World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Raffarin's law-and-order programme: a contribution from a reader in France

ரஃபரனினது சட்டம்- ஒழுங்கு வேலைத்திட்டம்: பிரான்சில் இருந்து ஒரு வாசகரின் பங்களிப்பு

31 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

கீழ் தொடரும் கருத்துரை WSWS இற்கு பாரிஸ் நகரில் உள்ள ஒரு வாசகரான Serge Lefort இனால் வழங்கப்பட்டதாகும்.

ஜனாதிபதி ஜக் சிராக்கினது பிரதம மந்திரியான ஜோன் பியேர் ரஃப்ரன் (Jean-Pierre Raffarin) ஜூலை 3ம் திகதி பிரஞ்சுப் பாராளுமன்றத்திற்கு (National Assembly) தனது பொதுக் கொள்கை அறிக்கையை வழங்கினார். இவ் உரை பிரஞ்சுக் குடியரசிற்கு 2005 வரையிலான அரசியல் முன்னோக்கினை வரையறை செய்கின்றது. எனவே இது ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வலதுகள் வெற்றிபெற்ற பின்னர் விசேடமான முக்கியத்துவம் வாய்ந்த்த ஒன்றாகும்.

ரஃப்ரன் தனது காரியாளர்களுக்கு அவர்களது பாத்திரம் பற்றி ஞாபகப்படுத்துவதை தவறவிடவில்லை: "அரசின் தலைமை வழிகாட்டுவதற்கமைய பிரான்சினை வழிநடத்திச் செல்வது உங்கள் கைகளிலேயே இருக்கின்றது." என குறிப்பிட்டார்.[1] இதை வெளிப்படையாகக் கூறின்: ஜக் சிராக் தலைவன்(Boss), ரஃப்ரன் அவரது கட்டளைகளை நிறைவேற்றுபவர், "அரசின் தலைமை விரும்பும் சட்டங்கள்" எவையோ அவற்றிற்கு வாக்களிக்குமாறு காரியாளர்கள்(deputies) எதிர்பார்க்கப்படுகின்றனர். "ஜக் சிராக் தீவிரவாதத்திற்கு எதிரான பாதுகாவலன் மற்றும் குடியரசுவாதிகளை ஒருங்கிணைக்கும் ஈர்ப்பு சக்தி" எனக் கூறி, ரஃப்ரன் கட்டளைகளை சட்டபூர்வமாக்க தனது காரியாளர்களுக்கு (deputies) அவர் அறிவித்தல் வழங்கியுள்ளார். அதாவது; General Charles De Gaulle நெருக்கடி காலத்தில் உருவாக்கியதுபோல் பாராளுமன்ற விவாதம் என்பது (கட்டளைப்படி ஆளும்)மாற்றுவழி முறையாகும் என கூறுகின்றார். அப்படியான ஒரு பிற்புறமான பாராளுமன்றமாக வருவதற்கு இந்த புதிய ''திறந்த வெளி பாராளுமன்றம்'' ஒதுக்கப்பட்டுள்ளது.[3]

பாராளுமன்றத்தில் அவரது தொடக்க உரையில், ஜோன் பியேர் ரஃப்ரன் அபரிதமாகபடும்படியாக " ஒரு இறுக்கமான கால அட்டவணையினூடான, சில உறுதியான நடவடிக்கைகளை பிரேரித்தார்" ஆனால் அவரது திட்டமிட்ட உரை தொடர்பான ஆய்வுக் குறிப்பொன்று இது விடையத்திலிருந்து தொலைவிலிருக்கின்றது என கருத்துரைக்கின்றது. சட்டம் ஒழுங்கு[4], நீதித்துறை[5], பாதுகாப்பு நடவடிக்கைகள்[6], வியாபாரம்[7] மற்றும் சலுகைபடைத்தோருக்கான[8] வழங்களை அதிகரிப்பது ஆகியவை மட்டுமே புள்ளிவிபரங்களில் வெளிப்படும் நடவடிக்கைகளாகும். மற்றைய எல்லா வாக்குறுதிகளும் அரசினால் கட்டுப்படுத்த முடியாதபடி வளர்துவரும் பிரச்சனைகளான உற்பத்தியின் அதிகரிப்பின் ஊகத்தின் மீது அடித்தளமாக கொண்டவையாகும்.

