World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடு

India and Paikistan move to the brink of war

இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தத்தின் விளிம்புக்கு சென்றுள்ளன

By Vilani Peiris and Sarath Kumara
21 May 2001

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான யுத்த அபாயமானது மே 14ம் திகதி இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து வேகமாக அதிகரிக்கின்றது. மாநிலத்தின் தலைநகரான ஜம்முவுக்கு அருகாமையில் உள்ள குளிர்கால தலைநகரான குல்சக்கில் மூன்று ஆயுதபாணிகள் முதலில் ஒரு பஸ் மீதும், பின்னர் இராணுவ முகாமின் வீட்டுத் தொகுதியினுள்ளும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 34 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 50பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பிரதானமாக இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் 12 பெண்களும் அடங்குவர். மூன்று தாக்குதல்காரர்களும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுக்களான அல் மன்சூரான் (Al Mansooran) மற்றும் ஜமய்ட்-உல்-முஜஹிதீன் (Jamiat-ul-Mujahideen) ஆகிய இரண்டும் இதற்கு உரிமை கோரியுள்ளன. எவ்வாறெனினும் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம், உடனடியாக பாகிஸ்தான் இந்திய விரோத குழுக்களுக்கு உதவியும் உற்சாகமும் வழங்குவதாகவும் குற்றம் சாட்டியதோடு பதில் தாக்குதல் நடத்தப் போவதாகவும் அச்சுறுத்தியது. அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ்: "அது தண்டனைக்கு அழைப்பு விடுக்கும் நிலைமையாகும்" எனப் பிரகடனம் செய்தார். பாகிஸ்தான் தலைவர் பேர்வஸ் முஷாரப்பைக் குற்றம்சாட்டிய அவர்: "அது அவரது பயிற்சி பெற்ற ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் எனவும் சிறுவர்களையும் பெண்களையும் விசேடமாக சாதாரண மக்களையும் கொடூரமாக கொன்றுள்ளார்கள் எனவும்" குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தாக்குதலை கண்டனம் செய்ததோடு தாக்குதல்காரர்களுடனான எந்தவொரு தொடர்பையும் மறுதலித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி "எமது பதில் தீர்க்கரமானதாக இருக்கும்" என சுட்டிக்காட்டினார். இராணுவத் தளபதி ஜெனரல் எஸ். பத்மநாபன் ஊடகங்களுக்கு பதிலளிக்கையில்: "நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது" எனக் குறிப்பிட்டார். விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.வை.டிப்னிஸ்: "எமது பொறுமைக்கும் ஒரு எல்லையுள்ளது நாம் அவர்களது தளங்களை விமானம் மூலமும் ஆட்டிலரிகள் மூலமும் தாக்கவேண்டும். நாம் அதற்குச் சமமான அழிவுகளுக்கு தயாராக இருக்க வேண்டியுள்ளதோடு அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்" என மிகவும் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தினார்.

வாஜ்பாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வதற்காக உயர் மட்ட அமைச்சரவை பாதுகாப்பு குழுவுடன் பல கூட்டங்களை நடத்தினார். இந்தியா வார இறுதியில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அஷ்ரப் ஜெஹான் கீர்குவாசியை வெளியேற்றியதோடு, இந்தியாவின் மேலதிகப் படைகளையும் எல்லைப் படைகளையும் கடற்கரை பாதுகாப்புப் படைகளையும் இராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. கடந்த நான்கு நாட்களாக இந்தியக் கட்டுப்பாட்டிலான ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீரிலிருந்து பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் (Line of Control-LoC) பலமான மோட்டார் ஆட்டிலரித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிக்கைகள் தெரிவித்தன. குறைந்த பட்சம் இந்த தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதோடு கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் எல்லைக் கிராமங்களில் இருந்து வெளியேறத் தள்ளப்பட்டனர்.

