World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lankan plantation unions shut down wage campaign to forestall government crisis

இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசாங்க நெருக்கடியை முடக்கி வைக்க சம்பளப் பிரச்சார இயக்கத்தை அடித்து மூடியுள்ளன

By W.A. Sunil and Nanda Wickremasinghe
28 March 2001

Use this version to print

இலங்கையின் தேயிலை இறப்பர் தோட்டங்களைச் சேர்ந்த பெரும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மார்ச் 15ம் திகதி மூன்று வார கால சத்தியாக்கிரகம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கையை முடிவுக்குக் கொணர முழு சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த எதிர்ப்பு நடவடிக்கை தோட்ட முதலாளிகளுடனும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துடனுமான ஒரு மாபெரும் மோதலின் ஒரு தொடர்ச்சியாக மாற அச்சுறுத்திக் கொண்டு இருந்தது. இந்த உடன்படிக்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அற்ப பிச்சையாக விளங்கிய அதே சமயம் அது ஒரு கடும் அரசியல் நெருக்கடியாக வளர்ச்சி கண்டு வந்த ஆபத்தில் இருந்து அரசாங்கம் தலைதப்ப உதவியது.

விலைவாசி உயர்வுகளின் நெருக்குவாரத்தின் கீழ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) பெப்பிரவரி 19ம் திகதி 1 மாத சம்பள அதிகரிப்புக்கான -400 ரூபாய்- சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தது. இலங்கையில் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக தொழிற்பட்டு வருகின்றன: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் பங்காளியாக இருப்பதோடு அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவை உறுப்பினருமாவார். சம்பள உயர்வுக் கோரிக்கையை முன் வைக்கையில் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் (JPTUC) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) தொண்டமானுடன் சேர்ந்து கொண்டதோடு, அவர் தொழிலாளர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவண்ணம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்களின் உள்நோக்கத்துக்கு மாறான விதத்தில் இந்தச் சத்தியாக்கிரக இயக்கம் மத்திய மலைநாட்டின் சகல தோட்டத் துறைகளையும் வேகமாகப் பற்றிப் பிடித்தது. பெப்பிரவரி 20ம் திகதியில் இருந்து அட்டன், பதுளை, பண்டாரவளை, வெலிமடை, அட்டம்பிட்டி, உடபுஸ்சல்லாவை, எட்டியாந்தொட்டை, நானுஒயா முதலிய தோட்டப் பகுதிகளில் மெதுவாக வேலை செய்யும் இயக்கம் ஆரம்பமானதோடு தொழிலாளர்கள் கறுப்புப் பட்டியும் அணிந்து கொண்டனர். பெப்பிரவரி 25ல் மேலும் 10,000 அட்டன் தோட்டப் பகுதி தொழிலாளர்கள் இந்த சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொண்டனர். பெப்பிரவரி 28ம் திகதி அட்டன், பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். மார்ச் 2ம் திகதி அட்டன் நகரின் சகல கடைகளும் கதவடைப்புச் செய்யப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அன்றைய தினம் சுமார் 100,000 தொழிலாளர்கள், காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தில் பங்குகொண்டதாக மதிப்பிடப்பட்டது.

எதிர்ப்பு இயக்கத்துக்குக் கிடைத்து வந்த ஆதரவின் வளர்ச்சி, அரசாங்கத்தையும் பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு மார்க்கத்தை தேடி வந்த தொழிற்சங்கத் தலைவர்களையும் திகிலடையச் செய்தது. அரசாங்கம் ஜனவரியில் ரூபாவை மிதக்கவிட்டதனால் அடிப்படைப் பண்டங்களின் விலைவாசிகள் பெருமளவுக்கு அதிகரித்ததால் முழுத் தொழிலாளர் வர்க்கமும் பாதிக்கப்பட்டதோடு, தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கை ஏனைய சம்பள உயர்வு கோரிக்கைகளையும் தூண்டி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியது. தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் இந்தப் பீதியை வெளிப்படுத்தும் விதத்தில் இ.தொ.கா. தலைவர் ஆர்.யோகராஜன் மார்ச் 6ம் திகதி 'வீக்என்ட் எக்ஸ்பிரசுக்கு' வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்: "அவர்கள் (தோட்டத் தொழிலாளர்கள்) நியாயமான முறையில் நடாத்தப்படாது போனால் அவர்கள் காத்துக் கிடக்கும் தீவிரவாதிகளின் கரங்களுக்குள் தள்ளப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டார்.

