World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

India's ruling party abetted communal carnage in Gujarat

இந்தியாவின் ஆளும் கட்சி வகுப்புவாத படுகொலையைத் தூண்டிவிடுகிறது

By Keith Jones
5 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் கூட்டரசாங்கத்தில் மேலாதிக்கம் செய்யும் சக்தியான, பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்கள், கடந்த வாரம் மேற்கு குஜராத்தை அதிரவைத்த முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களைத் தூண்டிவிட்டதற்கு நம்பவைக்கும் ஆதாரம் உள்ளன.

வகுப்புவாத வன்முறையை நடத்தியவர்கள் என போலீசாரால் முக்கியமாகப் பெயர் குறிக்கப்பட்டவர்களுள் பி.ஜே.பி மற்றும் பி.ஜே.பி யின் கூட்டாளி விஸ்வ இந்து பரிஷத்தின் (அல்லது உலக இந்து பேரவை) உள்ளூர் செயல்வீரர்கள் மட்டும் அல்லர். பி.ஜே.பி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் செயல்வீரர்களால் திரட்டப்பட்ட கும்பல்கள், முஸ்லிம்கள் வட்டாரத்திலும் கிராமங்களிலும் தாக்குகையில் போலீஸ் அருகில் நின்று கவனித்துக் கொண்டிருந்ததாக பத்திரிகையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து பல செய்திகள் வந்திருக்கின்றன. உண்மையை மறைத்துக்காட்டும் விதமாக, குஜராத் மாவட்ட நகரான கோத்ராவில் முன்னரே முஸ்லிம்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறப்படும் கொடூரத்திற்கு, விஸ்வ இந்து பரிஷத் ஆல் அழைப்பு விடுக்கப்பட்ட மற்றும் மாநில பி.ஜே.பி. ஆல் ஆதரிக்கப்பட்ட அடைப்பு அல்லது பொது வேலைநிறுத்தத்திற்கு இந்தக் கும்பல்கள் ஆதரவுக் குரலைக் காட்டியிருந்தனர்.

இந்தியாவின் தேசிய மனித உரிமைக் கழகம், பி.ஜே.பி கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கம் குஜராத் மாநிலத்தில் அரசாங்கம் வகுப்புவாத வன்முறையைக் கட்டுப்படுத்த என்ன செய்திருக்கிறது என்று விளக்கம் கேட்டிருக்கிறது மற்றும் "மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகளாலும் போலீஸ் படைகளாலும் நிலைமையைக் கையாளுவதற்கு செயலற்றிருக்கும்படி கூறும்" செய்திகளைப் பற்றி மேலும் கூறி இருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளடங்கலான பிரதான எதிர்க்கட்சிகள் குஜராத் அரசாங்கத்தை மனித உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கத் தவறிய அதன் "மோசமான நடத்தை" க்காகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. "குற்றத்தனமான புறக்கணிப்பு இல்லாது, அரசாங்கம் கண்டும் காணாததுமாய் இல்லாதிருந்தால், அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாதிருந்திருக்கக் கூடும்."

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, முஸ்லிம் விரோத வன்முறையைப் பகிரங்கமாக ஆதரித்தார். முதலாவதாக அவர் "ஒவ்வொரு வினைக்கும் சமமான மற்றும் எதிரான வினை உண்டு" என்று குறிப்பிட்டார். பின்னர் கோத்ரா தாக்குதல் தொடர்பாக இண்டாவது தடவை குறிப்பிடுகையில், "ஆழமான ஆத்திரமூட்டலின் கீழ் தனிச்சிறப்பு மிக்க வகையில் கட்டுப்படுத்தலுக்காக" மாநிலத்தின் மக்களைப் பாராட்டினார். போலீசும் மாநில அரசாங்கமும் நெருக்கடியைக் கையாண்ட விதத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அனைத்து அழைப்புக்களையும் மோடி நிராகரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றிக் கூறத் தேவையில்லை.

லண்டன் நாளிதழான டெய்லி டெலிகிராப்பில் வந்த செய்தி அறிக்கை பி.ஜே.பி மேலாதிக்கம் செய்யும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினால் கட்டுப்படுத்தப்படும் மத்திய அரசாங்கமும் கூட முஸ்லிம் விரோத வன்முறை தொடர்வதற்கு அனுமதிக்கும் முக்கிய பாத்திரத்தை வகித்ததாகக் கூறுகின்றது.

கடந்த வியாழன் மாலை அன்று இராணுவம் பக்கத்தில் உள்ள ராஜஸ்தானில் ஜோத்பூரில் இருந்து அகமதாபாத்துக்கு துருப்புக்களை அனுப்புவதற்காக 13 போக்குவரத்து விமானங்களை எரிபொருள் நிரப்பி ஆயத்தமாக வைத்திருந்ததாக பெயர் குறிப்பிடப்படாத உயர் இராணுவ அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டி டெலிகிராப், "விளக்க முடியாத காரணத்திற்காக, மாநிலப் போலீஸ் திறமையற்றிருந்தது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றபோதும், 1000 துருப்புக்கள் அடுத்தநாள் காலையில் தான் சென்றனர்" என்று கூறியது.

