World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள் : நான்காம் அகிலம்

Ernest Mandel, 1923-1995

A critical assessment of his role in the history of the Fourth International

ஏர்னஸ்ட் மண்டேல் 1923-1995

நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது பாத்திரம் பற்றிய ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

23 October 1995
By David North

Use this version to print | Send this link by email | Email the author

Part 1 | Part 2 | Part 3 | Part 4

ட்ரொட்ஸ்கியின் பின்னர் நான்காம் அகிலம், இரண்டாம் உலக யுத்தமும் ட்ரொட்ஸ்கியின் படுகொலையும்.

The Fourth International after Trotsky, World War II and the assassination of Trotsky

1940ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் திகதி மெக்சிக்கோ நகர எல்லைப்புற கிராமமான Coyocan இல் ஸ்ராலினிச GPU கைக்கூலியான Ramon Mercader ஆல் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார். ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்தது போல, இரண்டாம் உலக யுத்தத்தினால் சகல கவனங்களும் திசை திருப்பப்படிருந்த நேரத்தை ஸ்ராலின் கொலைக்கு தேர்ந்தெடுத்திருந்தார். முந்திய மாதங்களில் ஹிட்லரின் இராணுவம், மேற்கு ஐரோப்பாவினை கட்டுப்பாட்டிற்குள்கொண்டு வந்திருந்தது. பிரான்ஸ் சரணடைந்திருந்தது. பிரித்தானியாவிற்கான போர் ஆரம்பமாகியிருந்தது.

தனது வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் ட்ரொட்ஸ்கி முன்னோருபோதும் இல்லாத அளவிற்கு மிகப்புத்தி சாதூர்யமான அரசியல் கட்டுரைகளை எழுதியிருந்தார். அவரின் முக்கிய கவனம், 2ம் உலக யுத்ததின் வெடிப்புக்கு முகங்கொடுத்த வரலாற்று முன்னோக்கு தொடர்பான முக்கிய கேள்விகளின் மீது செலுத்தப்பட்டிருந்தது. யுத்ததிற்கு காரணம், உலக முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத நெருக்கடிகளும், தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியுமே எனக் கூறினார். ஐரோப்பிய சோசலிசப் புரட்சியின் வெற்றிகரமான வளர்ச்சியே யுத்தத்தை தவிர்க்க முடியும். ஆனால் ஸ்ராலினிட்டுகளும் சமூக ஜனநாயக அதிகாரத்துவமும் தொழிலாள வர்க்கத்தை சீரழிவிற்குள்ளாக்கியதுடன் தோல்விக்கும் இட்டுச் சென்றனர். ஸ்பெயினில் பிராங்கோ (Franko) வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஸ்ராலினிசமாகும். இது யுத்த ஆரம்பத்திற்கு கடைசியாக இருந்த தடையையும் அகற்றிவிட்டது. சோசலிசப் புரட்சியின் தோல்விக்கு காரணமான திகைப்படைய செய்யும் விலையை மனித சமூகம் செலுத்த வேண்டியிருந்தது.

ஒரு தலைமுறைக்கு முன்னதாக 1ம் உலக யுத்தம் உருவாக்கிய ஒரு தொடர் நிகழ்வுகள் போல்ஷிவிக் புரட்சிக்கு இட்டு சென்றது. 2ம் உலக யுத்தமும் புரட்சிகர நிலைமைகளை உருவாக்கும் என ட்ரொட்ஸ்கி நம்பிக்கை கொண்டிருந்தார். எப்படியிருந்தபோதும் விளைவுகள் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலேயே தங்கியுள்ளது என தனது ஆதரவாளர்களுக்கு கூறியிருந்தார். யுத்த உடைவு மிக வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடிக்கும், தயார்நிலையில் இல்லாத அகநிலைக் காரணியான தொழிலாள வர்க்கத்தின் உணர்மைக்கும், அதன் தலைமைக்கும் இடையேயான வெளிப்படையான முரண்பாட்டை எடுத்துகாட்டியது. இந்த முரண்பாடு இலகுவில் வெற்றிகொள்ளப்பட முடியாது. இன்றும் தொடர்ச்சியான தோல்விகளுக்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது. ஆனால் நான்காம் அகிலத்தின் தோழர்களுக்கு, இந் நிலைமையை பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கவிடாது எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக வேண்டும் என ட்ரொட்ஸ்கி ஆலோசனை வழங்கினார். வர்க்கப் போராட்டத்தின் இந்த அந்த நிகழ்வுகளின் உடனடி விளைவுகள் எதுவாக இருந்தாலும் ''வரலாற்றுப் பிரச்சனைகளுக்கான'' தீர்வு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் புரட்சிகர கட்சி தனது ஆளுமையை நிலைநாட்டுவதில் தங்கியுள்ளது.

