World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

CNN documentary on Mazar-i-Sharif prison revolt: film footage documents US war crimes

மஜார்-இ-ஷெரிப் சிறைக் கிளர்ச்சி பற்றிய சி.என்.என் ஆவணப்படம்: அமெரிக்க போர்க்குற்றங்களின் படச்சுருள் ஆவணங்கள்

By Kate Randall
17 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

"போரின் இல்லம்: மஜார்-இ-ஷெரிப்பில் எழுச்சி," ஆகஸ்டு 3 அன்று சி.என்.என்-ல், கடந்த நவம்பரில் வடக்கு ஆப்கானிஸ்தானில் குவாலா- இ- ஜாங்கி சிறையில் நடந்த சம்பவங்களின் ஆவணங்களை ஒளிபரப்பியது. ஒளிபரப்பாகிய குறும்படம் ஜேர்மன், அமெரிக்கன் மற்றும் ஏனைய திரைப்பட படப்பிடிப்பாளர்களால் படம்பிடிக்கப்பட்டது, அதில் பெரும்பாலானவை அமெரிக்க பார்வையாளர்களால் ஒருபோதும் பார்க்கப்பட்டிருக்கவில்லை, அவர்களின் முடிவுரையாக, சம்பவங்களின் நிகழ்ச்சிநிரல் சான்றுகள், குறைந்த பட்சம் சிறைப்பிடிக்கப்பட்ட 400 தலிபான் படைவீரர்கள் இறந்ததை விட்டுச்செல்லும்.

துண்டுதுண்டாகச் சேர்த்து ஒன்றாக்கப்பட்ட, ஆவணப்படத்திலிருந்த காட்சிகள் சர்வதேச விதமுறைகள் மற்றும் ஜெனிவா விதி முறைகளை நேரடியாக மீறலில் போர்க்குற்றங்களுக்காக அமெரிக்க இராணுவத்தையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுதற்கு சேவை செய்கிறது. கடந்த ஆண்டு மஜார்-இ-ஷெரிப்பில் அம்பலமானது, அமெரிக்கப் படைகளால் தலைமை தாங்கப்பட்டு மற்றும் ஒத்திசைக்கப்பட்ட, படுகொலையாக மட்டுமே விவரிக்க முடிகிறதை, சி.என்.என் ஆவணப்படம் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது.

நிகழ்ச்சியின் முடிவின் அருகே மிகவும் மனத் துயருண்டாக்கும் படிமங்கள் சில, அமெரிக்க விமானத் தாக்குதலால் கோட்டை மீது குண்டுபோடப்பட்டதாக, சிறை முற்றுகையின் இறுதி இரவு பற்றியதாகும். அந்த இரவு, போர்விமானங்கள் வளாகத்தில் 2000 பவுண்டு எடையுள்ள குண்டுகளைப் போட்டன. AC-130 பீரங்கி பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள், நிமிடத்திற்கு 1800 சுற்றுக்கள் சுட்டுக் கொண்டிருக்க, அதேபோல டாங்கிகளும் அமெரிக்கப் படைகளால் ஆணையிடப்பட்டன. அடுத்த நாள், --இறந்த உடல்கள் மற்றும் எங்கும் சிதறிக்கிடக்கும் உடற் பகுதிகளுடன், படுகொலையின் பயங்கரமான ஒரு காட்சியை--நேரில் பார்த்தோர் விவரிக்கின்றனர் மற்றும் கமராக்கள் பதிவு செய்கின்றன.

