World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

Leader of the French OCI acknowledges past relations with Prime Minister Jospin

பிரதமர் ஜொஸ்பனுடான கடந்த கால உறவை பிரெஞ்சு OCI தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்

By Peter Schwarz
13 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

பிரதமர் லியோனல் ஜொஸ்பன், கடந்த காலத்தில் தனது கட்சியில் ஒரு அங்கத்தவராக இருந்தார் என பிரெஞ்சு சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தின் [OCI] நீண்டகால தலைவரான Pierre Lambert முதல் தடவையாக வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அக்டோபர் 4இல், L'Express சஞ்சிகை லம்பேர்ட் உடனான ஒரு பேட்டியை பிரசுரித்திருந்தது. அதில் அவர், ''ஜொஸ்பனுடன் அரசியல் உறவு கொண்டிருந்ததாகவும்'', ''ஜொஸ்பன் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட்டாக இருந்தார்'' எனவும் லம்பேர்ட் ஏற்றுக்கொண்டிருந்தார். எவ்வளவு காலம் அது நீடித்திருந்தது பற்றி லம்பேர்ட் தெளிவாக கூறவில்லை, ஆனால் அவரது அறிக்கையின் படி அவருடனான உறவு 1986 அல்லது 1988 இல் முடிவுக்கு வந்தது.

1986 இல் OCI இன் முக்கியமான காரியாளர்கள் சோசலிச கட்சிக்குள் நுழைந்தமைதானா ஜொஸ்பனுடனான அரசியல் உடைவுக்கு இட்டுச்சென்றது என கேட்கப்பட்டபோது, ''ஜொஸ்பன் ஒரு விவாதத்திற்குப் பின்னர் கட்சியை விட்டு போய்விட்டார். அது அவரது முடிவாக இருந்தது. நான் இந்த காலகட்டம் பற்றி இனிவரும் நாட்களில் எழுதவுள்ளேன்.'' என லம்பேர்ட் சாக்குப்போக்காக பதிலளித்தார். 1988 இல் இருந்து கல்வி அமைச்சராக இருந்த ஜொஸ்பனது பாத்திரத்தினை தொடர்ச்சியாக லம்பேர்ட் கண்டித்ததானது மறைமுகமான முறையில் லம்பேர்ட் அந்த வருடத்தில் தான் ஜொஸ்பனது அரசியல் ஆலோசகராக வரமுடிந்தது என்பதை பேட்டியாளரின் நோக்கம் உறுதிப்படுத்துகின்றது

லம்பேர்ட்டின் கருத்தின்படி, பிரெஞ்சுப் பிரதமர் 20 வருடங்களாக OCI இன் காரியாளராக இருந்ததுடன் குறைந்தபட்சம் அவர் 15 வருடங்களுக்கு மேலாக OCI இன் காரியாளராக சோசலிசக் கட்சிக்குள் வேலை செய்தார்- அதன் தேசிய தலைமையில் 13 வருடமும், 5 வருடம் அதன் தேசிய செயலாளராகவும் இருந்தார். இவரது அரசியல் ஆலோசகராக அன்று இருந்த Boris Fraenkel இந்த கோடை காலத்தில் கொடுத்த ஒரு பேட்டியில், 1964 இல் ஜொஸ்பன் OCI இல் இணைந்ததுடன் அதன் பின்னர், 1971 ஆண்டு ஸ்தாபிக்கபட்ட சோசலிசக் கட்சியில் இணைந்துகொண்டார் என அம்பலப்படுத்தியிருந்தார்.

புதிய வானொலி நிலையமான LCI நவம்பர் 5ம் திகதி ஒலிபரப்பிய இன்னொரு பேட்டியில், ஜொஸ்பன், பிரான்சுவா மித்திரோனின் அமைப்பில் தன்னுடைய உதவியுடன் தான் ''1971 மற்றும் 1972 இல் எல்லோரும் செய்ததுபோல் இணைந்துகொண்டார்... அவர் என்னுடைய உடன்பாட்டுடன் தான் சோசலிச கட்சிக்குள் நுழைந்தார். எல்லோரையும் போல் அவர் ஒரு அங்கத்தவராக இருந்தார் அத்துடன் ஒரு குறிப்பிட்ட வேலைகளையும் செய்யவேண்டியவராக இருந்தார்'' என லம்பேர்ட் கூறியிருந்தார்.

ஜொஸ்பன் ஒரு ''இரட்டை உளவாளி'' ஆக இருந்தார் என்பதை லம்பேர்ட் மறுத்தார். ''ஜொஸ்பன் சோசலிச கட்சிக்குள் ஒரு இரட்டை உளவாளியாக இருந்தார் என நான் கருதவில்லை. மித்திரோன் அணைத்துக்கொண்ட ஒரு குறிப்பிடும்படியான அரசியலின் காரணத்தால் அவர் அதில் இணைந்துகொண்டார். அது, முதலாளித்துவத்துடனான உடைவாகும். அதன்பின்னர் அவர்கள் (சோசலிச கட்சி) வேறொன்றை செய்தார்கள். அது அவர்களுடைய பிரச்சனை, என்னுடையதல்ல.''

