World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The CIA's international dirty war

US oversees abduction, torture, execution of alleged terrorists

CIA இன் சர்வதேசரீதியான கீழ்த்தரமான யுத்தம்

அமெரிக்காவின் கடல்கடந்த கடத்தல்கள், சித்திரவதைகள், பயங்கரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணதண்டனை

By Barry Grey
20 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என ஐயுறவிற்கானவர்களை சட்டவிரோதமான, திரைமறைவான கடத்தல்களிலும் தனது கூட்டு நாடுகளுக்கு நாடுகடத்தல்களிலும் ஈடுபட்டுள்ளது. அவர்கள் அங்கு சிறையிலடைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கும், சித்திரவதைக்கும், சிலவேளைகளில் கூட்டான மரணதண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக இஸ்லாமிய நாடுகளையும் பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த டசின் கணக்கானோர் இவ்வாறாக தூரமான நாடுகளான இந்தோனேசியா, பாகிஸ்தான், முன்னாள் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Washington Post பத்திரிகையானது மார்ச்11ம் திகதி ''பயங்கரவாத ஐயுறவானவர்களை இரகசியமாக கடத்துவதில் அமெரிக்கா பின்னணியில்'' என தலையங்கமிடப்பட்டு Rajiv Chandrasekaran , Peter Finn ஆல் எழுதப்பட்ட கட்டுரையில் பெயர் குறிப்பிடாத அமெரிக்க இராஜதந்திரிகளையும், முக்கிய இந்தோனேசிய அதிகாரி, பாகிஸ்தானிய அரசாங்க வட்டாரங்களை ஆதாரமாக சுட்டிக்காட்டியுள்ளது. அதில் அவர்களால் வழங்கப்பட்ட தகவல்களில் அண்மைய நிகழ்வுகளை வியாபாரத்தில் ''மொழிபெயர்ப்பு'' என குறிப்பிப்படும், அதாவது மக்களை கைதுசெய்து நாடுகடத்துதல், வழமையான நடைமுறையில்லாதும், அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் சட்ட உரிமைகளை கவனத்திற்கு எடுக்காமலும் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியான தேடுதலில் கைது செய்யப்பட்டவர்கள் விஷேட குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்படாததுடன், சட்ட உதவியும் மறுக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வழமையாகியுள்ளது. அவர்கள் தென் அமெரிக்காவின் இராணுவ சர்வாதிகார அரசாங்கங்களால் செய்யப்பட்டதைப்போல் அவர்களின் குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்படாமல் ''காணாமல் போயுள்ளனர்''.

Washington Post ஆனாது, அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது புதிதானதல்ல எனவும், ஆனால் இது செப்டம்பர் 11 இற்கு பின்னர் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. அக்கட்டுரையின் ஆசிரியர்கள், '' 'நடைமுறைப்படுத்தல்' என குறிப்பிடப்படும், பயங்கரவாதத்திற்கு தொடர்பானவர்களை மூன்றாவது நாட்டிலிருந்து சட்டபூர்வமாக அல்லது குறைந்த சட்டபூர்வமான நடைமுறையுடன் அமெரிக்காவிற்கோ அல்லது ஏனைய நாடுகளுக்கோ கடத்துவதில் அமெரிக்காவின் ஈடுபாடு ஒன்றும் புதிதானதல்ல. கடந்த காலங்களில் அமெரிக்க கைக்கூலிகள் எகிப்தின் அரசுகையாட்களுடனும், ஆபிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், பால்கனிலும் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து டசின் கணக்கான ஐயுறவிற்குரிய இஸ்லாமிய தீவிரவாதிகளை கெய்ரோவிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளும், எகிப்திய வழக்கறிஞ்ஞர்களும், மனித உரிமை அமைப்புக்களும் குறிப்பிட்டதாக'' எழுதியுள்ளனர்.

அக்கட்டுரை மேலும் ''செப்டம்பர் 11 இற்கு பின்னர், பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என ஐயுறவிற்குள்ளான டசின் கணக்கானவர்களை வழமையான நடைமுறைகள் இல்லாமலும், வழமையான சட்டரீதியற்ற வகையிலும் அமெரிக்கா தவிர்ந்த நாடுகளுக்கு அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக கடத்தியிள்ளதாக'' மேற்கு இராஜதந்திரிகளையும், உளவுத்துறையினரையும் ஆதாரமாக காட்டியுள்ளது.

