World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

The World Economic Crisis: 1991-2001

உலகப் பொருளாதார நெருக்கடி:1991-2001

பகுதி 1 | பகுதி 2 |பகுதி 3

By Nick Beams
14 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலை தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான நிக் பீம்ஸால் ஜனவரி 16, 2002 அன்று வழங்கப்பட்ட சொற்பொழிவின் முதல் பகுதியை கீழே நாம் பிரசுரிக்கின்றோம். ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேசப் பள்ளியில் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்னர், சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளும் பொறிந்தபோது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வரும் கேள்வியை முன்வைத்தது: இந்த ஆட்சிகள் இல்லாமற் போனது புதிய முதலாளித்துவ சமநிலைக்கான நிபந்தனைகளை ஏற்படுத்தி இருக்கிறதா, அல்லது அது உலக முதலாளித்துவத்தின் ஸ்திரநிலையை ஒட்டு மொத்தமாகக் இல்லாதொழித்த நிகழ்ச்சிப் போக்கின் ஆரம்ப வெளிப்பாடா?

இரு விடைகளிலிருந்தும் வேறுபட்ட முன்னோக்குகள் எழுகின்றன. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, முதலாளித்துவம் புதிய உயிர் நீட்டிப்பை எடுத்திருந்தது என இப்படிச் சொல்லலாம் என்றால், தற்போது சோசலிசம் இறக்கவில்லை என்று நாம் சொல்ல வேண்டியிருக்கும், சோசலிசப் புரட்சிக்கான முன்னேற்றம் எதிர்காலத்தில் ஏதோ வரையறுக்கபடமுடியாத புள்ளிக்கு கட்டாயம் ஒப்படைக்கப்படுவதாக இருக்கும்.

மாறாக சோவியத் ஒன்றியத்தின் உயிர் துறப்பு இறுதி ஆய்வில் உலகப் பொருளாதாரத்தில் பரந்த மாற்றத்தின் அரசியல் வெளிப்பாடாக இருந்தது என்று நாம் நிலைநாட்டினோம் --அம்மாற்றங்கள் முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரத்தன்மை தங்கியிருந்த அரசியல் கட்டமைப்பை இல்லாதொழித்த மாற்றங்களாகும். உற்பத்தி பூகோளமயமாக்கல், கணினி சில்லை அடிப்படையாகக் கொண்ட தொலை நோக்கில் பாதிப்பைக் கொண்ட தொழில் நுட்ப முன்னேற்றங்களுடன் கட்டுண்டிருக்கிறது. அது மொத்தத்தில் "தனி நாட்டில் சோசலிசம்" என்ற அதன் வேலைத் திட்டத்தில் முன்நிலைப்படுத்திக் காட்டிய ஸ்ராலினிசத்தின் தேசியப் பொருளாதார முன்னோக்கின் முற்றிலும் இயலாத்தன்மையாகும்.

ஆனால் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவானது, மீண்டும் உலகப் பொருளாதாரத்திற்கும், முதலாளித்துவத்தால் இயக்கப்படும் உற்பத்தி சக்திகளின் பூகோள விரிவாக்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சி அடித்தளமாகக் கொண்டிருக்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான முரண்பாட்டின் வெடிப்பின் ஆரம்ப வெளிப்பாடு மட்டுமே ஆகும். நாம் வலியுறுத்திய இம்முரண்பாட்டின் மீழ் வெளிப்பாடு தொலைநோக்கான பொருளாதார மற்றும் அரசியல் விளைபயன்களைக் கொண்டிருந்தது.

கடந்த தசாப்தத்தில் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலை முதலாளித்துவத்தின் வரலாற்று அபிவிருத்தியில் புதியகட்டத்தின் விளைபயனுகளூடாக வேலைசெய்வதை மையப்படுத்தி இருந்தது மற்றும் இந்த ஆய்வின் அடிப்படையில், எமது சொந்த வேலையின் வடிவங்களுள் தேவையான மாற்றங்களை செய்வதாக இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்தே மிகப் பெரிய மற்றும் சக்திமிக்க தொழிலாளர் அதிகாரத்துவமான ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியானது அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் பரிணாமத்திற்கான பாரதூரமான விளைபயன்களைக் கொண்டிருந்தது என்பதை நாம் கண்டுகொண்டிருந்ததோம். தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக மற்றும் தொழிலாளர் கட்சிகளின் உருமாற்றம் வெறுமனே மற்றும் அவற்றின் பல்வேறு தலைவர்களது காட்டிக் கொடுப்புக்களின் வெளிப்பாடு அல்ல, மாறாக அவற்றின் அதே கட்டமைப்பின் உள்ளார்ந்த உற்பத்தி ஆகும் என நாம் வலியுறுத்தினோம். அது பூகோள உற்பத்தியிலிருந்து உருவாகிய புதிய சூழ்நிலைக்கு தேசிய அடித்தளத்தைக் கொண்ட அமைப்புக்களின் பதிலாக இருந்தது.

தேசிய சுயநிர்ணய உரிமை முன்னோக்கில் மறு பரிசீலனை செய்ததுபோல உற்பத்தி பூகோளமயமாக்கல் மீதும் விமர்சன ரீதியான மறு ஆய்வு தேவைப்படுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய சுயநிர்ணய உரிமை இயக்கப்பட்ட வரை, ஆரம்ப சகாப்தத்தில் இந்தக் கோரிக்கை முற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்டிருந்த அதேவேளையில், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பரந்த மாற்றமானது அது இப்பொழுது மாறி இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகின்றது. "சுயநிர்ணய உரிமை" என்பது பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கப் பகுதிகள் பூகோள மூலதனத்துடன் தங்களின் சொந்த உறவை ஏற்படுத்துவதற்கான கோரிக்கையாகிவிட்டது.

