World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

For a boycott of the French election

பிரான்சின் தேர்தலை பகிஸ்கரி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை
26 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

Download this statement as a PDF leaflet to distribute

நவ பாசிச தேசிய முன்னணியின் தலைவரான லு பென்னிற்கும், பிரான்சின் வலதுசாரி ஜனாதிபதியான சிராக்கிற்கும் இடையில் மே மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலை பகிஸ்கரிக்குமாறு பிரான்சின் தொழிலாளர்களையும், இளைஞர்களையும், புத்திஜீவிகளையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கின்றது.

முதலாம் கட்ட வாக்களிப்பில் லு பென் இற்கு கிடைத்த வாக்குகள் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் நெருக்கடியை ஆழமாகியுள்ளது. இப்படியான இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான தேர்வை உருவாக்கிய அரசியல் அமைப்பு முறையானது மதிப்பிழந்துபோயுள்ளது. தொழிலாள வர்க்கம் இந்த ஜனநாயகத் தன்மையற்ற வார்த்தை ஜாலங்களை நிராகரிப்பதுடன், இந்த இரண்டு பிற்போக்குத்தனமான வேட்பாளர்களில் யார் வென்றாலும் அதற்கு எதிராக தமது சுயாதீனமான பலத்தை அணிதிரட்டவேண்டும்.

மே 5ம் திகதியின் தேர்தலில் பகிஸ்கரிப்பும், பிரான்சின் தொழிலாள வர்க்கத்தினது சரியான ஒரு அரசியல் பொறுப்பும் ஏன் அவசியம்? இது தேர்தல் ஏமாற்றுக்களை நிராகரிப்பதுடன், மந்த அதிருப்தியை ஒரு தாக்க கரமான அரசியல் நடவடிக்கையாக மாற்றுவதற்கான வழியாகும்.

முதலாம் கட்ட வாக்களிப்பு தொடர்பான மீளாய்வானது, பாரியளவிலான பிரான்சின் வாக்காளர்களின் வாக்குரிமை தீர்க்ககரமாக பறிக்கப்பட்டுள்ளதை தெளிவாக காட்டுகின்றது. வாக்களிக்க தகுதியுள்ள மூன்றில் ஒரு பிரிவினர் தேர்தலில் கலந்து கொள்ளாததன் மூலம் சகல வேட்பாளர்கள் மீதான தமது அதிருப்தியை காட்டியுள்ளனர். கிட்டத்தட்ட 40% இனது இடதுசாரிகள் என தம்மை காட்டிய வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை வழங்கியுள்ளனர். இவர்களுள் 11% இனர் தம்மை புரட்சிகரமான சோசலிச கொள்கைகளுக்கு சார்பானவர்கள் என காட்டிக்கொண்ட கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். இப்போது இந்த இடதுவாக்களார்கள் மொத்தவாக்கில் காற்பகுதியைவிட குறைவான ஆதரவைப் பெற்ற இரண்டு தீவிர வலதுசாரி வேட்பாளர்களுக்கு இடையே தீர்மானிக்கவேண்டியவர்களாகவுள்ளனர்.

நூறு ஆயிரக்கணக்கான பிரான்சு தொழிலாளர்களும், இளைஞர்களும் லு பென்னின் தேசிய முன்னணியின் குடியேற்றவாசிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான கொள்கைகளுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வீதியில் இறங்கியதுடன், இந்த பிற்போக்குவாத அரசியல் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையையும், அரசியல் ஊழலையும் உருவாக்கிய இந்த அமைப்பிற்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இன்னும் பத்தாயிரக்கணக்கானவர்கள் மே 1ம் திகதி பாரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான சர்வதேச தினமானது தேர்தலை பகிஸ்கரிப்பதன்மூலம் இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிரான வர்க்க எதிர்ப்பை காட்டுவதற்கான உண்மையான பிரச்சாரமாக பயன்படுத்தப்படவேண்டும். இது வெறுமனே பகிஸ்கரிப்பு தொடர்பான பிரச்சனையல்ல. ஆனால் பிரச்சனைகளுக்கு குடியேற்றவாசிகளையும், சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் காரணமாக காட்டமுயலும், பாசிச மற்றும் கோலிசவாதிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சக்தியாக அணிதிரளவதற்கான ஆரம்பமாக கொள்ளவேண்டும்.

