World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்

SEP meetings in Australia

The war in Afghanistan: the socialist perspective

ஆப்கானிஸ்தானில் போர்: சோசலிச முன்னோக்கு

Part 1 | Part 2 | Part 3

By Nick Beams
9 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

போருக்குப் பிந்தைய விரிவாக்கத்தின் முடிவு

முதலாளித்துவப் பொருளாதாரம் மொத்தமாக அதன் விரிவாக்கத்தை உறுதிப்படுத்தியிருந்த இயங்குமுறைகள் சக்தி இழந்துவிட்டன. மேலும், ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதன் போட்டியாளர்கள் மீதான ஒட்டுமொத்த பொருளாதார மேலாளுமையை இழந்து கொண்டிருக்கிறது. இதன் பதில் பரந்த பொருளாதார மற்றும் அரசியல் மறு ஒழுங்கமைப்பாக இருந்தது.

நோக்குநிலையில் ஏற்பட்ட இந்த இடப்பெயர்வு தொடர்பாக பல அம்சங்கள் இருந்தன. ஜிம்மி கார்ட்டர் ஆட்சியின் மரண நாட்களில் தொடங்கி, நிதி மூலதனம் உயர் வட்டிவீத ஆட்சியாக முன்முயற்சி எடுத்து, அது புதிய தொழில் நுட்பம் மற்றும் மலிவான உழைப்பை சாதகமாக எடுக்கும் உற்பத்தி பூகோளமயமாதல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, பல இலட்சக்கணக்கான வேலைகள் இழப்பு உட்பட, அமெரிக்கத் தொழில் துறைகளின் மறுசீரமைப்பிற்கு வழிவகுத்தது. இது தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தாக்குதலுடன் இணைந்திருந்தது, அது 1981ல் றேகன் நிர்வாகத்தால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தொழிற்சங்கமான பட்கோவை (PATCO) நசுக்கியதில் கண்டது. 1980கள் முழுவதும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக உடைத்தெறிய முடியாத தாக்குதலாக இருந்ததன் ஆரம்பமாக அது இருந்தது.

இன்னொரு முக்கிய பண்புக்கூறு சோவியத் ஒன்றியத்தின் மீதான மிக மூர்க்கமான கொள்கை ஆகும். இது அதன் முழு விரிவாக்கத்தை றேகன் நிர்வாகத்தின் கீழ், சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் மீதான இராணுவ அழுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடல் மற்றும் புதிய ஆயுத முறைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றில் அதன் கவனம் இருந்தது. இந்தக் கொள்கை இடப்பெயர்வின் முதலாவது பாதிப்புக்களில் ஒன்று ஆப்கானிஸ்தானில் இடம் பெற்றது. அங்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் சோவியத் ஆதரவு ஆட்சியை எதிர்த்து முஜாஹைதீன்கள் சண்டையிடுவதற்கு ஆதரவுகொடுக்க ஆரம்பித்தது.

கார்ட்டர் நிர்வாகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஸ்பிக்நிவ் பிரிஜெஜின்ஸ்கியுடனான பேட்டி, அமெரிக்கத் தலையீட்டின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும், சற்றே வெளிக்காட்டும் பேட்டியாகும். இது 1998ல் பிரெஞ்சு செய்தித்தாளான Le Nouvel Observateur ல் வெளியிடப் பட்டது.

"கேள்வி: முன்னாள் சி.ஐ.ஏ இயக்குநர் ரொபேர்ட் கேட்ஸ் தனது வாழ்க்கை நிகழ்ச்சிக் கோவையில், சோவியத் தலையீட்டிற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே ஆப்கானில் முஜாஹைதீன்களுக்கு அமெரிக்க உளவு நிறுவனங்கள் உதவி செய்யத் தொடங்கின என்று குறிப்பிட்டார்...... இந்த காலகட்டத்தில் நீங்கள் கார்ட்டருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தீர்கள். ஆகையால் நீங்கள் இந்த விவகாரத்தில் பாத்திரம் வகித்துள்ளீர்கள். இது உண்மையா?