"போரின் இல்லத்தில்" படமாக்கிக் காட்டப்பட்ட இந்த இறுதித் தாக்குதலுக்கு வழி அமைத்த சம்பவங்கள், இந்தப் படுகொலையானது அமெரிக்க மற்றும் வடக்குக் கூட்டணி படைகளின் தற்காப்பு பதில் நடவடிக்கையாக எந்த வழியிலும் இருக்கவில்லை, மாறாக அது காட்சியில் புஷ் நிர்வாகத்தின் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் உயர் மட்டங்களின் அங்கீகாரத்துடன், சிறப்புப் படைகள் மற்றும் சி.ஐ.ஏ இயக்கிகளால் தூண்டிவிடப்பட்டது மற்றும் ஒத்திசைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

நிகழ்ச்சி நிரலின் ஆரம்பத்தில் வரும் படச்சுருள் மஜார் அருகே வடக்குக் கூட்டணியிடம் தலிபான் படைகள் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தையின் பொழுது உஸ்பெக் யுத்தப் பிரபு ஜெனரல் ரஷித் டோஸ்தும் மற்றும் அவரது படைகளைக் காட்டுகிறது. அக்கறை காட்டிக்கொண்டு, கண்ணாடிகள் மற்றும் கழுத்துத் துண்டுகளை அணிந்துகொண்டு, பல சி.ஐ.ஏ முகவர்கள் அவருடன் உடன் இருந்தனர். டோஸ்தும் பிடிபட்ட ஆப்கானியர்கள் சரணடைந்த பின்னர் வீட்டுக்குப் போக அனுமதிக்கப்படுவர், மற்றும் வெளிநாட்டு தலிபான்கள் ஐ.நா விடம் ஒப்படைக்கப்படுவர் என்பதைக் குறிகாட்டிக் கொண்டிருந்த அதேவேளை, இந்தக் கருத்து "அமெரிக்கர்களின் முகத்தில் அறைந்தாற் போன்று" கருதப்பட்டது என்பதை நிகழ்ச்சி வர்ணனையாளர் குறிப்பிட்டார். சரணடைவு பேச்சுவார்த்தைகளில் சி.ஐ.ஏ முகவர்கள் இருப்பது குறிப்பாகச்சுட்டுவது அத்தகைய "முகத்தில் அறை" விழாமல் இருப்பதை அவர்கள் பார்ப்பதற்கு, அந்தக் காட்சியில் இருந்தனர் என்பதாகும்.

மஜார்-இ-ஷெரிப் எழுச்சிக்்கு முன்நிகழ்வாய் அமைந்த ஒரு வாரகால முற்றுகையின்பொழுது அமெரிக்க பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் பிடிபட்ட அனைத்து வெளிநாட்டு தலிபான்களையும் சிறையிடுவதற்கோ அல்லது கொல்வதற்கோ திரும்பத் திரும்ப அழைப்பு விடும் அறிக்கைகள் நன்கு பத்திரப்படுத்தியது. ஜெனிவா விதிமுறைகளுக்கு நேரடி மீறலாக --இனம், தேசம்சார்தல் மற்றும் மதம் அடிப்படையில் வேறுபடுத்தலை வெளிப்படையாகத் தடுக்கிறது--வெளிநாட்டு தலிபான்கள் அனைவரும் முறையே குவாலா-இ-ஜாங்கி சிறைக்கு மாற்றப்பட்டனர்.