பல்வேறு குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்கினருக்கு எதிராக அனைத்துலகக் குழுவின் ஆய்வானது அபிவிருத்தி செய்யப்பட்டது. இக்குட்டி முதலாளித்துவ பிரிவினர், தேசிய அரசு என்றும் போல் பலமாக தொடர்ந்து இருக்கிறது மற்றும் அரசியல் முன்னோக்குகள் அதை நோக்கி திசைவழிப்படுத்தப்பட வேண்டும் என்றும், பூகோளமயமாக்கல் என்பது ஆளும் தட்டால் நடத்தப்படும் கொள்கைப் பிரச்சாரத்தைத் தவிர உண்மையில் வேறொன்றும் இல்லை என்று வலியுறுத்தினர். இறுதி ஆய்வில் 1994இல் நமது ஆய்வின் மீதான ஸ்பார்ட்டாசிஸ் லீக்கின் தாக்குதலானது, தேசிய அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மேல் தமது அரசியல் முன்னோக்கைத் தளமாகக் கொண்டவர்கள் அனைவரினதும் கண்ணோட்டத்தின் சுருக்கமான தொகுப்பாக இருக்கின்றது.

இத்தீவிரவாதிகள் ஆதரிக்கின்றவாறு, உற்பத்தி சக்திகளின் பூகோள அபிவிருத்தியால் தேசிய அரசு கீழறுக்கப்பட்டிருக்கவில்லை என்றால், அவர்கள் வலியுறுத்துவதுபோல் அது முக்கிய தலைமை உடைய அரசியல் மற்றும் பொருளாதாரத் தனித்தன்மையாக தொடர்ந்து இருந்தால், அப்பொழுது மார்க்சிசத்தின் முழு முன்னோக்கும் அறவியல் அல்லது ஒழுக்கக் கருத்தியலை தவிர வேறொன்றுமாய் இருக்க முடியாது. அதாவது தேசிய அரசையும் தனிச் சொத்துடைமையையும் இல்லாதொழிப்பதை அடிப்படையாகக் கொண்ட சோசலிச முன்னோக்கானது வெறும் கற்பனையானதாக ஆகின்றது.

இதுதான் பூகோளமயமாக்கலுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்களிலிருந்து எழுந்த பிரதான அரசியல் பிரச்சினையாக இருந்தது. 1999ல் சியாட்டில் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து முற்றிலும் முற்போக்கான அபிவிருத்தியும் இறுதி ஆய்வில் உலக சோசலிசத்திற்கான அடிப்படையாகவும் இருக்கும் உற்பத்தி சக்திகளின் பூகோளமயமாக்கலுக்கும், தனிச்சொத்துடைமையையும் தேசிய அரசையும் அடிப்படையாகக் கொண்ட, அதற்குள்ளே நெருக்கப்பட்டிருக்கின்ற, காலாவதியாகிப் போன பிற்போக்கு அமைப்பான பூகோள முதலாளித்துவத்துக்கும் இடையில் வேறுபடுத்தல் செய்யப்பட வேண்டும் என்று நாம் விளக்கினோம். இந்த வேறுபடுத்தல் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் மைக்கேல் சோசுடோவ்ஸ்கிக்கு எதிரான எமது வாதத்தில் மத்திய புள்ளியாக இருந்தது.

நமது ஆய்வை அடிப்படையாகக் கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, 1995ல் நமது கழகங்களை கட்சியாக மாற்றல் மற்றும் உலக சோசலிச வலைதளத்தை ஆரம்பித்தல் போன்ற பிரதான மாற்றங்களை எடுத்திருக்கிறது: .

இப்பொழுது நாம் கேள்வியை முன்வைப்போம்: நமது முன்னோக்கு நிகழ்வுகளின் சோதனையில் நின்று பிடித்ததா? வேறுவிதமாகக் கூறினால், மேலும் பூகோள விரிவாக்கம் அடிப்படையாகக் கொள்ளக் கூடிய புதிய சர்வதேச சமநிலையை ஏற்படுத்துதல் என்பது முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை சாத்தியமாக இருந்திருக்கிறதா? தற்போதைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் பின்வருவதைச் சுட்டிக்காட்டும் அபிவிருத்திப் போக்குகள் இருக்கின்றனவா? கடந்த பத்து ஆண்டுகளின் புயல்களும் அழுத்தங்களும் வெறுமனே புதிய நிலையான சர்வதேச ஒழுங்கின் பிரசவ வேதனைகளா? அல்லது, அதற்கு மாறாக, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் பொறிவினால் குறிக்கப்பட்ட ஆழமாகிவரும் சமநிலையின்மையை அவை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவா? இந்த சொற்பொழிவில், நான் இக் கேள்விகளுக்கு விடையளிக்க மற்றும் அவை பற்றிக் கூற முயல்வேன்.

அமெரிக்கா தலைமையிலான மூன்று யுத்தங்கள்

கடந்த தசாப்தத்தில் அரசியல் பொருளாதாரத்தின் தனிச் சிறப்பியல்புகள் இரண்டு இருக்கின்றன: அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடாத்தப்பட்ட மூன்று யுத்தங்களின் வெடிப்பு மற்றும் சர்வதேச நிதி அமைப்பு முறைக்குள்ளே வளர்ந்து வரும் கொந்தளிப்பு. 1990-91 வளைகுடா யுத்தத்தைத் தொடர்ந்து 1999ல் சேர்பியாவில் யுத்தம் மற்றும் அதனுடன் 2002 "யுத்த ஆண்டாக" இருக்கும் என்ற புஷ்ஷின் உறுதிப்பாட்டுடன், இப்பொழுது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யுத்தம். நாம் 2002ல் நுழைகையில், நூற்றாண்டின் கால் பகுதியில், மற்றும் சாத்தியமாயின் போருக்குப் பிந்தைய முழு காலகட்டத்தின் மிகவும் இடரார்ந்த பூகோள பொருளாதார மந்தநிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