அக்கட்டுரை மேலும் ''ஒரு அமெரிக்கா இராஜதந்திரி, செப்டம்பர் 11ம் திகதிக்கு பின்னர் இவ்வகையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும், இது அமெரிக்காவில் நாம் செய்யமுடியாததை பயங்கரவாதிகளிடமிருந்து தகவல்களை எடுப்பதற்கு வசதியாக்கியுள்ளது'' என குறிப்பிட்டது.

Washington Post மேலும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் CIA உடன் இணைந்து இயங்கும் வெளிநாட்டு அதிகாரிகளின் கைகளில் சித்திரவதைக்குள்ளாவதுடன், விசாரணைகளிலும் அமெரிக்க ஏஜன்டுகள் ஈடுபட்டுள்ளனர். ஐயுறவிற்குள்ளானவர்கள் எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என குறிப்பிட்டது. அந்நாடுகளின் இரகசிய சேவையினர் CIA உடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்பதுடன், கைதுசெய்யப்பட்டவர்கள் இந்நாடுகளில் விசாரணை தந்திரங்களுக்கு உள்ளாகின்றனர். இதனுள் சித்திரவதையும், குடும்பத்தினரை பயமுறுத்துதலும் அடங்கும். இவை அமெரிக்காவில் சட்டவிரோதமானது எனவும், சில சந்தர்ப்பங்களில் அமெரிக்க இரகசிய ஏஜன்டுகள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

* 24 வயதுடைய பாகிஸ்தானியரான Muhammad Saad Iqbal Madni என்பவர் தனது நண்பர் ஒருவரை சந்திக்க ஜகார்த்தா சென்றபோது இந்த வருடம் ஜனவரி மாதம் இந்தோனேசிய இரகசிய படையினரால் கைது செய்யப்பட்டார். இரண்டு வாரங்களின் பின்னர் நீதிமன்ற விசாரணையோ அல்லது வழக்கறிஞரோ இல்லாது அடையாளமற்ற அமெரிக்க விமானத்தில் ஜகார்த்தாவிலுள்ள இராணுவ விமானநிலையத்தில் ஏற்றப்பட்டு எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டார். Iqbal எகிப்தில் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்க ஏஜன்டுகளால் விசாரிக்கப்பட்டுள்ளார். அவரது சட்டபூர்வ நிலை தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை.

Iqbal கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் அவருக்கும் டிசம்பர் 22ம் திகதி பாரிஸிலிருந்து மியாமி செல்லவிருந்த அமெரிக்க விமானசேவையின் விமானத்தில் சப்பாத்துக்களில் வெடிகுண்டுகளை மறைத்துவைத்திருந்து வெடிக்க வைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட Richard C. Reid உடனும் அல்கொய்தாவுடனும் தொடர்பு இருந்ததாக இந்தோனேசிய அரச இரகசியசேவையினருக்கு CIA தகவல் வழங்கியிருந்து. Iqbal இன் இருப்பிடம் தொடர்பாக CIA இந்தோனேசிய அதிகாரிகளுக்கு வழங்கியதுடன் அவரை கைது செய்யுமாறு தூண்டினர். சிலநாட்களின் பின்னர் எகிப்திய அரசாங்கம் இந்தோனேசிய அரசாங்கத்திடம் எகிப்திய, இந்தோனேசிய கடவுச்சீட்டுள்ள Iqbal ஐ நாடுகடத்துமாறு கேட்டுக்கொண்டது. அவர்கள் எந்தவொரு விஷேட குற்றமுமில்லாமல் Iqbal இற்கு பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளதாக குறிப்பிட்டனர்.

உள்ளூர் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு Iqbal குடிவரவு விதிமுறைகளை மீறியதால் எகிப்திற்கு அனுப்பப்பட்டதாக இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்தது. Washington Post இன்படி, இந்தோனேசிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் ''அமெரிக்காவின் பங்கினை வெளிப்படுத்துவது ஜனாதிபதி மேகவதி சுகர்ணோபுத்திரி மீது அவரது கூட்டு அரசாங்கத்திலிருக்கும் இஸ்லாமிய கட்சிகளினது அரசியல் தாக்குதலுக்கு வழியமைத்துவிடும் எனவும் நாங்கள் அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைந்து இயங்குவது வெளிப்படுவதை விரும்பவில்லை'' என அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டது.

