World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lankan downturn wipes out thousands of jobs

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி ஆயிரக்கணக்கான தொழில்களைத் துடைத்துக் கட்டுகின்றது

By K. Ratnayake
1 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் பொருளாதாரம், வளர்ச்சி வீத வீழ்ச்சியுடன் சேர்ந்து வேகமாக வீழ்ச்சி கண்டு செல்கிறது. ஏற்றுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு ஆயிரக்கனக்கான தொழில்களும் துடைத்துக்கட்டப்பட உள்ளன. இந்த வீழ்ச்சியானது விசேடமாக நியூயோக் மற்றும் வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11ம் திகதிய தாக்குதலை அடுத்து உலக ரீதியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தாக்கத்தால் உக்கிரமடைந்தது.

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிபரங்கள் இன்னமும் வெளியிடப்படாவிட்டாலும் மத்திய வங்கியின் பொருளியலாளர்கள் பாதகமான தரவுகளை தனிப்பட்ட ரீதியில் எதிர்வு கூறியுள்ளனர். இந்த வருடத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டை கடந்த வருடத்தின் வளர்ச்சி வீதமான 7.3 வீதத்துடனும் 6 வீதத்துடனும் ஒப்பிடும்போது, உத்தியோகபூர்வ வளர்ச்சி வீதம் வெறுமனே முறையே 1.4 வீதத்தாலும் 0.4 வீதத்தாலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆண்டு வளர்ச்சி வீதம் 0.7 ஆகவும், 0.2 ஆகவும் வீழ்ச்சி கண்டிருந்த 1956, 1971ம் ஆண்டுகளின் பின்னர் இலங்கை ஒரு அத்தகைய குறைவிருத்தி அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.

அக்டோபர் 17ம் திகதி தொடர்புசாதனங்களில் பேசிய, தேய்ந்து போய்க்கொண்டிருக்கும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் ஆதரவாளரான மத்திய வங்கி ஆளுனர் ஏ.எஸ்.ஜயவர்தன கடந்த ஆண்டில் 6 வீத வளர்ச்சியோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு இரண்டு வீத வளர்ச்சியையே கொண்டிருக்கும் எனத் தெரிவித்தார். எவ்வாறெனினும் வெளி ஆய்வாளர்கள் பூச்சியத்தை அல்லது பாதகமான தரவுகளையே எதிர்வு கூறியுள்ளனர். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொருளியல் நிபுணத்துவப் பிரிவு இந்த ஆண்டின் வளர்ச்சி வீதம் 0.6 என கணிப்பிட்டுள்ளது -கடந்த ஆண்டின் பெறுபேறுகளில் 10ல் ஒன்றாகும்.

மத்திய வங்கியின் புள்ளி விபரம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட 4.5 வீதத்தில் இருந்தும் ஆண்டின் நடுப்பகுதியில் பெறப்பட்ட 3 தொடக்கம் 3.5 வீதம் வரையான மதிப்பீட்டில் இருந்தும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் அரைப்பகுதியின்போது, நாட்டின் பிரதான அந்நிய செலாவணிகளில் ஒன்றான தேயிலை உற்பத்தி 5.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததோடு மேலும் ஒரு விவசாய உற்பத்தியான தேங்காய் உற்பத்தியும் 5.6 வீதத்தால் வீழ்ச்சி கண்டது. தொழிற்துறை ஏற்றுமதியில் அரைவாசியை இட்டு நிரப்பிய ஆடை, துணி மற்றும் தோல் உற்பத்தியிலும் 5.4 வீத வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

இந்த ஆண்டின் முதல் 8 மாதத்தில் மொத்த ஏற்றுமதி 6.92 வீதத்தால் வீழ்ச்சியடைந்த்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் 26 வீத வளர்ச்சியில் இருந்து தெளிவாக மாற்றமடைந்துள்ளது. வியாபாரத் தலைவர்கள் ஆடை மற்றும் ஆடைத் தொழிற்சாலை ஏற்றுமதிகள் 9.04 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதையிட்டு மிகவும் கவலையடைந்துள்ளனர். அதே வேளை முதலீட்டு பொருட்களும் (22.8 வீதம்) மற்றும் முடிவடைந்த உற்பத்திகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இடைக்காலப் பொருட்களதும் (9.2 வீதம்) மிகப் பெரும் வீழ்ச்சியோடு இறக்குமதியும் 12. 7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி ஏற்கனவே பெருந்தொகையான ஆட்குறைப்புக்களுக்கும் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலுக்கும் வழியமைத்துள்ளது.

