World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australian government extends unconditional support to US war drive

அவுஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்க யுத்த நகர்விற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது

By Linda Tenenbaum
20
September 2001

Use this version to print

ஹவாட் (Howard) இன் லிபரல் அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த்தை" நடத்துவதற்கு நிபந்தனையற்றதும், நீடித்த உதவியை வழங்கியதுடன், தேவைப்படின் அவுஸ்ரேலிய படைகளை அமெரிக்காவின் கட்டளையின் கீழ் செயல்பட விடவும் தயாராகவுள்ளது. இதன் நிலைப்பாடு Hawke இன் தொழிற்கட்சி அரசாங்கம் (Labour government) 1990 இல் உலகத்திலேயே முதல் முதலாக மிகவும் வெளிப்படையாக அமெரிக்காவால் ஈராக்கிற்கு எதிராக நடாத்தப்பட்ட போருக்கு இராணுவ உதவியை செய்வதற்கு உறுதிமொழி கூறியதை எதிரொலிக்கின்றது.

இரண்டு டசினிற்கு மேலான அவுஸ்திரேலிய ஆகாயப்படை வீரர்கள் ஏற்கனவே ஆகாய யுத்த கவனிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கென அமெரிக்க கண்டத்திற்கு பறந்து சென்றதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தனது போர்க்கப்பலான (HMAS Anzac) பாரசீக வளைகுடாவிலிருந்து திரும்பி வருவதை செப்டம்பர் 23 வரை தாமதிக்க சம்மதித்துள்ளது. 164 சிப்பாய்களை கொண்ட Anzac அமெரிக்க கடற்படை குழுவுடன் சேர்ந்து ஈராக்கிற்கு எதிராக கடந்த பத்து வருட காலமாக அமுலில் உள்ள பொருளாதர தடையை கண்காணிப்பதன் மூலமாக நாற்றுக்கணக்கான மக்கள் இறப்பதற்கு பொறுப்பாகவிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திங்கள் அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Downer, அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைகள் அமெரிக்கா அழைத்தவுடன் "புறப்படுவதற்கு ஆயத்தமாக உள்ளார்கள்" என பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஓர் இராணுவ ஆய்வாளர் "அவர்கள் உண்மையிலேயே என்ன திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரியாமல் பைத்தியம் பிடித்தவர்கள் போல திட்டமிடுகின்றார்கள்'' என கருத்து தெரிவித்தார்.

உலக வர்த்தக மையத்தின் மீதும், பெண்டகன் மீதும் கடத்தப்பட்ட விமானம் தாக்கிய அதே கணப்பொழுதில் இருந்து, பிரதம மந்திரி ஹவாட்(Howard) அவுஸ்திரேலியா அமெரிக்காவின் மிகவும் விசுவாசமான கூட்டாளியாக காட்டிக் கொள்ள சிரமப்பட்டுள்ளார். இவ்விரு நாடுகளுக்கிடையேயும் நியுசிலாந்துடனும் இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு பின்னர் கையெழுத்திடப்பட்ட ANZUS உடன்படிக்கையின் 50வது வருடாந்த ஞாபகார்த்தத்தை கொண்டாடும் நோக்கமாக பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னராகவே பிரதம மந்திரி Washington இல் சமூகமளித்திருந்தார். செப்டம்பர் 9 அன்று உதவி ஜனாதிபதி Cheneyயும் அமெரிக்க அரசின் செயலாளரன Colin Powell உட்பட உயர் மட்ட நிர்வாக அதிகாரிகளுடன் சேர்ந்து விருந்து கொடுத்து உபசரிக்கப்பட்டார். அடுத்த நாள் ஜனாதிபதி புஷ் ஐ சந்தித்ததுடன் அவுஸ்திரேலிய அமெரிக்க உறவை உறுதிப்படுத்தும் ஓர் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

இத் தாக்குதல் நடந்து ஐந்து மணித்தியாலத்திற்குள் யார் இதை செய்திருப்பார்கள், எங்கிருந்து செய்யப்பட்டது என்பதற்கான சாட்சிகளை கண்டறிவதற்கு முன்னரே, அமெரிக்கா "எந்த நடவடிக்கை எடுக்க நேரிட்டாலும்" அவுஸ்ரேலியா சந்தேகமற்ற முறையில் உதவி செய்யும் என ஹவாட் பிரகடனம் செய்திருந்தார். இப்படி அறிவித்த முதல் மேற்கத்தைய தலைவரான இவரை அடுத்தநாள் அமெரிக்க காங்கிரசில் எழுந்து நின்று மரியாதை செய்யப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டார்.