"பிர்ஜேஜின்ஸ்கி: ஆம்! வரலாற்றின் உத்தியோகப்பூர்வ பதிப்பின்படி, சி.ஐ.ஏ முஜாஹைதீன்களுக்கு அளித்த உதவி 1980ன் பொழுது ஆரம்பமானது, அதை 1979 டிசம்பர் 24ல் சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்த பின்னர் என கூற வேண்டும். ஆனால் இப்பொழுதுவரை இரகசியமாகப் பாதுகாக்கப்படும் யதார்த்தம் முற்றிலும் வேறுவிதமாகும்: உண்மையில் காபூலில் சோவியத் சார்பு எதிராளிகளுக்கு இரகசிய உதவிக்கான முதலாவது ஆணையில் 1979 ஜூலை 3ல் கார்ட்டர் கையொப்பமிட்டார். அதேநாளில் நான் ஜனாதிபதிக்கு எழுதிய குறிப்பில், இந்த உதவி சோவியத் இராணுவத் தலையீட்டைத் தூண்டப் போகின்றது என எனது கருத்தை விளக்கி இருந்தேன்."

அவர், தான் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒருவேளை ஏதேனும் வருத்தம் தெரிவித்திருந்திருப்பாரா என பேட்டியாளர் கேட்டார்.

பிர்ஜேஜின்ஸ்கி பதில்: "எதற்கு வருத்தம்? இரகசிய நடவடிக்கை ஒரு அற்புதமான யோசனை. அது ரஷ்யர்களை ஆப்கன் பொறியில் இழுக்கும் பாதிப்பைக் கொண்டிருந்தது மற்றும் நீங்கள் அதற்கு நான் வருத்தப்பட வேண்டும் என விரும்புகின்றீர்களா? சோவியத் துருப்புக்கள் உத்தியோக பூர்வமாக எல்லையைக் கடந்த நாளில், நான் ஜனாதிபதிக்கு எழுதினேன்: நாம் இப்போது USSR க்கு அதன் வியட்நாம் யுத்தத்தை வழங்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறோம். உண்மையில், கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக, மாஸ்கோ அரசாங்கத்தால் ஆதரிக்கத்தக்க வலிமையற்ற யுத்தத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது, மோதல் செயலிழந்த நிலைக்கு கொண்டு வந்து இறுதியில் சோவியத் பேரரசுக்கு உடைவினைக் கொண்டு வந்தது."

பிர்ஜேஜின்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தின் 1979 தாக்குதலின் விளைபயன்களுக்கு அதன் பொறிவினை கற்பித்துக்கூற விரும்புகிறார். இறுதியில், பொறிவானது தனி நாட்டில் சோசலிசம் எனும் தேசியவாத வேலைத்திட்டத்தின் தவிர்க்க முடியாததன் விளைபொருளாக இருந்தது. அது 1920களிலும் 1930 களிலும் ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தவாறு, சோவியத் பொருளாதாரத்தின் நிலை முறிவுக்கும் முதலாளித்துவ மீட்சிக்கும் இட்டுச் சென்றது. இருப்பினும், அவ்வாறு கூறுகையில், ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த சிதைவுறும் நிகழ்ச்சிப்போக்கை விரைவுபடுத்தியதில், கார்ட்டர் மற்றும் றேகன் காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவை கணக்கில் கொள்ளாது விடுவது தவறாகப் போகும் என்பதைச் சொல்ல வேண்டும்.

1991-92ல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது பிரதான வரலாற்றுத் திருப்பு முனையைக் குறித்தது. உலகின் பரந்த பகுதிகள், பிரதான முதலாளித்துவ வல்லரசுகளின் கீழ் ஒருபோதும் வந்திருக்காதவை, இப்போது திறந்துவிடப்பட்டன. பொருளாதார புவியலில் உள்ள இந்த உருமாற்றம் பிரதான அரசியல் விளைபயனைக் கொண்டிருந்தது.

