World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Famine intensifies in southern Africa

தெற்கு ஆபிரிக்காவில் பஞ்சம் அதிகரிக்கின்றது

By Barry Mason and Chris Talbot
20 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

சிம்பாவே, சாம்பியா, அங்கோலா, மாலாவி, லுசோதோ, சுவாசிலாந்து, மற்றும் மொசாம்பிக் ஆகிய தெற்கு ஆபிரிக்க நாடுகளிலுள்ள 12.8 மில்லியன் மக்கள் நேரடியான பஞ்ச நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக புதிய சர்வதேச கணிப்பொன்று காட்டுகின்றது. இந்த நாடுகளிலிருந்து வந்த அறிக்கைகள் இது சம்பந்தமான கவனமான மதிப்பீட்டையும் பார்வையையும் வழங்குகின்றன.

ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்ட அமைப்பும் மற்றும் உணவு விவசாய நிறுவனமும் இக்கணிப்பை வழங்கியுள்ளன. இப்பிராந்தியத்திலுள்ள 4.6 மில்லியன் மக்களுக்கு தற்போது WFP உணவு வழங்கி வருகின்றது. கடந்த சில வாரங்களாக இத்தொகையிலும் பார்க்க இரண்டு மடங்குகள் அதிகமாக இருந்தன. உடனடியாக 1.2 மில்லியன் தொன் உணவு உதவிகளுக்கான அவசர அழைப்பை நன்கொடையாளர்களின் உதவியுடன் விடுக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடத்திற்கு இன்னமும் 4 மில்லியன் தொன் அதிகமாகத் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உணவு உதவிகளை வழங்கிவரும் ஒரு அரச சார்பற்ற (NGO) நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், சிம்பாவேயில் பயனம் மேற்கொண்டு ஒரு மதிப்பீட்டை செய்ததுடன் ''தற்போது பாரியளவு தலையீடுகள் தேவையாக இருப்பதுடன், பரந்தளவிலான உணவு உதவிகளும் தேவை. சோமாலியாவில் 1991-92 லும் அல்லது எதியோப்பியாவில் 1984 லும் நிகழ்ந்தது போன்ற அழிவுகளை தடுத்து நிறுத்தவேண்டும்'' என்றார். மாலாவியின் நிலைமைகள் பற்றி ''ஒரு தீர்க்கமான நடவடிக்கைகள் அங்கு எடுக்காது போனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு உயிரிழப்பார்கள் என்பதே எமது பயமாகும்'' என மேலும் இந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலாவி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாகும். அங்கு ஆயிரம் மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர். மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பஞ்சத்துக்கு முகம் கொடுத்துள்ளதுடன் 485.000 தொன் உணவு உதவிகள் அவர்களுக்கு அவசரமாக தேவைப்படுகின்றது.

சிம்பாவேயில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் மக்களுக்கு -சனத்தொகையில் அரைவாசிப் பேர்- உணவு உதவிகள் தேவைப்படுவதுடன் 1.5 மில்லியன் தொன் சோளம் உற்பத்தியானது அங்கு குறைந்துள்ளது. கரார் மற்றும் புலாவயோவில் (Harare and Bulawayo) சோளத்துக்காக நீண்ட வரிசைகளில் மக்கள் அங்கு காத்திருக்க வேண்டியுள்ளது.

சாம்பிய அரசாங்கமானது தேசிய அழிவாக இதனை அறிவித்துள்ளது. நான்கு மில்லியன் மக்கள் அங்கு வறுமைக்கு முகம் கொடுத்துள்ளதுடன் நாட்டில் யூலை ஆகஸ்ட்டுக்கான உணவு இருப்பும் குறைந்து செல்கிறது. நாட்டின் தென்பகுதியில் முழுமையான விளைச்சல் வீழ்ச்சியினால் அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த வருடம் 30 வீதமான சோள உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

