World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Indian state election losses intensify tensions in ruling coalition

இந்திய மாநில தேர்தல் இழப்புக்கள் ஆளும் கூட்டணியில் பதட்டங்களை உக்கிரப்படுத்துகின்றன

By Sarath Kumara
4 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரதான பங்காளரான பாரதீய ஜனதா கட்சி, அண்மைய சட்டமன்றத் தேர்தல்களில் கடும் தோல்விகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கட்சியானது அதன் கோட்டைகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட உத்திரப் பிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இழப்புக்கள் பி.ஜே.பி க்கு உள்ளே கசப்பான எதிர்க் குற்றச்சாட்டுக்களைத் தூண்டி விட்டன மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 23 கூட்டில் மேலும் பதட்டங்களைத் தூண்டி விட்டது.

பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தராஞ்சல் அதேபோல உத்திரப் பிரதேசத்திலும் தேர்தல்கள் நடைபெற்றன. உத்திரப்பிரதேசத்தில் 2000ல் புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாநிலமான உத்தராஞ்சலில், அதுதான் முதலாவது மாநிலத் தேர்தல் ஆகும். பிரிக்கப்படாத மாநிலத்தில் முந்தைய அரசியல் மேலாதிக்கத்தின் காரணமாக இடைமருவு நிர்வாகத்தில் பி.ஜே.பி அதிகாரத்தை வைத்திருந்தது.

மிகவும் முக்கியமான தோல்வி 166 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட உத்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட தோல்வி ஆகும். உத்திரப் பிரதேசம் ஏற்கனவே அறிந்தவாறு, பி.ஜே.பி அதன் அரசியல் தளத்தை அமைத்துக் கொண்ட இந்தி பேசும் வட மாநிலங்களில் ஒன்றாகும். 1991ல் அந்தக் கட்சி இந்து பேரினவாதத்தைத் தூண்டி விடுவதை பற்றிக் கொள்ள ஆரம்பித்தபோது பி.ஜே.பி யால் வெல்லப்பட்ட முதல் மாநிலமாக அது இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் தீவிரவாதக் கும்பலைத் தூண்டி விட்டதில் முக்கியமானதாக இருந்தது. அது உ.பி நகரான அயோத்தியில் பாபர் மசூதியை அழித்தது, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், அண்மையில் நடந்த தேர்தலில், பி.ஜே.பியும் அதன் கூட்டாளிகளும் மாநிலத்தின் 403 இடங்களில் 108 ஐ வென்றனர். இது 1996ல் 174 ஆக இருந்ததில் இருந்து குறைவாகப் பெற்றன. கூட்டணிக்கான ஒட்டுமொத்த வாக்கில் 7.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. ஆனால் பி.ஜே.பி தாமே 12.5 சதவீதம் வாக்கை இழந்தது மற்றும் அதனுடைய இடங்கள் கிட்டத்தட்ட160 லிருந்து 89 ஆகப் பாதியாகக் குறைந்தது. குறைந்தது பி.ஜே.பி அமைச்சர்களுள் ஒருவர் தனது இடத்தை இழந்தார். பி.ஜே.பி கூட்டணிகளைப் பொறுத்த மட்டில், 14 இடங்களை வென்ற ராஷ்ட்ரிய லோக் தளம் தவிர அனைத்தும் கடுமையாய் தோல்வி அடைந்தன.

குறிப்பாக, 1947ல் சுதந்திரத்தை அடுத்து இந்திய அரசியலில் மேலாதிக்கம் செய்த காங்கிரஸ்(இ) கட்சியால் பி.ஜே.பி க்கு எதிரான குரோதத்தை சாதகமாக்கிக் கொள்ள முடியவில்லை மற்றும் அது இடங்களைக் கைப்பற்றுவதைக் காட்டிலும் தோல்வியே அடைந்தது. 1970 களில் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அது நாட்டின் பெரிய மாநிலத்தில் பாராளுமன்ற எச்சமாகக் குறைந்தது--1996ல் 33 இருக்கைகளைப் பெற்றிருந்ததில் இருந்து அது வெறும் 26 ஆகக் குறைந்தது. காங்கிரஸ்(இ) அமேதி தொகுதியைக் கூட இழந்தது, அது கட்சித் தலைவி சோனியா காந்தியின் தேசிய தொகுதியின் பகுதியாக இருக்கிறது.

உ.பி தேர்தலில் பிரதான வெற்றியாளர்கள் கீழ் சாதியினரிடமிருந்து ஆதரவைப் பெற்ற இருகட்சிகளான- சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன. சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் புதுதில்லியில் தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு பற்றிய வளர்ந்து வரும் அச்சத்தையும் கவலையையும் சுரண்ட முடிந்தது. அது பத்துலட்சக் கணக்கானோர் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியைத் தூண்டி விட்டிருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அதனுடைய இடங்களை 110லிருந்து 146 ஆக அதிகரித்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி 99 இடங்களை வென்றது, கிட்டத்தட்ட அதன் முந்தைய எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.

