World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

சிலீவீஸீணீs "ஷ்ணீக்ஷீ ஷீஸீ tமீக்ஷீக்ஷீஷீக்ஷீவீsனீ"தீக்ஷீutணீறீ க்ஷீமீஜீக்ஷீமீssவீஷீஸீ ஷீயீ மீtலீஸீவீநீ uஸீக்ஷீமீst வீஸீ ஙீவீஸீழீவீணீஸீரீ

சீனாவின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" - க்சின் ஜியாங்கில் இனக்கிளர்ச்சியை கொடூரமாக ஒடுக்குதல்

By John Chan
8 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர்11 அமெரிக்கா மீதான தாக்குதலுக்குப் பின்னர், சீன அதிகாரத்துவமானது வளம் மிக்க மேற்கத்திய மாகாணமான க்சின்ஜியாங்கில் (Xinjiang) உய்குர்(Uighurs) இனக்குழுவிற்கு எதிரான கடும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாத்த்தின் மீதான போர்" என்பதை ஒரு சாக்குப்போக்காகப் பின்பற்றிக் கொண்டது. பெய்ஜிங் பிரிவினைவாதக் குழுக்கள் ஒசாமா பின்லேடனின் "பூகோள பயங்கரவாத வலைப் பின்னலுடன் " தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் சுதந்திரமான கிழக்கு துர்கிஸ்தானை அடைவதற்காக "வன்முறைத் தாக்குதலை" தொடுக்க ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெறுவதாகவும் குற்றம் சுமத்தியது.

செப்டம்பர் 11க்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர், க்சின்ஜியாங் பிராந்திய அரசாங்கத் தலைவர் அப்துலகத் அப்துரிக்சிட் சீனப்பத்திரிக்கையான டா குங் பாவோ-விடம் "எவ்வகையிலும் வன்முறை மற்றும் பயங்கரவாத சம்பவங்கள் மிகவும் அடிக்கடி நிகழாத இடம் க்சின்ஜயாங்" என்று கூறினார். அவர் இந்த மாகாணத்தில் ஹாங்காங் மூதலீட்டை ஊக்குவிக்க ஆயுதம் ஏந்திய உய்குர் பிரிவினைவாதிகளுக்கும் சீனப் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான தசாப்தகால ஆயுத மோதலைப் பற்றிய அச்சத்தைத் தணிக்க முயன்றார்.

எவ்வாறாயினும், பெய்ஜிங் செப்டம்பர் 11க்குப் பின்னர், பயங்கரவாதத்தின் மீதான அதன் சொந்த போரைத் தொடுப்பதில் நேரத்தை வீணாக்கவில்லை, ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுக்களை நசுக்குதல் மட்டுமல்லாமல் மாறாக உய்குர் தேசியவாதத்தினதும், இஸ்லாமிய மதத்தினதும் வன்முறையல்லாத ஏனைய வெளிப்பாடுகள் மீதும் நசுக்குதலை உருவாக்கியது. ஏனைய நாடுகள் போலவே , "பயங்கரவாத" அமைப்புடன் எந்த விதத்திலும் தொடர்புகொண்டிருப்பதாய் குற்றம் காணப்பட்டவர்கள் மீது தண்டனைகளை திடீர் என்று அதிகரிப்பதற்கு அது இச்சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொண்டது.

மார்ச்சில் சர்வதேச பொது மன்னிப்புசபையின் விரிவான அறிக்கை ஒன்று, கடந்த டிசம்பரில் பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய மாநாட்டை அடுத்து ஒடுக்குமறையானது பரவலாக்கப்பட்டது மற்றும் கடுமையாக்கப்பட்டது என்று ஆராய்ந்து கூறியது. அம்மாநாடானது "இனவாத பிரிவினை இயக்கங்கள், மதவாத தீவிரவாத சக்திகள் மற்றும் வன்முறைநாடும் பயங்கரவாத சக்திகள் ", அதேபோல பாலன் கோங்(Falun Gong) ஆகியவற்றை இனங்காட்டியது, இது 2002 ஆண்டிற்கான "அரசியல் மற்றும் சட்டரீதியான வேலையில்" நான்கு பிரதான முன்னுரிமையில் முதலாவதாகும். நிர்வாகத்தினர் மதத்தின் மீது புதிய கட்டுபாடுகளை விதித்தனர், மசூதிகளை மூடினர் மற்றும் முஸ்லிம் மதகுருக்களை நெருக்கமாய் கண்காணித்தலுக்கும் "அரசியல் கல்விக்கும்" உட்படுத்தினர்.