இரு அணுவாயுதச் சக்திகளுக்கிடையிலான 2000 கிலோமீட்டர் நீண்ட எல்லைப் பகுதியில் நிலவும் பதட்ட நிலைமயானது டிசம்பர் 13ல் புது டில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து ஏற்கனவே தீவிரமாக உக்கிரமடைந்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக, இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது பெரும் இராணுவத்தைக் குவிக்கத் தொடங்கியது. அரை மில்லியனுக்கும் அதிகமான இராணுவத்தை டாங்கிகள், யுத்த விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் அதிபார ஆட்டிலரிகள் சகிதம் எல்லையை நோக்கி நகர்த்தியது. பாகிஸ்தானும் இந்தவகையிலேயே பதிலளித்தது. கடந்த ஐந்து மாதங்களாக இராணுவங்கள் எதிர்எதிராக அதி உசார் நிலையில் இருத்தப்பட்டுள்ளன. இது ஒரு சிறிய சம்பவமும் கூட முழு யுத்தத்தை தோற்றுவிக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளது.

இந்து சோவினிச பாரதீக ஜனநாயக கட்சி உள்நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் அரசியல் பிரச்சினைகள் மீதான அவதானத்தைத் திசைத் திருப்புவதற்காக கலுசக் தாக்குதலுக்கு முன்னதாகவே இராணுவ வாத வாயளப்புக்களை கிளறியது. இந்தக் கட்சி எதிர் கட்சியைப் போல தமது திறந்த பொருளாதார கொள்கைகளின் தாக்கத்தினால் அண்மைய மாநிலத் தேர்தலில் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக இந்தியத் தலைவர்கள், பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் "பயங்கரவாதிகள்" ஊடுருவுவதை தடுக்கத் தவறியதாக குற்றம்சாட்டி வந்துள்ளனர். தாக்குதலுக்கு முந்திய நாள், பாதுகாப்பு அமைச்சு பாகிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் "ஜீவநாடி" என முத்திரையிடப்பட்ட வருடாந்த அறிக்கையை வெளியிட்டது. "முரண்பாடுகள், வன்முறைகள் மற்றும் வஞ்சகங்கள் கொண்ட இந்தியாவினூடனான மூலோபாயத்தை கைவிட பாகிஸ்தான் தயாரில்லை என்பதை தொடர்ச்சியான பயங்கரவாத வன்முறைகள் கோடிட்டுக் காட்டுவதாக" அது குறிப்பிட்டது.

அதேதினம், உள்துறை அமைச்சர் அத்வானி அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் குறிக்கோள்களை தெளிவுபடுத்தினார். "இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் எதிராக எப்போதும் மிகமோசமான ஆபத்தாக இருந்துகொண்டுள்ள 'எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை' குஜராத் பிரச்சினை திசைதிருப்பிவிடாது" என அவர் மேலும் குறிப்பிட்டார். இரண்டு மாதகாலமாக குஜராத்தில் பாரதீக ஜனநாயக கட்சித் தலைவர்களாலும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டுள்ள இந்து தீவிரவாத குழுக்களாலும் வெளிப்படையாகவே எண்ணெய் வார்க்கப்பட்ட இனவாதப் படுகொலைகள் கூட்டரசாங்கத்தை கவிழ்க்கும் அச்சுறுத்தல்களைத் தோற்றுவித்தது. மே மாத முற்பகுதியில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பிரேரணையில் வாஜ்பாய் வெற்றிகண்ட போதிலும் பிரதானமாக முஸ்லீம்களை உள்ளடக்கிய சுமார் 900 மக்களின் உயிர்களுக்கு பங்கம் விளைவித்த குண்டர் தாக்குதல்கள் பற்றிய பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியின் (NDA) பங்குதாரர்களில் பலர் வாக்களிக்காமல் விலகியிருந்ததோடு இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினர்.

