World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்

Why is Bush refusing to negotiate with the Taliban?

தலிபானுடன் பேச்சுவார்த்தைக்கு ஏன் புஷ் மறுக்கின்றார் ?

By Jerry White
17 October 20001

Use this version to print

ஐக்கிய அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேல் குண்டுகள் போடுவதை நிறுத்துவதுடன், சவுதியில் இருந்து அடைக்கலமடைந்தவர்தான் நியூயோர்க்கிலும், வாஷங்டனிலும் செப்டம்பர் 11 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர் என்பதை நிருபித்தால், தலிபான் அரசாங்கம் ஒசாமா பின் லேடனை கையளிப்பதாக விடப்பட்ட கோரிக்கையை ஜனாதிபநி புஷ் முற்று முழுதாக நிராகரித்துள்ளார்.

ஞாயிறு அன்று Jalalabad இல் ஆப்கானிஸ்தானின் உதவிப்பிரதம மந்திரி Maulvi Abdul Kabir ஓர் சர்வதேச பத்திரிகையாளர் குழுவிற்கு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது குண்டுகள் போடுவதை நிறுத்தினால் "நாங்கள் அவரை கையளிப்பதற்கு தயாரகவுள்ளோம்" எனக் கூறினார். Kabir பேச்சுவார்த்தைக்காக அழைக்கையில் "ஆதாரங்கள் காட்டப்பட்டால், அமெரிக்காவினதும் தலிபானினதும் செல்வாக்கின் கீழ் உட்படாத ஓர் மூன்றாவது நாடு இதற்காக தெரிவு செய்யப்படலாம்" எனவும் கூறினார்.

புஷ் இக் கோரிக்கையை உடணடியாக மறுத்தார். ஞாயிறு அன்று செய்தியாளர்களுக்கு தேசிய உயர் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தனது Camp David இல் மறைந்திருந்துவிட்டு திரும்பிவந்து சில நிமிடங்கள் கழித்து புஷ் பேட்டியளிக்கையில் "அவர்கள் கூறுவதை கேட்கதேவையில்லை. இங்கே பேச்சு வார்தைகளுக்கு இடமில்லை. இது பேச்சுவார்த்தை நடாத்த முடியாத ஒன்றாகும்'' எனக் கூறினார்.

தலிபான் தலைமைப்பீடம் ஒசாமா பின் லேடனை கையளிப்பதற்கான சாத்தியக் கூறுகளுக்கான பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இது முதல் தடவையல்ல; போர் ஆரம்பமாகும் கட்டத்தில் பாக்கிஸ்தானில் உள்ள தலிபானுடைய தூதுவர், Mullah Abdul Salam Zaeef பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரங்கள் காட்டப்பட்டால் ஒசாமா பின் லேடன் கையளிக்கப்படுவார் எனக் கூறினார். புஷ் அதை மறுத்ததுடன் குண்டுகள் போடுவதற்கான பிரச்சாரத்தை முன் நடத்தினார்.

செவ்வாயன்று New York Times பத்திரிகை "தலிபான் தலைப்பீடத்தின் ஓர் பிரிவு, இரகசியமாக பாக்கிஸ்தானிய அதிகாரிகளுடன் முதல் நாள் சந்தித்ததுடன், அமெரிக்கா இரண்டோ மூன்று நாட்களுக்கு குண்டுகள் போடுவதை நிறுத்தினால் அவர்கள் ஒசாமா பின் லேடனை கையளிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பதாக'' கூறியதாக எழுதியிருந்தது. New York Times மேலும் குறிப்பிடுகையில், எப்படியிருந்தாலும் பாக்கிஸ்தானிய, அமெரிக்க அதிகாரிகள் இந்த ஆரம்ப கால பேச்சுவார்த்தை பிரச்சனையை தீர்க்குமா என சந்தேகித்தனர். ஏனெனில் புஷ் தான் பேச்சுவார்த்தைக்கோ அல்லது ஒசாமா பின் லேடனை கையளிப்பது பற்றி கலந்துரையாடவோ மாட்டேன் என பலதடவை கூறியதாலாகும்.