ஐந்து நாட்களின் பின்னர், NATO வால் முன்னொருபோதுமில்லாதவாறான முறையில் பரஸ்பர உதவிகளை நடைமுறைப்படுத்தும் முடிவுவை எடுத்தவுடன், அவுஸ்திரேலிய பாராளுமன்றம் முதல் முறையாக ANZUS ஒப்பந்தத்தை பாவிப்பதன் ஊடாக அவுஸ்திரேலியா இராணுவரீதியாக அமெரிக்காவை பாதுகாக்க வேண்டுமென கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. அத்தீர்மானத்தில் குறிப்பிட்டது என்னவெனில், பயங்கரவாத செயல்களால் "ஐக்கிய அமெரிக்கா மேல் நடாத்தப்பட்ட தாக்குதல், ANZUS உள்ள IVவதும் Vவதும் பிரிவின் மேல் நடாத்தப்பட்டதாகும். இச்சட்டத்தின் இலக்கம் IVஉம் Vஉம் கீழ், பசுபிக் பிராந்தியத்தில் ஓர் ஆயுத தாக்குதலோ அல்லது எந்தவொரு பகுதியிலும் வெளிசக்திகளால் மேற்கொள்ளப்பட்ட ஆயுத தாக்குதல், இப் பிராந்தியத்திலுள்ள ஓவ்வொரு நாடும் "பொது அபாயத்தை எதிர்நோக்கி செயற்பட" கடமைப்பட்டுளார்கள் என்பதாகும்.

இத்தீர்மானம் தொடர்ந்து குறிப்பிடுகையில்: "எங்களுடைய நம்பிக்கையின் படி இந்த முடிவுகளுக்கான அடிப்படைக் காரணம், இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தே ஆரம்பிக்கப்பட்டதும், ஒழுங்குபடுத்தப்பட்டதுமாகும்." வழக்கப்படி தாக்குலுக்குள்ளான பகுதியினரே ஒப்பந்தத்தை உதவிக்கு அழைக்க வேண்டும். மேலும் வெளிவிவகார மந்திரி தெரிவிக்கையில் கூறியதாவது பாராளுமன்றத்திற்கு இப்படியான தீர்மானம் எடுப்பது தேவையில்லாததாகும். எப்படியிருந்தும் அமெரிக்காவுடன் "ஆலோசனை" செய்தபின் ஹவாட் எடுத்த முடிவு இரண்டு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டை "கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்" அடைய முடிந்தது என்பதாகும்.

இராணுவ மூலோபாயத்தின் படி, ஆரம்பத்தில் குறைந்த பட்சம் அனேகமாக நடக்ககூடியவை பின்வருமாறு: அதிரடிப்படையான SAS இனை தரை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும், கடற்படையை, சர்வதேச கடற் படையின் பாகமாக பாவித்தல், ஆகாயத்திலேயே எரிபொருள் திரும்ப நிரப்புதல் அத்துடன் மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க உளவு நிலையத்தின் மூலமாக துப்புக்களை சேகரிப்பதை ஆழமாக்குதல் போன்றனவாகும்.

பிரதம மந்திரியின் உற்சாகமான அமெரிக்க போர் நகர்வின் ஆதரவளிப்பை, எதிர்க்கட்சி தலைவர் Kim Beazley (தொழிற்கட்சி) வரவேற்றதுடன், இவர் அரசாங்கத்தினுடைய தீர்மானத்திற்கும் ஆவலுடன் ஆதரவளித்தார். அவர் கடத்த வெள்ளி அமெரிக்க உதவி ஜனாதிபதி Cheney க்கு எழுதிய ஓர் கடிதத்தில், இருகட்சியினது உதவியை வலியுறுத்துகையில் இது "சாதகமான சர்வதேச ரீதியான திருப்பி தாக்குதலுக்கான பொறுப்பு" என குறிப்பிட்டதுடன், "பொது நல அமைப்பு நாடான அவுஸ்திரேலியா இப்படியான சந்தர்ப்பங்களில் எங்களுடைய தலைமைப்பீடத்தில் எப்படியான அரசியல் வித்தியாசங்கள் இருந்தாலும் எந்த நேரத்திலும் ஒற்றுமையாகவே பேசுவோம்." மேலும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அவர் நிச்சயப்படுத்தியதாதவது "அடுத்த சில மாதங்களில் தொழிற்கட்சி அலுவலகத்தை கைப்பற்றிற்றினால், அவுஸ்திரேலியா இந்த அக்கிரமத்தை செய்தவர்களுக்கு எதிராகவும், யார் அவர்களுக்கு உதவி புரிந்தார்களோ அல்லது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்களோ அவர்களுக்கு எதிராக தொடர்ந்த சர்வதேச புலனாய்வையும், இராணுவ, பொலிஸ் தேடுதல் முயற்சியையும் ஆதரிக்கும் எனவும்" தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே, இதன் பின்னால் உள்ளஅரசியல் காரணங்களை ஆராய முயல்வதையும், அரசாங்கத்தினுடைய திட்டத்தின் மீதான விமர்சனத்தையோ அல்லது எச்சரிக்கையான எந்த கருத்துக்களையோ பத்திரிகை ஆசிரியர் தலையங்கங்கள் யாவும் தாக்கியிருந்தன. மெல்பேர்னில் வெளியிடும் Age பத்திரிகை எச்சரிக்கையில்: "என்ன அங்கே நடந்தது என்பதை விளங்கப்படுத்த பல குழப்பமான குரல்கள் போட்டியிடுகிறார்கள். அதே நேரம் அப்பாவி மக்களின் கொலைகளை நியாயப்படுத்தி, இப்பயங்கரவாத தாக்குதல் வல்லரசின் பூகோள மூலோபாயத்தின் பலனாக செலுத்த வேண்டிய கடன் என காட்டியுள்ளார்கள். இப்படியான வாதங்கள் சில நேரம் மேலோட்டமாக பார்க்கையில் சிறு வகுப்புகள் நடத்தும் அறைகளில் மனித உயிர் இரத்தமற்ற ஓர் உருவமாக பேசப்படலாம். ஆனால் உண்மையான ஆண்கள், பெண்கள் அத்துடன் குழந்தைகள் உள்ள இந்த உலகத்தில் இது ஒரு பொழுதுமே நீருபிக்கபடமுடியாதது."

