World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஐரோப்பிய ஒன்றியம்

EU-Summit intensify attack on asylam seekers and foreigners

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு அகதிகள், வெளிநாட்டவர்களுக்கு மேலான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது

By Ulrich Rippert
29 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு ஸ்பெயினில் உள்ள செவிலா (Sevilla) எனும் இடத்தில் ஜூன் 21, 22 களில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் தலைவர்கள் ஐரோப்பாவுக்கு படையெடுக்கும் குடியேற்றவாசிகளை தடுத்துநிறுத்துவதற்கான கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளை கிரிமினல் குற்றவாளிகளாக அடையாளம் காண்பதும், அதற்கு எதிரான போராட்டத்தை இடைவிடாது நடத்துவதிலும் ஐரோப்பா மேலும், மேலும் ஒரு கோட்டையாக மாறியுள்ளது.

இவ்வகதிகள் வரும் சொந்த நாடுகளும், அவர்களின் போக்குவரத்திற்கு இடையிலுள்ள நாடுகளும், தத்தமது எல்லைகளை '' மிகவும் சரியாக கண்காணிக்காமலும், ஐரோப்பிய கூட்டுடன் ஒத்துழையாமலும் இருந்தால் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்.'' இவ்வருட இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை இணைந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும், ஒரு இணைந்த ஐரோப்பிய எல்லைகளுக்கான பொலிஸ் படையையும் விரைவில் கட்டியமைக்கப்படவுள்ளது. நடைமுறையில் தற்போது முக்கியமான நாடுகளில் உள்ள ஐரோப்பிய சமூகங்களுக்கு இடையே எல்லைகளைப் பாதுகாப்பதற்கு என தொழில் நுட்ப துறையிலான பயிற்சிகள் கூட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அகதிகளின் சொந்த நாடுகளுக்கும், அவர்கள் வரவிரும்பும் நாடுகளுக்கும் இடையில் உள்ள மூன்றாம் நாடுகள் என்று கூறப்படுபவை, எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்ட விரோதமாக உட்பிரவேசித்த அகதிகளை திருப்பி எடுத்துக் கொள்வதை தமது கடமையாக கொள்ளல் வேண்டும், இவற்றின் மூலம் ''இடையில் தங்கும் அகதிகளை'' இந்நாடுகளின் வெளிஎல்லைகளில் தடுப்பதற்கு நிர்பந்தத்துக்குள்ளாக்குவது என்பது திட்டமிடப்பட்டுள்ளது. அதைவிடவும், ஐரோப்பிய ஒன்றியம் எதிர்காலத்தில் அகதிகள் தொடர்பான தீர்மானத்தை தற்போது இயங்குவதைக் காட்டிலும் மிகவிரைவில் செயற்படுத்துவதற்கான முறைகளை கலந்தாலோசித்துள்ளது.

இம் மாநாட்டுக்கு முன்னதாகவே ஸ்பானியாவின் ஜனாதிபதியான மக்கள் கட்சியைச் சேர்ந்த José Maria Aznar என்பவருடைய பழமைவாத அரசாங்கம் கடந்த ஆறு மாதத்துக்கு முன்னால் ஐரோப்பிய கூட்டில் ஐனாதிபதி பதவியை சுற்றுமுறையில் பெற்றுக் கொண்டு, Forza Italia எனும் கட்சியைச் சேர்ந்த அவருடைய இத்தாலிய கூட்டாளியான சில்வியோ பெலஸ்கோனியுடன் '' சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கை '' என்பதை முன்னெடுத்துள்ளார். நவீன ஆயுதமயப்படுத்தப்பட்ட ஐரோப்பியக் ஒன்றியத்தின் எல்லைப்படைகளை கொண்டுள்ள, இத் திட்டம் மேலும் கூறுவது யாதெனில், '' ஒத்துழையாமல் இருக்கும் அகதிகளின் சொந்த நாடுகள் மற்றும் தங்கிப் போகும் நாடுகளுக்கான '' அபிவிருத்தி உதவிகள் வெகுவாக குறைக்கப்படும் என்பதாகும்.