பிரச்சனைகளின் தொடக்கத்தில், அமெரிக்க அரசாங்கம் தான் இப்போரை ஆப்கானிஸ்தானிற்கு எதிராக நடாத்துவதற்கு ஆயத்தப்படுத்துவது ஏனெனில் தலிபான் பின் லேடனை கையளிக்க மறுப்பதால் என கூறியது. ஆனால் இப்போது ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் நியாயமான கோரிக்கையை கேட்கும்போது, அதற்கு அமெரிக்காவின் பதில், கோரிக்கையை நிராகரிப்பதுடன், எந்தவிதமான பேச்சுவார்த்தையுமே இல்லை என மறுக்கின்றனர்.

தனியே நடைமுறை நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, "பேச்சுவார்த்தைக்கிடமில்லை" என பயமுறுத்தலுடன் தோற்றமளிக்கும் நிலை முட்டாள்த்தனமானதாகும். தலிபான் கூட அமெரிக்காவின் வேண்டுகோள்களை பூர்த்தி செய்ய விரும்பினாலும் அவர்களால் எப்படி வாஷிங்டனுடன் ஓர் பேச்சு வார்த்தைக்கு போகாமல் அதை நிறைவு செயய் முடியும்? அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு மறுத்து, நிபந்தனைகளை முன்வைக்கும் வழமையான முறை ஒன்றை மாத்திரம் விளங்கப்படுத்துகிறது. அது புஷ் நிர்வாகம் எந்த விதமான உடன்பாடுகளையும் ஏற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என்பதாகும்.

செப்டெம்பர் 11ந் திகதி நடந்த தாக்குதலில் பின் லேடனின் ஈடுபாட்டிற்கான ஆதாரத்தை தலிபான் கேட்டது. அமெரிக்கா தனது திடகாத்திரமான ஆதாரங்களை காட்டுமாறு தலிபான் வலியுறுத்துவது ஏன் நியாயமற்றது? சில கிழமைகளுக்கு முன்னர், அரச செயலாளரான Colin Powell அமெரிக்காவால் குற்றம்சாட்டப்பட்ட, கடந்தமாத தாக்குதலை திட்டம் தீட்டியவருக்கெதிராக ஆதாரங்களை வெளிக்கொண்டுவருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் புஷ் நிர்வாகம் இந்த வாக்குறுதியில் இருந்து விலகிக்கொண்டது.

ஒருவர் அமெரிக்க அரசாங்கத்தின் பதிலளிப்பை கற்பனை செய்து பார்த்தால், இன்னுமோர் நாடு கொலைக்குற்றத்திற்காக அமெரிக்க பிரஜை ஒருவரை அந்த நபருக்கெதிரான சாட்சியங்களை வெளிக்காட்ட மறுத்து அவரை கையளிக்கும்படி கோரினால் எப்படியிருக்குமோ அதே போன்றதுதான் இதுவும்.

வெள்ளை மாளிகை புற்தரையில் நின்று ஞாயிறு பேசிய புஷ், தனது நிலைப்பாட்டை திரும்பவும் உறுதிப்படுத்தியதாவது, அமெரிக்கா பின் லேடனுடைய ஈடுபாடு பற்றி கட்டாயமாக ஆதாரங்கள் காட்ட வேண்டுமென கடமைப்பட்டிருக்கவில்லை என்பதாகும். அவர் "இங்கே சுற்றவாளியா அல்லது குற்றவாளியா என விவாதிக்க தேவையில்லை. அவர் குற்றவாளியென எக்களுக்கு தெரியும். அவரை கையளிக்கவேண்டும். அவர்கள் எங்களுடைய இராணுவ தாக்குதல்களை நிற்பாட்ட விரும்பினால், அவர்கள் எங்களுடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என கூறினார்.

வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதாயின் தலிபான் மட்டுமல்ல முழு உலகமுமே பின் லேடனுக்கு எதிரான வாஷிங்டனினுடைய குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை ஏற்க வேண்டும். ஆனால் உலகமக்கள் பின்வருமாறு கேட்பதற்கு சகல உரிமையும் உண்டு: உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் ஏன் வெளிக்காட்டகூடாது?

செப்டம்பர் 11 தாக்குதலை பின் லேடன் வரவேற்றது பற்றி எந்தவிதமான கேள்வியும் இல்லை. மிகவும் பிற்போக்கான தொழிலாள வர்க்த்திற்கு எதிரான குணாம்சம் கொண்ட தேசியவாத அரசியலையும் இது உள்ளடக்கியுள்ளது. எது எப்படியிருந்தாலும் அவர் தான் விமானத்தை கடத்தி 5000 அதிகமான மக்கள் இறந்ததற்கு பொறுப்பு என நிரூபிக்கப்பட இது மட்டும் போதுமானதல்ல.

