World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Robert Kerrey and the bloody legacy of Vietnam

ரொபேர்ட் கெர்ரியும் இரத்தம் தோய்ந்த வியட்னாம் மரபு வழியும்

By Patrick Martin and David North
4 May 2001

Use this version to print

முன்னாள் அமெரிக்க செனட்டர் ரொபேர்ட் கெர்ரி (Robert Kerrey), அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மிகவும் கெளரவ மானிடங்களுள் ஒன்றான புதிய பள்ளி பல்கலைக்கழகத்தின் தலைவர் என்ற வகையில் புதிதாகப் பணி தொடங்கும் விழாவில், 32 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்னாமிய கிராமம் ஒன்றில் தனது ஆணையின் கீழ் தானும் ஆறு படைவீரர்களும், 21 பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான ஆண்களை கொன்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நியூயோர்க் டைம்ஸ் இதழில் வந்து கொண்டிருக்கும் கட்டுரை எல்லோருக்கும் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர் மற்றும் இணைதளம் வழியாக பரந்த அளவில் விநியோகிக்கப்பட்ட பின்னர், நியூயோர்க் நகரத்தில் ஏப்ரல் 26 அன்று கெர்ரி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். கிரிகோரி விஸ்டிகா (Gregory Vistica) வினால் எழுதப்பட்ட கட்டுரை ஏப்ரல் 29 இதழின் முகப்புக் கட்டுரையாக ஆனது. இப்பிரச்சினை CBS தொலைக் காட்சியில் மே1 இரவு ஒளிபரப்பப்பட்ட அறுபது நிமிடம்II என்ற நிகழ்ச்சியில் நன்றாக ஆய்வு செய்யப்பட்டது. 1998ல் நியூஸ்வீக் இதழுக்காக விஸ்டிகா ஆரம்பத்தில் தொடங்கிய இவ்வாய்வுக்கு CBS ம் டைம்ஸ் ம் கூட்டாக ஆதரவு தந்தன.

தான் பொங் (Thanh Phong) ஆற்றின் கழிமுகப்பகுதி கிராமமான சிறிய மெக்காங் (Mekong) கில் 1969 பிப்ரவரி 25 நிகழ்ச்சி பற்றிய பிரதான விஷயம் பற்றி இன்றும் சர்ச்சை நிலவுகிறது. கெர்ரியின் ஏழு பேர் அடங்கிய கடற்படைக் கட்டளை கிராமத்து மேயரைக் கொலை செய்வதற்காக தான் (Thanh) பொங்கில் நுழைந்தது. ஏனெனில் அவர் தேசிய விடுதலை முன்னணியின் ("Viet Cong") தீவிர ஆதரவாளராக இருக்கக்கூடும் என்று நம்பப்பட்டதால் அமெரிக்க இராணுவத் தலைமையகத்தால் குறி வைக்கப்பட்டிருந்தார். அக் கிராமம் தேசிய விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள மையப் பகுதியில் இருந்தது. அங்கு அமெரிக்கத் துருப்புக்களும் சரி சைகோனின் பொம்மை அரசாங்க துருப்புக்களும் சரி பகலில் மற்றும் கூட்டமாக சென்றால் அன்றி இடருக்கு ஆளாவதுண்டு.

இரவு நேரத் தாக்குதலின்போது, அமெரிக்க வேட்டையாளர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு வியட்னாமியரையும் ஆண், பெண் குழந்தைகள் என ஒவ்வொருவரையும் கொல்வதுண்டு. அவர்களின் ஆயுதக்கிடங்கில் உள்ள ஒவ்வொரு ஒவ்வொரு ஆயுதத்தையும், கத்தியிலிருந்து துப்பாக்கி வரை மற்றும் கை எறி குண்டு முதல் இலகு ரக டாங்கி எதிர்ப்பு ஆயுதம்வரை பயன்படுத்துவர். ஒரு சில டஜன்பேர்கள் வசிக்கும் கிராமத்தில் 1200 சுற்று ரவைகளுக்கும் மேலாக செலவழிப்பர்.