 

ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் சுற்றுப்பிரயாணத்தை மேற்கொண்ட Aznar இதற்கான ஆதரவுகளை திரட்டிக் கொண்டார். மே மாதம் 28 ந் திகதி கோலிச பிரான்சின் பிரதமரான ஜாக்குஎஸ் சிராக், சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜேர்மனியின் பிரதமரான ஹெகார்ட் ஷுரோடர் பாரிசில், '' ஐரோப்பியக் ஒன்றியத்தின் வெளி எல்லைகளை மிக கவனமாக கண்காணித்தல் '' எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதற்கு மூன்று நாட்களுக்கு பின்னால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு அமைச்சர் றோம் நகரத்தில் ஒரு சந்திப்பின் போது, ஐரோப்பிய எல்லைகளுக்கான பொலிஸ் படையை படிப்படியாக கட்டி எழுப்ப வேண்டுமெனவும், ஐரோப்பாவின் புதிய விண்கலதிட்டமான Galileo வின் உதவியுடன் '' குடியேற்ற வாசிகளின் பாரிய வருகையை கண்காணிக்க '' அதனைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Aznars இன் வெளிநாட்டுவர்களுக்கு எதிரான திட்டத்தின் மிகவும் தீவிரமான ஆதரவாளர் தொழிற்கட்சியைச் சேர்ந்த பிரித்தானியாவின் பிரதமரான ரோனி பிளேயர் ஆவார். சுவீடன், மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், அவர் செவிலாவில் நடைபெற்ற மாநாட்டில் அவருடைய அரசாங்கத்தின் திடமான தீர்மானத்தை தெரிவித்திருந்தார், அதாவது எதிர்காலத்தில் நிராகரிக்கப்பட்ட அகதிகளை திரும்ப பெற்றுக் கொண்ட நாடுகளே பிரித்தானியாவின் அபிவிருத்தி உதவிகளை பெற்றுக் கொள்ளும் என்பதாகும். அவற்றில் விசேடமாக சோமாலியா, ஸ்ரீலங்கா, துருக்கி போன்ற நாடுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

''சட்டவிரோதமான குடியேற்றவாசிகள் '' என்பதற்கு எதிரான இப்பிரச்சாரம் அதீத வலதுசாரி கட்சியின் அண்மைய தேர்தல் வெற்றியின் விளைவு என்பதை ஏற்றுக்கொள்ள பிளேயர் தயங்கவில்லை.

சமூக ஜனநாயக அரசாங்கங்களின் வர்த்தக நட்புமிக்க அரசியலால் ஏற்பட்ட அதிருப்தியால் அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகளின் வார்த்தையாலங்கள் மேலோங்கி உள்ளன. பிரான்சில் சோசலிசவாதியான லியோனல் ஜொஸ்பினை விடவும் ஜேன் மரி லு பென் உயர்ந்தும், மற்றும் ஒல்லாந்தில் Pim Fortuyn என்பவருடைய கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளும் சேர்ந்துள்ளன. நீண்ட காலத்திற்கு பின்னால், ஐரோப்பாவில் 13 சமூக ஜனநாயக அரசாங்கங்களில் 5 மாத்திரமே ஆட்சியில் உள்ளன.

