World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Tanzania's worst ever rail crash

தன்சானியாவில் மோசமான ரயில் விபத்து

By Barry Mason
2 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

தன்சானியாவில் விக்ரோரியா ஏரிக்கு தென்பகுதியிலுள்ள மாவன்சாவின் Dar Es Salaam என்ற இடத்திலிருந்து பயனம் செய்து கொண்டிருந்த பயனிகள் ரயில் ஒன்று யூன் 24ல் விபத்துக்குள்ளானதில் 281 பேர்கள் அதில் பலியாகியுள்ளனர். அறிக்கைகளின்படி இந்தப் ரயிலானது 22 பெட்டிகளையும் 1.500 பயணிகளையும் கொண்டு ஏற்றத்தில் செல்ல முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு நிர்வாகத் தலைநகரமான Dodoma லிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய புகையிரத நிலையமான இலூமாவில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அது தரித்து நின்றது. பின்பு அது புறப்படும்போது பின்புறமாக நகரத்தொடங்கியதும் புகையிரத்தை சுயமாக நிறுத்தும் பிரேக் முறையானது முற்று முழுதாக செயலிழந்தது. ஆரம்பத்தில் அது மெதுவாக நகரத் தொடங்கியபோது சிலர் அதிலிருந்து குதித்த போதிலும், புகையிரதமானது அதிக வேகத்தை எடுக்கத் தொடங்கி இறுதியில் 200 கிலோ மீட்டர் வேகத்தை அடைந்து அதே பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது.

இதன் விளைவாக விபத்து நடந்த அந்த இடம் ஒரு பயங்கரமான இரத்தக்களமாக இருந்தது. 22 பெட்டிகளும் பாதையைவிட்டு விலகியதோடு அதில் சில பெட்டிகள் முற்றுமுழுதாக நொருங்கி ஒன்றின் மேல் ஒன்றாக ஒரு குவியலாக காணப்பட்டன. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் வரும்வரை சிதைவுகளுக்குள் உயிர் தப்பிய பலர் ஒரு மணித்தியாளத்துக்கும் மேலாக சிக்குண்டு இருந்தனர். சிதைவுகளுக்குள் அகப்பட்ட இறந்த உடல்களை பாரம் தூக்கிகள் இரும்பு வெட்டும் கருவிகளைக் கொண்டு வெளிக்கொண்டு வந்தபோதும் அவற்றினுள் சில அடையாளம் காணமுடியாதளவு சிதைந்துபோனது. உள்ளூர் விளையாட்டு மைதானத்தில் அடுக்கி வைக்கப்பட்ட சடலங்களில் சிறுவர்கள் குழந்தைகளும் அடங்குவார்கள். உறவினர்களால் அடையாளம் காணப்படாத 88 சடலங்களையும் வைத்தியசாலைகளில் குளிரூட்டிப் பாதுகாக்கும் வசதிகள் குறைபாட்டினால் டொடோமாவிலுள்ள பாரிய புதைகுழிகளுக்குள் அவைகள் புதைக்கப்பட்டன.

மப்வாப்பா, டொடோமா மற்றும் அடுத்த நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு காயப்பட்டவர்கள் எடுத்துச் செல்லப்பட்டனர். ''இது ஒரு மோசமான நிலைமை, வைத்தியசாலைகள் அவை கொள்ளகூடிய அளவைவிட நிரம்பியுள்ளதுடன் வைத்தியர்களும் குறைவாக உள்ளார்கள்'' என சுகாதார அமைச்சர் அப்துல்லா கூறினார். யூன் 26 புதன்கிழமை, சிறு காயம்பட்ட 600 பேர்கள் சிகிச்சைக்குப்பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் 371 பேர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டனர்.

அருகிலுள்ள நாடான மொசாம்பிக்கில் இதே போன்ற ஒரு சூழ்நிலைமையின் கீழ் நடந்த ரயில் விபத்தில் 192 பேர்கள் கொல்லப்பட்ட ஒரு மாதத்தின் பின் இவ்விபத்து நடந்துள்ளது. அதில் பிரேக்குகள் செயலிழந்ததினால் ஏற்றத்திலிருந்து ரயில் பின்னோக்கி ஓடி சீமேந்து ரயிலுடன் மோதியது. சாதாரண இயந்திரங்கள் பராமரிப்பு, உள் கட்டுமானத்தின் வீழ்ச்சி மற்றும் ஆபிரிக்கா முழுவதிலும் உள்ள ரயில் போக்குவரத்துக்கான நிதிப்பற்றாக்குறை போன்றவைகள் இதன்மூலம் வெளிக்கொணரப்படுகின்றது.

