World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Politically motivated attacks on the SEP in Sri Lanka

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மீது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக்குதல்

By a correspondent
5 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் மத்திய பெருந்தோட்டப் பிரதேசங்களில் இடம்பெற்ற ஒரு தொடர் சம்பவங்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களை பயமுறுத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை சுட்டிக் காட்டுகின்றது. இந்தத் தாக்குதல்கள் சோசலிச சமத்துவக் கட்சி அரசாங்கத்துக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு தமிழ் தோட்டத் தொழிலாளர்களில் நால்வரை விடுதலை செய்வதில் வெற்றி கண்டதை அடுத்து ஆரம்பமாகின.

முதல் சம்பவம் அக்டோபர் 8ம் திகதி நடந்தது. நாட்டின் வழமையான மின்சாரத் துண்டிப்பு நேரத்தில் மாலை 7.30 மணியளவில் மூன்று இளம் காடையர்கள் பொல்லுகளுடன் அட்டன் பிரதேச சோசலிச சமத்துவக் கட்சியின் பிரபல அங்கத்தவரான சாந்தகுமாரின் வீட்டினுள் நுழைந்தனர். அவர்கள் தனது மேசையில் இருந்த சாந்தகுமாரை நெருங்கி தாக்கத் தொடங்கினர். அவர்கள் ஆவேசமான தூஷனவார்த்தைகளில் திட்டிய வண்ணம் தமிழில் கத்தினார்கள்: "நீர் எல்லோரையும் விமர்சிக்கிறீர்." சாந்தகுமார் தன்னைப் பாதுகாக்கத் தொடங்கியவுடன் ஓடிவிட்டனர்.

அடுத்தநாள் தலவாக்கலை பிரதேசத்தின் இன்னுமொரு சோ.ச.க. உறுப்பினர் இனந்தெரியாதோரால் தொலைபேசியில் பயமுறுத்தப்பட்டார். தொலைபேசி அழைப்பாளர் தமிழில் கூறியதாவது: "உன்னையும் உனது நண்பர்களையும் எனக்குத் தெரியும். நீர் சாந்தகுமாருடன் சேர்ந்து வேலை செய்கிறீர். கவனமாக இரு." சோ.ச.க. பிரச்சாரத்தை சுட்டிக் காட்டி அவர் எச்சரிக்கை செய்தார்: "அரசியல் கைதிகள் தொடர்பாக உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள அக்கறை என்ன? இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை."தொலைபேசி அழைப்பாளர் தன்னை அடையாளம் காட்ட மறுத்துவிட்ட போதிலும் தான் அட்டனைச் சேர்ந்தவர் எனவும் "மலையகத்தை தமிழர்களுக்காக கோரும்" ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மத்திய மலையகப் பிரதேசங்களில் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மத்தியில் பல்வேறு அமைப்புகள் தொழிற் சங்கங்களாகவும் அரசியல் கட்சிகளாகவும் செயற்படுகின்றன. தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான சோ.ச.க. வின் பிரச்சாரம், இவர்களில் எவரும் பிரதானமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) உறுப்பினர்கள் எனும் குற்றச்சாட்டுக்களை திணித்து மாதக்கணக்காகவும் வருடக் கணக்காகவும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதில் இலாயக்கற்றவர்கள் என்பதை அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தியது. பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு ஒரு சுயாட்சிக்காக வக்காலத்து வாங்கும் அமைப்பு மலையக மக்கள் முன்னணியாகும் (ம.ம.மு.)

இந்த சம்பவங்களில் மலைய மக்கள் முன்னணியின் தலையீடு தொடர்பாக ஆதாரங்கள் இல்லாத போதிலும் அது இரண்டு வாரங்களின் பின்னர் இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டது. ம.ம.மு.வின் இரண்டு பிரதான உறுப்பினர்கள் போலி முறைப்பாட்டின் பேரில் சோ.ச.க. அங்கத்தவரான சவரிமுத்தை கைது செய்வதற்காக பொலிசாருடனும் என்பீல்ட் தோட்ட நிர்வாகத்துடனும் இணைந்து செயற்பட்டனர்.

