World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்

France: Raffarin's attempt to amnesty his government provokes political crisis

பிரான்ஸ் : அவரது அரசிற்கு மன்னிப்பளிக்கும் ரஃப்ரனின் முயற்சியானது அரசியல் நெருக்கடியினை உருவாக்குகிறது

By Alex Lefebvre
1 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின பின்னர் பாரம்பரியமாக அளிக்கப்படும் ''குடியரச கருணை மன்னிப்பு'' மீதான விவாதமானது ரஃப்ரன் அரசாங்கத்தின் அரசியல் ஸ்த்திரமின்மையை வெளிப்படுத்தியுள்ளது. அண்மைய பிரெஞ்சு அரசியலின் சட்ட ஒழுங்கு போக்குக்கு அரசு தன்னை இசைந்துகொண்டு, பலாத்கார குற்றம் அல்லது சிறு குற்றங்களான சட்டபூர்வமற்ற வாகன நிறுத்தம், ஆபத்தான நாய்களை வைத்திருத்தல் போன்ற சில எண்ணிக்கையிலான கருணை மன்னிப்பை பிரதானமாக குறைப்பதை விவாதம் மையப்படுத்தியிருந்தது. அரசியல்-நிதி குற்றங்களுக்கான விசாரணையின் கீழ் இருக்கும் ஜாக் சிராக்குக்கே அரசியல்-நிதி குற்றங்களுக்கான கருணை மன்னிப்பினை அளிக்க முயற்சித்தபோது விவாதத்தின் மையத்தில் பலமான எதிர்ப்புக்கு ஜாக் சிராக்கின் அரசியல் கூட்டுகள் முகம் கொடுத்தனர்.

கருணை மன்னிப்பு சட்டத்திற்கு பொறுப்பான UMP (ஜனாதிபதித்துவ பெரும்பான்மைக்கான ஐக்கியம், இது சிராக்கினால் தலைமை தாங்கப்படும் பிரெஞ்சு வலதுகளின் புதிய கட்சியாகும்) இன் பிரதிநிதி Michel Hunault, 'யூலை 5 இல் அரசியல் நீரோட்டத்தினை பரிசோதித்து, ''சிறு அரசியல்-நிதி குற்றங்களுக்கான வழக்கு விடயங்களை உண்மையில் மாபெரும் தெளிவுடன் பரிசோதனை செய்யவுள்ளோம்'' என அறிவித்தார். ''சமூக நலனை(ABS) தவறாக பாவிக்கும் வழக்குகள் தொடர்பான ஒரு விவாதத்தில் இருந்து தப்பமுடியாது'' என அவர் மேலும் கூறினார்.

சமூக நலன்களை வழங்கும் நிறுவனங்களின் சட்டபூர்வமற்ற நிதி அளிப்பு அல்லது கூலி வழங்குதலிலான குளறுபடி உள்ளடங்கலான குற்றவகையறாக்களின் முக்கியத்துவம் என்னவெனில்,அதில் பல குற்றங்களை ஜாக் சிராக் மற்றும் முன்னாள் பிரதமரும் UMP இன் தற்போதைய தலைவருமான அலன் யூப்பே போன்ற அரசாங்க அங்கத்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒருவர் தன்னை அரசியல் நிதி மோசடியுடன் மட்டும் மட்டுப்படுத்திகொண்டாலும் கூட, நீண்டகாலமாக பிரெஞ்சு வலதுகளை ஆட்டம்காணவைத்த மோசடிகளின் தன்மையும், சக்தியும், எண்ணிக்கையும் குறிப்பிடும்படியானவையாக இருக்கின்றன. ஏனையவைளின் மத்தியில், ஒரு பரந்த அளவில் பாரிஸ் பிராந்திய கட்டுமான துறை நிறுவன ஊழல் திட்டத்தில் சகாவாக இருந்தார் என சிராக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதுடன், அவர் நகரசபை தலைவராக இருந்தபோது பாரீஸ் நகரத்தின் உத்தியோகபூர்வ பத்திரிக்கைகளின் ஒரு நிதி மோசடி விவகாரத்தை மறைப்பதற்கு உதவி இருந்தார். உண்மையில் எந்தவொரு வேலையாட்களையும் வேலையில் அமர்த்தாமல், RPR தான் வேலையாட்களை வாடகைக்கு அமர்த்தியதாக அறிவித்திருந்த ஒரு ஊழலில் யூப்பே சம்பந்தப்பட்டிருந்தார். அத்துடன் RPR இன் பொருளாளரும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கிறார்.