நடவடிக்கைக்குப்பின் கெர்ரியால் தகவல் அளிக்கப்பட்ட மற்றும் அவரது மேலதிகாரியால் முத்திரை இடப்பட்ட அறிக்கைகளில், திடீர் சோதனை நடவடிக்கையின் விளைவாக "21 VC KIA" (21 வியட் காங் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்) என்று பட்டியலிடப்பட்டது. கெர்ரியும் அந்த யூனிட்டில் ஏனைய உறுப்பினர்களும் குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 14 உடல்களைப் பார்த்திருந்தபோதும், அதில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. யுத்தத்தில் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியதாகக் கூறப்பட்ட அமெரிக்க அதிகாரிகளின் அதிகாரபூர்வ கணக்கில் 21 உடல்கள் சேர்க்கப்பட்டது. இரண்டாவது நடவடிக்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர், கெர்ரி தான் பொங்கில் (Thanh Phong) அவரது நடத்தைக்காக வெண்கல நட்சத்திரத்தைப் பெற்றார். இரண்டாவது நடவடிக்கையில் கடுமையாக காயமுற்று ஒரு காலை இழந்தார், இறுதியில் கெளரவ பதக்க விருதினையும் பெற்றார்.

தான் பொங்கில் நடந்தது என்ன?

விஸ்டிகாவின் அறிக்கைக்கு மூலாதார விஷயமாக இருக்கும் அந்நடவடிக்கையில் பங்கேற்ற முன்னாளைய சீல் மற்றும் அதில் பங்கேற்றவருமான கெராட் கிளான் (Gerhard Klann) இன் நினைவலைகளுக்கும், கெர்ரியால் கொடுக்கப்பட்ட அறிக்கைக்கும் சில முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன.

* இந்த படுகொலைகள் நீண்ட தொலைவில் இருந்தபோது நடந்தன, அவை வேண்டுமென்றே யெய்யப்பட்டவை அல்ல என்றார் கெர்ரி. கிராமத்தை அக் குழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், பெண்களும் குழந்தைகளும் சுற்றி வளைக்கப்பட்டு, வேண்டுமென்றே சுடு முனை தூரத்தில் படுகொலை செய்யப்பட்டனர் என்று கிளான் கூறுகிறார்.

* சீல்கள் சுடப்பட்டதாகவும் பின்னரே பதிலடி கொடுத்ததாகவும் கெர்ரி குறிப்பிடுகிறார். என்னவாயினும் அங்கு எதிர்த்து சுடுதல் இருக்கவில்லை என்று கிளான் கூறுகிறார்.

* அக் குழுவிற்கு அக்கிராமம் பழக்கப்படாததாக இருந்தது மற்றும் தொடக்கத்தில் அது கைவிடப்பட வேண்டும் எனக் கருதியதாக கெர்ரி கூறுகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னரே தான் பொங்கை சீல்கள் திடீர் சோதனை நடத்தினர் மற்றும் அங்கு பெண்களும் குழந்தைகளும் வசிப்பதாக முன்பே அறிந்திருந்தனர் என்று கிளான் கூறுகிறார். (இந்தக் கடைசி விஷயத்தில், இராணுவ பத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன.)

