World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Indian government rams repressive laws through parliament

இந்திய அரசாங்கம் பாராளுமன்றம் வழியாக அடக்குமுறை சட்டங்களை திணிக்கிறது.

By Deepal Jayasekera
9 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

"பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடல்" எனும் மூடுதிரையின் கீழ் பிரதம மந்திரி அடல்பிகாரி வாஜ்பாயியின் இந்திய அரசாங்கம் ஜனநாயக விரோத சட்டங்களின் அடுக்கை --பயங்கரவாதத் தடுப்பு மேலாணையை (Prevention of Terrorism Ordinance (POTO))- மார்ச் 26 அன்று பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தின் வழியாகத் திணித்தது.

சில நாட்களுக்கு முன்னர், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்மசோதாவை இயற்றுவதற்கான முதன் முயற்சியில் தோல்வி அடைந்திருந்தது. அது மார்ச் 18ம் தேதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள, இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபையான லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் ஆளும் கூட்டணி சிறுபான்மையாக உள்ள ராஜ்ய சபா அல்லது மேல்சபையில் மார்ச் 21ம் தேதி அன்று தோற்கடிக்கப்பட்டது.

இந்திய ஜனாதிபதியை, இரு அவைகளதும் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுதற்கு முறையே கோரிக்கை விடுக்கும் அளவுக்கு இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் வாஜ்பாயி உறுதியாக இருந்தார். இது 1947 சுதந்திரத்தின் பின்னர் நடைபெறும் அத்தகைய கூட்ட அமர்வில் மூன்றாவதாக மட்டும் இருந்தது. இம்மசோதா 425க்கு 296 என்ற வாக்குகளில் நிறைவேறியது, 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தராமலோ அல்லது வருகைதந்தும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ இருந்தனர்.

பெரும்பான்மை தேசிய ஜனநாயக அணியில் உள்ள கட்சிகள் பொடோ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இது தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்ட அகில இந்திய அண்ணா தி.மு.க மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியாலும் ஆதரிக்கப்பட்டது. எதிர்க் கட்சியாக இருக்கிற காங்கிரஸ் உட்பட அனைவரும் எதிர்த்து வாக்களித்தனர். பகுஜன் சமாஜக் கட்சியும் தேசிய ஜனநாயக முன்னனியின் பங்காளரும் மேற்குவங்காளத்திலிருந்து பிரதிநிதித்துவம் செய்யும் திரிணாமூல் காங்கிரஸூம் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த புதிய சட்டமசோதா "பயங்கவாதிகள் என சந்தேகப்படுவோரை" கைது செய்வதற்கு வரையற்ற அதிகாரங்களை அளிக்கிறது. இதன்படி கைது செய்யப்படுவோர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படாமல் விசாரணைக்காக 30 நாட்கள் வைக்கப்பட முடியும் மற்றும் முறையான வழக்குப் பதிவுகள் எதுவுமின்றி கூடுதலாக 90 நாட்கள் வைக்கப்பட முடியும். சிறப்பு நீதி மன்றத்தின் அனுமதியுடன் சந்தேகத்திற்குள்ளானோர் எந்தக் குற்றமும் சாட்டப்படாமல் கூடுதலாக 90 நாட்கள் வைக்கப்பட முடியும். பயங்கரவாதம் தொடர்பான சந்தேகத்திற்கு உள்ளானோரின் சொத்தானது, எந்த வழக்கு மற்றும் விசாரணைக்கும் முன்னால் பறிமுதல் செய்யப்பட முடியும்.

அரசாங்கமானது எந்தக் குழுவையும் "பயங்கரவாத இயக்கம்" என முத்திரை குத்த முடியும். தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பணம் அளித்ததாக, இடம் கொடுத்ததாக, போக்குவரத்து வசதி அல்லது ஏனைய ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் எவர்மீதும் "பயங்கரவாதம்" குற்றங்களின் பேரில் குற்றம் சுமத்தப்பட முடியும். போலீசாரிடம் கொடுக்கப்பட்ட குற்ற ஒப்புதல், அடையாளம் தெரியாத சாட்சிகளின் வாக்கு மூலங்கள் மற்றும் இடைமறித்துக் கேட்கப்பட்ட செய்தித் தொடர்புகள் ஆகிய அனைத்தும் இதில் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்பட முடியும். தொலைபேசி, வானொலி மற்றும் இணைய வழி வரும் தகவல்களை இடைமறித்துக் கேட்க போலீஸ் பரந்த அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

