World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

75,000 march in Washington against US militarism and Israeli aggression

இராணுவ வாதத்துக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் எதிராக வாஷிங்டனில் 75,000 பேர் ஊர்வலம்

By Jerry Isaacs
22 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

சனிக்கிழமை அன்று வாஷிங்டன் மாவட்டத்தில் அமெரிக்க இராணுவ வாதத்துக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான புஷ் நிர்வாகத்தின் தாக்குதலுக்கும், அதேபோல பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கும் எதிராக இலட்சக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்தனர். தலைநகர் போலீஸ், எதிர்ப்பு ஊர்வலம் எதிர்பார்த்ததைவிட பெரிதாக இருந்ததாகவும், பங்கேற்றோர் எண்ணிக்கை 75,000 என்றும் மதிப்பிடுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வளைகுடாப் போருக்குப் பின்னர் அது மிகப் பெரிய யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இருந்தது.

ஆர்ப்பாட்ட ஊர்வலம் மூன்று தனித்தனி அணிதிரளலாக இருந்தது, பின்னர் அது பென்சில்வேனியா சாலையிலிருந்து அமெரிக்கத் தலைநகருக்கு அணிநடையிடும் ஒன்று கூடலாக அமைந்தது. யுத்தத்தை நிறுத்து என்பதற்கான ஏப்பிரல் 20ஆம் தேதி அணிதிரளல் அமைதி வேண்டுவோர் மற்றும் தீவிரவாத குழுக்கள் ஆகியோரைக் கொண்ட கூட்டணி, வாஷிங்டன் நினைவுச் சின்னத்திற்கு சற்று தெற்கே அணிதிரளலை நடத்தினர். வெள்ளை மாளிகைக்கு அருகே சர்வதேச ANSWER (Act Now to Stop War and End Racism) தனிக் கூட்டணியால் ஆன இன்னொரு எதிர்ப்பானது மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மீதாகக் குவிமையப்படுத்தியதுடன், பல பாலஸ்தீனியர்களையும் எதிர்த்தது.

இறுதியாக, உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் கொள்கைகளுக்கு எதிரான பூகோளமயமாக்கல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினர், தலைநகருக்கு அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்னர், அவ்விரு நிறுவனங்களின் தலைமையகங்களுக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 15,000லிருந்து 20,000 மேற்குக் கரையில் உடன் நிகழ்வாக சான்பிரான்சிஸ்கோவில் அணிவகுப்பு நடத்தினர். மற்ற மாநகர்களிலும் சிறு சிறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

செப்டம்பர் 11க்குப் பின்னர், புஷ் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்க்ைகளின் பிரதான தாக்குதலைப் பெற்ற, அரபு அமெரிக்கர்கள் மற்றும் முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் ஆகியோரைக் கொண்ட பெரும் படை ஒன்று மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்க ஆதரவை எதிர்த்து வாஷிங்டனில் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அமெரிக்கர்கள் டிட்ராயிட் அல்லது நியூயோர்க் போன்ற ஏனைய மாநகர்களில் இருந்து 12 மணிநேரம் பயணம் செய்து, அதனை ஏற்பாடு செய்தவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய பாலஸ்தீனிய ஆதரவு ஊர்வலம் என கூறியதில் கலந்து கொண்டனர். அவர்கள் பாலஸ்தீனியக் கொடிகளை, ஜெனின் அகதிமுகாமில் படுகொலை செய்யப்பட்டவர்களை அடையாளமாகக் குறிக்கும் சவப்பெட்டிகள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட குடிமக்களின் நிழற்படங்களை ஏந்திச் சென்றனர். பலர் இஸ்ரேலிய இராணுவ எந்திரத்திற்கு ஆயுதம் மற்றும் நிதிஉதவி செய்யும் அமெரிக்கக் கொள்கையைக் கண்டித்தனர். அவர்கள், "ஷெரோனும் புஷ்ஷூம் பயங்கரவாதிகள்", "பாலஸ்தீனியர்கள் 9-1124/7 வாழ்கிறார்கள்" மற்றும் "கற்கள் (எதிர்) எப்-16 துப்பாக்கிகள், யார் பயங்கரவாதி?" எனும் குறிப்புக்களை ஏந்திச்சென்றனர்.