ஆட்சியில் இருக்கும் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் இவ்வாறான அபிவிருத்திகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தாமே வலதுசாரிகளின் அரசியலை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், வெளிநாட்டுக் காரர்களுக்கு எதிரான இனவாத போக்குகளை பரப்பும் வலதுசாரி அரசியலையும் அவை மேற்கொள்கின்றன. சில வாரங்களுக்கு முன்னால் பிரித்தானிய பிரதமர் பிளையர், '' வெளிநாட்டுக் காரர்களுக்கு எதிரான பெரியதொரு தாக்குதலுக்காக வாயடித்துக் கொண்டார் '' என Der Spiegell பத்திரிகை தெரிவித்துக் கொண்டது. அதீத வலதுசாரிகளின் வெற்றியை தடுப்பது ஐரோப்பா முழுவதும் சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்கு இடமான அகதிகளை தடுத்து நிறுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதால் மட்டுமே முடியும் என பிளையர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான குடியேற்றவாசிகளுக்கு எதிராக ஒரு பொதுவான செயற்பாட்டுத் திட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக Guardian பத்திரிகை, அரசாங்கத்தின் ஓர் நம்பத் தகுந்த பத்திரத்தில் இருந்து எடுத்துக் குறிப்பிட்டது. பிரித்தானிய ஆகாய போர் விமானம் அகதிகளைப் பற்றி அறிவிக்கும் பட்சத்தில், பிரித்தானியாவின் யுத்த நீர்மூழ்கிக் கப்பல் கிழக்கு மத்திய கடலில் வைத்தே அகதிளை மறித்து பிடித்துக் கொள்ளும் எனவும் அதைத் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட அகதிகள் பாரியளவில் அவர்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவப்பு- பச்சை அரசாங்கத்தின் நிலைப்பாடும் பேர்ளினில் இதைத் தவிர வித்தியாசமானதாக இல்லை. பலவருடக்களாக சமூக ஐனநாயகத்தின் உள்நாட்டு அமைச்சரான ஓட்டோ ஷிலி, ஆகக்குறைந்தளவில் இருந்த ஐரோப்பிய அகதிகளுக்கான உரிமைகளை தாராளமயமாக்குவதை தடுத்து நிறுத்தியிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின், குடும்பங்களுக்கான இணைவு மற்றும் அகதிகளுக்கான வழக்கினை ஒரேமாதிரியானதாக்குவதையும் '' நாம் குடியேறிபவர்களுக்கான எமது சொந்தமான நிலைப்பாட்டை வரையறுப்பதை இது இல்லாது ஒழிக்கின்றது '' எனும் கூற்றினால் ஷிலி நிராகரித்து விட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்னால் லக்சம்போர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய உள்நாட்டு அமைச்சர்களுக்கான மாநாட்டில் மூன்றாம் நாடுகளுக்கான மிகவும் ஒரு கடுமையான போக்கை ஷிலி கடைப் பிடித்தார். '' எவர் ஒருவர் அவருடைய சர்வதேச கடமைகளை கடைப்பிடிக்கவில்லையோ, அவர் அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.'' என குறிப்பிட்டார்.

சட்ட விரோதமான குடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டம் சட்டபூர்வமான குடியேற்றவாசிகளுக்கு நன்மை பயக்கிறது என்பதாக ஷிலியின் விவாதம் அமைந்துள்ளது. '' எவ்வளவுக்கு குறைந்தளவிலான சட்டவிரோதமான குடியேற்றவாசிகள் இருக்கிறார்களோ அவ்வளவுக்கு சட்டபூர்வமான குடியேற்றவாசிகளுக்கான சந்தர்ப்பம் அதிகம் '' என்பது ஒரு வெறும் வார்த்தையே. அத்துடன் இது உண்மைக்கு மிகவும் மாறானது. சட்ட பூர்வமாக குடியேறுவதற்கான வசதிகள் திட்டவட்டமான முறையில் அழித்தொழிப்பதனாலேயே சட்ட விரோதமான குடியேற்றம் வளர்ச்சி அடைந்து செல்கின்றது. தேவையான விஷேட தகமைகளை பெற்றவர்களை(கணணித்துறை) தவிர ஏனையோருக்கு ஐரோப்பாவினுள் நுளைவது சாத்தியமற்றதாக உள்ளது.

 

அகதிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை முழுப்படியே நடைமுறைப்படுத்த மறுக்கும் இடையில்தங்கிச் செல்லும் நாடுகளுக்கு எதிரான பொருளாதாரத் தடை பற்றிய கலந்துரையாடலில், ஜேர்மனியின் பிரதமர் ஹெகார்ட் ஷுரோடர் செவிலாவில் நடைபெற்ற மாநாட்டின் விவாதத்தில் பின்னடித்ததுடன், அஸ்னார், பெலஸ்கோனி மற்றும் பிளேயர் போன்றோரின் நிலைப்பாடுகளுக்கும் ஆதரவளித்தார்.

செவிலாவின் இறுதி அறிக்கையில், '' பொருளாதாரத் தடை '' எனும் சொல் நீக்கப்பட்டதுடன், அபிவிருத்திக்கான நிதி ஒன்றில் குறைக்கப்படும் அல்லது இரத்து செய்யப்படும் என மறைமுகமாக அச்சுறுத்தப்பட்டுள்ளது. குடியேற்ற வாசிகளுக்கு எதிராக ஐரோப்பாவை பாதுகாப்பதை ஐரோப்பிய பிரதிநிதிகள் கெட்டிக்காரத்தனமாக பின்வருமாறு வெளிப்படுத்தினர்: '' இந்நாடுகளில் முழுமையற்ற ஒத்துழைப்பு, அந்நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான உறவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.''