லண்டனில் இருந்து வெளிவரும் பினான்சியல் டைம்ஸ் பத்திரிகை மே 13ல் "மீண்டும் விளிம்புக்கு" என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில், ''வாஜ்பாய் குஜராத் வன்முறைகளின் எழுச்சியில் அசாதாரணமான முறையில் மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையில்" ஈடுபட்டிருந்ததாகவும், இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகள், பாகிஸ்தானுக்கு 'தண்டனை கொடுப்பதற்காக ஒரு தாக்குதல் தொடுப்பதன்' சாதக பாதகங்களை ஆலோசித்து வருவதாகவும், அநேகமாக இருசாராரும் வெளிப்படையான அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர். இருபக்கமும் இராணுவங்கள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு தவறான புரிந்துணர்வுகளின் அபாயம் அதிகரிக்கின்றது" எனவும் அந்தக் கட்டுரை மேலும் சுட்டிக்காட்டியது.

யுத்த அபாய நிலைமையிலும், வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தல்களை விடுப்பதன் மூலம், தமது கூட்டணிப் பங்காளிகளை அணிதிரட்டிக் கொண்டு அரசாங்கத்தைப் பலப்படுத்த எண்ணம் கொண்டுள்ளார். அவர் பாகிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இந்திய விரோதக் குழுக்கள் மீது தாக்குதல் தொடுக்குமாறு கோரும் இந்தித் தீவிரவாதக்குழுக்களின் அழுத்ததுக்கு முகம்கொடுத்துவருகின்றார். விஷ்வ இந்து பர்ஷாத் (VHP) தலைவர் அசோக் சிங்கால்: "அவ்வாறான ஒரு சம்பவத்துக்குப் பின்னரும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பரவலாக நிற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு அமைதியாக இருக்குமாறு அழுத்தம் கொடுப்பது பாரதூரமான குற்றமாகும்... அரசாங்கம் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலான காஷ்மீரில் தாக்குதல் தொடுப்பதற்கு ஆயுதப்படைக்கு ஆணையிடவேண்டும்," எனப் பிரகடனம் செய்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் குஜராத்தில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளையிட்டு அரசாங்கத்தை கண்டனம் செய்தன. ஆனால், "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) உட்பட்ட அனைவரும் இந்து சோவினிச பாரதீய ஜனதாக கட்சியின் பின்னால் அணிதிரள்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை வாஜ்பாயியை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: "அவ்வாறான ஒரு தீர்க்கமான விடயங்களில் நாங்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை சார்ந்தவர்களாக இருப்போம்" எனக் குறிப்பிட்டார். அவர் "வாய்வீச்சுக்களை" விட "நடைமுறைக்காக" அழைப்புவிடுத்தார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தமது கட்சி "பயங்கராவதத்துக்கு" எதிரான போராட்டத்தில் எப்பொழுதும் அரசாங்கத்தின் பக்கம் நிற்கும் என சுட்டிக்காட்டினார். அதே மாதிரியான கருத்துக்களை வெளியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பேச்சாளர் அஜய் சக்கரவர்த்தி பாகிஸ்தான் தண்டிக்கப்படவேண்டும் எனக் கோரினார். முற்றுமுழுதாக இந்தியத் தேசியவாதத்தில் மூழ்கிப்போயுள்ள இந்த இரண்டு கட்சிகளும் இந்திய அரசாங்கத்தையும் ஆளும் கும்பலின் நலன்களையும் பாதுகாப்பதற்கு அணிதிரண்டு கொண்டுள்ளது. மிகவும் அண்மையில் 1999ல், பாகிஸ்தானுடனான முரண்பாட்டில், காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பிராந்தியத்தில் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கைப்பற்றியபோது, போதுமானளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாகக் குறிப்பிட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாஜ்பாய் அரசாங்கத்தை வலதுசாரி நிலைப்பாட்டிலிருந்து தாக்கியது.