சட்டமுறைப்படி மிகக் குற்றம்சாட்டும் படச்சுருள்களில் சில, கைதிகள் கோட்டைக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் நடத்தப்பட்டமை சம்பந்தமானது. நிகழ்ச்சிநிரலானது அவர்களது கைகள் பின்புறம் கட்டப்பட்டு குழுக்களாக சிறையின் சுற்றக்கட்டு வெளியிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைக் காட்டியது, அங்கு அவர்கள் சி.ஐ.ஏ முகவர் ஜோனி மைக்கேல் ஸ்பான் மற்றும் "டேவ்" என்று குறிக்கப்படும் மற்றொரு முகவரால் விசாரணை செய்யப்பட்டனர். வண்ணனையாளர் சிறையாளிகள் மத்தியில் பயங்கரவாத "தலைவர்களை" தனிமைப்படுத்த அமெரிக்க இயக்கிகள் முயன்று கொண்டிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இரண்டு சி.ஐ.ஏ ஆட்களும் சிறையாளிகள் மத்தியில் தத்துநடை நடந்து கொண்டு,அவர்களின் முகத்தில் ஆத்திரமூட்டும் வகையில் குரைத்தனர் "நீ பயங்கரவாதி" மற்றும், "நீ மக்களைக் கொல்வதற்காக ஆப்கானிஸ்தான் வந்தாய், இல்லையா? "தங்களின் சரணடைவின் போது தாங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவோம் என நம்பிக்கைக்கு விடப்பட்டிருந்த - சிறைக்கைதிகள் இப்பொழுது இரு அமெரிக்க கொடுமைப்படுத்தி அடக்குபவர்களால் மோதப்பட்டனர் மற்றும் சரியான காரணத்துடன் அவர்களின் உயிருக்கு அஞ்சினர். சி.என்.என் பொது பத்திரிக்கையாளர் றொபர்ட் பெல்ட்டன் குறிப்பிட்டார்: "இந்த சிறைக் கைதிகள் எங்கும் போகமாட்டார்கள் என்பதில் அது ஆழ்ந்து பதிவுற ஆரம்பித்தது. அமெரிக்கர்கள் அவர்களை உளவறிவதற்காகப் பயன்படுத்த விரும்புகின்றனர்."

டைம் இதழிலிருந்து அலெக்ஸ் பெர்ரி இந்த விஷயத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்: "அச்சுறுத்தல்கள் தலிபானுக்கு விடப்பட்டிருந்தன மற்றும் அது மிகவும் எளிதில் நம்பத்தக்கதாக இருக்கக்கூடியமை கிளர்ச்சியை அமைத்துக் கொடுத்திருக்கக் கூடும். நீங்கள் மக்களிடம் அவர்கள் அனைவரும் சாகப்போகிறார்கள் என்கிறீர்கள், பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ விடம் பேசுகின்றனர் மற்றும் அது உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் இவ்வாறாக டோஸ்தும் கூறியவற்றை முற்றிலும் கீழறுக்கின்றது."

சூழ்நிலையானது விரைவில் முடிச்சவிழ்கிறது. விஷயத்தைக் கூறுபவர் "கலகம் நடந்து கொண்டிருந்தது" மற்றும் தலிபான் கைதிகள் கோட்டையில் இருந்த பிரதான ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி இருக்கின்றனர். ஒரு ஐேர்மன் செய்திக் குழு "டேவ்", அவரது கிளாஷ்னிக்கோவ் மற்றும் பிஸ்டலுடன் சுற்று வெளியிடத்திலிருந்து, கோட்டையின் இன்னொரு பகுதிக்கு வந்து சேருமாப்போல் ஓடிக் கொண்டிருந்தார். அவர் கைதிகள் ஸ்பான் மேல்விழுந்து அமுக்கினர் மற்றும் அவர் இறந்து விட்டதாக தான் நம்புவதாகக் கூறினார் என்று அவர் செய்தி அறிவித்தார். "டேவ்" தான் நான்கு கைதிகளை சுட்டுக் கொன்றதாகக் கூறினார்,மற்றும் அவர் ஸ்பான் இருவரைக் கொன்றதாக தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். ஐயத்திற்கிடமற்ற வகையில் ஆடிப்போயிருந்த, அவர் அவரது இடுப்புப் பட்டியின் கீழ் விரைவாய் பிஸ்டலை வைக்க பதட்டத்துடன் முயற்சித்தார். பின்னர் அவர் தாஷ்கெண்ட், உஸ்பெக்கிஸ்தான் ஆகியவற்றில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ஜேமன் பணியாளரின் செயற்கைக்கோள் தொலைபேசியைப் பயன்படுத்தினார் விமானநிலையத்திற்கு திரும்பத்திரும்ப தொலைபேசி அழைப்பு விடுத்தார்.