* ஆடை தொழிற்துறை முதலாளிகள், தொழிலாளர்களைக் குறைக்கவும் நிரந்தர ஊழியர்களை தற்காலிக ஊழியர்களாக தரம் குறைக்கவும் தொழில் ஆணையாளரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். குறைந்த பட்சம் 15,000 தற்காலிக தொழிலாளர்களின் ஊதியங்கள் உடனடியாக அரைவாசியாக வெட்டப்படவுள்ளன. ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான லீன் பெர்னான்டோ சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்ததாவது: "நெருக்கடி இருந்து கொண்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுவருகின்றன அல்லது விற்றுத்தள்ளப்படுகின்றன; இயந்திரங்களும் விற்கப்படுகின்றன அல்லது நிதி திரட்டுவதற்காக கூட்டு முயற்சிகளுக்கான விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.

* தென்மேற்கு கரையோரப் பகுதி பூராவும் -இலங்கையின் பிரதான உல்லாச விடுதிகளைக் கொண்ட பிராந்தியம்- ஒப்பந்த மற்றும் பருவகால ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில ஹோட்டல்களில் ஊழியர்கள் நிலைமைகள் "சாதகமாக" அமையும் வரை விடுமுறையில் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள். ஜோன் கீல்ஸ் குறூப் மற்றும் எயிட்கின் ஸ்பென்ஸ் கம்பனிகளுக்கு சொந்தமானவை உட்பட சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல் உரிமையாளர்கள் உல்லாசப் பிரயாணிகளை வசீகரிப்பதற்காக அறைகளையும் டிக்கட்டுகளையும் இலவசமாக வழங்கும் அதே வேளை, வீழ்ச்சியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது கட்டியடிக்கிறார்கள். ஆகஸ்ட்டிலும் செப்டம்பரிலும் உல்லாசப் பிரயாணிகளின் வருகை முறையே 54 வீதத்தாலும் 64 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. உல்லாசப் பிரயாணத்துறை 40,000 தொழிலாளர்களை நேரடியாக ஈடுபடுத்தும்போது இதில் பல்லாயிரக் கணக்கானோர் தங்கியுள்ளனர்.

கட்டிட நிர்மாணக் கைத்தொழிலில் ஆயிரக்கணக்கான தொழில்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. கட்டிட சம்மேளனத்தின் தலைவர் சரத் விக்கிரமசிங்க குறிப்பிடும்போது: "எங்களுக்கு வியாபாரம் கிடையாது. நான் சம்பளம் கொடுப்பது எப்படி? புதிய கட்டிடங்கள் கட்டப்படுவது இல்லை." 1990களின் நடுப்பகுதியில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் நிர்மாணக் கைத்தொழிலின் பங்கு 6-7 வீதத்தில் இருந்து 3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வியாபாரத்துக்கான அரசாங்க மானியங்கள்

இந்தப் பொருளாதார வீழ்ச்சி, ஜூலை 24ம் திகதி நாட்டின் பிரதான விமான நிலையம் மற்றும் விமானத் தளம் மீது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலோடும், அதே போல் செப்டம்பர் 11ம் திகதிய சம்பவங்களுடனும் இணைந்துகொண்டுள்ளது. தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் பட்றிக் அமரசிங்க குறிப்பிட்டதாவது: "எங்களுக்கு சொந்தமான பெரும் பிரச்சினைகள் இருந்ததோடு அவை அமெரிக்கப் பிரச்சினைகளின் காரணமாக பன்மடங்காக்கப்பட்டுள்ளன. இப்போது நாங்கள் முன்னெப்போதும் இல்லாத மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டுள்ள அதேவேளை அரசாங்கத்தை சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கிறோம்."

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை ஒரு இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமான வெளிப்பாடாகவும், மக்கள் இதை சாதாரணமாக தாங்கிக் கொள்ளவேண்டும் எனவும் முன்வைக்க முயற்சிக்கின்றார். ஒரு அமைச்சரவை உறுப்பினரான மைத்திரிபால சிரிசேன, ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது, வீழ்ச்சியும் பயங்கரவாதத் தாக்குதலும் அமெரிக்காவினுள் ஆட்குறைப்புக்கு இட்டுச் சென்றுள்ளதன் காரணமாக இலங்கை வீழ்ச்சியைத் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை.