சான்றுகளின் மிகப் பெரும்பான்மை, கிளானின் குறிப்புக்களை ஆதரிக்கின்றன --டைம்ஸ்/ CHâv புலாய்வு பற்றி அவருக்குத் தெரிவிக்கப்படும் வரைக்கும் பொங் நிகழ்ச்சிகளைப் பற்றி கெர்ரி பகிரங்கமாகப் பேசவில்லை என்ற குறைந்தபட்ச உண்மையை அல்ல. அவர் வெண்கல நட்சத்திர பதக்கம் பெற்றமை நன்கு அறிந்த விஷயமாக இருந்தபோதும், அவரது அதிகாரப்பூர்வ சுயசரிதை, அமெரிக்க செனட்டிற்கானதிலாயினும் சரி அல்லது புதிய பள்ளிக்கூடத்திற்கானதிலாயினும் சரி அதில் அந்நிகழ்ச்சி தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் முழுவதும் அவரது நிலை தானே உதவுவதாக இருக்கிறது: அவர் தவறு செய்வதாக உணர்கிறார், குற்ற உணர்வு மற்றும் வெட்கத்தை வெளிப்படுத்துகிறார், மற்றும் அதன்விளைவாக அவரது நடவடிக்கைகளுக்காக விளைகள் எதனையும் எதிர்கொள்வதில்லை என எதிர்பார்க்கிறார். மேலும் பத்திரிகைகள் கெர்ரியின் அணியால் 1969-ல் படுகொலை செய்யப்பட்ட 21 பேர்களை அல்ல மாறாக கெர்ரியை பாதிக்கப்பட்டவராக்க் காட்டுவதில் ஒத்துப் போகின்றன.

கெர்ரியின் சொந்த நடத்தை குற்ற உணர்வின் அறிவின் முட்டை நாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இபொழுது கூட அவர், கிளானுடன் நேரடியாக அவற்றை ஏற்க முடியாதென முரண்படுகிறார், அவர்கள் வேறுபட்ட நினைவுகளை வைத்திருப்பதாக மட்டும் கூறுகின்றார். முன்னாள் செனட்டர் நிகழ்ச்சிகளை தன்னால் துல்லியமாக நினைவுகூற முடியவில்லை என ஒன்றுமாற்றி ஒன்று குறிப்புரைப்பதுடன், கிளான் தான் செய்தது என்று குறிப்பிட்டதை தான் செய்யவில்லை என்று அறிவதாகக் குறிப்பிடுகின்றார். தான் பொங்கின் விபரங்களை நினைவு கோர முடியவில்லை என்று அவர் கோருவது நம்பமுடியாதது. கெர்ரியின் சுருக்கமான இராணுவ வாழ்வில் கையளவேயான கடுமையான வாழ்க்கை நடவடிக்கைகளுள் இதுவும் ஒன்றாகும். அவர் 1969 ஜனவரி 29-ல் வியட்னாமை அடைந்தார், இரண்டு மாதங்கள் கழித்து கையெறி குண்டால் அவரது காலின் பகுதி எடுக்கப்பட்ட பின்னர் அவரது இராணுவப் பணி தகுதி அற்றதாகப் போனது. மறப்பதற்கு சரியான காரணம் ஒன்றில்லாமல் அந்நிகழ்ச்சிகள் மறக்கப்படமுடியாதவை.

அறிக்கைகள் மாறுபாடாக இருப்பதால் அவை குற்ற விசாரணைக்கு கதவு திறந்து விடுவதாக இருக்கும் என்பதால், கெர்ரியின் கோரலை குழு சீல்களின் ஏனைய ஐந்து உறுப்பினர்கள் ஆதரிக்கும் அதேவேளை, இது உண்மையான உறுதிப்பாடா என்பதை அரிதாகத்தான் எடுத்துக் கொள்ளமுடியும். யுத்தக் குற்றங்கள் பற்றிய வரையறைகளின் எழுத்துவடிவ சட்டம் இல்லை. அக்கிராமத்தில் இச்சம்பவத்தில் தப்பி உயிர் வாழும் இருவர் --ஒருவர் அந்நேரம் பருவச்சிறுமியாக இருந்தவர் மற்றொருவர் தேசிய விடுதலை முன்னணி காரியாளர் ஒருவரின் மணைவி. கெர்ரி குழுவினர் கிராமத்தில் நுழைந்த பொழுது எதிர்ப்பட்ட முதல் குடிசையில் ஒரு வயோதிகர், அவரது மணைவி மற்றும் அவர்களது மூன்று பேரக்குழந்தைகளின் தொண்டைகளை எப்படி சீல்கள் அறுத்தனர் என்ற விளக்கம் உட்பட கிளான் குறிப்பிடும் விவரங்களை தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளனர். இவ் ஐந்து பலியானோரின் புதைகுழிகளிலும் இறந்த நாள் ஒரே நாளாகக் குறிக்கப்பட்டுள்ளதை இன்றும் கிராமத்தில் பார்க்க முடியும்.