''நிகழ்வுகளின் வேகங்களும் அவற்றிடையேயான கால இடைவெளிகளும் மிக முக்கியமானவைதான். ஆனால் இது பொதுவான வரலாற்று முன்னோக்கையோ அல்லது எமது கொள்கையின் திசையையோ இது மாற்றுவதில்லை. இதில் இருந்து எடுக்கும் தீர்மானம் இலகுவானது. தொழிலாள வர்க்கப் போராளிகளை கல்வியறிவூட்டுவதையும் ஒழுங்கமைப்பதையும் பத்துமடங்கு சத்தியுடன் செய்யவேண்டும். இங்குதான் நான்காம் அகிலத்தின் கடமை முக்கியமாக தங்கியுள்ளது''.(Writings of Leon Trotsky 1939-40 [New York: Pathfinder, 1973], p. 218).

ஏர்னஸ்ட் மண்டேலின் ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகள்

The early political activities of Ernest Mandel

ஏர்னஸ்ட் மண்டேல் 1923ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்து சிறுபிள்ளையாக இருக்கும்போதே பெல்ஜியத்திலுள்ள அன்வேர்ப்பிற்கு (Antwerb) சென்றார். இவர் 1930ம் ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்து நான்காம் அகிலத்தை உருவாக்குவதில் போராடியவர்களின் தலைமுறையினை சேர்ந்தவரல்ல. மண்டேல், கூடுதலாக சேர்ந்து இயங்கிய மிஷேல் பப்லோவை (Michel Pablo) விட 12 ஆண்டுகள் இளமையானவரும் ஜெரீ கீலியை (Gerry Healy) விட பத்தாண்டுகள் இளமையானவருமாகும். ஆனால் அவர் மிக இளமையாக இருந்தபோது தீவிரமாக இயங்கியது தொடர்பாக இவை கவனத்திற்கெடுக்க தேவையற்றது.

மண்டேல் யுத்தத்தின் ஆரம்ப காலங்களில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்ததுடன், நாசி எதிர்ப்பியக்கத்திலும் கலந்து கொண்டார். அந்நேரம் ஐரோப்பிய ட்ரொட்ஸ்கிச இயக்கம் பாசிசவாதிகளாலும் ஸ்ராலினிஸ்டுகளாலும் கூட்டு ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருந்தது. மண்டேலின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆப்பிரம் லியோன் (Abram Leon) உட்பட பல தலைவர்கள் உயிரையிழந்தனர். மண்டேல் கிட்டத்தட்ட தனது வாழ்வை இழந்ததுபோல் கொலை முகாமிற்கு அனுப்பப்படுவதில் இருந்து தற்செயலாக தப்பி, நாசி அரசின் உடைவுடன் பெல்ஜியத்திற்கு திரும்பினார்.

