World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

Was the US government alerted to September 11 attack?

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?

பகுதி 4: விசாரணை செய்ய மறுப்பு

By Patrick Martin
22 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

பார்க்க: பகுதி1: முன்கூட்டிய எச்சரிக்கைகள், பகுதி2: விமானக் கடத்தல்காரர்களைக் கண்காணித்தல் , பகுதி3: அமெரிக்க ஐக்கிய அரசுகளும் மத்திய கிழக்கு பயங்கரவாதமும்

இந்தத் தொடர்கள், அமெரிக்க உளவுத்துறை முகவர்கள் செப்டம்பர் 11 தாக்குதல்கள் தொடர்பாக, வழிமுறைகள் மற்றும் தாக்க இருக்கும் இலக்குகள் பற்றிய குறிப்பிட்ட விவரங்களிலிருந்து பிரதான ஏற்பாட்டாளர் மொகம்மது அட்டா வரையிலான விமானக் கடத்தல்காரர்களின் அடையாளங்கள் வரை போதுமான அளவு முன்னேற்றத்தை செய்திருந்தனர் என்ற ஆதாரத்தை மீள்பார்வை செய்கின்றன. ஜெட் விமானங்கள் எதனையும் நேரத்தே இடைமறித்துத் தேடிப்பிடித்துக் கண்டுபிடிக்கத் தவறுதல் போன்ற ஏனைய தீர்க்கப்படாத மற்றும் கவலைதரும் விஷயங்களும் அங்கு இருக்கின்றன.
இருப்பினும், அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, செப்டம்பர் 11-ஐ பற்றிய உண்மையான செய்தியை இன்னும் சொல்ல வேண்டி இருக்கிறது என்று கூறுவதில் ஏனையவற்றுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் சிறு சான்று அங்கு இருக்கிறது: பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி எந்த விசாரணையையும் நடத்த புஷ் நிர்வாகமும் காங்கிரசும் மறுப்பது மற்றும் அவற்றுக்கு அரசாங்கத்தின் பதில் ஆகியனவாகும்.
அமெரிக்க மண்ணில் என்றும் நடந்திராத அளவுக்கு ஒரே நடவடிக்கையில் பரந்த அளவில் படுகொலையை நடத்தியதற்குப் பின்னர் நான்கு மாதங்கள் கழித்து அங்கு பாராளுமன்ற விசாரணையோ, விசாரணைக்கமிஷனோ அறிவிக்கப்படவில்லை மற்றும் அத்தகைய குழுவிற்கான அழைப்பு பெரும்பாலும் அலட்சியம் செய்யப்பட்டது. எப்.பி.ஐ-ன் உள் விசாரணை கூட விலக்கி வைக்கப்பட்டது. இந்த செயலின்மை அசாதாரணமானது மற்றும் அரசியல் ரீதியாக விளக்க முடியாதது. அதுஅரசியல் மூடிமறைப்பின் முடைநாற்றமாக இருக்கிறது.
இரு கட்சியினர் சார்ந்த விசாரணைக்கு குடியரசுக் கட்சியினர் தடை

செப்டம்பர் 11க்கு காங்கிரசின் தொடக்க எதிர்வினையானது, அமெரிக்க புலனாய்வுத்துறை உண்மையில் தற்கொலை விமானக் கடத்தல்களை தடுக்கத் தவறியது அல்லது முன்கூட்டிக் கணிக்கத் தவறியது உட்பட தாக்குதல்வரை சென்ற சம்பவங்களை மீள் மதிப்பீடு செய்ய, காங்கிரசின் தலைவர்களாலும் வெள்ளை மாளிகையாலும் சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைப்பதை நோக்கி நகர்வதாக இருந்தது. அவையின் உளவுத்துறைக்கான குழு அமெரிக்க உளவு நடவடிக்கைகளுக்கான மசோதா ஒதுக்கீடுகளின் வரைவில் அத்தகைய முன்மொழிவுகளை சேர்த்தது. பின்னர் வெள்ளை மாளிகை அடி எடுத்துவைத்தது.