லம்பேர்ட்டின் குறிப்புரை உலக சோசலிச வலைத்தளத்தின் ஆய்வுகளை உறுதிப்படுத்துகின்றது. ஜொஸ்பனின் கடந்தகாலம் பற்றிய இதற்கு முன்னரான ஒரு கட்டுரையில், 1971 இல் இருந்து OCI, ''ட்ரொட்ஸ்கியின் எந்த கருத்துக்களுடனும் ஒரு பொதுவான உடன்பாட்டை கொண்டிருக்கவில்லை, ஆகையால் மித்திரோனின் நோக்கங்களுடன் எந்தவித பிரச்சனைகளும் இன்றி உடன்படக்கூடியதாக இருந்தது''

நீண்டகாலமாக மக்களின் குருவாக பார்க்கப்பட்ட 81 வயதான லம்பேர்ட் சோசலிச கட்சிக்குள் ஒரு வாழ்க்கைத் தொழிலை உருவாக்கிக்கொண்டார். OCI ஆனது ஜொஸ்பனின் நெருக்கமான சகாக்களில் பலரை உருவாக்கியுள்ளது, அவர்களில் Jean-Christophe Cambadélis ம் ஒருவர், இவர் சோசலிச கட்சியின் இரண்டாவது மிகமுக்கிய நபர் ஆவார். CGT தொழிற்சங்கம் ஸ்ராலினிச ஆளுமைக்குள் வந்ததோடு ஏற்பட்ட உடைவில் உருவான வலதுசாரி Force Ouvriere தொழிற்சங்கத்தின் முன்னணி நபர்களுடன் மிக நெருக்கமான தனிப்பட்ட உறவை லம்பேர்ட் கொண்டுள்ளதுடன் இவர் அதற்காக ஒரு முழுநேர ஊழியனாகவும் பணியாற்றுகின்றார்.

இதற்கும் மேலாக, அவர் ஒரு தொழிற்சங்க நிர்வாகி என்ற முறையில் தொடர்ச்சியாக அரசாங்க பிரதிநிதிகளை சந்திப்பதுண்டு. ''ஒரு பொறுப்பான தொழிற்சங்க நிர்வாகி என்ற முறையில், அரசாங்க அமைச்சர்களை நான் வழமையாக சந்திப்பதுண்டு. அவ்வகையில் எனது தொழிற்சங்கத்தின் பாகமாக எலிசேயில் (பிரெஞ்சு ஜனாதிபதியின் மாளிகை) நடந்த ஒரு சமரசக் கூட்டத்திலும் கலந்துகொண்டேன்.'' என அவர் எக்ஸ்பிரஸ் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் ஏற்றுக்கொண்டார். வதந்திகள் இதற்கு மாறாக இருந்தபோதும், தற்போதைய ஜனாதிபதியான ஜாக் சிராக்கை தான் சந்திக்கவில்லையென அவர் மறுத்தார்.

எப்படியிருந்தபோதும், லம்பேர்ட் எப்போதும் பொது நிகழ்வுகளில் பின்னணியில் இருந்துதான் இயங்குவதுண்டு. விதிவிலக்காக 1988 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது மாத்திரம் Pierre Boussel என்ற அவரது உண்மையான பெயரின் கீழ் வேட்பாளராக நின்றார். எக்ஸ்பிரஸ் இற்கு அளித்த பேட்டியானது அவர் முக்கியமான பத்திரிக்கைக்கு அளித்த இரண்டாவது பேட்டியாகும். 2002 இலையுதிர் காலத்திற்காக திட்டமிடப்பட்ட ஒரு புத்தக வெளியீடு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார், அதில் அவர் தனது வாழ்க்கையின் பல காலகட்டம் பற்றி விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளார். நேரடியாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வரவுள்ள அந்த புத்தத்தில் ஜொஸ்பன் பற்றிய மேலும் ஒரு அம்பலப்படுத்தல் தொடர்பான சில தகவல்களை வெளியிடக்கூடும், மற்றும் எதிர் போட்டியாளரான ஜாக் சிராக்கை மிகுந்தபட்சம் சவால் செய்வதாக இருக்கும்.

லம்பேர்ட் 1920 ம் ஆண்டு பாரிசில் பிறந்தார், இவர் ரஷ்ய குடியேற்றவாதியின் மகன் ஆவார். இவர் தனது 14 வயதில் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் கழகத்தில் இணைந்துகொண்டார். அதன் பின்னர், அதில் இருந்து கூடிய சீக்கிரத்திலே வெளியேற்றப்பட்டார். நான்கு வருடங்கள் கழித்து இவர் ட்ரொட்கிச இயக்கத்தில் இணைந்துகொண்டார். 1952 இல் இவர் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் (CIP) தலைமையை எடுத்துக்கொண்டார். இந்தக் கட்சி தான் 1968 இல் இருந்து 1981 வரை OCI என அழைக்கப்பட்டது.

