World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Washington demands impunity
US pushes Europe to the brink on international court

வாஷிங்டன் விலக்கீட்டு உரிமையைக் கோருகிறது

அமெரிக்கா ஐரோப்பாவை சர்வதேச நீதிமன்றத்தின் விளிம்பில் தள்ளுகிறது

By Bill Vann
4 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பதட்டங்கள் குளிர் யுத்த முடிவிற்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டல் நடவடிக்கையினைத் தொடர்ந்து அதன் உச்ச நிலையில் இருக்கின்றன. திங்களன்று அங்கு ஐ.நா "அமைதி காக்கும்" பணிக்குழுவை பொஸ்னியாவிற்கு விஸ்தரிப்பதைத் தடைசெய்ய வாஷிங்டன் அதன் ரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பயன்படுத்தியது மற்றும் சர்வதேச ரீதியாக அதேவிதமான நடவடிக்கைகளை புறக்கணிக்கப் போவதாக அல்லது மூழ்கடிக்கப் போவதாக அச்சுறுத்தியது.

புஷ் நிர்வாகமானது புதிதாக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) அமெரிக்க இராணுவத்தினரையும் குடிமக்கள் அதிகாரிகளையும் போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்வதிலிருந்து முற்று முழுதாக விலக்கீட்டு வைப்பதற்கான அதன் கோரிக்கையில் ஐரோப்பிய கூட்டாளிகளை விளிம்பிற்கு தள்ளுவதைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

அதன் பூகோள தலையீடுகள் எந்த சர்வதேச அங்கத்திற்கும் பதில்சொல்லும் பொறுப்புடையதல்ல என்ற அமெரிக்க வலியுறுத்தலுக்கும் அந்த நடவடிக்கைகளின் வன்முறைத்தன்மை மற்றும் சூறையாடும் தன்மை ஆகியனவற்றுக்கும் இடையிலான நேரடித்தொடர்பு ரத்து (வீட்டோ) அதிகார சம்பவத்தில், ஆப்கான் குடிமக்கள் மீதான இன்னொமொரு படுகொலையால் கோடிட்டுக் காட்டப்படுகிறது. அண்மைய கொடூரம் கல்யாணக் கூட்டம் மீது வானிலிருந்து குண்டு போட்டதாகும், அது நூற்றுக் கணக்கானோரை கொன்றது அல்லது காயப்படுத்தியது- அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

கடந்த நவம்பர் டிசம்பரில் ஆயிரக் கணக்கான தலிபான் சிறைக் கைதிகளை மொத்தமாகக் கொலைசெய்ததில் அமெரிக்கா பங்கேற்றதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க இராணுவ படைகள் ஈராக்கில் ஒரு முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயாரிப்பு செய்து வரும் அதேவேளையில், பிலிப்பைன்சில், யேமனில், கொலம்பியாவில், முன்னாள் யூகோஸ்லாவியாவில் மற்றும் ஏனைய பலநாடுகளில் நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.

சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளில் முடியக்கூடிய, இந்த பகுதிகளில் ஏதாவது ஒன்றில் அமெரிக்க போர்க் குற்றங்கள் பற்றிய மிகவும் தொலைவான அச்சுறுத்தலால் கூட அல்லது இன்னும் தீர்மானிக்கப்படாத ஏனயவற்றால் கூட அதன் கைகள் கட்டப்படுவதை தான் விரும்பவில்லை என்று உலகுக்கு வாஷிங்டன் அறிவிப்பை விடுத்தது.

ஐரோப்பிய அரசியல் ஸ்தானிகர்கள் பூகோளத்தைச் சுற்றிலுமான அமெரிக்க ஆதரவு பெற்ற 18 தனித்தனியான ஐ.நா நடவடிக்கைகளை வாஷிங்டன் பெறுவதற்கு மற்றும் பராமரிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு சமரச கொள்கைமுறை வகுப்பைக் காண தட்டுத்தடுமாறுகையில், ஜூலை1 ரத்து (வீட்டோ) செய்ததன் விளைவு மூன்று நாட்களுக்கு தள்ளி போடப்பட்டது. அமெரிக்க ஐக்கிய அரசுகள் இந்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட படைவீரர்கள், போலீசார் மற்றும் குடிமக்கள் அதிகாரிகள் ஆகிய 45,000 பேர்களில் வெறுமனே 700 பேர்களை வழங்குகிறது (பொஸ்னியாவில் 1500 பேர் போலீஸ் பயிற்சிப் பணியில் 46 அமெரிக்கர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அதேவேளை நேட்டோ தலைமையிலான ஆக்கிரமிப்புப் படையில் பல ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்கள் கலந்து கொண்டனர்). ஆனால் ஐ.நா "அமைதிகாக்கும்" முயற்சிகளுக்கான செலவின் 25 சதவீதத்திற்கும் அதிகமானதை வாஷிங்டன் செலுத்துகிறது, மற்றும் இந்தப் பணிகளில் இருந்து அமெரிக்கா வாபஸ் பெறுவது கிட்டத்தட்ட நிச்சயமாக இந்த நிதியை வெட்டுவதை மற்றும் அவற்றின் உள்ளுறைந்த பொறிவை அர்த்தப்படுத்துகிறது.