அக்டோபர் 6-ல், பிரதிநிதிகள் அவை செப்டம்பர் 11 வெளிக்காட்டிய தயாரிப்பின்மை பற்றி விசாரிப்பதற்கான அழைப்புக்களை ஆதரிக்கும் அதேவேளை, செலவுக்கு நிதி அதிகரிப்புடன், உளவுத்துறையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து வாக்களித்தது. விசாரணைக் குழுவின் முறைமன்ற ஆணை அதிகாரங்களையும் சாட்சிகளுக்கு சட்ட காப்புரிமை அளிப்பதற்கான உரிமையையும் பிடுங்குவதற்கான பின் இணைப்பை முன்வைத்தல், உளவுத் தகவல்களைத் திரட்டுதற்கும் ஆய்வு செய்வதற்கும் "கட்டமைப்பு தடைகளை" பரிசீலனை செய்வதன்பால் அதன் குவிமையத்தை நகர்த்தல் இவற்றின் மூலம் குடியரசுக்கட்சியின் அவைத் தலைமையானது குழுவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சென்றது. வேறுவார்த்தைகளில் சொன்னால், செப்டம்பர் 11 சம்பவத்தை சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ தடுக்கத்தவறியது பற்றி விசாரணை செய்வதற்குப் பதிலாக, குழுவின் ஒப்பந்தக் கடமை உளவு முகவாண்மைகளுக்கு புதிய பரந்த அதிகாரங்களை முன்மொழிவதாக இருக்கும்.

காங்கிரஸ் குடியரசுக் கட்சியினர் தெளிவாகவே புஷ் நிர்வாகத்தின் விருப்பங்களை நிறைவேற்றினர். ஜனநாயகக் கட்சியினர் இந்த விஷயத்தில் சபைக்கு வந்திருப்போரின் வாக்கு எடுப்புக்கு வளைந்துபோனது, குடியரசுக் கட்சியினரை குரல் வாக்கெடுப்பில் அதனை நிறைவேற்ற அனுமதித்தது. நியூயோர்கடைம்ஸ்: "சதியைக் கண்டுபிடித்து முறியடிப்பதற்கு அரசாங்கம் தவறியதைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்வதற்கு வாஷிங்டனில் இப்பொழுது குறைந்த வேட்கையே இருக்கிறது." என எழுதியது.

இருவாரங்கள் கழித்து, குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் மெக்கெய்ன் மற்றும் செனட்டர் ஜோசப் லிபர்மேன் "பத்திரிகை சந்திப்பு" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, செப்டம்பர்11 தாக்குதல் பற்றி விசாரிக்க சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைப்பதை தாங்கள் ஆதரிப்பதாகக் கூறினர். லிபர்மேன் மேற்கோள் காட்டிய ஏனைய எடுத்துக்காட்டுக்களில், பேர்ள் துறைமுகத்தின் மீதான தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இராணுவத் தயாரிப்பு பற்றி சிறப்பு விசாரணைக் குழு அமைந்த முன்மாதிரியும் ஆகும். அத்தகைய முன்மொழிவுகளுக்கு புஷ் நிர்வாகம் ஆதரவுதரும் என்று ஜனநாயகக் கட்சிக்காரர் குறிப்பிட்டார்.

ஆனால் நவம்பர்21 அன்று, செனட் உளவுக் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் மற்றும் அவரது எதிரணி குடியரசுக் கட்சிக்காரர், புளோரிடாவின் றொபேர்ட் கிரஹாம் மற்றும் அலபாமாவின் ரிச்சர்ட் ஷெல்பி ஆகியோர், 2002 வரை உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதலை முன்கணிக்க அல்லது தடுக்கத்தவறும் எந்த விசாரணையையும் தாங்கள் முந்திச் செல்வோம் என்றனர். பிரதிநிதிகள் சபையின் தலைவர்களும் கூட அடுத்த ஆண்டு வரை காத்திருக்க சம்மதித்தனர். ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது அத்தகைய விசாரணையைத் தொடர்வது பொருத்தமுடையதாக இருக்காது என கிரஹாம் கூறினார், மற்றும் ஷெல்பி விசாரணை என்பது ஒரு திசைதிருப்பல் என விவரித்தார். எந்தவிதமான விசாரணைகளையும் காலம்கடத்தும் தங்களது முடிவுடன் வெள்ளை மாளிகை உடன்பட்டதாக இரு செனட்டர்களும் கூறினர்.

அதே காலகட்டத்தில் எப்.பி.ஐ ஆனது தற்கொலை விமானக் கடத்தல் குற்றங்கள் பற்றிய எந்த விசாரணைக்கும் முடிவு கட்ட இயங்கியது. நியூயோர்க் டைம்ஸ் அக்டோபர் 8-ம் தேதி செய்தி வெளியிட்டதாவது: "நீதித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை நாடு முழுவதும் உள்ள முகவர்களுக்கு அவர்கள் மேற்கொண்டிருப்பது, வர இருக்கின்ற இரண்டாவது சுற்று தாக்குதல்களைத் தடுக்க உதவியாக இருக்கும் என்பதால், செப்டம்பர்11 பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றிய அவர்களின் புலனாய்வை சுருக்கிக் கொள்ளுமாறு ஆணையிட்டதாக சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அதிகாரிகள் கூறினர்."