குற்றச் செயலான யுத்தம்

ஒரு அர்த்தத்தில், கெர்ரியின் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதில் இவ் வேறுபாடுகள் எல்லாம் இரண்டாம் பட்சமானவை. முன்னாள் செனட்டரின் வார்த்தையை ஒருவர் எடுத்துக் கொண்டால் கூட, தான் பொங் ஒரு யுத்தக் குற்றமாகும். கெர்ரி, சாதாரணமாக, அமெரிக்க இராணுவ ஆணையகத்தால் கொலை செய்வதற்காக அனுப்பப்பட்ட கொலைக் கும்பலுக்கு தலைவர் ஆவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் அத்துடன் ஆண்களும்கூட வழக்கத்திற்கு மாறானது அல்ல. தான் பொங் மீதான திடீர்த் தாக்குதலானது, தெற்கில் வியட்னாமின் அரசியல் தலைமையைக் குறி வைத்து சிஐஏ மேற்கொண்ட வேலைத்திட்டமான பொனிக்ஸ் (Phoenix) நடவடிக்கையின் ஒரு பகுதி ஆகும். இதன்கீழ் 20,000 முதல் 70,000 வரையிலான தேசிய விடுதலை முன்னணியின் காரியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் -- அவர்களின் குடும்பத்தினர் -- படுகொலை செய்யப்பட்டனர்.

தான் பொங் போன்றவற்றின் மீதான தாக்குதலுக்கான நிலையான கட்டளை, அமெரிக்கத் துருப்புக்களின் பாதையில் சந்திக்கும் எந்த வியட்னாமியரையும் கைது செய்யாமல் கொல்லுவதேயாகும். வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டரீதியான இலக்குகளாகக் கருதப்பட்டனர் --- பகுதியளவில் ஏனெனில், உண்மையான புரட்சிகரப் போராட்டம் என்ற வகையில், அமெரிக்க அக்கிரமிப்பிற்கு எதிரான வியடனாமிய எதிர்ப்பானது குழந்தைகள் உட்பட மக்களின் ஒவ்வொரு பகுதியினரையும் அணி திரட்டியது. வியட்னாமில் அமெரிக்க யுத்தமானது, எதிப்புரட்சிகர யுத்தம் என்ற வகையில், உண்மையில் நாட்டின் முழு மக்களுக்கும் எதிரானது. இது அத்தியாவசியமாய் வகைதொகையற்ற அளவில் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டிருந்தது.

1969 பிப்ரவரி 25 அன்று இரவு கெர்ரியும் அவரது ஆட்களும் 21 பேர்களை கொன்றனர். வியட்னாமில் தசாப்த கால அமெரிக்க ஆக்கிரமிப்பு 30 லட்சம் வியட்னாமியர்களையும், அதுபோல 60 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை, மாலுமிகளை, வான்படையினரையும் பலிகொண்டது. பெரும்பாலான கிராமப்புறங்கள் குண்டு மழைகள், தீக்குண்டுகள் மற்றும் இலைகளை உதிர்க்கும் இராசாயன பொருட்கள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. மற்றும் யுத்தத்தின் முடிவில் நாட்டின் கால்பகுதி பொருளாதார, சுற்றுச் சூழல் பாதிப்புக்கு ஆளாகி எஞ்சியிருந்தது.

கெர்ரி, யுத்தக் குற்றத்தின் குற்றவாளியாக இருக்கக்கூடிய அதே வேளையில், அவர் முன் குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டிய ஏனையோர் --வியட்னாமில் இன ஒழிப்புக் கொள்கைகளுக்கு பொறுப்பான, தப்பியிருக்கும் அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள்-- யுத்தத்தில் முக்கிய பாத்திரங்கள் ஆற்றிய ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger) மற்றும் ஜெனரல் வில்லியம் வெஸ்ட் மோர் லேண்ட் (General William Westmoreland) முதல் முன்னாள் சிஐஏ இயக்குனர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ் (Richard Helms) வரையிலான பல ஜெனரல்கள், தூதரக அதிகாரிகள், "ஆலோசனையாளர்கள்" ஆவர்.