தன்சானியா ரயில்வே கூட்டுத்தாபனத்தின் வரலாற்றில் மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த பாரிய ரயில் விபத்தில் 100 பேர்வரை கொல்லப்பட்டனர். நாட்டில் கடந்த பத்து வருடங்களில் மொத்தமாக 1.500 பேர்கள் விமான மற்றும் ரயில் விபத்துக்களில் இறந்துள்ளதாகவும் இது போன்ற பேரழிவுகளை தவிர்ப்பதற்கு அரசாங்கமானது இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென தன்சானியாப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அத்தோடு இப்படியான விபத்துக்களின்போது அவற்றை சமாளிக்ககூடிய நிர்வாகத்தினரின் மூலோபாயப் பற்றாக்குறையும் இதுபோன்ற சம்பவங்களில் வெளிப்பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகைகளும் விமர்சித்துள்ளன.

தன்சானியா ஜனாதிபதி பெஞ்சமின் மெகாப்பா விபத்து நடந்த இடத்துக்கு விஜயம் செய்ததுடன், அரசாங்கத்தின் குறைபாடுடைய ரயில்வே அமைப்பை குறைத்துக் காட்டுவதை தவிர்ப்பது அவருக்கு தேவையாக இருந்தது. ''முன்பு இதுபோன்று எதுவும் நடந்ததில்லை. இது ஒரு விபத்து என எல்லா வகையிலும் சுட்டிக்காட்டுகின்றன. விபத்தை தடுப்பதற்கான சக்தி எம்மிடம் குறைவாக உள்ளன'' என்றார். அரசாங்கமானது இரண்டு நாட்களை துக்க தினமாக அறிவித்ததுடன் ஒரு உத்தியோகபூர்வ விசாரணைக்கும் உத்தரவிட்டது.

ஆபிரிக்காவிலுள்ள பல நாடுகளைப்போல, தன்சானியா அரசாங்கமானது ரயில்வே அமைப்பை தனியார்மயப்படுத்துவற்கான முயற்சிகளை செய்து வருவதுடன், அதனை வாங்கும் ஆற்றல் உள்ளவர்களின் ஆர்வத்தை குறைக்க பெஞ்சமின் காப்பா விரும்பவில்லை. தனியார்மயப்படுத்தலுக்கான முன்தயாரிப்பு நடவடிக்கைகளின் பாகமாக 1.800 அலுவலக ஊழியர்களை வேலைநீக்கம் செய்வதற்கான திட்டத்துக்கு எதிராக அண்மையில் ரயில்வே தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்தனர். அரசாங்கமானது ஜனவரி மாதம் இதற்கான விளம்பரங்களை சர்வதேச பத்திரிகைகளுக்கு விடுத்ததுடன் எதிர்வரும் 25 வருடங்களுக்கு பயணிகள் சேவை மற்றும் சரக்குகள் சேவைகளை குத்தகைக்கு விடுவதற்காக ஒப்பந்தக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆபிரிக்க ரயில்வே சேவைகளின் வியாபாரத்தில் முதலிடுவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றிய கலந்துரையாடலுக்கான மூன்று நாள் மாநாடு தென்னாபிரிக்காவிலுள்ள ஜோகன்ஸ்பேர்க் நகரில் நடைபெற உள்ளது. மொசாம்பிக்கில் கடந்த மாதம் ரயில் விபத்து நடந்த இடமான மபுட்டு (Maputo) ஆற்றுவழிப்பதையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும், தன்சானியாவை ஊடறுத்துச் செல்லும் டாரெஸ் சலாம் (நிணீuரீவீஸீரீஞிணீக்ஷீ மீs ஷிணீறீணீணீனீ) வழிப்பாதை மற்றும் தன்சானியாவிலுள்ள கிடற்றுவில் (Kidatu) கொள்கலன்கள் ஏற்றி இறக்கும் வசதிகளை நிர்மாணித்தல் போன்றவைகள் பற்றி அங்கு கலந்துரையாடப்படும். ஆபிரிக்காவின் தொழிலாளர்கள், விவசாயிகளின் பாதுகாப்பும் மற்றும் தேவைகளும் இவர்களின் நிகழ்ச்சி நிரலின் பாகமாக இருக்கமாட்டாது என்பது இங்கு நிச்சயம் கூறப்பட வேண்டியதில்லை.

Top of page