அதற்குப் பின்னர் உடனடியாக இரு எப்.பி. ஐ உயர் அதிகாரிகள் பணி ஓய்வுபெற முடிவெடுத்தனர். நெய்ல் ஜெ.கல்லகர் தேசிய பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருக்கும் தனது பதவியை விட்டுவிடப் போவதாக அறிவித்தார். செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றிய புலனாய்வுக்கு நாளாந்தம் தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கும் தோமஸ் ஜெ.பிக்கார்ட் அக்டோபர் 31அன்று முகவரிடம் தானும் கூட வெளியேறப்போவதாகக் கூறினார். இரு பணி ஓய்வுகளும் நவம்பர் 30ல் வரப் போகின்றன.

பிக்கார்ட் எப்.பி.ஐ-க்காக முந்தைய பல பயங்கரவாத புலன்விசாரணைகளைக் கையாண்டிருக்கிறார் மற்றும் அவர் 50 வயதை மட்டுமே உடையவராக இருக்கிறார். யுத்த சூழ்நிலைமைகளின் கீழ் அவரது திடீர் புறப்பாடு வழக்கத்துக்கு மீறியதாக இருக்கிறது. மற்றைய சூழ்நிலைமைகளில் செய்தி ஊடகமானது இதனை கடமையைக் கைவிடுவதற்கு ஒப்பாகக் கண்டித்திருக்கும், அல்லது மறுதலையாக அழிவுகரமான தோல்விக்குப் பிறகு எப்.பி.ஐ வீட்டைக் காலிசெய்வதன் எடுத்துக்காட்டு அவரை வெளியேற்றல் என்று புகழ்ந்து தள்ளி இருக்கும். பதிலாக, செப்டம்பர் 11 தொடர்பான புலனாய்வு விசாரணைக்கு முக்கிய பொறுப்பாக இருக்கும் மனிதனின் பணி ஓய்வு பெரும்பாலும் செய்தி ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை.

பேர்ள் துறைமுக முன்மாதிரி

செப்டம்பர் 11 பற்றி விசாரணை நடத்த மறுப்பானது, அத்தகைய ஆய்வு யுத்த நேரத்தில் பொருத்தமற்றது அல்லது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சுட்டிக் காட்டிக் கொள்ளும் பயிற்சியாக ஆகும் என்ற அடிப்படையின் பேரில் பல்வேறு விதமாக நியாயப்படுத்தப்படுகிறது.

கிளின்டன் நிர்வாகத்தின்அனுபவம் காட்டுகிறவாறு, இன்றைய வாஷிங்டன் பலிக்கடாவாக்கலில் ஈடுபடலிலும் அரசியல் வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ள விசாரணைகளை பயன்படுத்தலிலும் ஏதாவது தயக்கம் இருக்குமானால் அது அரிதாகவே இருக்கும். செப்டம்பர் 11 சம்பவம் 2001ல் நடைபெறாமல் பதிலாக 2000-ல் நடந்திருக்குமானால், காங்கிரசின் குடியரசுக் கட்சியினரின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என ஒருவர் கற்பனை செய்தே பார்க்கமுடியும். ஆனால் நியூயோர்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் R.W. ஆப்பிள் டிசம்பர் 14 அன்று குறிப்பிட்டதாவது: "இதுவரை வியப்பூட்டும் அளவில் அரசாங்கத்தின் உள்ளே உள்ள அல்லது அதற்கு வெளியில் உள்ள சிலபேரே வேலையை விட்டு விலகும் முகவாண்மைகளை குற்றம் சுமத்த விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர், தலைமையில் உள்ள ஜோர்ஜ் ஜெ.நெட்டை அழைப்பதற்கு சேர்ந்திசைவாய் குரல்கள் அங்கு இல்லை.

யுத்த நேரம் பிரதான விசாரணையை விலக்குகிறது என்ற விவாதத்தைப் பொறுத்தமட்டில், பேர்ள் துறைமுகம் பற்றிய முன்மாதிரி அதனை முற்றிலும் மறுதலிக்கிறது. தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள், பேர்ள் துறைமுகத்தில் இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய, ரூஸ்வெல்ட் உச்ச நீதிமன்ற நீதிபதி ஓவன் றொபர்ட்ஸ் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். அமெரிக்காவின் யுத்த முயற்சிகளுக்கு எந்தவித சிறு குறைவும் வராமல் விசாரணைக் குழு வாக்கு மூலங்களை சேகரித்தது, கண்டறிந்த அதன் முடிவுகளை வழங்கியது மற்றும் பேர்ள் துறைமுகத்தில் உயர் அதிகாரிகளைக் கண்டனம் செய்தது, அவர்களின் பதவிக்கு முடிவு கட்டியது.

