World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

The killing fields of Afghanistan

ஆப்கானிஸ்தானின் கொலைக்களங்கள்

By Richard Tyler
12 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

உலகத்தில் மிகவும் செல்வந்தமும், பலம்வாய்ந்த இராணுவத்தையும் கொண்ட நாட்டினால் நடாத்தப்படும் யுத்தத்தின் முதல் மாதத்தில், அமெரிக்கா உலகத்தின் மிகவும் ஏழ்மையான நாட்டின் மீது பயங்கரமான ஆயுதங்களாலான அழிவை செய்கின்றது. ஆகாயத்தை அடிப்படையாக கொண்ட நவீன ஆயுதங்களின் முழுப்படைக்கலங்களும் கடந்த 20 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தால் ஏற்கனவே சீரழிக்கப்பட்ட நாட்டின் மீது பிரயோகிக்கப்படுகின்றன.

அமெரிக்காவினது குண்டுத்தாக்குதலானது எரிபொருள்-வாயு வெடிபொருட்கள் [FAE], கிளஸ்டர் குண்டுகள், பதுங்குகுழிகளை அழிக்கும் குண்டுகள், தரைமட்டமாக்கும் குண்டுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் வானம் உலகத்தின் பாரிய குண்டுவீச்சு விமானமும், கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் வியட்னாம் மீதும், இந்தோ-சீனாவின் ஏனைய பகுதிகளின் மீதும் பல மோசமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட B-52 இன் புகையினால் நிரம்பியிருந்தது.

ஐக்கிய நாடுகளின் படி, Eshaq Zulaiman Zai கிராமத்தில் B-52 இனால் வீசப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தொட்ட ஒருவர் இறந்துள்ளதுடன், இன்னொருவர் காயமடைந்துள்ளார். Qala Shaker கிராமத்திற்கு அண்மையில் விழுந்த குண்டு ஒன்றினைத்தொட்ட இரண்டு குழந்தைகள் மோசமாக காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானிய பத்திரிகையான The News அக்டோபர் 26ம் திகதி தனது பத்திரிகையில் ''ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகளை பாவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளதாகவும், Herat கிராமத்தில் வீதிகளிலும் வயல்களிலும் கொட்டிக்கிடந்த டசின் கணக்கான வெடிக்காத செம்மஞ்சள் நிறமான சிறுகுண்டுகளினால் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது''. நவம்பர் 3ம் திகதி வெளிவந்த கனேடிய பத்திரிகையான Toronto Globe & Mail இல் Chowkar-Karez கிராமத்தின் மீதான தாக்குதல் குறித்து ''அக்டோபர் 22ம் திகதி அமெரிக்கா தாக்குதலில் முழுக் கிராமத்தவருமான அண்ணளவாக 90-100 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் குறிப்பிட்டதாக'' எழுதியிருந்தது. அக்கட்டுரை ''அக்கிராமத்தவர் பயங்கரவாதிகளையும் அல்-காட்டாவினையும் ஆதரித்ததாகவும், அத்தலைவிதிக்கு அவர்கள் உரித்தானவர்கள் என பென்டகன் குறிப்பிட்டதாகவும் எழுதியிருந்தது.

பாகிஸ்தானின் Dawn பத்திரிகையானது கந்தகார் நகரத்தின் மீது அக்டோபர்் 25ம் திகதி நடாத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலில் 40பேர் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் 19 பேர் ஒரு குடுப்பத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுருந்தது. கந்தகாருக்கு 50 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள Daman Borai கிராமத்தில் 35பேர் காயமடைந்ததாகவும் தனது குடும்பத்தில் அனைவரையும் இழந்த காயமடைந்த 70 வயது பெண்ணான Siddiqua Bibi தனது பிள்ளைகளை எங்கே, அவர்களை கொண்டுவாருங்கள் என புலம்பியதாக குறிப்பிட்டது. இரண்டு மகன்மாரையும், மருமகளையும் பிள்ளைகளையும் கொண்ட குடும்பத்தில் இவர் மட்டுமே தப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரான முஷாராப் லண்டனுக்கும், வாஷிங்டனுக்குமான தனது விஜயத்தின் போது முஸ்லீம்கள் காலையிலிருந்து அந்திவரை விரதமிருக்கும் புனித மாதமான றம்ழான் இன் போது தாக்குதலை நிறுத்தகோரினார். லண்டனில் நவம்பர் 8ம் திகதி பிரதமர் ரொனி பிளேயரிடம் ''உலகம் முழுவதும் இவ்யுத்தமானது வறுமையான, மோசமான நிலையிலுள்ள, அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிராக செய்யப்படும் யுத்தமென உணரப்படுகின்றது. றம்ழான் மாதத்தில் இதனை தொடருவது பாதகமான விளைவுகளை உருவாக்கும்'' என தெரிவித்தார்.