 

அகதிகளின் வறுமைக்கான காரணம்

பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆபிரிக்கா அல்லது சமூக நெருக்கடிப் பிராந்தியங்களைக் கொண்ட கிழக்குஐரோப்பா, மற்றும் ருஷ்யா போன்ற நாடுகளில் இருந்து படையெடுக்கும் அகதிகளை தடுத்து நிறுத்தவது அல்லது அவர்களை நிராகரிப்பது என்பதும், அத்துடன் இவற்றிற்காக ஐரோப்பாவை சுற்றி ஆயுதம்தரித்த காவற்படைகளை நிறுத்துவதினூடு அகதிகளை மறுபடியும் கடலுக்குள்ளேயே தள்ளி விடுவது அல்லது அகதிகளை ஏற்றியிறக்கும் வாகனங்களில் அவர்களை திருப்பி அனுப்பி விடுவது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்லாது பிழையானதுமாகும்.

இது உண்மையில் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் ஒரு பிரச்சனைக்கு முகம் கொடுப்பதையும், மற்றும் அதற்காக அதனிடம் எந்தவொரு தீர்வுமே இல்லை என்பதையுமே இது தெளிவுபடுத்துகின்றன.

Den Haag எனும் இடத்தில் உள்ள ஐரோப்பிய பொலிஸின்(Europol) ஒரு தகவலின்படி, வருடத்தில் 400.000 அரசியல் அகதிகளும் மேலும் ஏறத்தாள ஒரு மில்லியன் மக்களும் ஐரோப்பிய நாடுளுக்குள் சட்ட விரோதமாக உள்புகுன்றனர். இவ் எண்ணிக்கை 1993 க் காட்டிலும் 13 தடவை அதிகரித்து காணப்படுவதுடன், அதிகரித்து செல்லும் ஒரு போக்காகும் எனவும் கூறுகிறது.

இவ் எண்ணிக்கை, '' இரு மடங்கு அல்லது பத்து மடங்குக்கும் கூடுதலானவை '' என பேர்ளினின் உள்நாட்டு அமைச்சரவையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் Der Spiegel âனும் பத்திரிகையிலிருந்து சுட்டிக்காட்டினார். இரவு நேரங்களிலும், பனிப்புகார் படிந்துள்ள வேளைகளிலும் எல்லைகளைக் கடந்து இரகசியமாக எத்தனை பேர் வரையில் வருகிறார்கள் என்பது உண்மையில் எவருக்கும் தெரியாது. ஐரோப்பா எங்குமே ஒரு '' நிழல் சமுதாயம் '' ஏற்கனவே உருவாகி உள்ளது. பாரிஸ், அம்ஸ்ரடாம், பேர்ளின் அல்லது வியன் போன்ற நகரங்களின் பதிவுக்காரியாலயங்களின் அறிக்கைகள், உத்தியோகபூர்வமான பதிவு செய்தல்களை விடவும் மூன்று மடங்கு அதிகமான சனத்தொகை இவ் இடங்களில் வசிப்பதாக கூறுகின்றன. இவ்வாறான பதிவு செய்தல் சமுதாய வாழ்க்கையின் ஒரு அடிப்படையாக பார்க்கும் ஒரு ஜேர்மன் அதிகாரியின் கருத்துப்படி, இது ஒரு மோசமான நிலமையாகும். ஆனால் உண்மையில் சமூக கொந்தளிப்பானது மிகவும் ஒரு மோசமான நிலமையை நோக்கியே வளர்ச்சி அடைகிறது.

ஜேர்மன் பிரதமர் ஷுரோடர் மற்றும் தாரளவாத பத்திரிகைகளின் சில பிரிவுகளும் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக கீழ்காணும் விவாதங்களையே முன்வைக்கின்றன : உண்மையிலும் இவ் அகதிகளின் இக்கட்டான நிலமைகளை கணக்கில் எடுக்க வேண்டித்தான் உள்ளது. சமூக ஏழ்மை மற்றும் பல நாடுகளின் இக்கட்டான நிலமைகள் போன்றவற்றினால் பெருவாரியான மக்கள் ஒரு புதியதும் சிறந்ததுமான ஒரு நாட்டைத் தேடுகின்றனர். ஆனால் பிரச்சனை, எல்லோருமாக அல்லது ஏழைகளில் ஒரு பெரும் பகுதியினரும் மேலும் வறியவர்களும் ஐரோப்பாவை நோக்கி படையெடுப்பதின் மூலம் ஒரு போதுமே தீர்க்கப்பட முடியாது. இவை தவிர்க்கப்பட முடியாதவாறு இங்கே உள்ள சமூக அமைப்பு திட்டத்தை உடைய செய்யும்.