Hunault இன் ஆலோசனைக்கு ஏனைய அரசியல் தட்டினர் கோபத்துடன் பதிலளித்தனர். ''கருணை மன்னிப்பு மீதான எந்த முயற்சியையும் எனது முழுப்பலத்துடன் நான் எதிர்ப்பேன்'' என UMP யுடன் இணையாத பழமைவாத UDF இன் தலைவரான François Bayrou கூறினார். UMP மற்றும் RPR-UDF பிரிவுகளுக்குள்ளான முரண்பாடுகளை சுருக்கமாக குறிப்பிட்டுக்கொண்டு,'' ஒரு 'சுய கருணை மன்னிப்பு' சட்ட தீர்மானத்திற்கு சார்பாக இருக்கும் எந்தவொரு UMP இன் பாராளுமன்ற அங்கத்தவர்கள், புதிய பெரும்பான்மை கட்சியின் பிரிவினைக்கு அல்லது வெடிப்புகளுக்கும் முகம்கொடுப்பார்கள்'' என L'Express பத்திரிகை எழுதியிருந்தது.

உத்தியோகபூர்வ இடதுகளான சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியினரும் கூட கருணை மன்னிப்பிற்கான எவ்விதமான முயற்சிக்கும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். சோசலிசஸ்ட் மற்றும் பச்சைக் கட்சியினர் நிர்வாகத்தின் ஊழல் மீதான கருணை மன்னிப்புக்கான அவர்களது எதிர்ப்பை கொள்கையின் அடித்தளத்தில் காட்டவில்லை. அதற்கு பதிலாக, இது சட்ட ஒழுங்கு காலத்தின் ஒரு காலவதியான பாரம்பரியமாகும் என்ற வலதுசாரி வாதத்தினை அவர்கள் முன்வைக்கின்றனர்.'' இது நாகரீகமின்மைக்கான ஒரு பரிசாகும், ஆதலால் தான் நாம் இந்த சிறு கருணை மன்னிப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளோம் மற்றும் எமது நாடு நாகரீகத்தின் பாதையை நோக்கி திரும்பவேண்டியது அவசியமாக இருக்கிறது'' என சோசலிஸ்ட்டுகளின் தலைவர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அப்போது, ஒரு அரசியல் நிதி ஊழலுக்கான கருணை மன்னிப்பு அளிக்கும் எண்ணம் இருந்தது என்பதை அரசாங்கம் மறுக்க முயற்சித்தது. Hunault இன் அறிக்கையை வெளிப்படையாக விமர்சித்த பின்னர்,'' அரசியல் நிதி குற்றங்களுக்கான கருணை மன்னிப்புக்கு இந்த சட்டத்தில் ஆலோசனை செய்யப்படவில்லை'' என நீதி அமைச்சர் Dominique Perben அறிவித்தார். ''தொழில் நிறுவன வரவு செலவுத்திட்டம்'' பற்றிய சட்டங்களை திருத்தும் அவசியத்திற்கு அழைப்பு விட்டுக்கொண்டு, அவர் குறைந்த எதிர்ப்பை முகம் கொடுக்கும் போது அரசாங்கம் சமூக நலன்களை வழங்கும் நிறுவனங்களின் குற்றங்கள் பற்றிய பிரச்சனையை எழுப்புவதற்கு முயற்சிக்கும் என அவர் மேலும் கூறினார். ''சமூக நலன்களை வழங்கும் நிறுவனங்களின் சட்டங்களை ஒழுங்குபடுத்தும் உண்மையான ஒரு விவாதம் நடத்தவேண்டும் என ஒருவர் கேள்வி கேட்கலாம்... இந்த விடயத்தை ஒரே நாளில் நாம் பரிசீலிக்வேண்டுமானால், அமைதியடைந்த மற்றும் பிரச்சனையற்ற ஒரு நிலையில் இருக்கவேண்டும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன்.