மக்கள் தொகை அதிகமான இன்னொரு மாநிலமான பஞ்சாப்பில் பி.ஜே.பிக்கான வெளிப்பாடு, அழிவுகரமானவை. கட்சியானது 1997ல் பெற்ற 18 இடங்களிலிருந்து மூன்று இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதன் பிரதான கூட்டாளி, ஷிரோமணி அகாலிதளமும் (எஸ்.ஏ.டி) கூட கடும் தோல்வி அடைந்தது, 117 இடங்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் அதன் முந்தைய எண்ணிக்கை 75 ஐ ஒப்பிடும்பொழுது 41 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மூத்த பி.ஜே.பி தலைவர் லக்ஷ்மி காந்த சாவ்லா மற்றும் ஷிரோமணி அகாலிதள தலைவர் சந்திரஷித் சிங் ஆகியோருடன் சேர்த்து ஐந்து மாநில அமைச்சர்கள் தங்களின் இடங்களை இழந்தனர். காங்கிரஸ் (இ) 62 இடங்களுடன் பெரிய கட்சியாக தோன்றியது.

பி.ஜே.பி யின் கோட்டையாக ஆகும் கண்ணோட்டத்தில் 2000ல் நிறுவப்பட்ட உத்தராஞ்சலில், பி.ஜே.பி 70 சட்டமன்ற இருக்கைகளில் 19 இடங்களை மட்டும் வென்றது. இடை மருவிய முதலமைச்சர், பி.ஜே.பியின் நித்யானந்த் ஸ்வாமி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாராயண் சிங் ராணா ஆகியோர் இருக்கைகளை இழந்தனர். காங்கிரஸ் (இ) சட்டமன்றத்தில் 36 இடங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது, அதேவேளை பல பிராந்தியக் கட்சிகளைக் கூட பிரதிநிதித்துவம் செய்தது.

மணிப்பூரில் முடிவுகள் இன்னும் முடிவு செய்யப்பட வேண்டி இருக்கிறது ஆனால் பி.ஜே.பி இதுவரை 60 இருக்கைகளில் நான்கை மட்டுமே வென்றுள்ளது. 2001 ஜூலையில் பி.ஜே.பிக்கும் என்.டி.ஏ பங்காளி பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தலைமையிலான சமதா கட்சிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சமதாக் கட்சி மணிப்பூர் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது மற்றும் இரண்டு இடங்களை மட்டும் வென்றது. காங்கிரஸ் (இ) 13 இடங்களை வென்றது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களும் எஞ்சிய இடங்கள் பிராந்தியக் கட்சிகளுக்கும் சென்றன.

கடந்த ஆண்டில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் இழப்புக்களில் முதலிடத்தில் இருந்த பி.ஜே.பிக்கு அண்மைய முடிவுகள் அழிவை பிரதிநிதித்துவப்படுத்தியது. பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் கட்சி இப்பொழுது இந்தியாவின் 29 மாநிலங்களுள் நான்கை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இதன் வெளிப்பாடு தேசிய அளவில் திட்டவட்டமான தேர்தல் விளைபயன்களைக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சேர்த்து போட்டியிட்ட நான்கு மாநிலங்களும் சேர்த்து இந்தியப் பாராளுமன்றத்தின் அல்லது லோக் சபாவின் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.

பி.ஜே.பி பொதுச் செயலாளர் சுனில் சாஸ்திரி இந்த முடிவை கட்சிக்கு "உண்மையில் கவலையைத் தோற்றுவித்த" "ஒரு அதிர்ச்சி" என்றார். கடந்த வாரம் பி.ஜே.பி தலைவர்கள் சோர்வுற்ற பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்கு புதுதில்லியில் முகாமிட்டனர். பி.ஜே.பியின் உடனடி அச்சங்களுள் ஒன்று தேசிய ஜனநாயக முன்னணியில் உள்ள அதன் கூட்டாளிகள் வேறு எங்கும் பார்க்கத் தொடங்குவர் அல்லது அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு விலையாக பேரத்தைக் கடினமாக்குவர் என்பதாகும்.