இம்மசோதாவானது பயங்கரவாதம் என்ற மிகப் பரந்த வரையறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விளைவிப்போர் அல்லது மக்களிடையே "பயங்கரத்தை" ஏற்படுத்துவோர் எவரும் "பயங்கரவாதி" ஆவர். ஆதாரம் நிரூபிக்கப்பட வேண்டியது என்பது "குற்றவாளியாக நிரூபிக்கப்படாதவரை நிரபராதி" என்ற கோட்பாட்டை மீறுவதாக உள்ளது. குற்றங்கள் நிரூபிக்கப்படுவோர் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையிலிருந்து மரணதண்டனை வரை எதிர்கொள்வர். காவலில் வைக்கப்பட்டுப் பின்னர் குற்றமற்றவர் என கண்டறியப்படுவோருக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை கிடையாது.

வாஜ்பாயியும் தேசிய ஜனநாயக முன்னனியின் அவரது இந்து பேரினவாத பாரதிய ஜனதாக் கட்சியும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை சட்டமாக இயற்றுதற்கு அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல்களையும் இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தின் மீதான டிசம்பர் 11 தாக்குதல்களையும் சுரண்டிக் கொண்டனர். முக்கியமாக, அமெரிக்காவில் குடியுரிமைகள் மீதாக பெரும் அத்து மீறல்களைச் செய்துள்ள புஷ் நிர்வாகமானது, இந்தியச் சட்டங்களைப் புகழ்ந்தது. மார்ச் 28, அமெரிக்க அரசுத் துறைப் பேச்சாளர் ரிச்சர்ட் பெளச்சர் இந்திய மசோதா தொடர்பாக பின்வருமாறு அறிவித்தார்: "பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்திற்கு முக்கியமானது."

ஜனாதிபதி ஆணையால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பொடோ (POTO) இப்பொழுது பொடா (Prevention of Terrorism Act) ஆக ஆனது. பல அம்சங்களில் அது இழிவார்ந்த தடா (TADA) பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை விடக் கடுமையானது. அந்தச்சட்டம் பரந்த அளவில் எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு 1995ல் புதுப்பிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டது. தடா தனிநபர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படக் கூடியது அதேவேளை பொடா ஒரு அமைப்புக்கே பயன்படுத்தத்தக்கதுடன் அதன் மூலம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படக் கூடியது. தகவல் தொடர்புகளை இடைமறித்துக் கேட்க போலீசுக்கு அதிகாரம் உள்ளதுடன் "பயங்கரவாதிகள்" பற்றிய தகவல்களை வைத்திருப்போருக்கு எதிராகவும் கூட நடவடிக்கை எடுக்க முடியும்.

ஜனநாயக உரிமைகளை மொத்தமாக முறைகேடாக நடத்துதலில் இழிபுகழ் பெற்றது தடா ஆகும், குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர்ப் பகுதியில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் இந்திய ஆட்சியாளருக்கு எதிரான எதிராளிகளை ஆத்திரமூட்டவும் சிறையில் அடைக்கவும் அதன் விதிமுறைகளைப் பயன்படுத்தின. தன்னிச்சையான கைது, வழக்குடன் நீண்ட தடுப்புக்காவல் சட்டவிரோத படுகொலைகள் ஆகியன பொதுவானவை ஆகும்.

மார்ச் 23 அன்று எக்கனாமிக் டைம்ஸில் இடம்பெற்ற அண்மைய கட்டுரையில் குறிப்பிட்டதாவது: "தடாவின் கீழ் கைது செய்யப்பட்டோர் 99 சதவீதத்திற்கு மேல் அச்சுறுத்தப்பட்டனர், தொந்திரவுக்குள்ளாக்கப்பட்டனர் மற்றும் சிலர் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இன்றி கொலை செய்யப்பட்டனர். உத்தியோகரீதியாக, 77,571 பேர் தடாவின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர், ஆனால் குற்றம் ஒப்புக் கொள்ளப்பட்ட வீதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. தடா காலாவதியாகிப் போய் இருப்பினும் பல நூறுபேர் தடாவின் கீழ் இன்னும் சிறையில் இருந்து வருகின்றனர்.