குளிர் யுத்தத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த அரசியல் உறவுகளின் அடிப்படையில் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்க அரசுகள் தனது பூகோள மேலாதிக்கத்தைப் பராமரித்து வந்தது. இப்பொழுது அந்தக் குளிர் யுத்தம் முடிவுற்றதும், எப்படி அமெரிக்க பூகோள மேலாளுமை பராமரிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கேள்விதான் கடந்த தசாப்தம் முழுவதும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் மீதான விவாதத்திலும் சிந்தனையிலும் மேலாதிக்கம் செய்துவந்திருக்கிறது.

நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முக்கிய நபர்களுள் ஒருவர் ஆப்கானிஸ்தான் தலையீட்டின் ஆசிரியர் ஸ்பெக்நீவ் பிர்ஜேஜின்ஸ்கி, 1997ல் வெளியிடப்பட்ட அவரது புத்தகமான தி கிராண்ட் செஸ்போர்டு- என்பதிலிருந்து சில பந்திகளை மேற்கோள் காட்ட என்னை அனுமதிக்கவும். அவர் எழுதினார்: "இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தம் பாறை அடுக்கின் சிதைவுகளினாலான நகர்வைச் சந்தித்திருக்கிறது. எப்போதுமில்லாமல் இப்போது முதல் தடவையாக யூரேசிய அல்லாத வல்லரசு ஒன்று யூரேசிய ஆளுமை உறவுகள் தொடர்பானதில் முக்கிய அதிகாரம் செலுத்தும் நடுவராக மட்டும் அல்லாமல் உலகின் உயர் தலைமை சக்தியாகவும் கூட தோன்றியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் தோல்வியும் அதன் பொறிவும், பூகோளத்தின் மேற்கு அரைக்கோளத்தின் வல்லரசு, ஐக்கிய அமெரிக்க அரசுகள், முற்று முழுதான, உண்மையில் உண்மையான பூகோள வல்லரசாக, விரைந்து வரும் முன்னேற்றத்தில் இறுதிப் படியாக இருந்தது.

"இருப்பினும், யூரேசியா அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைத் தக்க வைத்திருக்கின்றது. அதன் மேற்கு புறப்பரப்பில் மட்டும் அல்லாமல், -ஐரோப்பா- இன்னும் உலகின் பெரும்பாலான அரசியல் மற்றும் பொருளாதார வல்லரசுகளின் இருப்பிடமாக உள்ளது, ஆனால் அதன் கிழக்குப் பகுதி -ஆசியா- பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் செல்வாக்கு இவற்றின் முக்கிய மையமாக, தாமதமாக ஆகி உள்ளது. அதனால், எப்படி பூகோள ரீதியாக ஈடுபட்டுள்ள அமெரிக்கா சிக்கலான யூரேசியன் அதிகார உறவுகளுடன் பொருந்துவது- மற்றும் குறிப்பாக குரோதம் மிக்க யூரேசிய வல்லரசின் ஆதிக்கம் தோன்றுவதை எப்படித் தடுப்பது- பூகோள மேலாளுமையை செயல்படுத்துவதற்கான அமெரிக்காவின் திறனுக்கு மையப்பிரச்சினையாக இது இன்னும் இருக்கிறது. (The Grand Chessboard, Zbigniew Brzezinski,PP.xiii-xiv)

"யூரேசியாவில் மேலாதிக்கம் செய்யும் வல்லரசு உலகின் மிக முன்னேற்றம் அடைந்த மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தித்திறன் கூடிய பிராந்தியங்களில் மூன்றில் இரண்டு பகுதியைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று பிர்ஜேஜின்ஸ்கி சுட்டிக்காட்டிச் செல்கிறார். யூரேசியா மீது கட்டுப்பாடு செய்வது ஆப்பிரிக்கா மீது கட்டுப்பாட்டைக் கொண்டு வரும். யூரேசியா, அதன் நிறுவன அமைப்புக்கள் மற்றும் மண்ணுக்கு அடியில் இருப்பவை ஆகிய இரண்டிலும் உலகின் பெரும்பான்மை வளங்களைக் கொண்டிருக்கிறது. "யூரேசியா இவ்வாறு சதுரங்கக் களமாக இருக்கிறது, அதன்மேல் பூகோளத் தலைமைக்கான போராட்டம் தொடர்ந்து விளையாடப்படுகிறது." (பக்கம்31)

