World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan fishermen pressured to end protests during ceasefire talks

இலங்கை மீனவர்கள் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைக் காலத்தில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரத் தள்ளப்பட்டார்கள்

By our correspondent
7 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

வட இலங்கையின் யாழ்ப்பாண குடாநாட்டு மீனவர்கள் தமது மீன் பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக இராணுவத்தினரால் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிர்த்து கடந்த மாதம் எட்டு நாட்களாக மேற்கொண்டு வந்த போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வட மாகாண கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் கடந்த பெப்பிரவரி 6ம் திகதி, நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் இலங்கை அரசாங்கமும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட வழியமைப்பதன் பேரில் தமது போராட்டத்தினை நிறுத்திக்கொண்டது.

இந்த தடை வடக்கு கிழக்கு மாகாணங்களினதும் அதை அண்டியபகுதிகளிலும் கரையோர பிரதேசங்களில் வாழும் ஆயிரக் கணக்கான தமிழ் மீனவர்களின் ஜீவனோபாயத்தை நாசம் செய்துள்ளது. மீனவர்கள் இந்த கட்டுப்பாடு உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனக் கோரிய போதிலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த தடைமேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்திருக்கும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வ.மா.க.தொ.கூ.ச.ச. எடுத்த முடிவானது, கொழும்புக்கும் விடுதலைப் புலிகளும் இடையிலான ஒப்பந்தத்தின் தேவைகளுக்காக தொழிலாளர் போராட்டங்களை கீழ்படியச் செய்வதன் முதலாவது தெளிவான வெளிப்பாடாகும்.

இந்தப் போராட்டம் கரையோர பிரதேசத்தில் அமுலில் இருக்கும் தடையை நீக்கக் கோரி கடந்த ஜனவரி 30ம் திகதி கிட்டத்தட்ட 1500 மீனவர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் ஆதரவாளர்களும் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள மாகாணத்தின் பிரதான நிர்வாக மத்திய நிலையமான யாழ் செயலகத்தின் முன்பாக மறியலில் ஈடுபடத் தொடங்கியதை அடுத்து ஆரம்பமாகியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் நாவாந்துறை அதே போல் 25 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை உட்பட அருகில் உள்ள நகரங்களிலிருந்தும் வருகைதந்திருந்தனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் இலங்கையின் சுதந்திர தினமான பெப்பிரவரி 4ம் திகதி செயலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதை தடுத்ததோடு உத்தியோகத்தர்கள் காரியாலயத்தினுள் நுழைவதையும் தடுத்தனர். அதற்குப் பதிலாக அவர்கள் எதிர்ப்பின் அடையாளமாக கறுப்பு கொடியை ஏற்றியதோடு அவ்வாறு செய்ததன்மூலம் அவர்கள் யூ.என்.பி. தலைமையிலான கூட்டரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான டி. மகேஸ்வரனின் ஆலோசனையை முற்றாக நிராகரித்தனர்.

இந்த பிரச்சாரம் யாழ்குடா நாட்டில் அவர்களின் கோரிக்கைகளுக்கு பரந்தளவிலான ஆதரவைப் பெற்றுக்கொடுத்தது. இந்த மீனவர்களுக்கு ஆதரவாக பருத்தித்துறை துறைமுக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அதேவேளை பல்வேறு சமூக நிறுவனங்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கொழும்பு அரசாங்கத்துக்கும் நோர்வே உதவியாளர்களால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளை அச்சுறுத்தும் இந்தப் போராட்டங்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டிய தேவை இருந்துகொண்டிருந்தது.

இராணுவ அதிகாரிகள் இப்பிரச்சாரத்தினை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் பெப்பிரவரி 6ம் திகதி வட மாகாண கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதிகளோடும் மற்றும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளோடும் பலாலி இராணுவத் தளத்தின் மூடிய கதவுக்குள் ஒரு கூட்டத்தினை நடத்தினர். இந்தத் தடையானது விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கடத்துவதையும் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் தவிர்ப்பதன் பேரிலான பாதுகாப்புக் காரணங்களுக்கு சாத்தியமானதாக விளங்குகின்றது என இலங்கை இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர். உண்மையில், இந்தக் கட்டுப்பாடுகள் பரந்த தமிழ் வெகுஜனங்களை அடக்கி ஒடுக்குவதற்காக குடாநாட்டில் பல வருடங்களாக அமுலிலிருந்த ஒடுக்குமுறையான பாதுகாப்பு ஏற்படுகளின் ஒரு பகுதியேயாகும்.

