World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Palestinians march in Gaza to demand jobs

காசாவில் வேலைகள் கோரி பாலஸ்தீனியர்கள் ஊர்வலம்

By David Cohen
4 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

பாலஸ்தீனிய நிர்வாகம் (PA) தங்களுக்கு தொடர்ச்சியான வேலையின்மைக்கான உதவிகளையாவது அல்லது வேலைகளையாவது தருமாறு கோரி காசா மாநகரத்தில் ஜூலை1ல், 5000 அளவில் மதிப்பிடக்கூடிய பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தினர் இஸ்ரேலில் வேலை செய்தனர் மற்றும் காசா பாலை நிலத்தில் இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக கடந்த 22 மாதங்களாக வேலை இன்றி இருக்கின்றனர்.

எதிர்ப்பானது பாலஸ்தீனிய நிர்வாகத் தலைமையை நோக்கிய பல தொழிலாளர்கள் மத்தியில் கீழ் இருக்கும் சமூக குரோதத்தின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக இருக்கிறது, அது தொழிலாள வர்க்கத்தின் துன்பத்தைத் தணிப்பதற்கு ஒன்றும் செய்யவில்லை. கிட்டத்தட்ட ஒஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மற்றும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை ஏற்படுத்திய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், அமெரிக்க செல்வாக்கால் தூண்டப்பட்ட பேச்சுவார்த்தைத் தீர்வு மூலம் சுதந்திரத்தைப் பெறுவதற்கான அரபாத்தின் வாக்குறுதி கந்தல் கந்தலாகி இருக்கிறது.

பாலஸ்தீனியர்கள் புதுப்பிக்கப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் இரும்புக் காலின் கீழ் மீண்டும் இருக்கின்றனர், அது 2000 பேரை இறக்கச்செய்ததோடு பரந்த பெரும்பான்மை மக்கள் திரளினரை ஆற்றொணா வறுமையில் ஆழ்த்தி உள்ளது. செப்டம்பர் 2000ல் தற்போதைய இண்டிபாடா ஆரம்பிப்பதற்கு முன்னர், சுமார் 125,000 தொழிலாளர்கள் இஸ்ரேலில் , கூட்டாக தினமும் 3.4 மில்லியன் டாலர்களை பாலஸ்தீனியப் பொருளாதாரத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். பாலஸ்தீனிய நிர்வாகத்தின்படி, வேலையின்மையானது, இஸ்ரேலின் அண்மைய உள்ளேறித்தாக்குதலுக்கு முன்னர் ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டிருந்த 44 சதவீதத்திலிருந்து மேல்நோக்கி, தற்போது வேலைசெய்வோரில் 78 சதவீதத்தில் நிற்கிறது.

வேலை இல்லாத தொழிலாளர்கள் பாலஸ்தீனிய நிர்வாகத்தை, வெளிநாட்டு நன்கொடைகளை அது விருப்பம் கொண்டுள்ள நோக்கத்திற்கானதிலிருந்து- இஸ்ரேல் மேற்குக்கரை மற்றும் காசா எல்லைகளை மூடியதன் காரணமாக வேலையில்லாது ஆக்கப்பட்டவர்களின் துன்பத்தைத் தணிக்கப் பயன்படுத்துமாறு கோருகின்றனர். இந்நாள்வரை வேலையில்லா தொழிலாளர்கள் NIS500 அல்லது NIS600 ($150) கொண்ட ஒன்று அல்லது இரண்டு பணப்பட்டுவாடாக்களை மட்டுமே பெற்றனர்.

எதிர்ப்பு ஊர்வலத்தினர் பாலஸ்தீனிய தேசிய கவுன்சில் கட்டிடத்தின் வெளியில் கூடினர் மற்றும் அரபாத்தின் குண்டு போடப்பட்ட தலைமையகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தினர் அரபாத்தினது வளாகத்தின் துருப்பிடித்த இரும்புக் கதவுகளை உடைத்து, "வேலை கொடு! உணவு கொடு!" என்று முழங்குகையில், பாதுகாவலர்கள் அருகில் நின்றனர். அவர்கள் பாலஸ்தீனிய நிர்வாகத் தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை எழுதிய அட்டைகளுடன், ஏரியல் ஷரோனின் இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டித்தும்கூட அட்டைகளை ஏந்திச் சென்றனர். மாதிரி முழக்கங்கள் "வேலை பிச்சை வேண்டாம்" மற்றும் "காசாவை மூடியதை விலக்கு" என்று குறிப்பிட்டன. உயிர்வாழ்வதற்கான போராட்டத்தினைக் குறியீடாகக் காட்டுதற்கு சிலர் பிசா ரொட்டியை அசைத்துக் காட்டினர், அதேவேளை ஏனையோர் "பல லட்சங்கள் எங்கே?" எனக் கேட்டு பாலஸ்தீன நிர்வாகத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினர்.

25 வயதான தாரெக் என்பவர் உலக சோசலிச வலைதளத்திடம் கூறியதாவது," நாங்கள் 5000 பேர் இருந்தோம். மாநகரின் மையத்திலுள்ள பாலஸ்தீனிய தேசிய கவுன்சில் கட்டிடத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்வதும் ஜனாதிபதி யாசிர் அரபாத் தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்வதும் எமது முடிவாக இருந்தது. எம்மில் எத்தனை பேர் வறுமையில் இருக்கின்றனர் என்பதை அவர் பார்ப்பதற்கு விரும்பினோம்."

தாரெக் விவரித்ததாவது, "இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து வாபஸ் வாங்கிக் கொண்ட பின்னர், அரபாத் பாலஸ்தீனிய தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தை நிறுவுவார் என நாங்கள் நம்புகிறோம். அதற்கு இணையான ஒரு நிறுவனம் இஸ்ரேலில் இருக்கின்ற போதிலும், அது ஒரு போதும் நடக்கவில்லை. இஸ்ரேலியர்கள் எங்களிடமிருந்து பணத்தை எடுத்தார்கள் மற்றும் அவர்கள் அரபாத்திடம் உடன்பாடு செய்துகொண்ட பின்னர், அவர்கள் அதனை அவருக்குக் கொடுத்தார்கள். எங்கே எங்களது பணம்? உண்மையில் ஒருவருக்கும் தெரியாது. ஒன்று மட்டும் உறுதி: அது எங்களது சட்டைப் பையில் இருக்கவில்லை."

"நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம், ஒரு ஊழல் அரசைக் கொண்டிருக்க நாம் சம்மதிக்க மாட்டோம். 2000-ன் முடிவில் எமது விடுதலைக்காகப் போராடத் தொடங்கிய பொழுது, மத்திய கிழக்கில் உள்ள எங்களது சகோதரர்கள் எங்களுக்குப் பணம் அனுப்பினர். எங்கே அந்தப் பணம்?"

See Also :

இஸ்ரேலிய மறுப்பாளருடன் நேர்காணல்: "நாங்கள் ஒரு புதிய தலைமையை அமர்த்துவோம்"

பி.எல்.ஓ தலைவர் புஷ்ஷூக்கு சிரம் சாய்த்தார்

Top of page