World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Why we oppose the war in Afghanistan

ஆப்கானிஸ்தான் யுத்தத்தை நாம் ஏன் எதிர்க்கின்றோம்
Statement of the WSWS Editorial Board
9 October 2001

Use this version to print

(இங்கே முதல் பகுதியுடன் இணைந்த வகையில் முழு கட்டுரையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலை உலக சோசலிச வலைத் தளம் கண்டிக்கின்றது. இவ் யுத்தமானது நியாயத்திற்கும் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கும் என புஷ் நிர்வாகத்தால் கூறப்படுவதை நாம் நிராகரிக்கின்றோம்.
செப்டம்பர் 11ம் திகதி நடந்த விமானக் குண்டுத்தாக்குதல் அப்பாவி மக்கள் மீதான அரசியல் குற்றம்மிக்க தாக்குதலாகும். அத்தாக்குதலை நடாத்தியவர்கள் யாராயினும் அவர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தினதும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் எதிரிகள் என கண்டிக்கப்படவேண்டியவர்கள். இத்தாக்குதலுக்கு எவரும் உரிமை கோராதது அத்தாக்குதலின் ஆழமான பிற்போக்கான தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
ஆனால் செப்டம்பர் 11ம் திகதியின் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கான ஊக்கியாக இருந்தபோதிலும் அதற்கான காரணங்கள் ஆழமானவை. இந்த யுத்தத்தினதோ அல்லது வேறு எந்தவொரு யுத்தத்தினதோ முற்போக்கான அல்லது பிற்போக்கான தன்மை அதற்கு காரணமாக இருந்த உடனடியான நிகழ்வுகளினால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அதில் ஈடுபட்டுள்ள நாடுகளின் வர்க்க கட்டமைப்பிலும், பொருளாதார அடித்தளத்திலும், சர்வதேச பாத்திரத்திலும் தங்கியுள்ளது. இத்தீர்மானகரமான நிலைப்பாட்டிலிருந்து நோக்குகையில் அமெரிக்காவின் இந்நடவடிக்கையானது ஒரு ஏகாதிபத்திய யுத்தமாகும்.
அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நீண்ட நோக்குடைய சர்வதேச நலன்களின் பேரில் இவ் யுத்தத்தை முன்னெடுத்துள்ளது. இவ் யுத்தத்தின் முக்கிய நோக்கம் என்ன? ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சோவியத் யூனியனின் உடைவானது மத்திய ஆசியாவில் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இப்பிரதேசம் உலகத்தின் எண்ணெய் வளத்தையும், இயற்கை வாயுக்களையும் கொண்டுள்ள இரண்டாவது பாரிய பிரதேசமாகும்.
ஆப்கானிஸ்தான் ஊடாக முக்கிய பாதையை கொண்டுள்ள கஸ்பியன் கடற்பிரதேசமானது உலகத்தின் தற்போதைய 20% ஆன எண்ணெய் வளமான கிட்டத்தட்ட 270 பில்லியன் பரல்களை கொண்டுள்ளது. அத்துடன் அது தற்போதைய இருப்பான இயற்கை வாயுவின் 1/8 பங்கான 665 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவையும் கொண்டுள்ளது.
இவ் வளங்கள் அனைத்தும் உலகத்தில் மிகவும் ஸ்திரத்தன்மையற்ற அரசுகள் உள்ள பிரதேசத்தில் உள்ளன. ஆப்கானிஸ்தானை தாக்கி தனக்கு சார்பான ஒரு அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாகவும், பாரிய இராணுவத்தை அப்பிரதேசத்திற்கு நகர்த்துவதன் மூலமும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இவைதான் தற்போதைய யுத்தத்தின் உண்மையான நோக்கங்களாகும். ஒரு தனிமனிதனான பின் லேடனுக்கு எதிராக முழு இராணுவமும் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்ற உத்தியோக பூர்வமான அறிவிப்பு நகைப்புக்கிடமானதாகும். பின் லேடனினது அதிதீவிர தேசியவாதமும், அறிவிற்கு ஒவ்வாத மதவாத கொள்கைகளும் பிற்போக்குத் தன்மையானவை. அவை உலக வர்த்தக நிலையத்தின் அழிவையும், அண்ணளவாக 6000 பொதுமக்களின் மரணத்தையும் அவர் புகழ்ந்துரைப்பதன் மூலம் தெளிவாகின்றது. ஆனால் அமெரிக்க அரசாங்கம் பின் லேடனை ஒரு பேயாக எடுத்துக்காட்டுவது தற்போதை யுத்தத்தின் உண்மையான நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் மறைக்கும் அவர்களின் ஆத்திரமூட்டும் தேவைகளுக்கு சேவை செய்கின்றது.

