World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடு

மிஸீபீவீணீ ணீஸீபீ றிணீளீவீstணீஸீ தீணீநீளீ ஷீயீயீ யீக்ஷீஷீனீ ஷ்ணீக்ஷீtமீனீஜீஷீக்ஷீணீக்ஷீவீறீஹ்

இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தத்திலிருந்து பின்வாங்குகின்றன- தற்காலிகமாக

By Vilani Peiris and Sarath Kumara
24 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று பாகிஸ்தானுடனான யுத்தத்தின் விளிம்பிலிருந்து ஒரு சிறிய அடியை பின்னெடுத்து வைத்தார், தெளிவான வானங்கள் யுத்த மேகங்களை பிரதியீடு செய்வதை குறைந்தபட்சம் இத்தருணத்திலாவது பார்ப்பதாக அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும் அவர் எச்சரிக்கை விடுத்தார், அதாவது "சில வேளைகளில் வானம் தெளிவாக இருக்கும்போது கூட மின்னல் தாக்கலாம். மின்னல் எதுவும் வராது என்று நான் நம்புகிறேன்".

வாஜ்பாயியின் இந்த தொனியானது அதற்கு முதல் நாள் அவர் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த இராணுவ பிரிவின் மத்தியில் பேசும்போது கூறியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டிருந்தது. அப்போது அவர் துருப்புகளுக்கு கூறியதாவது: "இந்தியா அதன் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்த்து போராடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது, அதில் நாம் வெற்றி அடைவோம்... அதில் எந்த சந்தேகமும் இல்லை... தியாகத்துக்கு தயாராக இருங்கள். வெற்றியே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். தீர்க்கமான யுத்தம் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது".

புதன்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பாக்கிஸ்தானின் பலம் வாய்ந்த இராணுவ ஜெனரல் பெர்வேஸ் முஷாரப்பின் அறிக்கையை தொடர்ந்து வலியுறுத்தலில் இப்படியான மாற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் யுத்தத்திற்கு தயாராக உள்ளது என்பதை மீண்டும் குறிப்பிட்டு மேலும் அவர் கூறியதாவது: "உலகத்தில் எந்த இடத்திலாவது பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் பிரதேசத்தையோ அல்லது, பாகிஸ்தானின் உள்பட எந்த நில பகுதியையோ பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என்று கூட்டம் வலியுறுத்தியது".

இந்த பேச்சுக்கள் "எல்லை தான்டிய பயங்கரவாதத்தை" அதாவது ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்தியாவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் ஆயுதம் தரித்த இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்களை பாகிஸ்தான் - கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கைக்கு முக்கியமான சலுகை வழங்குவதை உட்கொண்டிருக்கிறது.

இந்திய பாராளுமன்றத்தின் மீது டிசம்பர் 13இல் நடத்தப்பட்ட ஆயுத தாக்குதலை அடுத்து ஜனவரியில், புதுதில்லியை சமாதானப்படுத்துவதற்காக முஷாரப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவை பல்வேறு அமைப்புகளை தடை செய்வதையும் அவற்றை சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கைது செய்ததையும் உள்ளடக்கும். ஆனால் அவர் அவ்வாறான நடவடிக்கைகளை பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிகளில் மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசாங்கத்தின்படி, பல இஸ்லாமிய குழுக்கள் இலகுவாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் தம்மை மீண்டும் நிலைநாட்டிக்கொண்டன. "பாகிஸ்தானின் பாதுகாப்பு பொறுப்புக்கு உள்பட்ட எந்த நிலப்பகுதியையோ" என்று குறிப்பிடுவதன் மூலம் முசாரப் அர்த்தப்படுத்துவது என்னவென்றால், காஷ்மீரிலுள்ள புதிய அலுவலகங்களையும் முகாம்களையும் மூடுவதற்கும் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லைக்குள் ஆயுத போராளிகள் தாண்டாமல் தடுக்கவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகள் இப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதாகும் .

முஷாரப்பின் அறிக்கையை பரிசீலனை செய்ய இந்திய உயர்மட்ட அமைச்சர்களும் ராணுவ அதிகாரிகளும் நேற்று காஷ்மீரில் கூடினார்கள். இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாநில தேர்தலுக்கு முன்பாக "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை" நிறுத்துவதற்கு இரண்டு மாதங்கள் பாகிஸ்தானுக்கு அவகாசம் கொடுக்க வாஜ்பாய் தலைமையில் ஸ்ரீநகரில் கூடிய ஐக்கிய தலைமையகம் தீர்மானித்தது. நேற்று கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சரக குழு பெயரளவில் முஷாரப்பின் பேச்சுக்களை நிராகரித்த போதிலும் பாகிஸ்தான் உடன்பட்டு செயல்படுவதற்கு மேலும் அவகாசம் தருவது என்று முன்பு எடுத்த தீர்மானத்தை ஆதரித்தது.