பிரதம மந்திரியின் வேலைத்திட்டம் "அரசின் அதிகாரத்தினை" நிலைநிறுத்திக் கொள்வதற்கு சட்டம் ஒழுங்கு நடவடிக்கையினை அமுல்படுத்துவதுடன், வியாபாரங்களுக்கான நிதி வழங்கல் "எமது மூலோபாயத்தின் திறவுகோலாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இது ஆயிரக்கணக்கான இளம் மக்களை குறைந்தகூலியுடைய தற்காலிக வேலைகளை ஏற்றுக்கொள்ளுவதை நிர்ப்பந்திக்கின்றது. சட்டம் ஒழுங்கு என்பதை நோக்கின் அரசாங்கம் மிக நீண்டதுரம் செல்கின்றது. இது 13 வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகளை பரீட்சாத்த சிறைகூடங்களில் அடைப்பதற்கும்[9], 13-18 வயதிற்கு இடைப்பட்ட பிள்ளைகளை கட்டளையின்றி நேரடியாக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்கும் உரிமை வழங்குகின்றது.[10] அத்துடன் 10 வயதிலிருந்து பிள்ளைகளுக்கு "கல்வி தடை" வழங்கவும்கூட அதிகாரம் வழங்குகின்றது.

இதே நாளில் பாரிஸ் நகரில் வழக்கு விசாரணை ஒன்று தொற்றுநோய்ப்பட்ட இரத்தம் சம்பந்தப்பட்ட வழக்கினை சாட்சிய பற்றாக்குறை என பொதுவான முறையில் தள்ளுபடி செய்துள்ளது. மந்திரிகளின் ஆலோசகர்கள், மற்றும் உயர் அதிகாரத்துவத்தினர் மற்றும் டாக்டர்கள் ஆகியோர் AIDS வைரஸ் தொற்று உள்ள இரத்த விற்பனை விடயத்தினை மறைத்து, அதற்காக ஒருபோதும் தண்டனை வழங்கப்படப்போவதில்லை என்றனர். இதன்போது ஒரு இளைஞர் மாத்திரம் பொலிசாரினது அறிக்கையின் அடிப்படையில் மாத்திரம் தவறிழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இவ்வாறான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஆயிரகக்ணக்கான இளைஞர்களை இப்படியான ஒரு பாதையிலேயே பயணிக்க திணிக்கின்றது. இளைஞர்கள், அவர்கள் தவிர்த்துக்கொள்ளப்படும் முட்டுச்சந்தியை சென்றடையும் ஒரு கல்வி அமைப்பு முறையினால் பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்படுபவர்கள் அல்லது அடிமட்டமான ஒரு வேலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதேவேளை "எல்லா இலாபங்களையும் சுருட்டிக்கொள்ளும்", "இப்புதிய அரசர்களை" முதலாளித்துவ சமூகம் புகழ்ந்துரைப்பதுடன், மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக ஐயுறவிற்குள்ளான அல்லது நம்பப்படும் அரசியல்வாதிகளை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது.

1848 இல் பிரஞ்சு முதலாளித்துவவர்க்கத்தினர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொன்றுகுவித்தனர், நாடுகடத்தினர், சிறையிலிட்டனர். இது தனது விருப்பத்தைவிட சமூகத்தன்மையாக இருந்ததால் குடியரசினை கவிழ்த்து, லூயி-நெப்போலியன் பொனப்பாட்டிற்கு "ஒழுங்கை" மீள் ஸ்தாபிதம் செய்துகொள்ள முழுமையான அதிகாரங்களை வழங்கியது. 2002 இல் ஜக் சிராக் ஒளிபரப்ப மிகவும் உகந்ததாக தோன்றிய அரச மற்றம் சுயாதீன தொலைக்காட்சிகளினது அறிக்கைகளை முற்றாக தனக்கு சுரண்டிக்கொண்டார். தற்போது இடதுகளின் கூட்டின் உதவியுடன், பொதுமக்களின் நேர்முக வாக்களிப்பின் மூலம் வெற்றியடைந்துள்ளார். பொலீசுக்கு பிரேத்தியேக வளத்தினை அளிப்பதற்கும், ''அப்பாவிகளினது தகாத நடத்தையை'' கூடியமட்டத்தில் கட்டுப்படுத்தவும் விரைவுபடுத்திக் கொண்டுள்ளார்.