பின் லேடனை பேயாக்குவது கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்கா நடாத்திய ஒவ்வொரு யுத்தத்தினதும் வழமையான ஒரு பகுதியாகும். இதை பனாமாவின் ''போதைப்பொருள் கடவுளான'' Manuel Noriega விற்கும், சோமாலியாவின் ''யுத்தக் கடவுளான'' Mohamed Farrah Aidid இற்கும், தற்போதைய கிட்லரான ஈராக்கின் Saddam Hussein இற்கும், யூகோஸ்லாவியாவின் Slobodan Milosevic இற்கும் எதிராக அமெரிக்க அரசாங்கமும் செய்தி ஸ்தாபனங்களும் இத்தலைவர்களை பேய்களின் பிரதிநிதிகளாக காட்டுவதன் மூலம் பொதுமக்களின் கருத்தை திரிப்பதில் ஈடுபட்டிருந்தன.

அக்டோபர் 8ம் திகதி New York Times பத்திரிகையில் Sarah Lawrence கல்லூரியின் விரிவுரையாளரான Fawaz A. Gerges எழுதிய கட்டுரையில் அமெரிக்காவின் உண்மையான யுத்த நோக்கங்கள் என்ன என்பதை குறிப்பிட்டிருந்தார். ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்ரூட்டில் அராபிய முஸ்லீம் அமைப்புகளின் மாநாடு ஒன்று தொடர்பாக அவர் ''இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெரும்பாலானோர் அமெரிக்கா ஒசாமா பின் லேடனினது அல் காட்டா அமைப்பை இல்லாதொழிப்பதையும், தலிபான் அரசாங்கத்தை கவிழ்ப்பதையும் விட வேறு மேலதிக நோக்கத்தை உடையாதக தெரிவித்தனர். அமெரிக்காவினது நோக்கம் மத்திய ஆசியாவிலுள்ள எண்ணெய், இயற்கைவாயு வளங்களை கட்டுப்படுத்துவதையும், சீனாவினதும் ரஷ்யாவினதும் ஆதிக்கத்தை அபகரிப்பதையும், ஈராக்கின் அரசாங்கத்தை அழிப்பதையும், எண்ணெய் உற்பத்தி செய்யும் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தின் மீதான தனது கட்டுப்பட்டை உறுதிப்படுத்திக்கொள்ளும் நீண்ட மூலோபாயத்தை கொண்டுள்ளதாக முஸ்லீம் நாடுகளினது பிரதிநிதிகள் ஒருமனதான ஐயுறவை கொண்டுள்ளனர்'' என எழுதியுள்ளார்.

மேலும் ''பல முஸ்லீம்கள் இவ் அழிவை தனது முன்னைய கணக்குகளை தீர்த்துக்கொள்ளவும், தனது உலக ஆழுமையை பெற்றுக்கொள்ளவும் புஷ் இன் நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள முயலுவதா கருதுகின்றனர்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ் ஐயுறவுகள் அனைத்தும் நியாயமானவை. தலிபானை அகற்றினாலும், பின் லேடனை கைது செய்தாலும் அல்லது கொலைசெய்தாலும், வாஷிங்டன் கூறிக்கொள்ளும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை இல்லாதொழித்தாலும், இவற்றை பூர்த்தி செய்த பின்னர் அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது இதனைத் தொடர்ந்து நிகழப்போவதில்லை. மாறாக இதன் விளைவானது இப்பிரதேசத்திலுள்ள இயற்கை வளங்கள் மீது அமெரிக்காவின் கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்தை நிரந்தரமாக வைத்திருப்பதாகவே இருக்கும். இம்மூலோபாய நோக்கங்கள் மேலும் மோசமான இரத்தம் தோய்ந்த மோதல்ளுக்கு வித்திடுவதாகவே இருக்கும்.

இவ் எச்சரிக்கையானது அண்மைய வரலாற்றை மீள்பார்வை செய்வதன் ஊடாக உறுதிப்படுத்தப்படுகின்றது. கடந்த இரண்டு தசாப்தங்களின் அமெரிக்காவின் யுத்தங்களானது அமெரிக்காவின் முன்னைய கொள்கைகளினது மாறாத விளைவாகும். அமெரிக்காவின் முன்னாள் நண்பன் இன்று எதிரியான சம்பவம் ஒரு தொடர்ச்சியான சங்கிலியாகும்.