"அதிருப்தியாளர்களைத் தேடுவதற்கான அதேவிதமான பிரச்சாரம் 2002 ஆரம்பத்தில் கலாச்சார மற்றும் செய்தி ஊடக வட்டங்கள் உள்பட, XUAR-ல் சமுதாயத்தின் ஏனைய துறைகளுக்கும் நீடிக்கப்பட்டது.' பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டம் ' கவிதைகள், பாட்டுக்கள் , நூல்கள், சிறுவெளியீடுகள், கடிதங்கள் அல்லது இணையம் வழியாக கருத்துக்களை வெளிப்படுத்தல் உள்பட அனைத்து உள்ளுறை ரீதியான அதிருப்தி மற்றும் எதிர் நடவடிக்கைகளை பரந்த அளவிலும் மற்றும் சூழநின்று ஒடுக்குவதைத் தெளிவாக்குகிறது.

பெப்ரவரியில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்புக்குழு " 2002 ஜனவரியில் , பிராந்தியத் தலைவர் அபுலஹத் அப்துரிக்சித், 'கலை எனும் பெயரைப் பயன்படுத்தி பிரிவினைவாதத்துக்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்கும் அனைவரும்' களை எடுக்கப்படுவார்கள் என்று தெளிவாக்கியபொழுது, ஏனையோர் மத்தியில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், காட்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் உள்பட அனைவருக்கும் உத்தியோகரீதியான நிலைப்பாட்டை தத்துவார்த்த நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் ஐயத்திற்கு இடமற்ற வகையில் நீட்டிக்கப்பட்டது.

"ஜனவரி 1 அன்று க்சின்ஜியாங் மக்கள் அரங்கில் இசை நிகழ்ச்சியின் முடிவில் ஒரு வீடற்றவரால் படிக்கப்பட்ட கவிதையை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது. அதேமாதத்தில் , யீலி(Yili) ஆட்சி அரங்கத்தலைமையானது திருமணம், இறுதிச்சடங்கு, மற்றும் வீட்டுச் சடங்குகள் போன்றவற்றில் இடம்பெறும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு எதிராக தாக்குதலைத் தொடர்ந்தது. அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முன்னர் உய்குர் காரியாளர்கள் முன்அனுமதி பெறவேண்டி இருந்தது மற்றும் அதன்பின்னர் தங்களின் மேலிடத்திற்கு மீண்டும் அறிவிக்க வேண்டி இருந்தது." என விவரித்தது.

சர்வதேச பொது மன்னிப்புச்சபையின்படி, புலம் பெயர்ந்த உய்குர் வட்டாரங்கள் குறைந்த பட்சம் 2001 செப்டம்பர் மத்தியிலிருந்து 2001 முடிவு வரைக்கும் அரசியல் ஒடுக்குதலில் 3000 பேர் சிறைக் காவலில் வைக்கப்பட்டதாக மதிப்பிட்டன. அதேகாலகட்டத்தில் குறைந்த பட்சம் 20 பேர் அரசியல் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர் மற்றும் தூக்கிலிடப்பட்டனர்.