தேர்தலின் போது ''கயவன்'' என அழைக்கப்பட்டவர், குறிப்பாக நகரப்புற தொழிலாள வர்க்க இளைஞர்கள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக புலம்பெயர்ந்தோர் இளைஞர்களுக்கு திட்டமிட்டப்பட்ட ஒரு பொலீஸ் மற்றும் நீதித்துறை ஆயுதத்தை வழங்குவதற்கான ஒரு அடிபணியும் நாடாளுமன்றத்தின் அனுகூலத்தினை அவர் ஈட்டிக்கொண்டுள்ளார். முதலாளித்துவ சமுதாயத்தினால் புறந்தள்ளப்பட்டவர்களினையிட்ட பயத்தினை பயன்படுத்திய பின்னர், பாராளுமன்ற வலதுசாரிகள் ஒரு ஒழுங்கமைப்பு முறையினை உருவாக்குகின்றனர், இது அடிப்படையில் அதி வலதுசாரிகளின் வழியிலேயே செல்கின்றது.

சிராக்கிற்கும், அவரது சமூகக் கொள்கைள் மற்றும் தேர்தலின் சட்ட ஒழுங்கு பிரச்சாரத்திற்கான வெளிப்படையான தமது ஆதரவு மூலோபாயத்தின் காரணமாக உத்தியோக பூர்வ இடதுகள் (சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்) பேச்சளவிலான எதிர்ப்பினை குறைத்துள்ளதுடன், ரஃப்பரினின் சட்ட ஒழங்கு கொள்கை ''மிகவும் மீறியது'' என மறுக்கும் பெயரளவிலான விவாதத்துடன் தம்மை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளன.

எதிர்மாறாக, UDF (பிரெஞ்சு ஜனநாயகத்துக்கான ஐக்கியம்)இன் தலைவரான பிரான்சுவா பேரூ தான்(François Bayrou ) 5 வருடத்தில் வரவிருக்கும் நெருக்கடிகள் பற்றி வரையறுத்தார், ''உண்மையில்,' அல்ஜீரிய யுத்தத்தில் இருந்து எந்த ஒரு அரசாங்கமும், பெரும்பான்மையும், அதிகாரத்துவமும் 40 வருடங்களாக செய்யாதிருந்த கடுமையான பணியை நீங்கள் முகம்கொடுக்கிறீர்கள்'' என குறிப்பிட்டார். உள்நாட்டு யுத்தத்தின் பயமுறுத்தலை இங்கே இவர் சுருக்கமாக குறிப்பிடுகிறார்.

வெடிக்கும் நெருக்கடியிலிருந்து பயன்பெற்ற அனைவரும் கூட ''சமூக பிளவு'' ஆழமாகிக் கொண்டிருக்கிறது என்பதையிட்டு விழிப்புடன் இருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள், மறுபக்கத்தில் ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள். ணிஞிதி (ணிறீமீநீtக்ஷீவீநீவீtங பீமீ திக்ஷீணீஸீநீமீபிரான்சின் மின்சார நிறுவனம்[12]) இனை தனியார் மயப்படுத்தும் திட்டமும், அதேபோன்று பொதுத்துறை மற்றும் பிரேத்தியேகமாக போக்குவரத்துத் துறையின் வேலைநிறுத்த உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் திட்டமும் தொழிலாளர்களுக்கு எதிரான மேலதிக ஆத்திமூட்டல்களை எடுத்துக்காட்டுகின்றன.

தீர்மானகரமான பெரும்பான்மையைக் கொண்டிருந்தபோதும் இந்தக் கனவான்கள் அவர்களது அதிகாரத்தின் வலுவற்ற தன்மையை உணர்ந்துகொள்கிறார்கள் என்பதையே அரசாங்கத்தினுள் எழுந்த முரண்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றது. 1993 இல் RPR (குடியரசுக்கான கோலிச அணிதிரள்வு) இன் 257 பாராளுமன்ற அங்கத்தவர்களையும், UDF இன் 215 அங்கத்தவர்களையும் கொண்டிருந்த வலதுகள் பெரும்பான்மையாக இருந்தபோதும், அவர்களுக்குள் தீவிரமான பிளவு பட்டிருந்தனர். 1995 இல் எடுவார்ட் பலதூரின் (Edouard Balladur) தேர்தல் போட்டிக்கு பின்னர், வலதுகளின் தலைமையை எடுக்க அதனது அமைப்புவடிவத்துடன் UDF இற்கு பொருத்தமானதாக இல்லை என கோலிச சிராக் அச்சமைடைந்திருந்தார்.