இந்த ஆய்வு கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடுக்கப்பட்ட யுத்தங்களின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகிறது. ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நீண்டகால மூலோபாய இலக்குகளை பிர்ஜேஜின்ஸ்கி போன்ற உள்ளே இருப்பவர் மட்டும் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டவில்லை. கச்சாப் பொருட்களுக்கும் வளங்களுக்குமான போராட்டத்தின் முக்கியத்துவம் -- சிறப்பாக USSR ன் பொறிவிற்குப் பின்னர் இருப்பவை-- தங்களின் சமீபத்திய இராணுவத் தலையீடுகளுக்கு ஏகாதிபத்திய வல்லரசுகளால் வழங்கப்பட்ட நியாயப்படுத்தல்களின் பின்னால் துருவிப் பார்க்கும் எவருக்கும் வெளிப்படையாகத் தெரியும்.

எடுத்துக்காட்டாக, வெளிவிவகாரக் கொள்கைகள் அமெரிக்கப் பத்திரிகையின் மே-ஜூன்2001 பதிப்பில் வெளியிடப்பட்ட "மோதல்களின் புதிய புவியியல்" எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரை, கவனிக்கப்பட வேண்டிய சிலவற்றைக் கொண்டிருக்கின்றது. 1999 அக்டோபரில் அமெரிக்க இராணுவத்தால் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு, மூலோபாயம் பற்றிய சிந்தித்தலில் ஒரு மாற்றத்தை எதிரொலிக்கிறது என்று சுட்டிக் காட்டுவதன் மூலம் ஆசிரியர் ஆரம்பித்தார். மத்திய ஆசியா, பசிபிக் ஆணையகத்திலிருந்து எடுக்கப்பட்டு மத்திய ஆணையகத்திற்கு வழங்கப்பட்டது. முன்னர், மத்திய ஆசியாவானது புறப்பரப்பு எல்லைகளாக பார்க்கப்பட்டிருந்தது.

"ஆனால் யூரல் மலைகளில் இருந்து சீனாவின் மேற்கு எல்லைவரை விரிந்து கிடக்கும் பிராந்தியம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பரந்த வளங்கள் காஸ்பியன் கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றிலும் கிடப்பதாகக் கருதப்படுவதன் காரணமாக, இப்பொழுது பிரதான மூலோபாயப் பரிசாக ஆகி உள்ளது. பாரசீக வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை ஏற்கனவே மத்திய ஆணையகம் கட்டுப்படுத்துவதனால், மத்திய ஆசியா மீது கட்டுப்பாட்டைக் கொள்வதற்கான அதன் ஊகம், இந்தப் பகுதி -ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எண்ணெய் செல்வதைப் பாதுகாத்தலை பிரதான பணியாகக் கொண்டுள்ளவர்களின் நெருங்கிய கவனத்தைப் பெறுகின்றது என அர்த்தப்படுத்துகிறது."

மத்திய ஆசியா பற்றிய புதிய முக்கியத்துவம் அமெரிக்க மூலோபாய எண்ணங்களில் ஏற்பட்ட ஒரு பரந்த உருமாற்றத்தின் பகுதியாக இருந்தது என்று கட்டுரை சுட்டிச் செல்கிறது. குளிர் யுத்தத்தின் போது, இராணுவத் திட்டமிடலானது அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையிலான மோதலால் மேலாதிக்கம் செய்யப்பட்டது, இப்பொழுது மற்றைய முக்கியத்துவங்களும் தோன்றியிருக்கின்றன.