மேலும்கூட, துருப்புக்கள் வந்து சேர்ந்த பொழுது, அவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி மற்றும் உளவுத் தகவல்கள் வழங்கப்படவில்லை. "இறுதியாக இராணுவமானது வெள்ளிக் கிழமை மாலை அனுப்பப்பட்டபோது, அது தொந்திரவுக்கு உள்ளான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை" என்று டெலிகிராப்பால் உளவுத்துறை அதிகாரி என்று கூறப்படும் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவர் கூறினார். இராணுவமானது "ஏற்கனவே முஸ்லிம்கள் இருந்து வெளியேறிச் சென்ற பகுதிகளுக்கு போகுமாறு மட்டும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அது மாநிலத்தின் இந்து தேசியவாத அரசாங்கத்தினால் செய்யப்பட்ட திட்டமிட்ட முடிவாகும்."

குஜராத்தில் நடைபெறும் வன்முறை அயோத்தியில் பாபர் மசூதி டிசம்பர் 1992ல் அழிக்கப்பட்டதால் இயக்கப்பட்ட கலவர அலைக்குப் பின்னர், இந்தியாவின் மோசமான வகுப்புவாத இரத்தம் சிந்தலாகும். பி.ஜே.பி தலைமையானது அதன் கூட்டணி பங்காளர்களுக்கு மாறுபாடாக, அயோத்தியில் இந்துக் கோவிலைக் கட்டுவதற்கான அதன் முந்தைய கடப்பாட்டிலிருந்து விலகி இருந்த போதிலும், 1990 களின் ஆரம்பத்தில் அது பி.ஜே.பி யின் பிரதான அணிதிரளல் அழைப்பாக இருந்ததிலிருந்து, கட்சியானது அயோத்தி விவகாரத்துடன் விடுவித்துக் கொள்ள முடியாததாக இருக்கின்றது.

கோரமான வன்முறை

திங்களன்று குஜராத் போலீஸ் ஆறு நாட்களாக நடைபெற்ற கோரமான வன்முறையில் சாவு எண்ணிக்கை 572 ஐ அடைந்தது என அறிவித்தது. வகுப்புவாத படுகொலையானது பிப்ரவரி 27 அன்று அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த இந்து அடிப்படைவாதிகளை ஏற்றி வந்த பல ரயில்பெட்டிகள் மீது, கோத்ராவில் நடைபெற்ற தாக்குதலால் விரைவுபடுத்தப்பட்டது. அவர்கள் மசூதி அழிக்கப்பட்ட இடத்தில் இந்துக் கோவிலைக் கட்டுவதற்கான திட்டத்திற்கு அங்கு போயிருந்தனர். முஸ்லிம் கும்பலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் 58 பேர்கள் இறப்பை ஏற்படுத்தி இருந்தது.

48 மணி நேர பின்நிகழ்வாக அகமதாபாத், ராஜ்கோட், சூரத், பரோடா மற்றும் குஜராத்தின் இதர நகர் மையங்களிலும் பல கிராமங்களிலும் வகுப்புவாத வன்முறை வெடித்தது. வேதனையூட்டும் ஒரு நிகழ்ச்சியில், முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாகும் வரை குண்டாந்தடியால் அடிக்கப்பட்டனர், திரவ எரிவாயுவால் குளிப்பாட்டப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டனர் அல்லது அவர்களின் இல்லங்களில் உயிரோடு கொளுத்தப்பட்டனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான தேநீர்க்கடைகள், கடைகள் மற்றும் வர்த்தக இடங்கள் முறையே கொள்ளை அடிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரக் கூட்டத்தின் மீது திரட்டப்பட்ட இராணுவத்தினர் திரும்பத்திரும்ப துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர்தான் --போலீஸ் துப்பாக்கிச்சூடு காரணமாக 93 பேர்கள் இறந்தனர் என்று போலீஸ் அறிவித்த-- வன்முறை தணிந்தது.

குறிப்பாக, இந்தியாவில் பி.ஜே.பி-யால் இன்னும் ஆளப்படுகின்ற ஒரே பிரதான மாநிலமான, குஜராத்துக்கு வெளியில் தனித்தனி சம்பவங்கள் மட்டும் நடைபெற்றன. மேலும் மார்ச்1, வெள்ளிக் கிழமை நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கான அழைப்பு புறக்கணிக்கப்பட்டது.

சனிக்கிழமை அன்று நாடு முழுவதற்குமான தொலைக்காட்சி உரையில், இந்தியாவின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி குஜராத் வகுப்புவாத வன்முறையை "தேசத்தின் நெற்றியில் விழுந்த கரும் புள்ளி" என குறிப்பிட்டு, அது "உலகில் இந்தியாவின் கெளரவத்தைத் தாழ்த்தியுள்ளது" என்று மேலும் கூறிப்பிட்டார்.