கனெக்டிகட், குரோடன் பகுதியிலிருந்து மம்மூது மன்சூர் என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் அணிவகுப்புக்கு வந்தார். அவர், பெரும்பாலான தமது குடும்பத்தினர் ரமல்லா, நாபுலஸ் மற்றும் காசாவில் இருப்பதாகக் கூறினார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் அவரது மணைவியின் உடன்பிறவா சகோதரர் ரமல்லாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதேவேளை ஏனைய உறவினர்கள் காணாமற் போய்விட்டதாகவும் கூறினார்.

"அமெரிக்கக் கொள்கையை ஆட்சேபிக்கவும் பாலஸ்தீனிய மக்களுக்கு எனது ஆதரவைக் காட்டவுமே நான் இங்கிருக்கிறேன்" என்றார் அவர். "அங்குள்ள மக்களுக்கு அது பயங்கரமானது. மக்கள் சுடப்படாமல் வீடுகளை விட்டு வெளியில் செல்லமுடியாது, அவர்களிடம் போதுமான உணவோ அல்லது தண்ணீரோ கிடையாது.

"உண்மை என்னவென்றால் என்ன நடக்கிறது என்று பெரும்பான்மையான அமெரிக்க மக்களுக்கு புரியவில்லை. அவர்கள் அமெரிக்காவில் இங்கு ஜனநாயகம் இருப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் அது உண்மையில் ஜனநாயகம் இல்லை. அரசியல்வாதிகள் விலைபோகின்றவர்களாக இருக்கின்றனர் மற்றும் உண்மையான அமெரிக்க மதிப்புக்களையும் அறநெறிகளையும் பிரதிபலிக்கவில்லை. இஸ்ரேலிய படுகொலைகளை அலட்சியம் செய்யும் மற்றும் அது பயங்கரவாதத்தை நிறுத்தப் போராடுவதாகக் கூறும் அரசாங்கத்தைப் பற்றி நீங்கள் விளக்கக் கூடிய ஒரே வழி அதுதான். அவர்கள் எதைக் கூறுகிறார்கள்? ஜனநாயகம் என்பது மக்கள் தங்களின் சொந்த அரசாங்கத்தை நடத்துவது என்று கூறுகிறார்கள், ஆனால் இங்கு பணம் வைத்திருக்கும் ஒருவர்தான் எல்லாவற்றையும் நடத்துகின்றனர்" என்கின்றார்.

ஒரு புள்ளியில் யூத ஆர்ப்பாட்டத்தினர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, "யூதர் விதிமுறைகள் இருக்கட்டும்! சியோனிசம் வேண்டாம்!" என்று முழங்கிக் கொண்டு அரபு-அமெரிக்க ஆர்ப்பாட்டத்தினருடன் இணைந்தனர். நாள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் பணி ஆற்ற இஸ்ரேலிய இராணுவ தயார்நிலைப்படையைச் சேர்ந்தவர்கள் மறுத்தமை பற்றிய குறிப்புக்கள் ஆயிரக்கணக்கானோரின் பலத்த கைதட்டல்களைப் பெற்றன.

இஸ்ரேலிய அரசாங்கத்தால் இழைக்கப்படும் கொடுமைகள் ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் ஈராக்கிற்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கான திட்டம் மற்றும் மத்திய ஆசியா, யேமன், பிலிப்பைன்ஸ் மற்றும் இலத்தின் அமெரிக்காவுக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பல் உட்பட புஷ்ஷின் முடிவில்லாத "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்பதை எதிர்ப்பவர்களை மேலும் மின்னூட்டம் செய்து செயலுக்குத் தூண்டியது. ஆப்கானிய குடிமக்கள் மீது குண்டு வீசுதலைக் கண்டிக்கும் எதிர்ப்பாளர்கள், "முடிவற்ற யுத்தத்துக்கு விருப்பம் போல் எழுதிக் கொடாதே", "வெள்ளைமாளிகையில் மீண்டும் குற்றம் புரிபவர்கள்" மற்றும் "முடிவு இல்லாத யுத்தம் எங்களது பெயரில் நடத்தாதே" எனும் பதாகைகளையும் அட்டைகளையும் ஏந்திச் சென்றனர்.