இவ்வாறான விவாதங்களை பலவிதமான கோணங்களில் இருந்து பார்க்கையில் மிகவும் மதிப்பிழந்தே காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக, குடியேறுபவர்களின் கூடுதலான வருகையின் விளைவால் இங்கே உள்ள சமூக நிலமைகள் எதுவும் நெருக்கடிக்குள் போகவில்லை, மாறாக பெரிய நிறுவனங்களினதும், பணக்காரர்களினதும் வரிகளையும், அரசின் சமூகத் திட்டங்களையும் மூலதனத்தின் நன்மைக்காக திட்டவட்டமாக குறைத்துக் கொள்ளும் அரசியலை மேற் கொள்வதினாலேயே இவை ஏற்படுகின்றன. பெரிய எண்ணிக்கையை சேர்ந்த அரசியல் அகதிகளும் மற்றும் அகதிகளும் ஒரு ஒழுங்கான வேலையினூடு அவர்கள் தமது வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை பெற்றுக் கொள்ள தடை செய்யப்பட்டுள்ளனர்.

மற்றயது, ஏழ்மையும், மேலும் பெருவாரியான மக்கள் அவர்களுடைய வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வெளியேறி விடும் சம்பவங்களுக்கு காரணம் அமெரிக்க, ஐரோப்பிய மூலதனங்களால் இவ்வறிய நாடுகள் கொள்ளையடிக்கப்பட்டதின் ஒரு விளைவாக ஏற்பட்டவையாகும். இவ் வறுமைக்கான வேர் கடந்த நூற்றாண்டின் காலனித்துவ அரசியலில்் முழுமையில் தங்கியுள்ளதுடன், அவை இன்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நவீன அமைப்பு முறை வடிவங்களின் ஆழுமைக்கு இவை தொடரப்படுகின்றன.

உலக வங்கியின் 2000 ம் ஆண்டுக்கான ஒரு அறிக்கை, அபிவிருத்தியடையாத நாடுகளின் மொத்தக் கடன் தொகை 2,5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனத் தெரிவித்துள்ளது. அதே அறிக்கை தொடர்ந்து கூறுகையில், இந் நாடுகள் அபிவிருத்தி நிதிகளாக பெற்றுக்கொள்ளும் பணத்தின் அளவில் ஒன்பது மடங்கை பெரிய சர்வதேச வங்கிகளுக்கு கட்டித் தீரவேண்டிய கடனில் மூழ்கியுள்ளன.

உதாரணமாக, 1999 இல் மொசாம்பிக்கில் ஏற்பட்ட மிகவும் ஒரு பாரிய வெள்ளத்தினால் அங்கு வசித்த மில்லியன் கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர். இருப்பினும் அந்நாடு மேற்க்கத்தைய வங்கிகளுக்கு அதனது கட்டித் தீரவேண்டிய கடனான 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியும் உள்ளது. கொலரா, மலேரியா போன்ற தொற்று நோய்களின் பரவுதல்கள் அங்கே காணப்படுகையில் உள்நாட்டு மொத்த சமூகஉற்பத்தியில் 1,1 வீதம் மட்டுமே சுகாதார சேவைக்கு என செலவிடப் பட்டுள்ளது. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் '' புனருத்தான திட்டம் '' அந் நாட்டின் சுகாதார சேவைக்கான செலவினை 75% ஆல் குறைத்து விட்டுள்ளது.

ஆபிரிக்கா முழுவதிலும் சராசரியாக ஒவ்வொரு இரண்டாவது பிள்ளைகளே பாடசாலைக்கு போகக் கூடியதாக இருக்கும் நிலையில் அரசாங்கம் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் என செலவிடும் பணத்தைக் காட்டிலும் பெரிய வங்கிகளுக்கும், கடன் நிறுவனங்களுக்கும் அதைவிட நாலு மடங்குக்கும் அதிகமான பணத்தை கொடுத்து வருகிறது. உலக வங்கியின் அறிக்கை, 1994 முதல் 2000 வரையிலும் அங்கே உள்ள வறுமை மேலும் 50 வீதத்தால் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்பதுகளில் நடைமுறைக்கிடப்பட்ட கட்டுமானங்களை மாற்றும் குறிக்கோளாகக் கொண்ட வேலைத் திட்டம் எனும் ஒரு முறையானது தொண்ணூறுகளில் வீழ்ச்சியடைந்து சென்றுள்ளது, இதன்படி ஒருவருடைய வருமானத்தின் வீழ்ச்சியானது, காலனித்துவ ஆதிக்கத்துக்கு முன்னாலான சுயாட்சிக் காலத்தின் தரத்துக்கு பின்னோக்கி சென்றுள்ளது.

