World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Behind the defeat of Georgia congresswoman: Republican right, Israel lobby, unite to silence criticism of "anti-terror" war

ஜோர்ஜியா காங்கிரஸ் பெண்மனியின் தோல்விக்குப் பின்னால்: "பயங்கரவாத-எதிர்ப்பு" போர் பற்றிய விமர்சனத்தை வாய்மூடப் பண்ணுவதற்காக வலதுசாரி குடியரசுக் கட்சியினர், இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டல் குழு ஐக்கியம்

By Patrick Martin and Barry Grey
28 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் நிலைப்பாட்டிலிருந்து, பதவியில் இருக்கும் ஜோர்ஜிய காங்கிரஸ் பெண்மனி சிந்தியா மாக்கின்னி (Cynthia McKinney) க்கும் அவரை ஆகஸ்டு 20 அன்று நடந்த ஜனநாயகக் கட்சியின் முதல்நிலைத் தேர்தலில் தோற்கடித்த முன்னாள் நீதிபதி டெனிஸ் மாஜெட்டுக்கும் (Denise Majette) இடையில் அடிப்படை வேறுபாடு இல்லை. இரு ஜனநாயகக் கட்சியினரும் இலாப அமைப்பைப் பாதுகாக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளே. இராணுவ வாதத்தின் வளர்ச்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீது உக்கிரமாகும் தாக்குதலுக்கு அக்கறையான மாற்றீடை ஒருவரும் வழங்கவில்லை.

உலக சோசலிச வலை தளம் மாக்கின்னியின் ஆதரவாளர் அல்ல, அவர் ஜெஸி ஜாக்சன் வகையின் ஜனநாயகக் கட்சியாளர். அவர் உத்தியோகபூர்வ அமெரிக்க அரசியலில் வலதுசாரி திருப்பத்திற்கு அவரது அரசியலை நடைமுறையில் அனுசரித்துக் கொள்ளும் அதேவேளை, இதுகாறும் உள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட சில விமர்சனங்களை குரல்கொடுப்பதால் அவர் அவரது பணியைச் செய்திருக்கிறார்.

இருப்பினும், பிரதிநிதிகள் சபையின் ஐந்து முறை பதவிவகித்த, மெக்கின்னிக்கு இடம் கொடுக்காததற்கான பின்புலம், தொழிலாள வர்க்கத்தின் சீரிய கவனத்திற்குரிய அரசியல் பிரச்சினைகளை எழுப்புகின்றன. அவரது தோல்வி பெரும்பாலும், தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையின் மெளனமான ஆசீர்வாதத்துடன், குடியரசுக் கட்சியினரின் வலதுசாரியினர் மற்றும் அமெரிக்க சியோனிச சக்திகளை, ஒன்றாய்க் கொண்டுவந்த கூட்டு இயக்கத்தின் உற்பத்திப்பொருளாக இருந்தது. மேற்குக்கரை மீதான இஸ்ரேலிய கொள்கையை எதிர்த்த அவரது பகிரங்க அறிக்கைகள் மற்றும் கடந்த செப்டம்பர் 11 சம்பவங்களில் புஷ் நிர்வாகத்தின் பாத்திரம் பற்றிக் கேள்வி எழுப்பும் அவரது அதிகமான அண்மைய குறிப்புக்களின் காரணமாக இந்த சக்திகள் ஜோர்ஜியா முதல்நிலைத் தேர்தலில் தலையிட்டனர் மற்றும் மாக்கின்னியை பிரதானமாய் இலக்கு வைத்தனர்.

உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர், ஏரியல் ஷெரோனின் இஸ்ரேலிய அரசாங்கம் புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" -இன் மிகவும் ஆர்வமுள்ள ஆதரவாளர்களுள் ஒருவராக ஆகியிருக்கிறது, ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளின் மீது அதனை ஒரு சாக்காகப் பயன்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் பகுதிகள், ஆப்கானிஸ்தானில் முழுமையாய் ஆதரித்து, ஈராக்கின் மீது புதிய தாக்குதலுக்கு அழுத்தம் கொடுத்து, மற்றும் பொதுவில் புஷ் நிர்வாகத்தை அதனது விமர்சகர்களுக்கு எதிராகப் பாதுகாத்து, அதையே செய்தன. இது அவர்களை கிறிஸ்த்தவ வலதுசாரிக் கட்சியினர் மற்றும் இனவாத மற்றும் செமிட்டிச விரோத சக்திகளுடன் தொடர்பு கொண்ட ஏனைய சக்திகள் உட்பட, குடியரசுக் கட்சியில் உள்ள அதிவலதுசாரி சக்திகளுடன் கூட்டுக்குள் கொண்டு வந்தது.