அமெரிக்கத் தலையீடு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சிய புஷ் நிர்வாகம் பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் தலையீடு செய்தது. மே 14ம் திகதி புது டில்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இரண்டுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட தெற்காசியாவுக்கான அமெரிக்கத் துணைச் செயலாளர் கிரிஸ்டினா ரொக்கா (Christina Rocca) "இதை ஒரே விஜயத்தில் செய்யமுடியாது" என குறிப்பிட்டுச் சென்றார். வாஷிங்டனுக்கும் புதுடில்லிக்கும் இடையிலான உயர்மட்ட தொலைபேசி அழைப்புக்களும் எந்தவொரு பெறுபேறுகளையும் தரவில்லை. புஷ் நிர்வாகம் அமெரிக்க அரச துணைச்செயலாளர் ரிச்சார்ட் ஆர்மிடேஜை (Richard Armitage)

மேலதிகக் கலந்துரையாடல்களுக்காக இப்பிராந்தியத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

அவர்களின் அதி உயர் அக்கறைகளுக்கு புறம்பாக அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தின் ஸ்திரமற்ற நிலைமைக்கு பிரதான காரணியாக இருந்து வருகின்றது. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமானது" வாஜ்பாய் அரசாங்கத்தை, விசேடமாக பாகிஸ்தானுக்கு எதிராக, துணைக் கண்டத்தில் அதனது சொந்த நிகழ்ச்சித் திட்டத்தை உக்கிரமாக முன்னெடுப்பதற்காக உத்வேகமூட்டியது. 1999 முதல், அமெரிக்கா தமது குளிர்யுத்தகால கூட்டாளியான பாகிஸ்தானிடமிருந்து வேகமாக விலகி இந்தியாவுடனான ஒரு பொருளாதார, மூலோபாய கூட்டுக்காக சென்றுள்ளது. நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடைவையாக தற்போது அமெரிக்கத் துருப்புக்கள் இந்தியாவில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

புதுடில்லி, முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள காஷ்மீரில் இந்திய ஆளுமைக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ள இஸ்லாமியக் குழுக்களை நசுக்குவதற்காக இந்தியா முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு வாஷிங்டனைக் கோருகிறது. உள்துறை அமைச்சர் அத்வானி இஸ்லாமாபாத்துக்கு எதிராக புதுடில்லிக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கத் தவறியதையிட்டு "அதிருப்தியை" வெளியிட்டார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நியூயோர்க் டைம்ஸ் உடனான ஒரு செவ்வியில், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை" தடுக்கத் தவறினால் வாஷிங்கடன் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத அரசாக பிரகடனம் செய்யும் என முஷாரப்புக்கு எச்சரிக்கை செய்யவேண்டும் என அவர் கோரினார். இந்தியா இராணுவ நடவடிக்கைக்கான அச்சறுத்தல்களை விடுப்பது அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவா என கேட்டபோது, அத்வானி "அமெரிக்கா விரும்பாவிட்டாலும்" இந்தியா நடவடிக்கையில் இறங்கும் எனத் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் அமெரிக்கா ஏற்கனவே பாகிஸ்தான் மீது குறிப்பிடத்தக்களவு நெருக்கவாரத்தை கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்கான தயாரிப்புக்களின் போது, வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்துக்கான பாகிஸ்தானின் ஆதரவை நிறுத்துமாறு முஷாரப்பை அழுத்தியது. வாஷிங்டன், இந்தியப் பாராளுமன்றம் மீதான டிசம்பர் 13 தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்குள் இயங்கிவரும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குமாறும் நூற்றுக்கணக்கான போராளிகளை சுற்றிவளைக்குமாறும் இஸ்லாமாபாத்தை நெருக்கியது. இந்த இரு நடவடிக்கைகளும் இராணுவத்தினுள்ளும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களிடமும் முஷராப்புக்கு இருக்கும் ஆதரவை இல்லாதொழிப்பதாக அமைந்த அதேவேளை, அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கியதோடு அதன் பதில்களையும் மிகவும் நிச்சயமற்றதாக்கியது.