1960 களின் முடிவில் OCI, ட்ரொட்கிச இயக்கத்தின் முன்னோக்கில் இருந்து விலகிச்சென்றதுடன் 1971 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் உத்தியோகபூர்வமாக உடைத்துக் கொண்டது. அதுவரை, அது அதன் பாகமாகவே இருந்துவந்தது. அது மித்திரோனுக்கான ஆதரவினது ஒரு முக்கிய அரசியல் மேடையாக உருவானது. மித்திரோன் ''இடது ஐக்கியம்'' (கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிசக் கட்சியின் கூட்டு) என்பதை முன்னெடுத்து சென்றதுடன், இறுதியாக 1981 இல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்தார்.

தனது வலதுசாரி அரசியலால் பரந்துபட்ட முறையில் மதிப்பிழந்து போயுள்ளதை அது உணர்ந்துகொண்டபோதுதான், OCI 1980 களின் இறுதியில் மித்திரோனுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. அதன் பின்னர், Parti des Travailleurs (தொழிலாளர் கட்சியை) அது ஸ்தாபித்ததது. தொழிற்சங்கத்திலும், சோசலிசக் கட்சியிலும் ஒரு தொழில் ரீதியான வேலையை பெற்றுக்கொள்ள முடியாமல் போன ஒரு காரணத்தாலும் அல்லது வேறொரு காரணத்திற்காக திருப்தியற்றுப்போன அதிகாரத்துவங்களின் ஒன்றுகூடும் ஒரு தொட்டியாக இந்தக் கட்சி இருக்கின்றது.

OCI, நீண்டகாலத்திற்கு முன்னரே ஒரு புரட்சிகர முன்னோக்கில் இருந்து பிரிந்து சென்றபோதும், ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கம் என அழைத்துக்கொண்ட இயக்கத்திற்காக தனது வாழ்வின் மிகப்பெரும் காலம் வேலைசெய்த ஒருவர் இன்று பிரெஞ்சு அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதுடன் மற்றும் 2002ல் இருந்து அரசின் தலைமைப் பதவியை பெற்றுக்கொள்ளும் சாத்தியத்தையும் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடும்படியான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றது. ஜொஸ்பனது இடதுசாரி அரசியல் அனுபவமானது அதிகரித்துவரும் சமூக, அரசியல் பதட்டங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க கூடியதாக இருப்பதுடன், ஆளும் வர்க்கத்திற்கான எந்தவொரு பயமுறுத்தலையும் தவிர்ப்பதற்கு உதவிசெய்யக் கூடியதாக இருக்கிறது.

பிரெஞ்சு அரசமைப்புகளின் ஏனைய முன்னணி பிரதிநிதிகள் கூட தாம் முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக இருந்ததாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள். Le Monde இன் தலைமை ஆசிரியரான Edwy Plenel, இளமையின் இரகசியங்கள் என தலையங்கம் இடப்பட்டு வெளிவந்துள்ள அவரது ஒரு சுயசரிதையில் அவர் தனது கடந்த கால ''ட்ரொட்ஸ்கிஸ்ட்'' என்பது பற்றி மிகவும் உற்சாகத்துடன் எழுதுகிறார்: ''ட்ரொட்ஸ்கிசம் ஒரு அனுபவம் மட்டுமல்லாது எனது அடையாளத்துடன் எப்போதும் அப்பாரம்பரியம் இருந்துவரும்; ஒரு வேலைத்திட்டம் அல்லது ஒரு நோக்கம் என்ற வகையில் அல்ல, மாறாக மாற்றம் அடைந்துவரும் முன்னோக்கினதும், மனரீதியான வெளிப்பாடு தொடர்பான ஒரு உணர்வுபூர்வமான விமர்சன முறையாகவும், அரசியல் தோற்கடிப்பு மற்றும் நேர்மைக்குமான உறவிலும் புத்திஜீவித தெளிவாகவும் அது இருக்கின்றது.''

Plene, OCI இன் ஒரு அங்கத்தவர் அல்ல மாறாக 1953 இல் நான்காம் அகிலத்தின் முன்னோக்கை கைவிட்ட பிரான்சில் இருந்த பப்பிலோயிச புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் கழகத்தின் [League of Revolutionary Communist] அங்கத்தவர் ஆவார். பிரெஞ்சு அரசுக்கான அவரது அர்ப்பணிப்பும் ஜொஸ்பனது அர்ப்பணிப்பைப்போல் கேள்விக்கு அப்பாற்பட்டதாகும். Le Monde, பிரெஞ்சு பூர்சுவா தொடர்புசாதனங்களின் ஒரு கொடிக்கப்பல் ஆகும். இது, 1980 களில் மித்திரோனின் மிக முக்கியமான ஆதரவாளனாக இருந்தது. அதனது தலைமை ஆசிரியர் இப்போது தன்னை ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட்டாக காட்டிக்கொள்வது நெருக்கடிக்குள் மூழ்கிப் போயிருக்கும் பிரெஞ்சு அமைப்புக்கான ஆதரவை இடதுசாரிகளின் வட்டத்திற்குள் இருந்து பெற்றுக்கொள்வதற்கான ஒரு முயற்சியின் வெளிப்பாடாகும்.