ஆனால் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் (EFC) இது 150 கோடி ரூபாக்கள் செலவை உண்டுபண்ணும் எனவும் இலாபத்தை நேரடியாகப் பாதிக்கும் எனவும் கூறி தோட்டத் தொழிலாளர்களின் 400 ரூபா சம்பள உயர்வுக்கு இணங்க அடியோடு மறுத்துவிட்டனர். இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மார்ச் 13ம் திகதி நடைபெற இருந்த பேச்சுவார்த்தைகளை இரத்துச் செய்ததோடு அதன் செயலாளர் கொதபாயா தசநாயக்க போராட்டக்காரர் மீது பாய்ந்து விழுமாறு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை கேட்டுக்கொண்டார். அவர் கூறியதாவது: "அவர்கள் எமது தோட்ட அதிகாரிகளைத் தாக்குகிறார்கள். உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்கின்றார்கள். சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் 'டெயிலி மிரர்' பத்திரிகை இதை சிம்பாபே பாணியிலான காட்சியாக" எச்சரித்தது. அங்கும் தொழிலாளர்கள் நிர்வாக அலுவலகங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இப்பத்திரிகை ஒரு பெயர் குறிப்பிடாத அதிகாரி பின்வருமாறு கூறியதாகத் தெரிவித்திருந்தது: "இராணுவம் இங்கு இறக்கப்படாது போனால் எதுவும் சரிவராது."

முதலாளிகள், அரசாங்கம் மார்ச் 8ம் திகதிய வரவு செலவுத் திட்டப் பேச்சில் குறிப்பிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இந்த உரை "குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்காவது சலுகைகளை கோருவதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" எனக் கோரியது. இந்த வரவு செலவுத் திட்ட வேண்டுகோளானது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 400 மில்லியன் டாலர்களை கடனாகப் பெறுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதன் ஒரு பாகமாக விளங்கியது. நாட்டின் சென்மதி நிலுவைப் பற்றாக்குறை அதிகரிப்பை ஈடு செய்யவும் வெளிநாட்டு முதலீட்டுக்கு கொடி காட்டவும் இது செய்யப்பட்டது.

தோட்டத் தொழிலாளர் பிரச்சாரத்துக்கு முகம் கொடுத்த நிலையில் குமாரதுங்க இதைத் தள்ளி வைக்க முயன்றார். அவர் முதலில் ஒரு கமிட்டியை நியமனம் செய்ததோடு, தனது அமைச்சர்கள் விஷயத்தை பரிசீலிப்பார்கள் எனவும் தெரிவித்தார். கடந்த செப்டம்பரில் சுமார் இரண்டரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இதே ரூபா 400 அலவன்சு கோரி வேலை நிறுத்தம் செய்தனர். அச்சமயத்தில் அரசாங்கம் தொழிற்சங்கங்களில் நம்பிக்கை கொண்டு இருந்தது. அன்று உயர்நீதிமன்றம் முதலாளிமார்களின் ஒரு மனுவுக்கு இடமளித்து, வேலைநிறுத்தத்துக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பித்ததால் தொழிற்சங்கத் தலைவர்கள் வேலை நிறுத்தத்தை இரத்துச் செய்தனர். அத்தருணத்தில் பொதுஜன முன்னணி அரசாங்கம் இவ்விடயத்தை ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிட்டியை நிறுவுவதாக வாக்குறுதி அளித்தது.