தொடர்ந்த இரண்டு வருடங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் வரட்சியினால் இப்பிராந்தியம் பூராக அறுவடை குறைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சீரமைப்புக் கொள்கைகளை நிறைவேற்றியதால் அங்கு பொருளாதாரம் மோசமாக கீழ் இறங்கியுள்ளது. சிம்பாவேயில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை எதிர்த்து தேசிய தன்னிறைவுக் கொள்கைகளுக்கு நகர்ந்த சானு (Zanu PF) ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் முற்றுமுழுதாக பொறிந்து போயுள்ளது. இப்பிராந்தியத்தில் சிம்பாவே மிகவும் சிறந்த விவசாய நிலத்தைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்தின் நில பறிப்பு திட்டம் காரணமாக அங்கு பாரியளவு நிலங்கள் வெள்ளையர்களுக்கு சொந்தமாக இருக்கின்றன. சிறிய விவசாயிகள் இதனுடன் இணைந்து போவதும் முதலீடு செய்வதும் அங்கு தோல்வியடைந்துள்ளன. ணிறீ ழிவீமஷீ பற்றி நிபுணர்கள் கவனம் செலுத்தி வருவதுடன், பசுபிக் சமுத்திரத்தின் ஒரு பகுதி வெப்பமடைவதால் காலநிலை மோசமடைந்து இந்த வருடம் மீண்டும் விளைச்சலை அது பாதிப்படையச் செய்யலாம்.

உலகத்திலேயே இந்த நாடுகளில்தான் அதிகளவிலான எயிட்ஸ் பாதிப்புக்கள் இருக்கின்றன. மக்கள் தொகையில் கால்வாசிப் பேர்களுக்குமேல் இந்நோய் தொற்றியுள்ளன. மிகவும் பலவீனமடைந்திருக்கும் இம் மக்களை இன்னபிற தொற்றுநோய்களும் பஞ்சமும் அவர்களது எதிர்ப்பு சக்தியை இல்லாது செய்துள்ளன.

இதற்கான மேற்கு அரசுகளின் பதில்கள் அக்கறையின்மையுடன் கூடிய அரசியல் தாக்குதல்களை ஆபிரிக்க அரசகளின்மீது பிரயோகிப்பதாக உள்ளது. இவ் அழிவுகளுக்கான பொறுப்பு உள்ளூர் அரசுகள் என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளால் பெரிதாகக் காட்டப்படுவதற்கு மாறாக ''சுதந்திரச் சந்தை'' முறைகளையும் அதன் பாரிய கொள்கைகளையும் இங்கு அமுல்படுத்துவதாலேயே அதிகமான பஞ்சத்துக்கு பாரிய பொறுப்பாகவுள்ளது. அதன் செயல்முனைப்பான தாக்குதல்களானது ஒப்பீட்டளவில் கடந்த பத்து வருடத்துக்கு முதல் ஏற்பட்ட பஞ்சத்தைப் போன்று இதுவும் உள்ளது.

அமெரிக்க சட்டசபையிலுள்ள சர்வதேச உறவுகளுக்கான குழுக் கூட்டத்தில் உரையாற்றிய USAID ன் பேச்சாளர் ஆன்ட்ரூ நாட்சியஸ் ''பஞ்சத்தை தடுத்தல், இது ஒருவருடைய பொறுப்பல்ல'' எனவும் இது சர்வதேச சமூகத்தால் முடியுமென்று கோரிக்கை விடுத்ததுடன் ''பஞ்சத்தை முன்னே சுட்டிக்காட்டுபவர்'' போன்று இந்தப் புதிய நிலைமையில் திருப்தி அடைந்து கொண்டார். 200 மில்லியன் டொலர் அவசர உதவிகளை முன்மொழிந்த ஜனநாயகவாதிகளின் பக்கம் நாட்சியஸ் திரும்பினார். ''தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குவிந்துள்ள சடலங்களும் பாரிய புதைகுழிகளும் தோற்றுப்போன எமது கொள்கைகளை வெளிப்படுத்திக்காட்டின'' என ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ரொம் லாந்தோஸ் குறிப்பிட்டார். நாட்சியஸ் இதற்குப் பதிலளிக்கையில் ''இங்கும் மற்றும் உலகத்திலுள்ள மற்றைய பகுதிகளுக்கும் அவசர தேவைக்கான போதுமானளவு உணவை நாம் கொண்டிருக்கின்றோம் என நம்புகின்றோம்'' என்றார்.