அவ் அதிகாரிகள் எகிப்திலிருந்து வந்த நாடுகடத்தல் கோரிக்கையும், குடிவரவு சட்டமீறல்கள் என்பன CIA இன் கோரிக்கை உடனான இந்தோனேசியாவின் இணக்கத்திற்கு அரசியல் மூடிபோடும் நோக்கமுடையதாகும் என தெரிவித்தனர். அவர் மேலும் ''இது அமெரிக்காவின் நடவடிக்கையாகும் எனவும், எகிப்து சாதாரண வழிமுறைகளையே வழங்கியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

* யேமன் நாட்டை சேர்ந்த நுண்உயிரியல் மாணவரான Jamil Qasim Aseed Mohammed கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானிய இரகசிய சேவையினரால் கராச்சி விமானநிலையத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் கையளித்ததை தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து யோர்தானுக்கு அமெரிக்க விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். இம்மாணவர் அல்கொய்தாவின் அங்கத்தவர் எனவும் USS Cole என்ற கப்பல் மீதான தாக்குதலுக்கு காரணமாக இருந்தார் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட Aseed Mohammed இன் கையளிப்பு விமான நிலையத்தில் ஒரு ஒதுக்குப்புறத்தில் நடுஇரவில் இடம்பெற்றது. இது எவ்விதமான நாடுகடத்தல் வழக்குமுறைகள் இல்லாமல் நிகழ்ந்தது.

* அமெரிக்கப் படைகள் 5 அல்ஜீரியர்களையும், 1 யேமன் நாட்டவரையும் பொஸ்னியாவில் வைத்து ஜனவரி 19ம் திகதி கைது செய்து கியூபாவை சேர்ந்த குவாந்தனாமோ குடா முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் பொஸ்னியா உயர் நீதிமன்றத்தால் சாட்சியம் எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டதையும், 4 பேர் பொஸ்னியாவின் மனித உரிமை அமைப்பு இவர்கள் மேலதிக விசாரணைக்காக நாட்டினுள் இருக்கவேண்டும் என்ற தடை உத்தரவையும் மீறி அமெரிக்கர்கள் கைதுசெய்து கடத்தியுள்ளனர். (பொஸ்னியாவின் மனித உரிமை அமைப்பு 1992-95 பொஸ்னிய உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அமெரிக்காவின் ஆதரவிலான டேட்டன் (Dayton) உடன்படிக்கையின் ஒரு பாகமாக நிறுவப்பட்டது. அது மனித உரிமையை பாதுகாப்பதற்காகவும் இது தொடர்பான முறைகளை நடைமுறைப்படுத்துவதும் தமது நோக்கம் என தெரிவித்து).

இப்படியான நிகழ்வுகள் செப்டம்பர் 11ம் திகதிக்கு முன்னரும் நிகழ்ந்தன:

* எகிப்திய தீவிரவாத இயக்கமான இஸ்லாமிய குழுவின் பிரபல்யமான தலைவரான 38 வயதுடைய Talaat Fouad Qassem 1998 இல் குரோசியாவிலிருந்து கெய்ரோவிற்கு கடத்தப்பட்டார். Qassem டென்மார்க்கிலிருந்து பொஸ்னியாவிற்கு பிரயாணம் செய்யும்போது அமெரிக்க ஏஜன்டுகளால் கைது செய்யப்பட்டார். டென்மார்க்கில் அவர் அரசியல் தஞ்சம் பெற்றிருந்தார். அவர் கெய்ரோவிற்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் குரோசியாவின் கடல்கரையில் ஒரு அமெரிக்க கப்பலில் வைத்து விசாரிக்கப்பட்டதாகவும், கெய்ரோவில் இராணுவ நீதிமன்றம் ஒன்று அவர் கலந்துகொள்ளாமலே அவருக்கு மரணதண்டனை வழங்கியிருந்தது என எகிப்திய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

