்கான அமைச்சரவைகள் அவரின் வலதுசாரி கூட்டுகளுக்கு கிடைத்துள்ளது. தேசிய கூட்டணிக்கு 4 இடங்களும், வடக்கு முன்னணிக்கு 3 இடங்களும், சிறிய கிறிஸ்தவ கட்சிகளான CCD, CDU விற்கு தலா ஒவ்வொரு இடமும், இத்தாலி முன்னணி 10 இடங்களையும் எடுத்துள்ளது. அதில் 5 பேர் கட்சியில் இல்லாத அமைச்சர்களாவர்.

ஒவ்வொரு அமைச்சரினை தனித்தனியே நோக்கும் போது நிலைமை மிகவும் குழப்பத்தை வழங்குகின்றது.

நீதித்துறையானது இனவாதத்திற்கு பேர்போனதும், நீதித்துறை மீதான தாக்குதலுக்குமுரிய வடக்கு முன்னணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வடக்கு முன்னணியின் தலைவரான பொஸி தனது வலதுகையான Roberto Maroni இற்கு வழங்கவிரும்பினார். ஆனால் Roberto Maroni அரச அதிகாரத்துக்கு எதிராக இயங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாலும், இக்குற்றத்திற்காக தற்போதும் வழக்கு நடைபெறுவாதாலும், நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்தமைக்காவும், கள்ளவாக்குகளை வாங்க முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அது இயலாது போனது. அவருக்கு சமூக, வேவைவாய்ப்பிற்கான அமைச்சரவை வழங்கப்பட்டதுடன், அவரின் கட்சி நண்பரான Roberto Castelli இற்கு நீதித்துறை வழங்கப்பட்டுள்ளது. இவரும் கடந்த காலத்தில் நீதித்துறை மீதான தாக்குதலுக்கு காரணமானவர். இவர் பிரிவினைவாதியாகவும், இத்தாலியின் ஒற்றுமைக்கு எதிரானவராகவும் கருதப்படுகின்றார்.

தேசிய கூட்டணிக்கு பதில் ஜனாதிபதி பதவியுடன் விவசாய, சுற்றுசூழல், தொலைத்தொடர்பு, வெளிநாடுகளில் உள்ள இத்தாலியர்களுக்கான புதிய அமைச்சரவையும் வழங்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தொடர்பான சட்டங்களுக்கு பொறுப்பான தொலைத்தொடர்பு அமைச்சு ஜனாதிபதிக்கு இருக்கும் தொலைத்தொடர்பு ஆளுமையின் காரணமாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இப்பதவியை தனது கட்சியினருக்கு வழங்கவிருந்தபோதிலும், பின்னர் அதிலிருந்து பின்வாங்கி அதனை தேசிய முன்னணியின் இரண்டாவது தலைவரான Maurizo Gasparri க்கு வழங்கினார். இவர் நவபாசிசவாதிகள் மத்தியில் பெர்லுஸ்கோனிக்கு நெருக்கமானவராக கருதப்படுகின்றார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெளிநாட்டிலுள்ள இத்தாலியர்களுக்கான அமைச்சரான Mirko Tremiglia பாசிச பின்னணியை கொண்டவர். இவர் முசோலினியின் குடியரசான ஷிணீறீய வில் அதிகாரியாக கடமையாற்றியதுடன், இத்தாலிய சோசலிச இயக்கத்தின் [Movimento Sociale Italiano (MSI)] பிரதி தலைவருமாவார். இவர் 1994ம் ஆண்டு பதவிக்காக முன்மொழியப்பட்டார். ஆனால் இது தற்போதைய குரோசியாவின் பகுதிகளாக இருக்கும் முன்னாள் யூகோஸ்லாவியாவின் பகுதிகளான Istria, Dalmatia வினை இத்தாலியுடன் இணைக்க கோரியதால் தோல்வியடைந்தது.

தேசிய முன்னணியின் சுற்றுசூழல் அமைச்சரான Altero Matteoli தனது சுற்றாடல் பாதுகாப்புக்கு எதிரான தன்மையினால் பிரசித்தமானவர். அமெரிக்க ஜனாதிபதி புஷ் இனைப்போலவே இவரும் Kyoto மாநாட்டில் அது தொடர்பாக எடுத்த தீர்மானங்களை எதிர்க்கின்றார். 1994 இல் பெர்லுஸ்கோனியின் சுற்றுசூழல் அமைச்சராக இருக்கையில் இவர் அதிவேக வீதிகளை அமைப்பதற்கு எதிரானவராகவும், இயற்கை வனங்களை வேட்டையாடலுக்கு அனுமதிக்கவும் வேண்டுமென்று பிரசாரம் செய்தவர்.