WFP னுடைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கும் பிரநிதித்துவமானது 75 வீதமானது என நாட்சியாஸ் குறிப்பிட்டார். அமெரிக்கா 132.710 தொன் உணவு உதவிகளை வழங்கியுள்ளது. அதன் பெறுமதி 68.4 மில்லியன் டொலர்களாகும். இது உடனடியாக தேவைப்பட்டதில் பத்தில் ஒன்றுக்கு சற்று அதிகமாகும். WFP யின் உடனடி நடவடிக்கைகளுக்காக 56 வீதம் பற்றாக்குறையுள்ளதை நாட்சியாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். WFP மற்றும் அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் (NGO) இப் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு துறைமுகங்கள் மற்றும் வீதி வசதி குறைபாடுகளினால் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். தனியார் மயமாக்கலினால் 1990 களில் நிகழ்ந்த பஞ்ச நிலைமைகளிலும் பார்க்க தற்போது அவர்கள் குறைந்த செயல் ஆற்றலுடனேயே உள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு நாட்சியஸ் வழங்கிய அறிக்கைகளில், உணவுக் குறைபாடுகளுக்கு சிம்பாவே ஜனாதிபதி ரொபேட் முகாபேயை ''இந்த அடக்குமுறையாளனே நேரடிப் பொறுப்பு'' என கண்டனம் செய்தார். ''தாராளவாத'' பொருளாதாரக் கொள்கையை சிம்பாவே நிராகரித்ததன் விளைபயனே உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் என பாராளுமன்ற கூட்டத்தில் அவர் அறிவித்தார். அத்துடன் அவர் மேற்கு அரசாங்கங்கங்கள் திணித்த, ''இந்தப் பற்றாக்குறையை நிறுத்த, தனியார் துறையை அனுமதித்த கொள்கைகளை மூடுவதால்'' உணவு விலைகளை வீழ்ச்சியடையச் செய்யலாம் என்ற யோசனையும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் உலக உணவு மாநாடு கடந்த வாரம் ரோம் நகரில் நடந்தபோது ஆபிரிக்க பஞ்ச நிலைமை அங்கு காட்சிக்கு வந்தபோது, மேற்கு அரசாங்கங்கள் தமது கவலையற்ற பார்வையை அங்கு வெளிப்படுத்திக் கொண்டன. மாநாட்டுக்கு மேற்கு நாடுகளிலிருந்து ஸ்பெயினும் இத்தாலியும்தான் தமது நாட்டுத் தலைவர்களை அனுப்பி வைத்தன. ஏனெனில் ஸ்பெயின் ஐரோப்பிய யூனியன் தலைமையில் இருப்பதாலும் மற்றும் இத்தாலி அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதனாலாகும். ஜனாதிபதி பெர்லுஸ்கோனி உலக கால்பந்துப் போட்டிகளில் இத்தாலி கலந்து கொள்ளும் போட்டியைப் பார்ப்பதற்கு வசதியாக மாநாடு இரு மணி நேரத்துக்கு முன்னரே முடிக்கப்பட்டது. உலகிலுள்ள பஞ்சம் தொடர்பாக இதல் கலந்து கொண்ட கீழ்நிலை பிரதிநிதிகளின் பற்றுதலும் அக்கறையையும் இது நிறுவிக்காட்டுகின்றது. மேற்கு அரசாங்கங்கள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்த மாநாட்டைப் பாவித்தன. மாநாட்டுக்கு முகாபேயின் பிரசன்னமானது ''வெறுப்புக்குரியது'' என ஐரோப்பிய யூனியனின் உதவிக் கமிஷனர் போல் நெல்சன் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் மாநாடு மேலும் பணத்துக்கு அழைப்புவிடுவதில் ''அர்த்தமில்லை'' என்றார். உலகின் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் வாழும் எண்பது வீதமான மக்கள் பசி பட்டினியுடனே வாழ்கின்றனர். ஆகவே ''பிரச்சனைகளுக்கு பாரிய தொகை பணத்தை அள்ளி வீசுவதில் பிரியோசனமில்லை'' என்றார். தற்போதைய உணவு உதவிகளானது ''தவிர்க்க முடியாத'' இருந்தாலும் இது பின்னர் வெட்டுக்குள்ளாகும்.

முகாபேயினுடைய கண்டனங்களுக்கு புறம்பாக, அமெரிக்க அதிகாரிகளின் முழுக் கவனமும் இம் மாநாட்டில் உயிரியல் தொழில்நுட்பத்தை விவசாய உற்பத்திக்கு அதிகரிப்பது தான் இதற்கான பாதை என்பதில் இருந்தனர். அங்கே என்ன விதமான விவசாயம் என்பது பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா தனது உயிரியல் காப்பிரேசன்களுக்கான ஆதரவிற்காக மாநாட்டை தெளிவான விதத்தில் திசை திருப்பியது. அது மரபியல் முறைகளினால் மாற்றியமைக்கப்பட்ட உணவுகளுக்கான ஆதரவிற்கும் ஐரோப்பிய யூனியனால் தடைசெய்யப்பட்ட இவற்றிற்கு எதிராகவும் இருந்தது. சர்வதேச உறவுகளுக்கான குழு மன்றத்தில் நாட்சியஸ் வழங்கிய உரையில் சிம்பாவேயானது ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட மரபியல் முறைகளினால் மாற்றியமைக்கப்பட்ட தானியத் தடை உதாரணத்தைப் பின்பற்றுவதை குறைந்தபட்சம் நிறுத்த வேண்டும் என்றார். ''இது செய்தற்கரியது, இது நடக்க முடியாது, இது இனம் காணப்பட்ட விரிவான உணவுவகைகளின் தேவை என்பதே அமெரிக்க அரசாங்கத்தின் பதிலாகும்''