புவியியல் மூலோபாயத்தில் ஏற்பட்டுள்ள இந்த நகர்வு, முக்கிய வளங்கள் சிறப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இவற்றின் அளிப்புக்களைப் பாதுகாத்தல் மீது புதிய வலியுறுத்தல்களைச் செய்கின்றது. குளிர் யுத்தகால பிரிவுகள் சித்தாந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன மற்றும் அமைக்கப்பட்டன. பொருளாதாரப் போட்டி இப்பொழுது சர்வதேச உறவுகளை இயக்குகிறது--இந்த முக்கிய பொருளாதார செல்வத்தை பெற விரும்புவதன் மீதான போட்டி அதன்படி உக்கிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், ஆசிரியர் தொடர்கிறார், "கிடைத்தற்கரிய பொருட்களைப் பெறுவதற்கான -- குறிப்பாக எண்ணெய் போன்ற, அதுவும் போட்டி மிக்க பகுதிகளில் அல்லது அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற பகுதிகளில் காணப்படும் பொருட்களைப் பெறுவதற்கான உக்கிரமான போட்டியிலிருந்து எழும் பிரச்சினைகளுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த கவனத்தைச் செலுத்தத் தொடங்கி உள்ளனர்."

வெளிவிவகாரக் கொள்கைகள் செப்டம்பர்-அக்டோபர் இதழில், "காஸ்பியன் சக்தி இடர்ப்பாடு மிக்க புதிய திருப்பத்தில்" என்று தலைப்பிடப்பட்ட இன்னொரு கட்டுரை இந்தப் பிராந்தியத்து வளங்களின் தீர்க்கமான முக்கியத்துவத்தையும் கூட சுட்டிக் காட்டுகின்றது.

"பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளது அமைப்பு, வரவிருந்த தசாப்தத்தில் பூகோள எரிபொருள் சந்தையில் தொடர்ந்து மேலாதிக்கம் செய்யவிருக்கும்போதும், காஸ்பியன் படுகையில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இவற்றின் அபிவிருத்தி, கடந்த காலத்தில் வடக்கில் இருந்து கிடைத்த வளங்கள் செய்திருக்கிறவாறு, எதிர்காலத்தில் உலக சக்தி அளிப்பை பல்வகைப்படுத்த, பாதுகாக்க மற்றும் ஸ்திரப்படுத்த உதவ முடியும். காஸ்பியன் படுகை பிராந்தியத்தில் அல்லது அதனை அடுத்து உள்ள பகுதியில் கிடைக்கும் சாத்தியமான மற்றும் நிரூபிக்கப்பட்ட சக்தி சேம இருப்பு வளம்-சுமார் 115 பில்லியன் பாரல்கள் எண்ணெய் உட்பட- உண்மையில் வடகடலினதை விட பன்மடங்கு அதிகம் ஆகும், மற்றும் தொடர்ந்து தோண்டுவதன் மூலம் அது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்.

"அத்தகைய நிறைந்த வளங்கள் அமெரிக்க கம்பெனிகளுக்கும் அவற்றின் பங்குதாரர்களுக்கும் பெரும் இலாபத்தை உண்டு பண்ண முடியும். அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே கஜக்கஸ்தானின் மிகப்பெரிய டென்ஜிஜ் எண்ணெய் வயலில் 75 சதவீதத்தைப் பெற்றிருக்கின்றன, அது இப்பொழுது 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மிகை நேரமாக, காஸ்பியன் சக்தி அபிவிருத்தியில் உண்டு பண்ணப்படும் மூலதனம் ஏனைய துறைகளுக்குப் பரவ, ஏனைய தொழில் துறையில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு --உள்கட்டுமானத்திலிருந்து தொலைத் தொடர்புகள், போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகளுக்கும் கூட பயனளிக்கக் கூடும்."

இங்குதான் ஆப்கானிஸ்தானின் புவிசார் அரசியல் அமைந்திருக்கிறது. அதன் எல்லைகள் காஸ்பியன் கடற்பிராந்தியம், உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வள சேமக்கள இருப்பைக் கொண்டிருக்கிறது. மேலும் அது இந்த அளிப்புக்களை ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் ஏனைய சர்வதேச சந்தைகளுக்கும் கொண்டு செல்லும் எண்ணெய்க் குழாய் வழிப்பாதைக்கான சாத்தியத்தையும் வழங்குகின்றது --அக் குழாய் வழிப்பாதை ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வராது, ஈரான் வழியாகவும் செல்லாது.

தொடரும்.........