எவ்வித புகழுமில்லாமல், 2002 இல் UMP (புதிதாக அமைக்கப்பட்ட, ஜனாதிபதித்துவ பெரும்பான்மைக்கான ஐக்கியம்) 369 பாராளமன்ற அங்கத்தவர்களை கொண்டிருந்த போதும் ஒரு எவ்வித அதிகாரமுமில்லாது இருப்பதுடன், கட்சிகளுக்கான நிதிச்சட்டத்தினால் வழங்கப்பட்ட 18 மில்லியன் ஈரோவை சொந்தமாக கஜானாவில் கொண்டிருக்கிறது. இந்த ''முறை'' டு கோல் வெறுத்த கட்சியின் அமைப்பு முறையின் சதித்திட்டங்கள் மட்டுமல்லாது, தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். UMP தலைவரான Alain Juppé ம எல்லோரினதும் முற்றான உடன்பாட்டினை கொண்டிருக்கவில்லை. RPR இன் தலைவராக இருக்கும் Michèle Alliot-Marie, UMP இன் வருங்காலத் தலைவர் அங்கத்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.[13]

அதி வலதுசாரிகளிடன் இருந்து மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பயமுறுத்தலிருந்து குடியரசினை பேணுவதற்காக மக்களின் நேரடி வாக்கின் மூலம் பெற்றுக்கொண்ட அதிகாரத்தினை இழந்துவிடுவோம் என்ற அதனது பயத்தினை வலதுகளின் கடுமையான சட்ட ஒழுங்கானது பிரதிபலிக்கிறது. லியோனல் ஜொஸ்பனால் தலைமை தாங்கப்பட்ட இடதுகளை சிராக்குடன் கூட்டாட்சி செய்வதற்கு அனுமதித்த 1997 பாராளுமன்ற கலைப்பு போன்ற ஒரு பலாத்கார அதிர்ச்சியில் இருந்து தாம் இன்னும் மீளவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். உண்மையிலே, இறுதியாக 26 வருடங்களாக ஒரே நோக்கத்தையே கொண்டிருக்கின்றனர். அதாவது, மத்தியவாதிகளினதும் மற்றும் தாராளவாதத்திகளினதும் பங்கினை இயன்றவரையில் குறைப்பதாகும்.

வலதுகளின் புதிய ஐக்கியத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மத்தியவாதிகள் இந்த திட்டத்திற்கு எதிரான வழிமுறைகளை வைத்திருக்கின்றனர். இரண்டு வலதுசாரி அமைப்புகளுக்கிடையில் அதிகாரத்தினை பகிர்ந்துகொள்வதானது முன்னாள் கோலிஸ்ட்டுகளின் நன்மைக்கு அவசியமானதாக இருக்கவில்லை என்பதை ரஃப்பரின் அரசாங்கத்தின் கூட்டு அம்பலப்படுத்துகிறது. வலதுசாரிகளை யார் கட்டுப்படுத்துவது என்பதில் RPR இக்கும் UDF இடையில் நடைபெறவிருக்கும் கொலைகாரத்தனமான சகோதர போராட்டத்தில் எதிர்வரும் வருடம் உண்மையில் தீர்க்ககரமானதாக இருக்கும்.

பிற்குறிப்பு:

[1]மே 5, 2002 ஜனாதிபதித் தேர்தலில் ஜாக் சிராக் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக அவர் ''பன்மை இடதுகள்'' மற்றும் ''தீவிர இடது'' களின் அணிதிரள்வில் இருந்து சுரண்டிக்கொண்டதுடன், லு பெனுக்கு எதிரான எழுச்சியில் ஆட்சிக்கு வந்தார். தம்மை தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் அனைத்து சீர்திருத்தவாதிகளின் நிபந்தனையற்ற அடிபணிவு எந்தவொரு தேர்தல் பிரச்சாரமும் இல்லாமல் அவரது வெற்றியை தீர்மானித்தது. இது 1848 இல் நெப்போலியன் பொனபாட்டிற்கு கிடைத்த பலனை ஒத்திருந்தது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் டிசம்பர் 2, 1851 இல் பேரரசை மீள் ஸ்தாபிப்பதற்கு சமூக குடியரசுக்கு எதிராக பொனபாட் ஒரு சதிப் புரட்சியை ஒழுங்கு படுத்தியதுடன், தொழிலாள வர்க்கத்தை கொடூரமான முறையில் ஒடுக்கினார். 1848 இன் ''கம்யூனிச'' பயத்தின் இடத்தினை 2002 இல் ''பாசிச'' பயம் பிடித்துக்கொண்டது.