1990-91ன் வளைகுடா யுத்தம் சோவியத் ஒன்றியத்தின் இறுதிச் சிதறுண்டு போதலுடன் உள்ள பொருத்தம் எதிர்பாராதது அல்ல. அவை உலக முதலாளித்துவத்தின் போருக்குப் பிந்தைய சமநிலையின் நிலைமுறிவான ஒரே நிகழ்ச்சிப் போக்கின் இரு அம்சங்களாக இருந்தன. அந்த நேரத்தில் நாம் குறித்தவாறு, அமெரிக்காவின் நிலை மிகவும் முரண்பட்டதாக இருந்தது. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் மீதான வெற்றியை வரவேற்ற அதேநேரத்தில், அமெரிக்காவானது அதன் போட்டியாளர்கள் மீது தனது பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்குப் போராடிக் கொண்டிருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 1991 அறிக்கையான ஏகாதிபத்தியப் போரையும் காலனித்துவத்தையும் எதிர்ப்போம் என்பதில், "தனது உலக மேலாதிக்க நிலையை மீள்விப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓட்டமானது உலக அரசியலில் தனித்த மிகவும் வெடிப்புடைய மூலக்கூறைக் கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டது. ஐக்கிய அமெரிக்க அரசுகளைப் பொறுத்தவரை குவைத்தின் "விடுதலையைக்" காட்டிலும் மிக முக்கியமானதாக இருந்தது அதன் இராணுவ வலிமையைப் பற்றி சர்வதேச ரீதியான செயல்விளக்கத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பமாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மே 1999 அறிக்கையான, உலக அதிகாரம், எண்ணெய் மற்றும் தங்கம், யூகோஸ்லாவியாவுக்கு எதிரான அமெரிக்க யுத்தத்திற்கான மூலகாரணங்கள் முன்னாள் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் எல்லைப் பகுதிகளை மீள ஒன்றிணைப்பதற்கும் அவற்றின் வளங்களை அபகரிப்பதற்கும் பிரதான வல்லரசுகளால் நடத்தப்படும் போராட்டத்தில் கிடக்கின்றது என வரைந்து காட்டியது.

"காஸ்பியன் கடலோரமாக உள்ள (அஜர்பைஜான், காஸாஸ்தான், துர்க்மேனிஸ்தான்) முன்னாள் சோவியத் குடியரசுகளில்தான் தோண்டி எடுக்கப்படாமல் உலகின் மாபெரும் எண்ணெய் படிமங்கள் இருக்கின்றன. இந்த வளங்கள் இப்போது பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே பங்கிடப்பட்டு வருகின்றன. இந்த எரிபொருட்களே புதிய இராணுவவாதத்துக்கு எண்ணெய் வார்ப்பதோடு உள்ளூர் எதிரிகளுக்கு எதிரான ஏகாதிபத்திய சக்திகளின் புதிய ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும் இட்டுச் செல்லும். அத்தோடு ஏகாதிபத்திய வாதிகளிடையே முன்னொருபோதும் இல்லாத விதத்திலான மோதுதல்களுக்கும் இட்டுச் செல்லும்."

"கடந்த தசாப்தத்தில், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் யுத்த வெறியினை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் இதுவேதான். யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சு பூகோளத்தைப் பற்றிப் பீடித்துக் கொண்டுள்ள ஒரு தொகை ஆக்கிரமிப்பு யுத்தத்தின் இன்றைய வகையாகும். அவர்கள் சில பிராந்திய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் இந்த யுத்தங்கள் சோவியத் யூனியனின் முடிவால் திறந்து விடப்பட்ட சந்தர்ப்பங்களுக்கும் சவால்களுக்கும் அமெரிக்காவினது பதிலாக விளங்கியது. வந்து கொண்டிருக்கும் மூலவளங்களுக்கான போராட்டத்தில் போட்டியாளர்களிடையே நின்றுபிடிக்க தனது இராணுவ பலத்தை ஒரு துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தலாம் என வாஷிங்டன் நினைக்கின்றது."

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆய்வு ஆப்கானிஸ்தானில் தற்போதைய யுத்தத்தை எதிர்பார்த்தது. அது செப்டம்பர் 11 நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே நன்கு தயாரிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாதத் தாக்குதல்கள் அமெரிக்க அரசாங்கம் நீண்டகாலமாக ஏற்பாடு செய்திருந்த அதன் இராணுவத் திட்டங்களை இயங்க வைப்பதற்கான சாக்குப் போக்கை வழங்கியது.

அமெரிக்காவின் பூகோள நிலைப்பாடு கடந்த தசாப்தத்தின் பொழுது நடந்த அநேக கலந்துரையாடல்களின் கருப்பொருளாக இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, 1992ல் பென்டகனிலிருந்து கசிந்த விஷயக் குறிப்பு அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய பிரச்சினை, அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தைப் பேணுவதாக இருந்தது என்று விளக்கியது.

1997ல், கார்ட்டர் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி (Zbigniew Brzezinski ) தெளிவாக அவரது நிலைப்பாட்டைக் கூறினார்:

"இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தம் உலக விவகாரங்களில் கட்டுமானம் சார்ந்த விலகலை சான்று கூறுகின்றது... சோவியத் ஒன்றியத்தின் பொறிவும் தோல்வியும் மேற்கத்திய கோளத்தின் வல்லரசான, ஐக்கிய அமெரிக்க அரசுகள், தனித்த, மற்றும் உண்மையில் முதலாவது உண்மையான பூகோள வல்லரசாக விரைந்து விண்ணேறுதலின் கடைசி அடி எடுப்பாக இருந்தது."

ஆனால், அந்த மேலாதிக்கம் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பது கேள்வியாக இருந்தது. பிரிஜேஜின்ஸ்கியின் படி, "பூகோள ரீதியாக போரில் இறங்கியுள்ள அமெரிக்கா சிக்கலான ஐரோ-ஆசிய அதிகார உறவுகளுடன் எப்படிப் பொருந்துவது என்பது பற்றிய பிரச்சினை-- மற்றும் குறிப்பாக அது மேலாதிக்கமிக்க முரண்பாடான ஐரோ-ஆசிய வல்லரசின் தோற்றத்தைத் தடுக்குமா என்பது பூகோள ஆதிக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் ஆற்றலின் மையமாக இருக்கிறது" (பிரிஜேஜின்ஸ்கி, முதன்மை சதுரங்கம், பக்கம் xiii-xiv).