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோன் நெக்ரோபோன்ட் பின்வருமாறு கூறினார்," எமது பூகோள பொறுப்புக்களுடன், நாம் தொடர்ந்தும் சிறப்பு இலக்காக இருக்கிறோம் மற்றும் இருப்போம், மற்றும் எமது முடிவுகள் நீதிமன்றத்தால் இரண்டாவது ஊகமாக இருக்க முடியாது, அதன் சட்ட ஆட்சிப் பரப்பை நாம் அங்கீகரிக்கவில்லை.

அத்தகைய "இரண்டாவதாக ஊகித்து அறிதலை" நேரடியாகப் பெற்றிருப்பவர் நெக்ரோபோன்ட். 1890களில் நிகராகுவாவுக்கு எதிரான சட்டவிரோத சி..ஐ.ஏ ஆதரவு யுத்தத்தின் நீடித்த அனுபவம் உள்ளவர். அவர் ஹொண்டுராஸூக்கான அமெரிக்க தூதுவராக இருந்த பொழுது, அந்த நாட்டில் "கான்ட்ரா" நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார். அந்தக் காலகட்டத்தில், ஹேக்கில் உலக நீதிமன்றத்திலிருந்து வந்த நீர்ப்பில் நிகராகுவா வெற்றி பெற்றது, அது அமெரிக்கா குற்றவியல் ஆக்கிரமிப்பில் குற்றவாளி என்று கண்டது, வாஷிங்டனை நீதிமன்றத்திலிருந்து வாபஸ்பெறும்படி செய்தது.

ரத்து (வீட்டோ) அதிகாரம் ஐரோப்பாவில் அவமதிக்கும் பழிச்செயலை மற்றும் வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளும் மோதல் போக்கில் இருக்கின்றன என்று எச்சரிக்கைகளையும் தூண்டி விட்டது. "அது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிளவின் இன்னொரு இயக்கம், அதனை என்ன விலை கொடுத்தும் நாம் தவிர்க்க வேண்டும்" என ஐரோப்பிய கமிஷன் தலைவர் ரோமனோ ப்ரோடி அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சித் தலைமையை தற்போதுதான் எடுத்திருக்கும் டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் பெர் ஸ்டிக் மோயெல்லர் கூட அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டனம் செய்தார். "பொதுவில் ஐ.நா அமைதி நடவடிக்கைகளை அச்சுறுத்தும் இந்த திடீர் அடியெடுப்பை இட்டு நான் ஆழ்ந்த கவலை அடைகிறேன்" என அவர் அறிவித்தார்.

பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் கிளேர் ஷோர்ட், அமெரிக்க நிலைப்பாடு "எல்லா நேரங்களிலும் எங்கும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய நாகரிக நடத்தையின் சில அடிப்படை விதிகளை விரும்பும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் பெரும் ஏமாற்றத்தைக்" கொண்டிருக்கிறது, என்றார்.

குறிப்பாக பிரிட்டிஷ் அதிகாரிகள், அமெரிக்க நிலை தொடர்பாக விரக்தியை வாய்விட்டுரைத்தனர். ஏனென்றால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை அது அமெரிக்க துருப்புக்களுக்கு அல்லது அதிகாரிகளுக்கு போர்க் குற்றங்களுக்காக என்றும் விசாரணைக்குக் கொண்டுவருவதற்கு எதிராக போதுமான அளவுக்கு பாதுகாப்பை வழங்குகிற வகையில் வரையப்பட்டிருக்கிறது. பிரதமர் டொனி பிளேயர், ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யு. புஷ்-ஆல் அமெரிக்க படைவீரர்கள் "நீதிமன்றத்திற்குள் மயக்க மருந்தூட்டப்படுவார்கள் (அப்படியே மேற்கோளாளர் கூறிய நிலையில்) என்று குறிப்பிடப்பட்ட அச்சம் "கருதுதற்கியலாதது" என விவரித்தார்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமரசம் செய்பவர் பாத்திரத்தில் பங்காற்ற முயற்சித்ததில் அதிகரித்துவரும் கஷ்டங்களுடன், பிளேயர் "அமெரிக்க ஐக்கிய அரசுகளின் கவலைகளை நாம் புரிந்து கொள்கிறோம், அவை சட்டரீதியான கவலைகள், ஆனால் எமது நம்பிக்கை எதிர்கொள்ளப்படவேண்டும்" என்று கூறினார்.