இந்த கலந்துரையாடலில், இராணுவ பேச்சாளர் வடமாராட்சி கரையோர பிரதேசத்தில் காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை நான்கு மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டின் வடக்கு பிரதேசங்களுக்கு வெளியில் அமைந்துள்ள இந்தப் பகுதி பாரம்பரியமாக ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கு உறுதுணையாக விளங்கிய பிரதான மீன்பிடி தளமாக காணப்படுகின்றது. இராணுவ அதிகாரிகள் ஒரு வாரம் "அவதானிப்புக் காலமாக" இருக்குமெனவும் இக்காலகட்டத்தில் வட மாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்க சமாசத்தாலும் ஏனைய அமைப்புகளாலும் ஸ்தாபிக்கப்பட்ட குழு கட்டுப்பாடுகளை அவதானிக்கும் எனவும் சுட்டிக்காட்டினர். இராணுவம் இந்த கட்டுப்பாடுகள் மீறப்பட்டாலோ அல்லது "பாதுகாப்பு பிரச்சினைகள்" ஏற்பட்டாலோ மீண்டும் முழுமையானதடையை அமுல்படுத்தும் நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

இந்தப் பிரேரணைகளுக்கு வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்க சமாசத்தின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டபோது யாழ்ப்பாண செயலக கட்டிடத்துக்கு வெளியில் மறியலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் ஆத்திரமடைந்தார்கள். "நாங்கள் இங்கு பட்டினியில் கிடக்கின்றோம். அவர்கள் அங்கு இரகசியமாக என்ன பேசுகிறார்கள்? எங்களது போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது" என அவர்கள் கோஷமெழுப்பினார்கள். மீனவர்களின் அழுத்தத்தினால் சில வ.மா.க.தொ.கூ.ச.ச. கிளை தலைவர்களும் இந்த முடிவிற்கு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அதே தினம் அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசிய கூட்டனியின் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் இராணுவ, கடற்படை, வான்படை உயர் அதிகாரிகளையும் சந்தித்தனர். அந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் மீன்பிடி பிரதேசங்களிலும் நேரத்திலும் மேலதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாகவே அமைந்தது. மீன்பிடிப்பதற்கான காலவரையறை அதிகாலை 4.30 முதல்காலை 6.30 வரை குறைக்கப்பட்டது. மீனவர்களுக்கு கிழமை நாட்களில் கரையிலிருந்து 500 மீட்டர்களுக்கு அப்பாலும் வார இறுதி நாட்களில் 1500 மீட்டர்களுக்கு அப்பாலும் செல்லவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

"தொழிற்சங்கத் தலைவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துக்கு ஏஜன்டுகளாக செயற்பட்ட்டனர், எங்களுக்காக அல்ல" என மறியலில் இருந்த மீனவர் ஒருவர் விளக்கினார்.

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்பாகக் கூறப்படும் யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் முன்னணி, குறிப்பாக வட மாகாண கடற்தொழிலாளர் சங்கத் தலைமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச இராணுவம் ஆகியோரின் பக்கம் இறங்கி வந்துவிட்டது. இந்த அமைப்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை தயாரிப்புகளுக்கு பாதகமான சக்தியாக செயற்படவேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை எச்சரிக்கை செய்தது.

ஒரு மீனவர் எமது நிருபர்களோடு பேசுகையில்: இந்த தடைகளால் கடந்த ஆறு மாதங்களாக எமக்கு எந்த வருமானமும் கிடையாது. எமது பிள்ளைகளை பாடசலைக்கு அனுப்பமுடியாது. எம்மிடம் பணம் இல்லாததால், நாங்கள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் வைத்திய சிகிச்சை கூட பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்கிய போதிலும் அது எமக்கு போதுமானதல்ல. எமக்கு எங்களுடைய வேலையைசெய்ய அனுமதித்தால் எமக்கு இந்தநிவாரணம் தேவையில்லை.