இவ்வரிசையில் CIA இன் முன்னாள் நண்பனான Noriega, பாரசீக வளைகுடாவின் கூட்டான Saddam Hussein, அமெரிக்காவின் முன்னாள் கூட்டாளியான Milosevic உம் அடங்குவர். இவ் வரிசையில் கடைசியான பின் லேடனும் தலிபானும் இன்று அழிப்பிற்கான குறிகளாகியுள்ளனர்.

1980 களில் ஈரானின் கொமெய்னியின் அரசாங்கத்திற்கு எதிராக ஈராக்கில் சதாம் ஹுசெயினுக்கு அமெரிக்கா ஆதரவளித்து. ஆனால் சதாம் ஹுசெயின் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் வளங்கள் மீதான அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தலானபோது, சதாம் ஹுசெயின் பேயாக்கப்பட்டு பாக்தாத்துக்கு எதிரான யுத்தம் தொடுக்கப்பட்டது. வளைகுடா யுத்தத்தின் முக்கிய நோக்கமானது பாரசீக வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தை நிரந்தரமாக இருத்துவதும், இது ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நீடிக்கக் கூடியதாகும்.

மிகவும் விபரீதமானது என்னவெனில், பின் லேடனுக்கும், தலிபானுக்குமான அமெரிக்காவின் ஆதரவாகும். இவர்கள் அமெரிக்காவின் கொள்ளகைகளின் விளைவாகும். அது 1970 களின் இறுதியில் இருந்து 1980 முழுவதும் மத்திய ஆசியாவில் சோவியத் யூனியனினது ஆதிக்கத்தை பலவீனப்படுத்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உருவாக்கிவிட்டது. பின் லேடனும் மற்றைய இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தத்திற்கும் மத்திய ஆசியாவை ஸ்திரமற்றதாக்கவும் CIA ஆல் அணிதிரட்டப்பட்டவர்களாகும்.

இந்த யுத்தத்தை தொடர்ந்த பாரிய அழிவுகளினையும், சீரழிவுகளையும் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தலிபான் பதவிக்கு கொண்டவரப்பட்டது. இரண்டு தசாப்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்த இவர்கள் பிரயோசனமாக இருக்கலாம் என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் நம்பினர்.

அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்த அதிதீவிர பிற்போக்கான குழுவினரை கஸ்பியன் குடாவிலும், பாரசீக வளைகுடாவிலும் தமது நோக்கங்களை முன்னெடுக்கும் ஆயுதமாகவும், சீனா, ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க பாவிக்கலாம் எனவும் நோக்கினர். புஷ் இனது நிர்வாகம் உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலுக்கு பின் லேடனும் தலிபானின் பாதுகாவலர்களும்தான் காரணம் என கூறுகையில், இப் பரிதாபகரமான உயிரிழப்பிற்கான அரசியல் பொறுப்பை அமெரிக்க ஆளும் பிரிவினரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்க எதிர்ப்பு ஊட்டப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் எழுச்சிக்கான அடித்தளங்களை ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உள்ள முஜாகிதீன் (Mujahedin) இயக்கத்திற்கான அமெரிக்காவின் ஆதரவில் மட்டுமல்லாது, அரபு உலகத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களிலும் காணக்கூடியதாகவுள்ளது. CIA ஆப்கானிஸ்தானில் அடிப்படை வாதிகளுக்கு ஆதரவளிக்கையில் லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கரமிப்பை ஆதரித்தது. இது அமெரிக்க போர்க்கப்பலான New Jersey 2000 இறாத்தல் எடையுள்ள செல்களை லெபனானில் மக்கள் குடியிருப்புகளின் மீது 1983 இல் வீசிய பின்னர் நிகழ்ந்தது. இக் குற்றச் செயலானது பெய்ரூட்டில் இருந்த அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான குண்டுத் தாக்குதலுக்கு வழிவகுத்தது. இதில் 242 அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

இம் முழு நிகழ்வுகளுக்கும் பின் லேடன் என்ற மனிதனுடனான தொடர்புக்குமான வேர்கள் சவுதி அராபியாவுடனான வாஷிங்டனின் கூட்டுவரை செல்கின்றது. சவுதி அராபியாவின் நிலப்பிரபுத்துவ ஆழும் தட்டினரை அமெரிக்கா பலவருடங்களாக பாதுகாத்து வந்தது. இந் நிலப்பிரபுத்துவ ஆழும் தட்டினர் தமது ஆதிக்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக தனது சொந்த வடிவிலான இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்த்து வந்தது.