பல எதிர்ப்பாளர்கள், முடிவு தேதியுடன் கூடிய நிகழ்ச்சிப் போக்கு இல்லாமல் 1,200 புலம் பெயர்ந்தோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதையும் கண்கானிப்புச் செய்யவும் தொலைபேசி ஒட்டுக் கேட்கவும் எப்.பி.ஐக்கும் ஏனைய முகவாண்மைக்கும் அளவில்லா அதிகாரங்கள் கொடுக்கப் பட்டிருப்பதையும் கண்டனம் செய்தனர். ஏற்கனவே பெரும் இராணுவ வரவு-செலவுத் திட்டம் அதிகரிப்புக்கும் செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை கொடுக்கப்பட்டிருப்பதற்கும் பதிலாக வேலைகளுக்கும் கல்விக்கும் சமூக வேலைத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்குமாறு மற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் யுத்த ஆதரவு மற்றும் தேசியவாத உணர்வுகளை முன்னெடுப்பதற்கு செய்தி ஊடகத்தால் செய்யப்பட்ட பிரச்சாரத்தின் முன்னர், அதேபோல அதிருப்தியாளர்களை அமைதிப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர் பயங்கரத்துக்கு துணைபோகுபவர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்துகின்றதன் முன்னே, இவ் ஊர்வலத்திற்கு பெருமளவிலானோர் வந்து சேர்ந்தமை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் உள்ள நாட்களில் செய்தி ஊடகமானது, போலீஸ், எப்.பி.ஐ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆகியோரால் வன்முறைக்கான சாத்தியங்கள் கருதி தயாரிப்புக்கள் செய்யப்பட்டதாகவும் பரந்த அளவில் கைதுகள் பற்றியும் குறிப்புக் காட்டி பரந்த அளவில் செய்தி வெளியிட்டன. உள்ளூர் மற்றும் தேசிய செய்தி ஊடகங்களின் வெளியீடுகள் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி சார்லஸ் ராம்சே எதிர்ப்பு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஒரு மூடுதிரை ஆக முடியும் என்று எச்சரித்ததை மேற்கோள் காட்டின. மொத்தம் 65 பேர்கள் பாதையைக் கடந்து செல்லுதல், போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் போன்ற சிறு சட்ட மீறல்களுக்காக கைது செய்யப்பட்டனர் மற்றும் சிலர் வரவிருந்த பரந்த ஆர்ப்பாட்டம் மற்றும் சிலர் சனிக்கிழமை நிகழ்வுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

குடியரசுக் கட்சியினர் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் முன்னாள் கலிபோர்னியா காங்கிரஸ் உறுப்பினர் றொபர்ட் டொர்னான் மற்றும் ஏனைய வலது சாரியினர் பேசிய சிறிய எதிர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், இரு டஜனுக்கும் குறைவானவர்கள் கலந்து கொண்டனர். இந்த யுத்த ஆதரவு ஊர்வலம் உடனே ஏளனம் செய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்டது இரு குழுக்களையும் பிரிப்பதற்கு அதிகம் வாஷிங்டன் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஊர்வலத்தினருள் தங்களின் முதல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கை கொண்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் அதேபோல அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து வந்த தொழிலாளர்களும் உள்ளடங்குவர்.

"புஷ் நிர்வாகமானது பயங்கரவாதத்தை தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்கான அடையாளமாகப் பயன்படுத்துகிறது." என காபே எனும் நியூயோர்க்கில் பஃபெலோ அரசுக் கல்லூரி மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். "அட்டர்னி ஜெனரல் ஆச்கிரப்டின் படி, இந்த யுத்தத்தை எதிர்க்கும் எவரும் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றனர் மற்றும் ஒத்துழைக்கின்றனர்".

தனது முதலாவது யுத்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பால்டிமோரிலிருந்து வந்த உயர்நிலைப் பள்ளி மாணவர் கிளார்க், "நான் யுத்தத்துக்கு எதிரானவன் ஏனெனில் அதற்கு அடிப்படை எதுவும் இல்லை" என்றார். "செப்டம்பர் 11 அன்று உண்மையில் என்ன நிகழ்ந்தது என புலன் விசாரணை எதுவும் இல்லை, மற்றும் நாம் ஆப்கானிஸ்தானில் பேச்சுவார்த்தை அல்லது எதுவும் இல்லாமல்அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்களைக் கொன்று கொண்டிருக்கிறோம். நாம் மக்களை துடைத்தழித்துக் கொண்டிருக்கிறோம் மற்றும் செய்தி ஊடகங்கள் இதனை வடிகட்டி அனுப்புகின்றன".

தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவரான ஷங்கர் என்பவர் நியூயோர்க் மாநகரத்திலிருந்து இந்த ஊர்வலத்திற்கு பேருந்தில் வந்தார். "ஆப்கானிஸ்தானில் இந்த யுத்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்றார் அவர். "நம் எல்லோரது பெயரிலும், ஏற்கனவே அதிகமான அளவு பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு சிலர் குண்டுகளைப் போடவேண்டும் மற்றும் யுத்தம் தொடுக்க வேண்டும் என்பது தவறானது. முதலாளித்துவத்தால் விளைவிக்கப்பட்ட உலகின் உண்மையான பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டு மக்கள் பார்க்க முடியாத மற்றும் அறிந்திராத இடத்தில் வாழ்வை அர்த்தமற்ற விதத்தில் சீரழிப்பதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்."

கொனெக்டிகுட்டிலிருந்து வந்த ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர், சாமி மார்க்கோனி, செப்டம்பர்11 தாக்குதலை "புஷ் ஜனாதிபதி பதவிக் காலத்தில் நடந்த சிறப்பு" என்று அழைத்தார். "மக்கள் அவரை விரும்பவில்லை ஆனால் இப்பொழுது அவரால் தன்னைசை சுற்றி மக்களை அணிதிரளச் செய்ய முடிந்தது மற்றும் தாக்குதலை அவர் விரும்பும் யுத்தத்தைத் தொடுப்பதற்கு நியாயப்படுத்த பயன்படுத்த முடிந்தது."

அவர், தானும் வகுப்புத் தோழர்களும் வாஷிங்டனுக்கு வந்திருந்ததாகத் தெரிவித்தார் "ஏனென்றால் பிலிப்பைன்ஸ் மற்றும் கொலம்பியா உள்பட உலகம் முழுவதும் படைகளை அனுப்புவது, நமது அரசாங்கம் செய்வது நமக்குப் பிடிக்கவில்லை மற்றும் ஏனென்றால் நமது அரசாங்கம் அது தலையிடக் கூடாத பிரச்சினைகளில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடல் எனபதன் கீழ், பிரச்சினைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது."

வாஷிங்டன் நினைவுச்சின்னம் அருகே காலை ஊர்வலத்தில், பாலஸ்தீனிய அகதி முகாமிலிருந்து 15வயது சிறுமி கலந்து கொண்டாள். அவள் சொன்னாள், "புஷ்க்கும் ஷெரோனுக்கும் வேறுபாடு எனக்குத் தெரியவில்லை. படைவீரர்கள் இஸ்ரேலியர்களாக இருக்கலாம், ஆனால் ஆயுதங்கள் அமெரிக்காவில் செய்யப்பட்டவை. உங்களது வரிப்பணம் எப்-16கள், டாங்கிகள் மற்றும் அப்பாச்சே ஹெலிகாட்டர்களுக்குப் போகின்றன, அவை எங்களைக் கொல்கின்றன."

அவளது நண்பர் மேலும் கூறியதாவது, "ஆயுதங்கள் பலம்பொருந்தியவை மற்றும் நாங்கள் கற்களை மட்டும் வைத்திருக்கிறோம், ஆனால் எங்களது நம்பிக்கை பலமானது. நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ஏன் அவர்கள் எம்மை பயங்கரவாதிகள் என அழைக்கின்றனர்? சியோனிச அரசின் நிறுவனர் பென்கரியன், ஒரு முறை நாங்கள் வெளியேற்றப்பட்டதும் எதிர்கால தலைமுறையினர் தங்களின் தாயகத்தை மறந்து விடுவர் என்று கூறினார். அவர் கூறியது தவறு."

செப்டம்பர்11 பயங்கரவாதத் தாக்குதல்களில் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து மிகவும் ஈர்க்கும் பேச்சுக்கள் சிலவற்றை வழங்கினர். "நாளைய அமைதிக்கான பிரச்சாரம்"- எனும் அமைப்பை அவர்கள் நிறுவி உள்ளனர்- பலர் அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்தனர்.