எந்த சர்வதேச சட்டத்தின் அடித்தளத்தில் ஒரு அரசாங்கம் ஒரு தனிநபரை அமெரிக்காவிடம் கையளிக்குமாறு கேட்பது என்பதற்கு புஷ் அரசாங்கம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. செப்டம்பர் 11 தாக்குதலை விட மிகவும் முக்கியம் குறைந்த குற்றங்களில் பொலிசார் கைதுசெய்யும் உத்தரவு பத்திரத்தை பெறவேண்டும், ஆதாரங்கள் சமர்ப்பிக்கவேண்டும். சட்ட விடயங்கள் தொடர்பான கூடுதலான கவனமும், காரணங்கள் தொடர்பாக தீவிர விசாரணையும் தேவையான இந்த விடயத்தில் புஷ், பின் லேடன் குற்றவாளியா அல்லது சுற்றவாளியா என்பது தொடர்பாக விவாதிக்கத்தேவையில்லை எனவும், அமெரிக்க ஜனாதிபதி கூறுவதால் சாதாரணமாக கையளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.

தனது சொந்த சர்வேதச பொறுப்புகள் என பார்க்கும்போது அமெரிக்கா இரண்டு வகைப்பட்ட நிலைப்பாட்டை வைத்திருக்கின்றது. சர்வதேச நீதிமன்றத்திற்கோ அல்லது ஒல்லாந்திலுள்ள Hauge நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுகளுக்கு முகம்கொடுக்கும் எந்தவொரு தனது பிரஜைகளை கையளிப்பது பற்றி வாஷிங்டன் சர்வதேச நீதிமன்றத்துக்கு கட்டுப்படாமல் இருப்பது தனது அடிப்படை உரிமை என கடைப்பிடிக்கிறது. 1986 இல் சர்வதேச நீதிமன்றம், அமெரிக்கா சர்வதேச சட்டத்தை அத்துமீறி நிக்கராகுவாவில் உள்ள கடலில் கண்ணிவெடிவைத்ததுடன், Contras படைகளை ஆயுதபாணியாக்கியதாக தண்டனை விதித்தது. அமெரிக்கா இத் தண்டனையை அலட்சியம் செய்ததுடன் உலக நீதிமன்றம் இச்செயலின் நியாயத்தை ஆதிக்கம் செய்ய முடியாது என கூறியது.

மேலதிகமாக பின் லேடனை கையளிப்பது மட்டுமல்லாது, தலிபான் முடிந்தளவு பூர்த்தி செய்ய முடியாத ஒரு தொடர் கோரிக்கைகளை விதித்துள்ளது. இது அமெரிக்காவால் கோரப்பட்ட பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு "முழுவழிளையும்" வழங்க அனுமதிக்கவும், அதாவது இராணுவ ரீதியில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதாகும். தலிபான் நிச்சயமாக இக் கோரிக்கைகளை ஏற்கமாட்டாது என்பது தெரிந்தபடியே, புஷ் நிர்வாகம் குண்டுகளை போடுவதால் நாட்டை ஆக்கிரமிப்பதோடு, கொலைகள் செய்வதன் மூலமாக ஆப்கானிஸ்தானிய மக்களை மிரட்டுகிறது.

செப்டம்பர் 11ம் திகதியின் நிகழ்வுகள் எவ்வளவிற்கு பயங்கரமானதாக இருப்பினும், அது மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்கான காரணமல்ல. இது ஒரு சாட்டாக பயன்படுத்தப்படுகின்றது.

அமெரிக்கா தனது மக்களுக்கும், உலகத்திற்கும் முன்வைப்பதை விட வித்தியாசமான திட்டத்தை அமெரிக்கா அரசாங்கம் தொடர முனைகிறது. இது கடந்த மாத பயங்கரத்தை தனது நீண்ட கால திட்டமான எண்ணெய் வளங்கள் மிகுந்த பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அமுல்படுத்த முயல்கிறது. இறுதியில் இந்த நோக்கங்களை உறுதிப்படுத்த வெள்ளை மாளிகை, தலிபானுடன் கையாள முயலுகின்றது.