நீதிமன்றத்தின் சாசனத்தில் மாற்றங்கள், வென்றடக்கப்பட்ட மற்றும் வலுக் குறைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராணுவ நபர்கள் மட்டுமே என்றும் விசாரணைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று உண்மையில் உத்திரவாதப்படுத்தும் வண்ணம் அமெரிக்க தரப்பிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோரால் ஆணையிடப்பட்டது. அமெரிக்கா ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஐ.நா பாதுகாப்புச் சபை எந்த வழக்கையும் 12 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவரது நாட்டுக்குள் உள்ள நீதித்துறை அமைப்பானது தனது சொந்த சட்ட விசாரணையைத் தொடர்ந்து கொண்டிருப்பதால் மட்டுமே எந்த வழக்கையும் விசாரிப்பதிலிருந்து சர்வதேச நீதிமன்றமானது தடுத்து நிறுத்தப்பட முடியும்.

புதிய நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்படும் எந்த பிரதிவாதிகளும் ஐ.நா மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட பணிக்கான இரு நீதிமன்ற விசாரணைக் குழுவால் இப்பொழுது விசாரிக்கப்படுபவர்களை ஒத்ததாக இருக்கும் வகையில் இந்த வழிவகை ஏற்பாடுகள் அதனை மிகைப்படுத்துவன. முதலாவது யூகோஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் ஸ்லொபோடன் மிலோசெவிக் அமெரிக்க ஆதரவு பெற்ற தூக்கி வீசலை அடுத்து, யூகோஸ்லாவிய அரசாங்கம் அவரது வழக்கு விசாரணைக்கு சம்மதித்தது.

இரண்டாவது ருவாண்டாவில் முன்னாள் ஹுட்டு அதிகாரிகள் குழுவாகும், அவர்கள் அந்த நாட்டில் படுகொலைகளை ஏற்பாடு செய்த பிறகு அமெரிக்கா ஆதரவு பெற்ற படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.

தங்களின் சொந்த வெளிநாட்டு இராணுவ தலையீடுகளயும் பூகோள ஏகாதிபத்திய திட்டங்களைக் கொண்ட பிரிட்டனும் பிரான்சும், சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தங்களை திறக்க தயாரில்லை. எவ்வாறாயினும், அமெரிக்காவுடனான அவர்களின் வேறுபாடு, அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை புறநிலைரீதியாக மற்றும் உலகரீதியாக பயனுள்ள வெளிவிவகாரக் கொள்கை சாதனத்தின் ஒரு பாசாங்காகப் பார்க்கின்றனர்.

வாஷிங்டனின் கோரிக்கைகள்- எடுத்துக்காட்டாக, அதன் அனைத்து "அமைதி பேணுபவர்களும்" விலக்கீட்டு உரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையானது எந்தவிதக் குற்றச்சாட்டுகளின் பேரிலும் அவை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் முன்னரும் கூட - அமெரிக்கா சம்பந்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான எந்த வழக்கு மீதும் சக்திமிக்க வகையில் வாஷிங்டனின் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் .

சர்வதேச சட்டத்திற்கு மேலாகத் தான் என்ற தன்முனைப்பான அமெரிக்க வலியுறுத்தல் எந்த வகையிலும் இந்த வாரத்து, ரத்து அதிகாரத்துடன் ஆரம்பிக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புஷ் நிர்வாகமானது கிளிண்டனால் கையெழுத்திடப்பட்டிருந்த நீதிமன்றத்தை நிறுவும் உடன்படிக்கையை மறுதலிப்பதாக அடியை எடுத்து வைத்தது- இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் எதிர்பார்த்திராதது. அதேபோல, அது ஏவுகணை எதிர்ப்பு உடன்படிக்கை (Anti-Ballistic Missile Treaty) -ல் தன்னிச்சையாக வாபஸ் வாங்கிக் கொண்டது மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கயோட்டோ உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்க மறுத்தது.

