World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

An exchange on socialist planning

சோசலிசத் திட்டமிடல் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்

4 March 2000

Use this version to print

பின்வருவது சோசலிசத்திட்டமிடல் பற்றி வாசகரிடமிருந்து வந்த கடிதமும் உலக சோசலிச வலைதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் நிக்பீம்சிடமிருந்து வரும் பதிலும் ஆகும்.

அன்புள்ள உலக சோசலிச வலைதள ஆசிரியருக்கு,

நடைமுறையில் சோசலிசம். உங்களது வலைத்தளம் தொழிலாளர்களை விளிம்புவரை கொண்டுவருது, ஆனால் மறுபக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை விளக்காமல் விட முயற்சிப்பதாகப் படுகிறது! வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களது ஆய்வு அனைத்தும் முதலாளித்துவ பூகோளமயமாக்கலுடன் தவறாகவும், பூகோளமயமாக்கல் தன்னின் நன்மைகளில் இருந்து வித்தியாசமானதாக, உயர்ந்த அளவு புலனியல் காட்சியாகவும் விளக்கமானதாகவும் உள்ளது.

உலகரீதியாக தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்திலிருந்து சோசலிசம் எழுவது எப்போதும் இசைவுக்குரியதுதான். சோசலிசம் எப்படி இயக்கப்பட முடியும் என்பதைப்பற்றி எவ்வாறு நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என விளக்கம் அளிக்க முடியுமா? உலகம் முழுவதிலும் உள்ள பரஸ்பர வினைபுரியும் (interacting) சோசலிச எண்ணமுடைய தொழிலாளர்கள் குழுக்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பரந்த தனித்த பூகோளத்திட்டத்திற்கு எப்படி உடன்பாட்டுக்கு வரமுடியும்? சந்தை சக்திகள், அதன் அனைத்து குறைபாடுகளுடனும், அடிப்படைக் கட்டளை விதியாய் இல்லாதிருக்கப்படுமானால், எப்படி தொழிலாளர்களால் சமுதாயத்தின் தேவைகளை மதிப்பிடவும் அளவிடவும் முடியும்? நான் நிபுணன் அல்ல, ஆனால் நாம் இன்னும் சோசலிசத்தை ஒரு அற்புத சர்வரோக சஞ்சீவியாக அல்லது கனவு எனபதற்குப் பதிலாக சமுதாயத்தை சோசலிச வழியில் இயக்கும் அறிவியலாக பதிலீடு செய்ய வேண்டும் என்று எனக்குப்படுகிறது. தொழிலாளர்கள் சோசலிசத்தை நடைமுறை ரீதியான மெய்மை விளக்கமாகப் பார்க்க முடியுமானால், அதனை நாடி முயல்வதற்கு அதிகம் பேர் எழுச்சி ஊட்டப் பெறுவார்கள். ஸ்ராலினிசம் சோசலிசமாக இருக்கவில்லை என்று விளக்குவது முக்கியமானது, ஆனால் நாம் இன்னமும் சோசலிசம் ஒரு செல்தகைமையான வழிமுறை என அகக்காட்சியாக உருவாக்கிக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

தங்களன்புள்ள,

DT

27, பிப்ரவரி 2000

____________________________________________________________________________________

அன்புள்ள DT,

" நடைமுறையில் சோசலிசம்" பற்றிய பிரச்சினை மீதான உங்களது மின் - அஞ்சலுக்கு நன்றி.

அது, நானோ அல்லது வேறு யாரோ சோசலிச சமுதாயத்துக்கான சிலவகை செய்ய வேண்டிய பணி பற்றிய பூர்வாங்க நகலை அமைப்பதும் பின்னர் அதனை நடைமுறைக்கு விடுவதுமான பிரச்சினை பற்றியதல்ல என்பதை முதலில் கூற என்னை அனுமதிக்கவும். இன்னும் சொல்லப் போனால், எதிர் காலத்தின் சோசலிச சமுதாயம் பல லட்சக் கணக்கான மக்களின் கூட்டு அனுபவம் மற்றும் நடைமுறையிலிருந்து எழும். அது தனி நபர் ஒருவராலோ அல்லது தனிப்பட்டோரைக் கொண்ட குழுவாலோ வரையப்பட்ட பூர்வாங்கத் திட்ட நகலினை அமுல்படுத்துவதாக இருக்காது.