இந்த ஆண்டு தாக்குதல் தொடர்ந்தது. ஜூலை 15 அன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை க்சின்ஜியாங்கில் உள்ள உள்ளூர் உய்குர்களிடமிருந்து எடுத்த பல நேர்காணல்களை உள்ளடக்கியது. ஒரு வாடகை இயங்கியின் (டாக்ஸி) ஓட்டுநர் தனது பகுதியில் நிலவும் ஒடுக்குமுறைச் சூழலை விவரித்தார். " செப்டம்பர் 11க்குப் பின்னர், சூழ்நிலை மோசமாகிப் போனது. எங்கும் போலீசார் நிரம்பி இருந்தனர், மற்றும் அவர்கள் ஒவ்வொரு வாழ்விடத்திலும் ஒவ்வொரு மசூதியிலும் உளவு பார்ப்பதற்கு உய்குர்களுக்கு பணம் கொடுத்தனர். சில நேரங்களில் மக்கள் காணாமற்போனார்கள்" என அவர் குறிப்பிட்டார்.

ஒரு உய்குர் கடைவியாபாரி " இங்கு பலர் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் பயங்கரவாதிகள் . சிலர் பயங்கரவாதிகள் அல்லர் என எனக்குத் தெரியும் அறியாப் பையன் ஒருவன் பயங்கரவாதத்தின் பேரில் குற்றம் சாட்டி சீனர்களால் கொல்லப்பட்டான். நிலைமை பயங்கரமாக இருக்கிறது." என குறிப்பிட்டார்.

மேமாதம் இறுதியில் அசோசியேடட் செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில் , க்சின்ஜியாங்கில் மக்கள் ஆயுதப் போலீசாரின் உதவி டைரக்டர் ஜெனரல் அஜிஸ் எய்ட், அவரது பாதுகாப்புப் படைகள், " துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும்" குறைந்த பட்சம் ஆறு குழுக்களை "பயங்கரவாதத் தாக்குதல்களை செய்யும்" முன்னர் முறியடித்து விட்டதாகக் கூறியதன் மூலம் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த முயற்சித்தார். பெய்ஜிங் அதன் நசுக்குதலுக்கு ஆதரவை வென்றெடுக்கும் முகமாக "வன்முறை பயங்கரவாத கிரிமினல் வழக்குகளில்" ஆதாரம் என்று 1000 நிழற்படங்கள் மற்றும் 500 பொருட்கள் கொண்ட பகிரங்க கண்காட்சியை நடத்தி இருக்கிறது.

சர்வதேச விமர்சனம்

அஜிஸ் எய்ட் கூற்றுக்கள் க்சின்ஜியாங்கில் சீனாவின் நடவடிக்கைகளைப் பற்றிய சர்வதேச விமர்சனத்தை எதிர்கொள்ளவும் கூட கூறப்பட்டது. ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பினையும் மற்றும் சீனாவின் மேற்கு எல்லைகளில் உள்ள மத்திய ஆசிய குடியரசுகள் பலவற்றில் அமெரிக்க இராணுவப் படைகள் நிலைகொண்டிருப்பதை அடுத்து, க்சின்ஜியாங்கில் தான் நேரடியாகத் தலையிடுவதற்கு உய்குர் பிரிவினைவாதத்தை அமெரிக்கா தனக்கு சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என்று குறிப்பாக பெய்ஜிங் கவலை கொண்டிருக்கிறது. செப்டம்பர் 11 க்குப் பிறகு சீனா ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அதன் இராணுவப் படைகளை நிறுத்தி இருக்கிறது.

உண்மையில் பெரும்பாலான விமர்சனம் முற்றிலும் போலி நடிப்புக் கொண்ட ஏமாற்றாகும். "பயங்கரவாதம் மீதான போர்" என்பதை அதன் சொந்தத் தேவைகளுக்காய் பெய்ஜிங் சுரண்டிக் கொள்ளும் விதங்களை சுட்டிக்காட்டும் அதேவேளை, அதே செய்தி ஊடகம், அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு மற்றும் "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடல்" எனும் பெயரில் அமெரிக்காவில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அதன் அத்துமீறலுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். புஷ் நிர்வாகத்தைப் பொருத்தமட்டில், உய்குர்களை நடத்தும்விதம் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களை முன்னெடுப்பதற்காக சீனாவைத் தனிமைப்படுத்த சுரண்டப்படும் இன்னொரு மனித உரிமைகள் பற்றிய விஷயமாகும்.