அதேசமயம் புஷ் நிர்வாகம் --அதன் வெளிவேடம் காட்டும் ஜனநாயகக் கட்சி எதிரணியினர் உதவியுடன்-- செப்டம்பர் 11 தக்குதல்கள் பற்றிய எந்தவிதமான பகிரங்க விசாரணையையும் தடுப்பதற்கு கடுமைதணியாது வேலை செய்திருக்கிறது. விமானக்-- குண்டு கடத்தலுக்கு முன்னர் மற்றும் பின்னர் இரு சம்பவத்திலும் அதன் சொந்த பாத்திரத்தை பகிரங்கமாக பொதுப்பார்வைக்கு வைத்தலின் விளைவுகளுக்கு வெள்ளைமாளிகை அஞ்சுகிறது என்பது நன்கு தெளிவானது.

இந்தக் காரணங்களுக்காக, புஷ் மற்றும் செப்டம்பர்11 பற்றி கூர்மையான கேள்விகளைக் கேட்பதுடன் பாலஸ்தீனிய ஆதரவு அறிக்கைகளும் சேர்ந்து -- மாக்கின்னி தேசிய அளவில் ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் தலையீட்டின் இலக்காக தனிமைப்படுத்தப்பட்டார். அவரது தோல்வியானது "பயங்கரவாதத்தின் மீதான போர்" மற்றும் செப்டம்பர் 11 சம்பந்தமான உத்தியோகரீதியிலான நிலைப்பாட்டை பகிரங்கமாக கேள்வி கேட்க நினைக்கும் மற்ற எந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும் புறநிலைரீதியான பாடமாக சேவை செய்வதை அர்த்தப்படுத்தியது.

மாக்கின்னி மேற்குக்கரை மற்றும் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் துயரத்திற்கு ஆதரவான அவரது பகிரங்க அறிக்கைகளுக்காக மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொதுவிவகாரக் குழுவால் (AIPAC) ஆரம்பத்தில் இலக்கு வைக்கப்பட்டார். மாக்கின்னி சர்வதேச உறவுகள் குழுவின் மனித உரிமைகள் துணைக்குழுவில் மூத்த ஜனநாயகக் கட்சிக்காரர் ஆவார் மற்றும் நவம்பரில் ஜனநாயகக் கட்சியினர் வென்று அவையைக் கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவரும் பட்சத்தில் அவர் அந்த சம்பவத்தில் முறைகாண் ஆயத்திற்கு தலைமை தாங்கி இருப்பார்.

செப்டம்பர்11 மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போரைத் தொடுத்ததற்குப் பின்னர், அத்துடன் புஷ்ஷின் உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் தொக்கி நிற்கும் அரபு விரோத இனவாதம் சேர்ந்து, AIPAC பதவியிலிருக்கும் பல கறுப்பு ஜனநாயகக் கட்சியினரை, முதல்நிலையில் அவர்களை சவால் செய்வோரை ஆதரிப்பதன் மூலம், அவர்களின் தோல்விக்காக இலக்கு வைக்கும் அரசியல் சூழலை செய்தல் சாத்தியம் என்று வெளிப்படையாகவே முடிவுக்கு வந்தது.