"அண்மைக்கால யுத்த நிறுத்த அறிவிப்பை அடுத்து, இராணுவத்துக்கும் புலிகளுக்கும் அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் சுதந்திரமாக எந்த பிரச்சினையுமின்றி நடமாடலாம். ஏன் எங்களுக்கு மாத்திரம் அந்த உரிமை இல்லை?

அவர் அரசியல்வாதிகளால் தொழிலாளர்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் தொடர்பாக தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். "எமக்கு நிரந்தரதொழில் இல்லை, நாங்கள் பருத்தித்துறை துறைமுகத்தில் பொதிகளை இறக்கினோம். அமைச்சர் டி.மகேஸ்வரன் அன்மையில் துறைமுகத்துக்கு விஜயம் செய்யதபோது, அவரது கம்பெனிக்கு வரும் சீனி மூடைகளை கொக்கி பாவித்து இறக்க வேண்டாம் என கூறினார். ஆனால் நாங்கள் கொக்கிகள் இல்லாமல் அந்த மூடைகளை இறக்கினல் எமது கைகள் காயமடையும். எமது கைகளைப் பாருங்கள் என தனது கைகளை விரித்துக் காட்டினார்.

உடனடியாக வடமாகான கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்கத்தின் ஒரு அங்கத்தவர் இந்த அரசியல் வாதிக்கும் துறைமுக தொழிலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தை சுட்டிக்காட்டினார். "நாங்கள் கடந்த டிசம்பர் தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன்னர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஒரு ஊர்வலத்தை நடத்தினோம். அப்போது அங்கு வந்த மகேஸ்வரன்: 'நீங்கள் யூ.என்.பி.க்கு வாக்களித்தால் நாங்கள் உங்கள் பிரச்சினைகளை எமது ஆட்சியில் இரண்டு நாட்களில் தீர்த்துவைப்போம்' என வாக்குறுதியளித்தார். ஆனால் தேர்தலின் பின் அவரை நாம் சந்தித்து அவரது வாக்குறுயை நினைவுபடுத்தியபோது: "எங்களுக்கு இந்த பிரதேசத்தில் 800 வாக்குகளே கிடைத்தன. எனவே உங்களுடையப் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களிடம்போய்க் கேளுங்கள்' என பதிலளித்தார்."

இந்த வாரம் சில பகுதிகளில் தடைகள் தளர்த்தப்பட்டுள்ள அதேவேளை இராணுவ அதிகாரிகள் வடமாராட்சி கரையோர பிரதேசத்திலான மீன்படி நடவடிக்கைகளில் மேலதிக தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஒரு இராணுவ தளத்திலிருந்து அல்லது ஏனைய இராணுவ நிலையங்களில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் எந்த ஒரு பிரதேசத்திலும் மீன்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதோடு மீனவர்களின் படகுகளில் 15 குதிரைவலுவுக்கு மேற்படாத மோட்டார்களையே பாவிக்க வேண்டும்.

யாழ்ப்பாண மீனவர்களின் போராட்டம் நசுக்கப்பட்டமை எதிர்காலத்தில் வரவிருக்கும் விடயங்கள் பற்றிய ஒரு அறிகுறியாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டமையானது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை குறிக்கோளகக் கொண்ட பேச்சுவார்த்தைகளின் நீண்ட திட்டங்களின் முதற் படியாகும். விடுதலைப் புலிகள் கொழும்பு அரசாங்கத்துடனான தனது கொடுக்கல் வாங்கல்களுக்காக சாதாரண மீனவர்களின் ஜீவியத்தை தியாகம் செய்தமை, எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் தொழிலாள வர்க்கத்தின் செலவில் சிங்களத் தமிழ் ஆளும் கும்பல்களின் தனிப்பட்ட அவசியங்களை ஒன்று சேர்ப்பது பற்றிய ஒரு எச்சரிக்கையாகும்.