பெண்டகனில் பணியாற்றிய பல்லூடக விளக்குநர் (Multi-media Illustrator) கிரெய்க் எனும் பெயருடைய தனது கணவனை இழந்த 28 வயது நிரம்பிய ஒரு தாய் அம்பர் அமுத்சென், தான் புஷ்க்கு எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டியதுடன் வெள்ளை மாளிகைக்கு வெளியில் வாசித்தார். அதில் அவர் சொன்னார், "வன்முறையை எப்போதும் நிலைத்திருக்கச் செய்ய எனது கணவருடைய பெயரை யாரும் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை..... ஆகையால் தயவு செய்து திரு. ஜனாதிபதி அவர்களே, செப்டம்பர்11 பலியாட்கள் இறப்பு வீணாகப் போகாது ஆகையால் பழிக்குப்பழி தேவைப்படுகிறது என்று நீங்கள் கூறும்பொழுது, மேலும் தாக்குதல்களை நியாயப்படுத்துதற்கான தங்களது பட்டியலில் இருந்து தாங்கள் கிரெய்க் ஸ்கோட் அமுத்சென்னை தயவு செய்து விலக்குவீர்களா. வளர்ந்த பின்னர் எனது குழந்தைகள் செப்டம்பர்11க்குப் பின்னர் பலர் இறந்து போனதற்குக் காரணம் தங்களது தந்தையின் மரணம் காரணம் என சிந்திப்பதை நான் விரும்பவில்லை..... அவர் எமது குழந்தைகளை மனிதாபிமானத்தைப் புரிந்து கொள்ள உயர்த்தினார் நீங்கள் விரும்புவதை அடைவதற்காக சண்டையிடுவதற்கு அல்ல. "அமுத்சென் அவரது கவலை யுத்தத்துக்கான அழைப்பு அல்ல என்று முடித்தார்.

தனது 20 வயது மகள் டயோராவை செப்டம்பர்11 அன்று பென்சில்வேனியாவில் மோதிய விமானம் 93 மோதலுற்றதில் டெரில் போட்லி இழந்தார். அவர் "காட்டுமிராண்டித்தனமான குண்டு வீச்சுக்களை" முடிவுக்குக் கொண்டுவருதற்கு அழைப்பு விடுக்க தான் ஆப்கானிஸ்தான் சென்றதாகக் கூறினார். தனது மகளின் இறப்புக்கு சில நாட்கள் பின்னர் யுத்தத்தின் சாத்தியத்திற்கு எதிராக அவர் பேசினார், எனது மகளின் பெயரால் அப்பாவி மக்களைக் கொல்லாதீர்" என்றார். "இலக்கு அற்ற யுத்தத்தின் நீட்டிப்பால்" ஆயிரக் கணக்கானோர் இறக்கின்றனர் மற்றும் பாதிக்கப்படுகின்றனர் என்றார். பயங்கரவாதத்திற்குக் காரணம் உலக வளங்களை சம்மற்ற முறையில் பங்கீடு செய்தலைப் பேணுகின்றது உட்பட, அமெரிக்கக் கொள்கைகள், என்றார்.

மற்ற பேச்சாளர்கள் செப்டம்பர்11 ஐ தொடர்ந்து ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைக் கண்டனம் செய்தனர். மனித உரிமை வழக்கறிஞரும் அரசியற் சட்ட உரிமைகளுக்கான மையத்தின் தலைவருமான மைக்கேல் ராட்னர், இங்கும் வெளியிலும் ஒடுக்குமுறைக்கு எதிராகத் திருப்பிப் போராடும் மக்கள் இங்கு அமெரிக்காவில் இருக்கின்றனர் என்பதைக் காட்டுவதற்கு இன்று இங்கு நாங்கள் இருக்கிறோம் எனக் கூறினார். எங்களது அரசாங்கம் இந்த யுத்தத்தை எங்களுக்குப் பாதுகாப்பு செய்வதற்கு என்கின்றது. ஆனால் அது எங்களுக்கு குறைந்த பாதுகாப்பை செய்கிறது என நாங்கள் அனைவரும் அறிவோம். அது உலகம் முழுவதும் பெருங் குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அது எம் அனைவருக்கும் எதிரான, குடியுரிமை சுதந்திரத்திற்கு எதிரான மற்றும் குறிப்பாக குடிமக்கள் அல்லாத முஸ்லிம்கள் மற்றும் மத்திய கிழக்கில் இருந்து வந்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான யுத்தம். நாம் அனைவரும் இங்கு இந்த நாட்டில், இப்பொழுது அந்த மக்களுடன் நிற்போம்."