இருப்பினும் சில பொதுவான கொள்கைகள் மற்றும் அபிவிருத்தியின் போக்குகள் ஏற்படுத்தப்படக் கூடும் என்பது தெளிவானது, அது சொல்லப் பட்டிருக்கிறது. "மார்க்சிச சர்வதேசியம் (எதிர்) தீவிர எதிர்ப்பு முன்னோக்கு" என்ற தொடர் கட்டுரைகளில் 3 வது கட்டுரையில், திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தை அமைப்பதற்கான அடித்தளங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு உள்ளேயே ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் காட்ட முயற்சித்திருக்கிறேன்.

பரந்த நாடுகடந்த நிறுவனங்கள், பலவற்றுள் அநேகமானவை முழுநாடுகளின் பொருளாதாரங்களை விட பெரிதானவை, அவை ஏற்கனவே திட்டமிட்டபடி தங்களின் நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து வருகின்றன. அத்தகைய நிறுவனங்களில் உற்பத்தியைத் திட்டமிடுதல் சாத்தியம் எனில், உள்ளார்ந்த ரீதியாக திட்டமிட்ட பொருளாதாரத்தை அமைத்தல் சாத்தியமே.

பின்னர் நீங்கள் "சந்தை சக்திகள், அதன் அனைத்துக் குறைபாடுகளுடனும், அடிப்படைக் கட்டளை விதியாய் இல்லாதிருக்கப் படுமானால், எப்படி தொழிலாளர்கள் சமுதாயத்தின் தேவைகளை மதிப்பிடவும் அளவிடவும் முடியும்?" என்றவாறு கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். முதலாளித்துவத்தின் கீழ், நிறுவனங்கள் இலாபத்தைப் பெற வேண்டி சந்தையின் இயக்குதல்களுக்கு பதிலளிக்கிறது.

சோசலிசத்தின் கீழ், உற்பத்தியானது சமுதாயத்தினதும் அதன் உறுப்பினர்களதும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக திட்டமிடப்படுகின்றது மற்றும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. தொடக்கத்தில், சந்தை தொடர்ந்து இயங்கும்தான். ஆனால் வரவர சோசலிச பொருளாதாரத்தின் வளர்ச்சியானது நனவான திட்டமிடல் மற்றும் உற்பத்தியை சமூக ரீதியாய் ஒழுங்குபடுத்தல் மூலமாக சந்தையை இடப் பெயர்ச்சி செய்வதைக் கண்டுகொள்ளும்.

இது ஜனநாயகத்தின் பரந்த வடிவங்களிலான வளர்ச்சியினூடாக இடம்பெறும். உண்மையான ஜனநாயகத்தை நிறுவுதல் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் நாளாந்த வாழ்க்கையின் பகுதியாக, பொருளாதாரத் திட்டத்தை அபிவிருத்தி செய்யவும், அதனை மீள்பார்வை செய்யவும், திருத்தவும் மற்றும் அதனை நிறைவேற்றவும் செய்வதைக் கண்டு கொள்ளும்.

எப்படி அத்தகைய சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கமைத்தல் நிறைவேற்றப்படும்? "வர்க்கமற்ற சமுதாயத்துக்கான முன் நிபந்தனையான சடரீதியான சூழ்நிலைகளும் அது தொடர்பான பரிவர்த்தனை உறவுகளும் சமுதாயத்தில் மறைந்திருப்பதை நாம் காணவில்லை என்றால் அதனைத் தகர்த்து எறிவதற்கான அனைத்து முயற்சிகளுமே கற்பனாவாதமானவை," என மார்க்ஸ் ஒருமுறை எழுதினார். (Karl Marx, The Grundrisse, p. 159).

பொருளாதாரத் திட்டமிடலின் அபிவிருத்தியைச் சாத்தியமானதாக்கும் மற்றும் பொருளாதார வாழ்வை இயக்குபவராக சந்தையை முற்போக்கான முறையில் இடப் பெயர்ச்சி செய்யத் தேவையான இயங்குமுறை மற்றும் தகவல் அமைப்பு முறையின் அபிவிருத்திக்கான சடரீதியான அடித்தளங்கள் சமுதாயத்தில் இருப்பதால், அதனை சமுதாயத்தில் எங்கு தேடுவது?