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்

புதிய சட்டமியற்றலுக்கான நோக்கம் ஏற்கனவே தெளிவானதாக இருக்கிறது: அரசியல் எதிராளிகளை ஆத்திரமூட்டல் மற்றும் "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடல்" எனும் பெயரில் முஸ்லிம்களை இலக்குவைப்பதன் மூலம் வகுப்புவாதப் பதட்டங்களை முடுக்கிவிடல் ஆகும். ஆளும் கூட்டணியானது பிளவுகள் புரையோடிப் போய் இருப்பது, பாக்கிஸ்தானுடன் பதட்டங்கள் கொண்டிருப்பது இவை அதிகரித்திருக்கும் அதேநிலையில், அரசாங்கமானது அதன் சந்தைப் பொருளாதார சீர்திருத்தங்களின் அதிகரித்து வரும் எதிர்ப்பினை எதிர் கொண்டு வருகிறது.

கூட்டுப் பாராளுமன்ற அமர்விற்கு ஒருநாள் முன்னர், மார்ச் 25 அன்று, முன்னதாக 100,000 டாலர்களுடன் கைது செய்யப்பட்ட இண்டு பேர் அந்தப் பணம் யாசின் மாலிக்குடையது என்று "ஒப்புக் கொண்டதன்" பின்னர், பொடோவானது ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை கைது செய்யப் பயன்படுத்தப்பட்டது. அவர் அனைத்துக்கட்சி ஹூரியத் மாநாட்டின் தலைமையகத்தில், சிறீநகரில் பத்திரிகையாளர் மாநாட்டில் கைது செய்யப்பட்டார். இது காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களுக்கு சட்டப்பூர்வமாக வேலைசெய்யும் பொது நிறுவனமாக தொழிற்பட்டு வருகிறது. அவர் அனைத்துக் குற்றங்களையும் மறுத்தார்.

உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி கூட்டுக் கூட்டத்தில் பொடோவைப் பயன்படுத்தி 69 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். அவர்களில் 51 பேர் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம்கள் ஆவர். மேலும், குஜராத்தில் உள்ள பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம் இந்த மேலாணையின்படி 62 பேரைக் கைது செய்தது. அவர்கள் அனைவரும் பிப்ரவரி 27 கோத்ரா இரயில் வண்டி சம்பவம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்கள் ஆவர். அச்சம்பவத்தில் பல இந்து அடிப்படைவாத செயல்பாட்டாளர்கள் உள்பட 58 பேர்கள் இறந்தனர். குஜராத்தில் வன்முறையில் நூற்றுக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற இந்து வெறியர்கள் ஒருவர் கூட பொடோவின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியும் மக்கள் உரிமைக் கழகத்தின் செயல்பாட்டாளருமான ராஜிந்தர் சச்சார் குறிப்பிட்டதாவது:

"இதுபோன்ற சட்டம் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக அல்லாமல் அதன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக இதுபோன்ற சட்டம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு."

இச்சட்ட மசோதா ஜம்மு காஷ்மீரில் பல எதிர்ப்புக்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் உட்பட கணிசமான எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் இந்தியத் தலைவர் விஜய் நாகராஜ் பின்வருமாறு கூறினார்: "புதிய சட்டமானது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை அத்துமீறல் ஆகும்." பாதுகாப்புப் படைகளை வழக்குத் தொடுப்பதிலிருந்து தடைசெய்வதை வழங்கும் பிரிவைச் சுட்டிக்காட்டி, அவர்கள் "நல்ல நம்பிக்கையில்" செயல்படுகிறார்கள் என்று காட்ட முடியும், என அவர் மேலும் கூறினார்." போலீசுக்கு அத்தகைய அதிகாரங்களை அளிப்பதன் மூலம், அது முறைகேடாகப் பயன்படுத்துவோரின் நலன்களைப் பாதுகாக்கிறது." என்றார்.

இந்தியப் பத்திரிக்கைகளில் உள்ள தலையங்கங்கள், வாஜ்பாயி அரசாங்கமானது அரசியல் பதட்டங்களைக் கிளறிவிடக் கூடியதாக மற்றும் எல்லைமீறிப் போகலாம் என்றும் ஆளும் வர்க்கத்தில் உள்ள அக்கறைகளை எதிரொலிக்கிறது. எக்கானமிக் டைம்ஸில் உள்ள தலையங்கம் "குற்ற நடவடிக்கைகளைத் தண்டிக்கப் போதிய அளவு சட்டங்களை ஏற்கனவே இந்தியா கொண்டிருக்கிறது" என்று வாதித்து, தேசிய ஜனநாயக முன்னணியை "பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் பொடோவை இந்தியாவின் தொண்டைக்குள் திணித்தல்" வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கமானது, ஆளும் வட்டாரங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த "பொடோவை மறு வடிவப்படுத்துமாறு" அழைத்தது.

