World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Grinding rural poverty leads to suicide in Sri Lanka

இலங்கையில் கொடூரமான கிராமப்புற வறுமை தற்கொலைக்கு வழிவகுக்கின்றது

By R.M. Gunathileke
28 December 2001

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தில் ஆறு பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய டி.எம்.கருணாவதி கடந்த மாதம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள சோளக்காட்டில் மரணத்தைத் தரும் ஒரு களைநாசினியை உட்கொண்டார். அவர் உடனடியாக அண்மையிலுள்ள உரனிய (Uraniya) கிராம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பதுளையிள் உள்ள பிரதான மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் நஞ்சு ஏற்கனவே அவரது பிரதான உறுப்புக்களை சேதப்படுத்தியிருந்ததோடு மருத்துவ உத்தியோகஸ்தர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாதவர்களாக இருந்தனர். அவர் நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவம் தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. கடந்த தசாப்தத்துள் ஏனைய நான்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள அதே வேளை நாடு முழுவதும் தற்கொலை வீதம் அதிகரித்த வன்னம் உள்ளது. கருணாவதியின் தலைவிதியானது இலங்கையின் கிராமப்புற மக்களின் பரந்த பகுதியினரின் முன் தலைவிரித்தாடும் வறுமையையும் கொடுமையையும் சுட்டிக்காட்டுகின்றது. இந்த சகிக்க முடியாத நிலைமையிலிருந்து வெளியேற தன்னையே மாய்த்துக் கொள்வதே வழி என அவர் தீர்மானித்துக்கொண்டார்.

ஒருவர் ஊவா மாகாணத்திலுள்ள பலதன்கொள்ள கிராமத்தை அடைய வேண்டுமாயின் அவர் பதுளையில் இருந்து குரவில்கொல்ல சந்திக்கு 45 கிலோமீட்டர் தூரம் பஸ்சில் பிரயாணம் செய்யவேண்டும். அதன் பின் 5 கிலோமீற்றம் தூரம், பாதையென்று கூட சொல்லமுடியாத ஒரு சரளைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். அநேகமான வீடுகள் மண் சுவர்களையும் வேயப்பட்ட கூரைகளையும் கொண்டவை; ஒரு சில செல்வந்த கிராமத்தவர்களுக்கு சொந்தமான வீடுகளே ஓட்டுக் கூரைகளைக் கொண்டவை.

மிகப்பரிதாபகரமான நிலையிலுள்ள வீடுகளில் கருணாவதியின் வீடும் அடங்கும் -12க்கு 10 அடி அளவான மடு இலைகளாலான (காட்டில் உள்ள நீட்டமான இலை) சுவர்களையும் வைக்கோலினால் வேயப்பட்ட கூரையையும் கொண்டது. கதவுக்கு பதிலாக ஒரு பலகையே உள்ளது. உள்ளே ஒரு கதிரையோ அல்லது மேசையோ கிடையாது.

இந்த குடிசையில் குளிரிலிருந்தோ மழையிலிருந்தோ அல்லது அருகிலுள்ள காட்டில் ஏராளமாக இருக்கும் பாம்புகளிடமிருந்தோ எந்தவித பாதுகாப்பும் கிடையாது. விவசாய குடும்பத்தினர் அறுவடையின் போது தமது வயலுக்கு அருகில் தங்குவதற்காக இவ்வாறான தற்காலிக குடிசைகளை பயன்படுத்துவர். ஆனால் கருணாவதி குடும்பத்திற்கு இதைவிட வேறுஒன்றும் கிடையாது.

48 வயதான அவரது கணவர் டி.எம். சுது பண்டா மரத்திலிருந்து விழுந்து கால் முறிந்த நிலையில் உழைக்க இலாயக்கற்றுள்ளதால் கருணாவதியே அக்குடும்பத்தின் வாழ்நாளை சமாளிக்கின்றார். கடந்த வருடம் அவர்களது மூத்த மகனான டி.எம். ஜயவர்தனா என்ற 20 வயது மகன் எந்தவொரு தொழிலும் கிடைக்காத பட்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். பதினாறே வயதான அவரது மூத்த மகள் பத்மலதா பதுளையிலுள்ள ஒரு செல்வந்த குடும்ப பங்களாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார். 4 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு இளைய பிள்ளைகள் உள்ளனர்.

