World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US-Uzbekistan pact sheds light on Washington's war aims in Central Asia

அமெரிக்க - உஸ்பெக்கிஸ்தான் ஒப்பந்தம் மத்திய ஆசியாவில் வாஷிங்டனின் யுத்த நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றது

By Patrick Martin
18 October 2001

Use this version to print

ஆப்கானிஸ்தானுடனான தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்க துருப்புக்களை உஸ்பெக்கிஸ்தானில் ஒரு காலவரையறையற்ற காலத்திற்கு நிலை கொள்வதற்கான ஒரு இணைந்த உடன்படிக்கையை அமெரிக்காவும், உஸ்பெக்கிஸ்தானும் அக்டோபர் 12 ல் கைச்சாத்திட்டுள்ளன. இதற்கு பதிலாக முன்னாள் சோவியத் குடியரசின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் பிராந்திய நலன்களையும் தானும் ஆதரிப்பதாக புஷ் நிர்வாகம் கூறுகின்றது.

மேலும் இவ் ஒப்பந்தம் அக்டோபர் 7 ல், அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு மேல் தாக்குதலை ஆரம்பித்த நாளன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. உஸ்பெக்கின் தலைநகரமான ராஷ்கென்ற் (Tashkent) க்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் Donald Rumsfeld இன் வருகையானது நான்கு நாடுகளுக்கான விஜயத்தில் மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கான ஒரு ஆதரவை தேடிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி Islam Karimov க்கு அருகே நின்ற Rumsfeld ''அமெரிக்காவின் நலன்கள் இந்நாட்டுடன் ஒரு நீண்டகால உறவின் அடிப்படையில் அமைந்துள்ளது'' என கூறினார்.

இதுவரையிலும் 1000 க்கும் மேலான அமெரிக்க துருப்புக்கள் உஸ்பெக்கிஸ்தானில் உள்ளனர், மலைப்பாங்கான இடங்களுக்கு என பயிற்சி பெற்ற 10வது மலைப்பிரிவான கெரில்லா யுத்தத்துக்கு எதிரான விசேட படைப் பிரிவினர், ஆப்கானிஸ்தானில் உள்ள ஒசாமா பின் லேடனினதும் அவரது Al Qaeda இயக்கத்தினதும் உறுதியான இடங்களில் தரைமார்க்கமான போரில் தாக்ககூடியவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர். இதைவிட மேலும் வேறு 1000 அமெரிக்க துருப்புக்கள் அங்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க யுத்த விமானங்கள் Uzbek விமானத்தளத்தில் வந்திறங்கியுள்ளன, மற்றும் அதற்கான பாதை திறந்து விடப்பட்டுள்ளது. அதேசமயம் குண்டு வீச்சு பிரச்சாரத்தில் இவர்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக ஈடுபடவில்லை. ஒருதொகை அமெரிக்க விசேட துருப்புக்களும் இங்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காவல்களை கொண்டுள்ள முகாம்களை சுற்றி இராணுவத் துருப்புகளின் எண்ணிக்கை மேலும் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

உஸ்பெக்கிஸ்தான் ஜனாதிபதியான Karimov வின் பேச்சாளரான Rustam Jumayev, உஸ்பெக்கிஸ்தான் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ''பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டில்'' அங்கத்துவம் வகிக்கும் ஒரு நாடல்ல, இந் நாட்டின் வசதிகள் மனிதாபமான நலன்களுக்காக ''முதலில் பேணப்பட பயன்படுத்தப்பட வேண்டும்'' (பணயக்கைதிகளை விடுதலை செய்தல், அல்லது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் இருக்கும் விமான ஓட்டிகளை விடுதலை செய்தல்) என்பதை வலியுறுத்தினார். அமெரிக்காவின் குண்டுத் தாக்குதலாலும், தலிபானிடமிருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெருக்கெடுத்த அகதிகளுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளதன் மூலமும் உஸ்பெக்கிஸ்தானின் உண்மையான மனிதாபிமான தோற்றங்கள் பொய்யாக்கப்பட்டுள்ளன.