முஷாராப் இன் கோரிக்கைகள், அப்பாவி ஆப்கானிஸ்தானியர்கள் மீதான கவனத்தினால் அல்லாது தனது இராணுவ ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டதாகும். அமெரிக்க தலைமையிலான யுத்தமானது பாகிஸ்தானில் மிகவும் மக்கள் ஆதரவற்றிருப்பதுடன், தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களையும் உருவாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை தென்கிழக்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய குழுக்களும், கட்சிகளும் அழைப்புவிட்ட வேலைநிறுத்த, மறியல் போராட்டத்தின் போது பொலிசார் சுட்டதில் 3 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சை நிறுத்துமாறு முஷராப்பால் விடப்பட்ட கோரிக்கை, அவர் அவரது 6நாள் இராஜாங்க விஜயத்தின்போது துருக்கியின் இஸ்தான்புல்லில் தங்கியிருந்தபோதும் விடப்பட்டிருந்தது.

ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. குண்டுவீச்சில் அமெரிக்க விமானங்கள் ஈடுபட்டிருந்தபோதும், பிரித்தானிய படைகள் திட்டரீதியானதும், மீளநிரப்பும் உதவிகளை வழங்கி வருகின்றபோதும் பிளேயர் ''இலக்கை அடையும் வரை தாக்குதல்கள் தொடரும்'' என தெரிவித்தார்.

ஒரு நாளுக்கு முன்பாக பொதுவான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், பிளேயர் கிளஸ்டர் குண்டுகள் பாவிப்பதை பாதுக்காத்ததுடன், அவை சட்டபூர்வமானதும், சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசியமானதாகும்'' என குறிப்பிட்டார். பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான Geoff Hoon ''இவ் ஆயுதங்கள் இராணுவ இலக்குகளை நோக்கியே பிரயோகிக்கப்படுவதாகவும், சாதாரண மக்கள் மீது பாவிக்கப்படவில்லை'' எனவும் தெரிவித்தார்.

நவம்பர் 6ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான டொனால்ட் றும்ஸ்வெல்ட் பென்டகனுக்கு வழங்கிய அறிக்கையில் ''அமெரிக்க யுத்த விமானங்கள் நாளாந்தம் 120 தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், ஐயுறவுக்குடமில்லாது ஆயிரக்கணக்கானவர்கள் இல்லாவிடினும் நூற்றுக்கணக்கான தலிபான் படையினரும் மக்களும் கொல்லப்பட்டிருக்கலாம்'' என தெரிவித்தார்.

மிகவும் அண்மையில் ''பாரிய அழிவை உருவாக்கும்'' ஆயுதமான Daisy Cutter குண்டுகள் என அழைக்கப்படும் குண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாவிக்கப்படுகின்றது. 15,000 இறாத்தல் எடையுள்ள BLU-82 குண்டானது உலகத்தில் பாரிய அணுவாயுதமற்ற குண்டாகும். இது ஒரு கார் (Car) இனை விட சற்று சிறியளவானதுடன், அதைவிடப்பாரமானதாகும். இது 600 யார் விட்டமுள்ள பிரதேசத்திலுள்ள சகல உயிரனங்களையும் அழிக்கும் தன்மையுடையது.

அது உருவாக்கும் குழியின் பெயரைக்கொண்டு அழைக்கப்படும் Daisy Cutter குண்டுகள் வாயு-எரிபொருள் நிரப்பப்பட்டதுடன், அது வெடிக்கும்போது பாரியளவிலான தூசியினை வானத்தில் உருவாக்கும். அது நிலத்தை தாக்குமுன்னர் இக்குண்டானது மிகவும் வெடிக்கும் தன்மைகொண்ட அமோனியம் நைத்திரேற்றையும், அலுமீனியத் தூசியினையும், பொலிஸ்ரரேன் கலவையை வானத்தில் வெளிவிடும். அது வெடிக்கும்போது ஒரு பாரிய தீப்பிளம்பை உருவாக்குவதுடன் அணுக்குண்டுகள் உருவாக்கும் வெடிப்பைவிட பலமடங்கு அதிகமான வெடிப்பை உருவாக்கும்.