தற்போதைய உள்நாட்டு அமைச்சரவையை பெர்லுஸ்கோனி தனது அரசியல் நண்பரான Claudio Scajola வழங்கியுள்ளார். இவர் கடந்த 4 வருடங்களாக இத்தாலி முன்னணியை (Forza Italia) ஒழுங்கமைப்பதிலும், அதனை பலமான கட்சியாக கட்டுவதிலும் முக்கிய பங்குவகித்தவர். கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி அரசியல் வாதியின் மகனான இவர் இளமையில் கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி அங்கத்தவராவார். 90களின் ஆரம்பத்தில் இவர் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருந்தவர்.

பொருளாதார அமைச்சும் பெர்லுஸ்கோனியின் நம்பிக்கைக்குரிய Giulio Tremonti க்கு கிடைத்துள்ளது. பொதுவரி உரிமைகளுக்கான விரிவுரையாளரான இவர் 1994 ல் நிதி அமைச்சராக பணியாற்றியவர். இவர் அப்போது இவரின் பெயரைக் கொண்ட வரி மூலம் பெர்லுஸ்கோனியின் கோடிக்கணக்கான சொத்துக்களின் பெறுமதியை தள்ளுபடி செய்ததன் மூலமாக பெர்லுஸ்கோனியின் நிறுவனங்களை உடைவிலிருந்து பாதுகாத்தவராவார். தற்போது இவர் பெர்லுஸ்கோனியால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தாராளவாதக் கொள்கை புரட்சியை நடைமுறைப்படுத்தவும், வரிகளை பாரியளவில் குறைப்பதற்குமான அமைச்சினை எடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு இத்தாலி முன்னணியின் Antonio Martino க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதனை தேசிய முன்னணிக்கு பெர்லுஸ்கோனி வழங்க விருப்பியபோதும், நேட்டோவில் முக்கியத்துவம் வாய்ந்த இப்பதவிக்கு நவபாசிசவாதி ஒருவர் நியமிக்கப்படுவதை அமெரிக்கா விரும்பாததால் அதன் அழுத்தங்களால் பின்னர் தவிர்த்துக்கொண்டார். 1994 இல் வெளிநாட்டு அமைச்சிற்கு பொறுப்பான பொருளாதார விரிவுரையாளரான இவர் அமெரிக்கவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

பெர்லுஸ்கோனியின் முக்கிய அமைச்சரவையான வெளிநாட்டு அமைச்சை கட்சியற்ற Renato வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்ததுடன், 71 வயதான பொருளாதார வல்லுனரான இவர் சர்வதேச நிதி, அரசியல் வட்டாரங்களுடனும், இத்தாலியின் முதலாளித்துவ கும்பல்களுடனுமான பெர்லுஸ்கோனியின் பாலமாக இயங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Renato Ruggiero 1950, 1960 களில் மொஸ்கோவிலும், வாஷிங்கனிலும், பெல்கிராட்டிலும் இராஜதந்திரியாகவும், பின்னர் புரூஸெல்சில் உள்ள ஐரோப்பிய அலுவலகத்திலும் பணியாற்றியுள்ளார். 1978 இல் இவர் சிறிது காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்த பின்னர் ரூரின் நகரிலுள்ள பியட் கார் நிறுவனத்தின் தலைவராகவும், 1995-1999 வரை உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) தலைவராகவும் கடமையாற்றினார்.

ஜேர்மனியின் Financial Times Deutschland பத்திரிகை ''Renato Ruggiero வெளிநாடுகளில் உயர்வாக மதிப்பிடப்படுவதாகவும், ரோமின் வெளிநாட்டு கொள்கைகளை பூகோளமயமாக்கத்தினுடனும் தாராளவாத சுதந்திர வர்த்தகத்துடனும் இத்தாலியின் வெளிநாட்டுக்கொள்கையை சரியான வழியில் ஒன்றிணைப்பார்'' என குறிப்பிட்டுள்ளது. ஏனைய விமர்சனங்கள் முன்னாள் பியட் நிறுவனத் தலைவர் அரசாங்கத்துள் இணைக்கப்பட்டது பெர்லுஸ்கோனியின் எழுச்சியினை அவநம்பிக்கையுடன் நோக்கிய பியட் நிறுவன உரிமையாளரான Agnelli உடனான சமாதானப்படுத்தல் என குறிப்பிட்டுள்ளன.