அத்தகைய முதலாவது பிரச்சாரம் அலபாமாவின் ஏழாவது காங்கிரஸ் மாவட்டத்தில் நீண்டகாலமாக காங்கிரஸ் உறுப்பினராக இருக்கும் ஏர்ல் ஹில்லியார்டுக்கு எதிரானதாக இருந்தது. அத்தொகுதி பேர்மிங்காம் மாநகரின் பெரும் பகுதி மற்றும் அதன் தென்பகுதியில் உள்ள கிராமப்புறப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கும். ஏ.ஐ.பி.ஏ.சி அர்ட்டுர் டேவிஸ் எனும் கறுப்பு முன்னாள் அரசு வழக்குரைஞருக்கு ஆதரவை அளித்தது. அவர் பதவியிலிருப்பவரை 1998 மற்றும் 2000ல் சவால் செய்திருந்தார், ஒரு போதும் அதிகமான பிரச்சாரப் பணத்தை அவர் திரட்டியதில்லை மற்றும் 34 சதவீதத்திற்கு மேல் ஒருபோதும் அவர் வென்றெடுத்ததில்லை.

சூழ்ச்சிமிக்க முதல்நிலை பிரச்சாரத்தின் பொழுது, தொலைக்காட்சி விளம்பரம், பயங்கரவாதத்தின் பாதுகாப்பாளராக ஹில்லியார்ட் இருந்தார் ஏனென்றால் 1997ல் லிபியாவுக்கு வர்த்தக விருந்துலா சென்றிருந்தார் என கருத்துரைத்தது. டேவிஸ் பதவியில் இருப்பவரை விட மிக அதிக பணத்தைத் திரட்டினார், 60-40 என்ற அளவில் செலவு செய்தார் மற்றும் ஜூனில் இறுதி வாக்கெடுப்பில் அந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டேவிஸின் நிதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானது அலபாமாவுக்கு வெளியிலிருந்து வந்தது, மற்றும் தனிநபர் பங்களிப்பில் பாதிக்கும் மேற்பட்டவை நியூயோர்க் மாநிலத்திலிருந்து வந்தன.

செப்டம்பர்11 பற்றிய குறிப்புக்கள் மீது வேட்டையாடல்

அப்போதைய கவர்னர் ஜெல் மில்லரால் நீதிபதிகள் குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்த, அட்லாண்டா புறநகர்ப் பகுதிகளில் உள்ளூர் நீதிபதியாக இருக்கும், டெனிஸ் மாஜெட் கடந்த ஜனவரியில் மாக்கின்னிக்கு எதிராக தன்னை வேட்பாளராக அறிவித்திருந்தார். ஏப்ரலில் பசிபிக்கா வானொலியுடனான நேர்காணலில் மாக்கின்னியின் குறிப்புக்கள் பத்திரிக்கை வேட்டையாடலின் கருப்பொருளாக ஆகும் வரைக்கும், டெனிஸ் மாஜெட்டின் பிரச்சாரமானது பெரிய இலக்கு வைத்த போதிய நிதி அளவு இல்லாமை என்ற வகையில் ஆரம்பத்தில் விலக்கப்பட்டிருந்தது.

நேர்காணல் மற்றும் அதனையடுத்து அவரது காங்கிரசனல் அலுவலகத்தால் விடுக்கப்பட்ட அறிக்கையில், மாக்கின்னி செப்டம்பர் 11 தொடர்பாக புஷ் நிர்வாகத்தின் அக்கறை பற்றிய கூற்றுக்கள் தொடர்பாக கூர்மையான பல கேள்விகளை எழுப்பினார். ஏனையவற்றின் மத்தியில், அவர் கூறினார்: "செப்டம்பர் 11 அன்று வந்த சம்பவங்கள் பற்றி பல எச்சரிக்கைகள் இருந்தன என்பதை நாம் அறிவோம். செப்டம்பர் 11-ன் சம்பவங்கள் பற்றி இந்த நிர்வாகத்திற்கு என்ன தெரியும், மற்றும் அதுபற்றி அதற்கு எப்பொழுது தெரியும்? வேறு யாருக்குத் தெரிந்திருக்கும், மற்றும் தேவையில்லாமல் படுகொலை செய்யப்பட்ட நியூயோர்க்கின் அப்பாவி மக்களை ஏன் எச்சரிக்கவில்லை?"

அவர் கேட்டார், "இறக்குமதி எண்ணெயில் தங்கி இருப்பது எந்த அளவுக்கு புஷ் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் இராணுவக் கொள்கையில் பங்காற்றி இருக்கிறது? புஷ் நிர்வாகத்திற்கும் எண்ணெய் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைக்கு இடையிலான நெருக்கமான உறவு, ஏதாவது இருக்குமாயின், இந்த நிர்வாகத்தால் தற்போது பின்பற்றப்பட்டுவரும் கொள்கைகளில் அது என்ன பாத்திரம் ஆற்றியது?"