அமெரிக்கா திரைக்குப் பின்னால் மேலும் முஷாரப்பின் கரங்களை முறுக்கிவருகின்றது. ரொக்காவீன் விஜயத்தை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் டிசம்பர் 13 தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் குழுக்களில் ஒன்றான லக்ஷார்-இ-தொய்பாவின் (Lakshkar-e-Taiba) தலைவர் ஹவீஸ் மொகமட் சயிட்டை கைதுசெய்ததோடு, அமைதியின்மைக்கு எதிராக பலத்த தாக்குதல் தொடுக்க ஆயிரம் இராணுவத்தினரை பழங்குடியினர் பிரதேசத்தில் நிறுத்தியிருந்தது. ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டிய கார்டியன் பத்திரிகை: பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியும், பயமுறுத்தியும், எச்சரிக்கை செய்தும் மேலும் பலமான நடவடிக்கைகளுக்காக முன்னோக்கி செல்லுமாறு தூண்டுகின்றோம் (இஸ்லாமிய அடிப்டைவாதிகளுக்கு எதிராக). நாம் பல வெற்றிகளை அடைந்திருந்தபோதும், அது மிகவும் மெதுவாகவே இடம்பெறுகின்றது" எனக் குறிப்பிட்டது.

அமெரிக்காவின் கோரிக்கைகளை இட்டுநிரப்புவதற்கான முஷராப்பின் ஒவ்வொரு நகர்வுகளும் பாகிஸ்தானுக்குள் அரசியல் ஸ்திரமின்மைக்கு எண்ணெய் வார்த்தது. தகவல் அமைச்சர் நசீர் மெமொன் நெருக்குவாரங்களை குறைக்குமாறு அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தார். "பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சமூகத்துடன் நின்றுகொண்டுள்ளது," என அவர் குறிப்பிட்டார். "பாகிஸ்தான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது... நாம் பாகிஸ்தான் மண்ணை வேறு எந்தவொரு நாட்டுக்கும் எதிராக பயன்படுத்த எந்தவொரு குழுவுக்கும் அல்லது அமைப்புக்கும் அனுமதிக்கமாட்டோம்." எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் மெனொன் மற்றும் முஷாரப் இருவரும் பாகிஸ்தான் எந்தவொரு இந்திய இராணுவத் தாக்குதலுக்கும் எதிராக பதில் தாக்குதல் நடத்தும் என சுட்டிக்காட்டினர்.

இரண்டு அணுவாயுத சக்திகளும் மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்களை எல்லையில் நிறுத்திவைத்ததோடு எல்லையில் பதட்டநிலையும் அதிகரிக்கச் செய்துள்ளதன் பெறுபேறாக தெளிவான உள்நாட்டு நெருக்கடிக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் 1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து மூன்று யுத்தங்களை நடத்தியிருக்கின்றன. அவற்றில் இரண்டு காஷ்மீர் பிராந்தியம் தொடர்பானதாகும். புதுடில்லியினதும் இஸ்லாமாபாத்தினதும் ஆளும் கும்பல்கள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இலாயக்கற்றிருப்பதற்கான அடிப்படை 1947 இல் துணைக் கண்டத்தை முஸ்லிம் பாகிஸ்தானாகவும், இந்து அதிகாரத்தில் உள்ள இந்தியாவாகவும் பிரிக்கப்பட்டதாகும். இந்த உள்ளடக்கத்தில் இந்து மகாராஜா ஒருவரால் ஆளப்பட்ட முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் அரசு பற்றி தோன்றியுள்ள முரண்பாடுகளுக்கு சமூகமான தீர்வு கிடையாது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆளும் கும்பல்களின் இலாயக்கற்ற நிலைமை இப்பிராந்தியத்தை மேலும் ஒரு அழிவுக்கு இட்டுச்செல்வதற்கு அச்சுறுத்துகின்றது.

Top of page