இந்த தீர்மானமானது ஒரு தற்காலிக இடை ஓய்வை விட சற்று அதிகமானதாக மட்டும்தான் கருதமுடியும், அதனை எந்த சமயத்திலும் மாற்றலாம். பல்வேறு இஸ்லாமிய ஆயுத குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு பாகிஸ்தானிடம் விடப்பட்டுள்ளது, அந்த குழுக்களுடன் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு நெருக்கமான உறவுகள் உண்டு, ஆனால் அவற்றின் மீது கட்டுப்பாடில்லை. கடந்த வாரம் 34 பேரை கொன்ற கலுசக் போன்ற ஒரு தாக்குதல் இந்திய படைகளின் மீது அல்லது இந்தியாவுக்குள் புதிதாக நடத்தப்படுமாயின் அது யுத்த அச்சுறுத்தல்களை புதுதில்லி புதுப்பிப்பதற்கான அடிப்படையாக மாறமுடியும்.

திரைமறைவில், வல்லரசுகள் குறிப்பாக அமெரிக்கா ஒரு ராணுவ மோதலில் இருந்து விலகி செல்வதற்காக கணிசமான அழுத்தங்களை இரு நாடுகள் மீதும் கொடுத்தது- சலுகைகள் வழங்கும்படி இஸ்லாமாபாத்திடமும், பாகிஸ்தானுக்கு மேலும் அவகாசம் அளிக்கும்படி புதுதில்லியிடமும் வலியுறுத்தியது. தென் ஆசியாவுக்கான அமெரிக்க ராஜாங்க துணை செயலர் கிறிஸ்டினா ரொக்கா கடந்த வாரம் துணை கண்டத்துக்கு விஜயம் செய்தார், துணை ராஜாங்க செயலர் ரிச்சாட் அமிட்டேஜ் அடுத்த மாத முற்பகுதியில் வர இருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகார கமிஷனர் கிறிஸ் பட்டேர்ன் நேற்று புதுதில்லி வருவதாக இருந்தது, அதை அடுத்து அடுத்த வாரம் பிரிட்டிஷ் வெளிநாட்டு செயலர் ஜக் ஸ்டிரா வர இருக்கிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் வெடிப்பதை தடுக்க முயலும் வாஷிங்டனின் அக்கறை என்னவென்றால் எந்த ஒரு போரும் ஆப்கானிஸ்தானில் அதன் ராணுவ நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவது மட்டும் அல்லாமல் இப்பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி பரந்தளவில் அமெரிக்கப் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை அச்சுறுத்தும் என்பதாலாகும். அதேசமயம் புஷ் நிர்வாகத்தின் ``பயங்கரவாதத்திற்கு எதிரான போர்`` மற்றும் புதுதில்லியுடன் அதன் சொந்த நெருக்கமான உறவுகள் எல்லாமே பாக்கிஸ்தானுக்கு எதிராக மேலும் ஒரு போர்க்குண நிலைப்பாட்டை எடுப்பதற்கு வாஜ்பாய் அரசாங்கத்துக்கு ஊக்கம் தான் அளித்தது.

காஷ்மீரை, இந்திய மற்றும் பாக்கிஸ்தான் மண்டலங்களாக பிரிக்கும் எல்லைக்கட்டுப்பாடு கோட்டில் (LOC) கண்காணிப்புகளை ஏற்படுத்த அல்லது பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச ஆதரவை திரட்ட பாகிஸ்தான் அரசாங்கம் முயற்சித்தது. பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் செனகட் அஸிஸ் கூறியதாவது: "நாம், மூன்றாவது தரப்பின் மூலமாகவோ அல்லது போரை தவிர்ப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதாவது செயல்நுட்பத்தின் மூலமாகவோ இருதரப்பு பேச்சுவார்த்தை செய்ய விரும்புகிறோம்``. ஆனால் இந்தியா, காஷ்மீர் ஒரு உள்நாட்டு விவகாரம் என்று மரபு வழியாக வலியுறுத்தி வருகிறது, சர்வதேச தலையீட்டை நிராகரிக்கிறது. அத்துடன் முஷாரப்புடன் பேசத் தயாராக இல்லை என்பதையும் அறிவித்தது.