இரண்டாவது கட்ட வாக்களிப்பில் சிராக்கிற்கு ஆதரவாக வாக்களிக்க கோரும் சோலிசக் கட்சியாலும், கம்யூனிசக் கட்சியாலும், பசுமைக் கட்சியாலும் ஏனைய பிரிவு பிரான்சின் இடதுசாரிகளாலும் செய்யப்படும் பிரச்சாரமானது அவமதிப்பையே உருவாக்குகின்றது. சிராக்கிற்கு வழங்கப்படும் வாக்குகள் லு பென் இற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லை, மாறாக முதலாவது கட்ட வாக்களிப்பில் நவ பாசிசவாதிகளுக்கு வெற்றியை உருவாக்கிய அரசியல் குழப்ப நிலையை மேலும் அதிகரிக்கும்.

முதற்கட்ட வாக்களிப்பானது 1958 இன் பின்னர் பாரியளவிலான மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாததை எடுத்துக்காட்டியதுடன், பல பத்தாண்டுகளாக அரசியல் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்திய இரண்டு கட்சிகளான கோலிச மற்றும் சோசலிச கட்சிகளில் இருந்து பாரியளவு மக்கள் விலகிப்போவதையே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. ஆளும் வர்க்கத்தினரது இக்கட்சியினர் இடையே அவர்களது கொள்கைகளில் தெளிவாக வித்தியாசம் எதுவுமில்லாமல் போவதுடன், மக்களின் மனநிலைகளை அறிந்தகொள்வதற்கோ அல்லது பதிலளிக்கவோ முடியாதுள்ளனர். வரலாற்றுரீதியாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து வாக்குகளை பெற்ற கட்சிகளால் சுயாதீனமான மாற்றீடு ஒன்றை முன்வைக்காததால், தேசிய முன்னணி ஒரு வலதுசாரி பிரச்சாரத்தை செய்யக்கூடியதாக இருந்ததுடன், உறுதியான அரசியல் ''கட்டமைப்புக்கு'' எதிராக ''சாதாரண மனிதரிடம்'' கோரிக்கை விட்டது.

இதன் விளைவாக, லு பென் தனது வாக்குகளை அவரது பலம்வாய்ந்த பிரதேசமான தெற்கில் இருந்து மட்டுமல்லாது பாரம்பரியமாக ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தளமாக இருந்த வடக்கிலுருந்தும் ஆதரவை பெற்றுக்கொண்டார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் 1995 இல் இருபது இலட்சத்து அறுபதினாயிரமாக (20,60,000) இருந்து 9,60,000 ஆக குறைந்தது.

பிரான்சில் நவ பாசிசக் கட்சிக்கான ஆதரவின் அதிகரிப்பின் அபாயத்தை குறைத்து மதிப்பிடமுடியாது. எவ்வாறிருந்தபோதும், லு பென் இற்கு கிடைத்த வாக்குகள் அர்த்தப்படுத்துவது முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறை முழுவதிலும் ஒரு நம்பிக்கையற்ற தன்மை உருவாகியுள்ளது என்பதையாகும்.

Le Monde பத்திரிகை ''அரசாங்கத்தின் கட்சிகளை 40% ஆன மக்கள் நிராகரித்துள்ளனர். இது 1988 இலும் 1995 இலும் பார்க்க இரண்டு மடங்காகும். வாக்களிக்காதோரையும் கருத்திற்கொண்டால் இன்று அரசாங்கத்தை கொண்டு நடாத்தக்கூடிய வேட்பாளர்களை, 5 வாக்களிக்க தகுதியானோரில் 3 பேர் நிராகரித்துள்ளனர். இத்தரவுகள் இடதுகளின் இயலாமையையும், அதிதீவிர வலதுசாரிகளின் வெற்றியையும், வலதுசாரியினரின் பலவீனத்தையும் மற்றும் ஒரு அடிப்படையானதும் பிரச்சனைக்குரியதானதுமான நிராகரிப்பு இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது'' என குறிப்பிட்டது.