இவ் இரு அரசாங்கங்களினாலும் ஏற்படுத்தப்ட்ட இந்த இணைந்த ஒப்பந்தமானது, ''மிகவும் உயர்ந்த பாதுகாப்பு, மற்றும் பிராந்திய உறுதிப் பாடுகளுக்கான ஒரு நீண்டகால உத்தரவாதத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகின்றன'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது உஸ்பெக்கிஸ்தானின் எல்லைகளுக்கு அமெரிக்காவால் ஒரு வெறும் உத்தரவாதம் வழங்கப்படாதது மட்டுமல்லாது, ''உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் பாதுகாப்புக்கு அல்லது அதனது பிராந்தியங்களின் சுயாதீனத்துக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து, அதற்காக விசேட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனவும் அவ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூட்டு ஒரு சில வழிகளில் சற்று வித்தியாசமாக உள்ளது. அமெரிக்கா அதனது இராணுவ உறவுகளை முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளுடன் இறுக்கமாக்கி கொள்வது இதுவே முதல் தடவையாகும். ரஷ்ய புரட்சிக்கு பின்னர் 1922 ம் ஆண்டு முதலாவதாக எல்லைகளுக்கான பாதுகாப்புகள் முதல் முறையாக இடப்பட்டன.

இது நடைமுறையில், அமெரிக்கா உஸ்பெக்கிஸ்தான் பிராந்தியத்தின் சுயாதீனத்தை ஆதரிப்பது என்பது பூகோள ரீதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களின் அபிவிருத்தியை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. உஸ்பெக்கிஸ்தான் பூகோள ரீதியில் தனிமைப்பட்டு இருப்பதுடன், அதற்கு கடல் எல்லைகள் எதுவும் இல்லை. இதன் பூகோளரீதியான இருப்பை அரிச்சுவடி வாயிலாக பார்த்தாலும் கூட அது அமெரிக்காவிலிருந்து வேறு ஒரு உலகில் இருக்கிறது.

உஸ்பெக்கிஸ்தானின் பிரத்தியேகமானதும், விசித்திரமானதுமான தன்மை யாதெனில், அது ஒரு மூடப்பட்ட பிரதேசம் ஆகவும், அதைச் சுற்றிலும் Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Afghanistan, Turkmenistan போன்ற நாடுகளும் உள்ளன. இந்த மூடப்பட்ட நாடுகள் கஸ்பியன் கடலை அல்லது ஒரு உள்நாட்டு கடலை எல்லையாக கொண்டுள்ளன. மலைப் பிராந்தியத்திற்கு என விசேட பயிற்சி பெற்ற அதனது பத்தாவது இராணுவப் பிரிவு இப் பிரதேசத்தை வந்தடைய துருக்கி, ஜோர்ஜியா, அஜர்பாச்சான், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மேலால் பறக்க வேண்டும்.

ஒரு நடைமுறை விளக்கத்தின் படி, இந்த அமெரிக்க - உஸ்பெக்கிஸ்தான் உடன்படிக்கை ஒரு தனிமைப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக அனேகமாக மத்திய ஆசியாவின் பல நாடுகளை தீவிரமாக மறுஒழுங்கைமைக்கப்படுவதின் ஒரு பகுதியாக இது கைச்சாத்திடப் பட்டுள்ளது. அதன் விபரம் இன்னமும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா மத்திய ஆசியாவில் தனது மூலோபாய நடவடிக்கையை சோவியத் யூனியனின் கலைப்பின் பத்து வருடங்களின் பின்னால் மிகவும் வெளிப்படையாக தீவிரமாக்கி வருகிறது, விசேடமாக இது காஸ்பியன் கடலின் எண்ணெய் வளங்களை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டுள்ளது.

அமெரிக்க துருப்புகள் உஸ்பெக்கிஸ்தானுக்குள் நெருங்குவதென்பது அனேகமாக கடினமாக இருந்தது. ஆனால் அவர்கள் இங்கே ஒருமுறை வந்திறங்கியதைத் தொடர்ந்து, புவிப்பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய வளங்களைக் கொண்ட அப்பிராந்தியத்தின் மீது செல்வாக்கு செலுத்த ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உஸ்பெக்கிஸ்தானின் வடக்கில் அமைந்த Kazakhstan இல் பாரிய அளவில் Tenghiz எனும் எண்ணெ பிரதேசங்கள் காணப்படுகின்றன. தெற்கில், Turkmenistan இல் பாரிய அளவில் எரிவாயுவுக்கான வளங்கள் காணப்படுகின்றன. மேற்கில், காஸ்பியன் கடலுக்கு குறுக்கே அஜர்பாச்சானின் தலைநகரான Baku வும், காஸ்பியன் கரையோரத்தில் அமைந்த எண்ணெய் நிறுவனமும் இருக்கிறது. அமெரிக்காவின் உடனடியான பணி சிலவேளைகளில் ஆப்கானிஸ்தானாக இருக்கலாம், ஆனால் அதனுடைய நீண்ட காலத்திட்டம், அப் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் வளங்களே உள்ள பிரதானமான இலக்காகும் .

