World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Moves towards peace talks stall as Sri Lankan government refuses to lift ban on LTTE

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க மறுத்ததைத் தொடர்ந்து சமாதான பேச்சுக்களை நோக்கிய பயணத்தில் முட்டுக்கட்டை

By Wije Dias
12 June 2001

Use this version to print

மே மாதத் தொடக்கத்தில் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெயிம், இலங்கை அரசாங்கத்தையும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளையும் (LTTE) பேச்சுவார்த்தை மேசைக்கு கொணரும் நீண்ட கால முயற்சி இறுதியில் பயன்தரும் என நம்பிக்கை கொண்டிருந்தார். மே 15ம் திகதியளவில் முதற் பேச்சுக்கான ஏற்பாடுகள் முடிவு செய்யப்பட்டுவிடும் எனவும் கூட சொல்ஹெயிம் தெரிவித்து இருந்தார்.

திகதி கடந்து சென்ற போதிலும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. பேச்சுவார்த்தைகளின் திட்டவரம்புகள் தன்னும் அறிவிக்கப்படாததோடு எந்த ஒரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் வெளிவரவில்லை. இதற்குப் பதிலாக தமிழீழ விடுதலைப் புலிகள் 1998ல் தமது அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசாங்கத்தை வேண்டும் கோரிக்கை வெளிப்பட்டது. ஒரு கிழமையின் பின்னர் கொழும்பில் உள்ள பொதுஜன முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை அடியோடு நிராகரித்தது. இதன் மூலம் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இரண்டும் கெட்ட நிலைக்குள் தள்ளியது.

விடுதலைப் புலிகளின் கோரிக்கை மே 17ம் திகதி வன்னிக் காட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் தமிழ்ச் செல்வனுக்கும் சொல்ஹெயிமுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது தலைநீட்டியது. இதற்கு முன்னதாக பிரிவினைவாதிகள் யுத்த நிறுத்தம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பொருளாதார தடையை நீக்குதல், எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக புரிந்துணர்வு அறிக்கையில் கைச்சாத்திடுதல் என்பவற்றுக்காக வலியுறுத்தி வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை கொழும்பு ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்காவும் ஐரோப்பாவும் பெரிதும் நெருக்கி வந்தது. இது நோர்வே, இந்தியா ஊடாக இடம்பெற்றது. கடந்த டிசம்பரில் இருந்து விடுதலைப் புலிப் போராளிகள் ஒரு தரப்பு யுத்த நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர். இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும் வரிசையில் அமெரிக்கா, பிரித்தானியாவுடன் இணைந்து கொள்ளுமாறு ஐரோப்பிய நாடுகளை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்ட தனது இராஜதந்திர பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ளவோ அல்லது அனுதாபம் காட்டவோ மறுத்து வந்த நிலையிலும் இது இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதியாக ஏப்பிரலில் தனது யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொணர்ந்ததும் இலங்கை இராணுவம் உடனடியாக அக்கினிச்சுவாலை என்ற பெயரிலான ஒரு பேரளவு எதிர்த்தாக்குதலை நடாத்தும் வாய்ப்பை தட்டிக் கொண்டது. குமாரதுங்க பெருமளவு நிதி செலவிட்டு கொள்வனவு செய்த புதிய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் மீது பெரும் தோல்வியை திணிக்கும் எனவும் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தும் எனவும் தெளிவான நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆனால் இதற்கு நேர் எதிர்மாறானதே இடம்பெற்றவை. இராணுவ நடவடிக்கைகள் வெகு வேகமான முறையில் பேரழிவு மிக்கதாக மாறின. உத்தியோகபூர்வமான செய்திகளின்படி 250க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு 1600பேர் காயமடைந்தனர். அத்தோடு இராணுவம் தனது ஆரம்ப நிலைகளுக்கு பின்வாங்கிச் செல்ல நேரிட்டது. இதைத் தொடர்ந்து மட்டுமே அரசாங்கம் ஒரு உத்தியோக பூர்வமற்ற யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை அரை குறையாக நீக்கவும் தனது விருப்பைக் காட்டியது.