2ம் உலக யுத்தத்தின் முடிவில், நான்காம் அகிலம் சிக்கலான அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்தது போல், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் பாரிய தட்டினர் மத்தியில் அரசியல் தீவிரமயப்படுத்தல் நிகழ்ந்தது. எப்படியிருந்த போதும் ஹிட்லருடன் செய்து கொண்ட ஆக்கிரமிப்பு தவிர்ப்பு உடன்படிக்கை உட்பட, யுத்தத்திற்கு முந்திய கால காட்டிகொடுப்புக்கள் இருந்தபோதும் ஸ்ராலினிச கட்சிகளும், சோவியத் அரசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாசிச எதிர்ப்பு இயக்கங்களில் கலந்து கொண்டதும், ஜேர்மனியின் மூன்றாம் ரைகின் (Third Reich, நாஜி அரசு) தோல்விக்கு செம்படையினரின் பங்கும், இவர்களின் அரசியல் ஆழுமையினை அதிகரித்தது. தாம் பெற்றுக் கொண்ட செல்வாக்கினை, ஸ்ராலினிட்டுகள் பயன்படுத்திகொண்டு, முற்றாக பலவீனம் அடைந்த மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் ஆளுமையினை மீளமைக்க உதவினர். பிரான்சிலும், இத்தாலியிலும் தமது கட்டுப்பாட்டிற்குள் இருந்த பாட்டிசான் இயக்கங்களை (Partisan Movements- எதிர்ப்பு இயக்கங்கள்) நிராயுதபாணியாக்கி முதலாளித்துவ கூட்டரசினுள் ஈடுபட செய்தனர்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இலட்சக்கணக்கான அங்கத்தவர்களை கொண்டிருந்த ஸ்ராலினிச கட்சியின் ஆளுமையை கட்டுப்படுத்த நான்காம் அகிலத்தின் பலம் போதாது இருந்தது. இந்த கடுமையான நிலைமையினுள்ளே யுத்த முடிவில் தோன்றிய சிக்கலான பிரச்சினைகளை ஆராயவும், புரட்சிகர முன்னேக்கினை பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும் வேண்டியிருந்தது. மண்டேல் இந்நேரத்தில் நான்காம் அகிலத்தின் முக்கிய தலைவராக வந்தார். Germain என்ற புனைபெயரின் கீழ், பல ஆண்டு காலமாக அரசியல் வெளியீடான "FORTH INTERNATIONAL" இல் பல அரசியல் கட்டுரைகளை எழுதினார். இவற்றில் யுத்தத்தின் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ மீள் எழுச்சிக்கு ஸ்ராலினிசம் வகித்த புரட்சிப் பாத்திரத்தை ஆராய்ந்தார்.

"முதலாளித்துவத்தின் உடனடித் தேவை அமைதியான நிலைக்குத் திருப்புவதாகும். இதனை அடைய மக்கள் வீதிகளை விட்டுவிலகி வீடுகளுக்கு திரும்புவதாகும்". இவ்வாறு 1946ல் மண்டேல் எழுதினார். அவர் தொடர்ந்து எழுதுகையில் "ஒரு அரசைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம் எனக்கூறுவது போதாது. இவ் இயக்கங்களின் தலைவர்கள், முக்கியமாக ஸ்ராலினிச தலைவர்கள் ஒழுங்கை நிலைநாட்டுமாறு மக்களுக்கு கோரிக்கை விட்டனர். இதற்கான ஆதாரங்கள் முற்றுமுழுதாக உள்ளன. பிரான்சில் FTP இன், பெல்ஜியத்தில் FRONT INDEPENDENCE இன் ஒல்லாந்தில் FORCE DE L' INTERIEUR இன் இத்தாலியில் COMITE DE LIBERATION NATIONAL இன் தலைவர்கள் இல்லாது, ஒரு உள்நாட்டு யுத்தத்தை தவிர்த்து முதலாளித்துவத்தால் ஒரு தற்காலிக உறுதி நிலையை உருவாக்குவது முற்றாக சாத்தியமற்றதாகவே இருந்திருக்கும்." (FORTH INTERNATIONAL.1946-p.271)

ஸ்ராலினிசத்தின் உதவியுடன் சாதகமான முதலாளித்துவத்தின் உறுதிப்படுத்தல் நிலைமை, நான்காம் அகிலத்தினுள் பீலிக்ஸ் மோரோவால் (Felix Morrow) தலைமை தாங்கப்பட்டு பின்னர் மக்ஸ் சட்மனால் (Max Shachtman) தொடரப்பட்ட, ஐரோப்பிய சோசலிசப் புரட்சிகர முன்னோக்கை முன்கொண்டு செல்வது அர்த்தமற்றது என்ற அரசியல் போக்கு உருவாகுவதற்கு காரணமாகியது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் முக்கிய வெற்றியாளனாக நான்காம் அகிலம் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என மோரோ கூறினார். முதலாளித்துவ ஜனநாயக நப்பாசைகளுள் மூழ்கியுள்ள ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் இந்த அடித்தளத்திலேயே ஆதரவினை பெறமுடியும் எனவும் கூறினார். நான்காம் அகிலத்தின் சோசலிச முன்னோக்கை இல்லாமல் செய்யும் இம் முயற்சியை மண்டேல் மூர்க்கத்தனமாக எதிர்த்தார். 1946 யூலையில் மண்டேல் பின்வருமாறு எழுதினார்.