இந்தக் கட்டத்தில் "டேவ்" பொறுப்பாளராக இருந்தார், மற்றும் "இது போவதற்கான நேரம்" என்று அவர்களிடம் கூறினார், என்று கூறினார். "டேவ்", படப்பிடிப்புக் குழு மற்றும் வடக்குக் கூட்டணி படைகள் தலிபான் துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் கோட்டையிலிருந்து வெளியேறும் வழியைக் கண்டனர் மற்றும் அவர்களுக்காகக் காத்திருந்த காரைக் கண்டனர். காட்சி விவரிப்பாளர்," நேசநாட்டு மற்றும் அமெரிக்க துணைப்படைப் பிரிவுகள் மற்றும் சில சிறப்புப் படைப் பிரிவினர்" பின்னர் காட்சிக்கு வந்துசேர ஆரம்பித்தனர் என்றார். கோட்டை மீதும் அதன் சிறைப்பிடிப்பாளர்கள் மீதும் கொடூரமான தாக்குதலுக்கு மேடை அமைக்கப்பட்டது மற்றும் அது மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று விவரிப்பாளர் செய்தி அறிவித்தார். அவர்கள் மத்தியில் ஆயத்தமாக இருந்தவர்கள் பிரிட்டீஷ் சிறப்பு விமானப்படை கொமாண்டோக்கள் மற்றும் 10வது மலைப் பிரிவு துருப்புக்கள் ஆகியோர் ஆவர். விமானத் தாக்குதல் ஆரம்பமானது.

முதலாவது குண்டுகளில் ஒன்று தவறான இலக்கைத் தாக்கியது, அது ஆறு ஆப்கானியர்களைக் கொன்றதாகவும் ஐந்து அமெரிக்கர்களைக் கொன்றதாகவும் அறிவிக்கப்படுகிறது. தங்களின் கூட்டாளிகள் குண்டு வீசுவது பற்றி மிகக் கருத்தில் கொண்டு அமெரிக்கர்கள் தோன்றவில்லை. ஆயத்தமாக இருந்த செய்தியாளர்களில் சிலர் இராணுவ பலத்தைக் காட்டுவது பற்றி அறிய ஆர்வமாக இருந்தனர். கமராமேன் டேமியன் டிகுல்ட்ரே (Damien Degueldre) குண்டு வெடிப்புக்களில் ஒன்றைப் பற்றி "அழகான வெடிப்பு..... கண்ணுக்கினிய மனப்பதிவாக" இருந்தது என்றார் மற்றும் பின்னர் வந்த கூற்று செய்தியாளர்கள் "சாகசத்துக்காக பார்த்துக் கொண்டிருந்தனர் - விஷயத்திற்காக பார்த்துக் கொண்டிருந்தனர். அது காட்டுத்தனமானது, காட்டுத்தனமான கதை ஆகும்." என்றது.

பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு ஒரு காரியம் பண்ண வேண்டும் என்று சிறப்புப் படைகள் விரும்பின, அதில் ஒருவர் கேட்டார்,"நிறையவே குளிரான விஷயங்களைச் செய்கிறோம் மற்றும் நாங்கள் முன்னர் ஒருபோதும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை - உங்களது ஒளிப்பேழையின் ஒரு படி (நகலை) எங்களுக்கு கிடைக்குமா?" ஆயினும், சிறப்புப் படைகளின் ஒரு உறுப்பினர் அவர்களை, "நீங்கள் என்ன செய்தாலும், இன்றிரவு கோட்டைக்குள் இருக்காதீர்கள்," என எச்சரித்தது பூமியை எரித்துக் கருக்கும் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதைக் குறிகாட்டியது.