அக்டோபர் 19ம் திகதி, தோட்ட நிர்வாகம் சவரிமுத்து 8 வருடங்களுக்கு முன்னர் தோட்டத்தை அண்டிய பகுதியில் விலைக்கு வாங்கிய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பழைய கூடாரத்தை உடைத்துத் தள்ளுமாறு ஆத்திரமூட்டும் விதத்தில் சில தொழிலாளர்களை அனுப்பியது. தோட்ட நிர்வாகம் அவருக்கு வேலை வழங்க மறுத்ததை அடுத்து அவர் அங்கு பழங்களை உற்பத்தி செய்யவும் விற்று வாழ்க்கை நடாத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இந்தக் கூடாரம் தோட்ட நிர்வாகத்தின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனும் தோட்டத் துரையின் குற்றச்சாட்டை சவரிமுத்து சட்ட ஆவணங்களுடன் மறுதலித்தார்.

சவரிமுத்து தனது குடிசை நிர்மூலமாக்கப்படுவதை நிறுத்தினார். மறுநாள் அவர் இரண்டு ம.ம.மு. உறுப்பினர்களுடன் வந்த ஒரு பொலிஸ் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ம.ம.மு.வின் உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வேட்பாளராக பிரசித்தி பெற்ற சேகர், சவரிமுத்துவை காணியை தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் வேலை கிடைக்கும் எனும் வாக்குறுதியின் பேரில் திருப்திபடுத்த முயற்சி செய்தார். அதை நிராகரித்த சவரிமுத்து ம.ம.மு.வும் அதன் தலைவரான பீ.சந்திரசேகரனும் (தான் உட்பட்ட) அரசியல் கைதிகளை பாதுகாக்கத் தவறியதை சுட்டிக் காட்டினார். அவர் 1995ல் விடுதலைப் புலி சந்தேக நபராக கைது செய்யப்பட்டு சோ.ச.க. பிரச்சாரத்தின் பின்னர் மட்டுமே 1997ல் விடுதலை செய்யப்பட்டார். முதலில் ம.ம.மு. அங்கத்தவராக இருந்து பின்னர் அதிருப்தியின் பேரில் சோ.ச.க.வில் சேர்ந்தார். இந்த விமர்சனங்களின் பின்னர் சேகர், சவரிமுத்து அதிகம் கதைப்பதாக கூறி பின்வாங்கியதோடு சவரிமுத்து கைது செய்யப்பட்டார்.

மறுநாள் சவரிமுத்து சோ.ச.க.வின் பிரதேச மற்றும் கொழும்பு தலைமையின் தலையீட்டினை அடுத்து விடுதலை செய்யப்பட்டார். எவ்வாறெனினும் பொலிசார் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர். கடந்த வாரம் சவரிமுத்து பொலிஸ் நிலையம் சென்றபோது பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி காணியை ஒப்படைப்பதாக கூறும் ஒரு ஆவணத்தில் கையொப்பமிடாவிட்டால் அவரை "தாக்குவதாக" பயமுறுத்தினார்.

இந்த முழுச் சம்பவங்களும் அரசியல் ஆத்திரமூட்டல்களின் அடையாளங்கள். தோட்ட நிர்வாகம் அவ்வாறான உண்மை பிரச்சினை இருந்தாலும் கூட தோட்டக் காணிகளில் சிறிய அபகரிப்புகள் நடந்தால் அது பொதுவான நிகழ்வாக கணக்கிலெடுப்பதில்லை. இதைப் பொறுத்தவரையில் எவ்வாறெனும் தோட்ட நிர்வாகம் இந்தப் பிரச்சினையை ஒரு பெரும் பிரச்சினையாக்க தீர்மானித்துள்ளது. ம.ம.மு. உறுப்பினர்கள் இதில் தலையிட்டது ஏன்? அல்லது அவர்கள் ஏன் பொலிசாருடன் ஒரு பொலிஸ் வாகனத்தில் வராமல் ஒரு தனியார் வாகனத்தில் வந்தனர்? என்பவற்றையிட்டு எந்த விளக்கமும் கிடையாது. சோ.ச.க. வழக்கறிஞர்கள் பொலிசாருக்கு இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் சவரிமுத்துவை தடுத்து வைக்க எந்த அருகதையும் கிடையாது என்பதை வலியுறுத்தினார்கள்.