Murdoch இனுடைய அவுஸ்திராலியன் பத்திரிகை 14 செப்டம்பர் முழக்குகையில்: "பயங்கரவாதத்தின் மேல் போர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடமைக்கான அழைப்புக்கு பதிலளிக்காதவர்கள் பிரச்சனையின் ஒரு பாகமாக வெளிக்காட்டப்படுவர்" என குறிப்பிட்டது. எப்படியிருந்தாலும் மற்றய ஆளும் வட்டங்களின் குரல்கள் குறைந்த ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

The Age பத்திரிகையின் பிரதான பத்திரிகை நிருபரான Louise Dodson, ஓர் கருத்திற்கு தலைப்பு கொடுக்கையில் "பிரதம மந்திரி கண்மூடித்தனமாக Gorge W . புஷ் இனுடைய தலைமையை பின்பற்றக் கூடாது" என கருத்து தெரிவித்தார். அவர் "எப்படி என்ன இருந்தாலும் புஷ்சிற்கு பின்னால் நிற்பதை விட, ஹவாட் அமெரிக்கா முதல் என்ன சிந்தனையில் வைத்திருக்கிறது என்பதை பொறுத்துப்பார்க்க வேண்டும். ஹவாட்டினுடைய சவால் தால் ஓர் பின்பற்றுபவர் என்பதை விட தான் ஒர் தலைவன் என்பதை வெளிக்காட்டுவது தான். எவ்வளவு தான் அமெரிக்காவிற்காக நாம் வருத்தப்பட்டாலும் அவுஸ்திரேலியாவினுடைய நலன்கள் தானெழுந்தவாரியாக அமெரிக்காவின் நலங்கள் ஆகாது" என எழுதியிருந்தது.

சனிக்கிழமையன்று Australian Financial review ஓர் விமர்சனத்தில் அரசாங்கத்தை எச்சரிக்கை செய்தது. அதில் "எதிர்பாராதவிதமாக சட்டம் IV.. உதவிக்கழைப்பதற்கான நகர்வு ஆபத்தான நகர்வாகும். அவுஸ்திரேலியா பயங்கரவாதத்தின் எதிரியின் அடையாளமும், குணாம்சமும் அல்லது அமெரிக்காவின் மறுமொழியின் நீண்டகால பிரதிபலிப்பும், காலஅளவும் தெரிய முன்னரே ANZUS இனை கண் மூடித்தனமாக பாவித்துள்ளது" என்றது.

இது மேலும் அமெரிக்காவின் திட்டத்திற்கான பிரதமந்திரியினுடைய தராதரமற்ற உதவியை பின்வருமாறு கேள்விக்குரியதாக்கியது "பல மத்திய கிழக்கு இளைஞர்கள் தாம் இழப்பதற்கு கொஞ்சம்தான் உள்ளது. அதாவது அவர்கள் தங்களுடைய உயிர்களை பறி கொடுப்பதுடன் மற்றைய அப்பாவி மக்களின் உயிர்களையும் அழித்து, அமெரிக்க எதிர்ப்பு செயலில் தியாகிகளென இறப்பது ஏன் என்ற முக்கிய கேள்வியை எழுப்புமாறு அவுஸ்திரேலியா அமெரிக்காவை தூண்டவேண்டும்" என்றது.