புஷ் நிர்வாகத்தின் கொள்கையின் இரட்டை இயல்பு, ஆப்கானிஸ்தானில் பிடிக்கப்பட்ட உய்குர்களை ஒப்படைப்பதற்கான பெய்ஜிங்கின் கோரிக்கைக்கு பதிலளிக்க வரும்பொழுது அபத்தமாகிப் போனது. ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளைப் போலவே, வாஷிங்டனானது கியூபாவில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை குற்றம் சுமத்தப்பட்டு மற்றும் குற்றவாளி என்று கண்டு ஒப்படைக்கப்படுவார்களா என்பது பற்றி அக்கறைகளை வெளிப்படுத்தியது. எவ்வாறாயினும், பெய்ஜிங்கானது வாஷிங்டன் போல ஜனநாயக உரிமைகள் பற்றியதில் அக்கறை எதுவும் அற்றதாக மற்றும் மரண தண்டனை உட்பட, கடுமையான தண்டனையை அளிப்பதில் விருப்புடையதாக இருக்கிறது.

கடந்த டிசம்பர் முதல் திகதி அன்று சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் உய்குர்களை தண்டனை கொடுப்பதற்காக சீனாவுக்கு அனுப்புதற்கு கேட்ட பொழுது, வாஷிங்டன், தான் சீனாவிலிருந்து "பயங்கரவாதம் தொடர்பாக வேறுபட்ட விளக்கத்தை" கொண்டிருப்பதாகக் கூறியதன் மூலம் வேண்டுகோளை மறுத்தது. அமெரிக்க அதிகாரிகள் "வேறுபட்ட விளக்கத்தை" உச்சரிக்காத அதேவைளை, சீனா அனைத்து உய்குர் தேசியவாதிகளையும் "பயங்கரவாதிகள்" என முத்திரை குத்துகிறது என்று தெளிவாகக் குறித்தனர். அதன் விளைவாக, குற்றச்சாட்டு எதுவுமின்றி உய்குர்களைப் பிடித்து வைத்திருப்பதை நியாயப்படுத்தும் பொருட்டு , அமெரிக்கா உய்குர் சிறையாளிகள் "பயங்கரவாதிகளாக" இருக்கலாம் என்று கருதுகிறது என்றது. ஆனால் சீனாவின் தொடர்ந்த வேண்டுதல்களுக்கு விடையளிக்க வரும்போது அதே கைதிகள் " தேசியவாதிகளாக", சாத்தியமானால் உய்குர் விடுதலைக்கான போராளிகளாக ஆகின்றனர். ஜூனில் குறைந்த பட்சம் 1000 உய்குர்கள் ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் சேர்ந்து சண்டையிட்டிருக்கின்றனர் மற்றும் 300 பேர் அமெரிக்கப் படைகளால் சிறைப்பிடிக்க்ப பட்டிருக்கின்றனர் என்று க்சின்ஜியாங் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வாங் லிகுவான் கூறினார்.

சீனாவிற்கு உள்ளும் வெளியிலும் ஆயுதம் ஏந்திய உய்குர் குழுக்கள் தொடர்ச்சியற்ற தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அண்மையது ஜூன் 29 அன்று கிர்கிஸ்தான்(Kyrgyzstan) தூதரகத்தில் சீன தூதரகத்தில் செயலாளர் துப்பாக்கி ஏந்திய இருவரால் கொல்லப்பட்டதாகும். கிர்கிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின்படி, இப்படுகொலை தீவிரவாத உய்குர் பிரிவினைவாதிகள் தொடர்புடையதாக இருக்கலாம். சீன அரசாங்கம் உடனடியாக இப்படுகொலையை " மோசமான செயல் " என்று கண்டித்தது மற்றும் கிர்கிஸ்தானுக்கு புலனாய்வுக் குழு ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. உய்குர் பிரிவினைவாதிகள் கலாச்சாரம், மொழி மற்றும் மத ரீதியாக மத்திய ஆசியாவுடன் நன்கு ஒருமைப்பாடு உடையவர்களாக உள்ளதுடன், பல்வேறு குடியரசுகளில் வாழ்வதுடன் துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.