புஷ் நிர்வாகத்திற்கு மாக்கின்னியின் எதிர்ப்பு எந்த வகையிலும் ஐயத்திற்கிடமில்லாதது. உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு அதிகாரங்களை நீட்டிப்பதற்கு வகைசெய்யும், அமெரிக்க தேசபக்தி சட்டத்தை அவர் எதிர்த்தபோதிலும், ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கையை எடுக்க அங்கீகாரம் வழங்கும் செப்டம்பர் 11க்குப் பிந்திய தீர்மானத்திற்கு அவர் வாக்களித்தார். ஆனால் பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றிய எந்தவிதமான சுதந்திரமான விசாரணைகளையும் எதிர்ப்பதற்காக வெள்ளைமாளிகையை அவர் கண்டனம் செய்தார்.

"எமது உரிமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்பு மிக்க உரிமையான, நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கான உரிமையை அமெரிக்காவிலிருந்து திருடிய" அரசாங்கம் என புஷ் நிர்வாகத்தை விவரித்துக் கொண்டு, அது இப்பொழுது உள்நாட்டு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை வரையறையில்லாமல் மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். "முறைமைநிலை கேள்விக்குரியதான ஒரு நிர்வாகத்திற்கு முன் என்றுமில்லாத அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது, "என்று அவர் கூறினார்.

இந்த மூடி மழுப்பாத குறிப்புக்கள் --மேலும், அவர்கள் சென்ற அவளவுக்கு, முற்றிலும் துல்லியமானது-- அரசியல் மற்றும் செய்தி ஊடக அமைப்புக்களை திடுக்கிடச் செய்தது. ஜோர்ஜிய ஜனநாயகக் கட்சியாளர் செனெட்டர் ஜெல் மில்லர் மாக்கின்னியை "கிறுக்கி" (விசரி) மற்றும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்றவர் என விவரித்தார். வெள்ளைமாளிகைப் பேச்சாளர் ஸ்காட் மக்ளில்லான், "ஜனாதிபதியின் சட்டபூர்வதன்மை பற்றி அவர் கேள்விகளை எழுப்பினார் என்ற உண்மை அனைத்துக் காரணத்திற்கும் பின்னால் பட்சபாதமான அடைவதற்கான ஆவலைக் காட்டுகிறது.

மாநகரின் பிரதான நாளிதழ், Atlanta Journal-Constitution அவரை காங்கிரசனல் பிரதான நீரோட்டத்திற்கு வெளியில் உள்ள "இயக்க வெறியாளர்" என விவரித்தது. ஆனால் செய்தித்தாள் அதன் வலைதளத்தில், வாசகர்கள் புஷ் நிர்வாகத்தை அல்லது காங்கிரஸ் பெண்மணியை நம்புகிறார்களா எனக் கேட்டு வாக்கெடுப்பு நடத்தியது, அது வாக்குகள் 50--50 பிரிந்திருத்தலைக் கண்டது. வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டது மற்றும் அதன் முடிவுகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை.

கோடீசுவரர் ரிச்சர்ட் மெல்லான் ஸ்காய்ப்-ஆல் நிதியூட்டப்படும் தென்கிழக்கு சட்ட ஆய்வு நிறுவனம் எனும் அதிவலதுசாரி குழுவானது, அவையின் சிறுபான்மை தலைவர் ஜனநாயகக் கட்சி ரிச்சர்ட் ஜிப்பார்ட்டுக்கு, அவர் மாக்கின்னியை ஆயுத சேவைகள் மற்றும் சர்வதேச உறவுக் குழுவில் அவரது பதவியிலிருந்து எடுத்துவிடக் கோரி கடிதம் எழுதியது. இதற்கிடையில் மாஜெட்டுக்கு பிரச்சார பங்களிப்புக்கள் பெருக்கெடுத்தன. ஒரு பத்திரிகை விவரப்படி, கோடை மாதங்களின் பொழுது மாக்கின்னியைப் போல் ஏழு மடங்கு பணத்தை மாஜெட் திரட்டினார்.