யூலை 9ம் திகதி, அரசியல் நிதியியல் விடயம் பற்றி ஒரு தடவை கூட குறிப்பிடாமல் நாடாளுமன்றத்தில் Perben சட்டத்தை அறிமுகப்படுத்தினார். யூலை 10, ''நம்பிக்கை மற்றும் விசுவாச உடன்பாட்டினை'' தீர்மானிக்க பிரதமர் ரஃப்ரன் UMP குழுவை நாடாளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் நிதி மோசடி குற்றங்களுக்கான கருணை மன்னிப்பு பற்றிய பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததுடன், ''சர்ச்சைகளுக்கு எனக்கு பிடித்தமானதில்லை. தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது. நான் பணி மட்டுமே செய்துகொண்டிருக்கிறேன்'' என பிரதமர் பதிலளித்தார்.

நாடாளுமன்றம் கருணை மன்னிப்பு சட்டத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், சோசலிஸ்ட்டுகளின் திருத்தத்திற்கு இணங்கி ABS இன் எவ்வித கருணை மன்னிப்பையும் குற்றம் அற்றவையாக செய்வதுடன், 41 வகையான குற்றங்களை நீக்கியுள்ளதுடன், 1995 இல் நீக்கிய 28 குற்றங்களை எதிர்த்துள்ளனர். மசோதா சட்டசபைக்கு சென்றுள்ளதுடன், அது யூலை 24 உறுதிப்படுத்தப்படும். அது 49 குற்றங்களை நீக்கியுள்ளது. ''மூர்க்கத்தனமான ஒரு வழமையான ஆத்திரமூட்டலாகும்'' என இடதுகள் முழுவதும் மறுத்துள்ளதுடன், சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. சட்டம் தற்போது நாடாளுமன்றத்திற்கு திரும்பவேண்டியிருக்கிறது.

அரசியல் நிதி ஊழல் குற்றங்களுக்கான கருணை மன்னிப்பு விடயத்தினை நீண்ட நாட்களுக்கு விவாதிக்க ஊடகங்களின் பரந்த பிரிவும், அரசியல் வட்டாரங்களும் விரும்பவில்லை. சட்டசபையின் உடைவினை பற்றி மட்டுமே Le Monde பத்திரிகை வர்ணித்திருந்தது. ஜனாதிபதியின் கட்டளையின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகள் பற்றி ஒரு கட்டுரையை Le Figaro பத்திரிகை வெளியிட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை செய்யப்படவிருக்கும் விவசாய நடவடிக்கையாளரான ஜோசே போவே (José Bové) கருணை மன்னிப்புக்கான Perben இன் மறுப்பை Libération எதிர்த்திருந்தது. Accociated Press ஊடக சேவையானது, ஒரு சாதகமான அரசியல் நிதி ஊழல் குற்றங்களுக்கான கருணை மன்னிப்பினது ''ஆவியின் பயமுறுத்தல்'' , கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் ''ஒரு மரணித்துக்கொண்டிருக்கும் சர்ச்சையினுள் புதிதாக மூச்சுவாங்க'' மட்டுமே முயற்சி செய்வதாக '' குறிப்பிட்டிருந்தது.

எப்படியிருந்தபோதும், அரசியல் நிதி ஊழல் குற்றங்களுக்கான ஒரு கருணை மன்னிப்பினை பெற்றுக்கொள்வதற்கான தனது முயற்சியினை UMP கைவிட்டுவிடவில்லை. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், அதனது ஆலோசனையான நீதி அமைப்பு சீர்திருத்தத்தில் ''அரசியல் நிதி ஊழல் குற்றங்களின் கருணை மன்னிப்புகளுக்கான அதனது திட்டத்தினை மறைப்பதற்கு'' முயற்சிக்கிறது என சோசலிஸ்ட் பிரதிநிதி Jean-Marc Ayrault யூலை 9 அன்று அறிவித்தார். அரசியல் நிதி ஊழலுக்காக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பலரது வழக்கினை தடைசெய்வதற்கு, ஒரு வழக்கின் கால அவகாசத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவது, சமூக நலன்களை வழங்கும் நிறுவனங்களின் சட்டபூர்வ வரையறை மற்றும் ''சட்ட பூர்வமற்ற நலன்சார்ந்த உரையாடல்'' களை மட்டுப்படுத்துவது, மூன்று வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்ட எந்தவொரு நடவடிக்கையினையும் நீக்குவதற்கு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை இன்னும் சுருக்குவது போன்ற சில சாதகமான சீர்திருத்தங்களை செய்திஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