கருணாவதி இந்த கிராமத்தில் பல வீடுகளில் தற்காலிக வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார். அவர் மூத்த மகன் இறந்ததையிட்டு ஆழ்ந்த கவலையிலும் இருந்துள்ளார். அவரது சடலத்தை பதுளை ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு கொண்டுவர கூட அவரது குடும்பம் இலாயக்கற்றிருந்தது. அவரது மூத்த மகளான பிரேமலதாவின் எஜமான் மரணச் சடங்குகளை பதுளை மயாணத்தில் ஒழுங்கு செய்ய உதவினார்.

தனது குடும்பம் தற்போது எதிர் நோக்கும் பிரச்சனை பற்றி சுதுபண்டா சுட்டிக் காட்டினார். "நாம் இந்த நாட்களில் கிராமத்தின் மரணச்சடங்கு உதவி சங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியிலேயே முழுமையாக தங்கியுள்ளோம். மூன்று மாதத்திற்கு ஒரு தடவையே சமுர்தியில் (மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்க சமூக சேவைத் திட்டம்) வழங்கப்படும் 1,100 ரூபா ($US12) எமக்கு கிடைக்கும் இன்னுமொரு நிவாரணமாகும்.

கருணாவதியின் எட்டு சகோதர சகோதரிகளில் மூவர் இதே நிலைமைகளின் கீழ் தற்கொலை செய்து கொண்டனர். 1989ல் அவரது 19 வயது சகோதரரான டி.எம். ஜயசேகர விவசாயம் செய்து வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் விஷம் அருந்தி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இரண்டு வருடங்களின் பின்னர் அவளது 28 வயது தங்கையான பிரேமாவதி, வரட்சியால் பயிர்ச் செய்கை நாசமடைந்ததை அடுத்து சோளமாவுடன் கிருமிநாசினியை கலந்து விழுங்கி உயிரிழந்தார். 32 வயதான அவரது சகோதரன் ஆரியதாச தனது மனைவியின் கிராமமான மெதஓயவிற்கு சென்று வேலைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.

பலதங்கொல்லவில் உள்ள அநேகமான கிராமத்தவர்கள் ஒரு நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். இவர்கள் கிராமத்தை சுற்றியுள்ள 60 ஏக்கர் வயல்வெளியில் சோளம் பயிரிட்டு வாழ்க்கை நடத்துகின்ற போதிலும் நீர்பாசனம் உட்பட எந்தவொரு வசதியும் இல்லாத நிலையில் மழைபெய்யும் காலத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் பாதிக்கப்படுவர். கடந்த போகத்தில் நாட்டில் நிலவிய வரட்சியினால் அவர்கள் எந்தவொரு பயிர் செய்கையையுமே நடத்த முடியாமல் போய்விட்டது.

பெரும்பாலான கிராமவாசிகள் தங்களது பிரதான உணவாக கஞ்சியையே குடித்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் அதுவே ஒரு முழு நாளுக்குமான ஆகாரமாக இருக்கும். எனது வழிகாட்டியான சரத் விக்கிரமசிங்கவின்படி பள்ளி மாணவர்கள் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாததால் தொடர்ச்சியக பாடசாலையில் மயங்கி விழுகின்றார்கள்.

ஒரு கிராமவாசி தெளிவுபடுத்தியதாவது: "நாங்கள் பன்றிகளை போல் சோளத்தை உண்ணவேண்டியுள்ளது. நாளாந்தம் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால்தான் மாலையில் ஏதாவது ஆகாரம் புசிக்க முடியும். மறுநாள் பற்றிய நம்பிக்கை எதுவும் கிடையாது." மற்றுமொருவர் குறிப்பிடுகையில்: "எமது வேலையற்ற பிள்ளைகளுக்கு இராணுவத்திலாவது சேருமளவுக்கு தகுதி கிடையாது. 2-4 வருடங்களுக்குள் அவர்கள் பாடசாலையை விட்டு விலகவேண்டும். மேலும் ஒரு கிராமத்துவாசி தொடர்ந்தார்: "மாணவர்கள் மழைநாட்களில் குடை இல்லாத காரணத்தால் பாடசாலை செல்லமாட்டார்கள். குருவிகொல்லைக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு செல்ல 3 1/2 மைல் தூரம் நடக்கவேண்டியுள்ளது.