தெற்கு ஆபிரிக்கா முகம் கொடுக்கும் பிரச்சனைகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இப் பிராந்தியத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் தாக்கத்தின் விளைவுகளை கவனத்தில் எடுக்க வேண்டிருக்கும். எதிர்ப்புக்களை நசுக்கி பொருளாதார தேசியவாதத்திற்கு சிம்பாவே திரும்பியிருந்தாலும், அரச செலவீனங்களை வெட்டித் தள்ளுதல் மற்றும் தனியார்மயப்படுத்தல் என்பனவற்றிற்காக மேற்குலகிலிருந்துவரும் அழுத்தங்களுக்கு நம்பிக்கையிழந்த பதில் நடவடிக்கை இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

மாலாவியில் பஞ்சம் உருவாகியதற்கான விபரமான ஆய்வுகள் உள்ளன. சர்வதேச நாணய நிதியமானது மாலாவி அரசாங்கம் தனது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக அங்கு கையிருப்பிலிருந்த தாணியங்களை விற்றுத் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. இதை தனியார் வர்த்தகர்கள் வாங்கி தமது இலாபத்திற்காக பதுக்கி வைத்ததுடன் அதன் விலைகளை பஞ்ச நிலைமையிலும் உச்சத்திற்கு விற்றுத் தீர்த்தார்கள் என்பதை பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்ட Action Aid உதவி நிறுவனம் மேற்கோள் காட்டியது. கையிருப்பிலிருந்த உணவுத் தானியங்களை முற்றுமுழுதாக விற்கக் கூறவில்லையென சர்வதேச நாணய நிதியம் தற்பொழுது கூறியபோதிலும் இந்த உணவு நெருக்கடியின் விளைவாக நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியதற்கான பொறுப்பு உதவி வழங்கும் கொடையாளர்கள் அல்ல. ''கையிருப்பிலிருந்த தானிய மூலோபாயத்திற்கு என்ன நடந்தது என்பதுபற்றி கண்டுபிடிக்க அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; தானியங்கள் நாட்டுக்குள் இருந்திருக்குமானால் அவைகள் சந்தைக்கு வந்திருக்கும்; அரசியல்வாதிகள் இந்த நெருக்கடியைப் பாவித்து கொள்ளையடித்திருந்தால் அது அவர்களின் சொந்தப் பெட்டகத்துக்குள் சென்றிருக்கும்'' என மேலும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

1991 ன் நிலைமையின் அடிப்படைக் கூறுகளை ஒப்பீடு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் மாலாவியினுடைய விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த அரசாங்கத்துக்கு சொந்தமான களஞ்சியத்தில் அவை வைக்கப்பட்டன. கிராமப் புறத்திலுள்ள விவசாயிகளின் பஞ்சத்தை தடுப்பதற்காக அவை நெடுந்தொலைவுப் பிரதேசங்களாக இருந்த பொழுதும் அங்கு உணவுப் பொருட்கள் நியாயமான விலைக்கு விற்க முடிந்து. தற்போது மாலாவி சர்வதேச நாணய நிதியத்தினது கட்டளைகளைத் பின்தொடர்ந்து உணவுச் சந்தைகளை ''சுதந்திர'' மாக்கியுள்ளது. அந்த அறிக்கை குறிப்பிடுவதுபோல, ''சர்வதேச நாணய நிதியத்தினது மிகக் கடுமையான விதிமுறை மற்றும் கொடையாளர்கள் தலைமை தாங்கும் பொருளாதாரக் கொள்கை'' ஆகியவையே உணவுப் பற்றாக்குறைக்கு பொறுப்பானவர்களாகும். இதன் விளைவு உணவு சிறிது சிறிதாக குறிப்பாக கிராமப் புறத்தில் குறைந்து போனது. 2001 ஆண்டு பிற்பகுதி முழுவதும் உணவுப் பொருட்களின் விலைகள் பத்து மடங்குகள் உயர்ந்தன. இது ஏற்கனவேயே வறுமையிலுள்ள மக்களை எட்ட முடியாத இடத்துக்கு இட்டுச் சென்றது.

Top of page