அரசாங்கப் பயமுறுத்தல்

ஆனால் இந்த இறுதி தகராறில் தொண்டமான் இ.தொ.கா. அங்கத்தவர்களின் சாத்தியமான கிளர்ச்சிக்கு முகம் கொடுக்க நேரிட்டது. என்னதான் சிறியதாக இருந்தாலும் அவர் முதலாளிகளிடமிருந்து ஒரு சலுகையைப் பெற்றுக் கொள்ள அவஸ்தைப்பட்டார். அவர் பல வெறும் வாய்வீச்சுக்களிலும் ஈடுபட்டார். மார்ச் 15ம் திகதிக்கு முன்னர் ரூபா. 400க்கான தொழிற்சங்க கோரிக்கை நிறைவேறாது போனால் தாம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் பயமுறுத்தினார். தொண்டமான் ஒரு அமைச்சர் மட்டுமல்லாது, ஒரு பெரும் செல்வந்த தோட்டச் சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் ஒரு சாத்தியத்துக்கும் தனது பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கும் முகம் கொடுக்க, தொழிலாளர் எதிர்ப்புக்களை ஒரு முடிவுக்குக் கொணர தோட்ட முதலாளிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது. இதைச் செய்கையில் பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது கூட்டரசாங்கப் பங்காளிகளான லங்கா சமசமாஜக் கட்சியிடம் இருந்தும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தும் பொதுஜன முன்னணி ஆதரவாளர்களும் தோட்ட தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் ஒரு அங்கத்தவரான தோட்ட பொது ஊழியர் சங்கத்திடம் இருந்தும் ஒத்துழைப்புக் கிடைக்கும் என அது எதிர்பார்த்தது. ஏனைய தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (யூ.என்.பி) ஆதரவு சங்கம் போன்ற வலதுசாரி சங்கங்களும் இதை எதிர்க்கவில்லை.

இந்தத் தீர்வு ஒரு சிக்கல் மிக்கதாக விளங்கியது. அப்படிப் பெரிதாக ஒன்றையும் தொழிலாளர்களுக்கு வழங்காமலே தொழிலாளர்கள் நன்மையடைந்துவிட்டதாக காட்டும் விதத்தில் தீர்வு வரையப்பட்டது. மேலும் இந்த உடன்படிக்கை அடுத்துவரும் 15 மாத காலத்துக்கு செல்லுபடியானதோடு வேகமாக அதிகரித்துவரும் விலைகள் சம்பளத்தை மேலும் பாதிக்கச் செய்யும்.

கடந்த ஜூனில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஒரு தோட்டத் தொழிலாளி ஒரு அடிப்படை நாட் சம்பளமாக 101 ரூபாக்களைப் பெற்றார். 6 ரூபா விலைப் பங்கு அலவன்சாக வழங்கப்பட்டதும். ஒரு தொழிலாளி வழங்கப்பட்ட வேலை நாளில் 90 சதவீதமான நாட்களுக்கு வேலைக்குச் சென்றால் ரூபா 14 வரவு அலவன்சாக வழங்கப்படுகின்றது. நடைமுறையில் 80 சதவீதமான தொழிலாளர்கள் இந்த வரவுத் தொகையை பூர்த்தி செய்ய முடியாதவர்களாக இருப்பதால் ரூபா.107 மட்டுமே பெற்றனர். இறுதியாகச் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் விலைப் பங்கு அலவன்சு ரூபா. 15 ஆக அதிகரிக்கப்பட்டு, வரவு அலவன்சு ரூபா.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சம்பளத்தில் தேறிய மாற்றம் எதுவும் கிடையாது. அத்தோடு வரவு தேவை, வேலை வழங்கப்பட்ட நாட்களின் 75 சதவீதமாக வெட்டப்பட்டது. வரவு அலவன்சு கிடைக்காத தொழிலாளர்கள் மொத்தத்தில் ஒரு நாளைக்கு மேலதிகமாக 9 ரூபா மட்டுமே பெறுவர். தேயிலை விலை வீழ்ச்சி காணுமிடத்து தோட்ட முதலாளிகள் விலைப் பங்கு அலவன்சை வெட்டுமிடத்து இதுவும் கூட வீழ்ச்சியடையும்.

இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருட உடன்படிக்கையின் கீழ் தினசரி சம்பள வீதம் 14 ரூபா வரவு அலவன்சுடன் சேர்த்து, 98 ரூபாவாக விளங்கியது. உலக இறப்பர் விலைகள் குறைந்து காணப்பட்டதால் விலைப் பங்கு அலவன்சு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாகச் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின் கீழ், ஏற்பட்டுள்ள ஒரே மாற்றம் வரவு தேவை வேலை வழங்கப்பட்ட நாட்களின் 70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது மட்டுமேயாகும். பல தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு பெறமாட்டார்கள்.