இரண்டு பலமான எதிரிகளான ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கும் நாஜி ஜேர்மனிக்கும் எதிராக என்றுமில்லாதபடி இராணுவ அணிதிரட்டலில் ஈடுபட்டிருந்த அதேவேளை, அமெரிக்க அரசாங்கத்திற்கு விசாரணை நடத்துவது சாத்தியம் என்றால், பகைவன் என்று கூறப்படுவோர் உலகிலேயே மிக ஏழ்மையான நாட்டைத் தளமாகக் கொண்டுள்ள பயங்கரவாதிகளின் ஒருசிறு குழு எனும்பொழுது இன்று ஏன் அது முடியாததாக இருக்கிறது?

சிறைப்பிடிக்கப்பட்ட எட்டு ஜேர்மானிய நாசகாரர்கள் தொடர்பாக அணுகுவதற்கு இராணுவ முறைமன்றத் தலைமை இருக்கையை ரூஸ்வெல்ட் அங்கீகரித்த நடைமுறையை மேற்கோளாகக் காட்டி, வெள்ளை மாளிகையும் அதன் அடிவருடிகளும், பயங்கரவாதிகள் எனக் கூறப்படுவோரை இரகசிய இராணுவ நீதிமன்றத்தில் முன் நிறுத்துவதற்கு புஷ் மேல்நிலை ஆணை வழங்கலை நியாயப்படுத்துதற்கு இரண்டாம் உலக யுத்த முன்மாதிரியை வலிந்து கொள்ளுதலை செய்தனர். ஆனால் அவர்கள் "பதுங்கித் தாக்குதல்" எனப்படும் செப்டம்பர் 11 பற்றிய விசாரணைக்கு வரும்பொழுது, இரண்டாம் உலக யுத்தகால முன்மாதிரியை புறக்கணிக்கின்றனர்.

(ரூஸ்வெல்ட்டின் இராணுவ முறைமன்றத் தலைமை இருக்கை பற்றிய எடுத்துக்காட்டு ஒருவேளை சம்பந்தம் இல்லாமல் எடுத்துக்காட்டுவது, அவர் இரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டது யுத்த காலத்தில் இராணுவத் தேவையின் காரணமாக அல்ல, மாறாக உயர்மட்ட உளவு மற்றும் இராணுவ அதிகாரிகள் அரசியல் ரீதியான சங்கடத்தை எதிர்கொள்வர் என்பதன் காரணமாகத்தான். எட்டு ஜேர்மானிய நாசகாரர்களுள் இருவர் அமெரிக்கா வந்தடைந்ததும் தாங்களே அதிகாரிகள் பக்கம் திரும்பினர், ஆனால் எப்.பி.ஐ ஆரம்பத்தில் அவர்கள் கூறியதை நம்பமறுத்தது, அவர்களது முதல் தொலைபேசித் தொடர்பை "போலி அழைப்பு" எனக்கருதியது. எப்.பி.ஐ இயக்குநர் ஜெ. எட்கர் ஹூவர் இந்த அலட்சியத்தை மறைக்கவிரும்பினார், அதேவேளையில் யுத்தத் துறையானது எட்டுப் பேரும் புளோரிடாவிலும் லாங் தீவிலும் ஜேர்மன் நீர்மூழ்கி கப்பலில் வந்து இறங்கியதுடன் உள்ள சிக்கலை அகற்றல் தொடர்பாக அமைதியாக இருக்க விரும்பியது. நாஜி உயர் ஆணையகப்படி உண்மையானது, ஆனால் அமெரிக்க மக்களுக்கு தெரியாதது.)