இந்த சம்பவங்களை நோக்குமிடத்து ம.ம.மு.வும் ஏனைய தொழிற்சங்கங்களும் தமிழர்களை நியாயமற்ற முறையில் தடுத்துவைப்பதற்கு எதிரான சோ.ச.க.வின் பிரச்சாரம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கத்தையிட்டு பெரும் கவலை கொண்டுள்ளதை வெளிக்காட்டுகிறது. கடந்த ஜூலை மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் 1998 ஜூனில் இருந்து விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு தோட்டப்புற இளைஞர்களில் நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ்பெற நிர்ப்பந்திக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணைகளை இடைவிடாமல் தொடர்ந்த அரசாங்கம் இறுதியாக இந்த நால்வருக்கும் எதிரான ஒரே சாட்சியாக இருந்த "ஒப்புதல் வாக்குமூலங்கள்" சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்டவை என்பதை மெளனமாக ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது.

சோ.ச.க.வின் பிரச்சாரத்துக்கு இலங்கையின் ஊடகங்களில் இருந்து குறிப்பிடத்தக்க பிரதிபலிப்புகள் கிடைத்தன. தமிழ் செய்திப் பத்திரிகையான வீரகேசரி மற்றும் தமிழ் வானொலிச் சேவையான சூரியன் FM உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) இருந்து மேற்கோள் காட்டின. அரசியல் கைதிகளைப் பாதுகாப்பதில் ம.ம.மு.வும் ஏனைய தொழிற்சங்கங்களும் இலாயக்கற்றிருந்ததை சுட்டிக் காட்டிய உலக சோசலிச வலைத் தளக் கட்டுரைகள் பெருந்தோட்டப் பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்ட அதே வேளை கலந்துரையாடல்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது.

ம.ம.மு. நான்கு கைதிகளின் விடுதலைக்கும் உரிமை பாராட்ட முயற்சித்தபோது, கைதிகளிடமிருந்து தெளிவான பிரதிபலிப்புகள் வெளிப்பட்டன. செப்டம்பர் 26ம் திகதி சூரியன் FM செய்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய்யப் போராடும் ஒரே ஒரு கட்சி சோசலிச சமத்துவக் கட்சியே என்றும், மக்கள் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் களுத்துறைச் சிறைச்சாலை அரசியல் கைதிகள் விடுத்த வேண்டுகோளை ஒலிபரப்பியது.

ஏனைய அரசியல் கைதிகள் சோ.ச.க.விடம் உதவிகோரி கடிதம் எழுதியிருந்தனர். களுத்துறைச் சிறைச்சாலையில் உள்ள 11 கைதிகள் தமது சார்பில் சோ.ச.க.வின் தலையீட்டை கோரி கடிதம் எழுதியிருந்தனர். மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி எனும் தொழிலாளி தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் தொடர்பாக சோ.ச.க.வுக்கு பின்வருமாறு எழுதியிருந்தார்: "நான் உங்களது கட்சி பற்றியும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேள்விப்பட்டேன். இளைஞர்களின் விடுதலைக்காக போராடும் ஒரே ஒரு அமைப்பு அது மாத்திரமே. தயவுசெய்து எனது மகனின் விடுதலைக்காகவும் உதவி செய்யவும்" எனக் கேட்டிருந்தார்.

சோ.ச.க.வை பயமுறுத்துவதற்கான முயற்சிகள் கண்டனம் செய்யப்பட வேண்டிய அதே வேளை மலையக மக்கள் முன்னணியே இதற்குப் பொறுப்பாளியானால் தனது காடையர்களை அம்பலப்படுத்த வேண்டும். சோ.ச.க. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை தொடர்கிறது.