"ஜனநாயக சுலோகங்களை பிரயோகிப்பது என்ற பிரச்சினை முன்வரும்போது லெனினிஸ்டுக்கள் எப்போதும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தின் பொதுவான மதிப்பீட்டில் இருந்து, இதில் இருந்து தோன்றும் சோசலிசப்புரட்சி முன்னோக்கின் அடித்தளத்திலுமே அணுகுகின்றனர். இதில் உள்ள தந்திரோபாய பிரச்சினைகள் முற்றாக மக்களை இந்த முன்னோக்கை நோக்கி எவ்வாறு ஏற்றுக் கொள்ள கொண்டு செல்வது என்பது தொடர்பாக இருக்குமே தவிர, அவர்கள் இந்த முன்னோக்கை விளங்கி கொள்ளும் வரை, அவர்களை வேறெந்த வழியில் ஆளுமைக்குள்ளாக்கி வைத்திருப்பதல்ல. லெனினிஸ்டுகளுக்கு ஜனநாயக சுலோகங்கள் கட்டாயமாக தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கான ஒரு ஆயுதமாகவே இருக்கும்." (1946 நான்காம் அகிலம் பக்கம் 346)

ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் சோசலிச முன்னோக்கை விளங்கிக்கொள்ள முடியாது (இது 1946ல் ஐயுறவுவாத பிரச்சினையாகும்) என்ற விவாதத்திற்கு மண்டேல் பின்வருமாறு பதிலளித்தார். "மக்களின் நிரந்தமற்ற (தற்காலிக) மனநிலைக்கு பணிந்துபோக ஒருவர் அனுமதிப்பதும் (சந்தர்ப்பவாதிகள் செய்ததுபோல்)" மக்களின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவி செய்யமுடியாத அரசியலை அடித்தளமாக கொள்வதும், ஒருவரின் முன்னோக்கை மக்களின் பின்தங்கிய பிரிவினரின் மட்டத்திற்கு தாழ்த்திக் கொள்வதுமாகும்". (1946 நான்காம் அகிலம் பக்கம் 347)

ஸ்ராலினிசத்தின் பங்கு

The role of Stalinism

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், நான்காம் அகிலம் எதிர்நோக்கிய சிக்கலான கோள்வி, கிழக்கு ஐரோப்பா மீதான சோவியத் ஆக்கிரமிப்பினால் உருவான அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்கள் தொடர்பான முன்னோக்கு தொடர்பான சிக்கல்களாகும். நான்காம் அகிலம் தனது தோற்றத்தில் இருந்தே, ஸ்ராலினிசம் எதிர்ப்புரட்சி தன்மையானது என்பதை வலியுறுத்தி வந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் யூகோஸ்லாவியாவில் பாட்டிசன் இயக்க வெற்றியையும் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் இராணுவத்தின் ஆதிக்கத்தினையும் தொடர்ந்து இந்நாடுகளில் கைத்தொழில்களின் தேசியமயமாக்கல் இந் நாடுகளை தொழிலாளர் அரசுகள் ஆக்கியுள்ளதா? சோவியத் இராணுவத்தின் கீழும் அந்நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கீழும் நடந்த இம்மாற்றம் ஸ்ராலினிசம் எதிர்ப் புரட்சிகரமானது என்ற வரையறையை கோள்விக்குரியதாக்கி இருக்கின்றா?

கிழக்கு ஐரோப்பாவின் தொடர்ச்சியான அபிவிருத்தி தொடர்பான சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சோவியத் தொழிலாள வர்க்க கட்சியினால் தலைமை தாங்கப்படும் ஒரு உண்மையான சுயாதீன புரட்சிகர பாரிய இயக்கமொன்று இல்லாது, அதிகாரத்துவத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளாலும், சோவியத் இராணுவத்தின் தலையீட்டினாலும் மட்டும் ஓர் அரசின் வர்க்கத் தன்மையை மாற்றமுடியுமா? இவை நான்காம் அகிலத்தின் வரலாற்று தேவையை கேள்விக்குரியதாக்கவில்லையா? பாரிய தொழிலாள வர்க்கப் புரட்சி மூலமோ அல்லது 1917ல் போல் அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும் அமைப்பு மூலமோ அல்லாது தொழிலாள வர்க்க அரசு ஒன்று உருவாக்கப்பட்டு, தொழிலாள வர்க்கம் தனது வர்க்க ஆட்சியை நடைமுறைப்படுத்த முடியுமானால் அது அடிப்படை மார்க்சிச கருத்தான சோசலிசப்புரட்சி என்பதை, தொழிலாள வர்க்கம் தனது சுயவிடுதலைக்கான அரசியல் வெளிப்பாட்டின் உயர்வடிவம் என்பதை கேள்விக்குரியதாக்க வில்லையா? வேறு எந்த வடிவங்களில், வேறு எந்த சமூக சக்திகளின் தலைமையினாலும் செயற்பாட்டினாலும் சோசலிசம் நடைமுறைப்படுத்தப்படமுடியும்?