அவை உலகச் சந்தையின் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களுக்குள்ளேயே கண்டு பிடிக்கப்படமுடியும் என்று மார்க்ஸ் விளக்குகிறார்.

"உலகச்சந்தை தானாய் சுதந்திரமாய் இயங்குவது (அதில் ஒவ்வொரு தனிநபரதும் செயல்பாடு உள்ளடங்கியுள்ளது), பண உறவுகளின் அபிவிருத்தியை அதிகரிக்கின்றதால்.... மற்றும் எதிரெதிர்மாறாக நடைபெறுவதால், உற்பத்தியிலும் நுகர்விலும் பொதுப் பிணைப்பு மற்றும் எல்லா வகையாலும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் சுதந்திரமாகவும் அக்கறையற்று இருப்பதுடன் சேர்ந்து அதிகரிப்பதால், இம்முரண்பாடு நெருக்கடி முதலியவற்றுக்கு இட்டுச் செல்வதால், அதனால், இந்த அந்நியமாதலின் அபிவிருத்தியுடன் சேர்ந்ததாக, மற்றும் அதே அடிப்படையில், அதனை சமாளித்துவர முயற்சிகள் செய்யப்படுகின்றன: ஒவ்வொரு தனிநபரும் ஏனைய எல்லோரது நடவடிக்கையைப் பற்றிய தகவலைப் பெறக்கூடியதாகவும் அதன்படி தங்களது சொந்த நடவடிக்கையை சரிசெய்துகொள்ள முயற்சிக்கவும் கூடிய நிறுவனங்கள் தோன்றுகின்றன; எடுத்துக்காட்டு, தற்போதைய விலைகளின் பட்டியல், பரிவர்த்தனை மாற்றுவீதங்கள், வணிகத்தில் செயலூக்கம் உள்ளோருக்கிடையில் அஞ்சல், தொலைவரிகள் முதலியவற்றினூடாக உள்ளார்ந்த தொடர்புகள், ஆகியன" (மார்க்ஸ், அதே நூல், பக்கம் 161 )

இந்த நிலைப்பாட்டிலிருந்து பங்குச் சந்தை நடவடிக்கைகள் மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகளை கருதிப் பாருங்கள். அவை தொடர்ச்சியான நீரோடையாய் தகவல் தருகின்றன. அத்தகவல்கள் பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கு அடிப்படையை அமைக்கின்றன. பணம் மற்றும் மூலதனத்தின் இயக்கம் பற்றி பிரதிபலிப்பதைக் காட்டிலும், இத்தகவல் சமுதாயத்தின் உறுப்பினர்களின் முடிவுகளுக்கு வெளிப்பாட்டை வழங்கும் சமுதாயத்தைக் கருக்கொண்டிருப்பது முற்றிலும் சாத்தியமானதே. வேறு வார்த்தைகளில் சொன்னால், மூலதனத்தின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பங்குச் சந்தைக்குப் பதிலாக, சோசலிச சமுதாயமானது, சமுதாயத்தின் உறுப்பினர்களின் கூட்டு முடிவுகளையும் அவர்களின் நிறைவேற்றல்களையும் பதிவு செய்யக்கூடிய நிறுவனங்களைக் கொண்டிருக்கும்.

தற்போதைய சமுதாயத்தில் தொழிலாளர்கள் சந்தையின் வழியாக வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் உற்பத்தியைத் திட்டமிடுகின்றார்கள் மற்றும் ஒழுங்கமைக்கின்றார்கள். முதலாளித்துவத்தின் கீழ் ஏற்கனவே வளர்ந்திருக்கும் இந்த அமைப்பு முறைகள் ஊடாக தொடர்பு கொள்ளக்கூடிய மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் பற்றிய தகவல்களுடன், ஜனநாயக ரீதியாக தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், இதே தொழிலாளர்களால் உற்பத்தியைத் திட்டமிடவும் ஒழுங்கமைக்கவும் செய்யமுடியும் என்பது தெளிவாகவே சாத்தியமானது. இப்போது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியது உற்பத்தி இலாபத்தின் ஆணைகளுக்கு அல்ல மனிதத் தேவைகளுக்கு ஏற்ப என்பது மட்டுமே ஆகும்.

தங்கள் உண்மையுள்ள,

நிக்பீம்ஸ்

29, பிப்ரவரி 2000