மே 10ம் திகதி தொடர்பு சாதனங்களுக்கு வெளியிடப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் நோர்வே வெளிநாட்டு அமைச்சருக்கு எழுதிய அந்தரங்க கடிதம் கூறியதாவது: "பேச்சுவார்த்தை மூலமான ஒரு அரசியல் தீர்வை காணும் நோக்கில், கட்சிகள் இடம் பெற்று வரும் மோதுதலினால் சிவிலியன்கள் முகம் கொண்டுள்ள கஷ்டங்களையும் ஆபத்துக்களையும் போக்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் செய்தன. பேச்சுவார்த்தைகள் இடம்பெறத்தக்க விதத்தில் புரிந்துணர்வை கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்யவும் தீர்மானம் செய்தன" என்றது.

ஆனால் உடனடி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான பேச்சுவார்த்தை என்பது விரைவாக புளித்துப் போய்விட்ட உணர்வைக் காட்டியது. விடுதலைப் புலிகளின் பேச்சாளரான பாலசிங்கம் அமைச்சர் கதிர்காமரின் அறிக்கையை "அசட்டுத்தனமான முதிர்ச்சியீனம்" என பண்பாக்கம் செய்திருந்தார். மே 12ம் திகதி சொல்ஹெயிம் மற்றொரு எச்சரிக்கை அறிக்கையை விடுத்தார்: "கட்சிகள் சில விடயங்களில் இணங்கிப் போகின்றன. ஆனால் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக இருக்கக் கூடிய ஒரு உடன்பாடு காணப்பட்டுவிட்டது எனக் கூறுவது நிச்சயமாக அகாலமானது." இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தமது சட்ட ரீதியான அங்கீகாரத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதானப் பாதை எனப்படுவதன் திசை சம்பந்தமாக தனது அணியினுள்ளே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக விடுதலைப் புலி அமைப்பின் போராளிகள் யாழப்பாணக் குடாநாட்டில் இராணுவம் தனது நிலைகளை பலப்படுத்திக் கொள்ள சுரண்டிக் கொண்ட யுத்த நிறுத்தத்தை கடைப்பிடித்தனர். இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர பரப்பில் ஒரு வெற்றியாக தன்னும் இது அமையவில்லை. மார்ச்சில் பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கி தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு "பயங்கரவாத அமைப்பாக" பட்டியல் போட்டுக் கொண்டது. மேலும் அப்படித்தான் இந்த பேச்சுவார்த்தைகள் இறுதியில் ஆரம்பிக்குமானாலும் சகல பெரும் வல்லரசுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 18 வருட காலங்களாக போராடிவரும் முக்கிய கோரிக்கையான தனித் தமிழ் நாடு அமைப்பதையும் முன் கூட்டியே நிராகரித்துக் கொண்டுள்ளன.

மே நடுப்பகுதியில் தமிழ்ச் செல்வன் சொல்ஹெய்மைச் சந்திக்க மல்லாவிக்கு பயணம் செய்து கொண்டிருக்கும் போது இடம்பெற்ற கொலை முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளினுள்ளேயான பதட்டத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் அவரது வாகனத்துக்கு முன்னர் சென்று கொண்டிருந்த வாகனம் கண்ணி வெடியினால் அழிக்கப்பட்டது. தமிழ்ச் செல்வன் அவர் பயணம் செய்த முதல் வாகனத்தில் இருந்து சற்று முன்னர் தான் மாற்றப்பட்டு இருந்ததால் உயிர் தப்பினார். அவர் தமது உத்தியோகபூர்வமான ஜீப் வண்டியில் இருந்து பல கி.மீட்டர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு வாகனத்துக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக இதற்கு இலங்கை இராணுவத்தை தாக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. பாதுகாப்பு அமைச்சு தனக்கும் இதற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது என்றது. "இதைப் பற்றி ஒன்றும் அறியோம்." "இந்தப் பகுதிக்கு சமீபமாக எங்கும் இருக்கவில்லை" என அவர்களின் அறிக்கை கூறியது. திட்டவட்டமாக யார் இந்த தாக்குதலை நடாத்தினார்கள் என்பதை நிர்ணயம் செய்வது கஷ்டம். ஆனால் அங்கு இருந்து வரும் இரண்டு சிறப்பு அம்சங்கள் விடுதலைப் புலிகள் பக்கம் நீள்கின்றன.