"கிழக்கு துர்க்கேஸ்தான் பயங்கரவாதத்தின்" மூலகாரணங்கள்

க்சின்ஜியாங்கில் பெய்ஜிங்கின் கொடூரமான ஒடுக்குமுறை உய்குர்கள் போன்ற தேசிய சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக அபிலாஷைகள் பால் அதன் அக்கறையிலிருந்தல்லாது, மத்திய ஆசியாவில் மூலோபாய ரீதியாக நிலைகொண்டிருக்கும் மற்றும் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களின் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் இந்த பிராந்தியத்தின் மீது பலமாய் பிடியைத் தக்கவைக்கும் அதன் தீர்மானத்திலிருந்து ஊற்றெடுக்கிறது. கிழக்கில் சீனாவின் தொழில்துறைப் பகுதிக்கு மத்திய ஆசிய குடியரசுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை இணைக்கும் சீனாவின் குழாய்ப்பாதை திட்டங்களுக்கு இந்த மாகாணம் மையமாக இருக்கிறது.

க்சின்ஜியாங் சீனாவுடனான வரலாற்றுத் தொடர்பினைக் கொண்டிருந்த போதிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியின் பெரும்பாலான பகுதி போட்டி யுத்த பிரபுக்கள் மற்றும் ஏனைய படைகளால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தது. கோமிண்டாங் 1911 தேசிய புரட்சிக்கு பின்னர் இந்தப் பிராந்தியத்தின் மீது அதன் கட்டுப்பாட்டை நிலைநாட்டவில்லை மற்றும் உள்ளூர் துர்க்கிக் செல்வந்தத் தட்டுக்கள் போருக்கு இடையிலான காலகட்டத்தின் பொழுது சுதந்திர கிழக்கு துர்க்கேஸ்தான் இஸ்லாமிய குடியரசை இருமுறை அறிவித்தனர். 1944ல் கடந்த நிகழ்ச்சியில், ஸ்டாலின் இந்த "சுதந்திர அரசை" தாங்கிஅரசாக(buffer state ) ஆதரித்துடன் வரையறைக்குட்பட்ட உதவிகளைச் செய்தார்.

1949ல் மாவோசேதுங்கின் விவசாய இராணுவங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பொழுது, க்சின்ஜியாங் "தேசிய சுயாட்சி" பிரதேசமாக ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் திபெத்தைப் போல , பெய்ஜிங் ஸ்டாலினிச ஆட்சியானது இப்பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார பிற்போக்குத்தன்மையை வெற்றிகொள்ளத் தவறியது மற்றும் உள்ளூர் உணர்வுகளுக்கு வேண்டா வெறுப்புடன் நடந்துகொண்டு அப்பிராந்தியத்தின் வளங்களைச் சுரண்டியது. சீனாவின் பெரும்பான்மையான அணு ஆயுத சோதனைகள் இப்பிராந்தியத்தில்தான் நடத்தப்பட்டன.

கனிவளங்களைச் சுரண்டல் மற்றும் இப்பிராந்தியத்தை பருத்தி உற்பத்திக்காக திறந்துவிடல் இனக்குழு சீனர்களை உள்வர வைத்தது. அது இம்மாகாணத்தின் இன சமநிலையை திடீரென மாற்றியது மற்றும் உய்குர்களை இரண்டாம்தர குடிமக்களாகக் குறைத்தது.1949ல் க்சின்ஜியாங் 3.2 மில்லியன்கள் உய்குர்களையும் 140,000 சீனர்களையும் கொண்டிருந்தது: இப்பொழுது சீனர்கள் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராக உள்ளனர். கலாச்சார வேறுபாடுகளுக்கு இணங்கிப்போக முயற்சித்தல் வட்டார துர்க்கிக் மொழியில் கல்வி கற்பதைத் தடை செய்ய இடங்கொடுத்தது மற்றும் சீனமொழியில் "தேசிய கல்வி" திட்டத்தைத் திணித்தது.