தெளிவாக வெளிப்படுவது யாதெனில் ஒரு பக்கசார்பிய பாணி ஆகும், அதில் வாஷிங்டனானது ஏனைய வல்லரசுகளிடம் பின்னது அமெரிக்க மூலோபாய நலன்களை பின்தொடர்வதற்கு தம்மைக் கீழ்ப்படுத்திக் கொள்ளும் மற்றும் அமெரிக்க இராணுவத்திற்கு கேள்விகேட்காத கட்டுப்பாட்டுக்கு இசையும் மட்டத்திற்கு மட்டும் தம்மை அவற்றுடன் சேர்த்துக் கொள்ளும் என்பதை தெளிவு படுத்துகிறது.

புஷ் நிர்வாகமானது அமெரிக்க இராணுவ ஆற்றலின் பூகோள வலியுறுத்தல் சர்வதேச சட்ட முறைகளால் கட்டுண்டிருக்க வேண்டும் என்று கருத்தையும் எழுப்புகின்ற எந்த புதிய அமைப்புகளையும் அனுமதிப்பதில் அக்கறை இல்லாதிருக்கிறது. இந்தக் காரணத்துக்காக, அமெரிக்கா அது களத்தில் இறங்கும் முன்னர் சர்வதேச நீதிமன்றத்தை கீழறுப்பதற்கு மற்றும் அழிப்பதற்கு வேலை செய்திருக்கிறது.

இந்நிலைப்பாடு வலதுசாரி குடியரசுக்கட்சினரால் ஆதரிக்கப்படுகிறது, அது ஐக்கிய நாடுகள் அவையை தம்மை அமெரிக்க அதிகாரத்திற்கு இடைவிட்டு விட்டு செயலாற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட சதியாக வார்த்தெடுத்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கையை வரைந்ததை அடுத்து, குடியரசுக்கட்சியினர் கட்டுப்பாட்டிலுள்ள பிரதிநிதிகள் சபை "நெதர்லாந்து ஆக்கிரமிப்பு சட்டம்" ஆக ஐரோப்பாவைக் குறிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றும் வரை சென்றது, இது விசாரணைக்காக கொண்டு வரப்படக்கூடிய அமெரிக்க நபர்களை "மீட்பதற்கு" இராணுவப் படையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குகிறது.

நீதிமன்றத்தை எதிர்ப்பதற்கு ஐ.நா ரத்து அதிகாரத்தை வாஷிங்டன் பயன்படுத்தல் கூட ஐ.நா "அமைதி காக்கும்" நடவடிக்கைகள் தம்மை இலக்காகக் கொண்டது. புஷ் நிர்வாகத்தில் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும், குடியரசுக்கட்சியின் வலதுசாரிப் பிரிவு, "தேசத்தைக் கட்டல்" மற்றும் "மதர் தெரெசா" வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றுக்கான ஒருதலைச்சார்பு என்று சொல்லப்படுவதற்காக முந்தைய கிளிண்டனின் வெள்ளை மாளிகையை அவமதிப்பு செய்வதில் இந்த பணிகளை நீண்டகாலம் வைத்திருந்தது.

அதேபோல, பென்டகன் உயர் அதிகாரிகள், அமெரிக்க இராணுவத்தின் பொருத்தமான வேலை போராடுவதும் யுத்தத்தை வெல்வதும் ஆகும், மோதல்களை ஆற்றுப்படுத்தல் அல்ல என்று வலியுறுத்திக்கொண்டு, ஐ.நா தலைமையிலான திட்ட வகுத்தளிப்பில் எரிச்சலடைந்தனர்.

லண்டன் ஃபைனான்சியல் டைம்ஸ் ஜூலை 2 அன்று "அமைதி காத்தலை இலக்குவைக்க அமெரிக்கா வாய்ப்பெடுத்துக் கொள்கிறது" என்ற தலைப்பின் கீழ் வர்ணனைக் குறிப்பை வெளியிட்டது. "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உருவாக்கத்தை நெருக்கமாகக் கவனித்துவரும்" பெயர் சூட்டப்படாத அதிகாரியை அது மேற்கோள் காட்டி, "டொனால்ட் ரம்ஸ்பெல்ட் (அமெரிக்க பாதுகாப்பு செயலர்) மற்றும் ஜோன் போல்ட்டன் (ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேசப் பாதுகாப்புக்கான உதவி செயலாளர்) ஆகியோர் வளர்ப்புப் பறவையை விழுங்கிய பூனைபோல அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கருதும் அவர்களின் இரண்டு பிசாசுக்களை இலக்கில் வைத்திருக்கின்றனர்" என்றது.