ஆதனால்தான் கெர்ரி அம்பலப்படுத்தல் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளிடமிருந்தும் பத்திரிகைச் சாதனங்களிடமிருந்தும் அத்தகைய ஆதரவுகளை பொழிகிறது. இறுதியில் வியட்னாமில் அரசியல் மற்றும் இராணுவ தோல்வியைச் சந்தித்த அதிகார பூர்வ குற்றவாளிகளின் படையணியில் கெர்ரி சிறிதளவு மட்டும் பாத்திரமாற்றினார், ஆனால் ஒருபோதும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

பழைய காயங்களை துருவிப்பார்ப்பது தொடர்பாக அமெரிக்க அரசியல் ஸ்தாபனங்களில் மிகப்பெரிய பதட்டம் இருக்கிறது. ஆளும் தட்டு முழுவதும் வியட்னாமின் குற்றங்களில் சிக்கிக்கொண்டிருப்பதுடன் அமெரிக்க மக்களின் கண்களின் முன் மிகவும் அவப்பெயர் பெற்றுள்ளனர். யுத்தமானது, வியட்னாமிலும் அதுபோலவே உள்நாட்டிலும் அரசாங்கத்தின் ஏமாற்றுச் சூழ்ச்சிகளையும் பல சட்டவிரோத நடவடிக்கைகளையும் பெரிய அளவில் சம்மந்தப்படுத்தியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட வியட்னாமியர்களை படுகொலை செய்ததாக லெப்டினென்ட் வில்லியம் கேலி (William Calley) ஜூனியர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி நிக்சனால் தண்டனைக் குறைக்கப்பட்ட இழிபுகழ் பெற்ற நடவடிக்கைகளுள் மை லெய் (My Lai) படுகொலை நிகழ்ச்சியும் ஒன்றாகும். அமெரிக்க யுத்த கொடுமைகளில் நன்கு பிரபல்யமானதும், 500 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்ததில் சம்மந்தம் கொண்டதும் இரத்தம் தோய்ந்தவற்றுள் ஒன்றும், பெரும்பாலோர் சுடுமுனை தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி மை லெய் படுகொலையாகும். நிக்சனின் தண்டனைக் குறைப்பு பொதுவாக அரசியல் அமைப்புகளால் வரவேற்கப்பட்டது, பரந்த அளவில் படுகொலை செய்வதை பகிரங்கமாக அங்கீகரிப்பதற்கு துணை சேர்த்தது.

ரொபர்ட் கெர்ரியின் வழக்கு அதே பிரச்சினைகளை எழுப்புகிறது. வியட்னாம் யுத்தத்தை புனருத்தாரணம் செய்வதற்கான ஆளும் வர்க்கத்தின் நீண்ட முயற்சிகளையும் உள்நாட்டு எதிர்ப்பின்றி வெளிநாட்டில் யுத்தத்தினை தொடுப்பதற்கான அதன் திறமையினை புதுப்பிப்பதற்கான முயற்சிகளையும் குறுக்கே வெட்டுகிறது. ஒருவர் தற்போதைய ஜனாதிபதியின் தந்தை, 1991 வளைகுடா யுத்தத்திபோது, "வியட்னாம் நோய்க்குறி" என்று பிரகடனம் செய்ததை மட்டும் நினைவு கூர வேண்டும். அந்தக் காரணத்திற்காகத் தான், வலதுசாரி பத்திரிகைகள், குறிப்பாக வோல்ஸ் ஸ்ட்ரீட் பத்திரிகை போன்றவை கெர்ரியின் பாதுகாப்பிற்கு பலமாய் முன்வருகின்றன.

தொடரும்............