முதலாவதாக இந்த வெடிப்பு கொக்காவிலில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தின் பாதுகாப்பு அரணில் இருந்து பெரிதும் வடக்கே அமைந்துள்ளதோடு எந்த ஒரு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆழமாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகள் இப்பகுதியில் கண் வைத்துள்ளதோடு ஒரு இராணுவ படையாட்கள் கும்பல் இதற்குள் நோட்டமிட முடியாத விதத்தில் ஊடுருவிக் கொள்வது என்பது சாத்தியமானது அல்ல. இரண்டாவதாக தனது ஆரம்ப அறிக்கையின் பின்னர் விடுதலைப் புலிகள் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. ஏனைய தொடர்புச் சாதனங்கள் இந்த வெடிப்பில் 7 தமிழீழ விடுதலைப் புலி காரியாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்துக் கொண்ட நிலையிலும் இது இங்ஙனம் இடம்பெற்றது. இது வேண்டுமென்றே இந்தச் சம்பவத்தை பூசி மெழுகிவிட முயற்சியாது போனால் அல்லது நேரடியாக தொடர்புபடாது போனால் விடுதலைப் புலிகள் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் கண்டனம் செய்ய இச்சந்தர்ப்பத்தை சுருட்டிக் கொண்டிருக்கும்.

கொழும்பில் தீர்மானமற்ற நிலை

உடனடிக் காரணம் என்னவாக இருந்தாலும் விடுதலைப் புலிகள் தன் மீதான தடையை நீக்கும்படி அழைப்பு விடுத்தமை கொழும்பில் குமாரதுங்க அரசாங்கம் முகம் கொடுத்துள்ள கஷ்டங்களை சிக்கலாக்கியுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த விடயம் ஆளும் வட்டாரங்களில் கலந்துரையாடப்பட்டது. இந்த தடையை இறுதியாக நீக்குவது சம்பந்தமாக ஒரு தீர்மானம் செய்ய முன்னர் இங்ஙனம் செய்யப்பட்டது.சொல்ஹெயிம் குமாரதுங்கவிடமும் வெளிநாட்டு அமைச்சர் கதிர்காமரிடமும் மே 18ம் திகதி தமிழ் செல்வனுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளை சுருக்கிக் கூறினார். ஒரு முழு அளவிலான அமைச்சரவை கூட்டத்துக்குப் பதிலாக குமாரதுங்க முதலில் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான சிலரை ஒரு அந்தரங்க கூட்டத்துக்கு அழைத்தார். மே 23ம் திகதி இடம் பெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒரு நாள் ஒத்திப் போடப்பட்டது. ஆனால் அன்று விடுதலைப் புலிகளின் கோரிக்கை கலந்துரையாடப்படவில்லை. உத்தியோக பூர்வமான அறிக்கை மே 26ம் திகதியே வெளிவந்தது.

இந்த தீர்மானமற்ற தன்மை அரசாங்கம் முகம் கொடுக்கும் இரண்டும் கெட்டான் நிலையை சுட்டிக் காட்டுகின்றது. ஏப்பிரலில் ஒரு பெரும் இராணுவ பின்னடைவைக் கண்டதனால் குமாரதுங்க விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதலை உடனடியாக வலியுறுத்தும் ஒரு நிலையில் இல்லை. கடந்த ஆண்டில் அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவ கொள்முதல்கள் நாட்டின் நிதி நிலைமையை மோசமடையச் செய்ததோடு விலைவாசி அதிகரிப்புக்கள் சமூக பதட்டங்களின் அதிகரிப்புக்கும் எண்ணெய் வார்த்தன.