அங்கு போக்குவரத்து கிடையாது. யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லது விபத்து நேர்ந்தால் அவரை உரனியவில் உள்ள கிராமத்து ஆஸ்பத்திரிக்கு புராதான முறையில் -இரண்டு நீண்ட தடிகளில் கட்டப்பட்ட சாக்கில்- நான்கு பேரால் தூக்கிச் செல்லப்பட வேண்டும். தண்ணீர் பஞ்சத்தால் 15 அடி ஆழக்கிணறுகிளில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும். இதனால் நோயாளர்களை அடிக்கடி கழுவுவதும் சாதாரணமானதல்ல. சில கிராமவாசிகள் தெளிவுபடுத்தியதாவது: "யாராவது ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நோய்வாய்ப்பட்டால் அவரது உடலிலுள்ள சேறையும்கூட கழுவாது ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்ல வேண்டும். ஆஸ்பத்திரி ஊழியர்கள் எங்களை ஏசுவார்கள்.

கிராமவாசிகள் அரசாங்க ஊழியர்கள் குறித்து அதிருப்தியுடன் பேசினார்கள். "சமுர்தி நிவாரணம் பெருபவர்களின் ஒரு கூட்டத்தில், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களும் சமுர்தி காரியாளர்களும் 'நீங்கள் உதவிபெறுகையில் ஏன் உங்களால் முன்னேற முடியாது?' என எங்களைக் கேட்கிறார்கள். நீங்கள் சோம்பேறிகள் என எங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் எங்களால் முடிந்த மட்டும் நாம் உழைக்கிறோம். இந்த சொற்ப்பனத்தில் (சமுர்த்தி உதவிப்பணம்) நாம் எப்படி ஜீவிப்பது. நாம் ஒழுங்காக சாப்பிடாமலும் கூட கடந்த மூன்று மாதங்களுக்குள் ரூபா 2,000 கடனாளியாகியுள்ளோம்."

இந்த பின்தங்கிய கிராமத்தில் இடம்பெற்றுள்ள தற்கொலை சம்பவங்கள் ஒரு மிகவும் பொதுவான நிலைமையின் தெளிவான வெளிப்பாடாகும். இலங்கை 100,000க்கு 55 என்ற உலகின் அதி உயர்ந்த தற்கொலை வீதத்தைக் கொண்டுள்ளது -இது 100,000க்கு 10 அல்லது 15க்கு இடைப்பட்ட வீத சராசரியை விட மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. இந்த வீதம் கடந்த அரை நூற்றாண்டுக்குள் பல முறை அதிகரித்துள்ளது. 1950ல் 6.5 வீதத்திலிருந்து 1960ல் 9.9 வீதமாகவும் 1970ல் 19,1 வீதமாகவும் 1980ல் 35.1 வீதமும் 1993ல் 43.3 வீதமாகவும் அதிகரித்துள்ள அதே வேளை தற்போதைய மதிப்பீட்டின்படி 55 விட அதிகமாவும் உள்ளது.

தற்கொலை செய்துகொள்வோரின் வயதிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. 1950-60 களில் அதகரித்த தற்கொலை வீதம் முதியோரிடத்தில் பதிவாகி இருந்தது -55 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆனால் அடுத்த தசாப்தத்தில் 30-55 வயதுக்கு உட்பட்ட குழுவினர் மத்தியில் அதிகரித்துக் காணப்பட்டது. 1970ல் இருந்து உயர்ந்த தற்கொலை வீதம் 15-30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மத்தியில் இருந்தது. 1980களின் பின்னர் இளம் பிள்ளைகளும் கூட தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

சமூகப் பிரச்சினைகளுடனான தொடர்பு பரந்த வறுமையால் இயக்கப்படுவது தெளிவு. தேசிய ரீதியில் அதிகரித்த தற்கொலை வீதம் உள்ள 10 மாவட்டங்களில் பதுளையும் ஒன்றாகும். கருணாவதியின் கிராமமான பலதன்கொல்ல பதுளை மாவட்டத்தில் மிகவும் வறுமையான ரிதிமஹாலியத்த பிராந்திய செயலகப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாள 80 சதவீதமான மக்கள் சமுர்தி அல்லது சனசவிய போன்ற ஏதாவது ஒரு நலன்புரித் திட்டத்தில் தங்கியுள்ளனர். கருணாவதியைப் போல் அநேகமானவர்கள் இந்த நிலைமையிலிருந்து மீள ஒரே வழி தற்கொலை செய்துகொள்வதே எனக் கருதுவது மிகவும் கோரமானதாகும்.