பி.ஜே.பி பங்காளிகள் சிலரின் போலி எதிர்ப்பு அவர்கள் அதற்காக வாக்களித்தபோது அம்பலமானது. ஆரம்பத்தில் லோக்சபாவில் வாக்களித்த தேசியமாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள அதன் தளம் மேலும் அழிந்து போகும் என்ற அச்சத்தில் ராஜ்ய சபாவில் எதிராக வாக்களித்தது. கூட்டுக் கூட்டத்திற்குப் பிந்தைய நாட்களில் தேசியமாநாட்டுக் கட்சி விமர்சன முணுமுணுப்பு எதுவுமின்றி பொடோவுக்கு ஆதரவளித்தது. வாஜ்பாயியால் வழங்கப்பட்ட ஒரே ஒரு சலுகை குஜராத் மாநில அரசாங்கத்தை பொடோ குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு இருக்கின்ற சட்டங்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

காங்கிரஸ் (இ) மற்றும் இந்திய ஸ்ராலினிசக் கட்சி - மார்க்சிஸ்ட் (சி.பி.ஐ--எம்) ஆகிய எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு முற்றிலும் பைத்தியக்காரத்தனமானதாக இருந்தது. பொடோ ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்பான விதத்துக்கு அல்லது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு அவர்களுள் ஒருவர் கூட எந்த அடிப்படையான எதிர்ப்பையும் காட்டவில்லை. அவர்கள் அனைவரும் சட்டமசோதா "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு" என்ற பொய்யை ஏற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ்(இ) தலைவி சோனியா காந்தி சொற்ஜாலத்துடன் எச்சரித்தார்: "அரசியல் எதிராளிகளை நசுக்க, மதச்சிறுபான்மையரை இனக்குழுவினரை எமது சமுதாயத்தின் பலவீனமான பகுதியினரை மற்றும் தொழிற்சங்கங்களை ஒடுக்க இந்த அரசாங்கத்தின் கைகளில் பொடோ ஒரு கருவியாக ஆகலாம் என நான் சந்தேகப்படுகிறேன்." பின்னர் அவர் தடா சட்டத்தை இயற்றி அதனைப் பயன்படுத்திய அவரது கட்சியின் முடிவை நியாயப்படுத்திச் சென்றார், அது "ஏகோபித்த சூழலில் செய்யப்பட்டது, முரண்பட்ட சூழ்நிலையில் அல்ல" என்று மட்டும் கூறினார். மேலும், கர்னாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் அதேபோன்ற சட்டமியற்றலை ஏற்கனவே நிறைவேற்றி உள்ளதைப் பற்றி காந்தி ஒன்றும் குறிப்பிடவில்லை.

விவாதத்தின் பொழுது, சி.பி.ஐ(எம்) வாஜ்பாயி அரசாங்கத்தை முஸ்லிம் சிறுபான்மையருக்கு எதிராக பொடோ சட்டத்தை "தவறாக" பயன்படுத்துவதற்காக விமரிசித்தது மற்றும் "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட" இருக்கின்ற சட்டங்களே போதும் என்றும் வலியுறுத்தியது. ஆகையால் புதிய சட்டங்கள் தொடர்பான உடன்பாடின்மைகள் சிறு விஷயங்களே என்பதை, சி.பி.ஐ-எம் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறும்போது, வாஜ்பாயி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் உட்கார்ந்து வேறுபாடுகளைக் களையமுடியும்" என்றார். மேற்கு வங்காளத்தில், சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி மாநில அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை நசுக்க தனது சொந்த மசோதாவை, "மேற்கு வங்க பயங்கரவாதத் தடுப்பு மேலாணை" (West Bengal Prevention of Terrorism Ordinance) என்பதைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

அங்கு பொடோ சட்டத்திற்கு எதிரான கொள்கை ரீதியான எதிர்ப்பு இல்லை என்ற உண்மை, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்க இந்த ஜனநாயக விரோத சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் இந்தக் கட்சிகளில் எதுவும் எதிர்க்கப் போவதில்லை என்பது பற்றிய ஒரு கடுமையான எச்சரிக்கை ஆகும்.

See Also :

இந்திய மாநில தேர்தல் இழப்புக்கள் ஆளும் கூட்டணியில் பதட்டங்களை உக்கிரப்படுத்துகின்றன

இந்தியாவின் ஆளும் கட்சி வகுப்புவாத படுகொலையைத் தூண்டிவிடுகிறது