இன்னுமோர் கட்டுரை Sydney Morning Harald இல் வெளிவந்தது. அதில் "Washington க்காக ஹவாடினுடைய வெற்று காசோலைக்கு (Blank cheque) பலமான மேலதிக விலை கொடுக்க நேரிடும்" எனவும், மேலும் அது சுட்டிக்காட்டுகையில் வேறு எந்த அமெரிக்க கூட்டு நாடுமே "இராணுவ பங்கெடுப்பிற்கு ஹவாட்டினுடையது போல் தாராளமனம் படைத்தது போல உறுதிமொழி கூறியதில்லை. இது அவுஸ்திரேலியாவினுடைய உயிரிழப்பையும், நீண்ட கால பாதுகாப்பு செலவீனத்தையும் அதிகரிக்க செய்யும்'' என எழுதியது.

ஹவாட்டின் இந்த பதிலளிப்புக்கான காரணி சர்வ தேசரீதியிலும், தேசிய மட்டத்திலும் பின்னிப்பிணைந்துள்ளது. முதலாதவதாக பிரதம மந்திரி அவுஸ்திரேலியாவினுடைய பொருளாதார

மூலோபாய லாபங்களை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஆதரவுடன் வைத்திருக்க ஆவலாகவுள்ளர். கடந்த வருடம் அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட வெள்ளைத்தாளில் (White Paper) அவுஸ்ரேலிய ஏகாதிபந்தியத்திற்கு ANZUS உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துகையில் "தந்திரேபாய பெறுமதி வாய்ந்த திறவுகோல், அதாவது எங்கள் இருததரப்பினரிடையே பிராந்தியத்தினதும் மற்றும் பூகோள நலன்களை அடுத்த பத்தாண்டிற்கும் அதற்கும் மேலாகவும் பாதுகாக்க உதவும்" எனவும், ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு மந்திரி Whilliam Cohen அத்துடன் ஐக்கிய அமெரிக்கா பசுபிக் பிராந்திய இராணுவ தலைவரான Dennis Blair வருகையின் பின் திருப்பி எழுதப்பட்ட இவ்வெள்ளைத்தாளில் அவுஸ்ரேலிய இராணுவம் ஐக்கிய அமெரிக்காவில் தங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. "ஐக்கிய அமெரிக்க கூட்டால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப வசதிகளுக்கு வழியில்லாமல் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை (ADF) இப்படியான செயல்ளை சாதித்திருக்க முடியாது" எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புஷ்சினுடைய போர் நகர்விற்கு தயக்கமில்லாமல் செய்யும் உதவி எதிர்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவால் திருப்பி செலுத்தப்படலாம் என ஹவாட் நம்புகின்றார். உதாரணமாக இவருடைய அரசாங்கம் கிழக்கு தீமோரில் 1999ல் தலையிட்டபோது அமெரிக்காவின் உதவி இல்லாமல் இப்பிரதேசத்தில் தனது எரிபொருள் எண்ணெய் நலன்களை பாதுகாப்பது நடைபெற்றிருக்க முடியாது. அவுஸ்ரேலியன் பத்திரிகை நிருபர் Glenn Milne புதன்கிழமை "தற்போதய பிரச்சனைக்கு அவுஸ்திரேலியாவால் வழங்க நிற்கும் முக்கிய பங்கை புஷ் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமது பங்கெடுப்பு கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என ஹவாட் எதிர்பார்க்கின்றார் இதற்கான காரணம் தேசநலன்களின் நன்மையாகும். மற்றைய பக்கத்தில் அவுஸ்திரேலியாவின் மிகவும் நெருக்கமாக ஐக்கிய அமெரிக்காவுடன் சேர்வது நீண்டகால உறவுகளான சீனா, ஜப்பான் அத்துடன் ஆசிய பிராந்தியங்களிலுள்ள நாடுகளுடன் பாதிக்கப்படலாம் என ஹவாட்டினுய எதிர்ப்பாளர்கள் நீண்ட காலமாக ஆளும் தட்டுகளுக்கிடையே இருத்து வரும் கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள்'' என கூறினார்.

தேசிய ரீதியாக ஒரு வருடத்திற்கு மேலாக, முதல் தடவையாகவும் அத்துடன் சில வாரங்களில் நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தல் வாக்கொடுப்பில் வெற்றிக்கான சாத்தியக் கூறுகளை ஹவாட் உணர்கிறார். Tampa புகலிடம் தேடுபவர்களின் மீது இனவெறி சீட்டை விளையாடிய பின் இப்போது அதன் முழுமையான நலனிற்காக போருக்கான சீட்டை விளையாடுகின்றார்.