பிரிஜேஜின்ஸ்கி அவரது புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தை, தோராயமாகச் சொன்னால், காஸ்பியன் கடலை எல்லையாகக் கொண்ட நாடுகளையும் அவற்றின் அண்டை நாடுகளையும் உள்ளடக்கும் "ஐரோ-ஆசிய பால்கன்கள்" (Eurasian Balkans) என்று அவர் அழைப்பவற்றுக்கு அர்ப்பணிக்கின்றார்.

"பாரம்பரிய பால்கன்கள் (பால்க்கன் குடியரசு) ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் புவிசார் அரசியல் பரிசின் சாத்தியத்தை (potential) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஐரோ-ஆசிய பால்கன்கள், இருமருங்கும் தவிர்க்க முடியாதபடி போக்குவரத்து வலைப் பின்னல் தோன்றுவதன் அர்த்தம் ஐரோ-ஆசியாவின் செல்வம் மிக்க மற்றும் மிகவும் தொழில்துறை மிக்க மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளுடன் மிக நேரடியாக இணைக்கப்படுவது கூட புவிசார் அரசியலில் குறிப்பிடத் தக்கதாகும். மேலும், குறைந்தபட்சம் அவர்களின் மிக உடனடியான மற்றும் மிகவும் செல்வாக்குள்ள மூன்று அண்டை நாடுகளுக்கு, பெயர் குறிப்பதாயின் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு மற்றும் வரலாற்றுக் குறிக்கோள்களின் நிலைப்பாட்டிலிருந்து முக்கியமானது. அத்துடன் சீனா இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் அரசியல் நலனை சைகை காட்டுகின்றது. ஆனால் ஐரோ-ஆசிய பால்கன்கள் சாத்தியமான பொருளாதாரப் பரிசாக தொடர்ந்தும் முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது: இந்தப் பிராந்தியத்தில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் சேர்ம இருப்பு பெரும் அளவில் செறிந்திருக்கிறது, அத்துடன் கூட தங்கம் உள்பட முக்கிய கனிவளங்கள் இருக்கின்றன," ( பக்கம்.124)

பூகோள அதிகாரத்தை பின்தொடர்வதும் உள்நாட்டில் ஜனநாயகத்தை பின்பற்றுவதும் பொருந்தாததாக இருக்கின்றன என்று பிரிஜேஜின்ஸ்கி குறிப்பிடுகின்றார். "அமெரிக்கா வெளியில் ஏகாதிபத்தியமாக இருப்பதற்கு உள்நாட்டில் அளவுக்கு அதிகமாக ஜனநாயக தன்மையுடையதாக இருக்கிறது. இது அமெரிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தலை மட்டுப்படுத்துகின்றது, சிறப்பாக இராணுவ அச்சுறுத்தலைக் கொண்டு பணிய வைப்பதற்கான அதன் ஆற்றலை மட்டுப்படுத்துகின்றது. ஜனரஞ்சக ஜனநாயகம் முன்னர் ஒருபோதும் சர்வதேச மேலாதிக்கத்தை அடைந்ததில்லை. ஆனால் உள்நாட்டு நலவாழ்வு பற்றிய மக்களின் உணர்வுக்கு சவாலோ அல்லது திடீர் அச்சுறுத்தலோ ஏற்படும் சூழ்நிலை தவிர மற்றைய வேளைகளில், மக்களது உணர்ச்சிகளின் மீது ஆட்சி செலுத்துவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பது இலக்காக இருக்கவில்லை" (பக்கம் 36).

செப்டம்பர் 11 நிகழ்வுகள் மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள இயங்கு சக்தி இவை இரண்டினது பாத்திரம் பற்றி மிக இரத்தினச் சுருக்கமாக ஒருவரால் அரிதாகத்தான் விளக்க முடியும்.

ஜனவரி 7ம் தேதி சிட்னி மோர்னிங் ஹெரால்டில், எல் ஏ டைம்ஸ் மற்றும் ரொயட்டர்ஸ் இவற்றிலிருந்து இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்ட கட்டுரை கடந்த தசாப்தத்தில் அமெரிக்கப் படைகள் கட்டி எழுப்பப்பட்டதைக் குறிப்பிடுகிறது:

"இரகசிய ஒப்பந்தங்களின் மூடுதிரைகளுக்குப் பின்னால், ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஆப்கானிஸ்தானை சுற்றி வளைத்து முஸ்லிம் உலகின் பெரும்பாலானவற்றில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கான அதன் திறனை மேம்படுத்தும் புதிய விரிவுபடுத்தப்பட்ட இராணுவ தளங்களின் வளையம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. செப்டம்பர் 11க்குப் பின்னர், ஆப்கானிஸ்தானின் ஒன்பது அண்டை நாடுகளில் 13 இடங்களில் இராணுவ கூடாரம் போட்ட நகர்கள் பெருகி வருகின்றன அது இந்தப் பிராந்தியத்தில் தளங்களின் வலைப்பின்னலை கணிசமான அளவுக்கு விரிவாக்கி இருக்கிறது என்று பென்டகன் தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. பல்கேரியா மற்றும் உஸ்பெக்கிஸ்தானிலிருந்து துருக்கி, குவைத் மற்றும் அப்பால், இந்த முன்னோக்கிய தளங்களில் 60,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கின்றனர்."

ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தின் பின்னர், அமெரிக்கா ஆறு பாரசீக வளைகுடா நாடுகளில் வலைப்பின்னல் வசதிகளைக் கட்டி இருக்கிறது. செப்டம்பர் 11க்குப் பின்னர், அமெரிக்கா படைகளை நிலை நிறுத்துவதற்காக கிர்கிஸ்தான், பாக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

செப்டம்பர் 11 நிகழ்வுகள் அரசியல் சூழ்நிலைகளில் கடும் மாற்றங்களுக்கு இட்டுச் சென்றுள்ள அதேவேளை, அவை நடந்திராவிட்டாலும், எவ்வாறாயினும் ஆப்கானிஸ்தானில் யுத்தம் இன்னொரு சாதகமான நிலையில் நடத்தப்பட்டிருந்திருக்கும்.

விசித்திரமான 10 ஆண்டு வளர்ச்சி சுழற்சி

பொருளாதாரச் சூழ்நிலையைப் பொறுத்தவரை, அமெரிக்காவினதும் உலகத்தினதும் பொருளாதாரப் பின்னடைவானது செப்டம்பர் 11க்கு முன்னரே இயங்கிக் கொண்டிருந்தது. மற்றும், இராணுவ நிகழ்ச்சிகள் போல, அது தசாப்தம் முழுவதும் முடிவற்று நிகழ்ந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடாக இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், தேசியப் பொருளாதார ஆய்வுக் கழகம் (NBER), வேலைவாய்ப்புப் புள்ளி விவரம் உட்பட, தொடரான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அமெரிக்கப் பொருளாதாரம் பொருளாதாரப் பின்னடைவினுள் நுழைந்து கொண்டிருந்தது என்று அறிவித்தது. தேசியப் பொருளாதார ஆய்வுக் கழகத்தின்படி, பொருளாதாரப் பின்னடைவானது மார்ச் காலாண்டில் ஆரம்பித்தது, 1990-91ல் கடந்த பொருளாதாரப் பின்னடைவின் முடிவின் பின்னர் சரியாக 10 ஆண்டுகள் ஆகும்.

இந்தச் சுழற்சியினை கவனமான ஆய்வின் கீழ் உட்படுத்துவது பயனுள்ளது. முதலாவதாக, அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் பொருளாதாரப் பின்னடைவு இல்லாத விரிவாக்கத்தின் நீண்டகால கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. 1950கள் மற்றும் 1960களின் போருக்குப் பிந்திய செழுமைக்காலத்தில் கூட அத்தகைய தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியின் நீண்டகாலகட்டம் இருக்கவில்லை. ஆனால் இந்த 10 ஆண்டு வளர்ச்சி சில விசித்திரமான சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கிறது.

நவம்பர் 1-ன் ஃபைனான்சியல் டைம்ஸ் (Financial Times) குறித்தவாறு, "புதிய பொருளாதாரத்தின்" விடியலாக இருக்கின்றதற்கும் அப்பால் 1990களின் சுழற்சி சாதகமாயிராத முந்தைய கட்டங்களுடனேயே ஒப்பிடுகின்றது. ஒட்டு மொத்த வளர்ச்சி ஆண்டுக்கு 3.1 சதவீதமாக இருந்த அதேவேளை, தனிதலைக்கான வீத வளர்ச்சியானது ஒரு சதவீத புள்ளி கீழாக இருந்தது.

வரலாற்று ரீதியாக, அண்மைய சுழற்சி எந்த வழியிலும் விதிவிலக்கானதாக இருக்கவில்லை. 1990களின் வளர்ச்சி வீதம் கடந்த 1970களின் ஒளி மங்கலானதை சற்று விஞ்சி மட்டும் இருந்தது: 1973 க்கும் 1980 க்கும் இடையிலான பொருளாதாரச் சுழற்சியில், அமெரிக்கா 2.9 சராசரி வளர்ச்சி வீதத்தைக் குறியாய் பதித்தது. அது 1980 களின் சுழற்சியைக் காட்டிலும் மெதுவானதாக இருந்தது. மற்றும் 1960களின் 4.4 சதவீதம் சராசரி வளர்ச்சி பதிவுக் குறிப்புடன் ஒப்பிடுகையில், அண்மைய அமெரிக்க வளர்ச்சிக் காட்சி அற்பமானதாக இருந்தது. 1990கள் விதிவிலக்காக வளர்ந்திருந்தது என்பது வழக்கமான அறிவுடைமையாக இருந்தது ஏனெனில் வளர்ச்சியின் பாணி முந்தைய போக்குகளைப் பற்றிப் பெருமை பேசியது. மேல்நோக்கிய ஏற்றத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் வளர்ச்சி மிகப்பலமானதாக இருந்தது. அண்மையில், 1990களின் ஆரம்பம் 'வேலையில்லா விரிவாக்கமாக' பண்பிடப்பட்டது என்பது அடிக்கடி அளவுக்கு அதிகமாக மறக்கப்படுகிறது." (ஃபைனான்சியல் டைம்ஸ், நவம்பர்1, 2001)

1990களின் சுழற்சி பற்றிய இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது: "புள்ளிவிபரங்கள் பற்றிய மிகவும் மேலோட்டமான மதிப்புரை கூட 'புதிய பொருளாதாரம்' பெரும்பாலும் பரபரப்பூட்டுவதாக இருந்தது என்று காட்டுகிறது. வர்த்தக சுழற்சி ஒட்டு மொத்தமாக, சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) வீதம் 3.1 சதவீதம் ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் இருந்ததைக் காட்டிலும் மிகக் குறைவாக இருந்தது, மற்றும் எழுபதுகளின் கால அளவினதை விட சிறிதே கீழானதாக இருந்தது." (Dean Baker, The New Economy Goes Bust: What the Record Shows, Center for Economic Policy Research briefing paper).

உலகப் பொருளாதாரம் ஒட்டு மொத்தமாகவும் என்ன? நாம் ஜி-7 நாடுகளை ஆராய்ந்தால், 1983-93 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1993-98 காலகட்டத்தில் உயர்ந்த வளர்ச்சி வீதத்தை அமெரிக்காவும் இங்கிலாந்தும் மட்டுமே கண்டன என்பதைக் காண்கிறோம். ஜி-7ன் அனைத்து நாடுகளும் 1964-73 காலகட்டத்தில் அடைந்த வளர்ச்சி வீதங்களுக்குக் கீழ் வீழ்ச்சி அடைந்தன.