அமெரிக்கா விசேடமாக இங்கே எண்ணெய் குழாய்களுக்கான பாதைகளை அமைத்து அவற்றிலிருந்து பெறப்படும் வளங்களை உலகச் சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ஜனாதிபதி புஷ்ஷும், வெளிநாட்டு அமைச்சர் பெளவலும் ஆர்மேனியா மற்றும் அஜர்பாச்சான் நாடுகளின் பிரதமர்களை சந்தித்து அங்கே நீண்ட காலமாக இடம் பெற்றுவரும் எல்லைப் பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாடினார்கள், அவற்றின் ஒரு பாகமாக அமையவிருக்கும் எண்ணெய் குழாய் பாதை, இது Baku வின் வழியாக அஜர்பாச்சான், ஜோர்ஜியா, துருக்கி ஊடாக மத்தியதரைக்கடல் வரைக்கும் செல்ல இருக்கிறது. ஒரு மாதத்திற்கு பின்னால் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு 3 பில்லியன் டொலர்களை இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு முற்பணமாக கொடுத்தது. (இந்த எண்ணெய் கூட்டமைப்பில் மிகவும் முன்னணியில் இருக்கும் கம்பனி பிரிட்டிஷ் பெற்ரோலியமாகும், எனவேதான் பிரதமர் ரொனி பிளேயர் மத்திய ஆசியாவுக்கு மேலான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு தனது தீவிரமான ஆதரவை தெரிவித்துக் கொண்டதின் உண்மை அடங்கி உள்ளது.)

மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்து கொண்டு செல்கின்றது. ரஷ்யாவின் ரோந்துப் படை ஆப்கானிஸ்தான் எல்லையில் காவல் புரியும் Tajikistan இல் மட்டும் அது நிலைத்துள்ளது. அது தவிர்ந்த ஏனைய அனைத்து குடியரசுகளிடமிருந்தும் ரஷ்யா அதனது இராணுவத்தை பின்வாங்கிக்கொண்டுள்ளது. இவ் வருடத்தின் ஆரம்பத்தில் Uzbekistan, Kyrgyzstan மற்றும் Turkmenistan போன்ற நாடுகளின் பிரதமர்கள் ரஷ்யாவின் பிரதமர் Vladimir Putin உடன் ஏற்பாடாகி இருந்த உச்சி மாநாட்டிற்கான ஒரு திட்டத்தை கைவிட்டுள்ளனர்.

அண்மையில் வெளியான அமெரிக்க, இந்திய பத்திரிகைச் செய்திகளின் படி, அமெரிக்க, உஸ்பெக்கிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் உளவுப் படைப் பிரிவினருக்கும் இடையேயான கூட்டுழைப்பு 1998 ல் ஆரம்பமாகியது. அதற்கு இரு பிரதான விடயங்கள் தூண்டுதலாக இருந்தது. அவையாவன உஸ்பெக்கிஸ்தானின் ஆதரவான ஜெனரல் Dostum ஆல் வழி நடாத்தப்பட்டு 85 மைல் தூரம் நீளமான ஆப்கானிஸ்தான் உஸ்பெக்கிஸ்தான் எல்லைவரை தலிபானுடைய துருப்புக்கள் கொண்டுவரப்பட்ட 1998 பெப்ரவரியில் நடைபெற்ற தலிபானுடைய தாக்குதல் நடவடிக்கையும், மற்றையது அதே வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க தூதராலயம் கெனியாவிலும், தன்சானியாவிலும் தாக்கப்பட்டதுமாகும்.