பல சிறப்புப் படைவீரர்கள் அவர்கள் நடவடிக்கையை நடத்தும் பொழுது ஜேர்மன் படப்பிடிப்புக் குழு உறுப்பினர்கள் உடன் வர, ஒரு அமெரிக்க படைவீரர் அவர்களின் கமராக்களை மூடிவிடுமாறு கட்டளை இட்டார்-- "நான் நீ படம் பிடிப்பதை...... போகிறேன்" (கெட்டவார்த்தைகளில்- தூஷனத்தில்) என்றார் அவர், நடவடிக்கை படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி தெளிவாகவே பதட்டமடைந்தார். செய்தியாளர்களுள் ஒருவர் எதிர்த்துப் பதிலிறுத்தார்: "நீங்கள் அமெரிக்காவில் இல்லை. எங்களைப் போலவே நீங்கள் ஒரு விருந்தினர்." இறுதியில், அவர்கள் தொடர்ந்து படம் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர், அவர்கள் படம்பிடித்தது கோரமானது மற்றும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

ஒரு பத்திரிகையாளர் வடக்குக் கூட்டணிப் படையின் நடவடிக்கைகளை, அமெரிக்கர்களின் மேற்பார்வையின் கீழே, "குண்டுகள் மழைபெய்யும் அணுகுமுறை" யாக தெளிவாகவே இயங்குகிறது என்றார். பலர் கோட்டையின் மதிலுக்குச் சென்றனர் மற்றும் விமானத் தாக்குதலுக்குப் பின்னர் சிறைக்குள் எந்த தலிபான் கைதிகளும் இன்னும் உயிருடன் இருந்தால் அவர்களை படுகொலை செய்வதற்கு சிறைக்குள் சுடத் தொடங்கினர். அவர்கள் ஜன்னல்கள் வழியாக சுட்டனர். அவர்கள் கட்டிடத்திற்குள் கையெறி குண்டுகளைப் போட்டுவிட்டு பெரிய கேன்களில் திரவவாயுவை பாய்ச்சினர். இறுதியில், ஒரு கொள்கல வண்டி (Tanker) உள்ளே கொண்டு வரப்பட்டது மற்றும் சில இறுதி சூடுகள் சுடப்பட்டன.

வடக்குக் கூட்டணி துருப்புக்கள் குறிப்பாக கடுங்கொடிய நடத்தையை வெளிப்படுத்துகின்றன. ஒரு செய்தியாளர் தாங்கள், உயிரோடிருப்பதாகக் கண்ட தலிபான் கைதிகளின் தலையில் பாறைகளை வீசிக்கொண்டிருந்ததை எப்படிக் கண்டனர் என்பதை நினைவு கூர்கிறார். படச்சுருளானது படைவீரர்கள் தொடர்ந்து வளாகத்திற்குள் சுட்டுக் கொண்டிருந்தபோது தலிபானின் இறந்த உடல் மணல் மூட்டையைப்போல முண்டு கொடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.

அதே நேரத்தில், நுழைந்த அசோசியேட் செய்தி நிறுவன நிழற்படக்காரர், கைகள் பின்புறமாய் கழுத்தில் போடும் துண்டால் கட்டப்பட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாய்த் தோன்றிய 50 கைதிகளின் உடல்களைக் கண்டதாக அறிவித்தார். அவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கான ஆதாரத்தை வெளிப்படையாக அழிப்பதற்கு, வடக்குக் கூட்டணி படைவீரர்கள் அந்தத் துணியை கத்திகளைக் கொண்டும் கத்தரிக்கோல்களைக் கொண்டும் வெட்டிக்கொண்டு இருந்ததைக் கண்டனர். வாயிலில் முன்நிறுத்தப்பட்ட தலிபான் கைதிகளின் உடல்கள், ஒவ்வொன்றும் தனித்தனி துப்பாக்கி ரவையால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றிய ஏனைய செய்தி அறிக்கைகளும் அங்கு இருந்தன.