''லு பென்னிற்கு எதிரான சர்வஜன வாக்கெடுப்பு'' அல்லது ''ஜனநாயகத்திற்கான மக்கள் வாக்கு'' என்பதன் கீழ் சிராக்கிற்கு வாக்களிக்க கோருவதன் மூலம் அரசியல் கட்சிகளும், பொது பிரதிநிதிகளும் பரந்தளவிலான பிரான்சு மக்கள் நிராகரிக்கும் அரசமைப்பு மீது பரந்த நம்பிக்கையை மீண்டும் உருவாக்க முனைகின்றனர். லு பென் தனது பங்கிற்கு கோலிசவாதிகளுக்கும் சோசலிசவாதிகளுக்கும் இடையிலான கூட்டை வரவேற்பதன் மூலம் தனது பிற்போக்குவாத வார்த்தை ஜாலங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

சிராக் தன்னை மூவர்ணக் கொடியால் சுற்றிக்கொண்டு தனது வெற்றியானது ''பிரான்சின் மரியாதையை காப்பாற்றுவதற்கு'' அத்தியாவசியமானது என கூறியுள்ளார். இப்படியான மறைமுகமான நோக்கம் ஊழலுக்கும், சுரண்டலுக்கும் பேர்போன ஒரு மனிதனின் தேர்வுடன் அடையாளம் காணப்படுவது மிகவும் பொருத்தமானது.

தற்போதைய ஜனாதிபதி, லு பென் உடன் விவாதிக்க மறுத்துள்ளார். ''சகிப்புத் தன்மை இன்மையையும் வெறுப்பையும் எதிர்நோக்கி விவாதம் சாத்தியமற்றது'' என ஏப்பிரல் 21ம் திகதி முதலாம் கட்ட வாக்களிப்பிற்கு பின்னரான தனது முதலாவது பிரச்சார கூட்டத்தில் அவர் தெரிவித்தார். ''கடந்த காலத்தை போன்று தேசிய முன்னணியுடன் எவ்விதமான கூட்டையும் நான் ஏற்றுக்கொள்ளாததுபோல், அதன் தலைவருடன் எதிர்காலத்திலும் எவ்விதமான விவாதத்தையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை'' எனவும் அவர் தெரிவித்தார். லு பென்னிற்கு இந்த போலித்தன்மையை அம்பலமாக்குவது பிரச்சனையானதாக இருக்கவில்லை. நாசிகளின் விஷவாயு கூடங்கள் ''வரலாற்றில் ஒரு பகுதி'' என தேசிய முன்னணித் தலைவர் தனது பிரபல்யமான கருத்தை தெரிவித்த சிறிது காலத்தின் பின்னர் 1988ல் சிராக் தன்னுடன் ஒரு கூட்டில் இருந்ததை வெளிப்படுத்தினார். இக்கூட்டின் விளைவாக தேசிய முன்னணித் தலைவர் இரண்டாவது கட்ட வாக்களிப்பில் கோலிச RPR இற்கு தனது ஆதரவாளர்களை வாக்களிக்குமாறு கோரினார்.

லு பென் உடன் விவாதத்தை தவிர்த்துக் கொள்வதற்கு சிராக் இற்கு மேலதிக காரணங்களும் உண்டு. பிரான்சின் ஏனைய வலதுசாரிகளைப்போல் யூனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் குறிவைத்துள்ளார். அவரின் முக்கிய குறிக்கோள் லு பென்னை தோற்கடிப்பதல்ல, மாறாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைவதற்காக வலதுசாரிகளின் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைப்பதாகும். இறுதியில் அவர் வலதுசாரிகளினதும், வலது மத்தியினரினதும் ஒரு கூட்டை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஜனாதிபதித்துவ பெரும்பான்மைக்கான (Presidential Majority-UMP) ஒரு புதிய அரசியல் கூட்டை உருவாக்கியுள்ளார்.