இந்தப்பதட்டங்கள் இன்றும் தொடர்கின்றன. பெரும்பான்மை உய்குர்கள் இன்னும் கிராமப்புறங்களில் அல்லது நகரங்களின் மற்றும் மாநகர்களின் மிகவறுமை நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான சீன குடிபெயர்ந்தோர் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்ககங்களுக்கு சென்றிருக்கின்றனர் மற்றும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பெரும்பாலான வேலைகளை எடுத்திருக்கின்றனர். அத்தகைய சமூகப் பிளவு அவர்களிடையே குரோதத்தைப் பெருக்கி வருகிறது. உள்ளூர் சீனத் தொழிலாளி வாஷிங்டன் போஸ்டிடம் , "நீங்கள் அவர்களை மிகக் கவனமாகக் கண்கானிக்க வேண்டும். பெரும்பாலானோர் எங்களை வெறுக்கின்றார்கள், உங்களுக்குத் தெரியுமா" என்றார்.

1949 லிருந்து ஒவ்வொரு தசாப்தத்திலும் க்சின்ஜியாங்கில் இன முரண்பாடு, அமைதியின்மை மற்றும் ஊர்வலங்கள் நடைபெறுகிறது. உய்குர்களின் ஒடுக்கப்படும் மற்றும் வறுமை சூழ்நிலைகள் பெய்ஜிங்கை விமர்சிப்பதற்கு அமெரிக்காவில் உள்ள சீன எதிர்ப்பு குழுவால் நீண்டகாலமாக எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் சீனாவின் உதவியுடன் , 1980கள் முழுவதும் காபூலில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுப்பதற்கு வலதுசாரி முஜாஹைதீன் படைகளுக்கு ஆயுதம், நிதி மற்றும் பயிற்சி அளிக்க அதன் பெரும் CIA (சிஐஏ) நடவடிக்கை ஊடாக வாஷிங்டனானது மத்திய ஆசியா முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பெரிதும் ஊக்குவித்தது.

சோவியத் ஒன்றியத்தின் பொரிவு மற்றும் சுதந்திர மத்திய ஆசிய குடியரசுகளின் தோற்றம் 1990களில் ஆயுதம் ஏந்திய உய்குர்களுக்கு மேலும் தூண்டுதலைக் கொடுத்தது. மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உள்ள ஸ்டாலினிசம் "சோசலிசம்" எனும் பேரில் செய்த குற்றங்கள், உய்குர் சிறுபான்மையினரால் எதிர்கொள்ளப்படும் ஒடுக்குமுறை நிலைமைகளுக்கு ஒரு தீர்வாக பிரத்தியேக இன தீர்வுக்கு வக்காலத்து வாங்குவோரைப் பலப்படுத்தியது.

1990களின் மத்தியில் எதிர்ப்புக்கள் மற்றும் ஆயுத மோதல்கள் வெடித்தன. மிகவும் முக்கிய நிகழ்ச்சி 1997 பிப்ரவரியில் நடந்தது, அப்பொழுது குறைந்த பட்சம் 1000 உய்குர்கள் க்சின்ஜியாங்கின் இலி மாநகரத்தில் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் சீனப்பாதுகாப்புப் படையினர் அமைதியான சுதந்திர ஆதரவு ஊர்வலத்தை நசுக்கினர், அதில் குறைந்தபட்சம் 100 பேர்கள் உயிரிழந்தனர். ஒரு மாதம் கழித்து ,மாகாணத்தின் தலைநகர் உரும்குயி-ல் பிரிவினைவாதிகள் இரு பேருந்துகளில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தனர். அதேமாதம் , துருக்கியைத் தளமாகக் கொண்ட பிரிவினைவாத குழு பெய்ஜிங்கில் ஒரு பேருந்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு உரிமை கோரியது, அதில் 30 பேர் காயமடைந்தனர்.

