World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்:
Worldwide protests against US bombing of Afghanistan
ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு எதிராக உலகெங்கும் எழும் எதிர்ப்புகள்
By Julie Hyland
10 October 2001

Use this version to print

ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவினது திட்டமிட்ட குண்டுத்தாக்குதல் நடவடிக்கைகள் மீதான ஆத்திரம் பலநாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது, சில சமயங்களில் இவை வன்முறை மோதல்களுக்கும் இட்டுச்செல்கின்றன.

பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையருகே உள்ள மேற்குப் பாகிஸ்தான் நகரமமான குயாத்தாவில் 15,000 அளவிலானோர் மூன்று மணிநேரத்திற்கு மேலாக பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஒரு பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் குழந்தைகளுக்கான (UN children's fund) நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் பல கடைகளும் திரையரங்குகளும் தீக்கிரையாக்கப்பட்டன. பொலிசார் கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் பலர் காயமடைந்தனர். சுமார் 75 பேர்வரை கைதுசெய்யப்பட்டனர்.

அமெரிக்க வான் தாக்குதலுக்கு எதிராக Kuchlak நகருக்கு அருகில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பெருமளவில் ஆப்கான் அகதிகளாகவிருந்த 1,500 பேர்வரையிலான கூட்டத்தினர் மீது பொலிசார் சரமாரியாக சுட்டதில் 12 வயது சிறுவன் உட்பட மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பெசாவார் (Peshawar) இல் கூட்டத்தினர் மீது பொலிசார் சுட்டதில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஹைபர் பஜாரில் தொடர்ந்த சண்டைகளில் இயந்திரத் துப்பாக்கிகள் தாங்கிய சிப்பாய்கள் சகிதம் நின்ற கலகம் அடக்கும் பொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதல்களை நடாத்தியதுடன் தடியடிப் பிரயோகமும் செய்தனர். ஐக்கிய அமெரிக்காவின் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றடைய முடியாமல் தடுக்க அதனை சுற்றியுள்ள வீதிகளில் ஆயுதம் தாங்கிய படையாட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தடைகளாகப் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களினால் நடாத்தப்பட்ட ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து, அனைத்து நகரங்களிலுமுள்ள மாணவர்கள் காலவரையறையின்றி வீடுகளில் தங்குமாறு பணிக்கப்பட்டதுடன் வடமேற்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

மேலும் வடக்குப் பக்கமாக லான்டி கொத்தல் என்னும் இடத்தில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கொடும்பாவியை எரிக்க கூடியிருந்த 5,000 பழங்குடி இனத்தை சார்ந்த மக்கள் மீது ஊர்காவல் படையினர் சுட்டதில் குறைந்தது மூவர் காயமடைந்தனர். தெற்கிலுள்ள கராச்சி நகரத்திலும் ஆங்காங்கே வன்முறைகள் நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக்கடுமையான பாதுகாப்புடைய தலைநகரமான இஸ்லாமாபாத்தில் பலநூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகக் கட்டிட அருகிலும் அமெரிக்க கலாச்சார நிலையத்தின் அருகிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரத்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய தூதரகங்கள் மிகவும் கடுமையான பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் முஷ்ராப் அமெரிக்காவினது யுத்த நடவடிக்கைகளுக்கு தீர்க்கமானதாக விளங்கும் வான் தாக்குதல்களுக்கு அவரது ஆதரவினை, கடும் போக்காளர்களின் நடவடிக்கைகள் என எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதன் மூலமும் மற்றும் அவர்களை "மிகச் சுலபமாக கட்டுப்படுத்த முடியும்" என கூறுவதன் மூலமும் வழங்குகின்றார். திங்களன்று தலிபான்-சார்புள்ள இஸ்லாமிய கூட்டுக்களின் தலைமையாட்கள் மூவர் பாகிஸ்தான் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பாகிஸ்தான் பாதுகப்பு சபை (Pakistan Defence Council) எனப்படும் 35 கட்சிகள் கொண்ட கூட்டணி ஐக்கிய அமெரிக்காவின் தாக்குதலை எதிர்ப்பதற்கு சபதம் செய்தது. Azam Tariq, Fazlur Rehman, Samiul Haq ஆகிய அம் மூவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் கூட வன்முறை ஆர்ப்பாட்டங்கள் திடீரென கிளம்பின. இதன் காரணமாக மிகப் பெரும்பாலான நகரின் பகுதிகள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தாக்குதலை எதிர்த்து காஷ்மீர் பல்கலைக்கழக வளாகத்தில் கற்களை வீசியும் அமெரிக்க எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்ட பொழுது முப்பது பேர்வரை காயமடைந்தனர், இவர்களில் பலர் முஷ்ராப் அமெரிக்காவிற்கு ஆதரவளிப்பதனை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.

