World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:தென் அமெரிக்கா

Ominous threats from US against Nicaraguan Sandinistas

நிக்கரகுவா சன்டினிஸ்டாவிற்கு எதிராக அமெரிக்காவிடமிருந்து அச்சுறுத்துகின்ற பயமுறுத்தல்கள்

By Gerardo Nebbia
25 October 2001

Use this version to print

செப்டம்பர் 11 ஐ பின் தொடர்ந்து, மத்திய அமெரிக்க (Central American) நாட்டில் நடைபெறவுள்ள நவம்பர் 4 தேர்தல்களில் சன்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணியின் (FSLN) ஜனாதிபதி வேட்பாளரான டானியல் ஒட்டேகாவினுடைய சாத்தியமான தேர்தல் வெற்றி குறித்து புஷ் நிர்வாகம் நிக்கரகுவா மக்களைப் பயமுறுத்துகின்றது. ஆளும் தாராளவாத அரசியலமைப்பு ஆதரவுக் கட்சியின் (PLC) வேட்பாளரான Enrique Bolanos விட ஒட்டேகா ஒரு சிறிய அளவில் முன்னணியில் இருப்பதாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

நிக்கரகுவா மக்கள் அவர்களது ஜனநாயக உரிமைகளை துணிச்சலாக பயன்படுத்தி சன்டினிஸ்டாவிற்கு வாக்களித்தால், நிக்கரகுவா மக்கள் எந்த அளவுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரங்களில் அச்சுறுத்தப்படுவார்களென வாஷிங்டன் நேரடியாகப் பயமுறுத்துகின்றது. அப்படி மக்கள் செயற்பட்டால், அதனுடைய நோக்கம் இந்தப் பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் இரகசிய மற்றும் நேரடியான இவ்விரு வகையில் இராணுவத் தலையீட்டை செய்வதும் அங்கு அதனுடைய பொம்மை அரசுகளை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான நீண்ட கொள்கைப் பின்பற்றலுக்கு திரும்பும் என்று நிர்வாகமானது சுட்டிக்காட்டுகின்றது.

ஒரு நீண்ட போராட்டத்தின் பின் சர்வாதிகாரி Anastasio Somoza யினை FSLN தூக்கியெறிந்து 1979 இல் அதிகாரத்திற்கு வந்தது. அதனை அடுத்து வந்த 11 வருடங்களில், சன்டினிஸ்டா நிலச் சீர்திருத்தம், கல்வியூட்டும் நடவடிக்கை மற்றும் மற்றய வரையறுக்கப்பட்ட சமூக முன்னேற்றங்களை கியூபா மற்றும் சோவியத் யூனியனுடன் ஐக்கியப்பட்டு ஒரு நெருங்கிய உறவுடன் உருவாக்கியது.

றேகன் நிர்வாகமானது அதிகளவு கால நிதியளிப்பை ஒரு இரகசிய யுத்தத்திற்கு CIA யினால் நிதியளிக்கப்பட்டு ஆள்திரட்டப்பட்ட ஒரு வலதுசாரி கொண்ட்ரா இராணுவத்துடன் செலவளித்தது. இந்த கேடுகெட்ட யுத்தக்காலப் பகுதியில் அமெரிக்கா நிக்கரகுவாவினுடைய துறைமுகத்தை தனது பாதுகாப்பு நோக்கத்திற்குப் பயன்படுத்தியதோடு அதனுடைய பொருளாதாரத் தங்கியிருப்பு வளத்தை அழித்தது. 1990 இல் அமெரிக்காவினுடைய அழுத்தத்தின் பின், ஜனாதிபதி ஒட்டேகே தேர்தல்களை நடாத்த உடன்பட்டார். தேர்தலில் சன்டினிஸ்ட்டாக்கள் வலதுசாரி வேட்பாளரான Violeta Barrios de Chamorro விடம் தோற்றுப்போனது.