விசாரணைக்கான புதிய முன்தள்ளல்

தங்களது ஆரம்ப கருத்துரைப்புக்களுக்குப் பின்னர் இரு மாதங்கள் கழித்து, டிசம்பர் 20 அன்று மெக்கெய்னும் லிபர்மேனும், வாரன் விசாரணைக் குழு அல்லது பேர்ள் துறைமுக விசாரணை மாதிரியில் இரு கட்சியினரும் அடங்கிய 14 பேர் கொண்ட விசாரணைக் குழுவை ஏற்படுத்துதற்கான மசோதாவை திரை நீக்கிக் காட்டினர். அதில் நான்கு உறுப்பினர்கள் புஷ்ஷால் தேர்ந்தெடுக்கப்படுவர், மற்றைய பத்துபேர்கள் இரு கட்சி காங்கிரஸ் தலைவர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். மெக்கெய்ன் முன்னாள் செனட்டர்கள் கேரி ஹார்ட் மற்றும் வாரென் ருட்மன் ஆகியோர் முந்தைய விசாரணைக் குழுவில் தலைமை ஏற்று இருந்தவர்கள் என்பதன் காரணமாக, அவர்கள் இணைத்தலைவர்களாக இருக்கும் சாத்தியத்தைக் கருத்துரைத்தார். அவ்விசாரணைக் குழு 1999-ல் எதிர்கால பயங்கரவாதத் தாக்குதலில் "அமெரிக்கர்கள் அமெரிக்க மண்ணில் இறக்க நேரும், சாத்தியமான அளவில் பெரும் எண்ணிக்கையில்" என முன்கணித்தது.

தானும் லிபர்மேனும் தங்களின் திட்டத்துடன் பொதுமக்களிடம் சென்றிருந்தோம் ஏனெனில் "அந்த அனைத்து முகவாண்மைகளுக்குள்ளும் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு எதிர்ப்பு இருக்கிறது" என்று மெக்கெய்ன் கூறினார்.

சட்டமன்ற மற்றும் நிர்வாக கிளைகள் இரண்டும் சம்பந்தப்பட்ட கூட்டு விசாரணை ஏன் தேவை என விளக்குகையில், மெக்கெய்ன் "செப்டம்பர் 11-ல் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாக முழுமையான, இருதரப்பும் பங்கேற்கும், சுதந்திரமான விசாரணையை நடத்தக் கூடிய தகுதி நிர்வாகிக்கோ அல்லது காங்கிரசுக்கோ இல்லை" என்றார்.

வெள்ளை மாளிகை பெண் பேச்சாளர் அன்னி உமாக், செயல்படா தன்மைக்கு புஷ் நிர்வாகத்தின் காரணத்தைத் திரும்பக் கூறிக்கொண்டு, இம்முன்மொழிவுகளுக்கு உறுதி கொடுக்காத பதிலை பின்வருமாறு கொடுத்தார். "அவற்றை மறுபரிசீலனை செய்வதில் நாம் முன்நோக்குகிறோம்" என்றார் அவர். "தற்போது ஜனாதிபதி பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில் கவனத்தை குவிமையப்படுத்தி இருக்கிறார்" என்றார்.

சுதந்திரமான விசாரணைக்கான புதிய அழைப்புக்களை செய்தி அறிவிக்கும் முகமாக நியூயோர்க் டைம்ஸ் கூறியதாவது: "ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை, செளத் டக்கோட்டா ஜனநாயகக் கட்சி செனட்டர் டோம் டாஷ்லே வெர்மாண்ட்டின் ஜனநாயகக் கட்சி செனட்டர் பாட்ரிக் ஜெ.லெஹாய் ஆகியோரது வீடுகளுக்கு அந்தராக்ஸ் கடிதங்கள் தொடர்பான குழப்பமான எதிர்வினை செனட்டை தாக்கி இருந்ததுடன், அது உயிரி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்கள் இன்மை உட்பட, அரசாங்கத்தின் முழுஅளவிலான ஆய்வுக்குத் தூண்டி விட்டிருந்தது என்று காங்கிரசின் மூத்த உதவியாளர் ஒருவர் கூறினார்."

இரகசியமான அமெரிக்க இராணுவ உயிரி யுத்த திட்டத்திலிருந்து பெறப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த உயிர்ம நுண்மங்கள் (ஸ்போர்கள்) சம்பந்தப்பட்டுள்ள, அந்தராக்ஸ் தாக்குதல்கள் என்று நாம் அறிந்துள்ளவற்றின் வெளிச்சத்தில் இந்த எசோப்பியன் மொழியை பொருள் உணர்ந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தராக்ஸ் தாக்குதல்கள் காங்கிரசின் ஜனநாயகக் கட்சித் தலைமையை அழிப்பதற்கான முயற்சியாக இருந்தன. இது சில ஜனநாயகக் கட்சியினரால் அங்கீகரிக்கப்பட்டது, மற்றும் மெக்லெய்ன் போன்றோர், தற்போதைய மற்றும் எச்சரிக்கையான மறுப்பை செய்வதற்கு அவர்களைத் தூண்டினர்.