இருப்பினும், பி.ஜே.பி தலைவர் குஜராத் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி எதனையும் கூறவில்லை. தமது சொந்தக் கட்சியுடன் அணிசேர்ந்துள்ள இந்து செயல்வீரர்களால் அயோத்தி விவகாரம் பேரில் தட்டி எழுப்பப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான குரோதம் பற்றியோ மற்றும் அது தமது பாக்கிஸ்தான் விரோத யுத்த நாட்டத்தில் எதிரொலிப்பது பற்றியோ கூட அவர் ஒன்றும் கூறவில்லை.

குஜராத் சம்பவங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உடைவை விளைவிக்கக் கூடும் என்பது வாஜ்பாயி இன் உடனடி அச்சமாக இருந்தது. ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கம் உள்ளடங்கலான கூட்டணியின் பங்காளிகள் கணிசமான முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுகின்றனர். அவர்கள் இந்து பேரினவாத பி.ஜே.பி உடனான அவர்களது கூட்டை, அதன் வகுப்புவாதத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல் என்ற அடிப்படையில் நியாயப்படுத்துகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பி.ஜே.பி தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் குஜராத் சம்பவங்கள் வந்தன. அந்தத் தோற்கடிப்பு தேசிய அரசியல் சமநிலையை மாற்றி இருக்கிறது மற்றும் இந்தியாவின் அனைத்து அரசியலாளர்களையும் தங்களின் நிலையை மறு மதிப்பீடு செய்யும்படி பாதித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை சாமர்த்தியமாக வைத்திருக்கும் அதேவேளை, வாஜ்பாயி தனது கட்சியின் இந்து தேசியவாத அடித்தளத்தைக் கொண்டவர்களின் அதிகரித்து வரும் அமைதியின்மையை சமரசப்படுத்தும் பிரச்சினையையும் எதிர்கொண்டிருக்கிறார். குஜராத் நெருக்கடியைக் கையாளுவதற்காக வாஜ்பாயி ஆஸ்திரேலியாவில் கடந்த வார பொதுநல நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்திற்கான தனது பயணத்தை ரத்துச் செய்தார். அவரது பெரும்பாலான நேரம் இல்லை எனினும், பிஜேபி பொறுப்பாளர்கள், இந்து மதத் தலைவர்கள் இந்து மேலாதிக்க ராஷ்ட்ரிய சுய சேவக் சங்க் ( ஆர்.எஸ்.எஸ்) தலைவர்களைச் சந்தித்து, விஸ்வ இந்து பரிஷத்தை இந்திய உச்ச நீதிமன்றத்தினை மறுத்து மற்றும் மார்ச் 15ல் அயோத்தியில் கோவில் கட்டுவதை ஆரம்பிக்கும் அதன் திட்டத்தை மேற்கொள்ள முடியாமல் எப்படி இணங்க வைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதில் அதிகம் செலவழித்தார்.

பி.ஜே.பி தலைவர்களைப் பொறுத்தவரை மூன்றாவது அக்கறை, ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை எண்ணம் உடைய இந்தியா, இஸ்லாமிய அடிப்படை வாதத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள இராணுவம் ஆட்சி செய்யும் பாக்கிஸ்தானுடன் வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம், பாக்கிஸ்தானுடனான அதன் மோதலில் சர்வதேச ஆதரவை வெல்வதற்கான அதன் முயற்சிகளை வகுப்புவாத வன்முறை சிதற அடித்து விடும் என்ற கவலை ஆகும். உண்மை என்னவென்றால் இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய இரு செல்வந்தத் தட்டுக்களும் சமூக அதிருப்தியை திசைதிருப்பி விடுவதற்கு வகுப்பு வாதத்தையும் மத அடிப்படை வாதத்தையும் விசிறி விட்டு வருகின்றனர்.

பி.ஜே.பி, பாக்கிஸ்தானுக்கு எதிரான போரில் ஈடுபடும் அதன் நிலையை உக்கிரமடையச் செய்யவில்லை என்றால், தற்போதைய நெருக்கடியை தொடர விரும்பும் பலமான குறிகாட்டலாக, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள், கோத்ராவில் இந்து செயல்வீரர்கள் மீதான தாக்குதல், பாக்கிஸ்தான் உளவுப் பிரிவினரால் முஸ்லிம் விரோத கலவரத்தைத் தூண்டிவிடவும் இந்தியாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவுமான நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார்கள். இந்தக் கூற்று இரண்டு காரணங்களுக்காக செய்யப்பட்டது: பாக்கிஸ்தானுடனான குரோதத்தை விசிறிவிடவும் மற்றும் குஜராத்தில் வகுப்புவாத படுகொலைக்கு பி.ஜே.பி-ன் பொறுப்பை மூடி மறைக்கவும் ஆகும்.