சன்டினிஸ்டாவினுடைய வெற்றி பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வரவழைக்குமென்று நிக்கரகுவாவினுடைய அமெரிக்க தூதுவர் Oliver Garza இந்த வருடம்மே 27ம் திகதியில் தெரிவித்திருந்தார். FSLN இன் வெற்றி ஜனநாயகத்தின் அடிப்படைவிதிகளை மீறும் அல்லது வன்முறையாக்கும் விளைவுகளை ஏற்படுத்துமென்று ஜனாதிபதி George W. Bush இன் ஒரு செய்தியை Garza அறிவித்தார். FSLN இன் ஆட்சிக்கால வருடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஒட்டேக்கே திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் இது சன்டினிஸ்ட்டா அரசாங்கத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தகுதியுமாகும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அக்டோபர் 4ந் திகதியில், அரச செயலாளர் Colin Powell நிக்கரகுவா வெளிநாட்டமைச்சர் Francisco Sacasa உடனான ஒரு சந்திப்பில் அமெரிக்காவினுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். 5 நிக்கராகுவன் கடவுச்சீட்டுகள் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதுடன் தொடர்புபட்ட சில நபர்களுடைய வீடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதென்றும் FSLN பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற முடிவையும் Powell அங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் அக்டோபர் 4ந் திகதியில், FSLN னினைப் பற்றியும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அந்தக் கட்சியின் குற்றச்சாட்டுகளையும் வெளிப்படுத்துகையில் "கடுமையான தனி ஒதுக்கீடுகள்" என அமெரிக்க அரசதிணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு அடுத்தநாள், FSLN ன் மூன்று தலைவர்களான Thomas Borge, Lenin Cerna மற்றும் Alvaro Baltonado ஆகியோர் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் இலத்தீன் அமெரிக்கா நாடுகளிலிருந்து பயங்கரவாதிகளை வரவேற்றுக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி அரச திணைக்களம் சார்பாக பேசவல்ல ஒரு பேச்சாளர் Pittsburgh பல்கலைக் கழகத்தில் ஒரு உரையைநிகழ்த்தினார். அக்டோபர் 16 இல், ஐக்கிய அமெரிக்க அரசியல் விவகாரத்திற்கானஅரச செயலாளர் வாஷிங்டனிலுள்ள Inter-American Press Association இல் நடந்த ஒரு கூட்டத்தில் நிக்கரகுவா மக்கள் நடைபெறப் போகின்ற தேர்தல்களில் "புத்திசாலித்தனமாக" வாக்களிக்க வேண்டுமென வற்புறுத்தினார்.

லிபியா, ஈராக், கொலம்பிய புரட்சிகர இராணுவப் படைகள் (கொலம்பிய FARC) மற்றும் பாஸ்க் புரட்சிகர இராணுவம் (ETA) உட்பட பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளில் வரையறுக்கப்பட்ட "மோசக்கார" நாடுகளுடன் நெருங்கிய தொடர்பை FSLN வைத்திருப்பதாக புஷ் நிர்வாகம் குற்றஞ்சாட்டுகின்றது. அத்தோடு அது நவம்பர் தேர்தல்களின் பெறுபேறுகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை ஒட்டேக்கே வெற்றியீட்டினால் "மோசக்கார" நாடுகளின்பட்டியலில் நிக்கரகுவாவினையும் அமெரிக்கா சேர்த்துக்கொள்வதற்கு இட்டுச்செல்லும். தற்போது இந்தப் பட்டியலில் அமெரிக்க கண்ட தேசங்களில் கியூபா மட்டுந்தான் உள்ளது. அப்படி ஒரு விளைவு நடக்கும்பொழுது, நிக்கரகுவா பொருளாதாரத்தடைகளையும், சர்வதேச நிறுவனங்களான உலகவங்கி மற்றும் உலக நாணய நிதியம் என்பவற்றிலிருந்தும் அத்துடன் அமெரிக்காவிடமிருந்தும் தனிமைப்படுதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அக்டோபர் 10ல் வெளியான கட்டுரைக்கு இணங்க நிக்கரகுவா மற்றும் மத்திய அமெரிக்கா மீதான ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை ஓர் அச்சுறுத்தும் திருப்பத்தினை எடுத்துள்ளது. அக்கட்டுரை தெரிவிப்பதாவது, கொன்ட்ரா இராணுவத்தின் ஒரு ஆதரவாளரக இருந்தவரும் மேற்கத்தைய அரைப் பூகோள விவகார உதவி அரச செயலாளருமான Otto Reich வேகமான உறுதிப்படுத்தலுடன் ஆதரவு திரட்டி சட்டப் பகிர்வை கடுமையாக நிறைவேற்றும்படி புஷ் ஐ வேண்டிக்கொண்டிருக்கின்றார். காஸ்ட்ரோ எதிர்ப்பு பயங்கரவாதியும் 73 மக்கள் கொல்லப்பட்ட -அதில் அனேகமானோர் விளையாட்டு வீரர்கள்- கியூபா விமான குண்டு வெடிப்பு ஒன்றிற்கு 1976 இல் திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட Orlando Bosch என்பவருக்கு Reich அமெரிக்க விசா பெற்றுக் கொடுத்தார் என சான்றுகள் நிரூபிக்கின்றன. வெனுசுவெலா சிறையொன்றில் 11 வருடங்களை கழித்தபின்னர், 1988ல் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இடமிருந்து ஒரு முழுப் பொதுமன்னிப்பை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் Bosch நுழைந்தார்.