ஒவ்வொரு சட்ட நடவடிக்கைகளும் அதனது சாதகமின்மையை கொண்டிருப்பதுடன், சில சட்டங்கள் சட்டவரைவு பேரவை அல்லது நீதிபதிகளின் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றன. L'Express பத்திரிகைக்கு Gilles Gaetner " அரசாங்கம் உண்மையில் அரசியல்-நிதி பிழைகளை திருத்திக்கொள்ள உண்மையில் விரும்பினாலும் அதற்கு இதனுள் மாற்றங்களை செய்வதற்கு சிறிய இடமேயுள்ளது. ஒரு மன்னிப்பு மட்டுமே இதிலிருந்து வெளியேறுவதற்கான உண்மையான வழியை வழங்கும். அது நீதியான முறைக்கு திரும்புவதாகும்'' என குறிப்பிட்டார்.

இந்த சுயதிருப்தி சம்மதமானது கொடூரமான குற்றங்களுக்கு உயர் அதிகாரிகள் பொறுப்பானவர்களான இருப்பதை எடுத்துக்காட்டுவதுடன், தம்மை மறைக்க முயற்சிப்பதானது முழு பிரெஞ்சு ஆளும் பிரிவினது தன்மையினை எடுத்துக்காட்டுகின்றது. குற்றங்கள் பற்றி வலதுகளைவிட சோசலிஸ்ட்டுகள் தாம் உறுறியானவர்கள் என காட்டிக்கொள்வதற்கே பிரதானமாக கருணை மன்னிப்பு விவாதத்தினை உபயோகிக்கிறார்கள். பிரான்சுவா மித்ரோன் ஜனாதிபதியாக இருந்தபோது அவர்களில் பலர் அனுபவித்த அரசியல் ஊழல் குற்றங்களுக்கான கருணை மன்னிப்பினை பற்றி குறிப்பிடாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்கள். பல அரசியல் நிதி மோசடிகளில்( Elf -எரிபொருள் நிறுவன மற்றும் பாரீஸ் பிராந்திய கட்டுமானத் துறை மோசடிகள் ) சோசலிஸ்ட்டுகளும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பது உண்மையாகும். பல சோசலிஸ்ட்டுகள்(உதாரணமாக Dominique Strauss-Kahn) மற்றும் வலதுசாரிகளினது மேரி (Méry) ஊழல் மோசடியினை மறைப்பதில் உதவிசெய்தார்.

ஜனாதிபதிப் பதவி மற்றும் நாடாளுமன்றத்தினை அதனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் கருணை மன்னிப்பு மீதான விவாதமானது பழமைவாத அரசாங்கம் மிக உடையும் நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆழமான எந்த அரசியல் காற்றும், பிரெஞ்சு வலதுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு சிராக்கினால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் குடையான UMP இன் இருப்பை பயமுறுத்துகின்றது. சிராக் மற்றும் UMP ஊழல் குற்றவாழிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே, இதை தெரிந்து கொள்வதில் யாருக்கும் விருப்பமில்லை. உத்தியோகபூர்வ எதிக்கட்சியான ''இடது கன்னை'' ஊழல்மயப்பட்டும் மற்றும் பலகீனமாக இருப்பதால் அவர்கள் அதனை அம்பலப்படுத்துவதற்கான ஒரு தீர்க்கமான பிரச்சாரம் எதையும் செய்யப்போவதில்லை என்பதே UMP இன் பிரதான பலமாகும்.

See Also :

பிரான்சின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவருடனான நேர்காணலும் டேவிட் வோல்ஷின் குறிப்புகளும்

Lutte Ouvrière தலைவர் ஆர்லட் லாகியேயுடன் ஒரு நேர்காணலும் பீட்டர் சுவார்ட்ஸால் வழங்கப்பட்ட குறிப்பும்

பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் சிராக் 82 வீத வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்

பிரான்சில் மேதினம்: நவபாசிச லு பெனுக்கு எதிராக பதினைந்து இலட்சம் பேர் அணிவகுப்பு

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி!

பிரான்சின் தேர்தலை பகிஸ்கரி--
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை

Top of page