இக் கேள்விகள் அனைத்தும் ஒன்றாக எழவில்லை. பல வருடப்போக்கில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிகழ்வுகள் தொடர்பான முன்னோக்கு தொடர்பான சிக்கல்கள் தோன்றின. இவற்றிற்கு நான்காம் அகிலம் எவ்வாறு பதிலளித்தது என்பது அதன் அபிவிருத்தியில் முக்கிய தாக்கத்தை உருவாக்கியது.

இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்து சில காலத்தின் பின்னர், ட்ரொட்ஸ்கி 1939ம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற மாற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே அனுமானித்திருந்தார். ஆகஸ்ட் 1939ல் ஸ்ராலின் ஹிட்லருக்கிடையில் செய்யப்பட்ட உடன்படிக்கையின் இரகசிய அறிக்கையின்படி, போலந்தின் மீதான சோவியத் ஆக்கிரமிப்பை தொடர்ந்து கிரெம்ளினால் பறிக்கப்பட்ட நாட்டின் கிழக்குப் பிரதேசங்களில் முதலாளித்துவ சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ஏனைய தன்மைகளை கவனத்தில் எடுக்காவிடில், இந்த பறிமுதல் ஒரு குறிப்பிட்ட அளவு முற்போக்கான தன்மையை கொண்டிருந்தது. எப்படியிருந்தபோதும் இந்த நடவடிக்கைகளை ஒரு பரந்த சர்வதேச வரையறைக்குள் வைத்தே ஆராயவேண்டும்.

ட்ரொட்ஸ்கி இது தொடர்பாக எழுதுகையில், ஹிட்லரின் இராணுவ ஒத்துழைப்புடன் போலந்து மீதான ஆக்கிரமிப்புக்கான சாதகமான நிலைமைகளை தோற்றிவித்ததாக கிரெம்ளின் பலகாலமாக சோவியத் யூனியன் மக்களையும் முழு உலகத்தையும் ஏமாற்றி கொண்டுவந்தது. இதனூடாக தனது சொந்த அகிலத்தினுள் முற்றான சீரழிந்த நிலையை உருவாக்கியிருந்தது. எங்களின் முக்கிய அடிப்படை அரசியல் அளவீடு எவ்வளவுக்கு முக்கியமாக இம் மாற்றீடு இந்த அல்லது வேறெந்த பிரதேசத்தில் நடந்து என்பதல்ல, அதற்கு மாறாக உலகத் தொழிலாள இயக்கத்தின் உணர்மையிலும் அமைப்பிலும் ஏற்பட்ட மாற்றமும் தனது முன்னைய வெற்றிகளை பாதுகாத்துக் கொண்டு புதியவற்றை செய்து முடிக்கத்தக்க தகைமை கொண்டுள்ளார்களா என்பதுதான். இதிலிருந்துதான் இந்த தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்துதான் மொஸ்கோவின் கொள்கைகள் முழுமையாக அதன் பிற்போக்கு தன்மைகளைக் கொண்டிருந்ததுடன் உலகப்புரட்சிக்கான முக்கிய தடையாகவும் இருந்தது. ("சோவியத் யூனியன் யுத்தத்தினுள்" மார்க்சிசத்தை பாதுகார் பக்கம்-23)

யுத்தத்தினை தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்ராலினிஸ்ட்டுகள் செய்த பொருளாதார நடவடிக்கைகளால் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை மீள்பரிசீலனைசெய்ய வேண்டும் என்ற கருத்தை நான்காம் அகிலம் உறுதியாக எதிர்த்தது. சோசலிச ஆளுமை பரவுவதை உற்சாகப்படுத்துவதற்கு மாறாக 1946ம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் அகிலம் சஞ்சிகை ஸ்ராலினிஸ்டுகளால் செய்யப்பட்ட முறைகள் கிழக்கைரோப்பிய மக்களை விரோதிகளாக்குகின்றது என பின்வருமாறு எச்சரித்து.