எவ்வாறெனினும் வர்த்தகர்களின் விமர்சனங்களையும் தொழிலாளர், ஏழைகளது அமைதியின்மையையும் கண்டு கலவரமடைந்துள்ள அரசாங்கம் ஒரு "பொருளாதார ஊக்குவிப்பு" பொதியை அறிவித்துள்ளது. டிசம்பர் 5ம் திகதி ஒரு பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளதால் அது தொழிலாளர்களுக்கும் மத்தியதர வர்க்கத்தினருக்கும் சிறிய சம்பள அதிகரிப்பையும் ஓய்வூதிய அதிகரிப்பையும் மற்றும் சில சலுகைகளையும் வழங்கியுள்ள அதேவேளை, பெரும் வியாபாரிகளுக்கும் கணிசமான சலுகைகளை கையளித்துள்ளது.

வர்த்தகர்களுக்கான மானியங்களுள் வங்கி, நிதித்துறை மீதான 1 வீத மொத்தவிற்பனவு வரியை (Turnover Tax) இல்லாமல் செய்தல், தேர்வு செய்யப்பட்ட மூலப்பொருள் இறக்குமதிக்கான வரி விலக்கு, சீமெந்து இறக்குமதிக்கான வரி குறைப்பு, முத்திரை வரிக் குறைப்பு மற்றும் ஏனைய ஏற்றுமதித் தள்ளுபடிகள், வட்டி வீதத்தில் இரண்டு வீத வெட்டு ஆகியவை அடங்கியுள்ளன. ஓய்வூதியம் 750 ரூபாவால் (8 அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்பட்டுள்ள அதே வேளை அரசாங்க ஊழியர்கள் ஒரு மாதத்துக்கு 1,200 ரூபா (14 அமெரிக்க டாலர்) சம்பள அதிகரிப்பை பெறுவார்கள்-இது வளர்ச்சியடைந்துள்ள வாழ்க்கைச் செலவை சமாளிக்கப் போதுமனதல்ல.

சர்வதேச நாணய நிதியமும் வர்த்தகப் பிரதிநிதிகளும் சம்பள மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பை கண்டனம் செய்ததோடு மேலதிக வியாபார சலுகளைக் கோரி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சர்வதேச நாணைய நிதியத்தின் சிரேஷ்ட வதிவிட பிரதிநிதியான நடீம் உல் ஹக் டெயிலி மிரர் பத்திரிகையுடன் பேசுகையில், வியாபார நிவாரணங்கள் "பற்றாக்குறையாக" உள்ளதோடு "பெரும் சம்பள மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பு அடிப்படை சீர்திருத்தங்களுக்கான ஒரு பதிலீடாகி விட முடியாது" எனத் தெரிவித்தார்.

முதலாளிகள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமான கொடபாய திசாநாயக்க கருத்து வெளியிடுகையில், சம்பள உயர்வுகள் "போட்டிக்கு" "குந்தகமான விளைவுகளைக்" கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டார். அவர் தனியார்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வை நீடிக்கும் அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார்.

கடந்த மார்ச்சில் வாக்குறுதியளித்த கடன்களின் எஞ்சியுள்ள பாக்கியை வழங்குவதை மீளாய்வு செய்வதை சர்வதேச நாணய நிதியம் தாமதித்துள்ளது. அரசாங்கம் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை அமுல் செய்யவும் வரவுசெலவுத் திட்டத்தையும் சென்மதி நிலுவை பற்றாக்குறைகளை குறைக்கவும் வாக்குறுதியளித்ததன் பின்னரே இதை வழங்க ச.நா.நி. வாக்குறுதியளித்தது. இந்த மீளாய்வு தேர்தல் முடியும் வரை இடம்பெறப் போவதில்லை.

தொழில் தருநர்கள் (Employers) இலாபத்தை அதிகரிக்கவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரவும் தொழில், வாழ்க்கைத் தரங்களுக்குள் கடுமையாக ஊடறுத்துச் செல்வதற்கான நிலைமைகளை வேண்டி நிற்கின்றார்கள். முதலாளிமார் சம்மேளன தலைவரான ஆர்.சிவரத்தினம் சம்மேளனத்தின் சமீபத்திய ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசுகையில்: "பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தற்போதைய பெரும் வீழ்ச்சி நாம் வேண்டும் சீர்திருத்தங்களின் பெரும் முக்கியத்துவத்தின் அவசரத்தை காட்டுகின்றது." அவர் "பாதுகாப்பான தொழிற் சட்டங்களுக்கும்" ஒரு "பெரிதும் ஈய்ந்து கொடுக்கக்கூடிய உழைப்பு சந்தையினை" உருவாக்குவதற்கும் வாதிட்டார்.

தேர்தலின் பின்னர் என்னதான் அரசாங்கம் ஆட்சிக்கு வரினும் வர்த்தகர்களதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கோரிக்கைகளை உடனடியாக வழங்க முயற்சிப்பதன் மூலம் ஆழமான வர்க்க போர்களுக்கான களத்தை உருவாக்கும்.