ஜனநாயகக் கட்சியின் பாத்திரம்

இறுதியில் மாஜெட்டி காங்கிரசுக்கான முதல்நிலை போட்டியைப் பொறுத்தவரை பெருந்தொகையான பணத்தை, 1.1 மில்லியன் டாலர்களுக்கு மேல் திரட்டினார், -கிட்டத்தட்ட அவர் பெற்ற ஒவ்வொரு வாக்கிற்கும் 20 டாலர் என்ற அளவில்- மற்றும் அவர் பதவியிலிருந்தவருடன் ஒப்பிடுகையில் 2க்கு ஒன்று என்ற அளவில் வரம்பு மீறி செலவழித்தார். போட்டி நெருக்கமானதாக இருந்திருக்கும் ஆனால் வெள்ளை, உயர் நடுத்தரவர்க்கத்தினர் வட்டாரங்களில் உள்ள குடியரசுக் கட்சிக்காரர்களால் அணிமாறி வாக்களிப்பட்டார், அங்கு மாஜெட் 30--1 என்ற அளவை அணுகும் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், மாக்கின்னியின் சொந்தப் பகுதியான, பெரும்பாலும் கறுப்பர் மற்றும் தொழிலாள வர்க்கம் நிறைந்த, டி கால்ப் மாவட்டத்தில் அவர் பின்தங்கினார்.

மக்கள் உரிமை அமைப்புக்களில் பெரும்பகுதி மாக்கின்னியை ஆதரித்தன, ஆனால் குறைந்த அளவே ஆர்வத்துடன் மற்றும் குறைந்த அளவு தாக்கத்துடன் ஆகும். ஒரு தேர்தல் நாள் அணிதிரள்வு, ஸ்டோன்வீவ் தொடக்கப்பள்ளியில் ரெவ். ஜெஸி ஜாக்சன், மார்ட்டின் லூதர்கிங் III , ரெவ். ஜோசப் லோவரி மற்றும் லூயிஸ் பராக்கான் ஆகியோரது பேச்சைக் கேட்பதற்கு சிறு எண்ணிக்கையினர் கூடியது போல, விஷயத்தைக் கூறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 1800 பேர்கள் பொதுத் தேர்தலில் வாக்களித்தனர், அதில் மிகப் பெரும்பான்மையினர் மாக்கின்னிக்காக வாக்களித்தனர். ஆகஸ்டு 20 அன்று, அதே வட்டாரத்திலிருந்து 169 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

ஜனநாயகக் கட்சியின் தேசியத் தலைமையானது மெளனமாய் வலதுசாரி களைஎடுப்பை ஆதரித்தது. மாக்கின்னிக்கு எதிரான ஆரம்ப செய்தி ஊடகப் பிரச்சாரத்தின் பொழுது, அவையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ரிச்சர் ஜிப்பார்ட் ஒரு பேச்சாளர் மூலம் சற்றே காட்டமான அறிக்கையை விடுத்தார்: "திரு.ஜிப்பார்ட் மாக்கின்னி கூறும் பல விஷயங்களுடன் உடன்படவில்லை, ஆனால் அவற்றைக் கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அவரது கேள்விகள் அனைத்தும் உளவுக் குழுக்கள் தலைமை வகிக்கும் காங்கிரஸ் விசாரணையால் பதிலளிக்கப்படும் என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்."

உண்மையில் அந்த விசாரணை உண்மையாகவே நிறுத்தப்பட்டுவிட்டது, மற்றும் தேசிய பாதுகாப்பு தகவல்களை கசியவிட்டதாகக் கூறப்படுவதற்காக விசாரணை செய்ய எப்.பி.ஐ ஒருங்கு திரட்டப்பட்டது. செப்டம்பர் 11 முதலாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கி வருகையில், அமெரிக்க வரலாற்றில் மாபெரும் தனியொரு பாதுகாப்புத் தோல்விக்கு வழிவகுத்த காலகட்டத்தில் அமெரிக்க உறவு முகவாண்மைகளின் நடவடிக்கைகள் பற்றி இன்னும் தனியொரு பகிரங்க விசாரணையும் அங்கு இல்லாதிருக்கிறது.

