World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

International Committee of the Fourth International's May Day greetings to the workers of Valea Jiului, Romania

ருமேனியாவின் வாலியா ஜியூலுய் இன் தொழிலாளர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மேதின வாழ்த்துச் செய்தி

2 May 2001

Use this version to print

பின்வருவது ருமேனியாவின் முக்கிய நிலக்கரிப் பிரதேசமான வாலியா ஜியூலுய் இல் மே 1ம் திகதி கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் வாழ்த்து செய்தியாகும். ஒரு தொடர் போர்க்குணமிக்க போராட்டத்தினதும், 1999 இல் தலைநகரான புக்காரெஸ்டை நோக்கிய ஊர்வலத்தின் பின்னரும் இத்தொழிலாளர்கள் அரசாங்கத்தின் பாரிய ஒடுக்கு முறையையும், திட்டமிட்ட நிலக்கரிச்சுரங்க மூடுதல்களையும் எதிர்நோக்குகின்றனர். கடந்த மாதங்களாக இத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் உண்ணாவிரதம், காற்றுபோகாத குழிகளில் அடைத்துக்கொள்ளுதல், தீக்குழித்தல் போன்ற ஆபத்தான எதிர்ப்பு வடிவங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அரசாங்கம் நிலக்கரி சுரங்க வேலைத்தல அழிப்புக்கு மாறான முதலீடுகளை செய்வதாக வழங்கிய உறுதிமொழிகள் பூர்த்திசெய்யப்படாது இருக்கையில் வேலையின்மை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இம் மேதினத்தில் ருமேனிய தொழிலாளர்களுக்கு தனது தோழமை கலந்த வாழ்த்துக்களை அனுப்பியுள்ளது. நாங்கள் உங்களது கூட்டத்திற்கும், உலக மூலதனத்தினதும் அதன் கையாட்களான புக்காரெஸ்ட் அரசாங்கத்திற்கும் கூட்டுதாக்குதலுக்கு எதிராக ரூமேனிய தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கும் போராட்டதின் வெற்றிக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிக்கலாய் ஸெஸெஸ்கோவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான 1977 இல் இருந்து தொடரும் வேலைநிறுத்தத்தையும், நிலக்கரி சுரங்கங்களை மூடுவதை தடுப்பதற்கு எதிரான கடந்த பத்தாண்டுகாலமாக புக்காரெஸ்டுக்கான பல்வேறு ஊர்வலங்களையும், வாலியா ஜியூலுய் இன் தொழிலாளர்களின் தீரமிக்க போராட்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் பாரிய போராட்டங்களுடன் முன்வந்தபோதும் முன்னாள் ஸ்ராலினிஸ்டுக்களால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்தாலும், சமூக ஜனநாயகவாதிகளாலும், வலதுசாரி தேசிய வாதிகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சர்வதேசரீதியில் ஒழுங்கமைந்த வங்கிகளினதும், நிறுவனங்களதும் இலாப நோக்கத்தை பூர்த்திசெய்யும் முகமாகவும், உள்ளூர் மாபியா கும்பல்களினதும் தேவையை பூர்த்திசெய்யவும் நிலக்கரி தொழிலாளர்களினதும் ஏனைய பிரிவு தொழிலாளர்களினதும் வேலைத்தலத்திற்கானதும் வாழ்க்கைத் தரத்திற்கானதுமான கோரிக்கைகளுக்கு தமது முதுகைக் காட்டுகின்றனர்.

''சுதந்திர சந்தைக்கான சீர்திருத்தத்திற்கு'' எதிரான போராட்டங்களை ஒடுக்குமுகமாக, ஒடுக்குமுறை அரசாங்கம் நிலக்கரி தொழிலாளர்களினது போராட்டத்தை சட்டரீதியானதல்ல எனக் கூறி பலரை கொலைசெய்துள்ளதுடன், Miron Cozma வையும் இன்னும் பல தொழிற்சங்க தலைவர்களையும் சிறையில் அடைத்துள்ளது.

நிக்கலாய் ஸெஸெஸ்கோவின் ஆட்சி வீழ்ச்சியடைந்து 12 வருடங்களின் பின்னர், ஸ்ராலினிச சர்வாதிகாரியின் வீழ்ச்சியின் பின்னர் ''ஜனநாயத்திற்கும்'' செழிப்புக்குமான புதியகாலப்பகுதி உருவாகியுள்ளதாக கூறிய முதலாளித்துவ கூற்றுக்கள் தொடர்பாக ருமேனிய தொழிலாளர்கள் தமது கசப்பான அனுபவங்கள் மூலமாக பலபாடங்களை படித்துள்ளனர். இதற்கு மாறாக இலெஸ்கு விலிருந்து ரூடர் வரையிலான பழைய அரசாங்கத்தினது மிகபிற்போக்கான பிரிவினரும் நாட்டின் அரசியலை ஆதிக்கம் செலுத்துகையில் ''முதலாளித்துவத்தினது வெற்றி'' கைத்தொழிலை தள்ளாட்டமடைய செய்துள்ளதுடன், மில்லியன் கணக்கானோரை வேலையின்மைக்குள் தள்ளியுள்ளதுடன், ஏழ்மையின் பாரிய அதிகரிப்பையும் சமூகத்துருவப்படுத்தலையும் உருவாக்கியுள்ளது. ருமேனியாவின் சமூக நெருக்கடி கிழக்கு ஐரோப்பா முழுவதும் உள்ள ''புதிய ஜனநாயகத்தின்'' மீது பிரதிபலிக்கின்றது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய ஒன்றியமும் அரச சொந்தமான தொழிற்சாலைகளை வேகமாக தனியார்மயமாக்கவும் கடுமையான சமூகநல கொள்கைகளையும் கடைப்பிடிக்கவும் கோருகின்றன. இவற்றுள் அனேகமானவை ஊதிப்பெருத்துவரும் வெளிநாட்டுக் கடன்களை அடைக்கவும், ஐரோப்பிய அங்கத்துவத்திற்காகவும் கிட்டத்தட்ட உரித்தெடுக்கப்பட்டுள்ளன.