சிராக்கிற்கு, லு பென் உடன் கொள்கை ரீதியான அரசியல் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் நவ பாசிசவாதிகளுடன் கூட்டிணைந்து இயங்குவதற்காக அவர் கதவுகளை திறந்து வைத்துள்ளார்.

முழுத் தேர்தல் அமைப்பும் மக்கள் மீதான அரசியல் குரல்வளைப்பிடியாக மாறியுள்ளது. இது மக்கள் தமது சமூக அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு வழியெதுவும் வழங்கவில்லை. இடது கட்சிகள் என தம்மை அழைத்துக்கொள்ளும் சோசலிச வாதிகளும், கம்யூனிஸ்ட்டுகளுமே இந்த நிலைமைக்கான முழுப்பொறுப்பாகும். முதலாளித்துவ அரசாங்கத்தினதும், முதலாளித்துவ பொருளாதாரத்தினதும் திறமைவாய்ந்த நிர்வாகிகளாக எடுத்துக்காட்டி, அவர்களின் கீழ் சமூகசேவைகளினது அழிப்பிற்கும், தொழிற்துறையை தனியார் மயமாக்கலுக்கும், ஜனநாக உரிமைகள் மீதான தாக்குதலுக்கும் காரணமாகினர்.

தனது கட்சியின் தேர்தல் தோல்வியினை அடுத்த மணித்தியாலங்களில் தனது பதவி விலகலை அறிவித்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும், சோசலிச கட்சியின் தலைவருமான லியோனல் ஜொஸ்பனினது அரசியல் கபடத்தனத்தின் சீரழிந்த தனமானது உத்தியோகபூர்வ ''இடதுகளின்'' சீரழிவிற்கான ஒரு உதாரணமாகும். லு பென்னின் முன்னர் ஜொஸ்பனினது அடிபணிவானது, 1940 மே-யூனில் பாசிசவாதிகளின் அதிகாரத்திற்கு வழியமைத்த 1934 பெப்பிரவரி பாசிசவாதிகளின் கிளர்ச்சியின் பின்னர் பதவிவிலகிய பிரான்சின் தீவிரவாத கட்சியின் தலைவரான Edouard Daladier இனை ஞாபகப்படுத்துகின்றது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவிற்கும், சோசலிச மற்றும் கம்யூனிச கட்சிகளின் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட குழப்பத்தினையும் எதிர்கொள்ள ஒரு பகிஸ்கரிப்பு அவசிமாகும். தேர்தல் முடிவால் ஆத்திரமடைந்துள்ள தொழிலாளர்களும், மாணவர்களும், புத்திஜீவிகளும் தனிமைப்படுத்தப்பட விடக்கூடாது. அல்லது இன்னும் மோசமாக தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்சி ஒன்றை தெரிவு செய்ய தள்ளப்படக்கூடாது. பகிஸ்கரிப்பை முன்னெடுக்ககூடிய கூட்டங்களை ஒழுங்கமைக்ககூடியதும், ஊர்வலங்களையும், அரசியல் வேலைநிறுத்தங்களையும் ஒழுங்கமைக்ககூடிய ஒரு செயல்திறமான கொள்கை ஒன்று அவசியமாகும்.

சிராக்கிற்கு வாக்களிப்பதுதான் தேசிய முன்னணியை தோற்கடிப்பதற்கான ஒரேயொரு வழி எனக் கூறுபவர்கள் தமது சொந்த இயலாமையையும் ஐயுறவுவாதத்தையுமே உறுதிப்படுத்துகின்றனர். இப்படியான ஒரு மனிதரை ஜனநாயகத்தின் வெற்றியாளனாக காட்டும் ஒரு அரசியல் அமைப்பு தனது சொந்த இயலாமையையே காட்டுகின்றது.

ஒரு வலதுசாரி பெரும்பான்மையுடனான பாராளுமன்றத்துடனான சிராக்கை ஜனாதிபதியாக கொண்ட முடிவானது பிரான்சின் முதலாளித்துவத்தின் மிகவும் ஆதிக்கம்வாய்ந்த பிரிவுகளால் விரும்பப்படுகின்றது. இப்படியான ஒரு அரசாங்கமானது தேசிய முன்னணியால் தேர்தல் நிகழ்ச்சி நிரலாக முன்வைக்கப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுடன், புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிரான சட்டம் ஒழுங்கு தேர்தல் பிரச்சாரமும் கோலிசவாதிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் பெருமளவில் பிரதிபலிக்கின்றது.