அழிவிற்குரிய விளைவைக் கொண்ட இந்த சகலவிதமான திருப்பங்களும், மாற்றங்களும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையின் தன்மை மட்டுமல்லாது, ஜனநாயக் கொள்கைகளின் அடித்தளத்தில் தீர்மானிக்கப்படாததோடு வெளிப்படையான விவாதத்தின் அடித்தளத்தில் உருவாக்கப்படவுமில்லை. மாறாக இவை அமெரிக்க மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட பொருளாதார நலன்களின் இருந்து உருவாக்கப்பட்டவையாகும்.

அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தைப் பற்றி பேசும்போது, அது முற்றுமுழுதாக ஏமாற்று மட்டுமல்லாது, மற்றும் நேற்றைய நண்பர்கள் இன்று பகைவர்களானது மட்டுமல்லாது எதிர்மாறாக நிகழ்துள்ளதுடன், அமெரிக்காவின் கொள்கையானது ஒரு சமூக சீரளிவை உருவாக்கியுள்ளதுடன், பயங்கரவாத அமைப்புக்கள் தமக்கான ஆதரவாளர்களை அணிதிரட்டுவதற்கான விளைநிலத்தையும் உருவாக்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் பாத்திரத்தின் விளைவிற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் விபரிக்க முடியாத வறுமையையும், பின்தங்கிய தன்மையையும் விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்கமுடியாது.

அமெரிக்க இராணுவ வாதத்தின் எழுச்சியின் எதிர்கால நோக்குகள் எதுவாக இருக்கலாம்? அமெரிக்கா தனது உடனடி நோக்கத்தை அடைந்தாலும் மத்திய ஆசியாவில் உள்ள சமூக, அரசியல் வெடிக்கும் தன்மையின் அபாயம் குறைந்தது என்பதை நம்புவதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

ஆப்கானிஸ்தானில் ''நாட்டை கட்டியெழுப்பும்'' அமெரிக்காவின் கருத்துக்கள் பென்டகன் இராணுவ தாக்குதலை நடாத்த இணைந்துள்ள தலிபான் எதிர் வடக்கு கூட்டுடன் [Northern Alliance] ஏற்படுத்தியுள்ள ஒன்றிணைப்பால் உறுதிப்படுத்தப்படுகின்றது. கொசவோவில் தனது கூட்டான அல்பானிய பயங்கரவாத கொசவோ விடுதலை இயக்கத்தை பாவித்ததைப்போல், மத்திய ஆசியாவில் தனது பாதங்களை பதிப்பதற்காக ஆப்கானிஸ்தானின் வடகிழக்கிலுள்ள யுத்தக் கும்பல்களை பயன்படுத்துகின்றது.

இவ் வடக்கு கூட்டு சுதந்திரத்திற்கும், மனிதாபிமானத்திற்குமான போராளிகள் என புகழப்படுகையில், New York Times உம் ஏனைய அறிக்கைகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்படும் அபின் [opium] இவ்வடகூட்டால் கட்டுப்படுத்தப்படும் பகுதிக்குள்ளால் தான் வருகின்றது என்பது மிகவும் ஆதாரமானதாகும். வட கூட்டினது இராணுவ வரலாறு காபூலை நோக்கி 1990 களில் எறிகணைகளை ஏவியதால் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்றதன் மூலம் பெயர் பெற்றது.

நாட்டை அடித்து நொருக்கிய பின்னர், வெறுக்கத்தக்கதும், கற்பனைமிக்கதுமான அடித்தத்தில் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்ப அமெரிக்கா முன்மொழிவதானது யுத்தம் ஆரம்பிக்கு முன்னர் New York Times இனால் இவ்வாறு ஆலோசனை கூறப்பட்டிருந்தது. அதில் ''ஆகாயத் தாக்குதல் மூலம் உளவியலான அதிர்ச்சியும், ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் எதிர்க்குழுக்களுக்கு இலஞ்சம் வழங்குவதன் மூலமும் வாஷிங்டனுக்கு ஆதரவளிப்பதும், தலிபான் போராளிகள் பலரை ஆயுதங்களை கைவிடச்செய்து தோற்கடிக்கலாம் என பென்டகன் நம்புகின்றது'' என கூறப்பட்டிருந்தது.

பாரிய இயற்கை வளங்களை கொண்ட இப்பிரதேசத்தின் தன்மை காரணமாக, இப்பிரதேசத்தில் அமெரிக்கா தனி ஆளுமையுள்ளாவதை மத்திய ஆசியாவிலுள்ள எந்தவொரு சக்திகளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியாவிற்கு தமது சொந்த நலன்கள் இருப்பதுடன், அவை அதனை நிறைவேற்ற முயலும். மேலும் இப்பிராந்தியத்தில் முன்னாள் சோவியத் யூனியனை சூழவுள்ள நாடுகளில் உருவாகிவரும் முதலாளித்துவ அரசுகளின் நலன்களுடன் தவிர்க்கமுடியாதபடி மோதலுக்கு இட்டுச்செல்லும்.

