World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: கலை விமர்சனம்

US actor-director Sean Penn on Hollywood and protests against global capitalism

ஹாலிவுட்டைப் பற்றி அமெரிக்க நடிகர்- இயக்குநர் சீன் பென்னும் பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்புக்களும்

By David Walsh
3 September 2001

Use this version to print

பிரிட்டனில் கடந்த மாத இறுதியில் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான சீன் பென் ஹாலிவுட் படத்தயாரிப்பு பற்றி கண்டனம் செய்ததோடு அண்மையில் ஜெனோவா மற்றும் எங்கிலும் நடந்த எதிர்ப்புக்களில் வெளிப்படுத்தப்பட்ட பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்புடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். அவரது கருத்துக்கள் பிரதான அமெரிக்க செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

ஸ்கொட்லாந்திலுள்ள எடின்பேர்க்கில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் அவர் இயக்கிய பிலெட்ஜ் (Pledge) எனும் திரைப்படம் திரையிடப்பட்டது. ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், பென் பெரும்பாலான அமெரிக்க படப்பிடிப்பு நிலைய திரைப்படங்கள் குப்பை கூளங்களாக இருக்கின்றன என்றார். அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி அவர் செய்தியாளர்களிடம் ,"உண்மையில் இந்த அறையில் உள்ள பாதிப்பேர் அந்தமட்டத்திற்கு வேலை செய்ய முடியும். நீங்கள் உங்கள் படத்தில் இரண்டு சிந்தனைகளை வைத்தீர்கள் என்று அறிய வந்தால் அது பிரம்மாண்டமான அழுத்தத்தை அகற்றிவிடும், அவர்களின் மேலே நீங்கள் சென்றுவிட்டீர்கள்." என்றார்.

கார்டியன் பத்திரிகையின்படி, அவர் தொடர்ந்தார், "இப்பொழுது நல்ல படத்திற்கான வரைவிலக்கணம் என்பது வங்கிகளை மகிழ்ச்சிப்படுத்தும் ஒன்று-- மக்களின் வாழ்க்கையின் மேல்வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒன்றல்ல. என்னைப் பொறுத்தவரை எனது சொந்த தலைமுறையின் பெரும்பான்மையினர் அந்த தரத்தை எட்டவில்லை. அவர்களுக்கு பரந்த நலன்கள் கிடையாது -- எல்லாம் பொழுது போக்கிற்காக, அரசியலுக்காக அல்ல". அவர் பேட்டி கொடுக்கும் பொழுது இடையில், ஜோர்ஜ் புஷ்-ஐ "தனக்கென இடமில்லாதமனிதர்" என்று தட்டிக் கழித்தார். தாங்கள் பயனற்ற படங்களைத் தயாரிக்கிறோம் என்று தெரிந்தும் அப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் பெரும் பெயர் கொண்ட இயக்குநர்கள் பொதுமக்களை காட்டிக் கொடுக்கின்றனர். "அவர்கள் செய்வது சமுதாயத்தை கற்பழிக்கும் மட்டத்தில் உள்ளது --நாங்கள் (பொதுமக்கள்) தண்டனைக்குரிய, அளவுக்கு அதிகமாக நுகர்வோர்களாக இருக்கிறோம். "அவர் பியர்ல் ஹார்பர் (Pearl Harbour) படத்திற்கு பொறுப்பான இயக்குநர் மைக்கல் பே (Michael Bay) மீது குறிப்பிட்ட வெறுப்பை பிரத்தியேகமாகக் காட்டினார். பெரும்பாலான பிரிட்டிஷ் தேசிய செய்திப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விமர்சனத்தில், பென் பின்வருமாறு பிரகடனம் செய்தார்," அப்படிப்பட்ட படத் தயாரிப்பாளர்கள் குதப் புற்றுநோயால் கூச்சலிட்டுக் கொண்டு வீட்டிற்கு ஓட வைக்கப்படவேண்டும் --தாங்கள் தயாரிக்கும் படத்தைப் பற்றி, அல்லது அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது அல்லது அவர்களின் பார்வையாளர்கள் மீது அவர்களுடைய பாதிப்பு பற்றி அவர்கள் அக்கறைப்படுவதில்லை."

அரசியல் சூழ்நிலை சம்பந்தமாக பென் கூறியதாக பின்வருவனவற்றை AP கூறியது: "தொடர்ந்தும் மக்கள், புரட்சி பற்றிய சிந்தனையை மதிக்கின்றார்களா என்பது எனக்குத் தெரியாது. புரட்சியின் சாத்தியத்தில் முதலைப் போடக்கூடியது பெரும் தேசபக்த இயக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

"ஜெனோவா மற்றும் சியாட்டிலில் எதிர்ப்புக்கள் மற்றும் மக்களில் இளைய பகுதியினர் தங்களை முன்னனியில் நிறுத்திக் கொள்வது போல, ஐக்கிய அமெரிக்காவிலும் உலகைச் சுற்றிலும் நிறைய விஷயங்கள் போய்க்கொண்டிருக்கின்றன."