கல்கத்தாவில் இந்திய ஐக்கிய சோசலிச மையத்தினை [Socialist Unity Centre of India (SUCI)] சேர்ந்த யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் 1000 பேர் அமெரிக்க நிலையத்தின் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு அவர்கள் புஷ்ஷினது கொடும்பாவியையும் எரித்தனர். ஒசமா பின் லேடனே பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பாளி என்பதற்கு அமெரிக்காவினால் எந்த ஆதாரத்தையும் தரமுடியாது என SUCI இன் தலைவர் பிரபாஸ் கோஸ் தெரிவித்தார். நாட்டின் நான்கு ஸ்ராலினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒரு கூட்டு அறிக்கையில், இந்திய ஆளும் கூட்டணியினரை தலைமை தாங்கும் இந்துமதவாத தேசிய கட்சியான பாரதீய ஜனதா கட்சியை அமெரிக்கத் தலைமையிலான யுத்த நடவடிக்கைக்கு உதவி வழங்கக்கூடாது என எச்சரித்தனர்.

உலகில் மூன்றாவது அதிகளவு முஸ்லீம் மக்களைக் கொண்ட பங்களதேஷின் தலைநகரான டாக்காவில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. "பங்களதேஷின் மண் அமெரிக்காவுககு அல்ல" எனவும் "லேடனே இஸ்லாத்தின் பாதுகாவலர்" எனவும் கோஷமிட்டனர், பலநூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்காளதேஷ் தேசியக்கட்சியின் தலைமையிலான நான்கு கட்சிக் கூட்டணியில் உள்ளதும் இன்று ஆட்சியில் உள்ளதுமான இஸ்லாமிக் Oikya Jote இன் தலைவர் Fazlul Haq Amini இன் அமெரிக்காவிற்கு எதிரான பயமுறுத்தும் யுத்தத்திற்கான அழைப்பினை செவிமடுத்தனர். பங்களதேஷ், அமெரிக்காவிற்கு அதனுடைய வான் பகுதியையும் மற்றும் மற்றய பிரத்தியேக வசதிகளையும் அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு கொடுத்துள்ளது, ஆனால் இவ்வேளையில் இந்நாட்டின் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு புனித யுத்தத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு அழைக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

எகிப்தில், கைரோ மற்றும் வடபகுதில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகத்தை சேர்ந்த 20,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வான்தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதோடு ஐக்கிய அமெரிக்காவின் தாக்குதலுக்கான அரசாங்கத்தின் ஆதரவை வன்மையாகக் கண்டனம் செய்தனர். ஜனாதிபதி ஹஸ்னி முபாரக் (Hosni Mubarak) அரபு நாடுகளின் கூட்டுக்களின் மத்தியில் அமெரிக்காவினுடைய மிகவும் பலம்வாய்ந்த விசுவாசியாக இருந்து வருகின்றார், ஆனால் இக் குண்டுத்தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. பல்கலைக் கழகங்களுக்கு வெளியில் பாதுகாப்பு படையினர் காவலில் நின்றிருந்த பொழுதிலும் Al-Azhar பல்கலைக்கழகத்திலிருந்து 4,000 அளவிலும் மற்றும் Alexandria பல்கலைக்கழகத்திலிருந்து 3,000 அளவிலும் மேலும் வடக்கிலுள்ள Zagazig பல்கலைக்கழகத்திலிருந்து 2,500 அளவிலுமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் விமானத்தாக்குதல் ஆரம்பித்தவுடனேயே முக்கிய கண்டனக்காரர்களுக்கு எதிரான பாரிய தடுப்பு நடவடிக்கைகளை ஜோர்டான் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டதுடன், ஜோர்டான் பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தது 10 இஸ்லாமிய மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

பிரித்தானியாவின் பாரிய இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்ட இடமான ஓமானில், முக்கியமாக மாணவர்களால் நடாத்தப்பட்ட யுத்தத்திற்கெதிரான சிறிய கண்டன ஆர்ப்பாட்டமானது பொலீசாரால் அடக்கப்பட்டது.

ஆசியாவின் இன்னொரு இடமான இந்தோனேசியாவில் வன்முறையான கைகலப்புக்கள் நடந்ததுடன், உலகிலேயே பரந்தளவு முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்தும் வருகின்றார்கள். இரண்டாவது நாள், தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் கண்டன ஊர்வலம் நடாத்தினர். இந்தோனேசியப் பொலீசார் எச்சரிக்கைத் துப்பாக்கிப் பிரயோகங்களையும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், தண்ணீரைப் பீரங்கிகளால் பீச்சியடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். இக்கைகலப்பில் குறைந்தது நான்கு பேர்கள் காயப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதுடன் அதனைச்சுற்றிலும் கூரான கம்பி வேலிகளும் போடப்பட்டது. பிரித்தானியத் தூதரகத்துக்கு வெளியிலும் சிறியளவிலான கண்டனக்காரர்கள் கூடியிருந்தனர். ''அமெரிக்காதான் உண்மையான பயங்கரவாதிகள்'' என பாட்டுக்களைப் பாடியபடி தலைநகரிலுள்ள ஐ.நா கட்டிடத்துக்கு வெளியில், இந்தோனேசிய இஸ்லாமிய மாணவ நடவடிக்கை குழுவினைச் சேர்ந்த 200 பேர்கள் பிறிதொரு குழுவாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தோனேசிய உலாமா (இஸ்லாமிய சமயத் தலைவர்கள்) சங்கமானது 40 இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டதன் பின் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள், அங்கு எஞ்சியிருக்கின்ற சகல வெளிநாட்டினரையும் வீடுகளில் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினர். இந்தோனேசியா அரசாங்கம் அமெரிக்காவுக்கு வழங்கும் ஆதரவிற்காக அவர்கள் விமர்சனம் செய்தபடி ''தாக்குதலை நிறுத்துமட்டும் அமெரிக்கா மற்றும் அதனது கூட்டுக்களுடனான இராஜதந்திர உறவுகளை நிறுத்துமாறு'' கேட்டுக் கொண்டனர்.