அப்பொழுதிலிருந்து போலீஸ் நிலையங்கள் , இராணுவ நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இருந்து வருகின்றன. ஏப்பிரல் 1999ல், எடுத்துக்காட்டாக, உரும்குயி-க்கும்(Urumqi) ஷிகேழி-க்கும் (Shihezi) இடையிலான சாலையில் மக்கள் ஆயுத போலீஸ் வழித்துணைக் குழு ஒன்று தாக்கப்பட்டது மற்றும் அதில் 10 பேர்கள் கொல்லப்பட்டனர். 2000 ஆகஸ்டில் , ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உய்குர் போராளிகளால் பொஸ்காம் மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

பெய்ஜிங் போலீஸ் ஒடுக்குமுறையுடன் பதில் கொடுத்து வருவது மட்டுமல்லாமல் மத்திய ஆசியாவில் தளம் கொண்டிருக்கும் உய்குர் பிரிவினைவாதக் குழுக்களைத் தனிமைப்படுத்துவதிலும் முயற்சியைக் கொண்டிருக்கிறது. 1996ல் ஷாங்காய் ஐந்து எனும் ஒரு அமைப்பை ஏற்படுத்த சீனாவானது ரஷ்யாவுடன் ஒத்துழைத்தது, அதில் பல மத்திய ஆசிய குடியரசுகள் உள்ளடங்குவன. அவ்வமைப்பானது வளம் மிக்க இப்பிராந்தியத்தில் அமெரிக்காவும் மற்றைய வல்லரசுகளும் காலூன்றி ஆதாயம் அடைவதைத் தடுத்தல் உள்பட பல குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. அதேவேளை, சீனாவும் ரஷ்யாவும் அந்தக் கூட்டத்தை, மத்திய ஆசிய குடியரசுகள் "பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம்" ஆகியவற்றுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வழிமுறையாக பயன்படுத்தின.

பெய்ஜிங்கின் 1998 "கடும் தாக்குதல்" பிரச்சாரமானது, பிரதானமாக "பிரிவினைவாத சக்திகளுக்கு" எதிராக தொடுக்கப்பட்டது.அதில் 13,000க்கும் மேலானோர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 6,000 ஆயுதங்கள், 70,000 துப்பாக்கி ரவைகள், 80 டன்கள் வெடி மருந்துகள் மற்றும் 190,000 குண்டுகளுக்கான மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். பெய்ஜிங்கிலிருந்து வந்த கடும் அழுத்தத்தின் கீழ், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் அரசாங்கங்கள் உய்குர் அரசியல் கட்சிகளைக் கலைத்தனர் மற்றும் அவர்களின் செய்தித்தாள்களை வெளிவராது நிறுத்தினர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பானது இப்பிராந்தியம் முழுவதும் போலவே க்சின்ஜியாங்கில் சாதாரணமாய் பதட்டங்களைக் கூட்டியது . குறைந்த பட்சம் க்சின்ஜியாங்கில் செயலூக்கத்துடன் செயல்படும் சில ஆயும் ஏந்திய உய்குர்களுக்கு நடவடிக்கைகளுக்கான தளத்தை அமெரிக்க இராணுவம் அழித்திருக்கிறது என்பது கண்டு பெய்ஜிங் மகிழ்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், அதேநேரத்தில் , அதன் வாயிலில் அமெரிக்க இராணுவ தளங்களின் இழைகளின் விளைபயன்களைப் பற்றியும் க்சின்ஜியாங்கில் நேரடியாகத் தலையிடுவதற்கு வாஷிங்டன் உய்குர் பிரிவினைவாதத்தை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கான உள்ளுறை பற்றியும் சீனா தெளிவாகவே கவலை அடைந்திருக்கிறது.

எவ்வாறிருப்பினும், அமெரிக்க அச்சுறுத்தலுக்கு பெய்ஜிங்கின் ஒரே பதில் மேலும் கூடிய ஒடுக்குமுறை ஆகும். அதற்கு புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதம் மீதான போர்" சாக்குப்போக்கை வசதியாக அளித்திருக்கிறது.

Top of page