நவம்பர் 28 அன்று, புதன் கிழமை, ஜெனரல் டோஸ்தும் காட்சிக்கு திரும்பினார். அமெரிக்க மற்றும் வடக்குக் கூட்டணியினர் கைதிகளை வெளியேற்றுவதற்கான முயற்சியில் கோட்டைக்குள் குளிர் நீரைப் பாய்ச்சிய பொழுது, வெள்ளி அன்று முற்றுகை தொடர்ந்தது. அதிசயமாகத் தப்பியவர்கள் இறுதியில் வெளியேறி தங்களை. சனிக்கிழமை அன்று ஒப்படைத்தனர்.

தப்பிப் பிழைத்தவர்களுள் "அமெரிக்க தலிபான்" என்று அழைக்கப்படும் ஜோன் வாக்கர் லிண்டும் ஒருவர். அவரது சரணடைவிற்குப் பின்னர் உடனே படம்பிடிக்கப்பட்ட லிண்ட், தாக்குதலை விவரித்தார், அது தெளிவாகவே திசை திருப்பப்பட்ட மற்றும் வேதனை தரும் தாக்குதல் ஆகும். அவர் முற்றுகையின்போது தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் நடத்தப்பட்டவிதம் பற்றி விவரித்தார், "நேற்று விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளின் தாக்குதல்களுடன் எங்கள் மீது குண்டு போடப்பட்டது. அவர்கள் எங்கள் மீது எரிவாயுவை ஊற்றினர் மற்றும் எங்களைக் கொளுத்தினர்; அடிநில அறைக்குள் தண்ணீரை ஊற்றினர். எம்மில் ஒவ்வொருவரும் நாம் சகப்போகிறோம் என்பதை நம்பினர்."

இந்தப் புள்ளியில் ஆவணப்படம் சி.ஐ.ஏ முகவர் ஸ்பானின் லிண்ட் தொடர்பான விசாரித்தலை பின்னோக்கிக் காட்டியது, அவர் விசாரிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டு கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இருக்க வைக்கப்பட்டார். ஸ்பான் கூறினார்:" அவர் வாழ விரும்புகிறாரா அல்லது சாக விரும்புகிறாரா மற்றும் இங்கே சாக விரும்புகிறார என்பதை அவரே தீர்மானிக்க வேண்டியதிருக்கிறது என்பதுதான் பிரச்சினை. நான் அர்த்தப்படுத்துவதாவது, அவர் இங்கு சாக விரும்பவில்லை என்றால், அவர் இங்கு சாகப் போகிறார் காரணம் இதுதான்.... நாங்கள் அவரை விட்டுவிடப் போகிறோம் மற்றும் அவர் அவரது எஞ்சிய ஓ.. (கெட்ட வார்த்தையில்) குறுகிய வாழ்க்கை முழுதும் சிறையில் உட்காரப் போகிறார். அது அவரது முடிவு.

றொபர்ட் பெல்ட்டன், "ஒரு புதுமையான வழியில், அவர்கள் அவரை மரணிக்கச் செய்வதாய் அச்சுறுத்தலை விடுத்தனர்" என்று கூறினார். ஸ்பான் தொடர்ந்தார்: "எங்களிடம் பேச விரும்பும் நபர்களுக்கு மட்டுமே நாங்கள் உதவ முடியும். பல நபர்களுக்கும் உதவுவதற்கு நாங்கள் செஞ்சிலுவை சங்கத்தை வரவழைக்க மட்டும் முடியும்." ஜெனிவா விதிமுறைகளின் இன்னொரு அத்துமீறலில், லிண்ட் ஒத்துழைக்கவில்லை என்றால் மருத்துவ பராமரிப்பு நிறுத்தப்படும் என்று சி.ஐ.ஏ முகவர் குறிகாட்டினார்.