[2] 1640 இல் சார்ல்ஸ் 1 ஆல்(Charles I) ஆங்கிலேய பாராளுமன்றம் கூட்டப்பட்டு, 1653 இல் குரோம்வெல் ஆல் கலைக்கப்பட்டதுடன், கடவுளின் பாதுகாப்பாளராய் ஆட்சி செய்த குரோம்வெல்லின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டுதடவை கூட்டப்பட்டது.

[3] ''போல்ஷிவிக் அபாயம்'' இற்கு எதிராக மத்தியவாதிகள் மற்றும் பழமைவாத வலதுகளின் கூட்டின் துணையுடன் 1919 இல் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றம் 1920 இன் மாபெரும் வேலை நிறுத்தத்தை கொடூரமான முறையில் ஒடுக்கியது.

[4] பொலீஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய காவற்படைகளுகாக 5 வருடங்களில் 13,500 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

[5] 5 வருடங்களில் கிட்டதட்ட 10 ஆயிரம் தொழில்கள் உருவாக்கப்பட்டது.

[6] வருடத்தின் முடிவுக்கு முன்னரே ஒரு புதிய இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

[7] ''தகைமை குறைந்த இளைஞர்களுக்கு'' வேலைவழங்கியதற்கு யூலை 1, 2002 இல் பெரும் நிறுவனங்களுக்காக வரிவிதிலக்களிக்கப்பட்டது.

[8] A வருமான வரியில் ஒரு 5 வீதக் குறைப்பு அடுத்த இலையுதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வரி செலுத்தும் பணக்காரர்களில் 10 வீதமானோர் இவ்வரிக்குறைப்பினால் மூன்றில் இரண்டளவில் பயனடைய உள்ளதாக முதலாளித்துவ ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

[9] இந்த நடவடிக்கை பொலீஸ் அதிகாரத்தை பலப்படுத்தும் அதேவேளை, நீதித்துறை அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது. இளம் குற்றவாளிகள் ''பாதாள உலக சட்டம்''(விபச்சாரம், போதைக் கடத்தல்) கற்றுக்கொள்ளவும், கடத்தல்காரர்களுடன் உறவினை அமைத்துக்கொள்ளும் ஒரு சிறைச் சமூகத்திற்கான நிபந்தனைகளை தற்காலிக தடுப்புக்காவல் உருவாக்கியுள்ளது.

[10] இந்த நடவடிக்கை குறிப்பாக வயதானவர்கள் தொடர்பாக நடைமுறையிலுள்ளதுடன், ''சிறுதிருட்டு மனப்பான்மை'' கொண்டிருப்பதாக பொலீஸ் சந்தேகிக்கும் இளைஞர்களின் தந்தையர்கள் வேலையற்றவர்கள் என்ற சாட்டின் கீழ் அவ் இளைஞர்களுக்கு எதிரானதுடன்,அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாதுகாக்க எந்த சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் பொலீசின் குற்றச்சாட்டிற்கு சாதகமானதாக இருக்கிறது.

[11] ''கல்வி மையம்'' என நேர்த்தியாக பிரதமர் அழைப்பது(borstals/reform schools- maisons de correction) சீர்திருத்தப் பள்ளிகளாகும். இந்தப் பாடசலைகள் அனைத்தும் அவைகளது தகமையற்ற காரணத்தால் முன்ரே அழிக்கப்படிருந்தன. சாதரண சிறையில் சிறுபிராயத்தினருக்கான பிரிவில் இளைஞர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கே அவர்கள் சிறைவாழ்க்கையின் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

[12] அரச உடமை மின்சார நிறுவனம். தண்ணீர் சேவை தனியார்மயப்படுத்தலுக்குப் பின்னர், தனியார்த் துறையால் கட்டுப்படுத்தப்படும் ஒரு புதிய கட்டத்தில் மின்சாரத்துறையும் இருந்து வருகிறது.

[13] François Fillon இனால் தலைமை தாங்கப்படும் UEM (இயக்கத்தில் ஐக்கியம்-unity in movement) இன் தோல்வியை, வலதுசாரிகளுக்கான (கோலிஸ்ட், மத்தியவாதிகள், ''சுதந்திர சந்தை'' தாராளவாதிகள்) தனியொரு கட்சியை உருவாக்குவதே ஜாக் சிராக்கின் நோக்கமாகும். 2003 இன் வசந்தகாலத்தில் தான் Alain Juppé தலைவராகக் கொண்டு ஒரு கட்சியாக UMP வரவிருக்கிறது.

See Also:

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் 2002 (முழு உள்ளடக்கம்)

பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தல் 2002 (முழு உள்ளடக்கம்)

Top of page