அத்தகைய அரைமனதான முயற்சிகளில் எந்தவிதமான நம்பிக்கையையும் வைத்தல் முட்டாள்தனமாக இருக்கும். வாட்டர் கேட் மற்றும் 1973-76ல் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ குற்றங்கள் பற்றிய சேர்ச் விசாரணைக்குழு தொடக்கம் 1987ல் ஈரான்-கான்ட்ரா விவகாரத்தை றேகன் நிர்வாகம் சுவர் இட்டுத் தடுத்ததை உடைக்கத் தவறுதல், பதவி நீக்க விசாரணையாக உச்சத்தில் வளர்ந்த கிளின்டன் நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கான வலதுசாரி பிரச்சாரத்தின் முன்னர் நெடுஞ்சாண் கிடையாக விழுதல் வரையிலான ஜனநாயக உரிமைகள் மீதான அரச ஆத்திரமூட்டல்களுக்கு ஜனநாயகக் கட்சியின் எதிர்வினையானது, கடந்த கால் நூற்றாண்டில் நேராகக் கீழ்நோக்கி இறங்குவதாக இருக்கிறது

ஆத்திரமூட்டலும் யுத்தமும்

இந்த தொடரில் சுருக்கிக் கூறப்பட்ட தகவல்கள் அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்தில் பகிரங்கமாக வெளிவந்த உண்மைகளை பிரதிநிதத்துவம் செய்வன. செப்டம்பர்11க்கு இட்டுச்சென்ற காலப்பகுதியின் பொழுது மின்னணுவியல் இடைமறிப்புக்கள், இரகசிய கவனக் கண்கானிப்புக்கள் மற்றும் ஏனைய வளங்களின் அடிப்படையில், முழு அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கும் கிடைத்திருந்த மிகமதிப்புமிக்க புள்ளிவிவரங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கக் கூடியதாக இல்லை. ஆனால் இந்த மட்டுப்படுத்தப்பட்ட தேர்வும் கூட உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலானது முன்கூட்டி எதிர்பார்த்திராத தாக்குதல் என்ற அமெரிக்கக் கூற்றுக்களின் பொய்மைத்தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

எந்தக் குற்றத்தையும் ஆய்வு செய்யும்பொழுது, "யார் லாபமடைகிறார்கள்?" என்பது மையக் கேள்வியாக இருக்கவேண்டும். உலக வர்த்தக மையத்தின் அழிவில் பிரதான ஆதாயம் அடைபவர்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ளனர்: புஷ் நிர்வாகம், பென்டகன், சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ, ஆயுத தொழிற்துறை, எண்ணெய் தொழிற்துறை ஆகியன. இந்த துன்பியலில் அந்த அளவுக்கு ஆதாயம் அடைந்திருப்பவர்கள் அதனைக் கொண்டு வந்திருப்பதில் பங்களிப்பு செய்திருப்பார்களோ எனக் கேட்பது சரியானது தான்.

அமெரிக்க அரசாங்கம் அத்தகைய செயலை செய்திருக்க முடியும் என்று எண்ணிப்பார்த்தல் முடியாதது என்று நம்புகின்னறவர் யாரும் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்துவது நன்றாக இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலக வல்லரசாக முதன்முதலாக உருவானதிலிருந்து ஆரம்பத்தில் ஒவ்வொரு யுத்தத்திலும் வெளிநாடுகளில் மோதல்களில் தலையிடுவதற்கு அமெரிக்க மக்கள் காட்டும் இயல்பான தயக்கத்தினை வெல்வதற்கு, ஆளும் வர்க்கமானது அதேவிதமான சம்பவங்களையோ அல்லது அட்டூழியங்களையோ பற்றிக் கொண்டிருக்கிறது.

சில எடுத்துக்காட்டுகளில் போர் காரணமானது, வியட்னாமில் பெருமளவில் அமெரிக்கத் தலையீட்டிற்கு இசைவாணை வழங்கும் காங்கிரஸ் தீர்மானத்திற்கு வழி அமைத்துக் கொடுத்த 1964ன் டோன்க்கின் வளைகுடா நிகழ்ச்சி போல ஒட்டு மொத்தமாக புனையப்பட்டது. அல்லது சாக்குப்போக்கு --ஸ்பானிய- அமெரிக்க யுத்தத்துக்கு மேடை அமைத்துக் கொடுத்த, 1898ல் ஹவானா துறைமுகத்தில் மெய்ன் யுத்தக்கப்பலை அழித்த குண்டு வெடிப்பு போன்ற எதிர்பாரா நிகழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவற்றில் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு தேர்ந்தெடுத்த நிகழ்வானது, அமெரிக்க அரசாங்கத்தால் திரைமறைவில் கையாளப்படும் சூழ்ச்சியின் தன்மைக்கு கீழ்ப்பட்டதாக இருந்தது.