"எடுத்துக் கூறமுடியாத காட்டிக்கொடுப்புகள், மக்கள் எழுச்சிகளை நசுக்கியமை, எதிர்ப்புரட்சிகர பயங்கரவாதம், அவர்களின் கொள்கையினுள் சூறையாடல்களும் ஒடுக்கப்படும் மக்களிடையே கம்யூனிச சிந்தனைகளை மட்டுமல்லாது கம்யூனிசம் என்ற வார்த்தையை கூட மதிப்பிழக்கச் செய்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஸ்ராலினிச குற்றச்சாட்டுகளான, கிழக்கைரோப்பாவின் தேசிய மயமாக்கலை எவ்வளவு ஆழ்ந்து யோசிக்கவேண்டியுள்ளது. கிழக்கைரோப்பாவில் ஸ்ராலினின் எதிர்ப்புரட்சி சாகசங்கள், வரலாற்றில் முற்போக்கான அதனது பணியின் பேறாக அதன் பலன்களை அடைவதற்கு பதிலாக இவ் இரத்தம் தோய்ந்த பேயை முடிவுகட்ட வேண்டிய அத்தியாவசியத்தை வேண்டிநின்றதுடன் அது தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் விடுதலைக்கான போராட்டத்தின் மீதும் மேலும் அழிவுகளை செய்வதில் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஸ்ராலினிசத்தின் குருட்டுத்தன்மை, அதன்விபரிக்க முடியாத பிற்போக்குத்தன்மை, அதன் வரலாற்று இயலாத்தன்மை எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்கைரோப்பாவில் தெளிவாக எடுத்துகாட்டப்பட்டது. ஒரு அற்ப கொள்கைக்காக, ஒரு சிறிய நஸ்டஈட்டுக்காக, சோவியத் யூனியனின் பொருளாதார தேவைகளை தீர்ப்பதற்கு எந்தவித அர்த்தமும் அற்றசெயல்களால் கிரெம்ளின், கிழக்கு ஐரோப்பா மற்றும் உலகம்முழுவதிலும் தனக்கு எதிராக வெறுப்புமிகுந்த சுவர் ஒன்றை உருவாக்கிவிட்டது. பலம்மிழந்து, ஏழ்மையில் பீடிக்கப்பட்ட பால்கன் பிரதேசத்தின் மீது தனது இராணுவக் கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்காக ஆங்கில, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கிரெம்ளின் உதவி அளித்ததன் மூலம் புரட்சியை ஒடுக்குவதற்கும் சீரழிந்து கொண்டிருந்த முதலாளித்துவத்திற்கு முண்டுகொடுத்தது. (நான்காம் அகிலம் நவம்பர்-1946 பக்கம்-345)

அரை நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட இவ்வரிகளை ஒருவர் படிக்கையில் அதன் பிரத்தியேக முன்கணிப்பை பார்த்து ஆச்சரியப்படுவதை தடுக்கமுடியாது. இவை பொதுவான மார்க்சிச ஆய்வின் சக்திக்கான உறுதிப்படுத்தல் மட்டுமல்லாது ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் தொலைநோக்கின் பிரத்தியேகதன்மையும் ஆகும். ஸ்ராலினிசம் அதன் சக்தியின் உச்சியில் நின்று கொண்டிருந்தபோதும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் கிரெம்ளினின் அரசியல் எவ்வாறான அழிவிற்கு கொண்டுசெல்லுமென முன்னரே அறிந்திருந்தது.