கிழக்குஐரோப்பா மற்றும் ருஷ்யாவிலும் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் பிரகடனப்படுத்திய சில வேறுபட்ட ''அதிர்ச்சி வைத்தியம் '' இதேமாதிரியான விளைவுகளை உருவாக்கியுள்ளது. கடந்த பத்து வருட காலத்தில் முன்னாள் சோவியத் யூனியனினதும், கிழக்கு ஐரோப்பாவினதும் பொருளாதாரமானது அரைவாசிக்கும் மேலாக சுருங்கி விட்டுள்ளது. 1999 ல் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின் மதிப்பீடானது, வறுமைக்கோடானது ஒரு நாளைக்கு 4 அமெரிக்க டொலர் என மதிப்பிடப் பட்டால், முன்னைய சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் தொகை 1989 இல் 13,6 மில்லியனிலிருந்து 147 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.

மிகப்பாரியளவிலான அகதிகளின் பெருக்கத்தை உருவாக்கிய இந்த ஏழ்மைக்கு எதிரான உண்மையான போராட்டமானது, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத் திட்டத்தையே முன்வைக்க கோருகிறது. ஐரோப்பிய மக்கள் எதுவித கட்டுப்பாடுமில்லாது அகதிகளிள் மற்றும் அரசியல் அகதிகளின் பக்கத்தில் தம்மை இணைத்துக்கொள்வதுடன், சர்வதேச, ஐரோப்பிய வங்கிகளினதும், நிறுவனங்களினதும் அதேபோன்று அந்நாடுகளின் அரசாங்கங்கள் போன்றவற்றின் ஆழுமைக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அம் மக்களுடன் இணைந்து கொள்ளல் வேண்டும்.

இன்று நாடற்றவர்களுக்கும், அரசியல் அகதிகள் போன்றோருக்கு எதிராக செயல் படுத்தப்படும் மிகவும் கொடுமையான நடவடிக்கைகள், மிக விரைவில் வேலையில்லாதோர், சமூக வசதிப் பணத்தில் வாழ்வோர், மேலும் மக்களில் பெரும்பாலானோருக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கான அபிவிருத்திகள் செவிலாவில் நடைபெற்ற மாநாட்டில் மிகவும் வெளிப்படையாகி உள்ளன.

இவ் அரசாங்கங்களைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டத்திற்கு முதல் நாள் நிகழ்ந்த நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தினால் ஸ்பெயினின் பொதுவாழ்க்கை ஸ்தம்பிதமடைந்தது. மட்றிட், பாசிலோனா போன்ற பெரிய நகரங்களில் மட்டும், ஒவ்வொரு இடத்திலும் அரை மில்லியன் மக்கள் என, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராகவும், அத்துடன் அஸ்னா அரசாங்கத்தால் சமூக வசதிகளுக்கு எதிராக இயற்றப்படும் சட்டங்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினர் ஊர்வலத்திற்கும், வேலைநிறுத்த போராட்டத்திற்கும் எதிராக தண்ணீர் அடித்தல் மற்றும் தடியடி பிரயோகங்களில் இறங்கினர். CNT எனும் தொழிற் சங்கத்தின் செய்திப்படி நூற்றுக்கும் அதிகமான மக்கள் மிக மோசமாக காயப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகிறது. மறு நாள் பூகோளஉற்பத்திக்கு எதிரானவர்கள் மேற்கொள்ள இருந்த ஊர்வலம் மறியல் போராட்ட வேலை நிறுத்தத்துடன் இணைவதை தடுப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் அரசாங்கம் மேற்கொண்டது.

இம்முறை செவிலாவில் ஐரோப்பியக் ஒன்றியத்தின் வர்க்க அடித்தளம் மிகவும் ஒரு கூர்மையான முறையில் வெளிப்படலாயிற்று. அது ஐரோப்பிய வங்கிகளும், நிறுவனங்களும் தமது நலன்களையும் மற்றும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அகதிகளுக்கு எதிராகவும் அதே சமயம் தமது சொந்த மக்களுக்கு எதிராகவும் ஒரு இணைந்த நடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுக்கின்றனர் என்பதாகும்.

Top of page