''அரசியல் சார்புள்ள'' கட்சியற்ற மேலும் இரண்டு அமைச்சர்களின் நியமனங்கள் புதிய அரசாங்கத்தின் முதலாளித்துவசார்பான தன்மையை காட்டுகின்றது. IBM கணனி நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவின் முன்னாள் தலைவரான Lucio Stanca கண்டுபிடிப்புக்கான அமைச்சராகவும், 1994 இல் பெர்லுஸ்கோனியின் கீழ் அரசாங்க தொலைக்காட்சியான RAI தலைவரான Letizia Moratti கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். Letizia Moratti எதிரான தொலைக்காட்சிகளை அரசாங்கத்தின் வழிக்கு கொண்டுவரவேண்டும் அப்போது இவரது பணியாக இருந்தது. இவர் பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனமான Rupert Murdoch இல் பணியாற்றினார். இது கல்வி அமைச்சுக்கு மிகவும் சந்தேகமற்ற ஒரு தகமையாகும். இவரின் தற்போதைய பணி பெர்லுஸ்கோனியால் கடுமையான விமர்சனத்திற்குள்ளான முன்னைய மத்திய- இடது அரசாங்கத்தால் முன்கொண்டுவரப்பட்ட கல்வி சீர்திருத்தத்தை இல்லாது செய்வதாகும்.

முக்கியமான விடயம் என்னவெனில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களில் பலர் ஐரோப்பிய இணைவு தொடர்பாக ஐயுறவை கொண்டவர்களாவர். இது தேர்தலுக்கு முன்னர் நீஸில் நடைபெற்ற உச்சிமாநாட்டுக்கு எதிராக ஊர்வலத்தை ஒழுங்கு செய்து பின்னர் பெர்லுஸ்கோனியின் முயற்சியால் கைவிட்ட வடக்கு முன்னணித்தலைவர்களுக்கு மட்டுமல்லாது பாதுகாப்பு அமைச்சரான Martino விற்கும் பொருளாதார அமைச்சரான Tremonti உம் ''ஐரோப்பிய ஐயுறவுவாதிகளாவர்''. ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு விரிவாக்கலுக்கு தெற்கு இத்தாலியின் எல்லைகளை மாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டால் மாத்திரமே இத்தாலியின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற Martino இன் கருத்து புரூஸெல்ஸில் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. அத்துடன் பெர்லுஸ்கோனியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்திற்கான தனது ஆதரவை தெரிவித்துவரருகின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள்ளும் இத்தாலியின் அரசாங்க மாற்றத்தின் பின்னர் முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் எதிர்பார்க்கலாம். இப்படியான பிரச்சனைக்கான சமிக்கைகள் பெர்லுஸ்கோனி கலந்தகொள்ளும், இவ்வார இறுதியில் சுவீடனின் Göteborg இல் நடைபெறும் உச்சிமாநாட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னர் புரூஸெலில் நேட்டோ மகாநாட்டில் அவரது முதலாவது சர்வதே சரீதியான கலந்துகொள்ளல் இருக்கின்றது.

பெலுர்ஸ்கோனியின் அமைச்சரவை தொடர்பான இப்பட்டியல் அவரைப் பற்றி குறிப்பிடாது விடப்பட்டால் பூர்த்தியானாதாக இருக்காது. பெலுர்ஸ்கோனி 7 பில்லியன் டொலர் பெறுமதியான வருடாந்த வருமானத்தை தரும் 150 நிறுவனங்களின் உரிமையாளராவார். இதில் 25,000 பேர் பணியாற்றவதுடன், நாட்டின் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் 3 இனை கட்டுப்படுத்துகின்றது. இத்தாலியின் பிரதான வியாபாரி என்றவகையிலும், ஜனாதிபதி என்றவகையிலும் அடிப்படை ஜனநாய உரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை தனது கைகளில் குவித்துள்ளார்.

100 நாட்களுக்குள் தான் நலன்கள் தொடர்பான முரண்பாட்டை தீர்த்துவைக்கப்போவதாக பெலுர்ஸ்கோனி குறிப்பிட்டார். ஆனால் இதுவரை அப்படியான முயற்சிகளுக்கான அறிகுறிகள் ஒன்றினையும் காணவில்லை. தனது சொத்துக்களை ஒரு குழுவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதாக கூறுவதை நம்புவது ஒரு ''குருட்டு நம்பிக்கையாகவே'' இருக்கும். தற்போது அவரது நிறுவனங்களில் முக்கிய பதவி வகிக்கும் தனது பிள்ளைகளின் பெயரில் அனைத்து சொத்துக்களையும் எழுதிவைப்பது சாத்தியம். பரம்பரை சொத்துக்கள், நன்கொடைகள் மீதான வரியை உடனடியாக ஒழிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளது இத்திசையில் செல்வதற்கான முதல் படியாக இருக்கலாம்.