ஜி-7 நாடுகளின் வளர்ச்சி

ஆண்டுக்கு சதவீதமாக ஜி-7ல் வளர்ச்சி

   1964-73  1983-93  1993-98
 Canada  5.6  2.8  2.5
 France  5.3  2.3  1.7
 Germany  4.5  2.9  1.5
 Italy  5.0  2.4  1.3
Japan  9.6  4.0  0.8
 UK  3.3  2.3  2.7
 US  4.0  2.9  3.0

(Table from Eatwell and Taylor, Global Finance at Risk, Polity Press, 2000, p. 107)

வாழ்க்கைத் தரங்கள் பற்றி என்ன?

உலகின் செல்வம் மிக்க 20 சதவீதம் பேர் இப்பொழுது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 86 சதவீதத்தைப் பெறுகின்றனர். மிக ஏழ்மைமிக்க 20 சதவீதம் பேர்1 சதவீதத்தையும் 60 சதவீத நடுத்தரப் பகுதியினர் 13 சதவீதத்தையும் பெறுகின்றனர். உலகின் மிகப் பணக்காரர்கள் இருநூறு பேர்கள் 1994க்கும் 1998க்கும் இடையில் தங்களது வருமானம் டிரில்லியன் டாலர்களுக்கும் மேல் இரட்டிப்பானதைப் பார்த்தனர். உலகின் மிக செல்வந்த மூன்று பேர்கள் நாற்பத்தெட்டு ஏழைநாடுகளின் இணைந்த விளைவின் அளவை விட அதிகமான சொத்துக்களை வைத்திருக்கின்றனர். 1999 ஐக்கிய நாடுகளின் உலக அபிவிருத்தி அறிக்கையின் படி, முழு உலக மக்களுக்கும் அடிப்படை சுகாதாரம் மற்றும் சத்துணவு, அடிப்படைக் கல்வி, குடிநீர் வடிகால், இனப் பெருக்க சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு இவற்றுக்கு 40 பில்லியன் டாலர்கள் எடுக்கும். செல்வம் மிக்க இருநூறு பேர்களின் வருடாந்த 1 சதவீத செல்வம் (சுமார்7 பில்லியன் டாலர்கள்) உலகம் முழுவதும் ஆரம்பக் கல்வியைப் பெறவைக்கும் மற்றும் 5சதவீத செல்வத்தால் அனைத்து அடிப்படை சமூக சேவைகளையும் வழங்க முடியும்.

"1998-99ல், உலகின் மொத்த தலைவீத உற்பத்தி 1.5-1.8 சதவீத வீதத்தில் வளர்ந்து வருகின்ற நிலையில், எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பத்தாண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலும் முன்னர் இருந்ததைவிட குறைந்த தலைவீத வருவாய்களைப் பெற்றிருக்கின்றன மற்றும் குறைந்தபட்சம் ஐம்பத்தைந்து நாடுகள் தலைவீத வருவாயில் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன. செல்வம் மிக்க நாடுகளின் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்கும் மிக ஏழைநாடுகளில் வாழும் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்கும் இடையிலான வருவாய் இடைவெளியானது 1960 ல் 30க்கு 1 ஆக மற்றும் 1990ல் 60க்கு 1 ஆக இருந்ததிலிருந்து 1997ல் 74க்கு 1 ஆக உயர்ந்து இருந்தது. செல்வந்த நாடுகளுக்குள்ளே --குறிப்பாக ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் இங்கிலாந்திலும் வருமான சமத்துவமின்மைகள் கடுமையாய் அதிகரித்திருக்கின்றன மற்றும் பூகோள ஏழ்மையானது இப்பொழுது 1820 களில் இருந்ததைப் போல அல்லது அதைவிட அதிகமாக இருக்கின்றன" என்று அண்மைய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. (Heikki Patomäki, Democratising Globalisation, Zed Books, 2001, p. 100).

அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு திரும்புகையில், 1990கள் அதற்கு முந்தைய அனைத்து தசாப்தங்களையும் முந்தி இருக்கின்ற ஒரே பகுதி, கடனின் வளர்ச்சிதான், குறிப்பாக வெளிநாட்டுக் கடனாகும்.

2000 முடிவில், ஏனைய நாடுகளுக்கு அமெரிக்காவின் நிகர கடன் 2.19 டிரில்லியன் டாலர்களாக இருந்தது, மொத்தமாக நிகர கடன் ஏறத்தாழ 2.60 டிரில்லியன் டாலர்களாக ஆனது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 22 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியது, இது 1997ல் 12.9 சதவீதத்திலிருந்தும் 1999ல் 16.4 சதவீதத்திலிருந்தும் உயர்ந்திருந்தது. இதன் அர்த்தம் அமெரிக்கா இப்பொழுது உலகின் மொத்த சேமிப்பில் மூன்றில் இரண்டு பகுதியை உறிஞ்சிக் கொண்டுள்ளது என்பதாகும். வேறுவிதமாகச் சொன்னால், ஐக்கிய அமெரிக்க அரசுகளானது இராட்சத நிதியை உறிஞ்சி எடுப்பதாகியுள்ளது. இது உலகத்தின் மற்றைய பகுதிகளிலிருந்து மூலதனத்தை உறிஞ்சி எடுக்கிறது. மேலும் இது கட்டாயம் பொருளாதாரப் பதட்டங்களை உருவாக்கும், ஏனென்றால் அமெரிக்காவுக்குள் உறிஞ்சி எடுக்கப்பட்ட மூலதனம் உலகின் மற்றைய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட முடியாது.