வகுப்புவாதத்துக்கு வேண்டுகோள்

பிரச்சாரம் முழுவதும் வாஜ்பாயியும் அவரது அமைச்சர்களும் டிசம்பரில் இந்தியப் பாராளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலைப் பயன்படுத்தி வகுப்புவாத உணர்வைத் தட்டி எழுப்ப விழைந்தனர் மற்றும் பாக்கிஸ்தானுடனான அதன் கடும் இராணுவ நிலைப்பாட்டுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பி.ஜே.பி தலைவர்கள் எதிர்க்கட்சியினரை "பயங்கரவாதம் மீது மென்மையாக" இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டியதுடன் நாட்டைப் பாதுகாக்க கட்சியை ஆதரிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். உத்திரப் பிரதேசத்தில், வெளியேறும் பி.ஜே.பி முதலமைச்சர் ராஜ்நாத் சிங் கூடியிருந்த கூட்டத்தினரிடையே "உத்திரப் பிரதேசத்தில் பி.ஜே.பி வெளியேறுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியது பாக்கிஸ்தானாக இருக்கும்" என்றார்.

தோல்வி நெருங்கி வர இருப்பது தெரிகையில், பிரச்சாரத்தின் முடிவில், வாஜ்பாயி வெளிப்படையாகவே இந்து தீவிரவாத உணர்வுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களது வாக்குகள் இல்லாவிட்டாலும் கூட பி.ஜே.பி வெல்லும் என்றார். மாநிலத்தின் மக்கள் தொகையில் 17 சதவீதம் உள்ள முஸ்லிம்களின் மத்தியில் கணிசமான ஆதரவு கொண்ட சமாஜ்வாதி கட்சிக்கு உண்மையில் முத்திரை குத்த வைத்தது.

ஆனால் இந்து பேரினவாதத்துக்கு விடுத்த வேண்டுகோள் தரை மட்டமானது. தேர்தல் முடிவின் கீழ் 1991ல் காங்கிரஸ் அரசாங்கத்தின் பொருளாதார மறு சீரமைப்புத் திட்டம் மற்றும் பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம் உள்பட அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் அது தொடரப்பட்டதன் விளைவு மீதான வளர்ந்து வரும் கோபம் இருக்கிறது. சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படுவன கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு, சிறு வர்த்தகர்களுக்கு, விவசாயிகளுக்கு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு கடும் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஊழலுக்கு முடிவு கட்டல் மற்றும் சமூக நிலைமைகளை முன்னேற்றல் எனும் வாக்குறுதியின் பெயரில் ஆட்சிக்கு வந்த வாஜ்பாயி செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிளவை அதிகப்படுத்தி இருக்கிறார். தேர்தல் நடைபெறுகிற காலத்தில், இந்திய அமைச்சரவை தொழிற் சட்டங்களில் மாற்றத்தை அங்கீகரித்தது, அது தவிர்க்க முடியாதவாறு புதிய சுற்று வேலை நீக்கங்களுக்கும் அதிக வேலையின்மைகளுக்கும் வழிவகுத்துள்ளன.

அதன் அதிக மக்கள் தொகைக்கு பிரபலமானது போல், உத்திரப் பிரதேசம் இந்தியாவின் ஏழ்மை மிக்க மாநிலங்களுள் ஒன்றாக இருக்கிறது. பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட எக்கனாமிஸ்ட் இதழ் அந்நிலையை தொகுத்துரைத்தது: "பகுதி அளவில் ஊழலின் மற்றும் அரசியல் அமைப்பை தங்கு தடையின்றி செயல்படுத்திய மானிய ஆதரவு ஆகிய இவற்றின் விளைவாக இருந்த மாநிலத்தின் பரந்த நிதிப் பற்றாக்குறை, கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படைகளுக்கான செலவுகளின் குரல்வளையை நெரித்தன. பெரிய மாநிலங்களின் மத்தியில் உ.பி. உயர்ந்த குழந்தை இறப்பு வீதத்தையும், பெண்களைப் பொறுத்த மட்டில் மூன்றாவது மிகக் கீழான எழுத்தறிவின்மையையும் உடல் நலப் பணியாளர்கள் சேவை கிடைக்கும் மிகக் குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்டிருக்கிறது. உ.பி.யில் 'சட்டம் ஒழுங்கின்மை செல்வாக்கு செலுத்துகிறது" என்றும் குற்றவாளிகள் பணம் அல்லது அரசியல் செல்வாக்கால் நீதியிலிருந்து தப்பிவிடுகிறார்கள் என்றும் மாநிலத்தின் உயர் நீதிமன்றம் அவதானித்தது."

அரசியல் ஏற்பாட்டுக்கு குரோதம் அடிக்கடி சாதி அக்கறைகள் வழியாக விலகிச் செல்கின்றது. நகராட்சி தொழிலாளி மகாவீர் சிங் நியூயோர்க் டைம்ஸ்- இடம் உ.பி.யில் கீழ் சாதியினர் காங்கிரசுக்கு வாக்களிப்பர் ஆனால் கட்சி மேல்சாதியினருக்குத்தான் சேவை செய்வதில் முடிவடைகிறது என்று கூறினார். பி.ஜே.பி, மேல் சாதியினருக்கு ஆதரவாக இருக்கிறது என்றார் அவர். சிங் மாநிலத்தின் ஐந்தில் ஒரு பங்கினராக இருக்கும் "தீண்டத் தகாதவர்" அல்லது தலித்களுள் ஒருவராவார்.