தொழிற் சங்கத் தலைவர்கள் தொடர்பாக தொழிலாளர்களிடையே கணிசமான அளவு வெறுப்பு இருந்து கொண்டுள்ளது. மார்ஜின் என்ற 41 வயது தலவாக்கலை தொழிலாளி உலக சோசலிச வலத் தளத்திடம் (WSWS) பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இ.தொ.கா. சத்தியாக்கிரக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தொழிலாளர்களான நாம் ஒன்றுபட்டு ஒரு வேறு வடிவிலான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முயன்றோம். நான் முன்னணிக்கு வந்தபோது பழைய தொழிற்சங்கத் தலைவர்கள் சகலரும் உண்மையில் எமது எதிரிகளாகத் தொழிற்பட்டனர். அவர்கள் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர்."

கடந்த ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் பெயரளவிலான சம்பளம் 4.8 சதவீதத்தினால் அதிகரித்தது. ஆனால் 8.7 சதவீத பணவீக்க அதிகரிப்பைக் கணக்கில் எடுக்கும் போது நிஜ அர்த்தத்தில் இது கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இச்சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட 400 ரூபா சம்பள அலவன்சு விலைவாசி அதிகரிப்பை ஈடு செய்திருக்க முடியாது. 2000ம் ஆண்டு பெப்பிரவரியில் 2437 புள்ளிகளாக விளங்கிய வாழ்க்கைச் செலவுப் புள்ளி 2001ம் ஆண்டு பெப்பிரவரியில் 2842 ஆக அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் மெய் ஊதியம் 18 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. 1993ல் 136.6 புள்ளிகளில் இருந்து 2001 பெப்பிரவரியில் 111.7 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

300,000 தொழிலாளர்களின் சம்பளத்தை நம்பியுள்ள 1.2 மில்லியன் பேர் உள்ளனர். ஒவ்வொரு குடும்ப அங்கத்தவருக்கும் உணவு, உடை மற்றும் அவசியங்களை வழங்க உள்ள சராசரி மாதம் வருமானம் 600 ரூபா அல்லது 6 அமெரிக்க டாலர்கள். கடந்த ஜனவரியிலும் பெப்பிரவரியிலும் சகல அத்தியாவசியப் பண்டங்களதும் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளன. ஒரு கிலோ சிவப்பு வெங்காயம் ரூபா.35ல் இருந்து ரூபா 65 ஆக அதிகரித்த அதே வேளையில் ஒரு கிலோ அரிசி ரூபா 25ல் இருந்து ரூபா.35 ஆக உயர்ந்தது. தோட்டத் தொழிலாளர்கள் உண்ணத் தள்ளப்பட்டுள்ள தரக் குறைவான ஒரு கிலோ கருவாட்டின் விலை 150 ரூபாவுக்கும் மேலாக அதிகரித்தது. இது தொழிலாளியின் ஒரு நாள் சம்பளத்தை விட அதிகம். இதன் விளைவாக பெரும்பாலான தொழிலாளர்கள் தமது குடும்பங்களுக்கு உணவூட்ட சங்கடப்பட நேரிட்டுள்ளது.

19ம் 20ம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் தென் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் சந்ததியினரான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் மோசமாக ஒடுக்கப்பட்ட தட்டினர் ஆவர். சம்பளம் வீழ்ச்சி கண்டு போனது மட்டுமல்லாமல் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கீழ் தோட்டத் தனியார்மயம் 1995ல் பூர்த்தி செய்யப்பட்டது. தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஒரு பேச்சாளர் சமீபத்திய ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளில் 10,000 தோட்டத் தொழில்கள் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இளைஞர்களிடையே பெரும் அளவில் வேலையின்மை இருந்து கொண்டுள்ளது. இத்துடன் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளின் சீர்குலைவும் சேர்ந்து கொண்டுள்ளது.