இராணுவ பளிச்சிடும் புள்ளி

இரண்டு அணுகுண்டு சக்திகளுக்கு இடையில் பதட்டங்கள் மிக உச்சக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த வாரம் எந்தப்பக்கமும் தீவிர ராணுவ தயாரிப்புகளில் இருந்து பின் வாங்கவில்லை. கடந்த டிசம்பரில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான துருப்புகள் எல்லைக்கோட்டின் வழியாக ஒன்றை ஒன்று டாங்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளுடன் எதிர்கொண்டுள்ளன. இருதரப்பிலும் நடக்கும் பலத்த மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் குறைந்தபட்சம் 25,000 கிராம மக்கள் எல்லைப் பகுதிகளிலிருந்து தப்பி ஓட நிர்ப்பந்தித்தது, அத்துடன் பலர் இறந்தனர்.

கடந்த வாரம் இந்தியா, 1971ல் பாகிஸ்தானுடன் நடத்திய போருக்கு பின்னர் முதல் தடவையாக அதன் எல்லை துணைப்படைகளையும், கடலோர காவல் படைகளையும் இந்திய இராணுவத்துடன் ஒன்றிணைத்தது. புதன்கிழமை, இந்தியாவின் கிழக்கு கப்பல் படையிலிருந்து ஐந்து போர்க்கப்பல்கள் மேற்கு கடலோரத்துக்கு நகர்த்தப்பட்டன, இது பாக்கிஸ்தான் கடல்களுக்கு பக்கத்தில் அதன் கப்பல்படை நிலையை பலப்படுத்துவதற்காக செய்யப்பட்டதாகும். இந்தியாவின் என்றுமில்லாத அளவு மிகப்பெரிய இராணுவ அணிதிரட்டலில் போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் ஏவுகணை படைப்பகுதிகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. எல்லை ஓரங்களில் லட்சக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

இராணுவ அச்சுறுத்தல்கள் இருக்கும் அதேவேளை 1960இல் பாகிஸ்தானுடன் கையெழுத்திட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா கிழித்து போடலாம் என சில இந்திய அதிகாரிகள் எச்சரித்தனர். அந்த ஒப்பந்தம் சிந்து உள்பட மூன்று நதி நீர்களை பயன்படுத்துவதை நெறிப்படுத்துகிறது, சிந்து பாகிஸ்தான் வழியாக ஓடினாலும் அதன் ஊற்று தண்ணீர் இந்தியாவில் இருக்கிறது. பாகிஸ்தான் தொழிற் கட்சியின் பொதுச் செயலர் பாரூக் தரிக் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுமாயின், அது பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களை மட்டும் அல்ல. ஆனால் பாகிஸ்தான் முழுமையாகவும் அத்துடன் ஆப்கானிஸ்தானையும் பட்டினி போடும்".

பாகிஸ்தானும் அவ்வாறே பதிலளித்தது. அதன் இராணுவம் இந்தியாவின் எல்லைக்கு 75இலிருந்து 100 கிலோ மீட்டர் இயக்க எல்லை கொண்ட கைப்பிடி ஏவுகணைகளையும் அதேபோல் தொலைதூர கைப்பிடி (Half)-2 ஐயும் நகர்த்தியது. சியராலியோனில் ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அதன் படைகளை திரும்பப்பெறப் போவதாக இஸ்லாமாபாத் அறிவித்தது. ஆப்கானிஸ்தானுடன் மேற்கு எல்லையில் இருக்கும் அதன் துருப்புகளை இராணுவம் கிழக்கில் இந்திய எல்லைக்கு நகர்த்த தொடங்கி உள்ளது. இஸ்லாமாபாத் போர்க்கால அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது, மீண்டும் செயலூக்க பணிக்கு வருமாறு அனைத்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் இராணுவ சேமப்படைகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது, அரசாங்க மருத்துவமனை படுக்கைகள் காலி செய்யப்பட்டு விபத்துக்களுக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவினுள், எல்லைக்கட்டுபாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய எதிர்ப்பு போராளிக் குழுக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தவேண்டுமென்று மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய இராணுவ நிறுவனம் ஒரு "வரம்புக்குட்பட்ட போர்" பற்றிய சாத்தியம் குறித்து -போராளி பயிற்சி முகாம்கள் மீது சிறந்த பயிற்சி பெற்ற இராணுவ படைகள் அதிரடி தாக்குதல் நடத்துவது பற்றி- ஊகிக்கின்றன. ஆனால் பல பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியது போல் எந்த ஒரு இராணுவ மோதலும் அதன் சொந்த ஆற்றலையும் அதன் சொந்த இயங்கு விசையையும் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இந்திய இராணுவத்தின் ஒரு வரம்புக்குட்பட்ட தாக்குதல்கூட வேகமாக எல்லை வழிகளில் பரவும், மரபு வழி ஆயுதங்கள் போதுமானதல்ல என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், அது கோடிக்கணக்கான மக்களுக்கு துயரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அணுகுண்டு தாங்கிய ஏவுகணைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு வழிவகுக்கும்.