மண்டேல் தனது இருபதாவது வயதுகளில் ஸ்ராலினிசத்திற்கு அடிபணியும் போக்குக்கு எதிரான போராட்டத்திற்கு தீர்க்கமான தனது பங்களிப்பை செய்ததுடன், ஒரு முற்போக்கான வரலாற்று நோக்கிற்காகப் போராடினார். அவர் கிழக்கைரோப்பாவில் நடந்த சொத்துக்களின் தேசிய மயமாக்கல்களை, தொழிலாள வர்க்க அரசுகள் அங்கு நிறுவப்பட்டுவிட்டன என்ற காலத்திற்கு முந்திய பாய்சல்கள் குறித்து எச்சரித்தார். "தொழிலாள வர்க்கப் புரட்சி முன்னர் நடக்காத நாட்டில் உருவாக்கப்பட்ட சீரழிந்த தொழிலாள அரசுகள் என்னும் கொள்கை முழு மார்க்சிச முறைகளுக்கும் முரண்பாடான முட்டாள்தனமானது" எனக் குறிப்பிட்டார். (போலந்தின் முரண்பாடுகள் நான்காம் அகிலம்-1947 பெப்ரவரி பக்கம்-48)

அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசின் வர்க்கத் தன்மையை தேசியமயமாக்கலை அடிப்படையாக கொண்டு வரையறுப்பது பிழையானது என குறிப்பிட்டார். போலந்தில் வெளிவந்த நிகழ்வுகளை தீர்க்கமாக ஆய்வுசெய்கையில் பின்வருமாறு எழுதுகின்றார்.

"ஸ்ராலினிச அதிகாரத்துவம் கைத்தொழில்களையோ, வர்த்தக நிலையங்களையோ சொந்தமாக உள்ளவர்கள் இல்லாத நாடு ஒன்றினுள் தலையீடு செய்கின்றமை ஒரு கூட்டு வரலாற்று நிலமைகளாகும். போலந்து தொழிலாள வர்க்கம் பலநிறுவனங்களை ஏற்கனவே பொதுவுடமையாக்கியுள்ளனர். போலந்து முதலாளித்துவம், மூலதனத்தில் ஏற்கெனவே பலவீனமாக இருப்பதுடன் கடந்தகாலத்திலும் தற்போதும் தனியார் சொத்துக்களை சேர்ப்பதன் அடிப்படையில் போதுமான மூலதனத்தை கொண்டு பாரியளவு கைத்தொழில்களை உருவாக்க இயலாது இருக்கின்றது. பல நிலக்கரி சுரங்கங்களையும் தொழிற்சாலைகளையும் ஒற்றிணைந்த பிரதேசத்தில் எந்தப் பிரச்சினைகளும் அரசினால் நிர்வாகத்திற்கு வெளியே தீர்க்கப்படமுடியாததுடன், சோவியத் ஆக்கிரமிப்பு இல்லாமலும் எவ்வித புரட்சிகர எழுச்சிகளும் இல்லாது இந்த தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டலாம்."

யுத்தமானது எப்படியோ கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் முற்போக்கான தன்மையை எடுத்துகாட்டியது என்ற கருத்துக்களும், இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கை கேள்விக்குறியாக்கியது என்பதற்கும் எதிராக மண்டேலும் ஏனையோராலும் எழுதப்பட்ட முன்னோக்கு ஆவணங்கள் நான்காம் அகிலத்தின் பலத்தின் மீதான நம்பிக்கையினை கொண்டு தொழிலாள வர்க்கத்தின் தலைமையை வெற்றி கொள்ள செய்தது.

நான்காம் அகிலத்தின் 2ம் மாநாட்டின் முன்னோக்கு பின்வருமாறு குறிப்பிடுகிறது. "ஸ்ராலினிசத்திடமிருந்து தொழிலாள வர்க்கத்தின் தலைமையை பறித்தெடுப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் சமூக ஜனநாயகமும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கவேண்டும். போராட்டத்தின் பல வெற்றிகரமான அனுபவங்களை பெற்ற தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமுறை போராளிகளை கல்வியூட்ட வேண்டியது முக்கியம். இவர்களை தொழிலாள வர்க்கத்தினுள் ஆளுமையினை பெற்றுக்கொள்ளவும் அதன் மதிப்பையும் நம்பிக்கையையும் பெறச்செய்யவேண்டும். ஒரு உண்மையான கட்சியை கட்டுவதற்கு சகல பாரிய மக்கள் இயக்கங்களினுள்ளும் பாரிய நடவடிக்கைகளுடாக வங்குரோத்தான அதனது தலைமைக்கு ஒரு உண்மையான மாற்றீடு உள்ளது என்பதை எடுத்துகாட்ட வேண்டும். (The Militant, July 26, 1948).

தொடரும்......