செய்திகளில் வந்தவற்றின்படி, பென்,"கலாச்சாரப் பரட்சிக்கு" அழைத்ததாகப் பேசின. ஆகஸ்ட் 28 அன்று அவர் கார்டியன் செய்தியாளரிடம் புகார் செய்தார், "நீங்கள் என்னைப்பற்றி தவறாகப் பிரசுரித்தீர்கள். நீங்கள் என்னை சிலவகை கலாச்சாரப் புரட்சி பற்றி பேச வைத்திருந்தீர்கள், மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்களை ஏந்துவது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன் என்றீர்கள்....... புரட்சி நடைமுறை சாத்தியமா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை ஏனெனில் தொழில்நுட்பம் என்ன மாதிரியானது என்றால், நாம் இழப்போம். ஆனால் செயல்வீரிய வாதத்திற்கு இன்னும் பெரிய அளவு இடம் இப்பவும் இருக்கிறது என நினைக்கிறேன், வெட்கக்கேடாக நான் அதில் போதுமான அளவு பங்காளியாக இல்லை. ஆனால் அது வர ஆரம்பித்துள்ளது. இந்தச் சிறார்களை இப்போது பாருங்கள்..... 20வருடங்களில் சியாட்டில் போன்றவை நடக்கவில்லை. அது மிகவும் நம்பிக்கை ஊட்டும் விஷயம் ஆகும்."

பென் 1960ல் பிறந்தார், போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் அரசியல் அதிர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் வளர்ந்தார். அவரது தந்தை லியோ பென் (1921-98), பிரோட்வே (Broadway) யில் நடிகராகத் தோன்றியதற்குப் பின்னர் மற்றும் 1940களில் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த பின்னர், ஹாலிவுட் பதின்மருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக பத்தாண்டுகளுக்கு கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். லியோ பென் இறுதியில் தொலைக்காட்சியில் கேமராவுக்குப் பின்னால் வேலை தேடிக் கொண்டார், பொனான்சா (Bonanza), பென் கேசி (Ben Casey), ஸ்டார்ஸ்கி & ஹட்ச் (Starsky &Hutch), மக்னம் பி.ஐ. (Magnum P.I.), கொலும்பொ (Columbo) (இதற்காக அவர் எம்மி விருதை வென்றார்), கொஜாக் (Kojak), செயிண்ட் எல்ஸ்வேர் (St.Elsewhere) மற்றும் ஏனைய தொடர்கள் உட்பட 400 மணிகளுக்கும் அதிகமான பிரதான நேர நிகழ்ச்சிகளை இயக்கினார்.

சீன் பென் (அவரது சகோதரர் கிறிஸ் ஒரு நடிகர் மற்றும் அவரது இன்னொரு சகோதரர் மைக்கல் ஒரு பாடகர்- பாடல் ஆசிரியர்) கடந்த காலத்தில் ஹாலிவுட்டைப் பற்றி இதனையொத்த கருத்துக்களைக் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் செய்தவரிடம் பின்வருமாறு கூறினார்: "பணத்துக்காக மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கலைஞனாக நீ இருந்தால், நான் உனக்கு எதிரானவனாக இருப்பேன். அதிலும் பார்க்க அதிகமாக நான் எதிர் பார்க்கிறேன். திரைப்பட தொழிலில் ஏதாவது வெறுப்பு இருந்தால், எனக்கு முன்மாதிரியாக இருந்தவர்களின் பரத்தையர்தனம்தான்". வூடி அலனின் Sweet and Lodown- ல் நடித்த பாத்திரத்திற்காக அக்கடமி அவார்ட் விழாவுக்காக முன்மொழியப்பட்ட பென் அதற்கு வருகைதரத் தவறினார்.

அவரது தலைமுறையின் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகர்களுள் ஒருவரான பென், தயாரிப்பு அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை --மிக நல்ல படைப்புக்களைக் கொடுப்பதற்கு உண்மையில் முயற்சி செய்து வருகிறார்: Fast Times at Ridgemont High (1982), The Falcon and The Snowman(1984), At close Range(1986), Casualties of War(1989), Carlito'sWay(1993), Dead Man Walking(1995), The Thin Red Line(1998), Before Night Falls(2000). அவருக்கு அளிக்கப்பட்ட திட்டப்பணிகளில் அதிருப்தி அடைந்த பென், 1990களில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இப்பொழுது மூன்று படங்கள் அவருக்குப் புகழ் சேர்த்து இருக்கின்றன, அவை The Indian Runner(1991), The Crossing Guard(1995) மற்றும் ஜாக் நிக்கல்சன், இளம் பெண்ணின் படுகொலையால் அலைக்கழியும் ஓய்வு பெற்ற போலீஸ் புலனாய்வாளராக நடிக்கும் Pledge ஆகியனவாகும். இத்திரைப்படங்கள் பென்னின் அக்கறையையும் உள்ளார்வம்மிக்க தன்மையையும் எடுத்துக் கூறுகின்றன, ஆனால் கலை ரீதியாக அல்லது சமூக ரீதியாக எதையும் சாதித்துவிடவில்லை.

இளைஞர்களின் செயல் வீரியம் பற்றியும் சமூகப் புரட்சி பற்றிய கருத்தைப் புதுப்பிப்பதற்கான தேவையைப் பற்றியும் கூறும் இந்த நடிகர்-இயக்குநர் கூறிய கருத்துக்கள், மக்கட்தொகையின் பல்வேறு தட்டினரின் வளர்ந்துவரும், மாற்றத்திற்கான தீவிரமயப்படலின் அறிகுறிகளாக குறிப்பிட்ட அளவு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன, அது நிச்சயமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.