மேலும் குமாரதுங்க நீண்டு வரும் யுத்தத்தை ஒரு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொணர வேண்டும் என பெரும் வல்லரசுகளும் பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு பகுதியினரும் நெருக்குவாரம் கொடுத்து வருகின்றன. அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் றிச்சாட் ஆமிட்டகே உட்பட புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு நிலைமையை எடுத்து விளக்கவும் காங்கிரஸ் கமிட்டிகளை சந்திக்கவும் சொல்ஹெயிம் கொழும்பில் இருந்து வாஷிங்டனுக்கு நேரடியாகப் பயணம் செய்தார்.

எவ்வாறெனினும் அதே சமயம் அரசாங்கம் தனது சொந்த அணிக்குள் இருந்த சிங்கள பேரினவாதிகளின் எதிர்ப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஒரு சலுகையையோ அல்லது நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு பெரிதும் பரந்த அளவிலான சலுகைகளை வழங்குவதை எதிர்த்த ஜே.வி.பி. சிங்கள உறுமய கட்சிகளுக்கும் முகம் கொடுத்தது.

மே 23ம் திகதி எந்த ஒரு உத்தியோகபூர்வமான அறிக்கையும் வெளியிடப்படுவதற்கு பெரிதும் முன்னதாகவே நீதி அமைச்சரும் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) செயலாளருமான பற்றி வீரக்கோன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்றும் சாத்தியத்தை நிராகரித்து சிங்கள தீவிரவாதிகளை சாடுவதற்கு முயன்றார். அவர் கூறியதாவது: "நோர்வே இவ்வழியில் இறங்கிய போது தமிழீழ விடுதலைப் புலிகள் முன்நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க விரும்பியது. ஆனால் இப்போது அரசாங்கம் விட்டுக் கொடுக்க முடியாது கோரிக்கைகளை கேட்டுக் கொண்டுள்ளது" என்றார்.

மே 26ம் திகதி நாட்டின் முக்கிய பெளத்த பீடாதிபதி கொழும்பில் ஒரு ஆத்திரமூட்டும் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் பல பேரினவாத அமைப்புக்கள் கலந்து கொண்டன. சிங்கள உறுமய கட்சியின் மாஜி.தலைவர் எஸ்.எல்.குணசேகர தலைமையுரை நிகழ்த்தினார். அவர் அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தொடர வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்களை இரத்துச் செய்து யுத்தத்தை உக்கிரமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதே நாளில் அரசாங்கம் தனது தீர்மானத்தை வெளியிட்டது. மே 28ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் தடையை நீக்க மறுப்பதன் மூலம் அரசாங்கம் "அதனது தீர்மானத்தில் இருந்து தோன்றக் கூடிய சமாதான முயற்சியின் சரிவுக்கும் அதன் காரணமான பாரதூரமான விளைவுகளுக்கும் பூரணமான பொறுப்பை ஏற்க வேண்டும்" என்றது.

அன்றில் இருந்து யுத்தம் மீண்டும் வெடித்தது. மே கடைப்பகுதியில் விடுதலைப் புலிகள் தீவில் வீடு செல்லப் புறப்பட்ட கடற்படையினரின் வாகனங்களை சிதறடித்தனர். இதனால் 17 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 20 பேர் காயமடைந்தனர். கடந்த வாரம் இராணுவ கமாண்டோக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட கஞ்சிக்குடிச்சியாற்று (அம்பாறை மாவட்டம்) பகுதியில் ஊடுருவி குறைந்த பட்சம் 14 மக்களை கொன்றனர். மறுநாள் விடுதலைப் புலிகள் இதே பகுதியில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடாத்தினர். இதில் ஆறு படையாட்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 10 பேர் காயமடைந்தனர்.