பூகோளமயமான உற்பத்தியும் பூகோள மூலதனத்தின் ஆதிக்கமும் இவ்வாறான நிலைமைகளை எல்லா இடங்களிலும் உருவாக்கியுள்ளன. ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் உள்ள மக்கள் தமது வாழ்க்கைத்தரத்தின் வீழ்ச்சியை காண்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தினதும் மேற்கு நாடுகளினதும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களின் விளைவாக சில சந்தர்ப்பங்களில் நிலைமை மிகமோசமடைந்துள்ளது. முதலாளித்துவ கைத்தொழில், மூலதன மையமான வட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் அரசாங்கங்களினது முன்னைய சமூகநலன்களை பாதுகாக்கும் திட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் தொழிலாளர்கள் தமது வாழ்க்கைத்தரத்தின் வீழ்ச்சியையும், பொருளாதார உத்தரவாதமற்ற தன்மையையும் எதிர்நோக்கின்றனர்.

முதலாளித்துவத்தின் முதுகெலும்பு எனக்கூறப்படும் அமெரிக்காவில் பழைய அரசு அமைப்பு முறைகளை பாரியளவில் பாதித்துள்ள உலகப்பொருளாதார மாற்றங்களால் சமூக நெருக்கடிகள் எழுந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களும் பல அரசியல் சதிகளுக்கான முயற்சிகளை கொண்டிருந்ததுடன் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் வெளிப்படையாக களவாடப்பட்டது. இது மிக மூர்க்கமான நிதி, கைத்தொழில் இரண்டு பிரிவினராலும் ஆதரவளிக்கப்படுவதுடன், இவர்கள் தமது தொடர்ச்சியான செல்வத்திரட்சியை எந்தவித தயக்கமுமின்றி பாதுகாக்க தீர்மானித்துள்ளனர்.

இது உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய மட்டத்திலான எழுச்சிகளுக்கான பொருளாதார, அரசியல், சமூக நிலைமைகளை தோற்றுவிக்கின்றது.

மே முதலாம் திகதி நீண்ட காலமாகவே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான நாளாகும். எவ்வாறிருந்தபோதும் முன்னொருபோதும் இல்லாதவாறு இன்று இந்த அரசியல் கருத்தினது தேவையும் அவசியமும் எழுந்துள்ளது. உலக முதலாளித்துவ பொருளாதாரத்தினது உலக ஒன்றிணைப்பானது சர்வதேச வங்கிகளையும் நிறுவனங்களையும் தேசிய எல்லைகளை கடந்து தமது முதலாளிகளுக்கு யார் கூடுதலாக இலாபத்தை உற்பத்தி செய்வது என்பதை தீர்மானிக்க அந்நாடுகளின் தொழிலாளர்களை எதிர் எதிரே நிறுத்தியுள்ளது.

இந்த வங்கிகளும் நிறுவனங்களும் தமது வல்லமையை பயன்படுத்தி நிறுவனங்களை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு நகர்த்தவும், உழைப்பை சுரண்டுவதற்கான அதிஉயர்ந்த நிலைமையை அடையும்போது, அவர்களது அரசியல் கைக்கூலிகள் தொழிலாளர்களை தேசிய, இனவாத அடித்தளத்தில் பிரிக்கமுயல்வதுடன் அத்தொழிலாளர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான உண்மையான மூலத்தை திசைதிருப்ப முயல்கின்றனர்.

கடல்கடந்த நிறுவனங்களின் மூலோபாயத்தை வெற்றிகரமாக தோற்கடிப்பது தொழிலாள வர்க்கம் உலகரீதியாக நடவடிக்கை எடுப்பதில்தான் தங்கியுள்ளது. ருமேனியாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும், ஜப்பானிலும், லத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் சமூக சமத்துவத்திற்கும், தமது வேலைகளை பாதுகாக்கவும், வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்கவும் உலகம் பூராகவும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

உலகத் தொழிலாள வர்க்கம் சர்வதேசியவாத கொடியின் கீழ் உலக ரீதியான மூலதனத்திற்கு எதிராக ஒன்றிணையவேண்டும். இதுதான் ருமேனிய தொழிலாளர்களுக்கும் ஏனைய நாடுகளின் தொழிலாளர்களுக்கும் முன்னேறுவதற்காக உள்ள ஒரேயொரு பாதையாகும்.