மறுபடியும் பெயர் சூட்டப்படாத அதிகாரியை மேற்கோள்காட்டி, வர்ணனைக் குறிப்பு தொடர்ந்தது: "திரு.போல்டன், திரு ரம்ஸ்பெல்ட் மற்றும் கண்டலீசா ரைஸ் போன்ற பழமைவாதக் கடும்போக்கினர்...... தங்களால் " 'அமைதி காத்தலையும் ஐ.சி.சி யையும் ஒரே கல்லால் கொன்றுவிட' முடியும் என நம்புகின்றனர்" என்று அவர் மேலும் சேர்த்தார்.

இப்பொழுது புஷ்-ன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான கொண்டலீசா ரைஸ், 2000-ல் வெளிவிகாரங்கள் (Foreign Affairs) இதழில் ஒரு கட்டுரையில் அவரது பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்: "இராணுவம் ஒரு சிறப்பான கருவி என்பதை ஜனாதிபதி கட்டாயம் நினைவிற் கொள்ளவேண்டும். அது கொல்லுகிற ஒன்று மற்றும் அது இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. அது குடிமக்களின் போலீஸ் படை அல்ல. அது அரசியல் நடுவர் அல்ல. மற்றும் அது பெரும்பாலும் நிச்சயமாக குடிமக்கள் சமுதாயத்தைக் கட்டுதற்கு வடிவமைக்கப்படவில்லை."

இந்தக் கண்ணோட்டங்கள் வாஷிங்டனையும் லண்டனையும் ஆப்கானிஸ்தானில் ஒவ்வாதிருக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது, அங்கு புஷ் நிர்வாகம் அமைதிகாக்கும் படைகள் என்று அழைக்கப்படுவதை தலைநகர் காபூலுக்கு அப்பால் எந்தவிதத்திலும் நீட்டிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது, பதிலாக இந்த வார தொடக்கத்தில் பல குடிமக்களின் உயிரைப் பறித்த வானின்று போடும் கூண்டுவீச்சுக்களில் நம்பிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள் மையத்திலிருந்து விலகி இருக்கும் மாகாணங்களை செயலூக்கமுடன் கவனிக்க ஏதாவது செய்யவில்லை எனில், நாடு விரைவில் உள்நாட்டு யுத்தத்திற்குள் மீண்டும் வழுக்கிச்சென்றுவிடும் என எச்சரித்தனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்த அளவில் மனக்கசப்புடையதாக ஆகி இருக்கும் உறவின் அண்மைய வெளிச்சம் போட்டுக் காட்டும் புள்ளியாக மட்டும் இருக்கிறது. அமெரிக்க தன்னிச்சைவாதம் வர்த்தக உறவுகளுக்கும் நன்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவுக்கு அவர்களின் எஃகு இரும்பு ஏற்றுமதிகளில் சுங்கவரிகளை ஐரோப்பியர்கள் எதிர் கொள்வதுடன் சமரசத்திற்கு இடங்கொடாத அடுக்கடுக்கான எதிர் நடவடிக்கைகளின் தாக்குதலுக்கு தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.

வாஷிங்டனுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கியத்தின் தோற்றத்தை சுருக்கமாக உருவாக்கிய, "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில்", ஐரோப்பிய அதிகாரிகள் இப்பொழுது புஷ் கொள்கையை வெளிப்படையாக ஏளனம் செய்கின்றனர், அதனை அமெரிக்க இராணுவ பலத்தை முறுக்கிக் காட்டுவதற்கான மற்றும் பூகோளத்தைச் சுற்றிலும் அமெரிக்கப் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களை பின்பற்றுவதற்கான பாசாங்காகப் பார்க்கின்றனர். கியூபாவில் உள்ள குவாண்டனமோ குடா கடற்படைத் தளம் மற்றும் எங்கும் வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகளை அது நடத்துவதில் ஜெனிவா விதிமுறைகளை அமெரிக்கா அத்து மீறுவது தொடர்பாக ஐரோப்பிய அரசாங்கங்கள் சீரிய கவலைகளை வெளிப்படுத்தி இருக்கின்றன.