கறுப்பு தேசியவாதம் மற்றும் யூத எதிர்ப்புவாதம்

மாக்கின்னி மீதான தாக்குதல்களுக்கு அவரது ஆதரவாளர்களின் பதிலானது, புஷ் மற்றும் இஸ்ரேல் மீதான அவரது விமர்சனம் ஏகாதிபத்தியத்திற்கு கொள்கைவழிப்பட்ட எதிர்ப்பினை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக "இடது" தோற்றம் காட்டிக் கொள்ளல் மற்றும் கறுப்பு தேசியவாதம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என காட்டுகிறது. அவர் மாஜெட் ஆதரவு ஆட்களை "வெளியாட்கள்" - அதாவது, கறுப்பர் சமூகத்தில் தேர்தலில் தலையீடு செய்வதற்கு உரிமை இல்லா வெள்ளையர் மற்றும் யூதர்கள்-- என கண்டனம் செய்தார்.

பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியர் ஒடுக்குதல் பற்றிய அவரது விமர்சனத்தில், மாக்கின்னி, இஸ்லாம் தேசத்தின் பாராக்கான் போல யூத விரோத வாய்ச்சவடால்களுடன் பொதுவான குறிக்கோள் கொண்டார். இது சியோனிச ஆதரவு குழுக்கள் அரசியல் குழப்பத்தைப் பரப்பவும், பாலஸ்தீனியர் மீதான இஸ்ரேலிய ஒடுக்குதலுக்கு எதிர்ப்பு யூத எதிர்ப்பு இனவாத்தை சமப்படுத்துகிறது என்ற பொய்யைப் பிரச்சாரப்படுத்துவதையும் எளிதாக்கியது.

மாக்கின்னியின் தந்தை, அரசுப் பிரதிநிதி பில்லி மாக்கின்னி, வெளிப்படையாகவே யூத எதிர்ப்பு கூற்றுக்களை மொழிந்தார். முதல்நிலை தேர்வுக்கு ஒருநாளைக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் ஏன் தமது மகள் அத்தகைய கடினமான மறு தேர்ந்தெடுத்தலுக்கான சவாலை எதிர்கொண்டிருக்கிறார் என்று கேட்கப்பட்ட போது, அவர் விடை கூறினார்: "யூ த ர் க ள்." அவரது தந்தைதாமே அதே முதல்நிலை வாக்கெடுப்பில் சவால் செய்தவருக்கு எதிராக தப்பியோட நிர்பந்தித்துக் கொண்டார்.

முடிவில், மாக்கின்னியின் தோல்வியானது தொழிலாள வர்க்க மக்கட்திரளிடையே ஆதரவு தரும் செயலூக்கமான மற்றும் அக்கறை கொண்ட வெகுஜன அடித்தளம் இன்மையினை வெளிப்படுத்துகிறது.

மாக்கின்னியை இடம்பெறாது செய்ததில் வேட்டையாடல் மற்றும் களைஎடுத்தலின் அம்சமானது, அமெரிக்க தேர்தல் அரசியலில் பெரும்பணம் மற்றும் அரசியல் சூழ்ச்சி இவற்றின் அழுத்தமான பாத்திரம், என்றும் அதிகரித்திருந்திராத அளவுக்கு இருப்பதைக் குறிகாட்டுகிறது. இரு பிரதான கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு கடுமையாக அரித்துப்போயிருக்கிற மற்றும் ஜனநாயகக் கட்சியினரும் அதேபோல குடியரசுக் கட்சியினரும் மிகவும் குறுகிய சமூக அடித்தளத்தின் மீது தங்கியுள்ள நிலையில், அரசியல் அமைப்பு முறையிலிருந்து பரந்த அளவிலான மக்களின் அந்நியப்படலின் சூழ்நிலைகளின் கீழ், அங்கு பெரும் வளங்களைக் கொண்ட எண்ணிக்கையில் சிறிய அளவான சக்திகள் தேர்தல்களை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கு பெரும் தங்குதடை அற்ற செயல் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். முழு நிகழ்ச்சிப்போக்குகளும் அமெரிக்காவில் ஜனநாயக அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் ஆழமான சீரழிவை எதிரொலிக்கிறது.

Top of page