ஏனையோர் செய்தி ஊடகங்களிடம் திகைப்பூட்டும் அளவில் சேவைகள் பற்றாக்குறை பற்றிய தங்களின் விரக்திகளை வெளிப்படுத்தினர். "கடந்த மாலையிலிருந்து அங்கு மின்சாரம் இல்லை, சாலைகள் சீரின்றி இருக்கின்றன --இங்கு மக்கள் உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுகின்றனர்" என வணிகர் ஒருவர் கூறினார். கோதுமை பயிரிடும் விவசாயி கூறினார்: "அவர்கள் (பி.ஜே.பி) பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறார்கள். இது எங்களது உடனடி கவலை அல்ல. எங்களது கவலை எல்லாம் சாலைகள், பள்ளிகள், தண்ணீர் மற்றும் மின்சாரம் பற்றியனவாகும்."

வெகுஜனங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தகுதியற்று, பி.ஜே.பி ஆனது அதன் தேர்தல் சரிவை எதிர்த்துப் போராட மிகவும் கடுமையான குரலில் வகுப்புவாத திக்கில் இடம் பெயர்ந்ததைத் தவிர சில மாற்றீடுகளும் இருக்கின்றன. அயோத்தியில் அழிக்கப்பட்ட மசூதி இருந்த பகுதியில் இந்து கடவுள் ராமருக்கு கோயில் கட்டும் உலக இந்து அவை அல்லது விஸ்வ இந்து பரிஷத்தின் ஆத்திரமூட்டும் திட்டத்திற்கு வாஜ்பாய் அரசாங்கம் ஆதரவு வழங்கத் தவறியது தொடர்பாக இந்து தீவிரவாத வட்டங்களில் ஏற்கனவே விவாதம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேரினவாத தலைவர் பால்தாக்கரே, பி.ஜே.பி தேர்தல் தோல்விக்கு கோவில் தொடர்பாக இரட்டை நிலை எடுத்ததன் காரணம் எனக் குற்றம் சாட்டினார், இப்பொழுது அது விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கைக்கு சம்மதிக்க வேண்டும் என்றார்.

உழைக்கும் மக்கள் மத்தியில் ஆதரவை எடுக்கும் முயற்சியில், தொழிற் சட்டத்தில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு எதிராக ஜனரஞ்சக பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போவதாக சிவசேனையும் கூட அச்சுறுத்தி இருக்கிறது. இருப்பினும், வாஜ்பாயியும் பி.ஜே.பி தலைவர்களும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொருளாதார மறுசீரமைப்புக் கொள்கைகளை திரும்பப் பெறுவதற்கு அல்லது மெதுவாக செயல்படுத்துவதற்கான அவர்களது ஆதரவாளர்களின் கோரிக்கைகளுக்கு எந்த வகையிலும் இணங்கினால் அரசாங்கமானது பெரு வர்த்தகர்களது ஆதரவை விரைவில் இழக்கும். பொது நிதி மற்றும் கொள்கை பற்றிய தேசிய நிறுவனத்தில் பொருளியலாளராக இருக்கும் டி.கே. சிறிவத்சவா, தேர்தல் முடிவுகள் "மத்திய அரசாங்கத்தைப் பாதிக்கும்" அது "கடும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தலை மெதுவாக ஆக்கலாம்" என்று அவர் எச்சரித்தபோது, கார்ப்பொரேட் தலைமைகளின் கவலைகளை எதிரொலித்தார்.

இவ்வனைத்து பிரச்சினைகளும் பி.ஜே.பிக்குள்ளும் மற்றும் அதன் கூட்டணிக்குள் மோதல்களை உச்சப்படுத்தும் தேசிய ஜனநாயக அணிக்கு அவர்களின் ஆதரவு அயோத்தி விவகாரத்திலும் வகுப்புவாதப் பிரச்சினைகளிலும் வாஜ்பாயி மென்மை நிலை எடுப்பார் என்ற புரிதல் மேல் இருந்தது. குஜராத்தில் தற்போதைய வகுப்புவாதப் படுகொலை, அங்கு கிட்டத்தட்ட 500 பேர், பிரதானமாக முஸ்லிம்கள், கடந்த வாரத்தில் கொல்லப்பட்டனர். இது பி.ஜே.பி தலைமையின் குறைந்த பட்ச பகுதியினரால் மேற்கொள்ளப்படும் திசைவழி பற்றிய குறிகாட்டாலுமாகும். பி.ஜே.பி இன்னும் ஆட்சியில் உள்ள நான்கு மாநிலங்களுள் குஜராத்தும் ஒன்றாகும்.