MC-130 விமானத்திலிருந்து போடப்படும் இக்குண்டு 5 உதைபந்தாட்ட மைதான அளவிலான தீப்பிளம்பை உருவாக்குவதுடன், அப்பகுதியிலுள்ள ஒட்சிசன் அனைத்தையும் பாவிப்பதுடன், ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்குவதுடன், அப்பிரதேசத்திலுள்ள சகல உயிர்களினதும் உள் உறுப்புக்களை அழிக்கும் ஒரு வெளிஅழுத்தத்தை உருவாக்கும் .

''நீங்கள் எதிர்பார்ப்பது போல் அது ஒரு வெடிப்பு படலத்தை உருவாக்குவதுடன், அதன் நோக்கம் மக்களை கொல்வது'' என அமெரிக்க கட்டளையிடும் இணைத் தலைமையகத்தின் உதவித் தலைவரான Peter Pace தெரிவித்தார்.

மனித உரிமை அமைப்புக்கள் இவ்வாயு-எரிபொருள் குண்டினை பாவிப்பது குற்றச்செயலானது எனவும், மக்கள் நெருக்கமான பிரதேசத்தில் இதனை பாவிப்பது யுத்தத்தின் சர்வதேச சட்டங்களை மீறுவதாகும் என தெரிவித்துள்ளன.

பயங்கரவாத நிபுணரான Mike Yardley ''இது ஒரு மோசமான குண்டு எனவும், அது தனது அண்மையிலுள்ள அனைத்தையும் அழிக்கும் எனவும், மற்றும் அண்மையிலுள்ள அனைவரையும் உளவியல் ரீதியான நோயாளராக்கிவிடும்'' என கூறினார்.

அவர் மேலும் ''தலிபானின் வலைப்பின்னலையும், அவர்களது பாதுகாப்பு குகைகளையும் அடைவது கடினமானதும், அவற்றை அழிப்பதற்கு Daisy Cutter குண்டுகள் பாவிக்கப்படும். நாளாந்தம் அல்-ஜஸீரா தொலைக்காட்சியில் எரிந்த குழந்தைகளின் படங்கள் காட்டப்படுகையில் இது எமது நலன்களின் பேரில் செய்யப்படுவது என கூறப்படுவது குறித்து ஆச்சரியப்படவே முடியும், ஏனெனில் இக்குண்டு வெடிப்புகளில் அகப்படுவது அப்பாவி மக்களே'' என குறிப்பிட்டார்.

அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பினது 1993 இன் ஆய்வு ஒன்றில் ''உயிருள்ள இலக்குகள் மீதான வெடித்து கொல்லும் தொழில்நுட்பமானது தனியானதும், நல்லதல்லாததுமாகும். கொல்லுவது என்னவெனில் அழுத்த அலைகளாகும், மிக முக்கியமாக அதனை தொடர்ந்து உருவாகும் வெற்றிடமானது நுரையீரல்களை வெடிக்வைப்பதாகும். வாயுவெடிக்காது எரியுமானால் தாக்கப்படுபவர் எரிகாயங்களுக்கு உள்ளாவதுடன், எரியும் எரிபொருளையும் உள்ளிளுக்கவேண்டியிருக்கும். [Defence Intelligence Agency, திuமீறீ-கிவீக்ஷீ ணீஸீபீ ணிஸீலீணீஸீநீமீபீ-ஙிறீணீst ணிஜ்ஜீறீஷீsவீஸ்மீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்திஷீக்ஷீமீவீரீஸீ, April 1993. அமெரிக்காவின் தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் மனித உரிமை பாதுகாப்பு அமைப்பால் பெறப்பட்டது.]