1915-ல் லூசிட்டானியா மூழ்குதலானது, முதலாவது உலக யுத்தத்தில் பிரிட்டிஷ்- பிரெஞ்சு பக்கத்திற்காக ஆயுதங்களை பயணிகள் கப்பல் எடுத்துச் செல்வதற்கான வில்சன் நிர்வாகத்தின் முடிவிற்கான முன்கூட்டிப் பார்க்கும் காரணமாக இருந்தது. ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல் நீர்மூழ்கிக்குண்டால் பயணிகள் கப்பலைத் தாக்கியபொழுது,1200 பேர்கள் உயிரிழப்பு விளைவித்த பொதுமக்களின் கோபமானது ஐக்கிய அமெரிக்க அரசுகள் யுத்தத்துக்குள் நுழைவதைத் தூண்ட உதவியது. அதுபோல பேர்ள் துறைமுகம் ருஸ்வெல்ட் நிர்வாகத்தால் முன்னறிதலாகப் பார்க்கப்பட்டது --குறிப்பிட்ட தேதி மற்றும் இடம் என்றில்லாவிட்டால், நிச்சயமாக முன்கூட்டிய ஜப்பானிய தாக்குதல் நிகழத்தக்கதாக இருந்தது-- ஐக்கிய அமெரிக்க அரசுகள் 1941 கோடையில் எண்ணெய் மற்றும் உலோகத் துண்டுகளை கப்பலில் அனுப்புதலை ஒருமுறை துண்டித்ததும் நிகழத்தக்கதாக இருந்தது.

சூழ்ச்சி கையாளுதலின் குரூரமான சம்பவம் 1990 ஆகஸ்டில் குவெய்த்தில் ஈராக்கிய ஆக்கிரமிப்பாக இருந்தது, பாரசீக வளைகுடாவிலும் அரேபியத் தீபகற்பத்திலும் பெரிய அளவில் --மற்றும் நிரந்தரமானதுபோல் காணப்படும்-- அமெரிக்கத் துருப்புக்களையும் யுத்த விமானங்களையும் நிறுத்துவதற்கான நிகழ்ச்சியாக ஆனது.

1980கள் முழுவதும், சதாம் ஹூசைன் மெய்நடப்பில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் இராணுவக் கூட்டாளியாக இருந்தார், ஈரானுக்கு எதிரான அவரது யுத்தத்தில் அமெரிக்க உளவுத் தகவல்களைப் பெற்றார், யுத்தத்துக்கு உதவியாக அமெரிக்கா அனுமதித்த ஆயுதங்களைப் பெறவும் செய்தார். 1988ல் ஈரான் யுத்த நிறுத்தத்தை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர், அது பெரும்பாலும் ஈராக்குக்கு சாதகமாக இருந்தது அதன் பின்னர் அமெரிக்கா (மற்றும் செளதி) வின் கவலை யுத்தத்தில் புடம்போடப்பட்ட பத்து லட்சக் கணக்கான ஆட்களைக்கொண்ட இராணுவத்துடன் பாக்தாத் பாரசீக வளைகுடாவில் மேலாதிக்கம் செய்வதிலிருந்து அதனைத் தடுப்பதாக இருந்தது.

தொடரான மோதல்கள் பின்நிகழ்வாய் வந்தன, பெரும்பாலும் குவைத்தால் தூண்டிவிடப்பட்டன. எண்ணெய் வளமிக்க எமிரேட், ஈராக்கிற்கு அளித்த யுத்த கடன்களை உடனடியாக திரும்ப செலுத்துமாறு கோரியது, அதேவேளை அது எல்லையில் பெரும்பாலும் ஈராக்கிய பகுதியில் அமைந்துள்ள, ருமைலா எண்ணெய் வயலில் இருந்து எண்ணெயை எடுத்தது, இவ்வாறு ஈராக்கை அது கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியது. பதிலடியாக, சதாம் ஹூசைன் குவைத்தை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் திருடப்பட்டு, இழந்துபோன ஈராக்கின் ஒன்பதாவது மாகாணம் என்று விவரித்து, இராணுவ அச்சுறுத்தல் பிரகடனத்தில் ஈடுபட்டார்.