இவை அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று அபிவிருத்தியின் உள்ளடக்கத்தில் வைக்கப்படும்பொழுது உண்மையாக ஆச்சரியப்பட வைக்கும் விவரங்களாகும். பிரிட்டிஷ் முதலீடுகள் ஜேர்மனிக்கு எதிரான யுத்தத்திற்கு செலவழிக்க கலைக்கப்பட்ட பொழுது மற்றும் அமெரிக்க வங்கிகளும் நிதி அமைப்புக்களும் ஐரோப்பிய நாடுகளின் யுத்தக் கடன்களிலிருந்து இலாபமடைந்தன. அமெரிக்காவானது 1917ல் முதலாவது கடன் வழங்கும் நாடாக ஆனது. அமெரிக்கா 1980கள் வரை கடன் வழங்கும் நாடாகத் தொடர்ந்தது. இப்பொழுது, ஒரு தசாப்தத்திற்கும் சற்று மேலான காலத்தில், அது உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடாக ஆனது. இந்த மாற்றத்தின் சில குறிகாட்டல்களை நாம் மீள்பார்வை செய்வோம். 1983லிருந்து 1990 வரை அமெரிக்க நிதி அல்லா துறைகளின் மொத்தக் கடன் 5.36 டிரில்லியன் டாலர்களில் இருந்து 10.85 டிரில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக ஆனது. அது 1991ல் 11.31 டிரில்லியன் டாலர்களில் இருந்து 2000-ன் முடிவில் 18.26 டிரில்லியன் டாலர்களாக, 1990ல் 62 சதவீதம் ஆக உயர்ந்தது. 1992க்குப் பின்னர் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குள் அந்நிய முதலீடுகளின் பாய்வு அமெரிக்க கடன் சந்தைகளில் அளிக்கப்பட்ட மொத்த நிதிகளின் பத்து சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு செய்திருக்கிறது.

உள்நாட்டுக் கடனும் கூட உயர்ந்து கொண்டு வருகிறது. நடுவண் ரிசர்வின் (Federal Reserve) நிதிப் பாய்ச்சல் புள்ளிவிபரப்படி, வருவாய் செலவழிப்புக்கு மொத்த கடன் நிலுவை விகிதாச்சாரம் 1990ல் 87 சதவீதமாக இருந்ததிலிருந்து 2000ன் முடிவில் 101 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. மொத்த கடன் சேவைகளுக்கு செலுத்துகை 14 சதவீதம் வருவாய் செலவழிப்பாக பதிவுக் குறிப்பு அளவுக்கு உயர்ந்தது. கடன்படலின் வளர்ச்சியின் விளைவை அமெரிக்கப் பொருளாதாரத்தில் நுகர்வு செலவுக்கான புள்ளி விபரங்களில் காணமுடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வுப் பங்கீடு 1989லிருந்து 2000ல் 2.6 சதவீத அளவில் புள்ளிகள் உயர்ந்தன. இது சேமிப்பு வீதத்தில் சரிவுடன் தொடர்புடையதாக இருந்தது, அதன் 1989 மட்டத்திலிருந்து சராசரியாக 7 சதவீத புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. கடந்த சில ஆண்டுகளில் சேமிப்பு வீதம் எதிர்மறையாகத் திரும்பி உள்ளது.

கடந்த காலகட்டம் அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையின் அதிகரிப்பால் கூட பண்பிடப்பட்டிருக்கிறது, இப்பொழுது அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது, அமெரிக்காவானது அதன் செலுத்துகைச் சமநிலைப் பற்றாக்குறைக்கு நிதி செலுத்த ஒவ்வொரு நாளும் வெளி வளங்களில் இருந்து 1 பில்லியன் டாலர்கள் உள்ளே பாய்வது அதற்கு தேவைப்படுகின்றது.

சர்வதேச நிதி மட்டம் கடந்த தசாப்தம் மற்றும் அரை தசாப்தத்தில் குறைவான வேகத்துடன் அதிகரித்திருக்கவில்லை. உலக பங்குப் பத்திர சந்தை 1970ல் 1 டிரில்லியன் டாலர்களைச் சுற்றி நின்றது. 1980 அளவில் அது 2 டிரில்லியன் டாலர்களாக இரு மடங்காகி இருந்தது. பின்னர் கடும் அதிகரிப்பு வந்தது: அது 1990ல் 12 டிரில்லியன்களாக பாய்ச்சலுக்கு வந்தது, 1995ல் 20 டிரில்லியன் டாலர்களுக்கு மேலாகவும் 1998 அளவில் 25 டிரில்லியன்களாகவும் ஆனது.

1990ன் இறுதியில், அந்நியச் செலவாணி வர்த்தகத்தின் கொள்அளவு ஒரு நாளைக்கு 1 டிரில்லியன் டாலர்களாகும். இது 1986ன் பின்னர் இருந்து எட்டு மடங்கு அதிகரிப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தியது. முரண்பாடாக, 1997க்கான ஏற்றுமதிக்கான பூகோள கொள்ளவு 6.6 டிரில்லியன் டாலர்களாகும் அல்லது ஒருநாளக்கு 25 பில்லியன் டாலர்கள் ஆக இருந்தது.

சேமிப்பு நிதிகளின் தொகையும் அதேவிதமாக விரிவடைந்தது. 1990களின் மத்தியில், பரஸ்பர நிதிகளும் ஓய்வூதிய நிதிகளும் மொத்தமாய் 20 டிரில்லியன்களாக ஆனது. இது 1980களின் எண்ணிக்கையைவிட 10 மடங்காக இருந்தது. அதேபோல, 1990களில் முதலீட்டுக்கான நிதிகளின் கொள்ளவில் பெரும் அதிகரிப்பு இருந்து வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பால் (OECD) தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி, உறுப்பினர் நாடுகளில் அனைத்து முதலீட்டாளர் நிறுவனங்களால், பிரதானமாக காப்புறுதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் இவற்றை உள்ளடக்கிய நிறுவனங்களால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிதிச் சொத்துக்களின் மதிப்பு (பெறுமதி) 1990க்கும் 1995க்கும் இடையில் 9.8 டிரில்லியன் டாலர்கள் அல்லது 75 சதவீதம் ஆக அதிகரித்தது. ஆண்டு அதிகரிப்பான 1.96 டிரில்லியன் டாலர்கள் இந்தக் காலகட்டத்தின் பொழுது OECD நாடுகளின் இணைந்த மொத்த தேசிய வருமானத்தின் சுமார் 10 சதவீதத்திற்கு சமமாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய எண்ணிக்கை விபரங்களுடன் நாம் நிதி மூலதனத்தின் வளர்ச்சியை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்த்தால், அப்பொழுது 1990 களின் பொருளாதார சுழற்சியின் மிக முக்கிய சிறப்பியல்புகளில் ஒன்று வெளிப்பட ஆரம்பிக்கிறது. இதுதான் ஒருபுறம் போலி மூலதனத்திற்கும் மறுபுறம் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் இடையிலான வளர்ந்து வரும் வெவ்வேறு திசைகளில் இயங்கும் தன்மையாகும்.

