World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US right wing discusses "nuking Mecca"

ஐக்கிய அமெரிக்க வலதுசாரிகள் ''மெக்காவை அணுகுண்டால் அழிப்பது'' பற்றி விவாதிக்கிறார்கள்.

By Patrick Martin
15 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமைதியை முன்னெடுப்பதும் மற்றும் பயங்கரவாதத்தை தடுப்பதுமே தனது அணு ஆயுதக் கொள்கையின் நோக்கமாகும் என பரந்துபட்ட மக்களுக்கு புஷ் நிர்வாகம் கூறுகின்றது. ஆனால், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையினை ஒழுங்கமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும் அதிவலதுசாரி பிரிவினரால், அணுவாயுத பாவனையானது சிந்திக்க முடியாத ஒரு கடைசி வழிமுறையாக பார்க்கப்படவில்லை மாறாக ஒரு விரும்பத்தக்க தேர்வாக பார்க்கப்படுகின்றது.

இந்த பிரிவினரின் இரத்தவெறி, தீவிர தேசிய வாதம் மற்றும் இனவாதத்தோடு இணைந்தவண்ணம் செல்கிறது.

அதி வலதுசாரி முன்னணி வெளியீடுகளில் ஒன்றான National Review வலைத்தளத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் அதன் மேல்நிலை ஆசிரியர்கள், ஐக்கிய அமெரிக்காவின் மீது பயங்கரவாத தாக்குதலின் நிகழ்வொன்றில் ஒரு அணுவாயுதம் அல்லது கதிர்இயக்கம் உபயோகப்படுத்தப்பட்டால், அதற்கு பொருத்தமான பதிலடியாக அணுக்குண்டுத் தாக்குதலுக்கு அராபிய தலைநகரங்களை தேர்வுசெய்ய வேண்டும் என ஆலோசனை செய்கின்றார்கள்.

National Review ஆசிரியரான Rich Lowry மார்ச் 7ம் திகதி ''தான் பேசிய மக்கள் மத்தியில், மெக்காவை அணுகுண்டால் அழிப்பது பற்றிய உணர்வுகள் நிறைய இருக்கின்றன. நவீன மனிதர்களின் இன்னும் சிலவற்றுக்கான தேர்வு இந்த திசையின் கோடுகளில் இணைந்திருக்கின்றன : "பாக்தாத், தெகிரான் போன்றவை ஒரு முதலாவது குண்டுத்தாக்குதலுக்கு பொருத்தமான இடங்களாக இருக்கவேண்டும். ஒரு மிகநுட்பமாக குறிதவறாது தாக்கக்கூடியதை உறுதிப்படுத்த எம்மிடம் போதுமான குண்டுகள் இருக்குமானால் காஸா நகரம் மற்றும் றமல்லா போன்றவையும் பட்டியலில் இருக்கவேண்டும். Damascus, Cairo, Algiers, Tripoli மற்றும் Riyadh போன்ற நகரங்கள் எச்சரிக்கையுடன் கவனத்தில் வைத்திருக்கப்படவேண்டும், அந்த நகரங்களில் இருந்து தாக்குதலுக்கான ஏதாவது ஆதரவு சைகைகள் தோன்றினால் உடனடி அழிவை உண்டாக்க வேண்டும்'' என பிரகடனம் செய்கிறார்.

மெக்காவை அழித்தல் 100 கோடி முஸ்லீம்களின் மத்தியில் நிரந்தரமான கொடூரத்தை விளைவாக்கும் என இன்னொரு National Review எழுத்தாளர் குறிப்பிட்டார்.'''இதுவொரு துன்பம் மிகுந்தது, யோசிப்பதற்கு என்ன இருக்கிறது என எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. மெக்கா தீவிரமாக இருப்பதுபோல் தோன்றலாம் ஆனால் மீண்டும் சிலர் இறந்துபோகலாம் மற்றும் அது ஒரு சைகையை அனுப்புவதாக இருக்கும்.'' என Lowry பதலளிக்கிறார்.

The National Review கடைசியாக வந்த செய்தியை சுருக்கமாக குறிப்பிடுகையில், அதற்கு பங்களிப்பு செய்யும் அதனது ஆசிரியர்களில் ஒருவரான Ann Coulter மத்தியகால சிலுவை யுத்தத்தின் நவீன பிரதிக்கு சார்பாக தன்னை அறிவித்துக்கொண்டார். அராபிய பயங்கரவாதத்திற்கு பதிலளிக்கையில், ''நாம் அவர்களது நாடுகளை ஆக்கிரமிக்கவேண்டும், அவர்களது தலைவர்களை கொன்று அவர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றவேண்டும்'' என National Review Online ல் அவர் எழுதினார். இந்து அவமதிப்பு நிகழ்வு புஷ் நிர்வாகத்தின் மத்தியகிழக்கு இராஜதந்திரத்தை பாதித்தபோது அந்த சஞ்சிகை ஒரு பகிரங்க அனுதாபத்தை வெளியிட்டபோது, Coulter எதிர்க்கப்பட்டதுடன், ஒரு பங்களிப்பாளர் என்பதில் இருந்து விலக்கப்பட்டார்.

எவ்வளவு மில்லியன் கணக்கானோரை மத்திய கிழக்கில் எரித்துவிடுவது என்பது தொடர்பான இந்த பகிரங்க விவாதத்தை ஒருவர் கவனத்திற்கெடுக்கையில், Lowry உம் அவரது சகாக்களும் அரசியல் ரீதியாகவும் மற்றும் தனிப்பட முறையிலும் குடியரசு கட்சி, புஷ் நிர்வாகம் மற்றும் பென்டகனுடனும் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒருவர் கண்டிப்பாக ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். கடந்த மாதம் இடம்பெற்ற பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில், National Review பிரதான பின்னணியாளர்களாக இருந்ததுடன், அங்கே பேச்சாளர்களாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Condoleeza Rice உள்ளடங்கலாக, சுகாதார செயலாளர் மற்றும் மனித சேவைத் துறை Tommy Thompson வருகை தந்திருந்தனர்.

பிரமாண்டமான படுகொலை பற்றிய வழமையாக கலந்துரையாடல் இந்த வட்டாரங்களிலும் மற்றும் அமெரிக்க அரசின் உயர் மட்டங்களின் அரசியல் உரையாடலில் முற்றாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மார்ச் 13 புஷ்ஷின் பத்திரிகையாளர் மாநாட்டில், அவரது நெருக்கமான அரசியல் கூட்டாளிகளின் கொலைகார பேச்சு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்க, மிக கோழைத்தனமான மற்றும் நடுக்கத்துடனும் இருக்கும் அமெரிக்க ஊடகங்களின் ஒரு செய்தியாளர் கூட துணியவில்லை.