ஜனாதிபதி புஷ் செப்டம்பர் 20 இல் நடைபெற்ற காங்கிரசில் இந்த இரகசிய கூட்டின் செய்தியை பகிரங்கமாக முதலில் தெரிவித்தார். அதில் அவர் அமெரிக்காவின் குறி உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத எதிர்கட்சிக் குழுவே எனவும் அதன் பெயரையும் எதிர்பாராத விதமாக கூறிவிட்டார். அந் நாட்டின் பெயரைக் கூட புஷ் சரியாக உச்சரிக்கவோ அல்லது உலக வரைபடத்தில் உஸ்பெக்கிஸ்தானின் இருப்பையும் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறமுடியாது. அமெரிக்காவின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களுக்கு இதற்கு மேல் ஒரு நீண்ட கால திட்டத்திற்கான பார்வை இல்லாது இருக்கும் என கூறமுடியாது. இது மத்திய ஆசியாவின் முன்னைய சோவியத் யூனியனில் உள்ள ஐந்து குடியரசுகளில் மிகவும் சனத்தொகை கூடிய, அதாவது 25 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு என்பது தெளிவாகும்.

Washington Post ன் செய்தியின் படி ''உஸ்பெக்கிஸ்தான் இராணுவம் அதனது அதிகாரிகளையும், நீண்டகால அங்கத்தவர்களையும் அமெரிக்க இராணுவ பாடசாலைகளுக்கு, தலைமை மற்றும் தந்திரோபாய பயிற்சிகளை பெறுவதற்காக அனுப்பி வைத்தது. அமெரிக்காவின் விசேட பயிற்சி பிரிவினர் வருடத்திற்கு நான்கு முறை உஸ்பெக்கிஸ்தான் துருப்புக்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அங்கே போய் வருவார்கள்.''

இக் கூட்டுக்களின் அபிவிருத்தியால் உஸ்பெக்கிஸ்தான் அரசாங்கம் அங்குள்ள உள்ளூர் எதிர்கட்சியினருடன் மோதலுக்கு போய் 7000 மக்களை சிறையில் அடைத்துள்ளது, அவற்றில் பெரும் பாலானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாவர். சிறைப்பிடிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் அரசாங்க பாதுகாப்பு படையினரால் தாக்குதலுக்கும் மற்றும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். Karimov அரசாங்கம் மிகவும் கடுமையான செய்தித் தணிக்கையையும், ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தலையும் அமுல்படுத்தி உள்ளது.

பென்டகன், உஸ்பெக்கிஸ்தான் சமூகத்தின் மிகவும் மறைக்கப்பட்ட தன்மையை தனது இராணுவ நடவடிக்கைக்கான முன்னேற்றத்திற்காக பாவித்துக் கொள்கிறது. ஒரு விமானப்படை அதிகாரி, அமெரிக்க யுத்த விமானங்கள் உஸ்பெக்கிஸ்தான் விமானத் தளத்திலிருந்து பறப்பது தொடர்பான எந்தவொரு படங்களும் CNN செய்தி நிறுவனத்திடம் கிடையாது என ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் மிகவும் பெருமையாக தெரிவித்துக் கொண்டார். உஸ்பெக்கிஸ்தான் அரசாங்கத்தின் பேச்சாளரான Jumaev இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்'' தடைசெய்தல் எமது பாதுகாப்பு அமைச்சிற்காக ஏற்படுத்தப்படவில்லை, பென்டகனுடைய விருப்பத்திற்காக செய்யப்பட்டது'' என கூறியிருந்தார்.

செப்டம்பர் 11 ல் உலக வர்த்தக நிலையம், பென்டகன் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னால் New York Times அதனது ஆசிரியத் தலையங்கத்தில் உஸ்பெக்கிஸ்தான் அரசியல் மற்றும் மத அடக்கு முறைகளைப் பற்றி கண்டித்து பின்னர், ஷாவுக்கு கீழான ஈரானைப் போல், அங்கு தீவிரவாதப் போக்குகளின் தலைமையில் புரட்சி வெடிக்கும் நிலைமையை Karimov அரசாங்கமும் எதிர்நோக்குவதாக எச்சரிக்கை செய்திருந்தது. அண்டைய நாடான ஆப்கானிஸ்தானுக்கு மீதான தற்போதைய யுத்தத்தில், ஒரு அமெரிக்க சார்பற்ற அரசு ஒன்று அப்பிராந்தியத்தில் ஏற்படுத்துவதற்கான பயமானது உண்மையில் அங்குள்ள செழிப்பான எண்ணெய் வளங்களை அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் நலன்களின் அடித்தளத்திலுமானதே தற்போதைய போர் என்பது மிகவும் தெளிவானதாகும்.