அமெரிக்கா தலையீடு செய்யும் புதிய மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகளுக்கான முன்நிபந்தனையான பாலஸ்தீனியர்களின் தலைவர் பதவி இறக்கப்பட வேண்டும் என்ற புஷ்ஷின் அண்மைய கோரிக்கையுடன் அவர்களும் கூட தங்களை துண்டித்துக் கொண்டிருக்கின்றனர். அவரது இறுதிக்கெடுவை புஷ் விடுத்ததன் பின்னர், உயர் பொறுப்பு வகிக்கும் பல ஐரோப்பிய அமைச்சர்கள் பாலஸ்தீனிய நிர்வாக ஜனாதிபதியுடன் தோன்றுவதற்கு ரமல்லாவுக்கு எதிர்ப்பு விஜயங்களை செய்திருக்கின்றனர்.

"ஆட்சி மாற்றத்தை" விளைவிக்கும் காரணத்திற்காக ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான அமெரிக்க தயாரிப்புக்களை ஒரு ஐரோப்பிய அரசும் அங்கீகரிக்கவில்லை. அதேபோல, பெரும்பாலான ஐரோப்பிய அரசாங்கங்கள், "தீய அச்சின்" ஒரு பகுதி என்று புஷ் முத்திரை குத்தும் நாடான ஈரானுடன் இயல்பான உறவுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தப் பிராந்தியத்தில் ஐரோப்பாவிற்கு அதன் சொந்த நலன்கள் இருக்கின்றன, அது அதன் பெரும்பாலான எண்ணெய் தேவைகளை அளிக்கிறது, மற்றும் அங்கு அமெரிக்கா தனது இராணுவ பிடியை இறுக்குவதைப் பார்க்க அவர்கள் விருப்பமில்லாதிருக்கின்றனர்.

இறுதியாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் "விண்வெளி யுத்தங்கள்" ("Star Wars") பாணியிலான பாதுகாப்பு முறை மீண்டும் உயிர்த்தெழுவதைப்பற்றி வெளிப்படையாக கேள்வி கேட்பதுடன், மூலோபாய பாதுகாப்பு மீதான குறிப்பிடத்தக்க உடன்பாடின்மைகள் அங்கு இருக்கின்றன. மற்றும் அமெரிக்கா தனது சொந்த பூகோள நிலைகளை மேற்கொள்ளும் முறைக்கு போட்டியானதாகக் கருதும் மற்றும் சாத்தியமான இராணுவ அச்சுறுத்தல் எனக் கருதும் கலிலியோ செயற்கைக்கோள் முறைக்கான ஐரோப்பிய திட்டங்களை வாஷிங்டன் கண்டனம் செய்கின்றது.

பூகோள கார்ப்பொரேட்டின் நலன்களை தன்னடக்கத்துடன் பாதுகாக்கும், ஃபைனான்சியல் டைம்ஸ், வாஷிங்டனுடனான ஐரோப்பிய விரக்கிதியை தெளிவாக வெளிப்படுத்தலைக் கொடுத்தது, அதேவேளை வளர்ந்துவரும் இடைவெளியின் ஐரோப்பா இன்னும் சுதந்திரமான இராணுவக் கொள்கையைப் பின்பற்ற ஏதுவாக இருக்கும் என்றும் கருத்துரைத்தது.

"ஐரோப்பிய ஒன்றியம் அதன் கொள்கைகளை கட்டாயம் கைவிடக்கூடாது" என்று ஜூலை 2ல் பத்திரிகை தலையங்கமிட்டது." அது சர்வதேச நீதியில் முன்கூட்டியதாக நீதிமன்றத்தில் அதன் நம்பிக்கையை சரியாக அறிவித்திருக்கிறது. அமெரிக்க அச்சுறுத்தல் அதன் நம்பிக்கையை மாற்றவில்லை. அதன் அர்த்தம் வாஷிங்டன் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இருந்து தன்னை இழுத்துக் கொள்ளுமாயின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் சுமையை ஏற்கும், அவ்வாறாயின் இருக்கட்டும். நீதி அதற்கான விலையைக் கொண்டிருக்கிறது."

ஐரோப்பிய ஆளும் தட்டைப்பற்றி அக்கறைப்படும் "நீதி" என்பது ஏதோ அருவமான மற்றும் சர்வதேச சட்டத்தின் உலகரீதியான விதிமுறை அல்ல, மாறாக இன்னும் சொல்லப்போனால் மூலோபாய வளங்களையும் உலக சந்தைகளையும் பெறுவதற்கானது. அது அமெரிக்க இராணுவம் மற்றும் அரசியல் மேலாதிக்கத்தால் மூடப்படும் என்று அஞ்சுகிறது.

Top of page