உண்மையில், FSLN வேட்பாளர் ஒட்டேகேவிற்கும் PLC இன் Bolanos இற்கும் இடையிலான திட்ட தொடர்புகளில் சிலவே வேறுபட்டதாக இருக்கின்றன. தற்போதைய ஆட்சிமுறை ஊழல் தொடர்பாக FSLN இற்கும், அரபு ஆட்சியாளருக்கும் இடையிலான சந்தேகமான தொடர்புகளும் டானியல் ஒட்டேகே இனுடைய பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டுக்களும் பிரச்சார நடவடிக்கையில் முக்கியமான விடயமாக இருக்கின்றன.

இருப்புகளில் 170 மில்லியன் டொலர்கள் இழப்புகளின் பின்னர் நிக்கரகுவாவினுடைய பொருளாதாரம் மிகவும் ஒழுங்கற்று நோய்வாய்ப்பட்டுள்ளது. கடந்த வருடம் இரண்டு மிகப்பெரிய வங்கிகளின் தகர்வே இதற்குக் காரணமாகும். குறித்த நேர வருகை உலக வங்கி உதவித்திட்டத்தில் (356 மில்லியன் டொலர் செப்படம்பரில் வந்தடைந்தது) அரசாங்கம் தங்கியிருக்கின்றது. மேற்கு அரைப் பூகோள நாடுகளில் நிக்கரகுவாவினைவிட ஹெயிட்டி நாடுதான் மிகவும் தாழ்ந்த தனிநபர் தலா வருமானத்தை கொண்டதாகும்.

உலகக் கோப்பி விலை வீழ்ச்சியின் காரணத்தினால் ஏற்பட்ட நிதி பெருங்குழப்பம் கோப்பி பயிரிடும் நாடுகளின் மத்தியில் பஞ்சத்தில் இருக்கின்றது. இந்த நிலைமையின்கீழ் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் எதிர்கால அரசின் கொள்கைகளை வகுக்கக் கட்டளையிடப் போகின்றன. சன்டினிஸ்டாவிற்கு நவீன பிரசித்தி (populist) அளவீடுகள் கூட கேள்விகுறியாகியுள்ளதுடன் ஒட்டேகே நிர்வாகம் எந்தவித சந்தேகத்துக்கும் இன்றி சர்வதேச நிதிமூலதனத்தின் மூலமாக நிக்கரகுவா மீது கொள்கைத் திணிப்பை பின்பற்றப்போகின்றது.

பொதுச்சேவைகளை தனியார் மயமாக்கல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கான PLC இனுடைய நவீன தாராளவாதக் கொள்கைகளை FSLN தொடர்ந்து பின்பற்றும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது. ஒட்டேகே யினுடைய நவீன சீர்திருத்த திட்ட வரைவுகள் நாட்டின் கடன் வழங்குபவர்களுடன் ஒரு புதிய உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது. இது நிக்கரகுவாவிற்கு மிகவும் அனுகூலமாக இருக்குமென்று அவர் நம்புகின்றார்.

அங்கே ஒரு உண்மையான பீதி நிலவுகின்றது. இருந்தபோதும் சன்டினிஸ்ட்டா வெற்றி, சமூக நீதி மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகியவற்றையிட்டு வெகுஜன எதிர்பார்ப்புக்களை உயர்த்தும். அது மிகவும் கடினமாக உள்ளடக்கக்கூடியதாக இருக்கும். சன்டினிஸ்டாவின் சாத்தியமான வெற்றியானது பலர் அவர்களுடைய முதலீடுகளை நாட்டை விட்டு வெளியே அகற்றவேண்டியதாக இருக்கப்போகின்றது.