* எகிப்தின் முக்கிய தலைமறைவு இயக்கமான எகிப்திய இஸ்லாமிய ஜிகாத்தின் 3 அங்கத்தவர்கள் அஜர்பஜானில் வைத்து 1998 இல் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் கடத்தலில் அமெரிக்க இரகசிய சேவை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக கெய்ரோவிலுள்ள அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

* 1998 இல் அல்பானியாவில் வைத்து எகிப்திய இஸ்லாமிய ஜிகாத்தின் 5 அங்கத்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் 3 நாட்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, பின்னர் CIA ஆல் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்தில் எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அல்பானியாவின் தலைநகரான திரானாவிலுள்ள அமெரிக்க தூரகத்திற்கு குண்டுவைக்க திட்டமிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அல்பானிய பொலிசாருடன் இணைந்து இயங்கும் CIA அதிகாரிகள் இக்கடத்தலில் ஈடுபட்டனர். அவர்களில் இருவர் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பத்துவருடங்களாக பரவலாக நடப்பதில் மேற்குறிப்பிட்டவை ஒரு உதாரணங்களாகும் என Washington Post குறிப்பிட்டது. மார்ச் 11ம்திகதி கட்டுரையை எழுதிய ஆசிரியர் ''1993 இற்கும் 1999 இற்கும் இடையில் நைஜீரியா, பிலிப்பைன்ஸ், கென்யா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் என ஐயுறவிற்குள்ளானவர்கள் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எகிப்தின் உதவியுடன் டசின் கணக்கான மறைவான கடத்தல் நாடகங்கள் நடந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளில் பெரும்பாலானவை உள்ளூர், சர்வதேச நாடுகடத்தல் சட்டங்களை கவனத்திற்கு எடுக்காததுடன், மறைவாக வைக்கப்பட்டன'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Washington Post ன் தகவல்கள் அமெரிக்க அரசாங்கம் மதிக்காத சர்வதேச சட்டங்களின் ஒரு பகுதி மாத்திரமே. இவற்றுள் யுத்தக்கைதிகளை நடத்தும் முறைபற்றிய ஜெனீவா உடன்படிக்கை, ஆப்கானிஸ்தானில் அதனது மோசமான நடவடிக்கைகளான கைதுசெய்யப்பட்ட தலிபானினதும் அல்கொய்தாவினதும் உறுப்பினர்களை கொலைசெய்ததிலும், பாரிய ஆயுதபலத்தை பாவித்து கிராமங்களை அழித்ததும், சாதாரண மக்களை அமெரிக்க படைகள் கொன்றதும் அடங்கும்.

மனித நாகரீகத்தை பாதுகாப்பது என்ற பெயரின் கீழ் அமெரிக்க அராசாங்கம் தன்னை உலகத்தின் நீதியாளனாகவும், நீதித்துறையாகவும், மரணதண்டனை வழங்குபவனாகவும் நியமித்துக்கொண்டு, மிக அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், அதனுடனான வழிமுறைகளுக்கும் அல்லது மனிதாபிமான நடைமுறைக்கான சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கும் கட்டுப்பட மறுக்கின்றது.

Washington Post இன் மார்ச்11ம் திகதி கட்டுரையில் உள்ள முக்கிய தகவல்கள் தொடர்பாக அமெரிக்க செய்தித்துறை முழுவதிலும் ஒருவிதமான பிரதிபலிப்பும் இல்லாதது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று, ஆனால் ஆச்சரியப்படக்கூடியதொன்றல்ல. எந்தவொரு வலைப்பின்னல் செய்திகளோ அல்லது பத்திரிகைகளோ அமெரிக்காவால் நடாத்தப்படும் கடத்தல், சித்திரவதை தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. தனது பங்கிற்கு Washington Post உம் தனது சொந்த செய்திகளை தொடராததுடன், அதனது ஆசிரியர் பீடம் இவ் இணையம் தொடர்பாக மெளனம் சாதிக்கின்றது.

புஷ் நிர்வாகத்தினது யுத்த கொள்கைகளுக்கு ஆதரவு வழங்குமுகமாக அமெரிக்க செய்தித்துறை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அரசாங்கத்தால் நடாத்தப்படும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு உடந்தையாகின்றது.