தங்களது அமைப்பு நீதித்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற நூற்றக்கணக்கானோரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று ராட்னர் கூறினார், ஆனால் அந்த சட்டரீதியான வழக்கு மட்டுமே அவர்களை விடுவித்து விடாது என்றார். அமெரிக்க குடிமக்கள் அவர்களின் விடுதலையைக் கோரவேண்டும் மற்றும் உணர்வுகளில் எடுத்துக் காட்ட வேண்டும் என்றார்.

பின்னர் அவர் கியூபா, குவாண்டானமோ குடாவில் அமெரிக்க இராணுவ தளத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகளின் நிலை பற்றி விவரித்தார். "இப்பொழுது சரியாக 300 பேர்கள் நாய்க் கூண்டுகளில், சங்கிலிகளால் இணைக்கப்பட்ட வேலியால் சூழப்பட்டு, 100 டிகிர வெப்பநிலைக்கும் மேலாக, கியூப பாலைவனத்தில் தீங்கு செய்யும் புழு பூச்சிகளால் பாதிக்கக்கூடிய வகையில் அங்கு உள்ளனர். நாங்கள் சர்வதேச நீதிமன்றத்துக்கு மற்றும் அமெரிக்க அரசுகளின் அமைப்புக்கு சென்றோம் அவை இது சட்டவிரோதம் என்கின்றன. அமெரிக்கா 'எங்களுக்குக் கவலை இல்லை' என்கிறது.

"குவாண்டானமோ அமெரிக்காவின் பிசாசுத் தீவு ஆகும். அது அமெரிக்காவின் குற்றவாளிகளை ஒதுக்கி வைத்திருக்கும் இடமாகும் அங்கு சட்டம் வேலை செய்யாது. அமெரிக்காவின்படி, மக்களை சித்திரவதை செய்வது உட்பட நீங்கள் விரும்புவது எல்லாம் செய்யலாம், நீதிமன்றம் தலையிடாது. உலகின் மேலாதிக்க வல்லரசாக, அது எதனைத் தேர்ந்தெடுப்பது எப்பொழுது தேர்ந்தெடுப்பது என்று தான் எதனையும் செய்ய முடியும் என நம்புகிறது. விளைவு மிகவும் பயங்கரமாகும். அமெரிக்கா ஒரு போக்கிரி அரசு ஆகும்."

ஊர்வல ஏற்பாட்டாளர்களின் அரசியல்

சனிக்கிழமை ஊர்வலம் புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற போதிலும், ஊர்வல ஏற்பாட்டாளர்கள் சக்தி மிக்கவகையில் முன்னேறிச் செல்வதற்கான வழியை வழங்கவில்லை. பல பேச்சாளர்களால் முன்மொழியப்பட்ட திசைவழி ஏகாதிபத்திய யுத்தமும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் ஜனநாயகக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

"கல்விக்கு அதிக பணம் ஒதுக்குமாறு யுத்தத்துக்கு வேண்டாம் என்று நாம் தேர்ந்து எடுக்கப்பட்ட நமது பிரதிநிதகளைக் கோருவோம் மற்றும் வலியுறுத்துவோம்" என முக்கிய பேச்சாளர்களுள் ஒருவரும், அமெரிக்க மாணவர் அமைப்பின் தலைவருமான, ஜூலியா பியாட்டி அறிவித்தார். "இராணுவ வரவு-செலவுத் திட்ட அதிகரிப்புக்கான பண ஒதுக்கீடு மசோதாவுக்கு நிதி கொடுக்க வேண்டாம் என காங்கிரசைக் கோருவோம், அது இஸ்ரேலுக்கு இராணுவ பொருளாதார உதவி செய்வதை முடிவுக்குக் கொண்டு வரும்" என்றார்.