மத்திய புலனாய்வு அமைப்பினது அறிக்கை ''மூடப்பட்ட பிரதேசத்தில் ஏற்படும் வாயு-எரிபொருள் வெடிப்பானது மிகவும் பாரதூரமானது'' என குறிப்பிட்டது. வெடிக்கும் இடத்திற்கு அண்மையில் உள்ளவர்கள் அடையாளமில்லாது போவர். அதனுள் அகப்படுபவர்கள் பல மோசமான உட்காயங்களுக்கு உள்ளாவதுடன், அக் காயங்கள் கண்ணுக்கு தெரியாதிருக்கும். உதாரணமாக காதுச்சவ்வு வெடிப்பு, காதின் உள் அவயவங்கள் நொருக்கப்படல். உள் அவயவங்களும் நுரையீரலும் வெடித்தல், கண் தெரியாது போவதற்கான சாத்தியங்களும் உள்ளன'' என குறிப்பிட்டுள்ளது.

Fort Leavenworth, Kansas இல் உள்ள வெளிநாட்டு இராணுவ ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை அக் குண்டுகள் ''வெளிப்பாடான கதிர்வீச்சு இல்லாத தந்திரோபாய அணுக்குண்டு'' என குறிப்பிட்டதன் மூலம் அதன் விளைவுகள் தெரிகின்றன.

தரைமட்டமாக்கும் குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தான் கரைப்பகுதியிலிருந்து அல்லது இந்து சமுத்திரத்திலிருக்கும் பிரித்தானிய பகுதியான தியாகோ கார்சியாவிலிருந்து இயங்கும் அமெரிக்க விமானங்கள் தரைமட்டமாக்கும் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க கட்டளையிடும் பணியகத்தின் இணைத்தலைவரான Rear Admiral John Stufflebeem பத்திரிகையாளர்களுக்கு B-52 விமானங்கள் ''நாடு முழுவதும், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் மீதும் தரை மட்டமாக்கும் குண்டுத்தாக்குதலை நடாத்துவதாக '' தெரிவித்தார்.

பத்திரிகையாளருக்கான அறிக்கையில் றும்ஸ்வெல்டும், விமானப்படை தளபதியும் அமெரிக்க கட்டளையிடும் பணியகத்தின் இணைத்தலைவருமான Richard Myers உம் செப்டம்பர் 11ம் திகதிக்கு பின்னர் இலக்கின் மீது டசின் கணக்கான சிறுகுண்டுகளை பொழியும் கொலைகார கிளஸ்டர் குண்டுகளை பாவிப்பதற்கு அமெரிக்காவிற்கு சகல உரிமைகளும் உண்டு என தெரிவித்தனர். அவர்கள் மேலும் ''நாங்கள் அல் காட்டாவின் முன்நிலைகள் மீதும், தலிபானின் மீதும் அவர்களை கொல்வதற்கு அவற்றை மிகவும் வெளிப்படையாகவே பாவிப்பதாக றும்ஸ்வெல்ட் தெரிவித்தார்.

CBU-87/B "இணைந்த தாக்கம் மிக்க ஆயுதங்கள்'' அமெரிக்காவால் நிரந்தரமாக வான்தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் கிளஸ்டர் குண்டாகும். அது 430 கிலோ எடையானதும், 202 BLU-97/B சிறுகுண்டுகளையும் கொண்டுள்ளது. 40,000 அடி உயரத்திலிருந்தும் இக்குண்டு 9மைல் தூரத்திலிருந்து போடப்பட கூடிய இக்குண்டு 8 உதைபந்தாட்ட மைதான அளவுடைய பிரதேசத்தை தாக்ககூடியது. ஒவ்வோரு தனிக்குண்டுகளும் வெடிக்கும் தன்மையுடையதுடன், அது 300 கூர்மையான பகுதிகளை உருவாக்க கூடியதுடன், 17 CM ஆழமாக துளைக்ககூடியது. அதனது வெடிக்குப் பரப்பு 76 மீற்றர் விட்டமுடையது.

இவற்றில் கிட்டத்தட்ட 5% ஆனவை வெடிக்காது சிறிய செம்மஞ்சள் நிறமான தகர டப்பாக்களை போன்று தரையில் பரவிக்கிடப்பதுடன் சிறுவர்களால் அநேகமாக பொறுக்கப்படுகின்றன, அல்லது அதே நிறமான உணவுப்பொதிகளாக அவர்களால் தவறுதலாக கருதப்படுகின்றது.