இந்த மோதலுக்கான அமெரிக்க எதிர்வினையானது குறிப்பிடத்தக்கவாறு ஒதுங்கி இருத்தலாக இருந்தது. ஈராக் ஆக்கிரமிப்புக்கு ஒரு மாதம் முன்னர், அவரது அப்போதைய புகழ் பெற்ற சந்திப்பில், அமெரிக்க தூதர் ஏப்ரல் கிளாஸ்பி குவைத்துடனான ஈராக்கின் சர்ச்சையானது அதில் சம்பந்தப்பட்ட இருவரும் தீர்க்க வேண்டிய விஷயம், அதில் அமெரிக்காவிற்கு சம்பந்தம் இல்லை என்று அறிவித்தார். இதற்கிடையில், கூட்டுப்படைத் தளபதிகளின் அப்போதைய தலைவரான கொலின் பாவெலின் ஆணைகளின் பேரில், பாரசீக வளைகுடாவில் ஈராக்கிற்கு எதிரான நோக்கம் கொண்ட பெரும் அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கான திட்டங்களை தளபதி நோர்மன் ச்வார்ட்ஸ்கோப் வரைந்தார். இந்த யுத்த ஆட்டத்தின் திட்டம் 1990 ஜூலையில், கிளாஸ்பி-ஹூசைன் சந்திப்பு நடந்த சிலநாட்களுக்குள் முடிவுற்றது.

ஈராக் இராணுவத்தை நொருக்கவும் நீண்டகால ஆவல் கொண்ட அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை, எண்ணெய் வளம் மிக்க பாரசீக வளைகுடாவில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை நிறுவுதலை நிறைவேற்றவும் ஒரு சாக்குப்போக்கை வழங்குதற்கு, அமெரிக்கா ஈராக்கிய தாக்குதலை தந்திரமாக ஊக்குவித்தது என்று நம்புவதற்கு போதியகாரணம் இருக்கிறது. அதே வழியில், புஷ் நிர்வாகமானது உலக வர்த்தக மைய அழிவை, மத்திய ஆசியாவிலும் கேஸ்பியன் எண்ணெய்ப் படுகையிலும் அமெரிக்க இராணுவத்தினரை நிறுத்துதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தி இருக்கிறது. இந்தப் பிராந்தியத்து தோண்டி எடுக்கப்படாத எண்ணெய் வள சேர்ம இருப்பு இருபத்தோராம் நூற்றாண்டின் பாரசீக வளைகுடாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத் மீதான ஈராக்கிய ஆக்கிரமிக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகள் சதாம் ஹூசைன் முழு நாட்டையும் கைப்பற்றுவார் என தாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறும் விதமாக மேற்கோள் காட்டப்பட்டார்கள். வேறுவார்த்தைகளில் சொன்னால், ஐக்கிய அமெரிக்க அரசுகளை நடுவராகக் கொண்டு வரும் மற்றும் இவ்வாறு வளைகுடா பிராந்தியத்தில் அதனுடைய பாத்திரத்தைப் பலப்படுத்தும் ஒரு எல்லைத் தகராறாக மட்டுமே எதிர்பார்த்து, அவர்கள் அவரது வேட்கையை ஊக்குவித்தனர். அதேவிதமான தவறான கணிப்பீடு செப்டம்பர் 11 விமானக் கடத்தல்களிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம், அதன் விளைபயன்கள் எதிர்பார்த்து இருந்திருக்கக் கூடிய அளவை விட அதிகமான அளவு அழிவுகரமானவையாக இருந்தன.

தற்போது இருக்கின்ற உண்மைகளின் அடிப்படையில், உலக வர்த்தக மைய அழிவு பற்றி அமெரிக்க அரசாங்கம் பெற்றிருந்த முன்கூட்டிய அறிவின் துல்லியமான அளவை தீர்மானித்தல் சாத்தியமில்லாதது. ஆனால் முற்று முழுதான விசாரணைக்கான கேள்வி தகுதி உடையதாக இருக்கிறது.

எப்.பி.ஐ யும் சி.ஐ.ஏ யும் குற்றத்தனமான புறக்கணிப்பைக் குவித்துக் காட்டும் வண்ணம் மடைத்தனமான குற்றத்திற்குரியோராய் இருந்தனர் என்ற மாற்று விளக்கங்கள் அமெரிக்க அரசாங்கத்தை நல்லவிதமாக காட்டாது. அமெரிக்க மக்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் வரையறை அற்ற முடிவில்லாத இராணுவ நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்குமாறு கேட்கப்படுகிறார்கள், அதுவே ஆயிரக்கணக்கான அதன் சொந்தக் குடிமக்களின் படுகொலையை ஒன்றில் அது அனுமதித்தது அல்லது தடுப்பதற்குத் தகுதியில்லாததாய் ஆனது என்பதை நிரூபித்துள்ளது.

(முடிவுற்றது)