இந்த வெவ்வேறு திசைகளில் இயங்கும் தன்மையானது போலி மூலதனமானது தொழிலாள வர்க்கத்திலிருந்து கறந்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பின் மீது உரிமை கோருவதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உறுதிப்படுத்துவதற்கு, நிதி மூலதனத்தின் பகுதிகள் சுத்தமான நிதி நடவடிக்கைகளில் இருந்து இலாபத்தை உத்திரவாதம் செய்ய முடியும்-- மற்றும் இந்த நிகழ்ச்சிப் போக்கு சந்தைகளுக்குள் கூடுதல் நிதி பாய்வதை வைத்துக் கொண்டிருக்கும் வரை, கணிசமான காலப்பகுதிக்குப் போக முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், நிதி மூலதனமானது தொழிலாள வர்க்கத்திலிருந்து பெறப்பட்ட உபரி மதிப்பிலிருந்து சில பகுதியைக் கவர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அந்த அமைப்பு முறையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த, போலி மூலதனத்தின் உரிமை கோரல்களை நிறைவேற்றுவதற்குப் போதுமான அளவுக்கு உண்மையான பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இருப்பினும், இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பது தலைகீழானது. போலி மூலதனத்தின் எதிர்கால உரிமை கோரல்களை நிறைவேற்றுவதற்காக போதுமான இலாபங்களை அளிப்பதில் உண்மையான பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காட்டிலும், கார்ப்பொரேஷன்கள் அவற்றின் இலாபங்களைப் பராமரிப்பதற்கு நிதி நடவடிக்கைகளின் மேல் மேலும் மேலும் சார்ந்துள்ளதாக ஆகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சிப் போக்கு பற்றிய ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது: "1980களின் ஆரம்பத்திற்குப் பின்னர் முதலீடுகளின் மேலான மொத்த வருமானத்தின் அதிகரித்துவரும் விகிதாசாரமானது, வருமானங்களில் (ஆதாயப் பங்கு அல்லது மீண்டும் மூலதனமிட்டு அதனுடன் கூட்டிவரும் வட்டி) இருந்து விளைவதைக் காட்டிலும் மூலதன மதிப்பில் (பெறுமதியில்) அதிகரிப்பில் (சம்பந்தப்பட்ட பங்குப் பத்திரங்களின் சந்தை மதிப்பில் மதிப்பு உயர்வில்) இருந்தே விளைந்திருக்கிறது. பிந்தையது ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் பிரிட்டனிலும் மொத்த திரும்பப் பெறும் வருவாயில் 75 சதவீதம் அளவு அதிகமாகக் கணக்கிடப்படுகிறது--1900-79 காலகட்டம் ஒட்டு மொத்தத்திலும் (சராசரியாக) 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள நிலைமையுடன் ஒப்பிடும் பொழுது. மதிப்பில் (பெறுமதியில்) அதிகரிப்பானது, பங்குப் பத்திரங்களால் உண்டு பண்ணப்படும் உண்மையான வருவாய் ஓடையைக் காட்டிலும் சந்தைக்குள்ளே நிதிகள் அதிகமாகப் பாய்வதினால் இயக்கப்பப்பட்டு வருகின்றது மற்றும் விலைகள் தொடர்ந்து மேலே தள்ளப்படும் என்று ஊகம் கொள்கிறது --சாதகமான பொருளாதார நிலைமைகளை பராமரித்தலை (அல்லது மீள்விப்பதை) கருதிக் கொள்கிறது-- என்று இது தெளிவாகக் கூறுகிறது." (Harry Shutt, The Trouble With Capitalism, p. 124).

1990களின் பொழுது உலக முதலாளித்துவத்தின் நிதிக் கட்டமைப்பு அதிகரித்த அளவில் தலைகீழான பிரமிட்டை (pyramid) ஒத்திருக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது அதிகரித்துவரும் போலி மூலதனத் திரட்சி மிகச் சிறிய விகிதாசாரமுடைய உபரி மதிப்பின் திரட்சி மீது தங்கிக் கொண்டிருக்கிறது. தலைகீழ் பிரமிட்டைப் போல அத்தகைய நிதிக் கட்டமைப்பு உள்ளார்ந்த அளவில் ஸ்திரமற்றதாக இருக்கின்றது.

எவ்வாறாயினும், இந்த விஷயத்தில், சமநிலை தாண்டலை விளைவிப்பது புவிஈர்ப்பு விசை அல்ல, மாறாக இலாபத்திற்கான உந்துதல் ஆகும், இது முதலீட்டு நிதிகள் ஒரு சந்தையிலிருந்து மற்றொன்றுக்கு விரைந்து நகருவதைப் பார்க்கிறது. இங்குதான் கடந்த தசாப்தத்தின் பொழுது உலகப் பொருளாதாரத்தின் அந்த அளவுக்கு சிறப்பியல்பாக ஆகி இருக்கும் நிதிப் புயல்களின் மூலத் தோற்றம் இருக்கின்றது.

(தொடரும்....)

See Also:

பூகோளமயமாக்கல்: ஒரு சோசலிச முன்னோக்கு