வாக்காளர்களில் ஒரு முக்கிய பிரிவான 11% இனர் புரட்சிகர கொள்கைகளை முன்னெடுப்பதாக கூறிக்கொள்ளும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைத்துக்கொள்ளும் அமைப்புகளுக்கு வாக்களித்துள்ளனர். அக்கட்சிகளும் அதன் வேட்பாளர்களுமான, Lutte Ouvrière அமைப்பின் Arlette Laguiller, Ligue Communiste Révolutionnaire இன் Olivier Besancenot, Parti des Travailleurs இன் Daniel Gluckstein இனும் தற்போது பகிஸ்கரிப்பை ஒரு கோரிக்கையாக எடுத்து தீவிரமாக பிரச்சாரத்தை செய்யும் பொறுப்புள்ளவர்களாகவுள்ளனர்.

எவ்வாறிருந்தபோதிலும், Laguiller இன் ஆரம்ப பதிலளிப்பு முற்றாக அமைதிவாதப் போக்காகவுள்ளது. அவரது அண்மைய உரையில் தான் ''இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தலில் பகிஸ்கரிப்பிற்கு அழைப்புவிடப்போவதில்லை'' என கூறினார். அவர் மேலும் சிராக்கிற்கு வாக்களிக்ககோரும் கூட்டில் இணைந்தகொள்ள மறுத்து, தான் லு பென்னிற்கு வாக்களிக்க தொழிளார்களை கோரப்போவதில்லை எனவும் கூறினார்.

இது ஒரு போலி சாக்குப்போக்காகும். மற்றும் வலதுசாரிகளுக்கு எதிராக போராடும் கொள்கையுமல்ல. இது தொழிலாளர்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை கூறாது தெளிவற்றதாகவுள்ளது. Laguiller இன் வார்த்தையானது, தனிநபர்களை வாக்களிப்பது தொடர்பாக தீர்மானிக்குமாறு விட்டுள்ளதுடன், சிராக்கிற்கு மறைமுகமாக வாக்களிக்க தூண்டுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் ஒரு பகிஸ்கரிபிற்கான ஒரு செயற்திறமான கொள்கையானது தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்க தேவையானதுடன், ஒரு உண்மையான சுயாதீனமான பாரிய சோசலிச இயக்கத்தை அமைப்பதற்கான போராட்டத்திற்கான பாதைக்கும் வழிதிறக்கும்.

பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் அரசியல் நெருக்கடிக்கான ஒரு பாதைக்கு பிரெஞ்சு தேசியவாத வேலைத்திட்டத்தினை அடித்தளமாக கொள்ளமுடியாது. சோசலிச, ஸ்ராலினிச கட்சிகளால் முன்வைக்கப்படும் மாற்றீடான, சமூகநல வசதிகளற்ற அதிகாரத்துவ சமூகநல அரசானது- எவ்வகையிலும் ஒரு மாற்றீடல்ல.

இடதுசாரிகள் என அழைத்துக்கொள்ளும் கூடியளவானவர்கள் மத்தியில் பிரதிபலிப்பதும், லு பென்னால் முன்வைக்கப்படும் தேசியவாதம், இனவெறி, தேசிய பாதுகாப்புவாதம் போன்றவற்றிற்கு எதிராக வாழ்க்கை தரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஐரோப்பாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பதற்கு தொழிலாள வர்க்கம் தனது சொந்த சர்வதேச வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். நாடுகடந்த நிறுவனங்களின் தனி ஐரோப்பிய சந்தைக்கு எதிரான மாற்றீடு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசாகும்.

See Also :

ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிச லு பென் கோலிச சிராக்கை எதிர்கொள்ளகின்றார்
தேசிய முன்னணியின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாக்குக்கள் பிரான்சின் அரசியல் நெருக்கடியை தீவிரமாக்குகின்றது