அடுத்து ஜோனிவாக்கர் லிண்ட் அமெரிக்காவில் உள்ள குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டிருக்கிறார் மற்றும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், மற்றும் மஜார்-இ-ஷெரிப் படுகொலையில் தப்பிப்பிழைத்தவர்களில் பெரும்பகுதியினர் கியூபா, குவாண்டானமோ குடாவில் உள்ள எக்ஸ்ரே முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர், என்று காட்சி விவரிப்பாளர் முடிவாய்க் கூறினார். இந்தக் கைதிகள், குற்றம் சாட்டப்படாமல்: மீண்டும் சர்வதேச சட்டங்களை அத்துமீறலில், காலவரையற்று வைக்கப்படுகின்றார்கள் என்ற உண்மை பற்றி ஒரு விளக்கமும் கூறப்படவில்லை.

அமெரிக்க நிர்வாகிகள் சம்பவங்களை படம்பிடிப்பதற்கும் செய்தி அறிவிப்பதற்கும் அனுமதித்தனர் ஏனென்றால் அது அமெரிக்க போர் முயற்சிக்கு உபயோககரமான பிரச்சாரத்தை, அமெரிக்கக் கொள்கையை சவால் செய்யும் கிளர்ச்சியாளர்களுக்கான புறநிலைப் படிப்பினையை, விளைவிக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர் என்ற ஒரு பதிவை "போரின் இல்லம்: மஜார்-இ -ஷெரிப்பில் கிளர்ச்சி" விட்டுச்செல்கிறது. இந்நிகழ்ச்சியானது இராணுவத் தாக்குதலின் காட்டுமிராண்டித்தனமான சக்தியை உண்மையில் விளக்கிக்காட்டும் வேளை,அதேநேரத்தில் அது அந்நடவடிக்கை அதன் கொமாண்டர்களால் நுட்பமாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் படம் வரைந்து காட்டுகிறது.

மிக முக்கியமாக, சம்பவங்கள் தொடர்பாக "சமநிலை பேணப்பட்ட" முன்வைப்பினை வழங்குதற்கான சி.என்.என்-ன் முயற்சிகள் இருப்பினும், அமெரிக்க இராணுவத்தின் மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகள் தெளிவாகக் காட்டப்படுகின்றன. கேமரா பொய் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் தீட்டிக் காட்டப்பட்ட நடவடிக்கைகள் , கடந்த நவம்பரில் மஜார்-இ- ஷெரிப்பில் இடம்பெற்றது ஒரு போர்க்குற்றம் என்பதை, மற்றும் இந்தப் படுகொலைக்கான பொறுப்பு அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் உயர் மட்டங்களில் தங்கி இருக்கிறது என்பதை மேலும் ஆதாரப்படுத்துகிறது.

மொழிபெயர்ப்பாளர், ஜாய்புல்லா குரேஷி (Jauibullah Qureshi) நிகழ்ச்சியின் முடிவில் சிறைக் கோட்டையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் மட்டத்தை மற்றும் அமெரிக்கர்களாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் ஒரு சார்பான தாக்குதல் குற்றமிழைக்கப்பட்டது பற்றி பேசினார்: "ஒரே ஒரு அமெரிக்கன் இங்கு கொல்லப்பட்டார், மைக் ஸ்பான்" அவர் கூறினார். "ஆனால் அவர்களில் (தலிபான்கள்) முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு கொல்லப்பட்டனர், முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள், மற்றும் நான் அவர்களில் பலரை என் கண்ணால் கண்டேன்."

See Also:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் யுத்தக் குற்றங்கள்: மஸார்- இ- ஷரீபில் நூற்றுக்கணக்கான யுத்தக் கைதிகள் கொலைசெய்யப்பட்டனர்

தலிபான் யுத்தக் கைதிகளைப் படுகொலை செய்த பின்னர்: மரணத்தின் முடை நாற்றமும் செய்தி ஊடகங்களின் மிகையான பொய்களும்

மெஸார்- இ- ஷாரீப் சிறையில் அமெரிக்க யுத்தக்குற்றம்: புதிய வீடியோ நாடா சாட்சி

Top of page