அமெரிக்க இராணுவ வாதத்தின் எழுச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் அழிவுகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றது. அணுஆயுதங்கள் நிறைந்தும், சமூக, அரசியல், இன, மத முரண்பாடுகளும் மோசமான ஏழ்மையும் கூடிய, முக்கிய சக்திகளுக்கிடையேயான போட்டிக்குரிய நீண்டகாலமாக காட்டப்பட்ட உலகத்தின் ஒரு பகுதிக்குள் தற்போது அமெரிக்கா ஒரு ஆபத்தான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

New York Times பத்திரிகை அரிதான ஒரு தெளிவான நிலைமையில் அமெரிக்காவினது யுத்த முயற்சியின் அபாயங்கள் குறித்து அக்டோபர் 2ம் திகதி ''பாகிஸ்தானில் ஒரு உறுதியற்ற கூட்டாளி'' என்ற தலையங்கத்துடன் வெளிவந்தது. அதன் ஆசிரியர் ''பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் மத்திய பங்கு வகிப்பதற்கு இந்த உடையக்கூடியதும், பிளவுபட்டதுமான நாட்டை தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அமெரிக்கா அணுஆயுதங்களும், உள்நாட்டுக் கலகமும் சாத்தியமான இடத்தில் ஒரு சமூக கொந்தளிப்பு உருவாகும் அபாயத்தினை உருவாக்கியுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

இவ் இராணுவத் தாக்குதலுக்கான காரணமான உண்மையான பொருளாதார, பூகோள மூலோபாயம் தொடர்பாகவோ ஒரு சிரத்தைமிக்க ஆய்வினை செய்தித்துறையோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தினது கூற்றுக்களிலோ காணவில்லை. அது ஈடுபட்டுள்ள நடவடிக்கையில் உள்ளடங்கியுள்ள பாரதூரமான விளைவுகள் தொடர்பாக அமெரிக்க ஆளும் அமைப்பினுள் ஒரு ஆழமான கவனத்திற்கு எடுத்தற்கான எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படவில்லை.

தேசிய வாதத்தையும், இராணுவ வாதத்தையும் செய்தித்துறையினர் தொடர்ச்சியாக பரப்பி வருகையில், அமெரிக்க மக்களிடம் யுத்தத்திற்கான ஒருமித்த ஆரதவு காணப்படவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு யுத்தம் தான் ஒரே வழியென ஒரு அமைதியான ஏற்றுக்கொள்ளல் இருக்கின்றது. இம்மனநிலைக்கு அரசாங்கத்தின் கைகளாக முற்றாக நியாமற்றமுறையில் செயற்படும் செய்தித்துறையின் முயற்சி முக்கியமான பங்குவகிக்கின்றது. இராணுவ நடவடிக்கைகளின் பின்னால் விருப்பமற்ற முறையில் இணைந்துகொண்டுள்ளமையின் அடித்தளத்தில் உள்ளது அதிருப்தியும் ஐயுறவும் மிக்க ஆழமான உணர்வுகளாகும். அமெரிக்காவின் அண்மைய இராணுவவாதத்தின் எழுச்சிகளால் நல்ல விளைவுகள் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை மில்லியன் கணக்கான மக்கள் உணர்கின்றனர்.

அமெரிக்கா ஒரு திருப்புமுனையில் நிற்கின்றது. அரசாங்கம் முடிவற்றதும், நீடித்ததுமான ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஆழமான சமூக நெருக்கடியான நிலைமைகளின் கீழ் அமெரிக்க சமுதாயம் இராணுவ மயப்படுத்தப்படுவதே இங்கு நிகழ்கின்றது.

இவ் யுத்தமானது அமெரிக்காவினதும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் நிலைமைகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இருபதாம் நூற்றாண்டின் அழிவுகளை பயங்கரமான அளவில் மீண்டும் செய்வதன் ஊடாக இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏகாதிபத்தியம் மனித சமுதாயத்தை அபாயத்திற்குள்ளாக்குகின்றது. ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அட்டூளியமும் முன்னொருபோதும் இல்லாதவாறு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒன்றிணைப்பையும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் அவசியத்தையும் முன்கொண்டுவருகின்றது.