Makassar ல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவித்ததுடன், Sulawasi தீவிலும் மற்றும் bandung லுள்ள Javanese நகரிலும் 2000 மக்கள் ஊர்வலம் செய்தார்கள்.

ஜப்பானில் டோக்கியோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியில் யுத்தத்திற்கெதிரான ஊர்வலமும், 370.000 பலமான ஆசிரியர்களைக் கொண்ட ஆசிரியர் சங்கம் அமெரிக்காவின் குண்டுத்தாக்குதலைக் கண்டித்ததுடன் உடனடியாக அதை நிறுத்ததும்படியும் கோரியது.

ஐரோப்பாவின் பெரிய நகரங்களிலும், ஆங்காங்கே ஊர்வலங்கள் நடந்தேறின. ஜெனீவா, அம்ஸ்ரடாம், மற்றும் பார்சலோன் ஆகிய நகரங்களிலிருந்து 15.000 மக்கள் யுத்தத்திற்கெதிரான ஊர்வத்தில் பங்குபற்றினார்கள். அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஸ்ரொக்கோல்ம், கெல்சிங்கி, ரோம் ஆகிய நகரத்திலுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் ஐ.நா சபையின் வெளியே கண்டன ஊர்வலங்களை மேற்கொண்டார்கள். நிலத்தில் அமர்ந்தபடியும் மிலான், டுரீன் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

கிரேக்கத்தின் தலைநகர் ஏதெனில் அமெரிக்கத் தூதரகம் நோக்கி ஊர்வலம் சென்றபோது நூற்றுக்கணக்கான பொலிசாரினால் இவ்வூர்வலம் தடை செய்யப்பட்டது.

புஷ் நிர்வாகத்துடன் கூடிக்கொண்டுள்ள அயர்லாந்து அரசாங்கத்துக்கு எதிராகவும், யுத்தத்திற்கெதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே குண்டுத் தாக்குதலுக்கு எதிராக கண்டணம் செய்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பிரான்சில் பாரிசிலும், ஸ்ராஸ்பேர்க்கிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

பிரித்தானியாவிலும் ஆற்றல்மிக்கதான கண்டனங்கள் நடந்தேறின. ''ஏழைகளுக்கு உணவைக் கொடு யுத்தத்தை நிறுத்து'' எனப் பாட்டுப்பாடி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்கார்கள் குண்டுத்தாக்குதல்கள் ஆரம்பித்த ஞாயிறு மாலையன்றே Downing street ல் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதே மாலையில் Birmingham ல் கூடிய நூற்றுக்கணக்கானவர்களும் ''யுத்தத்தை நிறுத்து'' என ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இவ்விரு சம்பவங்களும் அமைதியாக நடந்தேறின. எவ்வாறெனினும், கிளாஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடத்துக்கு வெளியே நடந்த கண்டன ஊர்வலத்தைத் தொடர்ந்து ஆறு பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். மனிதாபிமான உணவு வழங்கல் என்னும் பேரில் அமெரிக்காவின் குண்டுத்தாக்குதல்ளைக் கண்டித்து ''இறந்தவர்கள் எதை உண்பார்கள்'' என்னும் சுலோகக் கொடியை முதலாம் மாடியில் பறக்கவிட்டதற்காக மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் உள்ளே தள்ளப்பட்டார்கள். இதே போன்ற ஆர்ப்பாட்டங்ளைச் செய்ததற்காக வேறு இரண்டு பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்த Faslane சமாதான முகாம் என்னும் அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் ''புஷ்ஷும், பிளேயரும் அந்தவகைப்பட்ட கொலைகாரர்களல்ல. மாறாக ஒசாமா பின் லேடனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அவர்களிடம் சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில், சர்வதேச நீதிமன்றத்திற்கு அவரைக் கொண்டுவர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

கிளாஸ்கோவ் சதுக்கத்தில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி இரண்டு மணித்தியாளத்துக்கும் மேல் விழித்திருந்ததுடன், ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பேர்க்கில் 200 பேர்கள் பாரளுமன்றத் திடலில் அணிதிரண்டு ''பயங்கரத்துக்கான மாற்றுவழி பயங்கரமல்ல'' என்னும் கோசத்துடன் பாடிக்கொண்டிருந்தார்கள்.