காஷ்மீர் தொடர்பான நீடித்து வரும் மோதலானது 1947இல் இந்திய துணைக் கண்டத்தை ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து ஆதிக்க இந்தியா என்று பிரிவினை செய்ததன் பிற்போக்கு தன்மையிலிருந்து எழுகின்றது. அந்த வகுப்புவாத கட்டமைப்பினுள், மூலோபாய ரீதியில் நிலைகொண்டிருக்கும், முஸ்லிம் பெரும்பான்மையுடனும், ஒரு இந்து மகாராஜாவினாலும் ஆளப்பட்டு வந்த காஷ்மீரானது, உடனடியாக 1948இலும் 1965இலும் கூர்மையான பகைமை மற்றும் போரின் குவிமையமாக மாறியது. 1999இல் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பிராந்தியத்தில் உள்ள முக்கியமான மலைக்குன்றுகளை கொண்ட பாகிஸ்தான் ஆதரவு சக்திகள் கைப்பற்றியபோது இரு நாடுகளும் போரின் விளிம்புக்கு சென்றன.

தற்போதைய அணிவகுப்புகள் எளிதில் களைந்து செல்லும் தன்மை இரு நாடுகளிலும் ஆழமான அரசியல் நெருக்கடியால் தீமூட்டப்படுகிறது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் வகுப்புவாத கலவரங்களிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கான சந்தர்ப்பமாக இதனை வாஜ்பாய் பிடித்துக்கொண்டார். அவரது இந்து பேரினவாத பாரதீய ஜனதா கட்சியின் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்கள் ஆளும் கூட்டணியை உடைக்க வழிவகுக்கும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது.

பாகிஸ்தானுக்குள், 1999இல் ஒரு ராணுவ சதி மூலமாக ஆட்சிக்கு வந்த முஷாரப், தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். போருக்கு ஆதரவு திரட்ட பாகிஸ்தான் தலைவர் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்குகொள்ள அதிகமான அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவித்தன. அதற்குப் பதிலாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உள்பட 29 எதிர்கட்சிகளின் ஒரு கூட்டணியான - அனைத்துக் கட்சி மாநாடு - முஷாரப் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நடுநிலையான காபந்து (Care taker) அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்க்கட்சி தீர்மானம் பின்வருமாறு கூறியது: "(முஷாரப்) மதிப்பிழந்து நிற்கின்றார், தற்போது தேசிய பாதுகாப்புக்கும் அத்துடன் பாகிஸ்தானின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சமாளிக்கும் தோற்றமும் தார்மீக அதிகாரமும் இல்லாது இருக்கின்றது".

PPP தலைவரும் முன்னைய பிரதமருமான பெனாசீர் பூட்டோ ஒரு "போர் போன்ற நிலைமையை" உருவாக்குவதற்காக முஷாரப் மீது குற்றம் சாட்டினார், அவர் கூறியதாவது: "எல்லையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதட்டங்களும் அணு குண்டு போருக்கான வாய்ப்பு பற்றிய அச்சுறுத்தலும் பாகிஸ்தானில் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை வலியுறுத்துகிறது..." அதிகப்படியாக தனிமைப்பட்டுவரும் முஷாரப் புதன்கிழமை பதில் அளித்தார்: "உண்மையாகவே, நான் அதிகாரத்தை கைவிட விரும்புகிறேன். இந்தக் கட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு அங்கே ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்".

பாகிஸ்தான் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மத்திய வருமான வாரியத்தின் தலைவர் ரெய்ஸ் மாலீக், செப்டம்பர் 11இலிருந்து நாடு 42 பில்லியன் ரூபாய் (0.8 பில்லியன் அமெரிக்க டாலர்) வருமானத்தை இழந்துள்ளது என்று அண்மையில் குறிப்பிட்டார். கடந்த வாரத்தில் கராச்சி பங்குச் சந்தை 1527 புள்ளிகள் அல்லது 14.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. இந்தியாவிலுள்ள பம்பாய் பங்குச் சந்தை மே 14இலிருந்து 9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது.

இப்படியாக உயர்ந்த ஏற்றமடைந்த நிலைமைகளின்கீழ், எந்த ஒரு சம்பவமும் விரோதங்கள் வேகமாக தீவிர நிலை அடைவதற்கு ஒரு சாக்குப்போக்காக மாறலாம்.