''கிளஸ்டர் குண்டுகள் துர் அதிஸ்டவசமாக உணவுப்பொதிகளின் நிறத்திலிருப்பதாகவும், ஆப்கானிஸ்தானின் மேலாக அவர்களின் மொழியிலான துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டு அவற்றிற்கும், உலர் உணவுப்பொதிகளுக்கும் இடையிலான வித்தியாசம் குறிப்பிடப்பட்டுள்ளதாக'' General Myers தெரிவித்தார்.

''அவை கிளஸ்டர் குண்டுகளை போல் மஞ்சள் நிறத்திலிருப்பது அவை தரையில் கிடக்கும் போது மக்கள் கண்டுகொள்ளவசதியாக இருக்கும் என்பதற்காகவே, ஆனால் துர் அதிஸ்டவசமாக மக்கள் மஞ்சள் நிறத்தை கண்டதும் அவற்றை நோக்கி ஒடுகின்றனர் எனவும், உணவுப்பொதிகளின் நிறம் நீலநிறமாக மாற்றப்படவுள்ளதாகவும் ஆனால் அதற்கு ''சிறிது காலமெடுக்கும்'' எனவும் General Myers தெரிவித்தார்.

வாஷிங்டனின் ஆயுதங்களில் 5000 இறாத்தல் எடையுள்ள GBU-28 "Deep Throat" எனப்படும் பதுங்கு குழிகளை வெடிக்கவைக்கும் குண்டுகளும் அடங்கும். இது குகைகளின் உள்ளே வெடிக்கு முன்னர் 20 அடி தூரம் ஊடுருவிச் செல்லக்கூடியதுடன், அதனது "smart" என அழைக்கப்படும் பகுதியானது கற்பாறை, சீமெந்து, தரை, வானத்தை வித்தியாசப்படுத்தக்கூடியது.

2ம் உலக யுத்தத்தின்போது 70% ஆன குண்டுகள் தனி இலக்குகளான, வழமையாக இராணுவ அல்லது முக்கிய கைத்தொழில் வசதிகளின் மீதும், 30% சாதாரண, இராணுவ பகுதிகள் என பிரிப்பதில் அர்த்தமற்றது என கருதப்பட்டபகுதிகளின் மீதும் போடப்பட்டது. வியட்னாமிலும், லாவோசிலும், கம்போடியா மீதும் தரைமட்டமாக்கும் குண்டுகளும், ஒருமுகப்படுத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களும் ஆதிக்கம் செலுத்தியதுடன், 80% ஆனவை தனி இலக்கு பகுதிகள் அல்லாத பகுதிகளின் மீது விழுந்தன. வாஷிங்டன் மீண்டும் ஆப்கானிஸ்தான் மீதும் இதே தந்திரோபாயத்தை B-52 இனை பாவிப்பதன் மூலம் நடைமுறைப்படுத்துகின்றது.

வியட்னாம் யுத்தம் [1961-75] 10 இலட்சம் வியட்னாம் போராளிகளை கொன்றதுடன், அதே மதிப்பீடுகளின் படி CIA இன் Operation Phoenix திட்டத்தின் படி 20,000 பொதுமக்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். கம்போடியா குண்டுவீச்சின்போது [1969-73] 2ம் உலக யுத்தத்தில் ஜப்பானின் மீது போடப்பட்ட குண்டுகளைவிட மூன்று மடங்கு அதிகமான குண்டுகளை அமெரிக்கா போட்டதுடன், ஆயிரக்கணக்கானோரை கொன்றதுடன், இலட்சத்திற்கு அதிகமானோரை அகதிகளாக்கியது.

லத்தீன் அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவின் தலையீடானது நிக்கரகுவாவில் [1982-91] 200.000 பேரை கொன்றதுடன், 1990 பனாமா மீதான தரையீட்டில் 500 பேர் கொல்லப்பட்டனர். The Health Education Trust எனப்படும் அமைப்பானது ஈராக் யுத்தத்திலும் அதை தொடர்ந்தும் 200,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஈராக் மீது அமெரிக்காவால் திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடையானது பல குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாகவுள்ளது. இவ் எண்ணிக்கையுடன் எல்சல்வடோரிலும், கொண்டூராசிலும், குவாதமாலாவிலும், கம்பூச்சியாவிலும், அங்கோலாவிலும், மொசாம்பிக்கிலும், ஈரானிலும், பொஸ்னியாவிலும், கொசவோவிலும், மசடோனியாவிலும் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம்.