ஊர்வலத்தின் முடிவில் ஊர்வல ஒழுங்கமைப்பாளர்கள், ஜோர்ஜிய ஜனநாயகக் கட்சிக்கார காங்கிரஸ் பெண்மணி சிந்தியா மக்கின்னி பேச்சாளர் மேடைக்கு அழைத்து வந்தனர். மக்கின்னி செப்டம்பர்11 சம்பவத்தை புலனாய்வு விசாரணை செய்யுமாறு அழைப்பு விடுத்ததற்காக புஷ் நிர்வாகத்திடமிருந்தும் வலதுசாரி குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் தாக்குதலுக்கு ஆளானார். இருப்பினும், யுத்தத்தை நடத்துவதற்கு புஷ் நிர்வாகத்துக்கு முடிவில்லா அதிகாரத்தை வழங்க கடந்த இலையுதிர் காலத்தில் பிரதிநிதிகள் சபையில், கிட்டத்தட்ட ஏகமனதான வாக்களிப்பில் சேர்ந்து கொண்டார்.

ஊர்வலத்தில் மக்கின்னி மட்டும் தனியே காட்சி அளித்தது, ஏப்ரல் 16 அன்று வாஷிங்டனில் கூடிய, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைப் பேணுதற்கான சியோனிச குழுக்களால் அமைக்கப்பட்ட ஊர்வலத்தில், சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ரிச்சர்ட் ஜிப்பாட் உட்பட சட்டம் இயற்றும் டஜன் பேர்கள் வந்திருந்தனர். புஷ் தனது நிர்வாகத்தினை உத்தியோகப் பூர்வமாகப் பிரதிநிதித்துவப் படுத்துதற்கு துணை பாதுகாப்பு செயலாளர் போல் வோல்போவிட்ஸ் என்பவரை அனுப்பினார்.

புஷ் நிர்வாகத்தினை மேலாதிக்கம் செய்யும் அதிவலதுசாரி சக்திகளுக்கு எந்தவிதமான உருப்படியான எதிர்ப்பினையும் வழங்குதற்கு விருப்பமில்லை என்பதுடன் இயலாது என்பதனையும் காங்கிரசின் ஜனநாயகக் கட்சியினர் நிரூபித்துள்ளனர். கிளிண்டன் மீதான பதவி நீக்க விசாரணைக்கு சதிக்கு கெஞ்சுதலில் இருந்து, 2000 தேர்தலை புஷ் திருடியதற்கு அதன் எதிர்ப்பின்றி உடன்படல் மற்றும் தற்போது "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்பதில் வெள்ளை மாளிகைக்குப் பின்னே அதன் அணிவகுத்தல் வரைக்கும், ஜனநாயகக் கட்சியானது குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பகுதி முன் நெடுஞ்சாண்கிடையாக விழுகின்றது. ஆளும் தட்டின் அரசியல் அமைப்பு என்ற வகையில், அது குடியரசுக் கட்சியினர் பாதுகாக்கும் அதே அடிப்படை சமூக நலனைத்தான் அதுவும் பேணுகிறது.

யுத்தத்தை நிறுத்துவதற்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு வழியாக இந்தக் கட்சிக்குத் திரும்பவும் காங்கிரசுக்குத் திரும்பவும் ஆலோசனைகளை வழங்குபவர்கள், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படும் இயக்கத்தை அரசியல் முட்டுச் சந்துக்குள் தள்ளி விடுகின்றனர்.

ஏப்ரல் 20 ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட அழிசெயல் மற்றும் திடீர் நிலைமாற்றம் பற்றிய சக்திமிக்க உணர்வுகள், ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சிகளுக்கு வெளியில், தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான புதிய அரசியல் இயக்கத்தின் மூலம் மற்றும் அது இலாப அமைப்பு முறைக்கு எதிராக திசைவழிப்படுத்தப்படுவதன் மூலம் மட்டுமே ஒரு முன்னேற்றத்திற்கான வழியைக் காணும்.

See Also :

வாஷிங்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்திற்கான பரந்த ஆதரவு

யுத்தத்தை எதிர்ப்பதற்கும் ஜனநாயக உரிமைகளை பேணுவதற்குமான ஒரு சோசலிச மூலோபாயம்